Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோசிக்கச் செய்து கடந்துபோன மறந்தவை ஞாபகம் வந்தால் பதியுங்கள்

Featured Replies

அன்றாடம் நாம் சந்திக்கும் சம்பவங்களை அல்லது சம்பவங்கள் பற்றிய பிறரின் உரையாடல்களைக் கேட்கையில், பொதுவாக நாம் அதிகம் அவை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. காரணம், தமிழ்ப்படங்களைப் போல, கேட்டுப் புளிச்சுப்போன சம்பங்கள் தான் வௌ;வேறு நடிகர்கள் இயக்குனர்கள் வாயிலாக எம்முன்னே விரிந்து கெணர்டிருக்கின்றன. நாம் எம்பாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்--பெருந்தெருவில் மணிக்கணக்கில் வாகனம் செலுத்துவதைப் போல.

ஒரு முறை ஒரு மரண நிகழ்விற்குச் சென்றிருந்தேன். வாழ்வாங்கு வாழ்தல் என்ற வரையறைக்குட்பட்ட ஒரு வாழ்வின் முடிவு வரையறைகளிற்குட்பட்டு அங்கு மரியாதை செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நானும் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்தபோது ஒரு அறிந்தமுகம். அவர், அதே மண்டபத்தின் பிறிதொரு பிரிவில் நிகழும் பிறிதொரு மரண நிகழ்விற்காக வந்திருந்தார். யாரெனக் கேட்டபோது, அதுவும் எனக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரின் மரணம். இன்னமும் சொல்வதானால் நான் சென்று வந்த மரண வீட்டினரைக்காட்டிலும் பன்மடங்கு அதிகம் எனக்குத் தெரிந்தவரின் மரணம் மற்றையது. ஆனால், அங்கு செல்லும் வரை அது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. காரணம்?

மிஞ்மிஞ்சிப்போனால் நாற்பதுகளில் வயது. மணம் முடிக்கவில்லை. குடும்பம் இல்லை. உலகில் உள்ள அனைத்துப் போதைகளும் அத்துப்படி. இறந்து ஒருவாரம் சென்றபின் தான் இறப்பு தொடர்மாடிக்கட்டிடத்திற்குள் அறியப்பட்டிருந்தது. பணம் என்று பாhத்தால் கடன் மட்டுமே இருந்திருப்பதற்குச் சாத்தியம் அதிகம். அதனால் இறப்பு வாய்வழியாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இறந்தபோது இவ்வுலகம் ஏதோ புறோகிறாம் செய்யப்பட்ட விதிபோல எப்படியோ அந்த மனிதனிற்கும் மரணவீட்டை ஒழுங்குசெய்திருந்தது. மரண மண்டபத்தில் செய்வதைச் செய்து கோட்டைப்போட்டுப் பெட்டிக்குள் சாதரணமாகவே கிடத்தியிருந்தார்கள். நான் முதலில் சென்று மரியாதை செலுத்தி வந்த மனிதரிற்கும் இவரிற்கும் அதிகம் பெட்டிக்குள் வித்தியாசம் தெரியவில்லை. வாழும்போது இவரின் வாழ்க்கை முறைசார்ந்து முகம்திருப்பக்கூடியவர்கள் கூட, விளம்பரப்படுத்தப்படாத மரணத்திற்கு வந்ததைக் காணமுடிந்தது.

வேறொரு கதை. ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். அத்தனையும் சேர்த்துவைத்திருந்தார் பிள்ளைக்காக. இருந்தும் அவரது மகன் தெருவில் பலதிற்கு அடிமைப்பட்டு நிற்கிறார். பேராசிரியரின் சூத்திரங்களிற்குள் அவர் மகனிற்கான தீர்வு சிக்குப்படுவதாயில்லை. பிறிதொருவர். மரமண்டை என்று சிறுவயதில் ஊரில் பெயரெடுத்தவர். நானறிந்தவரை உண்மையில் பயம் அறியாத ஒருவர் என்றால் அது அவரே. ஏதோ ஒரு புலம் பெயர் நாட்டில் ஏதோ ஒரு தொழிலிடத்தில் ஏதோ ஒரு விபத்து. விபத்துக்களை பெரிது சிறிதென்று தரப்படுத்துவது சாத்தியமில்லை, ஏனெனில் அது அவரவர் மனநிலை சார்ந்தது. இவரது விபத்து இவரை தொலைத்தது. குடி உயிரைப் பறித்தது. அவர் குழந்தையும் மரணவீட்டிற்கு வந்திருந்தது. காப்புறுதி இருக்கவில்லை என்றார்கள். பேராசிரியரின் மகனோடு ஒப்பிடுகையில் இக்குழந்தை பாதுகாப்பு வலை ஏதுமின்றி அந்தரத்தில கயிற்றில் நடந்து கொண்டிருந்தது. இன்று வருடங்கள் நகர்;ந்த நிலையில், பேராசிரியரின் மகனகை; காட்டிலும் எத்தனையோ மடங்கு சிறப்போடு மேற்படி குழந்தை வாழ்வில் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மீண்டும் குந்தியிருந்து சிந்திக்கத் தோன்றுகின்றது.

இன்னுமொரு கதை. வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் திட்டமிட்டு நடக்கும் வெற்றியாளர் என்ற வரையறைக்குள் வருகின்ற எனது நண்பனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. தனது உறவினர் இள வயதில் இறந்துபோனாராம். இதில் ஒரு விடயத்தைக் குறிப்பிடவேண்டும். இறந்தவர் கல்வியும் செல்வமும் நிறைந்து வழிந்த ஒரு குடும்பத்தில் பிறந்து நாகரிக விழுமியங்களோடு வளர்ந்து, சிறந்த பாடசாலைகளில் பயின்று, மணமாகி, பின் புலத்தில் குடிக்கடிமைப்பட்டு ஓட்டாண்டியாகி, கடன்காரர் இகழ, குழந்தை தவித்துத் தனித்து வளரத் தொடர்ந்து குடித்து இறந்துபோனார். இதில் சுவாரசியம் என்னவெனில் ஒவ்வொரு நொடியினையும் திட்டமிட்டு வாழும் எனது நண்பனின் வளங்கள் இந்த இறுதிக்கிரியைகளை நடாத்தி முடித்தது. அதாவது திட்டமேயின்றி வாழ்ந்து இறந்த மனிதனின் இறுதி நிகழ்வு திட்டத்திற்கடிமைப்பட்ட மனிதனின் வளத்தில் நடந்தேறுகின்றது.

நடக்கிறது நடந்துதானே தீருது. எது நடக்கவேண்டும் என்றோ எப்பிடி நடக்கவேண்டுமென்றோ எத்தனை தூரம் நாம் திட்டமிட்டுவிட முடியும்? இப்பிடிக்கேப்பது கூட கேட்டுக்கேட்டுப் புளிச்சுப் போன மெசேச் தான், ஆனால் உண்மையில் இந்த முனையில் எவ்வளவிற்கு எம்மால் சிந்திக்கவோ அல்லது இம்முனை பற்றி மறக்காதிருக்கவோ முடிகிறது? அதிக பட்சம் ஒரு அரைமணி நேரம்? பின் வாழ்வு கொடுக்கும் சாவிக்குக்கட்டுப்பட்டு, சாவி எமது கையில் இருப்பாதாகச் சொல்லிக்கொண்டு, துவாரங்களை நோக்கிச் சாவியோடு ஓடத்தானே செய்கிறோம். அது மட்டுமா? போட்டி, பொறாமை, எரிச்சல், ஒப்பீடு, காழ்ப்புணர்ச்சி, சதி, அதிமேதாவித்தனம், இகழ்ச்சி, திமிர், சண்டை...

உங்கள் வாழ்விலும் இவ்வாறு இயற்கையின் நகர்தலில் எத்தனையோ சம்பவங்கள் யோசிக்கச் செய்து கடந்துபொயிருக்கும். வாழ்வின் ஓட்டத்தில் மறந்துபொயிருப்பீர்கள். அப்படியான சம்பவங்கள் ஏதேனும் ஞாபகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள். நாங்களும் அறிந்துகொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

குடி, போதை.. இவற்றை விளையாட்டுக்கேனும் தொடக்கூடாது.. :rolleyes: பன்பலுக்கு என்று முதலில் ஆரம்பித்து பிறகு கடினமான சூழ்நிலைகள் ஏற்படும்போது தனது சுயரூபத்தைக் காட்டிவிடும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

"நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் விரும்பும் நிலைக்குச் செல்ல எதிர்ப்படுகின்ற தடைகளோடு கூடிய போராட்டமே வாழ்க்கை" என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருக்கின்றார்.

வாழ்க்கை சுவாரசியமாகப் போகவேண்டுமென்றால் எல்லாப் பலங்களையும் பலவீனங்களையும் பாவித்துத்தான் எதிர்ப்படுகின்ற தடைகளோடு போராடவேண்டும். ஒவ்வொருவர் போராட்டத்திலும் ஓராயிரம் கதைகள் இருக்கும். வெற்றி பெற்றவன் பெருமிதமாகக் கதைகள் சொல்லுவான். தோல்வியடைந்தன் கதைகளை சொல்லாமலேயே இருக்கக்கூடும். இறுதியில் இருவரும் பெட்டிக்கு (அல்லது கட்டைக்கு) போகவேண்டித்தான் வரும். இது தெரிந்தும் நமது சில்லைறைச் சண்டைகளையும் செயற்பாடுகளையும் நாம் விடுவதில்லை.

சில சுவாரஸ்யமான கதைகள் உண்டு. பின்னர் பதிவிடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..இருக்கு நிறைய..உங்கள் சிந்தனையோடு முடிச்சுப்போட்டு நிறைய எழுதவேணும் போல இருக்கு....

  • தொடங்கியவர்

இசைக்கலைஞன், கிருபன், சுபேஸ் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

இசைக்கலைஞன் சொல்வதைப் போல போதையினைக் கையாள முடியாமை என்பது எமது சமூகத்திற்குள்ளும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை தான். குறிப்பாக எம்மவர்கள் பலர் குடிப்பதனை அவதானித்தால், குடிப்பதன் சுவையினைத் தமது நா உணரவே அவசகாசமின்றித் தொண்டைக்குள் ஊற்றிக்கொண்டிருப்பதைக் காண முடியும். எத்தனையோ நபர்கள், எமது சமூகத்தில் இளவயதில் குடித்து மரணிப்பதை அவதானிக்க முடிகிறது.

ஆனால், அடிமைத்தனம் என்பது மதுவோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஆன்மீக ரீதியில் அடிமைத்தனங்களைக் காணமுடிகிறது, பகுத்தறிவு என்ற முனையில் அடிமைத் தனத்தைக் காணமுடிகிறது, பணம், பதவி, உணவு, அழகு, காதல், காமம், அங்கீகாரம் என்று எதுவாயிருக்கட்டும், அடிமைப்பட்டுவிட்டால், பின்னர் எதனை எதற்காகச் செய்கின்றோம் என்பதெல்லாம் மறந்து போகும். குறித்த விடயம் எமக்கு என்ன மகிழ்ச்சியினைத்; தந்தமையால் அதற்கு அடிமைப்பட்டடோம் என்பது கூட அடிமைப்பட்டபின் மறந்துபோகும், ஏனெனில் எதனையும் சுவைப்பதற்கு எம்மிடம் சற்று சுதந்திரம் இருக்கவேண்டும். அடிமைப்பட்டுவிட்டால் சுவைக்கத்தெரியாது போய்விடும்.

கிருபன் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கிருஸ்ணமூர்த்தியின் சிந்தனையாகட்டும், இதை ஒத்த 'வில் ரு லிவ்' என்ற ஸ்Nஷhப்பன்ஹாவரின் மற்றும் அவரிற்குப் பலகாலம் பின்வந்த நீட்சேயின் சிந்தனையாகட்டும் என்னைப்பொறுத்தவரை மிகவும் உண்மை (ஸ்Nஷhப்பன்ஹாவரின் சிந்தனையில் நிறைய கீழைத்தே ஆதிக்கம் இருந்தது, இது அவரைத் தொடர்ந்தவர்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.)

ஆனால் பிரச்சினை என்னவெனில், சமூகம் கபடத்தனத்தோடு சிலவற்றை மட்டும் உயர்வாக வரைவிலக்கணப்படுத்திவிட்டதால்--இது எமது சமூகத்தில் துல்லியமாக அவதானிக்கக் கூடியது--பலர் தம்மைத் தாமே தோல்வியாகக் கருதிக்கொள்ளுகிறார்கள். வாழ்க்கை என்பதே வாழ்வதற்கான முயல்தல் மட்டுமே என்பது மறந்துபோய்விடுகிறது. ஏதோ ஒரு இலக்கு இருப்பதாகவும், அந்த இலக்கை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம் போலவும், இலக்கை அடைந்துவிட்டால் பின்னர் பீச்சில் படுத்திருப்பதைப்போல இருக்க ஒவ்வொரு மணித்துளியும் இன்பமாய்க் கரையும் என்பது போலவும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இலக்கு என்பது எப்போதும் அது எம்முன்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கும் என்பதை மறந்து விடுகிறோம்.

என்னைப் பொறுத்தவரை ஒருவன் உண்மையில் தன்னை மதிக்க விரும்பின், அதற்கு அடிப்படையில் பிறரை மதிக்கத் தெரியவேண்டும். சதா சர்வகாலமும் மற்றவைர்களை ஏதாவது ஒரு வகையில் இகழ்ந்துகொண்டிருக்கும் எவராலும் தம்மை தாமே உண்மையில் மதிக்க முடியாது என்பதில் எனக்கு நிறையவே உடன்பாடுள்ளது. உலகில் எத்தனையோ அளப்பரிய அனுபவங்களும் அறிவும் பள்ளிக்கூடப்பக்கமே போயிராதவர்களிடம் இருப்பதைக் காணமுடியும். ஆனால் இவ்வுலகம், தான் செலவழித்தவற்றை நியாயப்படுத்துவதற்காகச் சான்றிதழ்களையும், எக்ஸ்க்குளுசிவ் கிளப்புகளையும் உருவாக்கிச் சுய இன்பம் கண்டு கொண்டிருக்கிறது.

சுபேஸ் உங்கிற்குத் தோன்றுவனவற்றையும் எழுதுங்கள். உண்மையில் எங்களிற்கு உறைக்கின்ற உண்மைகளை நாங்களே சுலபத்தில் மறந்து திருப்பத்திருப்ப உழல்வதற்கான காரணங்களில் ஒன்று, நாம் இப்போதெல்லாம் முன்னர் போலக் கிராமங்களாக வாழ்வதில்லை. தனித்த தீவுகளாகிவிட்டோம். எமக்கு விடயங்களை ஞாபகப்படுத்த ஆட்களும் அவகாசங்களும் கிடைப்பதில்லை. சம்பவங்கள் வாயிலாகவேனும் சிவற்றை இப்பதிவு வாயிலாக ஞாபகப்படுத்திக் கொள்வோம் எழுதுங்கள்.

மொத்ததத்தில் இப்பதிவின் சாராம்சமாக எனக்கு இருந்தது, வாழ்வில் இது இப்படிமட்டும்;தான் என்று நாம் எம்மைச் சுற்றிக் கூடுகளை கட்டிக்கொண்டிராது வாழ்வு எம்முன் விரிக்கின்ற காட்சிகள் சார்ந்து திறந்த மனதோடு நகரவேண்டும். காட்சிகளை ஜீரணிப்பதற்கான அவகாசங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலவற்றை எழுதலாம்,சிலவற்றை எழுத ஏலாது. எங்கள் சமூகம் திருந்தும் வரை தீர்வு கிடைப்பது அரிது..இன்னுமொருவன் அண்ணா பல விசயங்களை சொல்லி சென்று இருக்கிறீர்கள் மிக்க நன்றி.

  • தொடங்கியவர்

நன்றி யாயினி மற்றும் குமாரசாமி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

இன்னுமொருவன்:

மரணம் பற்றிய அறியாமை, தப்பான அபிப்பிராயம், பயம் என்பன தான் மிக ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கும், ஒழுங்கமைக்கப் படாத வாழ்க்கை முறைக்குமான காரணம். இவ்விரு பகுதியினருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

கிருபன்:

வாழ்க்கை ஒரு போராட்டம் என நான் நினைக்கவில்லை. உண்மையில் வாழ்க்கை நீண்ட பரிணாம வளர்ச்சியின் முன் நகர்வு.

ஒவ்வொரு பரிணாமியினதும் இந்த அபரிமிதமான முன்நகர்வை தடுப்பது தான் இயற்கையின் நியதி. இந்த வலையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு அது ஒரு போராட்டமே. இதை ஒரு சிறு கதைமூலம் எளிமைப் படுத்த முயல்கிறேன்.

ஒரு மரதன் ஓட்டப் போட்டியில் ஒருவர் ஓடுகிறார். அவர் ஓடும் போது வழி நெடுகிலும் இருப்பவர்கள் அவரை கேள்விகளை கேட்டும், தடைகளை போட்டும் தடுக்க நினைக்கின்றார்கள். ஓடுபவர் இந்த கேள்வி தொடுப்பவர்களுடன் விவாதத்திலும் சச்சரவிலும் ஈடுபட்டு தன் நோக்கத்தையே மறந்துபோய்விட கூடும். இவர் முடிவிடத்தை அடையும் நேரம் மிக மிக பின்னடைந்து விடும். இவ்வாறானவர் ஓட்ட பந்தயத்தை மறந்து அதை ஒரு போராட்டமாகவே பார்ப்பார்.

இதற்கு மாறாக தன் இறுதி இலக்கில் பிசகாமல் இருப்பவருக்கு இவை போராட்டமல்ல. இவை challenges. இவற்றை சரியான முறையில் அணுகினால் அவர் இலக்கு தவறாமல் இருக்க கூடும்.

கதை ஒரு குறியீடு மட்டுமே. மேலும் உங்கள் இருவரையும் கண்டதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் படிக்க.. இந்த ஞாபகம் தான் வந்திசுது....

புத்தரின் வரலாறு

சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது.. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.[2]

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது,

  • நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது.

  1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்,
  2. ஒரு நோயாளி,
  3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்,
  4. நாலாவதாக ஒரு முனிவன்.

இக் காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்து கொண்ட சித்தார்த்தர், வாழ்வின் ரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார்.அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம்.

[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D]

கவனம் பார்த்து இன்னுமொருவன்.. நீங்களும் போதிமரத்தை நாடாது இருக்க கேட்டுக் கொள்கிறேன். ஒரு புத்தராலையும் அவர் தம் சிஷ்ச கோடிகளாலும்.. உலகம் படுற பாடே போதும்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஈழத்திருமகன்,

மரணபயம் வாழ்ககை முறையில் அபரிமித செல்வாக்குச் செலுத்துகிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் மரணத்தில் சரியான பார்வை பிழையான பார்வை என்று வகைப்படுத்தமுடியும் என்று தோன்றவில்லை. அடிப்படையில் ஒரு உடலின் நாமறிந்தவரையிலான அடையாளத்தின் முடிவு மரணம் என்பதிற்கப்பால், மரணத்தின் விளைவுகளைத் தாங்கிக்கொள்வதற்காவும் பயங்களை எதிர்கொள்வதற்காகவும் வாழ்விற்கு அர்த்தம் தேடியும் பிறக்கின்ற பார்வைகள் கற்பிதங்களிற்குள் சரி பிழை என்பது பார்வையாளர்களைப் பொறுத்ததாய் மட்டுமே இருக்கமுடியும்.

அடுத்து நீங்கள் கூறுவது போன்று வாழ்க்கை நீண்ட பரிணாம வளர்ச்சியின் முன்னகர்வு என்று பார்த்தால், அந்த நீண்ட பரிணாம வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த உலகத்தினைச் சார்ந்து, அல்லது குறைந்தபட்சம் பிறரைச் சார்ந்து மட்டுமே அர்த்தம் பெறமுடியும். வாழ்க்கை என்பது தனிமனிதன் சார்ந்த அலகாகக ஒவ்வொருவராலும் பார்க்கப்படுகையில் அதன் அர்த்தம் பொதுமையில் மட்டும் தான் உணரப்படலாம் என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. அதுவும் குறிப்பாக 'ஒவ்வொரு பரிமாணியினதும் இந்த அபரிமித முன்நகர்வைத் தடுப்பது இயற்கையின் நியதி' என்றும் நீங்கள் ஒரு விடயத்தை இணைதத்துள்ளீர்கள் (இயற்கை எது, இயற்கையின் நியதி இதுவென்று எவ்வாறு திட்டவட்டமாகக் கூறமுடியும் என்பன கூட விவாதங்களிற்குரிய முனைகள்). ஏறத்தாள கிறீஸ்த்தவ மதத்தின் சில பிரிவுகளில் அதிகம் போதிக்கப்படும் 'பேப்பஸ் ட்றிவின் லைவ்' என்ற பாங்கோடு உங்களது பார்வை ஒத்திருப்பதாகப்படுகிறது. நம்புகின்ற ஒவ்வொரு மனிதனிற்கும் தனது வாழ்வு சார்ந்து அர்த்தங்களையும் பெருமைகளையும் கொடுப்பதற்கு இந்த உத்தி வினைத்திறனோடு பயன்படும் என்பது மறுப்பதற்கில்லை என்றபோதும் அனைத்துத் தத்துவங்களையும் போல இதுவும் ஒரு பார்வை மட்டுமே.

அடுத்து மரதன் ஓட்டமாக வாழ்வைச் சித்தரிக்கவேண்டுமாயின் வாழ்விற்கென்று முடிந்தமுடிபான ஒரு இலக்கிருக்கவேண்டும். ஒவ்வொருவரிற்கு ஒவ்வவொருவரிற்கு ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொரு இலக்கு இலக்காகப்படும் என்றபோதும் ஒட்டுமொத்த வாழ்விற்கான இறுதி இலக்கு என்று ஒன்றைச் சித்தரிப்பது 'நம்பிக்கை' என்ற தளத்தில் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் சுட்டிக்காட்டுகின்ற 'சவால்' மற்றும் 'போராட்டம்' இரண்டிற்குமிடையேயான வித்தியாசம் கூட மேற்படி தளத்தில் மட்டுமே அர்த்தம்பெறமுடியும் என்றே படுகின்றது. எனவே இதில் ஒவ்வொரு பார்வைகள் என்பதற்கப்பால் ஒரு முடிவு எட்டப்படலாம் என்று தோன்றவில்லை.

உங்கள் கருத்திற்கும் வருககைக்கும் நன்றி.

நெடுக்காலபோவான், போதிமரத்தாண்ட புத்தனின் சிஸ்சைகள் பூப்பறித்துக்காண்டிருப்பதாயோ ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருப்பதாகவோ குறுந்தகவல் வந்தாலேயன்றி. நாங்கெல்லாம் போதிமரம் பத்தித் தெளிவா இருப்பமில்ல..போதிமர்திற்குப் போய் சிந்திப்பதெல்லாம் ரெம்பப் பழசு. காலைநேர அலுவலகக் கடுகதிகளுள் மூவிங்கில சிந்திச்சுப் பதிவு போட்டிட்டு , ஆர்மானில அழுக்கிருந்தாத் தட்டிட்டு ஸ்ரார்பக்ஸ் கப்போட போயிண்டிருக்கணும்ய்யா... :D

நான் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நிலைபாட்டில் மிக அபரீத நம்பிக்கை கொண்டவன்.அதே நேரம் அவரவரே தம் தம் வாழ்க்கையை தீர்மானிக்க முழு உருத்திரிமை உடையவர்கள் என்பதையும் நம்புகின்றவன்.

ஒருவனது வாழ்க்கை முறையை அவன் தீர்மானிக்க அக,புற காரணிகளின் பல ஏதுவாக இருந்தாலும் முடிவை அவரவரே எடுக்கவேண்டும்.

எண்பதுகளில் புலம் பெயர்ந்த எமது இளைஞர்களிடம் இருக்கும் வாழ்க்கை அனுபவங்கள் போல் வேறெங்கும் இருப்பதாக எனக்கு படவில்லை.இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வெற்றிலை வியாபாரம்,மன்னர் ஷா கால ஈரானிய வாழ்க்கை,ஐரோப்பா எங்கும் அகதிகளாக அலைந்த கதைகள் ,கப்பல் பயண அனுபவங்கள் இப்படிஎல்லாம் சுற்றி அடித்து இன்று இந்த வட்டம் குடும்பம் குட்டிகளுடன் உலகின் பல பாகங்களிலும் செற்றில் ஆகிவிட்டார்கள் .இதில் வெற்றி தோல்வி எது என்பதை தீர்மானிப்பது என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது .

எம்மவர் பலரும் நினைப்பது போல் பணம் மட்டும் தான் சேர்ப்பது வாழ்க்கை என்றால் அதில் வெற்றிபெற்றவர்களை விட தோற்றுபோனவர்களே அதிகம் .இப்படி உலகெங்கும் அலைந்து விட்டிற்கும் நாட்டிற்கும் உதவிகளும் செய்து, தாமும் இளமையை சகலவிதத்திலும் அனுபவித்து பின்னர் குடும்ப வாழ்க்கை என்றுவர அதில் அதற்கேற்ற தம்மை மாற்றிக்கொண்டவர்கள் பலர் இருந்தாலும் மாறமுடியாமல் வாழ்க்கையை தொலைத்தவர்களும் பலர் .

கட்டு கட்டாக டொலர்களை அள்ளி செலவழித்து பின்னர் பணம் இல்லாமல் போக ரெயினில் பாய்ந்தவரும் எனக்கு தெரியும் ,நாலு கல்யாணம் விட்டு ? கட்டி இப்போ ஐந்தாவதை இலங்கையில் கட்டி அங்கே நிரந்தரமாகிவிட்டவரும் (இப்போ கனடாவில் மூன்று கிழைமை விடுமுறைக்கு வந்திருக்கின்றார்) எனக்கு பழக்கம் ,இல்லாத குழப்படிகள் எல்லாம் செய்து இன்று மில்லியனராக லண்டனில் அழகான குடும்பம் நடாத்தும் ஒருவரும் இருக்கின்றார் ,டக்கிளசின் ஒரு வலது கையாக வலம் வரும் நண்பரும் (ஆறுமாதம் நாட்டில் இருந்திவிட்டு போன வாரம் தான் வந்தார் நேர இன்னமும் சந்திக்கவில்லை சந்தித்துவிட்டு அவர் நிலை பற்றி எழுதுகின்றேன்)இருக்கின்றார் .

முழு பொய் வேசம் போட்டு தன்னையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்றும் பூசாரி நண்பர்களும் இருக்கின்றார்கள் .

வாழ்க்கை என்றால் என்ன என்பது என்றுமே விளங்க முடியாத ஒரு புதிர்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பழக்கம் ,இல்லாத குழப்படிகள் எல்லாம் செய்து இன்று மில்லியனராக லண்டனில் அழகான குடும்பம் நடாத்தும் ஒருவரும் இருக்கின்றார் ,

சிவனே எண்டு அவற்றை கதையை மட்டும் சொல்லுங்கோ? மற்ற கதைகள் ஒண்டும் வேண்டாம்..முடிஞ்ச அந்த 3 கிழமை லீவில வந்தவரின் கதையையும் சும்மா தொட்டு செல்லவும்.

இன்னுமொருவன்:

மரணத்தின் மீதான சரி/பிழை யான பார்வை என்பதல்ல. அதை பற்றிய புரிதல் தான் முக்கியமானது. சரி அல்லது பிழை என்பது தனி மனிதன் சார்ந்தது. என்றுமே எமது மதங்களோ அல்லது விஞ்ஞானமோ மரணம் பற்றிய புரிதலை ஆராயவில்லை. மாறாக பயத்தையும் வெறுப்பையுமே அள்ளித் தந்திருக்கின்றன. இங்கு நான் மரணம் என்று கூறுவது “கொலை” என்பதாக படாது.

இன்று விரிவடையும் பேரண்டம் (Expanding Universe) என்பது பற்றி தான் பௌதிகம் பேசுகிறது. ஒவ்வொரு அணுத்துகளும் ஒரு பரிணாமிதான். இயற்கையாகவே மனிதனும் மற்றும் பிற உயிரிகளும் (ஏன் உயிரற்றவையும் தான்) இந்த பரிணாம ஓட்டத்தில் இணைந்து விடுகின்றன. பொதிக கணியங்கள் பரிணாமிக்கின்றன சரி. மனம் (mind) போன்ற பௌதிக அளவீடுகளுக்கு அப்பால் இருக்கின்ற மிக நுண்மையான கணியங்கள் கூட பரிணாமிக்கின்றன. இந்த நுண்மையான பரிணாமத்திற்கு மிக நீண்ட காலம் எடுக்கிறது. மிக அடிப்படையில், மனிதர்கள் எல்லாம் ஒரே சிந்தனை தளத்தில் இருப்பதில்லை. இதன் அடிப்படை இந்த பரிணாம வேறுபாடே. இதனால் தான் ஐன்ஸ்டைன் போன்றவர்களை (Great Minds) என்கிறோம்.

சரி. இந்த பரிணாம ஓட்டம் எங்கு, எப்போது நிறைவடையும்? எங்கே அசைவியக்கம் நின்று போகிறதோ (பௌதிக மற்றும் subtle) அங்கு பரிணாமமும் இல்லை. நாம் அனைவரும், இந்த பேரண்டமும் கூட இந்த minimum energy நோக்கி தான் நகர்கிறோம். இருந்த போதிலும், இயற்கை ஒவ்வொரு கணத்திலும் தனது சக்திச் சமன்பாட்டை Local minimum ஆகத்தான் வைத்திருக்கிறது. இதில் இருந்து வந்த பௌதிக தத்துவங்கள் (Principle of least work, Principle of minimum potential energy, etc)

இது உண்மையில் வியக்கத் தக்க ஒன்று. எமது சித்தர்கள் கூட ”இயங்காமல் இருப்பது எப்படி” என்பது பற்றி தான் நிறையவே ஆராய்ந்திருக்கின்றார்கள். சடப்பொருள், மனம் அதைக்கடந்து உயிர் என்பவற்றின் இயக்கத்தை நிறுத்தி விட்டால் பரிணாமம் அற்றுப்போகும். பிறப்பு, இறப்பு என்ற வட்டத்துக்கு வெளியே அவர்கள் வந்து விடுவார்கள்.

புத்தர் கூறிய ஆசை என்பது இந்த உயிரின் அசைவியக்கத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. அதனால் தான் ஆசை அறு என்று கூறினார். தமிழில் இதை “அறுமின் அறுமின் ஆசை அறுமின். ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று கூறிச் சென்றனர். இதன் பொருள் அற்புதமானது.

சரி. இந்த பரிணாமத்திற்கு உடல் என்ற ஆடை தகுதியற்று இளைத்துப் போனால், மரணம் என்ற உற்ற நண்பன் அதை களைந்து இன்னொரு ஆடை தருவான். ஆனால் “கொலை” என்பதில் நாம் இந்த பரிணாமத்தை இடை நடுவில் வலிந்து தடுக்கிறோம். இதனால் தான் எந்தவொரு இனக் குழுமத்திலும் “கொலை” என்பது வெறுக்கப் பட்டு வந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பல சம்பவங்களை அழகாக் கோர்த்திருகிறீர்கள் இன்னுமொருவன். என்னை யோசிக்கச் செய்து நான் மறந்து இப்ப நீங்கள் சொன்ன உடனேயே ஞாபகம் வந்த ஒரு சம்பவத்தை கூறலாம் என நினைக்கிறன். இரண்டு சகோதரர்கள், அவர்களை x,y என அழைப்போம். உண்மையில் x, y எனக்கு மிக நெருங்கிய இரத்த உறவுகள். x, விளையாட்டுப் புத்தி, படிப்பில் அதிக கவனமின்மை. y, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர், கல்வியிலே மிகவும் கெட்டிக்காரர். x உயர்தரம் முடிய மேற்படிபிற்காக புலம் பெயர்கிறார், y இலங்கையிலே வைத்திய கலாநிதியாக பட்டம் பெற்று புலம் பெயர்கிறார். x காதலித்து திருமணம் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள், y யும் காதலித்து ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள். x, y இருவரும் தேசியத்தில் ஈடுபாடு. இப்போது பிரச்சனைகளைப் பார்ப்போம். x இன் திருமணம் விவாகரத்தில், பிள்ளைகளுடன் கதைப்பதில்லை, சொந்தத் தொழில் தொடங்கி நட்டம், உடல் சுகவீனங்கள், தேசிய ஈடு பாடு காரணமாக புலம் பெயர் நாட்டில் பிரச்சனை. Y 28 வருட திருமண வாழ்க்கை, பிள்ளைகள் கல்வியில் மிகவும் சிறப்பு, பொருளாதாரத்திலே மிக நல்ல நிலைமை, சிறந்த உடல் ஆரோக்கியம். ஆனால் x இக்கு ஒரு மிகப் பெரும் பணச் சிக்கல் வந்த பொது Y தான் கொடுத்து உதவினார். இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் ஆனால் முரண்பட்ட வாழ்க்கைகள்.

  • தொடங்கியவர்

அர்யுன் வொல்கேனோ உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

ஈழத்திருமகன் உங்கள் 'நம்பிக்கை' அல்லது 'பார்வையினைப்' பகிர்ந்தமைக்கு நன்றிகள். 'அறுமின் அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்ற வரியின் சுவாரசியத்தைப் புரிய முடிகிறது. இருப்பினும் மேற்படி வசனம் வந்த அதே பாரம்பரியத்தில் தான் 'கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்' என்ற வசனமும் வருகிறது என்பதையும் புறக்கணிக்க முடியவில்லை.

Metaphysicsஐ Physicsன் பாகங்களைக்கொண்டு திட்டவட்டமானதாய்ச் சித்தரிப்பது வாசிப்பதற்கும் சிந்திப்பதற்கும் சுவாரசியமானது தான் என்றபோதும் அடிப்டைப்பிரச்சினையான சரிபார்த்துக்கொள்ளமுடியாமை தலைகாட்டவே செய்யும். principal of minimum potential energy பற்றியதாயினும் 'சும்மாயிருத்தலே சுகம்' என்பதாகட்டும் தேடல்களும் ஆவல்களும் தொடரவே செய்யும். இன்னுமொரு புறத்தில் கோர்ப்பறேட் சாமிமார்கள் இவற்றை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று 'காலபைரவ யாகம்' என்று விளக்கி அதற்காக முன்பதிவுசெய்துகொள்ளுமாறும் பக்த்தகோடிகளிற்குக் கூறுவார்கள்.. மொத்தத்தில் அறியப்படாதனவும் ஆர்வமும் இருக்கும்வரை தேடல்களும், தெரிந்ததனவற்றில் இருந்து தெரியாதனவற்றிற்கான சமாந்தரம் தேடல்களும் கற்பிதங்களும் வந்துகொண்டே இருக்கும். எமது மூளையின் வீச்சும் பார்வைக்கோணங்களும் பல்வேறு காரணிகளின் நிமித்தம் கடிவாளமிடப்பட்டவையாகதே தொடருகின்ற நிலையில் கண்முன் நிகழ்வனவற்றைக் கூட எம்மால் எப்போதும் காணமுடிவதில்லை. அந்தவகiயில், நீங்கள் சொல்லவதைப் போன்று, நாங்கள் காணத்தவறுகின்ற பார்வைகளை முன்வைப்பவர்கள் சார்ந்து எமக்கு வியப்பும் மரியாதையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

தத்துவங்கள் முதலானவை ஒரு புறத்தில் வெட்டிப்பேச்சுப் போன்று தோன்றினாலும், நாம் உணருகின்ற உலகு என்பது எமது அனுபவங்களாலும் பார்வைகளாலும் கட்டமைக்கப்ட்டதே (experienced, or phenomenal world) அன்றி உலகத்தின் மூலம் இது தான் (world as it is in itself or the thing in itself) என்று ஒன்றை எம்மால் என்றுமே கண்டறிய முடியாது என்ற சிந்தனையோடு எனக்கு பலத்த உடன்பாடு உண்டு. இச்சிந்தனையின் நீட்சியாய், வெறுமனே பார்வைகளை மாற்றுவதால் வாழ்வை கணிசமான அளவு மாற்றலாம் என்பதிலும் உடன்பாடுண்டு. அந்தவகையில், தத்துவவிசாரணைகளிற்கான இடம் இருக்கவே செய்கின்றது என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. அந்தவகையில் மரணம் என்ற முனையில் பாரம்பரிய பார்வைகள் பற்றிய உங்கள் விமர்சனத்தைப் புரிந்துகொள்ளவும் புதியதேடல்களின் தேவை பற்றி உடன்படவும் முடிகிறது.

இம்முனையில் நீங்கள் நிறையச் சிந்திக்கின்றீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து பகிருங்கள் நாங்களும் பயன் பெறுவோம்.

தும்பளையான், உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. மிகவும் உண்மை தான். பல சந்தர்ப்பங்களில் நிகழ்வுகளின் கோர்வைகளையும் தொடர்ச்சிகளையும் பார்க்கையில் நமது அன்றாட வாழ்வில் பல விடயங்கள் தொடர்பில் தேவையில்லாமல் அலட்டிக்கொள்கிறோமோ அர்த்தமின்றி கவலை மற்றும் மனஉழைச்சலிற்குள்ளாகின்றோமோ என்று தோன்றும். இயற்கையின் அங்கங்கள் எவ்வாறெல்லாமோ ஒர பெரிய இயந்திரத்தின் பாகங்கள் போல் தொழிற்படுவது, துரதிஸ்ரவசமாக சில சமயங்களில் மட்டுமே எங்களின் கவனத்தைப் பெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் மரணம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் இருந்து இருக்கும் .நித்திரை கொள்கின்றானா இறந்துவிட்டான என்ற கேள்வி மனிதர்களுக்கு இருந்து இருக்கும்.ஆகவே தான் புத்தருக்கு அழுகிய நிலையில் இருந்த பிணம் கண்ணில் பட்டிருக்கு....உயிர் பெற்று வரக்கூடும் என்ற காரணத்திற்க்காக எரிக்காமல்,தகனம் செய்யாமல் பல இறந்த உடம்புகள் இருந்திருக்கின்றன...

காலப்போக்கில் எல்லா சடங்குகளையும் மனிதன் அறிமுகம் செய்தான்...இப்ப மரணத்தின் பின்பு என்ன என்ற ஆராச்சியில் குதிச்சிட்டான்....

90%மானவர்கள் சகல வசதி வாய்ப்புடனும் வாழ வேண்டும் என்றுதான் வாழ்வார்கள்.....அது மரணம் எப்ப வரும் என்று தெரியாத வரை....

50 வயதுக்கு முதல் எவரும் மரணத்தை பற்றி சிந்திப்பது மிகவும் குறைவு

நான் இப்போ விரும்பி வாசிக்கும் ஒரு தொடர் ஆனந்தவிகடனில் ராஜுமுருகன் என்பவர் எழுதும் "வட்டியும் முதலும் " தொடர்.போன வார வட்டியும் முதலும் வாசிக்கும் போது இன்னுமொருவனின் கட்டுரை நினைவு வந்தது .

அதை அவர் அழகாக முடித்திருந்தார்.இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் இருந்த நான் "எதுவும் கடந்து போகும்" என்ற நிலைக்கு வந்திருப்பதாக.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பதினைந்து வயதிருக்கும்

விசுவமடுவிலுள்ள மாமாவின் இடத்திற்கு பாடசாலை விடுமுறையில் போயிருந்தேன்.

கடைக்குப்போவதற்கு வீதி ஊடாக போவதாயின் தூரம் அதிகம் என்பதால் குறுப்பாதை வயல்களுடாக சென்று திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய காட்டு மாடு ஒன்று வழி மறித்தது.

காலால் நிலத்தை கிழறி கிழறி என்னையே பார்த்தபடி நின்றது. ஓடி ஒழிய இடமோ ஏறி அமர ஒரு மரமே இல்லை. சிறிது நேரத்தில் என்னைன நோக்ககி பெரும் வேகத்தில் ஓடி வந்தது. சிறிது பின்வாங்கி அப்படியே கீழே படுத்துக்கொண்டேன். அது என்னை முட்டவந்து எனது சேட்டைக்கிழித்தக்கொண்டு போனது. அதனது நான்கு கால்களும் எனது உடம்பின் நாலு பக்கமும் சிறு உராய்தலைச் செய்திருந்தது.(அதன் எடை 100 கிலோவுக்கு மேல் இருக்கலாம்.)

அது போகும்வரை படுத்திருந்து போனபின் எழுந்து வந்தேன். அதன் கொம்போ அல்லது ஒரு காலோ என்மீது ஏறியிருந்தாலும் அந்த இடத்திலேயே.....

அது போனபின்தான் கவனித்தேன். நல்ல சிவப்பு நிறத்தில் சேட்டுப்போட்டிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டு சிறுவர்கள் அன்று பாட‌சாலை போக மாட்டேன் என்று அழ,அழ அவர்களது தகப்பன் பாட‌சாலைக்கு அனுப்பினதாகவும் அவர்கள் இருவரும் பாட‌சாலை போகும் வழியில் லொறியில் அடிபட்டு செத்ததாக அம்மம்மா சின்ன வயதில் சொன்ன ஞாபகம்

நாங்கள் கிழக்கு மாகணத்தில் இருக்கும் போது ஒரு அண்ணா அவர‌து சகோதரியின் திருமணத்திற்காக அவர்களது தகப்பனை [தகப்பனும் தாயும் சண்டை அதனால் இருவரும் பிரிந்திருந்தனர்] திருமணத்திற்கு அழைத்து செல்ல வந்து எங்களுக்கு தெரிந்த ஊரில் அவர்களது ஊரைச் சேர்ந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.தகப்பன் இன்னொரு வீட்டில் ஒரு ரூமில் வாட‌கைக்கு இருந்தார் அடுத்த நாள் இரவு இந்த அண்ணா தகப்பன் இருக்கும் வீட்டுக்கு போனார்...போய் அடுத்த நாள் காலை அந்த வீட்டில் இருந்த அண்ணனையும்,இந்த அண்ணனையும் இந்தியன் ஆமி உயிரோடு ர‌யர் போட்டு கொளுத்தினார்கள். ஒரு வேளை முதலில் தங்கியிருந்த அன்ரி வீட்டில் இருந்திருந்தால் தப்பியிருப்பாரோ :unsure: ...இது தான் விதியோ?

கிரிசாந்தி குமார‌சாமியும் அவர‌து நண்பி செத்த உட‌னேயோ அல்லது அடுத்த நாளோ செத்தார் கார‌ணம் என்ன அவ்வளவு வலிமையான நட்பா?

எனக்குத் தெரிந்த சில தாய்மார்கள் அம்மாவின் வயது உடையவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் சிலர் எந்த வித நோயும் இல்லாமல் இருந்தவர்கள் சிலர் ஒரே மாறி,மாறி ஒபரேச‌னும் ஆஸ்பத்திரியுமாக இருந்தவர்கள் ஆனால் வருத்தக்கார‌ர் இன்னும் உயிரோட‌ இருக்கிறார்கள் ஆனால் எந்த வித நோயுமில்லாதவர்கள் போய் சேர்ந்திட்டார்கள்...தலையெழுத்தோ

முள்ளி வாய்க்காலில் செத்திட்டார்கள் அல்லது செத்துப் போவார்கள் என்டு நினைத்த பலரும் தப்பி உள்ளார்கள் இதற்கு என்ன கார‌ணம் ஆண்ட‌வன் கருணையா?

மனித வாழ்க்கையும் இறப்பும்,பிறப்பும் ஒரு விசித்திர‌ம்

  • தொடங்கியவர்

ஒரு பதினைந்து வயதிருக்கும்

விசுவமடுவிலுள்ள மாமாவின் இடத்திற்கு பாடசாலை விடுமுறையில் போயிருந்தேன்.

கடைக்குப்போவதற்கு வீதி ஊடாக போவதாயின் தூரம் அதிகம் என்பதால் குறுப்பாதை வயல்களுடாக சென்று திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய காட்டு மாடு ஒன்று வழி மறித்தது.

காலால் நிலத்தை கிழறி கிழறி என்னையே பார்த்தபடி நின்றது. ஓடி ஒழிய இடமோ ஏறி அமர ஒரு மரமே இல்லை. சிறிது நேரத்தில் என்னைன நோக்ககி பெரும் வேகத்தில் ஓடி வந்தது. சிறிது பின்வாங்கி அப்படியே கீழே படுத்துக்கொண்டேன். அது என்னை முட்டவந்து எனது சேட்டைக்கிழித்தக்கொண்டு போனது. அதனது நான்கு கால்களும் எனது உடம்பின் நாலு பக்கமும் சிறு உராய்தலைச் செய்திருந்தது.(அதன் எடை 100 கிலோவுக்கு மேல் இருக்கலாம்.)

அது போகும்வரை படுத்திருந்து போனபின் எழுந்து வந்தேன். அதன் கொம்போ அல்லது ஒரு காலோ என்மீது ஏறியிருந்தாலும் அந்த இடத்திலேயே.....

அது போனபின்தான் கவனித்தேன். நல்ல சிவப்பு நிறத்தில் சேட்டுப்போட்டிருந்தேன்.

புத்தன், அர்யுன், விசுகு மற்றும் ரதி உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

நிலக்கிளி மனோகரனின் எழுத்துக்கள் வன்னி பற்றி வாசகருள் ஒரு அதியுச்ச கிறக்கத்தைத் தோற்றுவிக்கும் வகை அமைந்திருக்கும். திருப்பத்திருப்ப வாசித்தாலும் வன்னியை அதன் வனப்பதிகரிக்கச் செய்து மனதுள் விரியச்செய்யும். அவரின் ஒரு நாவலில் ஒரு காட்டு மாடு, ஒரு புலியினை (சிறுத்தை?) கொம்பில் சொருவிக் கொலைசெய்து காவியபடி சில நாட்கள் திரியும்.

உங்கள் அனுபவப்பகிர்வு அந்த மாட்டை மீண்டும் ஒருமுறை ஞாபகப் படுத்தியது.

உங்களிற்குப் பதினைந்து வயதென்ற வகையில் இந்த மரணத்தை அண்மித்த அனுபவம் எத்தனை தூரம் தாக்கத்தை உண்டுபண்ணியது என்று தெரியவில்லை. இருப்பினும் இற்றைவரை மறக்காது எழுதும் வகை உங்களிற்குள் இருக்கிறது என்றவகையில் நிச்சயம் ஒரு கனதியான பாத்திரம் இச்சம்பவத்திற்கு உங்கள் வாழ்வில் இருக்கவே செய்கிறது என்பது புரிகிறது. சிவப்புச்சட்டை நகைச்சுவை நன்றாக இருக்கிறது. நாங்களாகக் கட்டமைத்துக் கண்களிற்குக் கடிவாளமிட்டு மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வுகளில் மரணம் என்பது அப்பப்பப்போ சற்று அக்கம் பக்கம் பார்ப்பதற்கும் சுதாகரித்துக்கொள்வதற்குமேனும் உதவுகிறது.

ரதி உங்கள் ஞாபகபபதிவுகளிற்கு நன்றி. எமது பாரம்பரியத்தில், விதி என்ற விடயம் எமது சிந்தனைகளில் மிக ஆழமாகப்பதிய வைக்கப்பட்டுள்ளது. தெரியாத, சரிபார்த்துக்கொள்ள முடியாத விடயங்கள் பற்றித் தீர்ப்புக்கூறிவிடமுடியாது என்றபோதும், ஏதோ மனிதனின் சிற்றறிவிற்கெட்டியவரை விடயங்களைப் பட்டியலிட்டுப் ஒரு பொழுதுபோக்குப் பட்டிமன்றம் மாதிரிப் பேசிப்பார்த்தால் விதி என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஒரு விடயம் இருக்கமுடியாது என்று கைதட்டு வாங்கி விவாதிப்பதற்கு அதிக வாதங்கள் கைப்படும் என்றே தோன்றுகின்றது.

ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ இயற்கையின் ஒரு அங்கமான மனிதனின் வாழ்வு மனிதன் பெருப்பிக்கும் அளவிற்குச் சிக்கலானதாக இருக்கவேண்டியதில்லை என்றே தோன்றுகின்றது. மனிதரின் முயற்சிகளில் உள்ள வித்தியாசங்கள் அளவிற்கு வாழ்வுகள் அத்தனை தூரம் வேறுபட்டுவிடவில்லை என்றே தோன்றுகின்றது.

சில வருடங்களிற்கு முன்னர் ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியாகி இருந்தது. அதில் வருடாந்தம் ஐம்பதாயிரம் டொலர்கள் உழைப்பவருக்கும் ஐந்து மில்லியன் டொலர்கள் உழைப்பவரிற்கும் தத்தமது வாழ்வு சார்ந்து இருக்கின்ற பார்வைகளில் அதிகம் வித்தியாசம் இல்லை என்று கூறியிருந்தார்கள். வேறொரு ஆராய்ச்சியில், பணக்காரர்கள் தம்மிடம் உள்ள அதிகப்படி பணத்திற்கான அர்த்தம் தேடும் முயற்சியில் ஒரு றாத்தல் கோப்பி மூவாயிரம் டொலர்களிற்கு விற்பனையாகின்ற கோப்பியினைக் குடிப்பது பற்றிப் பேசியிருந்தார்கள்.

வாழவேண்டும் என்பது ஒரு வெறும் கருத்தியலாக எமது மனங்களில் ஆகிப்போயுள்ளது. வாழ்வு என்றால் என்ன வாழ்க்கை என்றால் என்ன என்றெல்லாம் சிந்திக்க எமக்கு நேரமில்லை, ஓயாது வாழவேண்டும் என்று மட்டும் சொல்லிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஏகப்பட்ட தருணங்களில் பயம், போட்டி, பொறாமை போன்ற வரிசையில் உள்ள விடங்களிடம் வாழ்வைக் கொடுத்து அடிமைப்பட்டு கடிவாளத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகின்றது.

80 களின் கடைசியில் என்று நினைக்கிறேன். ஒரு திருமணம் முடிந்து மணமக்கள் கால் மாறுவதற்காக யாழ்ப்பாணம், ஐயனார் கோவிலடியில் உள்ள வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அந்த நேரத்தில் வந்த குண்டு போடும் விமானத்தின் குண்டு விழுந்ததில் மணமகன் உயிர் இழந்தார்.

அவர்களுக்கும் சாத்திரம், சம்பிரதாயம், நல்ல நேரம் எல்லாம் பார்த்துத் தானே திருமணம் செய்திருப்பார்கள்? இப்படி வாழ்க்கையில் பல விசித்திரமான விஷயங்கள் நடப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

80 களின் கடைசியில் என்று நினைக்கிறேன். ஒரு திருமணம் முடிந்து மணமக்கள் கால் மாறுவதற்காக யாழ்ப்பாணம், ஐயனார் கோவிலடியில் உள்ள வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அந்த நேரத்தில் வந்த குண்டு போடும் விமானத்தின் குண்டு விழுந்ததில் மணமகன் உயிர் இழந்தார்.

அவர்களுக்கும் சாத்திரம், சம்பிரதாயம், நல்ல நேரம் எல்லாம் பார்த்துத் தானே திருமணம் செய்திருப்பார்கள்? இப்படி வாழ்க்கையில் பல விசித்திரமான விஷயங்கள் நடப்பதுண்டு.

யாழ் கோட்டையில் இருந்து அடித்த செல் என நினைக்கிறேன். வீட்டு வாசலில் ஆராத்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது வீழ்ந்து வெடித்தது. சில நேரம் நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் ஆனால் அந்த சம்பவம் மட்டும் நினைவில் உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இந்த திரிக்கு சம்பந்தமாய் இருக்குமோ தெரியாது..

எனக்கு 8,9வயது இருக்கும் அப்பா மாமி வீட்டை பொயிலைக்கு(புகையிலை) புகை போட்டுக்கொண்டு இருந்தவர்.

நான் வீட்டை படிச்சுக்கொண்டு இருந்தனான் அக்கா கூட சண்டை பிடிச்சு அவளுக்கு பென்சிலாலை குத்தி இரத்தம் வர அவள் அடிக்க வர நான் அப்பாட்டை ஓடின்னான். நல்ல இருட்டு மாமி வீட்டு வேலியிலை முடக்குக்கு கிட்டை வேப்பமரம் இருக்குது அதுக்கு கீழை நடுத்தெருவிலை ஓலை குவிச்சது போல இருந்திச்சுது சின்ன தணல் சிவப்பா தெரிஞ்சுது .. நடுத்தெருவிலை இப்ப யார் ஓலை குவிச்சாங்கள் என்று தடவிப்பார்க்க ஒண்டையும் காணேல்லை மறைஞ்சு போட்டுது நான் அப்பாட்டை போய் கூட இருந்திட்டு வீட்டை போட்டேன். காலமை எழும்ப காய்ச்சல்,கையிலை 2,3நெருப்பு தணல் சுட்ட கொப்பளம் இருந்திச்சுது ஆனால் வலி இல்லை. அம்மாட்டை சொல்ல சொன்னா காளி சுட்டுப்போட்டுது என்று.

பக்கத்திலை இருக்கிற அம்மன்கோவிலுக்கு கூட்டிக்கொண்டுபோய் அய்யரைக் கொண்டு திருநீறு போட்டு நூல் கட்டி விட்டா மாறிட்டுது. இப்பவும் எனக்கு இந்த அதிசயம் புரியவே இல்லை. :unsure:

  • 2 weeks later...

இதனைப் பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. என்னை முதன்முதலில் பாதித்த மரணம் எனக்கு எட்டு ஒன்பது வயது இருக்கும் போது நிகழ்ந்தது. அதனை மரணம் என்றே கூற முடியாது. எனது பக்கத்து வீட்டு அண்ணாவிற்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கும் மிகவும் பிடிக்கும். அவர் இயக்கத்திற்குப் போனபின்பும், அவர்கள் வீட்டிற்கு வந்தால் எங்கள் குடும்பத்தையும் வந்து பார்த்துவிட்டுத்தான் போவார். அவர், நாட்டிலிருந்து இந்தியாவிற்குப் படகில் போகும்போது தாழ்ந்து இறந்து விட்டார். ஆனால், அவர் இறந்ததாக உறுதியாகக் கூற முடியவில்லை. அதனால் அவர் இறக்கவில்லை என்றே சில வருடங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். அவருடன் தொடங்கிய அந்த நெருங்கியவர்களின் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எமக்கு ஆறு, ஏழு வயதிற்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள்தான் எமது நினைவுகளில் இருக்கும். அப்படிப் பார்க்கும்போது, எனக்கும் அவருக்குமான பரிச்சயம் இரண்டு, மூன்று வருடங்கள்தான் இருக்கும். இருந்தாலும் அவரின் இழப்பு என்னை இன்றுவரை பாதித்துக் கொண்டே இருக்கிறது. அவரின் சகோதரர்கள் சிலர் இங்குதான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசும்போதோ அல்லது அவர்களைப் பார்க்கும்போது, அவரின் நினைவு வந்து விட்டுப் போகும். அவரோடு நான் விளையாடிய விளையாட்டுக்களை இப்போது பிள்ளைகளோடு விளையாடும்போதோ அல்லது அந்த விளையாட்டுச் சாமான்களைப் பார்க்கும்போதோ அவருடைய நினைவு வந்து போகும். ஏன் அவரது பிறந்தநாள்கூட இந்த மாதம்தான்.

இதேபோல், எமது ஊரைச் சேர்ந்த இரு அண்ணாக்கள் ஒருசில மாதங்கள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடன் மிகவும் அன்பாக இருந்தார். ஒரு வருடத்தின் பின்னர், என்னுடன் அன்பாக இருந்த அண்ணா மாவீரராகிவிட்டார். இவருடனான எனது பரிச்சயம் ஒரு சில மாதங்களே. ஆனால், அவரின் மரணமும் என்னில் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. மற்றவர் இன்னும் இருக்கிறார். இப்படி என் வாழ்வில் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். எனக்குப் பரிச்சயமான பலரின் மரணம் என்னை இன்றுவரை பாதித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அதனால் நான் மரணத்துடன் வாழப் பழகிவிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் மரணம் என்பதும் வாழ்வின் ஒரு நிகழ்வே. அது கடைசி நிகழ்வாக இருப்பதோடு, அந்த நிகழ்வை நாம் கண்டுகளிக்கவும் முடியாது. ஆனால், நாம் அதனை நினைத்துப் பயந்தே எமது வாழ்வை சுவைக்க மறந்து விடுகிறோம். என்னைப் பொறுத்தவரையில், நாம் வாழும் வரை எமது விருப்பிற்கேற்ப வாழ்வதே சிறந்தது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதே எனது கொள்கை.

தனது வாழ்நாளுக்குள் பலவற்றைச் சாதித்து விட்டுச் சென்றவர்களும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு உபத்திரமாக இருந்தே மடிந்தவர்களும் இருக்கிறார்கள். நாம் எந்த வகைக்குள் அடங்கப் போகிறோம் என்பதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும். அதனைத் தீர்மானிக்கத் தெரிந்தவர்கள் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒரு தீர்மானம் இருப்பதே தெரியாதவர்கள் இரண்டாவது வகையறாக்குள் அடங்குகிறார்கள்.

வாழ்வியலைப் பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. நேரமின்மை காரணமாக எழுத முடிவதில்லை. இப்படி யாராவது எழுதும்போது, பின்னூட்டம் இடவே இப்போதைக்கு என்னால் முடிகிறது.

  • தொடங்கியவர்

ஈஸ், சாத்திரி, ஜீவா, தமிழிச்சி உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றி. ஜுவாவின் சம்பவம் ஆர்வத்தைக் கிழறுகிறது. மிகவும் மனத்துணிச்சல் உள்ளவர் போல் இருக்கிறீர்கள். இருட்டிற்குள் தனிய தணல் தெரிய நின்று தடவிப்பாக்கிற தைரியம் எல்லோரிற்கும் வந்துவிடாது.

எனது ஊரவர் ஒருவர் சொன்ன பிறிதொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. எங்களுரில் இருந்து சில மைல் தொலைவில் இன்னுமொரு சிற்றூரில் உள்ள ஒரு பிரசித்தமான கோவிலில் ஒரு சமயம் ஒரு தகராறு ஏற்பட்டதாம். இயக்கம் தலையிட்டுத் தகராறு தீரும்வரை கோவிலைப் பூட்டிவைத்ததாம். பூட்டப்பட்ட காலத்தில் திருவிழாக்காலம் வந்தும் திருவிழா நடைபெறாது இருந்ததாம். அப்போது ஒரு நாள், சில இயக்க உறுப்பினர்கள் இரவில் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு ஆச்சி தெருவோரமாய் நின்று என்னை உதில ஏத்திக்கொண்டுபோய் இறக்கிவிடுங்கோடா மோனை என்றாவாம். இயக்கத்தவர்களின் இரு சைக்கிள்களில் ஒன்றில் இடமிருக்க, அந்த உறுப்பினர் ஆச்சியை பாறில் ஏத்தி சிறிதுநேரம் பயணித்தார்களாம். ஆச்சியும் என்னடா மோனை கோயிலைப் பூட்டித் திருவிழா நடக்காமல் செய்துபோட்டியள் என்றாவாம். இயக்கப் பெடியளும் ஏதோ சொல்லிக் கதைச்சுக்கொண்டுபோகும் போது திடீரென பாறில் இருந்த ஆச்சியைக் காணேல்லையாம்...

தமிழச்சி நீண்டநாட்கள் பின்னர் சந்தித்ததில் மகிழ்ச்சி. உண்மை தான் மரணம் சார்ந்து தம்மைக்காட்டிலும் தமது அன்பிற்குரியவர்கள் சார்ந்தே உலகில் பயம் அதிகம் ஆட்சிபுரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.