Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே?

Featured Replies

யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம் : புத்திசீவிகள் எங்கே?

yarlm.jpgஇலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ளபகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர்.

பாரிய அளவில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.

மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறப்போவதை உணர்ந்து கொண்டு அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டதுடன், கலகத்தடுப்பு பொலிஸார் மற்றும், ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பள்ளிவாசல் வளாகத்தைவிட்டு வெளியேறினால் கலவரமாக கருதப்படும் எனவும், அதற்காக தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் ஏச்சரித்திருந்தனர். இதனையடுத்து பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எனினும் பெருமளவு முஸ்லிம் மக்கள் வளாகத்தை விட்டு வெளியேறி வீதியில் இறங்க முயன்றபோதும், பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்,

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிரான, பதாகைகள், மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கெதிரான பதாகைகள் போன்றவற்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ்ப்பாண முஸ்லீம்களுக்காகக் குரல் கொடுப்பதாக கூறிக்கொண்ட புத்திசீவிகள் என அழைக்கப்பட்ட பலர் இந்த சம்பவத்தில் மௌனம் சாதிக்கின்றனர். தன்னார்வ நிறுவனங்கள் தலைமறைவாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் வாழும் ஏனைய தமிழ்ப் பேசும் மக்கள் முஸ்லீம் தமிழர்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வருதல் மகிந்த பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை உறுதிப்படுத்தும்.

yarlm2.jpg

http://inioru.com/?p=27645

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிரான, பதாகைகள், மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கெதிரான பதாகைகள் போன்றவற்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ்ப்பாண முஸ்லீம்களுக்காகக் குரல் கொடுப்பதாக கூறிக்கொண்ட புத்திசீவிகள் என அழைக்கப்பட்ட பலர் இந்த சம்பவத்தில் மௌனம் சாதிக்கின்றனர். தன்னார்வ நிறுவனங்கள் தலைமறைவாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் வாழும் ஏனைய தமிழ்ப் பேசும் மக்கள் முஸ்லீம் தமிழர்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வருதல் மகிந்த பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை உறுதிப்படுத்தும்.

தமிழர் தரப்பும் அதன் தலைமையும் முஸ்லீம்களுக்காக குரல்கொடுத்து ஒரு மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தல் வேண்டும். ஒற்றுமைப்பட இது நல்ல சந்தர்ப்பம். அதன் மூலம் சர்வதேச ஆதரவை பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக சேர்க்கவேண்டும்.

இந்த ஈனப் பிறவிகளின் பதாதைகளை படித்தால் - அதுகள் "பயங்கரவாதப் போர்" என்று யாழ் மண்ணில் வைத்தே கத்துதுகள்.

சூடு, சொரணை இல்லாத வரைக்கும் தமிழன்பாடு கஷ்டம் தாம்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபோதும் முஸ்லிம் மக்களை தமிழ் மக்களுடன் இணைவதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தி சீவிகள் என்பவர்கள் புலிகளுக்கு எதிரான செயற்பாட்டையும்....தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதை தடுப்பதற் காகவும் இலங்கை அரசினால் முகமூடி போட்டு உருவாக்கப் பட்ட குழு....அரசாங்கத்திற்கு எதிராக எதையும் பேசவும் மாட்டர்கள்..செயற்படவும் மாட்டார்கள்....இதை பெரிய ஒரு விருட்சமாக னினைப்பவர்கலள்...யார் தெரியுமா?புலத்தில் உள்ள நீரிழிவு நோயுள்ள புண் காறர்......இவர்களுடைய புண் காரணம் வேறை...ஆனால் புலிகளால் காயம் பட்ட மாதிரி...புலி எதிர்ப்பு செய்வதில் விண்ணர்கள்......இவைதான் புத்தி சீவிகளை தூக்கிப் பிடிப்பார்கள்.....இந்த முஸ்லிம்கள்...இன்று இப்படி நிற்பார்கள்....விடிய எப்படிநிற்பார்கள்..என்று சொல்லமுடியாது....

அப்படித்தான் நாங்களொன்றிணைந்து செயற்பட்டாலும்...ஆதையும் குள்ளத்தனத்தினால்...தங்களுக்கு சாதகம் ஆக்குவார்கள்.....எனவே..அவர்கள் தம்வ௳இ சென்று பட்டு அழுந்தி வரட்டும்...நாம் அரவணைப்போம்....அதுவரை பொறுமை காப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் புத்திசீவிகள் என்று பொடி வைத்துப் பேசுவது ஏன் என்று தெரியவில்லை. கேழ்வி கேட்பதற்காக தூக்கி விடாதீர்கள். வெள்ளை வானுக்குக்குக்கூட அஞ்சியதில்லை. சந்தர்பத்தையும் சம்பவத்தையும் அதன் அரசியலையும் உணராமல் இன்னமும் யாழ் பின்னூட்டங்களில் முஸ்லிம்கள் பற்றி அருவருப்பான வார்த்தைப் பிரயோகங்களை பார்க்கும்போது வெறுப்பாக இருக்கு. தமிழர் மீதான அநீதிகளுக்குப்பின்னும் கொக்கரித்த ஜெஆரின் குரலில் பேசுவதை தவிர்த்தாலே தமிழ் முஸ்லிம் உறவு சரியாகிவிடும்.

யாழ் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமான உரையாடலில் இருக்கிறவன் என்றவகையில் அவர்கள் மனசை அறிவேன். பெரும் அநீதிகளுக்கு அவர்கள் முகம் கொடுதிருக்கிறார்கள். இத்தனை அநீதிகளுக்குப் பின்னும் அவர்கள் அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை

சிங்கள அரசு தமிழர் உரிமைகளை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று நசுக்கியதுபோல முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதற்க்கு மதவாதபோர் என்கிறீர்களா என்கிற அர்த்ததில் எழுதிய பதாகையில் என்ன பிழை? அவர்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதை எங்களது உரிமைப் போராட்டதை நசுக்கியதோடு ஒப்பிடுவது நமது நட்ப்பை ஆதரவை கோரும் செயலல்லவா? தயவு செய்து அவர்கள்து நிலைபாட்டை ஆதரியுங்கள் அனுதாபத்தோடு உறவோடு பேசுங்கள். நான் எப்போதும் சொல்வதுபோல தமிழர்களும் முஸ்லிம்களும் இறுதியில் ஒன்றாக இருப்போம்.

நிழலி நீங்கள் என்னை யாழில் இருந்து அகற்ற விரும்பினால் இந்தக் கருத்தையும் தூக்குங்கள் போதும். நான் புரிந்துகொள்கிறேன்.

.

.

575249_217501578364377_100003136100600_362342_450811840_n.jpg

Wall Photos

இலங்கையில் தொடரும் பௌத்த சிங்கள பேரினவாத

தாக்குதல்களைக் கண்டித்து கண்டனக் கூட்டம...்

தம்புள்ள பள்ளிவாசல் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தாக்குதல்;

அண்மையில் தம்புள்ளையில் முஸ்லீம்களது பள்ளிவாசல் மீது பௌத்த சிங்கள இனவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலை அரசும் அவர்களது படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை இலங்கையில் இனங்களுக்கிடையிலான உறவுகள் குறித்து அக்கறை கொண்டோருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஸ்ரீலங்கா – மகிந்த அரசின் பிரதம மந்திரி ஜெயரத்தின முஸ்லீம் மக்கள் தலைவர்களை சந்தித்து பேசாமலேயே அவர்களை சந்தித்தாகவும் அவர்கள் பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்தாகவும் கூறும் செயற்பாடு மிக மோசமானது. ஜனநாயகத் தன்மையற்றது.

முதல் தடவையாக முஸ்லீம் வணக்கத் தளங்கள் மீது; தாக்குதல் நடைபெறவில்லை. இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளன. கடந்த ஜனவரியில் அனுராதபுரத்தில் உள்ள தர்க்கா ஒன்றும் பௌத்த சிங்கள இனவாதிகளால் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது இனவாதிகள் முஸ்லீம்கள் மீது தமது கவனத்தை திருப்பியுள்ளதன் வெளிப்பாடாகும். அத்துடன் இந்தப் போக்கானது இச் சம்பவத்துடன் முடிந்து போவதல்ல. தொடர்ச்சியாக இந்து, முஸ்லீம் வணக்கத் தலங்கள் மீது தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்.

இப்படியாக முஸ்லீம் மக்கள் மீது தொடரும் தாக்குதல்களை அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் தலைமைகள் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாமல் இருப்பது கவனிக்கத்தக்கது; இதே இன வெறி சிஙகள அரசில் முஸ்லீம் காங்கிரசின் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருப்பது வேடிக்கையானது.

ஸ்ரீலங்கா – மகிந்த அரசின் எடுபிடிகளாக இருக்கும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் கடந்த காலங்களில் நடைபெற்ற இன அழிப்பிற்கு 'புலிகளின் பயங்கரவாதம்' காரணம் என கூறிவந்தன. மாறாக ஸ்ரீலங்கா பௌத்த சிங்கள இனவாதமானது இன அழிப்பை தீவிர முனைப்புடன் செயல்படுத்திவருகின்றன. இதில் சிங்கள தலைமைகள் மிகத் தெளிவாக உள்ளன.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதும், இலங்கையில் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதும், இலங்கையானது ஒரு பல் தேச பல் கலாச்சார சமூகம் என்பதை ஏற்றுக் கொண்டு, அதனை அரசியல் அமைப்பில் உறுதி செய்வதும், அந்த அடிப்படையில் அரசியல் தீர்வுகளை முன்வைப்பதிலுமே தங்கியுள்ளது.

இப்படிப்பட்ட தீர்க்கமான அறிவார்ந்த முன்மொழிவுகளுக்கு மாறாக பௌத்த சிங்கள இனவாதிகளின் உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறையில் மேற்கொள்ளப்படும் எந்த முன்மொழிவுகளுமே இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதில் எந்த விதமான பாத்திரமும் ஆற்ற முடியாது. இது சிக்கலை மேலும் ஆழப்படுத்தவே வழிவகுக்கும். இதனை புரிந்து கொள்வது அவசியம்.

தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன்று திரளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

புதிய திசைகள்

மே 18 இயக்கம்

அசை

தேடகம்See More

By: Trc Thedakam

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈனப் பிறவிகளின் பதாதைகளை படித்தால் - அதுகள் "பயங்கரவாதப் போர்" என்று யாழ் மண்ணில் வைத்தே கத்துதுகள்.

சூடு, சொரணை இல்லாத வரைக்கும் தமிழன்பாடு கஷ்டம் தாம்.

இலங்கை தமிழ் பேசும் முஸ்லீம்கள் எமது விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த நிகழ்வுகளும் உள்ளன. அதேவேளை.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உச்சரிப்போடு.. அதன் தூண்டுதலுக்கு பலியாகி.. தமிழர்களின் போராட்டத்தை.. பயங்கரவாதம்.. என்றும்... எமது இனத் துரோகிகளின் கருத்துக்களுக்கு இணங்க.. பாசிசம் என்று சொல்லியும் இருக்கின்றனர்... அதன்படி.. தமிழர்களுக்கு எதிராக மிக மோசமாகவும் மதப் பயங்கரவாத வெறியோடும்.. நடந்தும் கொண்டுள்ளனர்..! இது கடந்த காலம்.

இன்று உள்ள கள யதார்த்தம் என்பது மாறுபட்டது. முஸ்லீம்கள் தங்கள் நிலையை பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. அவர்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பிய அதே சிங்களப் பெளத்த பேரினவாதம் இன்று.. அவர்களையும் குறிவைக்க ஆரம்பித்துவிட்டுள்ள நிலையில்.. மீண்டும் முஸ்லீம்கள் தமிழர்களின் விடுதலைக்கான வழி பற்றி நிற்க முனைகின்றனர்.

தமிழர்களின் பலமிக்க சக்தியாக விளங்கிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக்கி.. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி.. அவர்களை.. அதை.. முஸ்லீம்களின் பங்களிப்போடும் தான் சிங்களம் அழித்தது. இருந்தாலும்.. விடுதலைப்புலிகளை கடைசி வரை மதித்த முஸ்லீம்களும் உள்ளனர். தமிழர்களின் போராட்ட நியாயத்தைப் புரிந்து கொண்ட முஸ்லீம்களும் உளர். விடுதலைப்புலிகளின் தமிழ் மக்களின் கடந்த கால நிலைப்பாட்டை விளங்கிக் கொண்ட முஸ்லீம்களும் இருந்தனர். இன்று அந்தத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பை சிங்கள பெளத்த பேரினவாதம் தோற்றிவித்துள்ள நிலையில்.. தமிழ் மக்கள் முஸ்லீம்களின் இந்த சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு எதிரான குரலுக்கு ஆதரவளிக்க வேண்டும்..! இதனால் தமிழ் - முஸ்லீம் உறவுக்கிடையே சிங்களம் போட்ட தடைத்திரையை கிழித்து புரிந்துணர்வை கூட்ட முடிவதோடு.. தமிழ் மக்கள் வார்த்தை அளவில் இன்றி.. முஸ்லீம்களின் தனித்துவம்.. சம உரிமையை நிஜமாகவே அங்கீகரிக்கின்றனர் என்ற புரிதலையும் உண்டு பண்ண முடியும்..!

இது முஸ்லீம்களை தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பிவிட்ட.. சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கும்.. சிங்கள அடிவருடி.. தமிழினத் துரோகிகளுக்கும் ( தமிழ் பேசும்.. புத்திசீவிகள் என்ற ஒரு கும்பல் உள்ளடங்க).... முஸ்லீம்களும் தமிழ் மக்களுக்கும் இணைந்து சரியான பாடம் கற்பிக்க கிடைத்துள்ள சரியான சந்தர்ப்பமாகும்..!

1990 முஸ்லீம்களின் வெளியேற்றம்.. ஒரு பாதுகாப்புக் காரணங்களுக்கான நடவடிக்கையே ஆகும். சிங்களத்தின் தூண்டுதலின் பெயரில் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே தூண்டப்பட்ட சமூக விரோதப் போக்குகள் கிழக்கைப் போல வடக்கிலும் தொடரக் கூடாது என்பதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒரு சரியான நடவடிக்கை என்பதை இன்றாவது முஸ்லீம்கள் உணரச் செய்ய வேண்டும். இதனை விடுதலைப்புலிகள் பலமுறை உணரச் செய்ய முற்பட்ட போதும்.. சிங்களத்தின் பேச்சை மதித்துக் கொண்டு அன்று முஸ்லீம்களும்.. அதனை தமக்கு எதிரான செயலாகவே இனங்காட்டினர். இன்றும் சிலர் சிங்கள அரசிடம் ஆதரவு பெற.... அதனையே செய்கின்றனர்.

ஆனால் 2002 போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பின் விடுதலைப்புலிகள்.. முஸ்லீம் மக்களை தங்கள் சொந்த இடம் திரும்ப அழைத்ததன் மூலம்.. தமது செயலில் சொல்லில் இருந்த நியாயத்தையும் அவர்களுக்கு காட்டிவிட்டனர். இந்த கால இடைவெளியில் முஸ்லீம்களின் மனதில் விதைக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நச்சு விதைகள் இன்று விச விருட்சங்களாக வளர்ந்துள்ள நிலையில் அவற்றை முற்றாக வெட்டி அகற்ற வேண்டின்.. தமிழ் - முஸ்லிம் மக்களை எவர் பிரித்தாள நினைத்தார்களோ அவர்களின் நகர்வுகள் மூலமே சரியான சந்தர்ப்பங்களில்.. நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி.. வெளிப்படுத்தி.. அந்த உறவை மீண்டும் சந்தேகங்களுக்கு இடமின்றி.. கட்டி வளர்க்க வேண்டும். கட்டி வளர்க்கப்படும் அந்த உறவின் பலமே.. சிங்கள பெளத்த பேரின ஆட்சியாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும்.. அவர்களின் நேரடி.. மறைமுக ஆதரவளர்களுக்கும்.. சவாலாக இருக்கும்..!

விடுதலைப்புலிகள் முஸ்லிம் விரோத செயற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. முஸ்லீம் மக்களின் ஆதரவும்.. இருப்பும் தமிழ் மக்களின் இருப்போடு பிணைந்த ஒன்று என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்ததோடு.. முஸ்லீம்களுக்கும் புரிய வைத்தனர் அல்லது புரிய வைக்க முற்பட்டனர். தமிழ் - முஸ்லீம் உறவு பலப்படும் நிலையில் தான் எனி சிறுபான்மை சமூகங்களின்/ இனங்களின் உரிமையை கொஞ்சம் என்றாலும்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஆட்சியைக் கொண்ட சிறீலங்காவில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

கடந்த காலங்களைப் போல.. தமிழர்களிடம் இருந்து முஸ்லீம்களும் எனி விலகி இருக்க முடியாது. அது அவர்களுக்குப் பலவீனம் என்பதை அவர்களும் புரிந்து கொண்டு.. தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளை முஸ்லீம்களும் கைவிடுதல் வேண்டும்..! தமிழ் மக்களும் முஸ்லீம்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டும்..! தமிழ் - முஸ்லீம் மக்களிடையே.. கடந்த கால நடவடிக்கைகளின் பின்னால் இருந்த கசப்பான உண்மைகளுக்கு சிங்களப் பேரினவாதமே காரணம் என்பதையும் தாம் அதற்கு பலிக்கடாவானதையும் முஸ்லீம்களும் உணர்ந்து தம்மை திருத்திக் கொண்டு.. தமிழர் விரோதப் போக்கில் இருந்தும் அவர்கள் மனதார மாற்றங்களைக் கொண்டு வந்து இரு தரப்பும்.. நல்ல பலமிக்க சகோதரத்துவத்தை கட்டி வளர்ப்பதே இன்றைய சூழலில்.. என்றும் அவசியமாகும்..!

சிங்கள பெளத்த பேரினத்திடம் இருந்து.. தமது உரிமை.. விடுதலையை வேண்டி நிற்கும்...தமிழ் மக்களும்.. முஸ்லீம்களின் மனதில் இருக்கும் காயங்களை ஆற்ற இந்தச் சூழலில் அவர்களை அரவணைத்து தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதும் அவர்களிடத்தில் தமிழ் மக்களோடு தாம் கூடிய சகோதரத்துவத்தோடு.. உரிமையோடு.. சமத்துவத்தோடு வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் ஊட்டுவதும் அவசியமாகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் உங்களின் நீண்ட கருத்தாடல் நன்மையானதுதான்.

முஸ்லிம்களால் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் யாராலும் மறக்கப்பட முடியாதது. ஏனெனில் தமழரோடு ஒரே பிரதேசத்தில், ஒரே ஊரில் பக்கத்து வீட்டுக்காரனாய் இருந்து கொண்டு தமிழருக்கெதிராக அவர்கள் செயற்பட்ட விதம் குறுகிய நோக்கம் கொண்டதென்பதை இப்போதாவது உணரத் தவறுவார்களேயானால், பேரினவாதத்தின் கரங்கள் அவர்களைக் குதறிவிடும்.

தற்போதைய நிலையில் தமிழர்கள் அவர்களுடன் இணையத்தான் வேண்டும். அதிலும் அவதானம் தேவை. ஆனாலும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் எச் சந்தர்ப்பத்திலும் தமிழரோடு இணைவதற்கு முஸ்லிம் மக்களை அனுமதிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து. இது தலைமைகளால் ஏற்படும் நிகழ்வு அல்ல, பதவிகளுக்காக இவ்வாறான முடிவுகளை எடுப்பார்கள்.

தமிழர் முஸ்லிம்கள் இணைவதன் மூலம் பேரினவாதத்திற்கு சாவு மணி அடிக்கலாம் _

இந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் மீதான பேனவாதத்தின் அடாவடித்தனங்கள் தொடர்ந்த வண்ணள்ளன. எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் உறுதிபட இணைவதன் மூலம் இப்பேனவாதத்திற்கு சாவு மணி அடிக்கலாம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அறைகூவல் விடுத்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அமரர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு ஆலையடி வேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இன்றைய தினத்தில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டங்களுடன் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்கின்றனர். சிறுபான்மை சமூகங்கள் மீதான பேரினவாதத்தின் அடாவடித்தனங்களுக்ககு எதிரான இத்தகைய நிகழ்வில் நாம் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் உரியவேளையில் இதற்கான அழைப்பு எமக்கு விடுக்கப்படாமையால் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பங்குகொள்கின்றோம்.

இந்த நாட்டில் சிங்கள பேரினவாதத்தின் இனவாத அடாவடித்தனங்கள் சிறுபான்மையினம் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொழும்பில் அகதிகளாக்கப்பட்டு கப்பலில் வட கிழக்கிற்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு சிங்களப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் திட்டமிட்டு தமது அடாவடித்தனங்கள் மூலம் விரட்டப்பட்டது போல் இன்று தென்பகுதியிலிருந்தும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலிருந்தும் முஸ்லிம் மக்களை வெளியேற்றுவதற்கு இப் பேரினவாதம் இணைந்துள்ளமையை இன்று நாம் காண்கிறோம்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் முஸ்லிம்களின் தர்ஹா ஒன்றைப் பௌத்த துறவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதனை மீளக்கட்டியெழுப்ப முடியாத துர்பாக்கியம் நிகழ்ந்துள்ளமையும் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.

அத்தகைய சம்பவத்திற்குப் பிறகும் கூட முஸ்லிம் மக்கள் அரசுக்கு ஆதரவளித்தே வந்தனர். ஏன் அரசுக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியிலிறங்கி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்ததோடு ஜெனீவா சென்றும் அரசுக்கு கைகொடுத்தனர். இதற்கு கைமாறாக முஸ்லிம்களுக்கு அரசு அடித்த சவுக்கடியும் இந்த நன்றிக்குப் பேனவாதம் கொடுத்த நன்றிக் கடனும் தான் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமாகும் எனக் கொள்ளவேண்டியுள்ளது.

எனவே குட்டக்குட்ட குனிபவன் மடையன் என்பது போல் இல்லாது முஸ்லிம் உணர்வுகளும் இந்த பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக எழும்ப வேண்டும்.

இந்த வகையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து பயணிப்பதன் மூலம் தான் பேரினவாதத்திற்கு இந்த நாட்டில் சாவு மணி அடிக்கலாமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் இதற்கு ஏதுவாக முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வர வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றேன். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37810

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் வலியை தற்போதாவது உணர்கிறீர்களா?

வாருங்கள் போராடலாம்.

ஆனால் மீண்டும் நெருப்போடு சீண்டிப்பார்க்கக்கூடாது.

விளைவுகள் எழுதக்கூடியவையாக இருக்காது என்பதையும் அறிவீர்கள்.

தாயக மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை சிங்களத்திடம் இருந்து சர்வதேச ஆதரவுடன் பெற நிச்சயம் முஸ்லீம்கள் தடையாக இருக்கின்றார்கள். அதை கொஞ்சம் குறைக்கும் அரசியல் நோக்கம் எமக்கு தேவை. அதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

Edited by நிழலி
தணிக்கை செய்யப்பட்ட கருத்தை மேற்கொள் காட்டி எழுதியதால் அந்தப் பகுதி மட்டும் நீக்கப்பட்டுள்ள

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மேல்தான் தவறு, அவங்கள்தான் சொல்கின்றாங்கள் தாங்கள் முஸ்லிம்கள் என்று சொல்வதில் பெருமை கொள்கின்றார்கள்,

ஆனால் எங்களில் சிலர்தானே அவர்களை சகோதர இனம் என்று கூறி அவர்களை அரவணைக்கின்றனர் ஆனால் அவர்கள் எங்களுக்கு எதிராக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

என்னை பொறுத்தவரையில் சிங்களவனும் முஸ்லிம்மும் ஒன்றுதான்.

  • தொடங்கியவர்

நிழலி நீங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் புத்திசீவிகள் என்று பொடி வைத்துப் பேசுவது ஏன் என்று தெரியவில்லை. கேழ்வி கேட்பதற்காக தூக்கி விடாதீர்கள். வெள்ளை வானுக்குக்குக்கூட அஞ்சியதில்லை. சந்தர்பத்தையும் சம்பவத்தையும் அதன் அரசியலையும் உணராமல் இன்னமும் யாழ் பின்னூட்டங்களில் முஸ்லிம்கள் பற்றி அருவருப்பான வார்த்தைப் பிரயோகங்களை பார்க்கும்போது வெறுப்பாக இருக்கு. தமிழர் மீதான அநீதிகளுக்குப்பின்னும் கொக்கரித்த ஜெஆரின் குரலில் பேசுவதை தவிர்த்தாலே தமிழ் முஸ்லிம் உறவு சரியாகிவிடும்.

யாழ் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமான உரையாடலில் இருக்கிறவன் என்றவகையில் அவர்கள் மனசை அறிவேன். பெரும் அநீதிகளுக்கு அவர்கள் முகம் கொடுதிருக்கிறார்கள். இத்தனை அநீதிகளுக்குப் பின்னும் அவர்கள் அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை

சிங்கள அரசு தமிழர் உரிமைகளை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று நசுக்கியதுபோல முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதற்க்கு மதவாதபோர் என்கிறீர்களா என்கிற அர்த்ததில் எழுதிய பதாகையில் என்ன பிழை? அவர்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதை எங்களது உரிமைப் போராட்டதை நசுக்கியதோடு ஒப்பிடுவது நமது நட்ப்பை ஆதரவை கோரும் செயலல்லவா? தயவு செய்து அவர்கள்து நிலைபாட்டை ஆதரியுங்கள் அனுதாபத்தோடு உறவோடு பேசுங்கள். நான் எப்போதும் சொல்வதுபோல தமிழர்களும் முஸ்லிம்களும் இறுதியில் ஒன்றாக இருப்போம்.

நிழலி நீங்கள் என்னை யாழில் இருந்து அகற்ற விரும்பினால் இந்தக் கருத்தையும் தூக்குங்கள் போதும். நான் புரிந்துகொள்கிறேன்.

நான் இனியொரு இணையத்தின் செய்தியை அவர்கள் இட்ட அதே தலைப்புடன் தான் இணைத்துள்ளேன். இதைக் கூட புரிய முடியாத உங்களைப் போன்றோர் முஸ்லிம்கள் எமக்கு செய்த இன்னல்களையும் காட்டிக் கொடுப்புகளையும் மறக்கச் சொல்லும் போதுதான் எமக்கு உங்களின் நோக்கம் பற்றி பெரும் கேள்வி எழுகின்றது. அத்துடன் முஸ்லிம்களின் பதாதையில் எழுதப்பட்டுள்ள 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்று குறிப்பிட்டு உள்ளது எம்மை கொன்று குவித்த போரை பாராட்டித் தான். எந்த ஒரு முஸ்லிமுக்கும் எம் இன அழிப்பு பற்றி எந்தவிதமான கவலையும் இல்லை என்பதுதான் யதார்த்தம்

  • கருத்துக்கள உறவுகள்

yarlm.jpg

ஓம்.. இது மதப்பயங்கரவாதத்திற்கு எதிரான போர்..!!! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசு தமிழர் உரிமைகளை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று நசுக்கியதுபோல முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்குவதற்க்கு மதவாதபோர் என்கிறீர்களா என்கிற அர்த்ததில் எழுதிய பதாகையில் என்ன பிழை? அவர்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதை எங்களது உரிமைப் போராட்டதை நசுக்கியதோடு ஒப்பிடுவது நமது நட்ப்பை ஆதரவை கோரும் செயலல்லவா?

.

நானும் பொயட் சொன்ன மாதிரித்தான் நினைக்கிறன். -மற்ற மாதிரியும் எடுக்கலாம்- ஆனால் அதில் உள்ள சிறுபான்மை இனங்களின் என்கிற பன்மை, அவர்கள் இரண்டையும் -பயங்கரவாத, மதவாத போர் -ஏற்கவில்லை, அல்லது பெரும்பான்மை சிறுபான்மையை அடக்க பாவிக்கும் வெவ்வேறு வகையான வழிகள் என காட்ட குறிபிட்டதாகவே நான் நினைக்கிறன்.

இங்கே புத்திசீவிகளின் பங்கு, என்ன செய்கிறார்களோ தெரிவில்லை. ஆனால் வாழ்விடத்தில் இருந்து விரட்டப்படவதும், பள்ளியை அகற்ற சொல்லுவதும் ஒன்றோ தெரியவில்லை. அதற்கு குரல் கொடுத்தால் இதற்கும் குரல் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை? இரண்டையும் ஒரே தட்டில் போட்டு குழப்ப வேண்டாம்.

நாங்கள் நன்றாக தனிமை படுத்பட்டுகொன்று வருகிறேம், இன்னும் பிளவுகள் வேண்டும் என்றால் இவர்களுடனும் விரோதம் பாராட்டலாம். ஒன்று, அப்படி செய்வதால் சிங்களவன் எங்களுடன் இணைந்து வருவான் என்றால் சந்தோசம். ஆனால் இருக்கு ஒன்றிரண்டு முஸ்லீம் அன்ன/ காக்க காவடிகளும் வேண்டாம் என்றால் அவர்களுடனும் பகைத்து கொள்ளுவோம்.

இங்கே கக்கீம், டகிலஸ், பிள்ளையான், ......................................ஒரே மட்டையில் ஊறின குட்டைகள். அவர்கள் அரசாங்கத்தில் இருக்கும் பொது, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் படி அல்லது அவர்கள் சொல்லுவது படிதான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுத்தான் தெரியும். அப்படியான ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தோடு பகைப்பது எந்தளவு தூரம் நீண்ட காலத்தில் உதவும் என்று தெரியாது.

இங்கே இந்த கக்கீம் மாற்ற மாற்ற முஸ்லீம் அரசியல் தலைவர்களை விட, சாதாரண எல்லா முஸ்லீம்களும் திறம் என்று சொல்ல முடியாது. BBC வந்த இது தொடர்பான செய்தி ஒன்றில், மத்திய கிழக்கில் வேலைபார்க்கும் இலங்கை முஸ்லீம் ஒருவர் சொல்லுகிறார் " அரசாங்கம் இதனை விரைந்து தீர்த்து வைக்க வேண்டும், அல்லாவிடில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சொல்லுவது உண்மை என்றாகிவிடும்" எத்தனை வீதம் முஸ்லீம் தமிழர் உடன் சேர்ந்து வாழ, அல்லது எங்களுடைய பிரச்னையை உணர்ந்தவர்களோ தெரியாது, ஆனால் அவர்களுடன் சண்டைபிடித்தால் ஏதும் எங்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்?

அந்த 71 புத்திஜீவிகளும், பேரினவாதத்தை எதிர்க்கப்போவதில்லை. அவர்களுக்கு இருந்தது புலிக்கடுப்பு. அதில் கையெழுத்திட்ட புத்திசீவிகளில் பலர் தங்கள் சுயநலன்களுக்காக இயங்குபவர்கள். இதனையே ஒரு அப்பாவித் தமிழன் தம்புள்ளை பள்ளிவாசலிற்கு முன்னாள் 'உச்சா' போயிருந்தால், அதனை எதிர்த்து 'ஏழாயிரத்து ஒண்ணு' புத்திசீவிகள் கையொப்பம் இட்டு நாடகமாடியிருப்பார்கள்.

இஸ்லாமியச் சகோதரர்களும் பேரினவாதத்துடன் முட்டுப்பட்டு உண்மை நிலையை புரிந்து கொள்வது அவசியம். அதுவரை பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இனியொரு இணையத்தின் செய்தியை அவர்கள் இட்ட அதே தலைப்புடன் தான் இணைத்துள்ளேன். இதைக் கூட புரிய முடியாத உங்களைப் போன்றோர் முஸ்லிம்கள் எமக்கு செய்த இன்னல்களையும் காட்டிக் கொடுப்புகளையும் மறக்கச் சொல்லும் போதுதான் எமக்கு உங்களின் நோக்கம் பற்றி பெரும் கேள்வி எழுகின்றது. அத்துடன் முஸ்லிம்களின் பதாதையில் எழுதப்பட்டுள்ள 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்று குறிப்பிட்டு உள்ளது எம்மை கொன்று குவித்த போரை பாராட்டித் தான். எந்த ஒரு முஸ்லிமுக்கும் எம் இன அழிப்பு பற்றி எந்தவிதமான கவலையும் இல்லை என்பதுதான் யதார்த்தம்

முஸ்லிம்கள் யாழில் இருந்து மட்டுமே புலிகளால் விரட்ட பட்டார்கள்...........

அதுவும் அவர்கள் விதைத்த வினையை அறுவடை செய்தே சென்றார்கள்.

அன்றைய நிலையில் புலிகளுக்கு விடுக்க பட்ட சவால் அதை எதிர்கொள்ள அவர்களிடம் இருந்த பலம் பலவீனங்கள் என்பதை கருத்தில் எடுத்தே புலிகள் அந்த முடிவுக்கு வந்த போதும்............

தமிழர்களும் புலிகளும் எப்போதும் அந்த விடயம் பற்றி கவலை தெரிவித்தே வந்துள்ளோம்.

யாரவது ஒரு முஸ்லிம் இத்தனை தமிழர் கொன்று குவிக்க பட்டபோதும்..........

தமிழ் நகரங்களே அகதிகளாகி முகாம்களுக்குள் அடைபட்ட போதும். சிறு மன கசப்பை என்றாலும் காட்டியிருக்கிறார்களா?

உலகில் பல அனர்த்தங்கள் நிகழும் போது சிறு ஏழை நாடுகளே தம்மால் ஆனா உதவியை செய்வார்கள். இந்திய குஜாரத்தில் பூமி அதிர்வு வந்த பொது எத்தனயோ முஸ்லிம்கள் இறந்து போனார்கள் முன்னின்று காசு சேர்த்து நாங்கள் அனுப்பவில்லையா?

பெட்ரோல் காசில் புரளும் ஏதாவது ஒரு முஸ்லிம் நாடு ஒரு சிறிய தொகையை என்றாலும் கொடுத்ததா???

இவனுகளுக்கு யாராவது அடித்தால் மட்டும் நாங்கள் துணைக்கு போகவேண்டும்.......

எங்களை யாரவது அடித்தால் அவர்களும் துணை நின்று அடிப்பார்கள்?

இந்த நிஜாய விட்டுகொடுப்பு அரசியலால் ஊரையே சுடுகாடு போல் ஆக்கி விட்டுள்ளார்கள்..........

இனியும் விடு விடு என்றால்..............??

சாம்பலைதான் விட வேண்டும் அதை யார் தடுக்கிறார்கள்?

தாரளாமாக முள்ளிவாய்க்கால் சாம்பல் மேடுகளில் போய் அள்ளி செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பதாதையில் எழுதப்பட்டிருப்பது சிங்களம் புரிந்துவருகின்ற போர்களைப்பற்றிய விமர்சனம் என்றுதான் நான் நினைக்கிறேன்.தமிழர் மீது நடாத்தப்பட்டது "பயங்கரவாதப்போர்" முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்டது "மதவாதப் போர்" என்று கருத்துப் படும்படிதான் எழுதியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். எனது சிறிய மூளைக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. தவறிருந்தால் மன்னிக்க வேண்டும்.

முஸ்லீம்கள் தமிழர்க்கு நடத்தப்பட்ட அநியாயத்தை ஏற்றுக்கொண்டு வந்தால் ஒழிய அவர்களுடன் சமரசம் அடைவது இப்போதைக்குச் சாத்தியப்படாது. வெறுமனே முஸ்லீம்களுடன் தொடர்பிருப்பதாலும், அவர்களுக்கு நடந்தவைகள் எனப்படும் அநீதிகளை திருப்பத் திருப்பச் சொல்லிக்காட்டுவதாலும் அந்தச் சமரசம் ஏற்பட்டு விடப்போவதில்லை.

முஸ்லீம்கள் மீது காட்டப்படும் அனுதாபமும் அக்கறையும் தமிழர் மீதும் காட்டப்பட்டால் நல்லது. முஸ்லீம்களுக்கென்று கவலைப்படுவதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள், தமிழர்களுக்குத்தான் இன்று யாருமில்லை.

நானும் பொயட் சொன்ன மாதிரித்தான் நினைக்கிறன். -மற்ற மாதிரியும் எடுக்கலாம்- ஆனால் அதில் உள்ள சிறுபான்மை இனங்களின் என்கிற பன்மை, அவர்கள் இரண்டையும் -பயங்கரவாத, மதவாத போர் -ஏற்கவில்லை, அல்லது பெரும்பான்மை சிறுபான்மையை அடக்க பாவிக்கும் வெவ்வேறு வகையான வழிகள் என காட்ட குறிபிட்டதாகவே நான் நினைக்கிறன்.

இங்கே புத்திசீவிகளின் பங்கு, என்ன செய்கிறார்களோ தெரிவில்லை. ஆனால் வாழ்விடத்தில் இருந்து விரட்டப்படவதும், பள்ளியை அகற்ற சொல்லுவதும் ஒன்றோ தெரியவில்லை. அதற்கு குரல் கொடுத்தால் இதற்கும் குரல் கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை? இரண்டையும் ஒரே தட்டில் போட்டு குழப்ப வேண்டாம்.

நாங்கள் நன்றாக தனிமை படுத்பட்டுகொன்று வருகிறேம், இன்னும் பிளவுகள் வேண்டும் என்றால் இவர்களுடனும் விரோதம் பாராட்டலாம். ஒன்று, அப்படி செய்வதால் சிங்களவன் எங்களுடன் இணைந்து வருவான் என்றால் சந்தோசம். ஆனால் இருக்கு ஒன்றிரண்டு முஸ்லீம் அன்ன/ காக்க காவடிகளும் வேண்டாம் என்றால் அவர்களுடனும் பகைத்து கொள்ளுவோம்.

இங்கே கக்கீம், டகிலஸ், பிள்ளையான், ......................................ஒரே மட்டையில் ஊறின குட்டைகள். அவர்கள் அரசாங்கத்தில் இருக்கும் பொது, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் படி அல்லது அவர்கள் சொல்லுவது படிதான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இணைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுத்தான் தெரியும். அப்படியான ஆட்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தோடு பகைப்பது எந்தளவு தூரம் நீண்ட காலத்தில் உதவும் என்று தெரியாது.

இங்கே இந்த கக்கீம் மாற்ற மாற்ற முஸ்லீம் அரசியல் தலைவர்களை விட, சாதாரண எல்லா முஸ்லீம்களும் திறம் என்று சொல்ல முடியாது. BBC வந்த இது தொடர்பான செய்தி ஒன்றில், மத்திய கிழக்கில் வேலைபார்க்கும் இலங்கை முஸ்லீம் ஒருவர் சொல்லுகிறார் " அரசாங்கம் இதனை விரைந்து தீர்த்து வைக்க வேண்டும், அல்லாவிடில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சொல்லுவது உண்மை என்றாகிவிடும்" எத்தனை வீதம் முஸ்லீம் தமிழர் உடன் சேர்ந்து வாழ, அல்லது எங்களுடைய பிரச்னையை உணர்ந்தவர்களோ தெரியாது, ஆனால் அவர்களுடன் சண்டைபிடித்தால் ஏதும் எங்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்?

உடன்படுகிறேன், உங்கள் கருத்திற்கு நன்றிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான போரை முடித்து விட்டு மதவாதப் போரை ஆரம்பிக்கிறீர்களா என்று பதாகையில் எழுதப்பட்டிருந்தால் அதை முழுமனதோடு வரவேற்றிருக்கலாம். ஆனால் இது அப்படி அல்ல.இந்துக்கோயில்களும் கிறிஸ்தவ தேவாலயங்களும் இடிக்கப்படுகையில் அது மதவாதமாகத் தெரியவில்லையா?கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும். போனமாதம்தான் தமிழருக்கெதிராக ஜெனிவாவில் பரப்புரை செய்தவர்கள் அடிபட்டு நொந்து வந்தால்தான் மதம் வேண்டாம் நாங்களும் தமிழ் பேசும் மக்கள் இனம் என்ற உணர்வு வரும்.புலிகள் யாழில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினார்களே ஒழிய அவர்களது பள்ளி வாசல்களை உடைக்கவில்லை. தமிழ் பேசும் முஸ்லிம்களை வெளியேற்றிதைப்பற்றிக் கூச்சலிடும் புத்திஜீவிகள் அதாம்பா அன்ரி ரைகர்ஸ் இப்ப என்னப்பா சொல்லிறீங்க?மகிந்த அண்ணாச்சி ஒரு பள்ளி வாசலை இடித்தது பத்தாது இன்னும் கொஞ்சம்; இடிங்க.அவங்கட இனப் பெருக்க வீதம் கூட விட்டா சிங்களவரிலும் பார்க்க பெரும்பான்மையா வந்துருவாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka's road to peaceful co-existence

The intent to demolish Dambulla mosque tears at wounds of ethnic violence which are in the process of healing

Following a protracted and violent civil war that lasted for more than 26 years costing thousands of lives and destruction of property, it would have been natural to assume that Sri Lanka would set itself on the path of healing through national reconciliation with all its peoples; Buddhists, Tamils and Muslims.

Yet, within many Tamils there exists a widespread belief that the Sri Lankan government is trying to wipe out their Tamil culture and religious identity by constructing Buddhist temples in Tamil areas. Now many of another ethnic minority feel recent moves have taken another dimension.

In a dangerous precedent reminiscent of another time and place, the Sri Lankan Prime Minister D.M. Dayaratne ordered the demolition of a 65-year-old mosque in Dambulla stating that the area was sacred to Buddhists. He tried to appease local sentiments by saying that the mosque would be relocated to another area. This public statement followed events recently when Buddhist agitators stormed the mosque and vandalised it, threatening its destruction.

The incident undoubtedly angered the island's Muslim community who have seen enough suffering and were severely victimised during the civil war for which they had paid a heavy price. During the civil war, caught in the crossfire between the government and the Tamils, they were attacked and slaughtered in village after village, even while offering prayers in the sanctity of their mosques. Their paddy lands were looted, businesses closed and had their very means of survival taken away. The entire Jaffna Muslim population was booted out of their homes and their belongings and property were stolen from them.

They are shocked and hurt that the demolition order strikes at the very core of religious freedom in a country attempting to heal itself. Muslim Congress Secretary and parliamentarian Hassan Ali said the "community will not accept a mosque in another place even if it was built of gold".

He also added that "If the places of religious worship of the minorities are being attacked while the police and army are idly watching, it implies that they are supporting the marauders and providing security to them, instead of the law abiding people". Faced with the initial opposition, the prime minister claimed that this decision was taken after consultations with Muslim politicians. However, it was immediately debunked as a ‘blatant manufactured lie' and strongly rejected by leading Muslim politicians: Senior Minister A.H.M. Fawzie, Deputy Minister M.L.A.M. Hizbulla, Western Province Governor Alavi Moulana and Parliamentarian Abdul Khader, all of whom categorically reject the prime minister's claims. They assert that the mosque was built on land legally bought in 1964 and simply dismiss the allegations of militant Buddhists who claimed this area was sacred just two years ago.

Misleading people

Asad Sally, chairman of the Islamic Solidarity Front (ISF) and former deputy mayor of Colombo, stated that "it is misleading to say that the mosque was in existence for two years as it has been there for more than 65 years. We have all the documents to prove that it is a legally constructed mosque under the Waqf Act. Therefore the statement by the prime minister claiming that the unauthorised construction of the mosque has been stopped is totally false. The land on which the mosque was located was bought by a Muslim lady in Jaffna from Englishmen. This mosque has existed since then.

"Later the adjacent land too had been bought by mosque authorities in 1995. This statement by the prime minister is misleading the Buddhists in the country. The prime minister should not make such irresponsible statements as the Waqf Board comes under him and he is contradicting his own statement. Besides statements like Muslims will not have a place to urinate are not only irresponsible but very dangerous too."

Though the leader of the United National Party Ranil Wickremasinghe is yet to make a public statement on the tense situation, his deputy Sajith Premadasa described the prime minister's order as "law of the jungle and nothing to do with Buddhism". Sajith wondered "how could we develop the country when the prime minister's office issues such false statements?"

Some public figures deplored the political pandering of the prime minister to a few Buddhist thugs, stating that in any civilised society one would expect unruly elements who vandalise places of worship to be arrested and brought to justice. Instead they have been rewarded in violation of all principles of human decency.

Following Sri Lanka's recent and turbulent past, Tamils, Muslims and others had been looking forward to a period of peace and harmony. However the intent to demolish the Dambulla mosque tears at the wounds of ethnic violence still in the process of healing, and only serves to prove that reconciliation, peace and progress are nothing but distant dreams. The historical co-existence of Tamils and Muslims among the Buddhist Sinhalese people for more than 1,000 years is under threat.

Tariq A. Al Maeena is a Saudi socio-political commentator. He lives in Jeddah, Saudi Arabia.

http://gulfnews.com/...tence-1.1014935

Contact:

http://gulfnews.com/...news/contact-us

readers@gulfnews.com

Edited by Queen

*Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected government of Tamil Diaspora from the island of Sri Lanka. Its actions are strictly non-violent, democratic and diplomatic. It held internationally supervised elections in twelve countries to elect Members of Parliament (MPs). These MPs drafted and ratified a Constitution and elected a Prime Minister, a 10 member Cabinet and a Speaker. Web: www.tgte-us.org, www.govthamileelam.org or www.en.naathamnews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.