Jump to content

மீள் வடிவமைப்புடன் யாழ் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும், தோற்றந்தரும், யாழ்,

புதுப் பொலிவுடன் மிளிர்வது மகிழ்ச்சி தருகிறது!

இதற்காக தமது நேரத்தையும் தந்த, மோகன் அண்ணா, இணையவன், மற்றும் நிழலி, ஆகிய உறவுகளுக்கு, மனமார்ந்த நன்றிகள்!

:wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாகவுள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் அழகு.யாழிற்கென்றே தனித்துவமான ஒரு எழுத்துருவை தெரிவு செய்தால் நல்லாயிருக்கும்.

என்ன புங்கையூரன் ,யாழை பெண்ணாக்கிவிட்டீர்கள்? அளவுக்கதிகமாக முகப்பூச்சு செய்து நிற்கப்போகிறாள்.

யாழ், என்பவள் ஒரு வீணை!

அதை மீட்டும் விரல்கள், உங்களைப் போன்ற கருத்தாளர்கள்!

மீட்டும் விரல்களிலேயே, அதன் இசையின் தன்மை தங்கியுள்ளது!

அந்த இசையைத் தேடி வருபவர்கள், அதன் வாசகர்கள்!

இப்போது சொல்லுங்கள், யாழ் ஆணா அல்லது பெண்ணா என்று? :icon_idea:

மல்லை தான், யாழ் நங்கை என்று முதலில் எழுதியவர்!( நன்றிகள், மல்லை! :D )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழின் முகப்பு பிரமாதம். மோகன்,இணையவன் ஆகியோரின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

யாழ் நங்கையின் பூத்துக்குலுங்கும் புது பொலிவு நன்றாக இருக்கிறது. பருவத்தோடு வளர்ந்து பார்வையிலேயே வசிகரிக்கும் எழில்.

நீங்கள் யாழை பெண்பாலாய் சொல்லிப்போட்டியள்....இனி அவ்வளவுதான்.....உங்கை இரண்டொரு பேருக்கு முகம் கறுக்கப்போகுது :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கலக்குறிங்க பாஸ்.. :D சூப்பரா இருக்கு :)

யாழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துகள் . :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=6]யாழ், புதுப் பொலிவுடன் மிளிர்வது மகிழ்ச்சி தருகிறது![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகப்பு அழகாகவும் பொலிவாகவும் இருக்கின்றது. மோகன் அண்ணாவுக்கும் இணையவனுக்கும் நிழலிக்கும் பாராட்டுக்கள்.

விளம்பரங்களை உள்வாங்கி மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள்..நன்றி இணையவன் அண்ணா...நிழலி அண்ணா..தாங்கும் தூணாய் நிற்க்கும் மோகன் அண்ணாவிற்க்கு நன்றிகளும் பாரட்டுக்களும்....

யாழின் முகப்பு பிரமாதம். மோகன்,இணையவன் ஆகியோரின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் யாழை பெண்பாலாய் சொல்லிப்போட்டியள்....இனி அவ்வளவுதான்.....உங்கை இரண்டொரு பேருக்கு முகம் கறுக்கப்போகுது

:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக அழகாக இருக்கிறது. யாழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்

Posted

புதுப்பொலிவு மேலும் மெருகூட்டிகிறது. உங்கள் பணிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

Posted

காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் அவசியமாகின்றன. அதன் மூலம் புதிய வடிவமும் புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றன.

அந்த வகையில் மீள்வடிவமைப்பு மூலம் யாழ்களம் மேலும் வலுப்பெறுகிறது. இந்த உன்னத பணியில் தங்களின் நேரத்தினையும் உழைப்பினையும் வழங்கிய யாழ் கள நிர்வாகிகளான மோகன், இணையவன், நிழ்லி உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

Posted

[size=4]புதிய வடிவமைப்பு அழகாகக் கவர்ச்சியுடன் உள்ளது.வாழ்த்துகள்,பாராட்டுகள்.

மாற்றங்கள் வாழ்வின் நியதி.யாழ் இணையம் மேலும்மேலும் வளர்க![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தரமான ஒரு பத்திரை பார்ப்பது போல் இருக்கிறது.

வடிவமைத்த உறவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Posted

அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • 3 weeks later...
Posted

யாழ் இணையத்தோட ஹோம் பேஜ் ரெம்பவே கியூட்டா இருக்குங்க :) . இப்போ கிளாசிக்கலா இல்லாம நன்னா டெவலப் செஞ்சிருக்கீங்க :) . மோகன் அண்ணன் , நிழலி அண்ணன் , இணையவன் அண்ணன் உங்க கையுக்கு சக்கரை தரணுங்க :lol::D . ரெம்ப தாங்ஸ்சுங்க அண்ணனுங்களா :) .

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிதுசிறிதாக யாழில்வரும் புதிய தொழில்நுட்பங்கள் நன்றாக இருக்கின்றது. :D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல நாட்கள் கழித்து இன்று களம் வந்தேன். பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன போலும்...

தற்போதுள்ள எழுத்துருக்களை என்னால் சரியாக வாசிக்க இயலவில்லை...மிக மிகச் சிறிதாக உள்ளது.

பழைய 'எழுத்துரு' நன்றாகத்தானே இருந்தது?

ஏனிந்த மாற்றம்? :o

வயசுப்போன ஆட்களையும் கொஞ்சம் நினைவிற்கொள்ளுங்களப்பு! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல நாட்கள் கழித்து இன்று களம் வந்தேன். பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன போலும்...

தற்போதுள்ள எழுத்துருக்களை என்னால் சரியாக வாசிக்க இயலவில்லை...மிக மிகச் சிறிதாக உள்ளது.

பழைய 'எழுத்துரு' நன்றாகத்தானே இருந்தது?

ஏனிந்த மாற்றம்? :o

வயசுப்போன ஆட்களையும் கொஞ்சம் நினைவிற்கொள்ளுங்களப்பு! :rolleyes:

நீங்கள், கண் டாக்குத்தரிட்டைப் போய்... ஒரு, மூக்கு கண்ணாடி வேண்டிப் போடுங்கோ... :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.