Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்றோரை இழந்த 16 வயதான யுவதியை ஏமாற்றியா 67 வயதான கனடா தாத்தா வவுனியா ஹோட்டல் கைது .

Featured Replies

16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த யுவதியை வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதிபதி பணித்தார். இலங்கையைச் சேர்ந்த கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட 67 வயதான ஆணொருவரும் 16 வயதான யுவதியொருவரும் வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது வவுனியா பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டனர். வயது வித்தியாசத்தை கவனிக்காது இவர்கள் இருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் ஹோட்டல் உரிமையாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

இவர்கள் தந்தை, மகளெனக்கூறி ஹோட்டல் விருந்தினர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரினால் கண்டறியப்பட்டதாகவும் இது குறித்து சந்தேகமடைந்த பொலிஸார், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது தந்தை, மகள் உறவில்லையெனத் தெரியவந்ததாகவும் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து இலத்திரனியல் பாலியல் சாதனங்களும் மருந்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வவுனியா நோக்கி கனேடியப் பிரஜையுடன் குறித்த யுவதியும் அவரது உறவினரொருவரும் வந்ததாகவும் குறித்த உறவினர் இடைவழியில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்ததாகவும் வவுனியாப் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வயதான குறித்த யுவதி தனது பெற்றோரை இழந்த நிலையில் குறித்த உறவினருடனையே வசித்து வந்துள்ளதாகவும் இவர்களுக்கான பண உதவியை இக்கனேடியப் பிரஜையே மேற்கொண்டு வந்ததாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறினர்.

http://thaaitamil.com/?p=15901

  • கருத்துக்கள உறவுகள்

அடக் கிழவா.. :(:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கான பண உதவியை இக்கனேடியப் பிரஜையே மேற்கொண்டு வந்ததாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறினர்.

இஞ்ச இருந்து அங்குள்ள குடும்பங்களைப் பராமரிக்கிறம் என்றவை எல்லோரையும் எனி நம்ப முடியாத படிக்கு செய்திட்டினம்.. இந்த இரண்டு பேரும்..! இவர்களின் தனிப்பட்ட உடல் தேவைகளுக்காக நியாயமாக உதவிக் கொண்டிருப்பவர்களையும் சந்தேகிக்கும் நிலை தோன்றியுள்ளது.

ஏலவே வன்னியில் உதவி எடுத்துக் கொடுக்கிறம் என்று சொல்லி.. பெண்கள் மீது பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்கள் செய்யப்படுவதாகவும்.. சில பெண்கள் உதவி வேண்டி உடலை காட்டும் நிலைக்குப் போயுள்ளதாகவும் அண்மையில் வன்னியில் இருந்து ஒரு உறவு சொல்லிக் கவலைப்பட்டார். அதுவும்.. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கூட இன்று அந்த அமைப்பின் செயற்பாடுகள் இல்லை என்ற துணிவில்.. இப்படி செயற்படுவதாகவும் சொன்னார்.

இந்த தமிழ் சனம் திருந்தவே மாட்டுதா..????! :(:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெரியவருக்கும், சிங்கள ஆமிக்காரர்களுக்கும் எந்தவிதியாசங்களும் இல்லை!

இருவருமே மற்றவரின் இயலாமையை, தங்கள் வெறி தீர்க்க உபயோகிக்கின்றார்கள்! :wub:

இதை தொடர்ந்து ஊதி பெருப்பித்து கிடைக்கிறதையும் தட்டிகொட்டாமல் வேறு திரிகளுக்கும் போய் செய்திகளை படியுங்கோ.

நிர்வாகம் இனி காணும் , இந்த திரியை பூட்டிவிடலாம்..

இஞ்ச இருந்து அங்குள்ள குடும்பங்களைப் பராமரிக்கிறம் என்றவை எல்லோரையும் எனி நம்ப முடியாத படிக்கு செய்திட்டினம்.. இந்த இரண்டு பேரும்..! இவர்களின் தனிப்பட்ட உடல் தேவைகளுக்காக நியாயமாக உதவிக் கொண்டிருப்பவர்களையும் சந்தேகிக்கும் நிலை தோன்றியுள்ளது.

ஏலவே வன்னியில் உதவி எடுத்துக் கொடுக்கிறம் என்று சொல்லி.. பெண்கள் மீது பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்கள் செய்யப்படுவதாகவும்.. சில பெண்கள் உதவி வேண்டி உடலை காட்டும் நிலைக்குப் போயுள்ளதாகவும் அண்மையில் வன்னியில் இருந்து ஒரு உறவு சொல்லிக் கவலைப்பட்டார். அதுவும்.. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கூட இன்று அந்த அமைப்பின் செயற்பாடுகள் இல்லை என்ற துணிவில்.. இப்படி செயற்படுவதாகவும் சொன்னார்.

இந்த தமிழ் சனம் திருந்தவே மாட்டுதா..????! :(:rolleyes::icon_idea:

இச் செய்தியின் உண்மைத்தன்மைக்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? என்று கண்டறியவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர்கொழும்பு விடுதிகளில் இது தானே நடக்கிறது.  அறுபதாயிரம் சிறி லங்கா குழந்தை விபச்சாரிகளை வைத்து உல்லாச துறை தொழில் பார்கிறார்கள். 

ஆனால் தமிழீழத்தில் கடுமையாக தண்டிப்பது முக்கியம். 

அலேக்ஸ்ராஜாவின் இராணுவம் நூற்றி எட்டு பேர் பதின்மூன்று வயது சிறுமிகளை ஹைத்தியில் வன்புணர்ந்தார்கள்.   அலேக்ஸ்ராஜா அவையளுக்கு எப்ப தீர்ப்பு?   

இதை தொடர்ந்து ஊதி பெருப்பித்து கிடைக்கிறதையும் தட்டிகொட்டாமல் வேறு திரிகளுக்கும் போய் செய்திகளை படியுங்கோ.

நிர்வாகம் இனி காணும் , இந்த திரியை பூட்டிவிடலாம்..

தமிழனுக்கு சேம் சைட் கோல் போடுவதென்றால் அலாதி பிரியம். 

எங்களிடம் பல மரத்தடோனாக்கள் இருக்கிறார்கள். 

- இந்த கனடா வாசியின் பெயர் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்

- இங்குள்ள ஊடகங்களுக்கு அறிவிக்கப்படல் வேண்டும்

- இவர் மீது இங்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

- இந்த கனடா வாசியின் பெயர் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்

- இங்குள்ள ஊடகங்களுக்கு அறிவிக்கப்படல் வேண்டும்

- இவர் மீது இங்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

இதை செய்தியை பிரசுரித்த ஊடகங்களே முன்னின்று செய்தால் இன்னும் நல்லது.

16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில்

http://thaaitamil.com/?p=15901

அடப் பாவிங்களா உங்களுக்கும் அந்தக் கிழவனுக்கும் என்ன வித்தியாசம்?

வயதென்றால் அது ஒரு சிறுமி யுவதியில்லை. இரண்டாவது அந்தச் சிறுமி எந்த நிர்ப்பந்தத்தில அங்கே போக நிர்ப்பந்திக்கப் பட்டாலோ? இது தெரியாமல் அச்சிறுமியைத் தேவையில்லாமல் திட்டவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ இந்த மாதிரி செய்திகள் என்றால் எங்கட சனத்துக்கு ஒரு கிக் தான்.அது தான் மற்றவைக்கு கல்லாவை நிரப்பி கெபடுக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

16 வயது என்டால் அந்தப் பெண் ஒரு சிறுமி

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி பல மாதங்களுக்கு முன்பே இங்கு எழுதியிருந்தேன்.

அனாதரவாக விடப்பட்டுள்ள அந்த மக்களுக்கு உதவ நாம் பின் வாங்கும் ஒவ்வொரு நிமிடமும் இதுபோன்ற ஈனச்செயல்கள் அரங்கேறுவதை தடுக்கமுடியாது. அதன் பின் சாண் போனால் என்ன ? முழம் போனால் எனன என்றநிலைதான்??? :( :(

ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் முயன்று சிறு சிறுசிறு கரம் கொடுத்தால் ......

அவர்கள் இந்த நிலைக்கு போகாமல் தடுக்கலாம்

Edited by விசுகு

உதுக்கு தான் பேரன் பேத்தி கண்டவர்களை நம்ப கூடாது.

16 வயது என்டால் அந்தப் பெண் ஒரு சிறுமி

67 வயது என்பது கொஞ்சம் உதைக்கிறது.......

ஏன் எல்லாரும் ஆச்சரியப் படுகிறீங்கள் என்று எனக்கு விளங்க இல்லை... :rolleyes:

போனவருடம்? என்று நினைக்கிறன், ஊரில் வன்னியில் இருக்கும் ஆதரவு அற்ற இளம் பெண்களின் விபரங்கள் இருந்தால் அதனைத் தமக்குத் தரும்படி பிரான்சில் இருக்கும் ஒருவர் மறுமணத்திற்கு (60 க்கு மேல் என்று நினைக்கிறன்) என்று கேட்டிருந்ததாகவும் ஒரு பதிவிட்டு அதில் அந்தப் வயோதிபர் கேட்பது நியாயம் என்றும், பிழையானது என்றும் அடிபிடிப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது... :rolleyes:

பல பக்கங்கள் தொடர்ந்த பாக்கு வெட்டித் திரியையா சொல்கிறீர்கள் குட்டி? :lol:

பல பக்கங்கள் தொடர்ந்த பாக்கு வெட்டித் திரியையா சொல்கிறீர்கள் குட்டி? :lol:

அதே தான் தப்பிலி!!!

அதே தான் தப்பிலி!!!

காலையில் இந்தத் திரியை வாசித்ததும் அதைத்தான் நினைத்தேன். இங்கிருந்து கேட்டவர்களே அங்கு போய்விட்டார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லாரும் ஆச்சரியப் படுகிறீங்கள் என்று எனக்கு விளங்க இல்லை... :rolleyes:

போனவருடம்? என்று நினைக்கிறன், ஊரில் வன்னியில் இருக்கும் ஆதரவு அற்ற இளம் பெண்களின் விபரங்கள் இருந்தால் அதனைத் தமக்குத் தரும்படி பிரான்சில் இருக்கும் ஒருவர் மறுமணத்திற்கு (60 க்கு மேல் என்று நினைக்கிறன்) என்று கேட்டிருந்ததாகவும் ஒரு பதிவிட்டு அதில் அந்தப் வயோதிபர் கேட்பது நியாயம் என்றும், பிழையானது என்றும் அடிபிடிப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது... :rolleyes:

குட்டி.. 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர்.... 25 வயது மணியம்மையை டாவடிச்சதை மணம் முடிச்சதை எல்லாம் புரட்சியாக எடுக்கிற நாங்கள். அந்த வகையில்.. இந்த தாத்தாவின் தனி உரிமை அது என்று விட்டுப் போகலாம். அவர் 16 வயதில உள்ளவாவை சட்டப்படி திருமணம் செய்ய முடியும் என்றால்.. அதற்கு அமைய அந்தப் பெண்ணின் விருப்பிற்கு அமைய அதைச் செய்திருந்தால் அதையிட்டு யாருமே.. சட்டத்தவறு காண முடியாது. சமூகம் பலத்தைச் சொல்லிட்டு நாளைக்கு அதையே புரட்சி என்று கதை எழுதி வியாபாரமும் விளம்பரமும் தேடிக் கொள்ளும்.சமூகத்தின் கவலை என்பது எல்லாமே போலியானது..!

ஆனால்.. இவர் அந்தப் பெண்ணை சட்டவிரோத.. சமூகவிரோத நடவடிக்கைகளின் பால் இட்டுச் சென்றமையானது.... உண்மையாகவே மனிதாபிமான உதவி செய்ய வருபவர்களையும்.. பாதிக்கச் செய்வதோடு.. சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைக்கும் என்பதால்.. பெரிதும் பாதிக்கப்படப் போவது.. தாயகத்தில் பெற்றோரை குடும்ப உறவுகளை இழந்து.. வறுமை நிலைக்குப் போயுள்ள உறவுகள் தான்..!

அதுதான் கவலைக்குரிய விடயம் இங்கு. மற்றும்படி இது விடயத்தில்.. எவர் சரி எவர் தப்பு என்று சொல்ல எம்மால் முடியாது தானே. நடந்தது என்னவோ யார் அறிவார். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக் கிழவா.. :(:unsure:

எங்கட டூப்பர் ஸ்டார் வயசுதானே? சின்ன பொடியன்.  

  • கருத்துக்கள உறவுகள்

  • 14 வயதில் அரசியல் தீர்வா இராணுவத்தீர்வா என்று ஆராய்ந்து முடிவெடுத்து ஆயுதம் ஏந்தி புரட்சி செய்ய பலருக்கு வயது முதிர்ச்சி போதியதாக இருந்திருக்கிறது.
  • 16 வயதில் ஒரு பெண்ணுக்கு தனது துணையை தேர்ந்தெடுத்து கனடா போன்ற வசதியான நாட்டுக்கு சென்று வாழ முடிவெடுக்க வயது முதிர்ச்சி போதியதாக இல்லை.

தமிழ் மக்களின் பெரும்பான்மையான திருமணங்கள் பொருளாதார அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. சீதனமும் வெளிநாட்டு மாப்பிள்ளையும் பெரும்பாலான திருமணங்களில் முக்கிய காரணிகளாக அமைகின்றன. 16 வயதில் இலங்கையில் நாளை காணாமல் போகப்போகும் ஒரு 18 உடன் வாழுவதிலும் பார்க்க ( அதற்கும் போதிய சீதனம் வேண்டும்) கனடாவில் உள்ள 67 வயதானவருடன் வாழுவது அந்த பெண்ணுக்கு மிகவும் நன்மையானது. கனடிய குடிமகளாக போதிய பாதுகாப்புடன் மருத்துவ வசதி வேலைவாய்ப்பு கல்வி வசதி எல்லாம் கிடைக்கும். இன்னமும் 20 வருடத்தில் போதிய சொத்துகளுடன் மறுமணமும் செய்து கொள்ளலாம். புத்திசாலியான பெண்ணாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்திரியின் கதையில் வந்த பிரெஞ்சு தாத்தாவா என நினைத்து அக்கதையின் இணைப்பினை இணைக்கவந்தால் சாத்திரியே இணைத்திருக்கிறார்.

  • 14 வயதில் அரசியல் தீர்வா இராணுவத்தீர்வா என்று ஆராய்ந்து முடிவெடுத்து ஆயுதம் ஏந்தி புரட்சி செய்ய பலருக்கு வயது முதிர்ச்சி போதியதாக இருந்திருக்கிறது.
  • 16 வயதில் ஒரு பெண்ணுக்கு தனது துணையை தேர்ந்தெடுத்து கனடா போன்ற வசதியான நாட்டுக்கு சென்று வாழ முடிவெடுக்க வயது முதிர்ச்சி போதியதாக இல்லை.

தமிழ் மக்களின் பெரும்பான்மையான திருமணங்கள் பொருளாதார அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. சீதனமும் வெளிநாட்டு மாப்பிள்ளையும் பெரும்பாலான திருமணங்களில் முக்கிய காரணிகளாக அமைகின்றன. 16 வயதில் இலங்கையில் நாளை காணாமல் போகப்போகும் ஒரு 18 உடன் வாழுவதிலும் பார்க்க ( அதற்கும் போதிய சீதனம் வேண்டும்) கனடாவில் உள்ள 67 வயதானவருடன் வாழுவது அந்த பெண்ணுக்கு மிகவும் நன்மையானது. கனடிய குடிமகளாக போதிய பாதுகாப்புடன் மருத்துவ வசதி வேலைவாய்ப்பு கல்வி வசதி எல்லாம் கிடைக்கும். இன்னமும் 20 வருடத்தில் போதிய சொத்துகளுடன் மறுமணமும் செய்து கொள்ளலாம். புத்திசாலியான பெண்ணாக தெரிகிறது.

நெத்தியடி

குட்டி.. 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர்.... 25 வயது மணியம்மையை டாவடிச்சதை மணம் முடிச்சதை எல்லாம் புரட்சியாக எடுக்கிற நாங்கள். அந்த வகையில்.. இந்த தாத்தாவின் தனி உரிமை அது என்று விட்டுப் போகலாம். அவர் 16 வயதில உள்ளவாவை சட்டப்படி திருமணம் செய்ய முடியும் என்றால்.. அதற்கு அமைய அந்தப் பெண்ணின் விருப்பிற்கு அமைய அதைச் செய்திருந்தால் அதையிட்டு யாருமே.. சட்டத்தவறு காண முடியாது. சமூகம் பலத்தைச் சொல்லிட்டு நாளைக்கு அதையே புரட்சி என்று கதை எழுதி வியாபாரமும் விளம்பரமும் தேடிக் கொள்ளும்.சமூகத்தின் கவலை என்பது எல்லாமே போலியானது..!

ஆனால்.. இவர் அந்தப் பெண்ணை சட்டவிரோத.. சமூகவிரோத நடவடிக்கைகளின் பால் இட்டுச் சென்றமையானது.... உண்மையாகவே மனிதாபிமான உதவி செய்ய வருபவர்களையும்.. பாதிக்கச் செய்வதோடு.. சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைக்கும் என்பதால்.. பெரிதும் பாதிக்கப்படப் போவது.. தாயகத்தில் பெற்றோரை குடும்ப உறவுகளை இழந்து.. வறுமை நிலைக்குப் போயுள்ள உறவுகள் தான்..!

அதுதான் கவலைக்குரிய விடயம் இங்கு. மற்றும்படி இது விடயத்தில்.. எவர் சரி எவர் தப்பு என்று சொல்ல எம்மால் முடியாது தானே. நடந்தது என்னவோ யார் அறிவார். :icon_idea:

அங்கிருக்கும் ஆதரவற்ற பெண்களுக்கு அது 16 ஆக இருக்கட்டும் அல்லது 25 ஆக இருக்கட்டும் தகப்பனைப் போல் இருக்கவேண்டியவர்கள் தமக்கிருக்கும் பணப் பலத்தைக்கொண்டு, தமது இச்சைகளைத் தம்மினத்துப் பெண்கள் மேல் திணிப்பது/ தீர்ப்பது பிழை! கேவலமும் கூட!! இவர்களைப்ள் பிடிபட்டதால தான் அவர்கள் செய்தது சட்டத்திற்கு முன்பு சரியோ தவறோ என்று யோசிக்கிறார்கள்.. அதற்கு முதல், மனுசராகப் பிறந்த எல்லாருக்கும் ஒரு மனசாட்சி என்று ஒன்று இருக்கென்று நினைக்கிறன்...

அங்கு பெற்றோரை இழந்த அந்த 16 வயது சிறுமி கஸ்ரத்தில் இருந்திருக்கலாம், அதை அந்த வயோதிபர் தனக்கு advantage ஆகா எடுத்திருந்தால் அது கேவலத்திலும் கேவலம்!!

அடுத்தவன் இனத்தில பின்பற்ற எவ்வளவோ இருக்கும் போது ஏன் இப்படியானவை மட்டும் தான் புரசிகரமாகத் தோன்றுகிறது என்பது தான் எனக்கு விளங்கவில்லை...

அவ்வளவுக்கு பாலியல் உறவுகளை/ இச்சைகளைக் கட்டுப்படுத்த முடியாத இனமா?

*எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது

Edited by குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.