Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமியார் வீடு...

Featured Replies

Quote: "பஸ்ஸில் வரும் போது நடத்துனருக்கும், (ஒரு) மனுசிக்கும் இடையில் நடந்த "செந்தமிழ்" ச் சண்டை

அந்த பஸ்ஸில் பாட்டு இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்தது."

சிரிச்சு முடியலை :lol: , அருமை, தொடருங்கள் ஜீவா

Edited by வந்தியதேவன்

  • Replies 276
  • Views 24.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 11

தம்பி ஜீவாவுக்கு  கடவுளேயெண்டு கண்ணூறு,நாவூறு படக்கூடாது.......நீங்கள் கதையை கொண்டு செல்லும் விதம் அவ்வளவும் பொருள்!!!!!! அதலையும் ஒரு சாதாரண கதையை சொல்லி அதுக்கை ஒரு குட்டிகதையையும் செருகி வெளியிலை வந்த விதமிருக்கெல்லே சொல்லி வேலையில்லை......உங்கள் எழுத்துவன்மை இன்னும் பல்கி பெருகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

செந் தமிழ்ச் ச ண்டை .........என்ன ஒரு வர்ணனை .... :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா சொன்னது போல உங்கள் எழுத்தில் உற்சாகமும், நகைச்சுவையும் தூக்கலாகவே தெரிகிறது. இத்தனை நாளும்  எங்கு வைச்சிருந்த்தீர்கள் இவ்வளவு திறமையை ஜீவா.?

பகலவன், நீங்கள் அர்த்த நாரீஸ்வரத் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், இந்தக் கேள்வி வந்திருக்காது! :D

220px-God_marriage_AS.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 11

பஸ்ஸிலை இருந்து இறங்கினதும் அந்த பாக்கை யாரும்

பார்க்கிறாங்களா என்று சுத்து முத்தும் பார்த்திட்டு முகத்திலை ஒத்தி

பார்க்கும் போது ஒரு மெல்லிய சூடும்,அந்த சென்ற் வாசனையும் வருமே...

இதுவரைக்கும் நான் யாரட்டையும் சொன்னதில்லை.

சூப்பர் மச்சி, ஒரு லைட்டான பியர் அன்ட் லவ்லி வாசமடிக்குமே..... சொல்லி வேலையில்லை. இப்ப சொல்லிட்டாய் தானே. இண்டைக்கு ஸ்கைப்பில இருக்கடி உனக்கு ஆப்பு  :icon_mrgreen: .

என்ட  எத்தினையோ கூட்டுகளும் பெட்டயளப் பாக்க எண்டு 750 மினிபஸ் எடுத்து சயன்ஸ் கோல், விக்னா எண்டு அலைஞ்சவங்கள். இவங்களில் ஒருத்தன் யாழ்ப்பாணத்தில ரூம் போட்டு வேற படிச்சவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா தான் பொண்ணுங்களை சைட் அடித்திருக்கிறீர்கள் ஜீவா அண்ணா. :icon_idea:  ஊர் நினைவுகளை அடிக்கடி மீட்டு பார்க்கிறீர்கள். :)

:lol: :lol:

நன்றி துளசி சிஸ்டர்..

உங்களில் பிடித்ததே எப்போதும் எல்லார் திரியிலும் வந்து ஊக்கம் குடுப்பது தான். :)

சாதாரணமாக ஷொப்பிங் போனேன் என்று மட்டும் எழுதினால் வாசிக்கிற நீங்கள் எல்லாம் வந்து அடிக்க மாட்டிங்களா? அது தான் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்று சம்பவத்திற்கு பொருத்தமான விடையங்களையும் சேர்த்து எழுதுவது.

திட்டமிட்டு, பேப்பரில் எழுதி வைத்து விட்டெல்லாம் நான் எழுதுவதில்லை, சரியோ பிழையோ

அந்த நொடி மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவது தான்.

நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுக்கு.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைப் பாத்தபிறகு  இருந்த நம்பிக்கையும் போச்சு  :D

இந்தக் கட்டத்துக்கு நான் நித்திரை.. :rolleyes::icon_idea:

நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.

பழைய ஞாபகந்தான் வருகிறது. முன்பு திநகர், தாவணி போட்ட ஐயராத்துச் சுந்தரிகளால் நிரம்பி வழியும். ரங்கநாதன்  தெரு சனநெரிசலில்  நீந்திக் கொண்டு அவர்களை 'சைட்' அடிப்பது என்ன ஒரு பரவசமான அனுபவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் எழுத்து இம்முறை இன்னும் சுவாரசியமாக இருக்கு ஜீவா. பிரியா கெட்டிக்காரிதான். பிரியாவின் முன்னாலேயே 

சைட் அடித்த உங்களுடன் திருமணம் வரை வந்திருக்கிறாரே :D

எங்களுக்குள் எந்த ஒழிவு மறைவுமே இல்லை அக்கா, அப்படியில்லையெனில் இப்படி ஒரு பொதுத்தளத்தில் அதுவும் அவள் பார்க்கும் போதே பகிர முடியாது அக்கா. எதுவாய் இருந்தாலும் தினம் தினம் அப்டேட் ஆகிட்டே இருக்கும்.

அந்தளவுக்கு என்னைப் புரிந்துகொண்டவள். :)

நன்றி அக்கா உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும்.. :)

தேடி வாசிக்க வைத்த தொடர்களில் ஒன்று. நன்றாக எழுதுகின்றீர்கள் ஜீவா...... பாராட்டுக்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமோ அக்கா சொன்னது போல உங்கள் எழுத்தில் உற்சாகமும், நகைச்சுவையும் தூக்கலாகவே தெரிகிறது. இத்தனை நாளும்  எங்கு வைச்சிருந்த்தீர்கள் இவ்வளவு திறமையை ஜீவா.?

உங்கள் எழுத்துக்களை எல்லாம் பார்த்து தான் அரிவரியே கற்றுக்கொள்கிறோம். :)

நன்றி பகலவன் அண்ணா, உங்கள் கருத்துப் பகிர்வுக்கு..

Quote: "பஸ்ஸில் வரும் போது நடத்துனருக்கும், (ஒரு) மனுசிக்கும் இடையில் நடந்த "செந்தமிழ்" ச் சண்டை

அந்த பஸ்ஸில் பாட்டு இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்தது."

சிரிச்சு முடியலை :lol: , அருமை, தொடருங்கள் ஜீவா

:D :D

நன்றி உங்கள் வரவிற்கும், கருத்துப்பகிர்விற்கும்.

எனக்கு ஒரு சந்தேகம்.. உங்களை அண்ணா என்பதா? அல்லது அக்கா என்பதா??? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜீவாவுக்கு  கடவுளேயெண்டு கண்ணூறு,நாவூறு படக்கூடாது.......நீங்கள் கதையை கொண்டு செல்லும் விதம் அவ்வளவும் பொருள்!!!!!! அதலையும் ஒரு சாதாரண கதையை சொல்லி அதுக்கை ஒரு குட்டிகதையையும் செருகி வெளியிலை வந்த விதமிருக்கெல்லே சொல்லி வேலையில்லை......உங்கள் எழுத்துவன்மை இன்னும் பல்கி பெருகட்டும்.

உண்மையில் என்னையே அறியாமல் என்கை நெற்றியைத் தொட்டு நெஞ்சில் ஒற்றிக்கொண்டது

நல்லாய் எழுதுகிறேன் என்று சொன்னதற்காக அல்ல, என் மீதான அன்பிற்கும், ஆதரவிற்கும். :)

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 1

நான்கு வருடங்களாய் நாங்கள் செய்த அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல...

சீசன் எடுத்தால் CTB யில் மட்டும் தான் போய் வரலாம் என்றதால், ஃபேர்சனல் கிளாஸ் இருக்கு, அந்த புரொஜெக்ட் இருக்கு இந்த புரொஜெக்ட் இருக்கு CTB பஸ் ரைம் எல்லாம் சரிவராது என்று வீட்டை பொய் சொல்லிப்போட்டு எந்த பஸ்ஸிலை ஃபிகருகள் கூட வருகுதோ அதிலை ஏறி நடத்துனர் பின்னுக்கு போ.. பின்னுக்கு போ என்று சொல்லும் போது அவளுகளோடை உரஞ்சிக் கொண்டு போற சுகம் இருக்கே..

காலமை எண்டதாலை சிலவேளை பருத்தித்துறையிலை இருந்து வரேக்கை பெருசா கூட்டமிருக்காது, நெல்லியடிச்சந்தியிலை இருந்து ஆரம்பிச்சால் அச்சுவேலி போனதும் சொல்லிவேலையில்லை, கம்பஸ்க்கு, ரெக்னிக்கல் காலேஜ்க்கு, சயன்ஸ்ஹோலுக்கு,விக்னா ரியூசனுக்கு என்று ஏறுற பொடியள், பெட்டையள் இருக்கே சொல்லி வேலையில்லை.. பிறகு அப்படியே ஆவரங்கால்,புத்தூர்,சிறுப்பிட்டி,நீர்வேலி,இருபாலை,நல்லூர் என்று ஒரே கண்ணுக்கு குளிர்ச்சியா தான் இருக்கும்.

அதுவரைக்கும் பாக் கை கொழுவி வச்சிருப்பேன், மேல்லை தட்டிலை வைக்க இடம் இருக்கும், எவன் வைப்பான்

நல்ல பிகரா பார்த்து இதை வச்சிருங்கோ இறங்கும் போது வாங்குறேன் என்று குடுத்திட்டு அந்த பிள்ளைய பார்க்குற பார்வை இருக்கே, அதுக்காகவே காலம் முழுக்க படிக்கலாம்.

பஸ்ஸிலை இருந்து இறங்கினதும் அந்த பாக்கை யாரும் பார்க்கிறாங்களா என்று சுத்து முத்தும் பார்த்திட்டு முகத்திலை ஒத்தி பார்க்கும் போது ஒரு மெல்லிய சூடும்,அந்த சென்ற் வாசனையும் வருமே... இதுவரைக்கும் நான் யாரட்டையும் சொன்னதில்லை.

A9 பாதை மூடிய பிறகு இருந்த காலம் தான் பஸ்ஸில் எங்களை ஹீரோவாக்கிய காலம் என்று சொல்லலாம்.

வல்லை,ஆவரங்கால் சந்தி,நீர்வேலிசந்தி, இருபாலையில் ஆமி பஸ்ஸில் இருந்து எல்லாரையும் இறக்கி சோதனை செய்துவிட்டு தான் அனுப்புவான். வல்லையிலையும், இருபாலையிலும் இறக்கி செக் பண்ணாமல் ஏத்தின நாளே இருக்காது.

நமக்கு பப்ளிசிட்டி என்பது ஜென்ரலா பிடிக்காது ஆனால் தற்பாதுகாப்புக்காக அப்பவெல்லாம் சென்றிபொயின்ட் வந்ததுமே மருத்துவ மாணவன் என்று சொல்லி சேட் பொக்கற்றிலை அடையாள அட்டைய குத்திப்போட்டு பாக்கிலை எப்பவுமே stethoscope

வச்சிருப்பேன். ஆமி பார்த்திட்டு இறக்கி நடக்கவெல்லாம் விடமாட்டான் போய் பஸ்ஸிலை ஏறி இரு என்றிடுவான்.

எல்லாரும் நடந்து போக நான் மட்டும் பஸ்ஸிலை இருக்கும் போது கொஞ்சம் கெத்தா தான் ஃபீல் பண்ணி இருக்கிறேன்.

அதுவரைக்கும் "காவாலி" போல என்று நினைச்சதுகளின் பார்வையில் கூட ஒரு மாற்றம் தெரிந்தாலும், அதுவே பின்னர் லுக்கு விடுவதையும் சங்கடமாக்கி விட்டிருந்தது.

750.751 இந்த பஸ் பிரயாண அனுபவம் உங்களுக்கும் இருக்கா ஜீவா அண்ணா. அதெல்லாம் ஒரு கனாக்கால அனுபவம் .. அச்சுவேலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை பாடசாலைபஸ் அனுபவம் ரொம்பவே இருக்கு அண்ணா. அந்த பஸ் பிரயாண அனுபவம் பற்றி எழுதனும்னு இருந்தேன். கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

பஸ்ஸில் வரும் போது நடத்துனருக்கும், ஒரு மனுசிக்கும் இடையில் நடந்த "செந்தமிழ்" ச் சண்டை

அந்த பஸ்ஸில் பாட்டு இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்தது.

:lol:  :lol:  :lol:

இந்த தெவிட்டாத  ராகங்களை தட்டி வான், மீன் சந்தைகளிலும் கேட்டுள்ளேன். :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol:  :lol:  :lol:

இந்த தெவிட்டாத  ராகங்களை தட்டி வான், மீன் சந்தைகளிலும் கேட்டுள்ளேன். :lol:  :lol:  :lol:

யாழ்ப்பாணம் சின்னக்கடை மீன் சந்தையிலும், இந்தச் செந்தமிழ்த்தேன் அடிக்கடி காதில் வந்து பாயும்! :D

மீண்டும் இருபதுக்குள் என்னை இழுத்துக்கொண்டு போவதற்கு நன்றி ஜீவா .எங்களுக்கு 808 பஸ் .

தி.நகர் அதில சும்மா நின்றாலே நேரம் போவது தெரியாது (அதில் தான் பாண்டி பசாரும் இருக்கு )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.

பழைய ஞாபகந்தான் வருகிறது. முன்பு திநகர், தாவணி போட்ட ஐயராத்துச் சுந்தரிகளால் நிரம்பி வழியும். ரங்கநாதன்  தெரு சனநெரிசலில்  நீந்திக் கொண்டு அவர்களை 'சைட்' அடிப்பது என்ன ஒரு பரவசமான அனுபவம்.

அப்ப ஆள் பெரியகாயாத்தான் இருப்பிங்கள் போல .. :)

தேடி வாசிக்க வைத்த தொடர்களில் ஒன்று. நன்றாக எழுதுகின்றீர்கள் ஜீவா...... பாராட்டுக்கள்...!

நன்றி தமிழினி அக்கா..

உங்கள் வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும்.. :)

750.751 இந்த பஸ் பிரயாண அனுபவம் உங்களுக்கும் இருக்கா ஜீவா அண்ணா. அதெல்லாம் ஒரு கனாக்கால அனுபவம் .. அச்சுவேலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை பாடசாலைபஸ் அனுபவம் ரொம்பவே இருக்கு அண்ணா. அந்த பஸ் பிரயாண அனுபவம் பற்றி எழுதனும்னு இருந்தேன். கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

எழுதுங்கோ படிக்க ஆவலாய் இருக்கிறோம்.

ஆனால் இனிமேல் இப்படி ஒரு சம்பவத்தை எழுதமாட்டேன். :rolleyes:

நன்றி உங்கள் வரவுக்கும்,கருத்துப்பகிர்வுக்கும் நன்றி அக்கா. :)

:lol:  :lol:  :lol:

இந்த தெவிட்டாத  ராகங்களை தட்டி வான், மீன் சந்தைகளிலும் கேட்டுள்ளேன். :lol:  :lol:  :lol:

:D :D

உண்மையில் நாங்கள் வேறுபல சந்தர்ப்பங்களில் கேட்டிருந்தாலும் அவர்களுக்கே உரிய அந்த மொழியில்

அள்ளித்தெளிக்கும் போது ஒரு மார்க்கமாய்த் தான் இருந்தது.. :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் சின்னக்கடை மீன் சந்தையிலும், இந்தச் செந்தமிழ்த்தேன் அடிக்கடி காதில் வந்து பாயும்! :D

நாங்கள் ஒவ்வொரு திங்களும்,அரியாலை,குருநகர்,பாஷையூருக்கு விசிட் போறது..

அங்கையும் இதெல்லாம் சகஜம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் இருபதுக்குள் என்னை இழுத்துக்கொண்டு போவதற்கு நன்றி ஜீவா .எங்களுக்கு 808 பஸ் .

தி.நகர் அதில சும்மா நின்றாலே நேரம் போவது தெரியாது (அதில் தான் பாண்டி பசாரும் இருக்கு )

எனக்கு தெரிஞ்சது ஆக 11H உம் 49A உம் தான் அண்ணா.. :(

இந்தியாவிலை போய் செட்டில் ஆகணும்னு தான் ஆசை, பார்க்கலாம். :rolleyes:

நன்றி அண்ணா உங்கள் வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

மீதியை தொடரவும்............ :D

  • கருத்துக்கள உறவுகள்

மீதியை தொடரவும்............ :D

நிலாமதி அக்காவின், கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்.

கதையை... தொய்ய விட்டால், சுவராசியம் போயிடும் ஜீவா. :icon_idea:

எனக்கு தெரிஞ்சது ஆக 11H உம் 49A உம் தான் அண்ணா.. :(

இந்தியாவிலை போய் செட்டில் ஆகணும்னு தான் ஆசை, பார்க்கலாம். :rolleyes:

நன்றி அண்ணா உங்கள் வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

ஜீவா, அர்ஜுன் சொன்ன பஸ் இலக்கம் 808 யாழ் பஸ்நிலையத்தில் வெளிக்கிட்டு கோண்டாவில் வரை போவது.
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை வாசிப்பதனால் எனக்கும்......இளமை ஊஞ்சல் ஆடுகிறது....:D

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையைச் சோதிக்காமல் கதையைத் தொடருங்கள் ஜீவா :D

ஊர் பஸ்களில் பல சுவாரஸ்யமான விடையங்கள் நடக்கும்.

உங்கள் வர்ணனையில் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, அர்ஜுன் சொன்ன பஸ் இலக்கம் 808 யாழ் பஸ்நிலையத்தில் வெளிக்கிட்டு கோண்டாவில் வரை போவது.

மாணவர்களுக்காக... பலாலி வீதியில்... கோண்டாவில் பஸ் டிப்போ வரை போவது என, பாடசாலை நண்பர்கள் சொல்லிய ஞாபகம் உண்டு நவீனன்.

அந்த பஸ்ஸில்... உரசிக் கொண்டு வர... உரும்பிராய் பெடியளும், வருவார்களாம்.

பிற்குறிப்பு: கோண்டாவில் தாண்டித்தான்... உரும்பிராய். 808´ல் ஏற வேண்டும் என்று, வேறு பஸ் நேரடியாகப் போனாலும்... கோண்டாவிலில் ரான்ஸ்சிற் பஸ் பிடிப்பார்களாம். அப்போ... எனக்கு பஸ்சில் பள்ளிக்கூடம், போக முடியலையே... என்று, ஏக்கமாய்... இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.