Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன். :D

டாவு மேற்றர் என்னெண்டால் :unsure: .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ.. :unsure:

"

:lol: :lol: :lol:

:lol: :lol: :lol:

  • Replies 346
  • Views 27.3k
  • Created
  • Last Reply

ஒவ்வொரு பாகத்திற்கும் இடும் தலைப்பும் அவைக்கேற்ப நீங்கள் பிரித்து தொகுத்தளிப்பதும் நன்றாக உள்ளதுடன்

உங்கள் வெற்றிப்பயணத்தின் பல இரகசியங்கள் உங்கள் கடின உழைப்பே என்பதை காட்டுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அப்போது பயன்படுத்திய மென்பொருள்களின் பெயர்களையும் இப்போது பயன் படுத்தும் மென்பொருள்களின் பெயர்களையும்

எழுதலாம் எண்டால் எழுதுங்க..

சிங்கப்பூரில்..

  1. RAPT (Reinforced & Post-tensioning Design)
  2. ADAPT - PT
  3. ADAPT - Floor

இவை முதன்மையானவை. இவற்றுடன் SAFE, STAAD 3 போன்றவையும் இருந்தன. அவற்றை நான் பெரிதாக உபயோகிக்க வேண்டிய தேவை வரவில்லை.

கனடாவில் முன்பு..

  1. Shoring Suite

இப்போது..

  1. STAAD Pro
  2. TEDDS
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடர் இசை, தொடருங்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை எழுதுவது எனத் தெரியவில்லை.

பாவம் மனுசன் மிகவும் நொந்து தான்

வந்திருக்கின்றார். :lol::D

உழைப்பிற்கும் முயற்சிக்கும் என்றுமே காலம் கைகொடுக்கும்

என்பது உங்கள் எழுத்திலிருந்து தெரிகின்றது இசை

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 14: அடுத்த கட்டம்

ஒரு நாள் என்னுடைய அதே பழைய மேலாளர் என்னிடம் வந்தார். "நீங்கள் முதுநிலைக் கல்வி பகுதி நேரமாகச் செய்ய வேண்டும் என்று சொன்னீர்களே.."

"இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் வேண்டாம் என்றிருக்கிறேன்."

மனதுக்குள், நீ என்ன சொல்வது நான் என்ன படிப்பது என்றுதான் ஓடியது. laugh.gif ஆனால் உண்மைக் காரணம் வேறு. நான் அப்போதே கனடாவுக்கான குடிநுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்து விட்டிருந்தேன். :rolleyes: கனடாவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேரமாக முதுகலை செய்வது. பிறகு வேலை தேடுவது. இதுதான் திட்டம்.

கனடாவில் பொறியியலாளராக வேலை செய்வதற்கு என்ன தகுதிகள் வேணும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கினேன். இங்கே ஒவ்வொரு மாநிலத்திலும் பொறியியலாளர் அமைப்பு இருக்கின்றது. ஒன்ராரியோவில் (PEO - Professional Engineers Ontario). ஏதாவது ஒரு அமைப்பில் செயற்பாட்டு அனுமதி (Practicing License) பெற்றால் மட்டுமே இங்கே பொறியியலாளர் என எம்மை அழைப்பார்கள். "பொறியியலாளர்" என்கிற பதத்தை யாரும் எழுந்தமானமாக உபயோகித்துவிட முடியாது. அது சட்டப்படி குற்றமாகும். :rolleyes:

இவற்றையெல்லாம் அங்கிருந்தபடியே அறிந்து வைத்திருந்தேன். அங்கிருந்தே விண்ணப்பமும் போட்டேன். அவர்கள் என் கல்வித்தரம், மற்றும் வேலை அனுபவத்தை ஒரு கட்டம் வரை பரிசோதனைக்கு உட்படுத்தி அனுமதி விடயத்தை ஒரு கட்டம் வரை நகர்த்தினார்கள். அதன் பின், நான் கனடாவில் வந்திறங்கிய பின்னர்தான் மீதியைத் தொடரமுடியும் என்று சொன்னார்கள்.

நான் கனடாவுக்கு வந்து அவர்களுக்கு எனது தொழில்நுட்ப அறிவை நிருபிக்க வேண்டும். சிலருக்கு நேர்காணல், சிலருக்கு பரீட்சைகள் வைப்பார்கள்.

எல்லாம் முடிந்துவிட்டது. விசாவும் கைக்கு வந்துவிட்டது. என்னுடைய பதவி விலகல் கடிதத்தை நிறுவனத்தில் கொடுக்கிறேன். கடிதத்தைக் கொடுத்தால் அதன்பின்னர் நான்கு கிழமைகள் வேலை செய்ய வேண்டும்.

சில நாட்கள் அமைதி. :D ஒரு நாள் எனது நிர்வாக இயக்குநர் அழைக்கிறார்.

"ஏன் போகிறீர்கள்?" unsure.gif

" எனது குடும்ப்பத்தினர் அங்கே இருக்கிறார்கள். நான் அங்கே சென்று படிக்கவும் வேணும்." unsure.gif

"ஏன் இங்கேயே படிக்கலாமே? உங்களை NUS இல் எங்கள் செலவில படிப்பிக்க திட்டம் வைத்திருந்தோம்." unsure.gif

(பைசா பெயராது.. இதுக்குள்ளை இந்தக் கதையா என்று நினைத்துக்கொண்டேன். :D )

"இல்லை. எனக்கு விசா வந்துவிட்டது."

"உங்களை தொழில்நுட்ப மேலாளராக உயர்த்துவது என திட்டம் வைத்திருந்தோம்."

(ஆகா.. அடுத்த கதையை ஆரம்பிச்சிட்டான்யா.. :D)

"நான் விமானப் பதிவுகளையே செய்துவிட்டேன்." :rolleyes:

இன்னும் சில வழிகளில் முயன்று பார்த்தார். நான் அசைவதாக இல்லை. எனது நோக்கம் ஒரு தொழில் அறிவுடன் தேங்கிவிடக் கூடாது. பலதையும் கற்றால்தான் ஒரு உற்சாகம் இருக்கும், தன்னம்பிக்கையும் கூடுதலாகும். நான் எதற்கும் அசைவதாக இல்லை.

"சரி.. சென்று வாருங்கள். எங்களுடைய நல்வாழ்த்துக்கள்."

சில நாட்கள் கழித்து பிரான்சில் இருந்து மேலதிகாரி எங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவரும், எனது நிர்வாக இயக்குனரும் எனது பகுதிக்கு வந்தார்கள். ஒரு பதக்கமும், நிறுவனத்திற்குச் சொந்தமான கழுத்துப் பட்டையும் பரிசளித்து நன்றி சொன்னார்கள். எனக்கு தலைகால் புரியவில்லை.. :D

தாங்கள் கனடாவில் ஒரு கிளை எப்படியும் திறப்போம் எனவும் அப்போது உங்கள் உதவி தேவைப்படும் எனவும் அந்த அதிகாரி கூறினார். :rolleyes:

சென்ற வருடம் மிசிசாகாவில் கடைதிறந்து போணியை ஆரம்பித்திருக்கிறார்கள். :wub:

(தொடரும்.)

தொடருங்கள் ...:)

நல்ல நம்பிக்கையூட்டும் தொடர். முயற்சியுடையோர் இகழ்ச்சி அடைவதில்லை.

சிங்கப்பூரில் அப்போது இருபரிமாணம் தான்.. ஆனால் நான் பாவிக்க வேண்டிய தேவை வரவில்லை.. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்..! :D

நீங்கள் கேட்கிற கேள்வியைப் பார்த்தால் நீங்களும் சிவிலுக்குள்ளை தடக்குப்பட்ட ஆள்போல தெரியுது??!! :rolleyes:

நான் சிவில் இல்லை. ஆனால் 'கட்டிடக் கல்வி' பயின்ற பொழுது வேலை அனுபவத்திற்காக (வேறு வேலை கிடைக்கவில்லை) நிலக்கீழ்ப் பாதை, சிறிய மேம்பாலம் கட்டும் திட்டமொன்றில் 'setting out' வேலையெல்லாம் செய்தேன்.

இந்த மென்பொருளை முன்பு வேலையில் பலகாலம் பாவித்திருக்கிறேன். இப்பொழுது நான்கு பரிமாணங்கள் பழகுவதற்கு முயற்சிக்கிறேன். அதற்கேற்ற வேலை வந்து அம்பிடுதில்லை

பலருக்கு பயனளிக்க கூடிய நல்லதொரு ஆக்கத்திற்கு நன்றிகள் இசை அண்ணா. எழுத்துநடையும் சம்பவங்களை சொல்லும் விதமும் வாசிப்பதற்கு மிகவும் சுவார்சியமாக இருக்கிறது. தொடர்ந்து பல ஆக்கங்களையும் அனுபவங்களையும் யாழில் எதிர்பார்க்கின்றோம்.

அதுசரி Best Buy ல் என்ன வாங்குவது என்று யோசித்து வைத்துவிட்டீர்களா இசை அண்ணா?

:) நிட்சயம் சித்திரை மாத யாழ் பொற்கிளி பரிசு இந்த பதிவுக்குத்தான் :D

Edited by தமிழினி

சிங்கப்பூரில்..

  1. RAPT (Reinforced & Post-tensioning Design)
  2. ADAPT - PT
  3. ADAPT - Floor

இவை முதன்மையானவை. இவற்றுடன் SAFE, STAAD 3 போன்றவையும் இருந்தன. அவற்றை நான் பெரிதாக உபயோகிக்க வேண்டிய தேவை வரவில்லை.

கனடாவில் முன்பு..

  1. Shoring Suite

இப்போது..

  1. STAAD Pro
  2. TEDDS

நன்றிகள்

உங்கள் அனுபவத்திலிருந்து construction site வேலை பார்க்க போகும் ஒருவரிடம்(site engineer site supervisor ) எப்பிடியான கேள்விகள் கேட்பார்கள் நேர்முக தேர்வில்?

ஆரையும் நேர்முகத்தேர்வு கண்ட அனுபவம் இருக்குதா

ஒசி எண்டால் பொலிடோலையும் குடிப்பம் எல்லோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்

உங்கள் அனுபவத்திலிருந்து construction site வேலை பார்க்க போகும் ஒருவரிடம்(site engineer site supervisor ) எப்பிடியான கேள்விகள் கேட்பார்கள் நேர்முக தேர்வில்?

ஆரையும் நேர்முகத்தேர்வு கண்ட அனுபவம் இருக்குதா

ஒசி எண்டால் பொலிடோலையும் குடிப்பம் எல்லோ :lol:

பொறியியலாளர் தேர்வுக்கு நேர்முகத்தேர்வு செய்த அனுபவம் உண்டு. ஆனால் Site Engineer வேலைக்கு ஆளெடுத்த அனுபவமில்லை.

எந்த நாட்டில் என்பதும், உங்கள் வேலை அனுபவம் என்பதையும் பொறுத்து கேள்விகள் மாறுபடும்.

பின்வரும் கேள்விகளை மேலை நாடுகளில் எதிர்பார்க்கலாம்.. :D

  • Tell us about yourself! :lol:
  • How would you ensure Health and Safety at a job site?
  • Tell us about a difficult situation that you were in and how you resolved it.
  • Have you done reporting?
  • Have you ever written site procedures?
  • etc..

  • கருத்துக்கள உறவுகள்

வேலை தேடி எடுப்பது எவ்வளவு கடினமோ அதைவிட கடினமானது இருக்கும்வேலையை விடுவது.

அப்படியொரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.

தொடருங்கள் இசை.

நம்ம கதையை அப்புறம் பார்க்கலாம்.

பிரான்சிலும் 3 வருட பொறியியலாளர் படிப்பு முடிந்தது அனுமதிப்பத்திரம் கொடுப்பார்கள். ஆனால் அத்துடன் அவர் பொறியியலாளர் என அழைக்கப்படமாட்டார். அதன்பின் படிப்பும் வேலையுமாக 2 வருடம் முடிக்கணும். அல்லது MASTER செய்யணும் அதன் பின்பே பொறியியலாளராவார். ஆனால் பிரித்தானியாவில் 3 வருடப்படிப்பு முடித்து அனுமதி கிடைத்ததும் அவர் பொறியியலாளராவார்.

நல்லதொரு விடயம் டங்குவார்!

நன்றி கலந்த பாராட்டுக்கள்! :)

நேர்முகத் தேர்வுகள் என்று ஆரம்பித்தாலும்... அவரவர் தம் தொழில்துறைசார் அனுபவ பகிர்வுகளாக நகர்வது ஆக்கபூர்வமான ஒன்றாக அமைந்திருக்கின்றது.

தொடருங்கள்!

என் வேலைசார்ந்த அனுபவங்களையும் பகிர ஆசைதான்.

யாழில் என் தொழில்சார்ந்த ரீதியாக யாழ் உறவுகளுக்கு உதவக்கூடிய வகையில் ஒரு திரியை ஆரம்பிக்க வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் யோசித்தாலும்... "ஏதோ ஒன்று என்னைத் தடுக்கும்!"

(அந்தத் திரியினை ஆரம்பிக்கும் போது இதற்கான காரணத்தினை சொல்கின்றேனே! :rolleyes::) )

சூழ்நிலைகள் அமைவாகும்போது...நிச்சயமாக, தொழில்நுட்பப் பகுதியில்... யாழ் உறவுகள் அனைவருக்கும் பெரிதும் உதவும் வகையில், ஒரு ஆக்கபூர்வமான திரியினை ஆரம்பிப்பேன்!

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 15: கடினமான முடிவுகள்

சிங்கப்பூரில் நானும் மனைவியும் நிரந்தர வதிவிட உரிமை (Permanent Resident Status) பெற்றவர்களாக இருந்தோம். இவ்வாறானவர்களுக்கு நாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் சம்பளத்தில் 16% தொகையை மேலதிகமாக கணக்கிட்டு ஒரு கணக்கில் சேமிப்பார்கள். சம்பளத்தில் 20 வீதத்தைப் பிடித்து அதனுடன் சேர்ப்பார்கள். ஆக 36% உங்கள் Provident Fund இல் சேரும். இந்தப்பணத்தை ஓய்வுபெறும்போது பெற்றுக்கொள்ளலாம். அல்லது வீடுவாங்குவதற்கு உபயோகிக்கலாம்.

எனக்கும் ஒரு தொகை சேர்ந்திருந்தது. அதை எடுக்க வேண்டுமென்றால் நிரந்தர உரிமையை இழக்க வேண்டும்.

குடிவரவுத்துறைக்குச் சென்றோம். நிரந்தரவாசி உரிமையைக் கைவிடப் போகிறேன் என்றேன். அட்டைகளை வாங்கி இரண்டாக வெட்டி ஒரு பொலித்தின் பையில் போட்டு வைத்துக்கொண்டார்கள். :wub: கடவுச்சீட்டில் ஒரு மாத விசா குத்தித் தந்தார்கள். :D

நான் நிரந்தர உரிமையைக் கைவிட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கனடாவில் என்ன நடக்குமோ தெரியாது. ஆனால் சிங்கப்பூர் அட்டையையும் வைத்திருந்தால் இங்கே சரியான வாய்ப்பு அமையாவிட்டால் திரும்பவும் சிங்கப்பூர் போகச் சொல்லும் மனம். அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு அப்படியொரு கடினமான முடிவை எடுக்கவேண்டி வந்தது. :unsure:

காசை எடுத்துக்கொண்டு இலங்கை இந்தியா என்று போய் பிறகு கனடா வந்து சேர்ந்தோம்.

"Welcome to Canada!" என்று வரவேற்றார்கள். :D

கனடாவில் அன்றுமுதல் நிரந்தர வதிவிட உரிமை. முதல் சில கிழமைகள் பலவிதமான மட்டைகளைப் பெறுவதிலேயே காலம் போனது. சிங்கப்பூரில் இருந்து மாத்தையா வந்திருக்கிறார் என்று உறவுக்காரர்கள் இடையே ஒரு மரியாதை. :lol:

இங்கு எனது வேலை சம்பந்தமாக எப்படி அணுக வேண்டும் என எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் யாராவது சம்பந்தப்பட்டவர்களுடன் பேச முயன்றேன். முன்பு பொறியியலாளராக வேறு இடங்களில் வேலை செய்தவர்களெல்லாம் இங்கே வங்கி ஊழியராகவும், காப்புரிமை முகவராகவும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். :unsure:

ஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. :unsure:

(தொடரும்.)

Edited by இசைக்கலைஞன்

சில சமயங்களில் எடுக்கப்படும் தீர்க்கமான முடிவுகள்தான்.... வாழ்க்கையை மாற்றியமைக்கும்! + / - :)

ஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று //அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. :unsure:

இதில் நாம் வல்லவர்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

டாவை கல்யாணம் முடித்த கதை சொல்லவேயில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது. :unsure:

ஆர்வம் உள்ள எவரும் எத்தகைய இடைஞ்சல்களையும் பின்தள்ளி முன்னுக்கு வரமுடியும். வேலை கிடைக்காது என்று சொல்லைப் பாவிப்பவர் ஒன்றில் தனக்குப் பிடித்த வேலையைத் தேடிக் களைத்து "எட்டாப் பழம் புளிக்கும்" என்ற நிலைக்கு வந்தவராக இருக்கலாம், இல்லையேல் உங்களது திறமைகளைக் கவனித்து நீங்கள் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடக்கூடும் என்ற சாதாரண சராசரி சிந்தனையைக் கொண்டவராக இருக்கலாம்.

உங்களுக்கு தலை சுற்றி இருக்காது இசை! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாவை கல்யாணம் முடித்த கதை சொல்லவேயில்லை :D

தலைப்புக்கு சம்பந்தம் இல்லாததால் நீக்கப்பட்டது..! :lol:

ஆர்வம் உள்ள எவரும் எத்தகைய இடைஞ்சல்களையும் பின்தள்ளி முன்னுக்கு வரமுடியும். வேலை கிடைக்காது என்று சொல்லைப் பாவிப்பவர் ஒன்றில் தனக்குப் பிடித்த வேலையைத் தேடிக் களைத்து "எட்டாப் பழம் புளிக்கும்" என்ற நிலைக்கு வந்தவராக இருக்கலாம், இல்லையேல் உங்களது திறமைகளைக் கவனித்து நீங்கள் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடக்கூடும் என்ற சாதாரண சராசரி சிந்தனையைக் கொண்டவராக இருக்கலாம்.

உங்களுக்கு தலை சுற்றி இருக்காது இசை! :icon_mrgreen:

கிருபன், அவரிடம் பேசிய சமயத்தில் ஒரு இருபது வேலை விண்ணப்பங்களாவது போட்டிருப்பேன். ஒருவரும் அழைக்கவில்லை. சிங்கப்பூரில் ஒன்பதாவது நாளே வேலை எடுத்த எனக்கு குழப்பம் வருமா வராதா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 16: ஆழ்வாரில் இருந்து ஆண்டி :D

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். அனுப்பிய விண்ணப்பங்களுக்கு நன்றிக்கடிதம் மட்டும் ஒரே ஒரு நிறுவனத்தில் இருந்து வந்திருந்தது. வேறு ஒரு முன்னேற்றமும் இல்லை. கொண்டு வந்த பணம் கரைந்து கொண்டிருக்கிறது.

இதற்குள் வாகன ஓட்டுநர் உரிமத்திற்கான G1 மற்றும் G2 தேர்வுகளில் சித்தியடைந்துவிட்டேன். ஒரு பழைய கம்றி காரையும் வாங்கிக் கொண்டேன். :D

எனது வேலைக்குறிப்பை Human Resources Development Canada (HRDC) க்கு எடுத்துச் சென்று திருத்தம் செய்யுமாறு கேட்டேன். அவர்கள் எழுத்து அளவைக் கூட்டு, இங்கே இடைவெளி விடு என்று ஆலோசனைகள் தந்தார்கள். :D

விளம்பரங்களில் வடிவமைப்புப் பொறியியலாளர்களுக்கு அநேகமாக இப்படித்தான் கேட்கப்பட்டிருக்கும். ... the applicant must be a Licensed Professional Engineer or be eligible to be registered as a Professional Engineer in Ontario. (அதாவது ஒன்ராரியோவில் ஏற்கனவே பொறியியலாளராக இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பதிந்துகொள்ளக்கூடிய தகைமையைக் கொண்டவர்கள்..)

நாம்தான் தகைமையைக் கொண்டவராச்சே.. :lol: அந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வேன்.. ஒரு ஈ காக்கா கூட திரும்பிப் பார்க்காது.. :D

சில நிறுவனங்களுக்கு தொலைபேசியில் பேசிப் பார்த்தேன். உள்ளே மேலாளர்களிடம் இணைப்புக் கொடுக்கமாட்டார்கள். நேரிலே சென்று வேலைக்குறிப்பைக் கொடுத்துப் பார்த்தேன். வாசலிலேயே வைத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள். :unsure:

என்னுடைய நிலைமையைக் கண்ட உறவினர்கள் எனக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கத் தயாரானார்கள் :D

இப்படி இருந்தால் சரிவராது. ஏதாவது தொழிற்சாலை உத்தியோகத்துக்குப் போகும்படி ஆலோசனைகள் வந்தன. ஒரு வேலை முகவரிடம் போனேன். எஞ்சினியர் வேலைக்குறிப்பைக் கொடுக்கிறேன். அடுத்தநாள் வேலை.

காலை ஏழுமணிக்கு வேலையிடத்தில் நிற்கிறேன். என்ன வேலை என்று தெரியாது. ஒரு பெரிய இயந்திரத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அதிலிருந்து சாரை சாரையாக அலுமினியத்திலான பாகங்கள் வந்து விழுந்தன. அவற்றை எடுத்து ஒரு பெரிய கூடைக்குள் அடுக்க வேண்டும். இயந்திரம் நிற்கும் இடைவெளியில் தரையைக் கூட்டவேண்டும். :D சிங்கப்பூரில் முதலாளியிடம் பிகு பண்ணிவிட்டு வந்தவர் நான்கே மாதங்களில் கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் சாதாரண தொழிலாளி. :wub:

பழைய நினைவுகள் எல்லாம் வந்து போனது. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்..??!! :D

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலோ சிங்கப்பூரிலோ நீங்கள் இளவரசர் ஆனாலும் கனடாவுக்கு அருவரி தானே?? :lol::icon_idea:

ஆனால் இந்த வேதனையை நானுமம் அனுபவித்துள்ளேன்

அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வீச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், அவரிடம் பேசிய சமயத்தில் ஒரு இருபது வேலை விண்ணப்பங்களாவது போட்டிருப்பேன். ஒருவரும் அழைக்கவில்லை. சிங்கப்பூரில் ஒன்பதாவது நாளே வேலை எடுத்த எனக்கு குழப்பம் வருமா வராதா? :D

Licensed Professional Engineer இல்லாமல் இருந்தது அழைப்புக்கள் வராமைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.. அது உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே.

வேலைக்குறிப்பு ஒன்றைப் பொதுவாக 9 அல்லது 12 செக்கன்களில் process செய்வார்கள். எனவே பார்த்தவுடன் பிடித்துப் போகுமளவிற்கு தகுந்த மாதிரியான தனித்துவமான ஒன்றை முதல் 5-10 வரிகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் (முதல் பார்வையிலே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் காந்தம் இருக்கவேண்டும் :wub: )

மேலும் வேலைக்குறிப்பின் நோக்கம் வேலையைப் பெற்றுக்கொள்வதல்ல, நேர்முக உரையாடலுக்கான அழைப்பைப் பெறுவதே. நேர்முக உரையாடலில்தான் வேலையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி offer ஐ வெல்லவேண்டும். Offer கிடைத்த பின்னர்தான் சம்பளம், கொடுப்பனவுகளைப் பற்றிய பேரம் பேசலில் இறங்கவேண்டும். இப்படியான எளிய வழிமுறைகளைத்தான் நான் கைக்கொள்வது வழமை..

  • கருத்துக்கள உறவுகள்

சில நிறுவனங்களுக்கு தொலைபேசியில் பேசிப் பார்த்தேன். உள்ளே மேலாளர்களிடம் இணைப்புக் கொடுக்கமாட்டார்கள். நேரிலே சென்று வேலைக்குறிப்பைக் கொடுத்துப் பார்த்தேன். வாசலிலேயே வைத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள். :unsure:

வேலை இருக்கோ இல்லையோ கனடாவில் வேலை அனுபவம் உள்ளதா என்ற கேள்வியையும் கேட்டுவிடுவார்கள்.இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் பொறியியல் துறை முடித்து கனடா வந்த நண்பர்கள் பலருக்கு இந்தக்கதி நடந்துள்ளது.ஒரு சிலரை தவிரை எனையோர் வேறு துறைகளில் மிக குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள்.

மிக சுவாரஸ்யமாக இருக்கின்றது உங்களது வேலை தேடும் படலம் .

நேர்முக பரீட்சை என்று Professional job ஒன்றிற்கும் போனதில்லை ,எல்லாம் படிக்கும் நேரங்களில் போன odd jobs களுக்கு தான் ,லண்டன் வந்த இறங்கிய அடுத்த நாளே Harrow இல் இருக்கும் Gas station இல் வேலை கேட்க சொல்லி அத்தான் கொண்டுபோய் இறக்கிவிட்டார் ,அவன் கேட்டது எதுவுமே எனக்கு விளங்கவில்லை ஆனால் அத்தானிடம் வந்து அங்கு இப்போ வேலை இல்லையாம் என்றுவிட்டேன்,

பின் இருவருடங்கள் St johnswood gas station இல் (Lords cricket ground இற்கு முன் )குப்பை கொட்டினேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Licensed Professional Engineer இல்லாமல் இருந்தது அழைப்புக்கள் வராமைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.. அது உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே.

வேலைக்குறிப்பு ஒன்றைப் பொதுவாக 9 அல்லது 12 செக்கன்களில் process செய்வார்கள். எனவே பார்த்தவுடன் பிடித்துப் போகுமளவிற்கு தகுந்த மாதிரியான தனித்துவமான ஒன்றை முதல் 5-10 வரிகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் (முதல் பார்வையிலே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் காந்தம் இருக்கவேண்டும் :wub: )

மேலும் வேலைக்குறிப்பின் நோக்கம் வேலையைப் பெற்றுக்கொள்வதல்ல, நேர்முக உரையாடலுக்கான அழைப்பைப் பெறுவதே. நேர்முக உரையாடலில்தான் வேலையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி offer ஐ வெல்லவேண்டும். Offer கிடைத்த பின்னர்தான் சம்பளம், கொடுப்பனவுகளைப் பற்றிய பேரம் பேசலில் இறங்கவேண்டும். இப்படியான எளிய வழிமுறைகளைத்தான் நான் கைக்கொள்வது வழமை..

வேலைக்கு அழைக்காத காரணங்களை அடுத்துவரும் பகுதிகளில் எழுதுகிறேன்..! :D

விசுகு அண்ணா, நுணா, அர்ஜுன் அண்ணா.. உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்..! முன்னர் கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கும் நன்றிகள்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.