Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிட்டுக்கு மனம் சுமந்து .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Kerala_01.jpg
 
எனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக்  கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்து விட்டு அவிக்கும் பிட்டு,வெள்ளை மாப்பிட்டு, குரக்கன்பிட்டு, கீரைப்பிட்டு என எனக்குத் தெரிந்தது.
இன்னும் வேறும் இருக்கலாம்.

இதைக் கூட பிட்டுக் குழலில் அல்லது வேறு நீராவி உட்செல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அவிப்பார். எனதுமுறை எப்போதும் முதலாவதுதான். குழல் பிட்டுக்கென்றே தனிச் சுவை உண்டென்பது எல்லோரும் அறிந்ததுதான்.

எனக்கு குறைந்த நீர் விட்டு பஞ்சுபோல் இருக்கும் பிட்டுத்தான் பிடிக்கும். ஏனெனில்  என் அம்மா அப்படி அவித்து அவித்து எனக்கும்  அதுவே பழகிவிட்டது.

திருமணமான ஆரம்ப காலங்களில் நானும் அம்மாவைப் போன்றே உலிர் பிட்டை அவிப்பேன். ஒன்றிரண்டு தடவைகளின் பின் கணவர் தன் தாய் இப்படி அவிப்பதில்லை. அம்மாவைப் போல் அவி என்று ஒவ்வொரு முறையும் பிட்டவிக்கும் போதும் கூறியதனால், நானும் சரி என்று சுடுநீர் கொஞ்சம் அதிகம் விட்டு கணவருக்குப் பிடித்தது போன்றே அவித்துக் கொடுத்தேன்.

கணவருக்கோ மிகுந்த மகிழ்வு. அம்மா மாதிரியே அவிக்கிறாய் என ஒன்றுக்கு மூன்றுதரம் சொல்ல, எனக்கு உள்ளுக்குள் என் சுவையில் அவிக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தும் கணவர் மகிழ்வாக உண்கிறாரே என்னும் நிறைவில் அப்படியே அவிக்க ஆரம்பித்தேன்.

இருந்துவிட்டடு எப்பவாவது ஆசை வரும்போது  எனது விருப்பத்துக்கு அவித்து வைத்தால் கணவர் வேண்டா வெறுப்பாகவே அதை உண்டு முடிப்பார். என் கணவரைப் பொருத்தவரை எந்த உணவெனினும் உண்ணக் கூடியவர். ஆனாலும் பிட்டு விடயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பார்.

இன்று காலை பிட்டு அவிக்கும் போது எனக்கு விருப்பமானதுபோல் பிட்டை அவிப்போமா? என ஒரு கணம் யோசித்துவிட்டு, எதற்கும் வேண்டாம் என மனம் சொல்ல கணவருக்குப் பிடித்த முறையில் அவித்து முடித்தேன்.

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

பிட்டு ஈழத்து உணவென இத்தனை நாள் எண்ணியிருந்தேன். இணையத்தில்  படத்தைத் தேடினால் வரவே இல்லை. கேரளப் புட்டு என்று தேடியபோதே படம் வந்தது.

அதுசரி பிட்டு ஈழத்து உணவா???   கேரளத்து உணவா ???

  • Replies 147
  • Views 25.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. குழைக்கும்போது இரண்டு பாகமாக்கி இரண்டுமுறையிலும் அவிக்கலாம்தானே.. :D

பிட்டு ஈழத்து உணவுமல்ல.. கேரளத்தின் உணவுமல்ல.. தமிழரின் உணவு.. :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

Spoiler
ரத்த அழுத்தம் சரியாத்தான் இருக்கு.. :lol:

ம்......... குழல் பிட்டு எனக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று தான். (பிட்டும் பொரியலும்)  நான் பிட்டு எமது தமிழீழ உணவு என்று தான் நினைத்தேன்.

நன்றி நண்பி பகிர்வுக்கு!

ஏனோ தெரியவில்லை அப்படித் தனித் தனியாக அவிக்க மனம் வருவதில்லை. நன்றி அலை.

:lol:  :lol: சுமோவுக்கு வயது போட்டுது!

என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

Spoiler
ரத்த அழுத்தம் சரியாத்தான் இருக்கு.. :lol:

:lol:  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டு என்றாலே மலையாளப் பகுதிதான் மிகப் பிரசித்தம். கடவுளின் சொந்த(?) நாட்டிலிருந்து தயாரிப்பதல்லவா?

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

கேரளாவிலும் புட்டுச் செய்வினம். ஆனால் அது மணிப்புட்டு வகை மாதிரி. ஒருக்கால் ஓமனக்குட்டி ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடப் போகும் போது மணிப்புட்டும் சூடை மீனும் வைத்து தந்தார்..அவரை மாதிரி அதுவும் சுவையாக இருந்தது.

யாழ்ப்பாண உணவு வகைகளில் கேரள உணவின் சாயல் வருவது வரலாற்று ரீதியானது என்று நினைக்கின்றேன். கேரளாவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இருந்த கடல் வழி வணிகம் காரணமாக இருக்கலாம். அங்கும் தேங்காய் முக்கிய உணவுப் பொருள். இடியப்பமும் செய்வினம் (நடுவில் தேங்காய்ப்பூ போட்டு).

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

bambooputtu2.jpg?w=300&h=225

bambooputtu.jpg?w=300&h=400

எனக்கு அம்மா மூங்கில் குளாய் புட்டுதான் செய்து தருவா . மூங்கில் குளாய் புட்டுத்தான் ருசி கூட . ஆனால் இப்ப மூங்கில் குளாயை தேட வேண்டிக்கிடக்கு . எல்லாரும் ஒவ்வருமாதிரி சாப்பிடுவினம் . ஆனால் கோவின்ரை பாணியே தனி . ஐஞ்சாறு கதலி வாளைப்பழத்தைக் கையாலை பிசைஞ்சு , இந்தக் குளாய்ப்புட்டோடை குளைஞ்சு , அப்பிடியே ஒரே எறியல் :o:lol: :lol: . என்ரை சகோதரம் ஒண்டும் என்ரை அரையண்டத்தாலை பக்கத்திலை இருந்து சாப்பிடுறேலை கண்டியளோ :icon_mrgreen::unsure::lol::D .
 
அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

இந்த புட்டு பிரைச்சனைக்கை இதென்ன புதுசாய் ஒரு வண்டில் தனிய ஓடுது :wub: :wub: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னது .. அலையா? :o இருங்கோ எதுக்கும் செக் பண்ணிப் பார்க்கிறன்.. :unsure:

இசை என்றுதான் மனம் சொன்னது. கை தான் மாறி அலை என்று எழுதிவிட்டது நான் என்ன செய்ய இசை???

ம்......... குழல் பிட்டு எனக்கும் விருப்பமான உணவுகளில் ஒன்று தான். (பிட்டும் பொரியலும்)  நான் பிட்டு எமது தமிழீழ உணவு என்று தான் நினைத்தேன்.

நன்றி நண்பி பகிர்வுக்கு!

:lol:  :lol: சுமோவுக்கு வயது போட்டுது!

பிட்டைப் பொரியலுடன் உண்பதே தனிதான். 58 வயதெல்லாம் ஒரு வயதே அலை???

பிட்டு என்றாலே மலையாளப் பகுதிதான் மிகப் பிரசித்தம். கடவுளின் சொந்த(?) நாட்டிலிருந்து தயாரிப்பதல்லவா?

பிட்டுக்கு மண்சுமந்த கதை மதுரையில் தானே நடந்தது அண்ணா. அங்கு தமிழர்கள்தானே? கேரளாவுக்கு எப்படிப் பிட்டுப் போனது?

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

அந்தி பூத்ததா??? வருகைக்கு நன்றி நிழலி. பெண்களின் இழப்புகளுக்கு முன்னால் ஆண்கள் எத்தனை தந்தாலும் தகும்.

இந்த புட்டு பிரைச்சனைக்கை இதென்ன புதுசாய் ஒரு வண்டில் தனிய ஓடுது :wub: :wub: .

புட்டு இல்லாட்டில் பிரச்சனை இல்லை.பிரச்சனை இல்லாட்டால் பிட்டும் இல்லை. இரண்டும் ஒன்றுதான் கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

கேரளாவிலும் புட்டுச் செய்வினம். ஆனால் அது மணிப்புட்டு வகை மாதிரி. ஒருக்கால் ஓமனக்குட்டி ஒருவரின் வீட்டுக்கு சாப்பிடப் போகும் போது மணிப்புட்டும் சூடை மீனும் வைத்து தந்தார்..அவரை மாதிரி அதுவும் சுவையாக இருந்தது.

யாழ்ப்பாண உணவு வகைகளில் கேரள உணவின் சாயல் வருவது வரலாற்று ரீதியானது என்று நினைக்கின்றேன். கேரளாவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இருந்த கடல் வழி வணிகம் காரணமாக இருக்கலாம். அங்கும் தேங்காய் முக்கிய உணவுப் பொருள். இடியப்பமும் செய்வினம் (நடுவில் தேங்காய்ப்பூ போட்டு).

சின்ன மீனைப் போட்டு சுறா பிடிக்கும் கூட்டம்தானே நீங்கள் எல்லாரும் :)

சோத்திலும் பார்க்க புட்டு பொல்லாத சாமானா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில, நானும் புட்டு அவிச்சிருக்கிறன்! :o

இந்தக் குழல், கிழல் ஒண்டும் கிடையாது!

கொஞ்சம் வறுத்த மா 

சுடு தண்ணி

தேங்காய்ப் பூ 

ஒரு முள்ளுக்கரண்டி 

ஒரு ஸ்டீமர் 

இவ்வளவும் தான் தேவை!

புட்டும் அந்தமாதிரி வரும்!

புட்டும் மலையாளத்து உணவு என்பது தான் எனது ஆய்வின் முடிவும்! :D

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

எல்லா சாப்பாட்டிலையும் வாய்வைக்க அலையும் தம்பிமாரின் கவனத்திற்கு!
எல்லாச்சாப்பாடும் எல்லாருக்கும் சரிவராது! ஓடிஆடி பார வேலை செய்யிற மனிசருக்குத்தான் புட்டு,ஆட்டுறைச்சி,கணவாய்,றால் எல்லாம் சரிவரும்......செமிக்கும்.
 
சுழல்கதிரையிலை இருந்து கொண்டு வேலை செய்யுறவைக்கு ஒரு துண்டு பாண்,ஒரு தக்காளிப்பழம்,ஒரு அப்பிள்......இதுவே கூடிப்போச்சு........எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது. :icon_idea:

குழல் புட்டுக்கு சில்லை(அதுவும் தேங்காயில் எடுத்த ஒரு துண்டுதான் ) அடியில் போட்டு மாவையும் தேங்காய் பூவையும் மாறிமாறி போட்டு அதற்கு ஒரு சில்லு மூடி போட்டு அவிப்பதை கண்டுபிடித்தவர்கள்  உண்மையில் பேய்காய்கள் தான் .

அடியில் போடும் சில்லை வடிவாக வைக்காவிட்டால் புட்டு தண்ணிக்குள் கொட்டுண்டுவிடும் .

புட்டும் முட்டை பொரியலும் தான் எனது பேவரிட் .

சோத்திலும் பார்க்க புட்டு பொல்லாத சாமானா :unsure:

அப்படித்தான் நினைக்கின்றன். சாப்பிட்டால் அடுத்த பசி எடுக்க கன நேரம் போகும்.அத்துடன் வயிறும் heavy ஆக இருக்கும். இரவுச் சாப்பாடாக புட்டை சாப்பிடுவதை குறைத்த பின் தான் உடம்பு வைப்பது எனக்கு குறைவானது, நிறையும் கட்டுக்குள் வந்தது.

சுழல்கதிரையிலை இருந்து கொண்டு வேலை செய்யுறவைக்கு ஒரு துண்டு பாண்,ஒரு தக்காளிப்பழம்,ஒரு அப்பிள்......இதுவே கூடிப்போச்சு........எல்லாரும் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாது. :icon_idea:

நன்றி.. நீங்கள் சொன்ன இவற்றைத் தான் நான் Snack time இல் சாப்பிடுவது :icon_mrgreen:

.

புட்டும் முட்டை பொரியலும் தான் எனது பேவரிட் .

எப்பவாவது தாரா முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் கருவாட்டுப் பொரியலும் அல்லது புட்டும் பழைய மீன் கறியும் அந்தமாதிரி இருக்கும்.    :wub:

இசை என்றுதான் மனம் சொன்னது. கை தான் மாறி அலை என்று எழுதிவிட்டது நான் என்ன செய்ய இசை???

எல்லாம் நண்பி மீதுள்ள அன்பு தான் 

பிட்டைப் பொரியலுடன் உண்பதே தனிதான். 58 வயதெல்லாம் ஒரு வயதே அலை???

இங்கு 80 வயதிலும் திருமணம் செய்யுதுகள் உந்த வெள்ளையள் அதோடு பார்க்கேக்கை 58 குழந்தைப் பருவம்!

பிட்டுக்கு மண்சுமந்த கதை மதுரையில் தானே நடந்தது 

அட அலை உதையும் மறந்து போச்சுது!

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் வெந்தயக் குழம்பும் (நான் சைவம் என்பதால்!) நல்ல விருப்பம்.. ஆனாலும் குழல் புட்டு ஏனோ பிடிப்பதில்லை.

தமிழ்ப் பெட்டையள் புட்டு மாதிரி லேசில இறங்கமாட்டுது ஆனால் வெள்ளைக் குட்டியள் குளுக்கோஸ் மாதிரி டக்கென்று இறக்கிடலாம் என்று எனது நண்பன் சொல்லுவான். நான் இந்த உவமானங்களுக்காக புட்டை விட்டுக் குடுப்பதிலை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சுமே சமையலில் கிங் என்று கேள்வி. அடுத்தமுறை லண்டன் வரேக்க குழல்புட்டு அவிச்சுத் தருவீங்களோ சுமேயக்கா?

பி.கு:- புட்டவிக்கத் தெரியாமல் சுமேவீட்டுக்கு போகப்போறியோண்டு யாரும் அடிக்க வரப்படாது. :huh:

Kerala_01.jpg
 
இன்று காலை பிட்டு அவிக்கும் போது எனக்கு விருப்பமானதுபோல் பிட்டை அவிப்போமா? என ஒரு கணம் யோசித்துவிட்டு, எதற்கும் வேண்டாம் என மனம் சொல்ல கணவருக்குப் பிடித்த முறையில் அவித்து முடித்தேன்.

அவித்துக் கொண்டிருக்கும் போதுதான் யோசித்தேன். பெண்கள் இப்படி எத்தனையோ சின்னச் சின்ன ஆசைகளைக் கூட கணவனுக்காக விட்டுக் கொடுக்கிறார்கள் அல்லது இழக்கிறார்கள் என்று.

இனி நினைச்சுத்தான் என்னேயிறது. :mellow: விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு என்கிறது உபநிடதம். விரும்பிய புட்டு சாப்பிடமுடியாவிட்டால் கணவருக்குப் பிடித்த புட்டை சாப்பிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் புட்டு மிகவும் விருப்பமான உணவு. ஆனால் உடம்பு வைக்க வைப்பதில் புட்டுக்கு நிகர் புட்டுத்தான். செமிக்க நேரம் செல்லும் உணவும் புட்டு.

புட்டும் நெத்தலிப் பொரியலும், புட்டும் ஆட்டு இறைச்சியும், புட்டும் கணவாயும் என்று புட்டு ஒவ்வொரு கறிக்கு ஒவ்வொரு சுவை தரும். கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டால் 'கியல வடக் நா..' மரக்கறி என்றால் புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் அந்த மாதிரி இருக்கும்.

ரமேஷ் விரும்பிச்சாப்பிடும் புட்டுக்கு உங்கள் கறிவகைகளே பிடிக்கும்.

புட்டுக்கு சின்ன நெத்தலி மீனை அவியல் போல வதக்தி வெங்காயத்தையும் முழுதாக மொறுக விடாமல் பொரித்தெடுத்து நெத்தலி , வெங்காயத்தின் எண்ணை ஈரலிப்பில் பச்சைமிளகாய் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு அடுப்பை குறைத்து வறுத்து இறுதியில் கொஞ்சம் புளியும் விட்டிட்டு சாப்பிட்டுப் பாருங்கோ நல்ல சுவையாக இருக்கும்.

சுமே சமையலில் கிங் என்று கேள்வி. அடுத்தமுறை லண்டன் வரேக்க குழல்புட்டு அவிச்சுத் தருவீங்களோ சுமேயக்கா?

பி.கு:- புட்டவிக்கத் தெரியாமல் சுமேவீட்டுக்கு போகப்போறியோண்டு யாரும் அடிக்க வரப்படாது. :huh:

சாந்திக்குச் சமைக்கத் தெரியாது என்பது யாழ் அறிந்த விடயமாச்சே. றமேஷ் தானே பிட்டே அவிப்பது பிறகு ஏன் நாங்கள் அடிக்க வாறம் மச்சிக்கு :lol:  :icon_idea:

ரமேஷ் விரும்பிச்சாப்பிடும் புட்டுக்கு உங்கள் கறிவகைகளே பிடிக்கும்.

புட்டுக்கு சின்ன நெத்தலி மீனை அவியல் போல வதக்தி வெங்காயத்தையும் முழுதாக மொறுக விடாமல் பொரித்தெடுத்து நெத்தலி , வெங்காயத்தின் எண்ணை ஈரலிப்பில் பச்சைமிளகாய் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு அடுப்பை குறைத்து வறுத்து இறுதியில் கொஞ்சம் புளியும் விட்டிட்டு சாப்பிட்டுப் பாருங்கோ நல்ல சுவையாக இருக்கும்.

சாந்தியைக் கட்டினபடியால் றமேஷ் சமைக்கப் பழகீட்டார் :lol:

என்னெண்டாலும் சாந்தியில் எனக்குப் பொறாமை வீட்டில் சமைக்கத் தேவையில்லை எண்டு.

எனக்கு பிடித்த உணவு புட்டும் கொத்து ரொட்டியும். மூங்கில் குழலில் அவித்தால் தனியே ஒரு வாசம் வரும். சமையல் நன்றாகத் தெரியும். இந்த புட்டு அவிக்கிற 'ரெக்னிக்' மாத்திரம் இன்னும் பிடிபடுகுதில்லை. வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் புட்டு வேண்டும். வழமையாக மீன் குழம்புடந்தான் சாப்பிடுவேன்.

இந்தத் திரியைப் பார்த்ததால் இரவு புட்டுடன் வெந்தயக் குழம்பு, நெத்தலிக் கருவாட்டுப் பிரட்டல், கூனி தேங்காய்ப் பூச் சம்பல், ஆணம், முட்டைப் பொரியலுடன் சாப்பிட்டேன்.

கூனி தேங்காய்ப் பூச் சம்பல்

வழமையாக இலங்கையில் அரைக்கும் சம்பலா இது? ( தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை,தேசிக்காய்புளி)

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்குச் சமைக்கத் தெரியாது என்பது யாழ் அறிந்த விடயமாச்சே. றமேஷ் தானே பிட்டே அவிப்பது பிறகு ஏன் நாங்கள் அடிக்க வாறம் மச்சிக்கு :lol:  :icon_idea:

சாந்தியைக் கட்டினபடியால் றமேஷ் சமைக்கப் பழகீட்டார் :lol:

என்னெண்டாலும் சாந்தியில் எனக்குப் பொறாமை வீட்டில் சமைக்கத் தேவையில்லை எண்டு.

அலைமச்சி இப்பிடி சுனாமியாகீட்டீங்களே ? :lol:

சரி மச்சி இனி பொறாமைப்பட்டு என்னேயிறது. யேர்மனி வரேக்கை உங்களுக்கு இத்தாலி , யேர்மன் ஸ்பெஷல் சமையல் செய்முறை ரமேஷிடம் கேட்டு எழுதித்தரலாம். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.