Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிசிக்கோலொஜி

Featured Replies

என்ன நடந்ததென்றால்..

நான் சங்கக்கடைக்கு போனேனா ..

ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்..

ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்..

சாமானை அங்காலை எடுத்து வையுங்கோ என்று சொல்லிபோட்டு ...

வீட்டை ஓடிவந்து கேற்றுக்கு வெளியிலே சைக்கிளை விட்டிட்டு ...

இப்ப வாறது தானே என்று பூட்டாமல் வீட்டுக்குள்ளே போய்  ...

தேங்காயெண்ணெய் போத்திலை எடுத்து கொண்டுவந்து சைக்கிளை பார்த்தால்..

காணவில்லை..

"நடுவிலே கொஞ்ச பக்கத்தை காணோம்" படத்திலே வாற விஜய் சேதுபதி மாதிரி, எங்கட அம்மா ஐந்தாவது தடவையாக பரமேஸ்வரா சந்தி இந்திய ராணுவ முகாம் பொறுப்பதிகாரி சர்மாவுக்கு சொல்லிகொண்டிருந்தா.

சர்மாவுக்கு தலை எல்லாம் சுத்தியது.

பலாலி வீதியில் இருந்த அந்த அடுக்குமாடி கட்டடம் ( பின்னாளில் சர்வதேச மாணவர் பேரவை இயங்கிய இடம்) இந்திய இராணுவத்தின் சித்திரவதை கூடமாகவும், பல்கலைகழக மாணவர்களை கட்டுபட்டுத்தும் இடமாகவும் விளங்கியது.

அந்த கட்டடத்தில் பின்னுக்கு இருந்த ஒரு அறையில், எனக்கு ஒரு சோலாபூரி செருப்பை அளவு பார்த்துவிட்டு, அது அளவில்லாமல் போக, செவிட்டை பொத்தி ஒரு அறைவிட்டான், இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஒரு ஈழ தமிழன்.

( வாசகர்களே செருப்பு கடை என்று நினைத்து விடாதீர்கள் ..தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும்)

யாரடா அவன் பிசிக்கோலொஜி.?

இந்த கேள்வியை என்னிடம் அவன் ஒன்பதாவது தடவையாக கேட்கிறான்.

எனக்கோ அந்த வயதில் அந்த பெயரை அப்போது அவன் வாயில் இருந்து தான் கேள்விபடுகிறேன்.

மறுபக்கத்தில் பொறுமையை இழந்த இராணுவ அதிகாரி சர்மா,தான இருந்த கதிரையை பின்னுக்கு நகர்த்திவிட்டு எழும்பி நின்று, உண்மையை சொல்லு என்ன நடந்தது என்று அம்மாவிடம் அதட்டும் தொனியில் கேட்க.

அம்மாவோ ..

என்ன நடந்ததென்றால்..

நான் சங்கக்கடைக்கு போனேனா ..

ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்..

ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்..

.......

........

Stop It .

அந்த கட்டடமே அதிரும்படி கத்தினான் அந்த அதிகாரி.

இத்தனைக்கும் காரணமான அம்மாவின் ஏசியா சைக்கிள், அந்த இராணுவ முகாமின் சுவரில் சாத்தியபடி தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாத மாதிரி சிவனே என்று நின்றுகொண்டு இருந்தது.

அப்படி என்னதான் நடந்தது ..

எங்கட அம்மா ஒரு விஞ்ஞான ஆசிரியை.

அப்பாவிடம் அடம்பிடித்து பள்ளிக்கூடம் போவதற்காக ஏசியா லேடிஸ் சைக்கிள் தான் வேணும் எண்டு ஒரு மாதத்துக்கு முதல் தான் ஒரு சைக்கிளை வாங்கி இருந்தா. ரிம்முக்குள்ளே போடுற பூ இல் இருந்து எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினா.

எங்கட வீட்ல தங்கி, மருத்துவபீடத்தில் படித்து கொண்டிருந்த சத்தியேந்திரா அண்ணா எப்பவுமே எங்களுக்கு ஒரு முன் உதாரணம்.

அம்மா எப்பவுமே சந்தியேந்திரா அண்ணாவை பார், எப்படி படிக்கிறார், அவரை பார்த்தாவது நீங்கள் படியுங்கள். இது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு விழும் அர்ச்சனையில் ஒரு பகுதி.

சத்தியேந்திரா அண்ணா எப்பவுமே ஒரு பெரிய இங்கிலிசில் எழுதின புத்தகமும் கையுமாக தான் திரிவார்.

ஒரு நாள் அம்மாவிடம், கம்பசுக்கு போறதுக்கு எண்டு சைக்கிளை கேட்டார், அம்மாவும் படிக்கிற பிள்ளை என்று கேட்டு கேள்வி இல்லாமலே சைக்கிளை கொடுத்துவிட்டா.

எங்கட ஒழுங்கையாலே போய் மெயின் ரோட்டிலே ஏறும் இடத்தில் இந்திய இராணுவம்.

எதிர்பாராத சந்திப்பு. எல்லாரையும் check பண்ணி கொண்டு நிண்டான்.

தான் எப்படியும் பிடிபட போகிறேன் என்று எண்ணிய சந்தியேந்திரா அண்ணா, இடுப்பிலே இருந்த ஒரே கிரினைடையும் கிளிப்பை கழட்டி எறிஞ்சுபோட்டு, செருப்பையும் கழட்டிப்போட்டு ஒரே ஓட்டம். பனை வளவுகளுக்காலே விழுந்து, வேலிகள் பாய்ந்து கண்காணாமல் ஓடி போயிட்டார்.

இந்திய இராணுவத்துக்கு கிடைத்தது.

ஒரு ஏசியா லேடீஸ் சையிக்கிள்.

ஒரு சோடி சோழபூரி செருப்பு.

பெயர் என்ற இடத்தில் psychology என்று எழுதியபடி ஒரு அப்பியாச கோப்பி..

அன்று தொடக்கம் இன்று வரை அவங்கள் கைது செய்யும் எல்லாரிடமும் இரண்டே இரண்டு நடைமுறை தான்.

சோழபூரி செருப்பை போட்டு பார்ப்பான்கள் அளவு என்றால் அவன் புலி.

அடுத்த கேள்வி உனக்கு பிசிக்கோலொஜியை தெரியுமா .??

மூன்று நாள் கழித்து வீட்டுக்கு வந்த சத்தியேந்திரா அண்ணா தான் அம்மாவிடம் சொன்னார். சையிக்கில் பரமேஸ்வரா சந்தியிலே இருக்கிற இந்திய இராணுவ முகாமில் நிக்குது எண்டு.

அம்மாவுக்கு அவர் மேல கோபம் இருந்தாலும் படிக்கிற பெடியன் என்று பாசமும் இருந்தது. ஆனாலும் அவர் ஒரு புலி போராளி என்று தெரிஞ்ச போது பெருமையும் இருந்தது. (அது அந்த காலம்)

அம்மா என்னையும் கூடி கொண்டு, மாற்று திறப்பையும் கொண்டு காலமையிலே இருந்து இந்த காம்பில தான் நிக்கிறம்.

டேய் உண்மையை சொல்லுடா ..யாரடா அவன் பிசிக்கோலொஜி.?
உங்கட அம்மா தானே புலிக்கு சைக்கிள் கொடுத்து...

இல்லை அண்ணே , அம்மா எண்ணெய் எடுக்க ... சொல்லி முடிக்க கூட இல்லை வாயை பொத்தி ஒன்று விட்டான்.

இவ்வளவு  நேரமா பொத்தி வைச்ச அழுகை பீறிட்டு கொண்டு வந்தது.

ஓ.... அம்மா ...என்று கத்தி அழுதேன்.

சர்மா ஓடிவந்து எட்டி பார்த்திட்டு , அவன் சின்ன பொடியன் அவனை விடுங்கள் என்று சொல்லிட்டு கூட்டி கொண்டு போனான்.

ஒரு சொக்கிலேட் தந்தான்.

தம்பி ..உங்கட அம்மா LTTE இற்கு சைக்கிள் கொடுத்தவ தானே ..

இல்லை சேர். அம்மா எண்ணெய் போத்தில் எடுக்க வீட்டுக்குள்ளே வரேக்க...

ஐயோ...

டீச்சர்.. நீங்கள் சைக்கிளை கொண்டு போகலாம்.

அம்மா ஏசியா சைக்கிளை ஓடும்போது, நான் பின் கரியரில் இருந்து ரோட்டை பார்த்து கொண்டு வரும்போதும் அதே யோசனை.

அவருக்கு பெயர் சத்தியேந்திரா தானே ..

யாராக இருக்கும் இந்த பிசிக்கோலொஜி...?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

நல்ல ஐடியா

நேரத்திற்கு ஏற்ற கதை

ஆனாலும் அதற்குள்ளும் எம்மவர்.......

தொடர்க

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கால  ஞாபகங்கள்....இன்னும் உங்கள் நினைவில் ... ரசித்தேன்.

அம்மா எப்பவுமே சந்தியேந்திரா அண்ணாவை பார், எப்படி படிக்கிறார், அவரை
பார்த்தாவது நீங்கள் படியுங்கள். இது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு விழும்
அர்ச்சனையில் ஒரு பகுதி.

எப்பவுமே மற்றவையோடை ஒப்பிட்டு பாத்து எங்களை வளர்த்த அம்மாக்களை என்னவெண்டு சொல்ல ??? அதாலைதான் இண்டைக்கும் நாங்கள் புலத்திலை எங்களை மத்தவையோடை ஒப்பிட்டு பாத்தே எங்கடை சீவியத்தை துலைக்கிறமோ ????

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், நல்ல ஒரு நினைவு மீட்டல்! வழக்கம் போல நகைச்சுவையின் ததும்பல்!

என்ன தான் இருந்தாலும், வாழ்க்கையை வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும், இன்னும் எனது நினைவில் நிழலாடுகின்றது,

முதல் சம்பளத்தில் நான் வாங்கி அப்பாவுக்குப் பெருமையுடன் கொடுத்த அந்த 'அப்போலோ' சைக்கிள்! :D

யாழ் களம், சில வேளைகளில் சீரியசாகப் போற நேரத்தில், உங்கட பதிவு, அல்லது ஜீவாவின் பதிவு போன்றவை, இடைக்கிடை வந்து,

தமிழ்ப்படங்களிலை இடையில வாற நகைச்சுவை மாதிரிக் களத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையுடன் நல்ல பதிவு .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்  ,  வாழ்த்துக்கள் பகலவன் 

மற்றவர்களை சிரிக்கவைப்பது ஒரு தனிக் கலை. வாழ்த்துகள். 

நல்ல பதிவு பகலவன்! தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க ஆவலாய் உள்ளோம்!

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் கலக்கீட்டிங்கள் நகைச்சுவையுடன் கூடிய உங்கள் பதிவுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

ம்ம்ம்

நல்ல ஐடியா

நேரத்திற்கு ஏற்ற கதை

ஆனாலும் அதற்குள்ளும் எம்மவர்.......

தொடர்க

நன்றி விசுகு அண்ணா உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்.

அந்தக் கால  ஞாபகங்கள்....இன்னும் உங்கள் நினைவில் ... ரசித்தேன்.

ஒரு நினைவு  இன்னொரு ஞாபகத்தை கிளறிவிடும் அக்கா. அந்த வகையில் வந்தது தான் இந்த ஞாபகம்.

நன்றி நிலா அக்கா உங்கள் பதிவிற்கு.

அம்மா எப்பவுமே சந்தியேந்திரா அண்ணாவை பார், எப்படி படிக்கிறார், அவரை

பார்த்தாவது நீங்கள் படியுங்கள். இது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு விழும்

அர்ச்சனையில் ஒரு பகுதி.

எப்பவுமே மற்றவையோடை ஒப்பிட்டு பாத்து எங்களை வளர்த்த அம்மாக்களை என்னவெண்டு சொல்ல ??? அதாலைதான் இண்டைக்கும் நாங்கள் புலத்திலை எங்களை மத்தவையோடை ஒப்பிட்டு பாத்தே எங்கடை சீவியத்தை துலைக்கிறமோ ????

கோமகன், இண்டைக்கு மட்டும் அம்மாமார் அந்த கொள்கையை மட்டும் கைவிடவில்லை. நன்றி கோமகன் உங்கள் பகிர்வுக்கு.

பகலவன், நல்ல ஒரு நினைவு மீட்டல்! வழக்கம் போல நகைச்சுவையின் ததும்பல்!

என்ன தான் இருந்தாலும், வாழ்க்கையை வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தாலும், இன்னும் எனது நினைவில் நிழலாடுகின்றது,

முதல் சம்பளத்தில் நான் வாங்கி அப்பாவுக்குப் பெருமையுடன் கொடுத்த அந்த 'அப்போலோ' சைக்கிள்! :D

யாழ் களம், சில வேளைகளில் சீரியசாகப் போற நேரத்தில், உங்கட பதிவு, அல்லது ஜீவாவின் பதிவு போன்றவை, இடைக்கிடை வந்து,

தமிழ்ப்படங்களிலை இடையில வாற நகைச்சுவை மாதிரிக் களத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடும்! :icon_idea:

நாங்கள் வாழுவது சந்தோசமாக சிரித்து மகிழ தான். சண்டைபிடிக்க நிறையபேர் இருந்தாலும் சிரிக்க வைக்க கொஞ்ச பேராவாது இருக்க தானே வேண்டும் புங்கையூரான்.

நன்றி உங்கள் ஊக்கத்துக்கு.

நகைச்சுவையுடன் நல்ல பதிவு .

நன்றி சுமோ அக்கா. உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்.

உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்  ,  வாழ்த்துக்கள் பகலவன் 

நன்றி நந்தன் அண்ணா. எனது பதிவுகளை முதலில் வாசித்து பச்சை குத்தி ஊக்கபடுத்தும் ஒரு உறவு என்றால் அது நீங்கள் தான்.

மற்றவர்களை சிரிக்கவைப்பது ஒரு தனிக் கலை. வாழ்த்துகள். 

உண்மைதான் நீதிமதி. நான் அந்த பாணியை தான் பெரிதும் விரும்புவன். வாசிப்பவர்களை தங்களின் துன்பங்களை மறந்து அந்த நேரத்திலாவது சிரிக்க வைத்தோம் என்ற திருப்தி. நன்றி நீதிமதி.

நல்ல பதிவு பகலவன்! தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க ஆவலாய் உள்ளோம்!

நன்றி அலை அக்கா.

பகலவன் கலக்கீட்டிங்கள் நகைச்சுவையுடன் கூடிய உங்கள் பதிவுக்கு நன்றிகள்

கலக்கல் எலாம் உங்களிடம் கற்று கொண்டது தான் புத்தன் அண்ணா. நன்றி உங்கள் பதிவிற்கு 

நல்லா இருக்கு பகலவன் உங்கள் கதை.
 
இதே காலப்பகுதியில், இதே மாதிரி இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஒரு ஈழத்தமிழன், எனக்கும் எங்கள் ஊர்ப் பொறுப்பாளரைத் தெரியுமா என்று கேட்டு, தெரியாது என்றதற்காக கன்னத்தில் விரல் பதித்தான். அவனுடைய அடிக்கான என்னுடைய எதிர்வினையும் ஏறத்தாள உங்களுடையதை ஒத்ததாகவே இருந்தது. அவன் கேட்ட கேள்வி, அதற்கு நான் சொல்லப்போகும் பொய், அதுபற்றி நான் யோசித்த வினாடிகள், பின் பதில் சொன்னமை, அதைத் தொடர்ந்து அவன் அடித்தமை அனனத்தும் இத்தனை வருடங்களின் பின்னர் இன்னமும்  ஸ்லோமோஷனில் நினைத்துப் பார்கக்கூடியதாய் இருக்கிறது. 
 
சத்தியேந்திரா காலத்தில் அடிவாங்கக்கூடிய வயதுடையவராய் நீங்கள் இருந்தீர்கள் என்பது சற்று வியப்பாய் இருக்கிறது. சுண்டல்,ஜீவா வயதை ஒத்த அல்லது அதற்குச் சற்று அதிகமான வயதுடையவர் என்று நினைத்திருந்தேன்.
 
விஞ்ஞான ஆசிரியராய் இருந்த அம்மா சைக்கிள் வாங்குவதற்காய் அப்பாவின் அனுமதிக்காய்ப் போரிட்டதையும் சிம்பிளா சேர்த்துப் போயிருக்கிறீர்கள்.
 
நன்றாக இருக்கிறது.

நன்றி இன்னுமொருவன் மீண்டும் ஒருமுறை உங்களின் விமர்சனத்துக்கு.

அடிவாங்குவதற்கும் அழுவதற்கும் வயசு உண்டு என்ற உங்கள் கணிப்பீட்டை விளங்கி கொள்ளும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை. இருந்தாலும் நான் எனது வாழ்க்கையில் அறிவு தெரிந்த நேரத்தில் இராணுவம் என்று நேரில் கண்ட இராணுவம் இந்திய இராணுவம்.  சாப்பாத்தி மணமும், புதுவித பெட்ரோல் புகை மணமும் நான் இன்னும் மறக்கவில்லை. 89 களில்  மைக் பிடித்த திலீபன் அண்ணாவின் பச்சை கலர் நோட்டிஸ் ஓட்டியமைக்காக, கையை கட்டி வாயால் கிழிக்க சொன்ன போது பசியை நக்கி நக்கி கிழித்த வயசு.

எண்ணங்கள் எண்ணங்களால் தோண்டி எடுக்கபடுகின்றன. மீண்டும் என் நினைவில் இருந்து மறைவதற்குள் பதிவிடுகிறேன்.

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு.

சூப்பர் பகல்

நன்றி சஜீவன் அண்ணா. உங்கள் வருகைக்கும் ஊக்குவிற்புக்கும்.

முடிந்தவரை உங்கள் நினைவுகளை கதைகளாக எழுதுங்கள் .பலருக்கு எட்டாத அனுபவங்கள் இவை ,அதை இவ்வளவு நகைச்சுவையாக எழுத எல்லாரும் முடியாது .

கதை நடந்த இடம்   எனக்கு மிக பரீட்சையமான இடமாதலால் இன்னமும் நன்றாக இருந்தது .

நிச்சயமாக எழுதுகிறேன் அர்ஜுன் அண்ணா. உங்கள் கறுப்பு பெட்ஷீட் தான் இந்த நினைவுகளை எனக்கு மீட்க சந்தர்ப்பம் அளித்தது. என்னும் எத்தனையோ அனுபவங்கள் எழுதப்படாமல் இருக்கிறது. நீங்களும் அவற்றை எழுத வேண்டும் என்பதே எனது அவாவும் கூட.

நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது, கதை கொண்டு போன விதம்.

மற்றது,  நான் சொல்லுவது தவறாக இருக்கலாம்.

நீங்கள் சொல்லுபவரும் நான் நினைப்பவரும்/கருதுபவரும் வேறு வேறு ஆக இருக்கலாம்.

ஆனால் நான் நினைக்கிறன் அவர் ஒரு புலி போராளி அல்ல என்று. அவர் ஒரு ஆதரவாளர் / தீவிர ஆதரவாளர் ஆக இருக்கலாம். ஏனெனில் மருத்துவ பீட உணவ சாலையில்/மாணவர் ஒன்று கூடும் இடத்தில், இருந்த படம் ஒன்றில் சத்தியேந்திர என்று பெயருடைய ஒருவர் இருந்தவர் அதில்-கப்டன்/போராளி/லெப் கேணல்....போன்ற இயக்க இராணுவ தகுதி நிலைகள் இருக்கவில்லை.

நன்றி வோல்கனோ உங்கள் வரவிற்கும் பதிவிற்கும்.

நான் குறிப்பிடுபவருக்கு சத்தியேந்திரா அல்ல உண்மையான பெயர். ஆனால் இதை ஒத்த பெயர் தான் அவருக்கும். அவர் பின்னாட்களில் வன்னி பகுதியில் மருத்துவராக கடைமையாற்றி இறுதி யுத்தத்துக்கு பின்னர்  வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரி உள்ளார். அவரது பெயரை தவிர்த்தமைக்கு அது தான் காரணம். அவர் இறுதிவரை புலியாகவே வாழ்ந்து இன்றும் உயிரோடு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பகலவன் உங்கள் தகவலுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மிக நன்றாக எழுதுகிறீர்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி கனகதையள் கிடக்கு . அதை கிண்டி பாக்கிறதிலையும் ஒரு ருசி இருக்கத்தான் செய்யுது . பாராட்டுக்கள் பகலவன் .

  • 2 weeks later...

இன்றுதான் வாசித்தேன் பகலவன்.. கதை நன்றாக இருக்கின்றது. நானும் அதே காலப்பகுதியில் அநேகமாக உங்களின் அன்றைய வயதில் தான் இந்திய ஏவல் இராணுவத்தின் காலத்தின் போது அங்கு இருந்தேன்...

  • தொடங்கியவர்

தம்பி மிக நன்றாக எழுதுகிறீர்கள் 

நன்றி லியோ அண்ணா.

இப்பிடி கனகதையள் கிடக்கு . அதை கிண்டி பாக்கிறதிலையும் ஒரு ருசி இருக்கத்தான் செய்யுது . பாராட்டுக்கள் பகலவன் .

நன்றி மைத்தி, உங்களுக்கும் இப்படி கதைகள் தெரியும் என்றால் எழுதுங்கோவன். நினைவுகள் எழுதுவதில் தான் ஒரு சுகம். 

இன்றுதான் வாசித்தேன் பகலவன்.. கதை நன்றாக இருக்கின்றது. நானும் அதே காலப்பகுதியில் அநேகமாக உங்களின் அன்றைய வயதில் தான் இந்திய ஏவல் இராணுவத்தின் காலத்தின் போது அங்கு இருந்தேன்...

நன்றி நிழலி, உங்கள் நினைவுகளையும் பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ காலம் மனங்களில் வடுக்களையும் வலிகளையும் தந்த காலம். பகிர்வுக்கு நன்றிகள் பகலவன்.

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையோடு நீங்கள் எழுதிய கதையை இரசித்து வாசித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.