Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் சிங்கிள் சிங்கங்கம்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
கலியாணம் கட்டுவது கட்டாயமா..?

 

 
ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி.. கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..? இல்லைத்தான.. இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..இதுவே கல்யாணம் ஆனால் நடக்குமோ.., நடக்கத்தான் மனுசிமார் விடுவளவையோ..? நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்..திட்டுவிழும்..காதுக்காலை ரத்தம் வரும்..கடவுளே கல்யாணம் கட்டினவனைப்பார்த்து பரிதாபப் படுகிறார்..இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா..? மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீட்டுக்கு வந்தமா..வெளியால போனமாம்...ஊரை சுத்தினமாம்..எண்டு ஒற்றையாய் திரிகிற வாழ்க்கையில்தான் எவ்வளவு சந்தோசம்..இதை எல்லாத்தையும் இழந்து ஒருகல்யாணம் கட்டவேணுமா.., கல்யாணம் கட்டியவர்களே உங்களை மனதை திறந்து சொல்லுங்கோ பதில்..கட்டாதவன் எல்லாம் என் கட்சியில் சேருங்கோ..இன்றுமுதல் நாம் சிங்கிள் சிங்கங்கம்கள் என்று சபதமெடுங்கள்..

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

How to Enjoy Being Single

 

 

 

  1. Ignore the naysayers. In a couple-driven consumer marketing society, you're bound to come across people who wonder why you're single, as if the ultimate goal in life is to pair up with another human being and cling to that ideal as if your life depends on it. They might even imply that something is "wrong" with you if you're single. Brace yourself for that kind of ignorance. Remember that you don't have to defend your right for being single, just like it's rude to attack the validity of someone's relationship. Just say "I prefer being single" and change the subject or mention that statistics show that 1/2 of all people are single.

    550px-Enjoy-Being-Single-Step-1.jpg
     
     
     
     
     
     
  2. 2
    Focus on friendship. Being single doesn't have to mean being lonely. When you're single, you have more time to do a variety of things, all of which are opportunities to forge new friendships. Even if you're an introvert, this can be an excellent time to nurture your extroverted side. But social butterflies can grapple with loneliness too. Make it a priority in your life to create meaningful friendships and enrich your existing ones.

    550px-Enjoy-Being-Single-Step-2.jpg
     
     
     
     
     
     
  3. 3
    Enjoy your freedom. Everybody has radical little fantasies...and the chances of pairing up with someone who shares such a fantasy with equal fervor is not something to hold your breath for. So what are you waiting for? Find some people who have the same idea, or just go for it alone, and you'll meet like-minded people along the way.

    550px-Enjoy-Being-Single-Step-3.jpg
     
     
     
     
     
    • How to Start Living in a Tiny House - Much more easily done when you live by yourself!
       
    • Camp As a Lifestyle - Not easy to do if you have a significant other who isn't as enthused about the outdoors as you are.
       
    • How to Travel on a Very Limited Budget - Radical ideas for shoestring travel.
       
    • Become a Hobo - Not something that's easy to pull off if you're in a relationship with someone whose location is fixed.
       
    • Grow Your Own Food - This takes up a lot of your time, and is ridiculously hard to pull off in a relationship if your partner isn't as passionate about it as you are. However, it's a good activity to try.
       
     
  4. 4
    Appreciate the absence of compromise. Classic relationship advice dictates that compromise, sacrifice are essential to a healthy relationship. Perhaps if you've been in a relationship before, you realize how much stuff you had to give up in order to make that relationship work. Or maybe you forgot about that stuff, because you're focused on the things you miss. Well, this is a good time to shift that focus. If you're a slob, isn't it great to be able to leave your stuff laying around, without anybody minding? If you're a neat freak, isn't it wonderful to be able to organize everything, and find it the way you left it? Isn't it nice to be able to cook and eat and enjoy foods that a partner might be averse to? Isn't it cool to be able to go out spontaneously, without wondering whether your partner can or should be invited? A relationship can add many good things to your life, but it also adds some rigidity, so take the time to appreciate your current flexibility.

    550px-Enjoy-Being-Single-Step-4.jpg
     
     
     
     
     
     
  5. 5
    Cherish the excitement. Relationships tend to come along with planning--for example, you can't just accept a job across the country without touching base with your significant other. And generally, if you're in it for the long haul, you'll likely talk about what you'll be doing years from now. But when you're single, the future is completely open. Today you're at your desk, and a year from now you might be camping in Alaska. Right now you're single, but tomorrow you might meet your soul-mate. Who knows? Fantasize. Be spontaneous. Be bold.
     
  6. 6
    Being married is a "lifestyle choice" and not a "requirement." Therefore, being single is a "lifestyle choice" and not a "default option." It is possible to CHOOSE to be single. There are advantages to being married just as there are disadvantages to being married, such as loss of personal freedom, having to compromise, etc. Conversely, there are advantages to being single, as well as disadvantages. Whether one is married or single is nothing more than a lifestyle choice.

    550px-Enjoy-Being-Single-Step-6.jpg

 

 

http://www.wikihow.com/Enjoy-Being-Single

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ ஜடியா கேக்கிறமாதிரி இருக்கு  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஏதோ ஜடியா கேக்கிறமாதிரி இருக்கு  :D

 

நண்டர்! அவன் தம்பியனுட்டை (சுபேஸ்) வயது வட்டுக்கை போக என்ன செய்யிற பிளான் எண்டு ஒருக்கால் கேட்டுச்சொல்லுங்கோ? :(  இப்பவே கலியாணம் கட்டினால்தானே ......பிற்காலத்திலை கூடமாட துணையெண்டு சொந்தமாய் நாலுபேர் இருப்பினமெண்டு எடுத்து சொல்லுங்கோ :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒர் ஆணுக்குப் பல வடிவங்கள் இருந்தாலும் கணவன் என்ற பொறுப்பு மிகவும் பெறுமதியானது. தனது உயிரையும் உள்ளத்தையும் உடலையும் ஆட்கொள்ளும்  உண்மையான ஆண்மகனைக் கணவனாக அடையப்பெற்ற பெண் மிகவும் பாக்கியவதியாக இருப்பாள். கணவன் என்ற பொறுப்பு அடுத்தபடியாக தந்தை என்ற மகத்துவமான பதவியைத் தந்துவிடுகின்றது.

 

மொத்தத்தில் பெண்மையைக் காணாத ஆண்மை முழுமையடைவதில்லை. ஒரு பெண்ணிடம் முழுமையாகச் சரணடைந்த ஆண்மை என்றும் தோற்பதில்லை. :)

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒர் ஆணுக்குப் பல வடிவங்கள் இருந்தாலும் கணவன் என்ற பொறுப்பு மிகவும் பெறுமதியானது. தனது உயிரையும் உள்ளத்தையும் உடலையும் ஆட்கொள்ளும்  உண்மையான ஆண்மகனைக் கணவனாக அடையப்பெற்ற பெண் மிகவும் பாக்கியவதியாக இருப்பாள். கணவன் என்ற பொறுப்பு அடுத்தபடியாக தந்தை என்ற மகத்துவமான பதவியைத் தந்துவிடுகின்றது.

 

மொத்தத்தில் பெண்மையைக் காணாத ஆண்மை முழுமையடைவதில்லை. ஒரு பெண்ணிடம் முழுமையாகச் சரணடைந்த ஆண்மை என்றும் தோற்பதில்லை. :)

இதுவும் கடந்து, போகக் கடவது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டுவது கட்டாயமா..?
 
ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி..
 
.....மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீட்டுக்கு வந்தமா..வெளியால போனமாம்...ஊரை சுத்தினமாம்..எண்டு ஒற்றையாய் திரிகிற வாழ்க்கையில்தான் எவ்வளவு சந்தோசம்..இதை எல்லாத்தையும் இழந்து ஒருகல்யாணம் கட்டவேணுமா.., கல்யாணம் கட்டியவர்களே உங்களை மனதை திறந்து சொல்லுங்கோ பதில்..கட்டாதவன் எல்லாம் என் கட்சியில் சேருங்கோ..இன்றுமுதல் நாம் சிங்கிள் சிங்கங்கம்கள் என்று சபதமெடுங்கள்..

 

இதெல்லாம் அந்தந்த வயசில வரும் பருவக்கோளாறுகள்... :D

 

நாங்களும் உங்கள் வயதில் இம்மாதிரி விடலைத்தனமாக சிலிப்பிகொண்டு திரிந்தவர்கள்தான்..! ஆனால் இப்பொழுது பாருங்கள், அன்பான மனைவி, குழந்தைகள், பேரன்,பேத்திகளென வாழ்வின் ஓவ்வொரு பரிமாணத்தையும் சுவைத்து மனிதனாய் பிறந்ததின் புரிந்தும் புரியாத அர்த்தங்களை இன்னும் சுவாரசியமாய் தோண்டிக்கொண்டிருக்கிறோம் வாழ்க்கை என்ற சுரங்கத்தின் மறுஎல்லையை நோக்கி...! :)

நீங்கள் என்னடாவென்றால் சுரங்கத்தின் அருகவே போகாமல் தூரமாய் நின்று, போறவனைப் பிடிக்க முட்டிக்கொண்டு வீண் கதை கதைக்கிறீர்கள்...!!

 

வீட்டிலுள்ள பெரியோர்களைச் சொல்லணும்..உங்களை ரெண்டு தட்டு தட்ட... :lol:

 

 

ஒவ்வொருவருக்கும் அவர் அவர் விருப்பப்படி வாழ உரிமையுண்டு, எது உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை தருமோ அதன்படியே வாழலாம். மேலே கூறியது போன்று பெண்மையை அடையாவிட்டால் இப்பிறவிப்பயனை அடையாமல் இவ்வாழ்க்கையை பூர்த்தியாக்கியதாகிவிடும் என்பது எனது கருத்து :) . ஒருநாள் இறந்து மேல்லோகம் செல்லும்போது எமதர்மன் கேட்பான் நீயெல்லாம் பூமியில் இருந்து என்ன பயன், அதுவும் ஆணாக இந்தனை ஆயுதங்களோடு பிறந்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லையே, நீ நரகத்திற்கு செல் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 
கலியாணம் கட்டுவது கட்டாயமா..?

 

 
ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி.. கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..? இல்லைத்தான.. இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..இதுவே கல்யாணம் ஆனால் நடக்குமோ.., நடக்கத்தான் மனுசிமார் விடுவளவையோ..? நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்..திட்டுவிழும்..காதுக்காலை ரத்தம் வரும்..கடவுளே கல்யாணம் கட்டினவனைப்பார்த்து பரிதாபப் படுகிறார்..இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா..?

நாங்கள் கலியாணம் எல்லாம் முடிந்த பின்னர்தான் யாழுக்குள் வந்து கருத்து எழுதுகின்றோம் . எழுதுவது எழுத நினைப்பவனுடைய சுதந்திரம் 

எமது எழுத்துச் சுதந்திரத்திற்குத் தடை போடுவது மனைவியானாலும் 

அந்தத் தடைகளை உடைத்துக் கொண்டு எழுத நினைப்பவர்கள் நாங்கள்.

அப்படி எழுதிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் :)  .

 

நாங்கள் என்ன எழுதுகின்றோம் என எதிரிகள் நோட்டம் விடுவதைவிட 

எங்கள் மனிவிமார்கள் நோட்டம் விடுவதே அதிகம் .

துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சுமெத்தை :)  

மணந்தவனுக்கு மனைவி ஒரு மாணிக்கம் 

 

சுபேஸ் யாரோ உங்களுக்கு திருமணம்பற்றி ஒருவிதக் குழப்பத்தை உருவாக்கி 

விட்டிருக்கின்றார்கள் போலிருக்கின்றது.

கடலுக்குள் இறங்கினால்தான் அதன் ஆழம் என்ன என அறியமுடியும் 

அலை அடித்தாலும் எதிர் நீச்சல் போட்டுக் கரையை அடையலாம் 

இல்லை வாழ் நாள் முழுவதும்  கரையிலேயே  இருந்து கடலை போடவேண்டியது தான் :lol::D     

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சி சுபேசு..... கடல் எண்டுறாங்க சுரங்கம் எண்டுறாங்க ஆழம் எண்டுறாங்க... நாங்க பாக்காத ஆழமா வா மச்சி ஒருக்கா இறங்கி பாப்பம்...

சுபேஸ். அங்க போறன், இங்க போறன் என்று சொல்லுகின்றீர்கள் இப்படி எத்தனை நாட்கள் தான் போய் கொண்டிருப்பீர்கள்?  வீட்டுக்குள் போய் கதைவைத் திறக்கும் பொழுது ஒரு தனிமை வாட்டுவதில்லையா? அன்பான மனைவி , பிள்ளைகள் வீட்டில் இருந்தால் மனைவி ஓடி வந்து அத்தான் (கணி) என்று ஒரு உதட்டில் முத்தம், பிள்ளைகள் வந்து அப்பா என்று இன்னொரு முத்தம் அட இது அல்லவா "சுவர்க்கம்" வாழ்க்கை வாழ்வதற்கே போங்கப்பா போய் கல்யாணத்தைக் கட்டுங்க. வாழ்வின் ஒவ்வொரு படிகளையும் அனுபவிக்கணும், மற்றவன் சொல்லக் கேட்கக் கூடாது. பிரமச்சரியம், இல்லறம் பிறகு தான் துறவறம் இதைத் தெரியாமலா அப்பவே சொன்னார்கள்.



:)  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் சிங்கிளா வந்தால் தான் அதுக்குப் பெருமை..! சிங்கம் கூட்டமா வந்தா.. அது சிறுமை..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
564402_288454434593397_1579677806_n.jpg

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தனர். அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார் கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளைஞர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள். ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயதுப் பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். அப்படி காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் திரும்பினார் விவேகானந்தர்.

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் காலமானார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம் “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் உடலை திடமாக வைத்திருக்க வேண்டும். அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் விவேகானந்தர்.

39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் அவர் ஓர் உதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் கூறியதுபோல் உடல் வலிமை, மன வலிமை, விடா முயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றை நாம் கடைபிடித்தால் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

 

http://veppamadu.site88.net/library/?q=content/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

The_Fox_and_the_Grapes.jpg

 

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

த‌ம்பி சுபேஸ், நான் உங்க‌ளுக்கு ஆலோச‌னை சொல்ல‌ மிக‌வும் த‌குதியான‌ ஆள். ப‌ல்க‌லையில‌ ப‌டிக்கேக்க‌ "காத‌ல் எதிர்ப்புச் ச‌ங்க‌ம்" எண்டு ஒரு ப‌ம்ப‌ல் அமைப்புக்கு ஸ்தாப‌க‌ராக‌வும் இர‌ண்டே இர‌ண்டு நாள் த‌லைவ‌ராக‌வும் இருந்த‌னான்.(இர‌ண்டு நாளுக்குப் பிற‌கு என்ன‌ ந‌ட‌ந்த‌து எண்டு கேக்க‌ப் ப‌டாது!). இப்ப‌ நான் மூண்டு தின‌ங்க‌ளை மிக‌வும் ச‌ந்தோஷ‌மான‌ நாட்க‌ளாக‌ வ‌ருடா வ‌ருட‌ம் கொண்டாடுகிற‌ன்:

 

1. ஒராள் என‌க்கு ஓ.கே சொன்ன‌ நாள்
2. க‌ல்யாண‌ நாள்
3. என்ர‌ ம‌க‌ளிண்ட‌ பிற‌ந்த‌ நாள்

 

இதில‌ குறிப்பாக‌ மூண்டாவ‌து வ‌ந்த‌ போது தான் க‌ல்யாண‌த்தையும் குடும்ப‌த்தையும் க‌ட‌வுள் ஏன் ப‌டைச்சார் எண்டு யாரோ நெத்தியில‌ அடிச்சுச் சொன்ன‌ மாதிரி இருந்த‌து. விச‌ர்க் க‌தைய‌ள‌ விட்டுப் போட்டு ச‌ம்சார‌ ச‌முத்திர‌த்தில‌ இற‌ங்கும‌ப்பு.

 



 (கணி)
 

:)  :D  :lol:

அதென்ன‌ "க‌ணி"??



 

நெடுக்கு, விவேகான‌ந்த‌ர் எப்ப‌டி இள‌வ‌ய‌தில் இற‌ந்தார்? ப்றொஸ்டேட் புற்று நோயா? பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌த்திற்கும் இந்த‌ வ‌கைப் புற்று நோய்க்கும் தொட‌ர்பு இருக்கும் போல‌ தெரியுதே?

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ். அங்க போறன், இங்க போறன் என்று சொல்லுகின்றீர்கள் இப்படி எத்தனை நாட்கள் தான் போய் கொண்டிருப்பீர்கள்?  வீட்டுக்குள் போய் கதைவைத் திறக்கும் பொழுது ஒரு தனிமை வாட்டுவதில்லையா? அன்பான மனைவி , பிள்ளைகள் வீட்டில் இருந்தால் மனைவி ஓடி வந்து அத்தான் (கணி) என்று ஒரு உதட்டில் முத்தம், பிள்ளைகள் வந்து அப்பா என்று இன்னொரு முத்தம் அட இது அல்லவா "சுவர்க்கம்" வாழ்க்கை வாழ்வதற்கே போங்கப்பா போய் கல்யாணத்தைக் கட்டுங்க. வாழ்வின் ஒவ்வொரு படிகளையும் அனுபவிக்கணும், மற்றவன் சொல்லக் கேட்கக் கூடாது. பிரமச்சரியம், இல்லறம் பிறகு தான் துறவறம் இதைத் தெரியாமலா அப்பவே சொன்னார்கள்.

:)  :D  :lol:

அடுத்தவனை கிணத்திலே தள்ளிவிடுவதேன்றால் அத்தனை பிரியம்?

 
கல்யாணம் கட்டினவர்களின் எத்தனை வீடுகளில் இது நடகின்றது?
  • கருத்துக்கள உறவுகள்

3. என்ர‌ ம‌க‌ளிண்ட‌ பிற‌ந்த‌ நாள்

 

இதில‌ குறிப்பாக‌ மூண்டாவ‌து வ‌ந்த‌ போது தான் க‌ல்யாண‌த்தையும் குடும்ப‌த்தையும் க‌ட‌வுள் ஏன் ப‌டைச்சார் எண்டு யாரோ நெத்தியில‌ அடிச்சுச் சொன்ன‌ மாதிரி இருந்த‌து. விச‌ர்க் க‌தைய‌ள‌ விட்டுப் போட்டு ச‌ம்சார‌ ச‌முத்திர‌த்தில‌ இற‌ங்கும‌ப்பு. ...

baby-diaper-thumbs-up-thumb8744614.jpg

 

 

 

.....ப்றொஸ்டேட் புற்று நோயா? பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌த்திற்கும் இந்த‌ வ‌கைப் புற்று நோய்க்கும் தொட‌ர்பு இருக்கும் போல‌ தெரியுதே?

 

இதில் மருத்துவ ரீதியான உண்மை இருக்கும்போல் தெரிகிறது...

 

மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்போருக்கு இந்நோய் தாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமென்றே இங்குள்ள மருத்துவர்கள் கூற கேள்விப்பட்டுள்ளேன். நாட்டையும், வீட்டையும்,குடும்பத்தையும்

விட்டு, செல்வம் சேகரிக்க வருபவர்கள் பலரும் அடிக்கடி ஊருக்குச் செல்லும் வாய்ப்புகள் குறைவென்பதாலும், கட்டுப்பாடுகள் மிகுந்த நாடுகளில் வாழ்வதாலும் இந்த நிலையெனவும் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

 

அதென்ன‌ "க‌ணி"??

 

நெடுக்கு, விவேகான‌ந்த‌ர் எப்ப‌டி இள‌வ‌ய‌தில் இற‌ந்தார்? ப்றொஸ்டேட் புற்று நோயா? பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌த்திற்கும் இந்த‌ வ‌கைப் புற்று நோய்க்கும் தொட‌ர்பு இருக்கும் போல‌ தெரியுதே?

 'கணி'        - Honey  ஐத் தான், அலை வெக்கத்திலை, அப்பிடி எழுதிப்போட்டா!  பேசாமக் கவனிக்காத மாதிரி விட்டுடுங்கோ!  :D

 

இந்தக் கலியாணம் கட்டப் பஞ்சிப்படுகிற அல்லது அப்பிடிக்காட்டிக் கொள்ளுற ஆக்கள்ள ஒரு பொதுவான ஒரு 'குணம்' இருக்கும்!

 

உடம்பில வலு கவனமா இருப்பினம்!

 

மேல நீங்க சொன்ன விஷயத்தை வாசிச்சாப் பிறகு, ஊருக்கு, அவசரத் தொலைபேசி அழைப்புகள், பறக்கப்போகுது! :D

 

இதுக்குப் பேர் தான் சொல்லுறது,   'நெத்தியடி' எண்டு!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, விவேகான‌ந்த‌ர் எப்ப‌டி இள‌வ‌ய‌தில் இற‌ந்தார்? ப்றொஸ்டேட் புற்று நோயா? பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌த்திற்கும் இந்த‌ வ‌கைப் புற்று நோய்க்கும் தொட‌ர்பு இருக்கும் போல‌ தெரியுதே?

 

அப்படி எல்லாம் ஒரு தொடர்பு இருப்பதாக எனக்கு ஆதாரங்களுடன் இன்னும் தென்படவில்லை அண்ணா. சம்சாரிகள் இடத்தில் தான் அது அதிகம்.. போல உள்ளது..!

 

ஏன் எத்தனையோ சம்சாரிகள் தாலி கட்டின உடன சரிந்து விழுந்து இறந்திருக்கிறார்களே...! அப்ப அதற்காக.. கலியாணத்திற்கும் ஆண்களின் சாவிற்கும் தொடர்புண்டு என்று சொல்லலாமா..?!! :):lol:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உடம்பில தெம்பிருக்கேக்க உப்பிடித்தான் யோசிக்க வைக்கும் சுபேசு. உங்களை உசுப்பேத்தி விட்டுவிட்டு மற்றவர்கள் பேசாமல் கலியாணம் கட்டி தங்கட வாழ்க்கையைப் பாத்துக் கொண்டிருப்பின. கடைசியா நீங்கள் மட்டும் தனிய இருந்து புலம்பவேண்டி இருக்கும்.

 

இப்ப உடம்பில தெம்பிருக்கேக்க உப்பிடித்தான் யோசிக்க வைக்கும் சுபேசு. உங்களை உசுப்பேத்தி விட்டுவிட்டு மற்றவர்கள் பேசாமல் கலியாணம் கட்டி தங்கட வாழ்க்கையைப் பாத்துக் கொண்டிருப்பின. கடைசியா நீங்கள் மட்டும் தனிய இருந்து புலம்பவேண்டி இருக்கும்.

 

கட்டினவுடன் தெம்புபோய், வம்புகள் பல வந்து சேரும், கவனம் சுபேஸ், கொண்ட கொள்கையில் மாறாமலிருக்கவும்

 

சுமே உசுப்பேத்திவிடுகின்றா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் ஒரு தொடர்பு இருப்பதாக எனக்கு ஆதாரங்களுடன் இன்னும் தென்படவில்லை அண்ணா. சம்சாரிகள் இடத்தில் தான் அது அதிகம்.. போல உள்ளது..!

ஏன் எத்தனையோ சம்சாரிகள் தாலி கட்டின உடன சரிந்து விழுந்து இறந்திருக்கிறார்களே...! அப்ப அதற்காக.. கலியாணத்திற்கும் ஆண்களின் சாவிற்கும் தொடர்புண்டு என்று சொல்லலாமா..?!! :):lol:

நெருக்கத்தில் பார்த்த மயக்கமா இருக்கலாம்

 

கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..?
 
எங்களைப் போல சிங்கங்கள் நேர காலம் பார்க்காம களத்தில உலாவிறத  பார்த்த பின்புமா இந்தக் கேள்வி. :D 

 

 
 இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..

அங்கயும் இருந்து யாரும் பெண்களைப் பற்றித்தான் ஏங்கிக் கதைத்திருப்பீர்கள்.

 

 

நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்.
அது அன்பு ராசா. மனுசனிற்கு ஏதும் நடந்திட்டோ என்ற பயம்.

 

 
மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீட்டுக்கு வந்தமா..வெளியால போனமாம்...ஊரை சுத்தினமாம்..எண்டு ஒற்றையாய் திரிகிற வாழ்க்கையில்தான் எவ்வளவு சந்தோசம்..
 
எவ்வளவு காலத்திற்கு இந்த வாழ்க்கை. இதுவும் அலுக்கும்.

நண்பர்களும் அவர்களிற்குரிய நேரம் வந்தவுடன் ஒரு பெட்டியைக் கொழுவிக் கொண்டு போய்

விடுவார்கள்.

 

 

 

 

ஐந்து வயதில ரின் பால் களவெடுத்துக் குடித்ததில் சந்தோசம்.   ஒன்பது வயதில நண்பர்களுடன் களவாக சினிமா போனதில் சந்தோசம். பதின்ம வயதில் 'கலர்'  களுக்குப் பின்னால் அலைவதில் சந்தோசம்..........

 

 முப்பது வயதில  'ரின் பால்' களவெடுத்துக் குடிக்க மனம் வருமா? திருமண வாழ்க்கையும் அது போலத்தான். அது வேறு சுகம். வயதிற்கேற்ப எண்ணங்களும் சிந்தனைகளும் மாறும். 'காலத்தே பயிர் செய்' என்று முன்னோர்கள் அனுபவத்தில் சொன்னார்கள்.

 

அதிகம் யோசிக்காமல் பிடித்த புரிந்துணர்வுள்ள ஒரு பெண்ணாய் பார்த்துக் கைப்பிடித்துக் கொண்டு ஜோதியில் கலவடா தம்பி. :D

 

அதென்ன‌ "க‌ணி"??

 

 

ஹணி  (honey) இப்ப சரியா?

  • கருத்துக்கள உறவுகள்
 'காலத்தே பயிர் செய்' என்று முன்னோர்கள் அனுபவத்தில் சொன்னார்கள்.

 

அதிகம் யோசிக்காமல் பிடித்த புரிந்துணர்வுள்ள ஒரு பெண்ணாய் பார்த்துக் கைப்பிடித்துக் கொண்டு ஜோதியில் கலவடா தம்பி. :D

 

அது முன்னோரின்.. மழைய நம்பிப் பயிர் செய்யுற காலத்தில தான் காலத்தே பயிர் செய். இப்ப பச்சைவீடுகள் உள்ள.. காலம் பூரா பயிர் செய்ய.

 

விட்டா நம்மாக்கள்.. அப்படியே கல்லைக் கலியாணம் கட்டு சாமிக் குத்தம் என்று சொன்னாலும் சொல்லுவாங்க போல இருக்கே..!

 

பிகரும்... சூட்டும் (கோட் சூட்) சரியான அமையனும். இல்ல அலங்கோலமாகிடும்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.