Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!

Featured Replies

வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!


[saturday, 2013-05-25 21:04:22]

burn-pikku-240513-seithy-150.jpg

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.

அங்கிருந்த பொதுமக்கள் பிக்குவை மீட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்கான கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே பிக்கு சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்து விட்டதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=83540&category=TamilNews&language=tamil

 

தொடர்புள்ளது.

 

http://tamilworldtoday.com/archives/12222

 

தயவு செய்து அநாகரீகமாக பதில் எழுத வேண்டாம்.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்வதை என்று வரும்போது விலங்குகளை வதைப்படுத்தி கொல்வது பாவம் என்று அதனை நிறுத்தச் சொல்லி தீ மூட்டிக் கொண்ட இந்த புத்தபிக்கு மீது அனுதாபமே ஏற்படுகிறது. கடந்த காலத்தில் சிங்கள அரசால் தமிழர் பகுதியில் நிகழ்த்தபட்ட அழிப்புகளும் தொடரும் சித்ரவதைகளும் மனிதாபிமான மீட்பு என்று இருந்தவர்கள் விலங்குகளுக்காக தம்மை வருத்துவது வேடிக்கையானது. இருப்பினும் அவருடைய உயிரிழப்பு என்பது உன்னதமான நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவருடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனுக்கு இன்றுவரை  தனது நாட்டில் வேறு மொழியைப்பேசுகின்றது என்பதற்காக ஒரு இனம்

அழிக்கப்படுவது

சீரளிக்கப்படுவது

துன்புறுத்தப்படுவது

உயரோடு புதைக்கப்படுகிறது ...................

என்பது தெரிந்திருந்தும் ஒரு வார்த்தை தன்னும் பேசாதவர்

மிருகங்களுக்காக தன்னையே எரித்தார் என்பது திடீர் ஞானோபாயம் போல் தெரியவில்லை.

 

எந்தவித இரக்கமும் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த பிக்கு நடிக்கிறார் என இங்குள்ள சில மேதாவிகள் சொன்ன மாதிரி இருந்திச்சு :(

ஒரு மனிதனுக்கு இன்றுவரை  தனது நாட்டில் வேறு மொழியைப்பேசுகின்றது என்பதற்காக ஒரு இனம்

அழிக்கப்படுவது

சீரளிக்கப்படுவது

துன்புறுத்தப்படுவது

உயரோடு புதைக்கப்படுகிறது ...................

என்பது தெரிந்திருந்தும் ஒரு வார்த்தை தன்னும் பேசாதவர்

மிருகங்களுக்காக தன்னையே எரித்தார் என்பது திடீர் ஞானோபாயம் போல் தெரியவில்லை.

 

எந்தவித இரக்கமும் வரவில்லை.

ஆம் எனக்கும் எந்தவிதமான இரக்கமும் வரல ..................இப்படியான சந்தர்ப்பங்களில் வரவும் கூடாது என அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன் .................ஏனனில் என்னையும் ,என் இனத்தையும் இழிச்சவாயன்கள் என்ற கோணத்தில் மற்றவர்களை பார்க்க வைத்ததே இந்த இறக்க குணம் ....................அது வரவேண்டிய நேரத்தில் வரட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நடிக்கப் போன இடத்தில் யாரே உண்மையான பெற்றோலை ஊத்திட்டாங்கள் போல..!

 

இருந்தாலும் ஒரு மனித உயிரின் இழப்பு.. வேதனையானது..! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தன்னை அழித்துக் கொள்வதால், உலகத்துக்கு ஏதும் நல்லது நடக்குமெனின், நான் அந்த மரணத்தை வரவேற்கவே செய்வேன்!

  • தொடங்கியவர்

உயிர்வதை என்று வரும்போது விலங்குகளை வதைப்படுத்தி கொல்வது பாவம் என்று அதனை நிறுத்தச் சொல்லி தீ மூட்டிக் கொண்ட இந்த புத்தபிக்கு மீது அனுதாபமே ஏற்படுகிறது. கடந்த காலத்தில் சிங்கள அரசால் தமிழர் பகுதியில் நிகழ்த்தபட்ட அழிப்புகளும் தொடரும் சித்ரவதைகளும் மனிதாபிமான மீட்பு என்று இருந்தவர்கள் விலங்குகளுக்காக தம்மை வருத்துவது வேடிக்கையானது. இருப்பினும் அவருடைய உயிரிழப்பு என்பது உன்னதமான நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவருடைய ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

இடைஞ்சலான செய்தி. 

 

மனதை திறந்து கருத்து எழுதி, எவரும் எதையும் ஒழியாமலும் எவரையும் புண்படுத்தாமலும் இருக்க வழி வகுத்துவிட்டீர்கள்.

 

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Spoiler

 



தயவு செய்து அநாகரீகமாக பதில் எழுத வேண்டாம்.

 

 

கண்ணீர் அஞ்சலிகள்.

 

எங்களுக்கு வந்தா இரத்தம், மற்றவனுக்கென்றா தக்காளி சட்னி  :)
நாங்க தீக்குளிச்சா தியாகத்தின் உச்சம், மற்றவன் செஞ்சா முட்டாள்தனம் :)

 

எங்களுக்கு வந்தா இரத்தம், மற்றவனுக்கென்றா தக்காளி சட்னி  :)

நாங்க தீக்குளிச்சா தியாகத்தின் உச்சம், மற்றவன் செஞ்சா முட்டாள்தனம் :)

ஆம் இப்படியே திருப்பி பாருங்கள் ...................எங்களை அழிக்கும்போது ...எங்களின் அழிவின்போது ...............அவன் என்ன செய்யவேண்டுமோ அதை அவன் செய்தானா ..............நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்தோமா ...............ஒன்றுமே புரியலையா ......................அப்படித்தான் உங்கள் பதிவும் உள்ளது .............நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பிக்கு நடிக்கிறார் என இங்குள்ள சில மேதாவிகள் சொன்ன மாதிரி இருந்திச்சு :(

 

இது செய்வினையா?

 
செயற்பாட்டு வினையா?
என்றுதான் எழுதி இருந்தார்கள்............. செயற்பாட்டு வினை என்றால்? பிக்குவை எப்படி வெளியில் விட முடியும்?

எங்களுக்கு வந்தா இரத்தம், மற்றவனுக்கென்றா தக்காளி சட்னி  :)

நாங்க தீக்குளிச்சா தியாகத்தின் உச்சம், மற்றவன் செஞ்சா முட்டாள்தனம் :)

ஒரு அப்பாவி பிக்கு தனது உயிரை தியாகம் செய்திருக்கிறார். அதுவும் ஒரு உன்னத கொள்கைக்கு.

 
இதற்கு கூட உங்கள் மனம் இரங்காதா?
பிக்குவின் மரண வீட்டிலும் ................. அதே சட்னியும் சாம்பாருமா?
சிங்களவனுக்கு என்றாலும் பிரயோசனம் என்று நினைத்தேன் (பிக்குவை).
  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சுட்டாலும் வெண்மைதரும்.

 

சூரியத் தேவனால் சுடப்பட்ட பல சங்குகள் இன்று உலகில் வெண்மை தந்து ஒளிவீசிவருகின்றமையைக் காணமுடிகிறது. யாழ்கள அங்கத்தவர்கள் பலரிடமிருந்தும் அந்த ஒளியைக் காண முடிகிறது. இருந்தும் சுடப்பட்ட சில சங்குகள் சுண்ணாம்பாகிப் போய்விட்டதையும் காண முடிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் புத்த பிக்குகளின் மந்திபுத்தி பற்றிய சில விபரங்கள்.

http://www.google.de/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&rlz=1R2WQIB_deDE531&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=OKqhUeqBK_Ku4QT1_YHACA&sqi=2&ved=0CFUQsAQ&biw=1680&bih=874

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.
இந்தப் பிக்குவைப் பின்பறி, மற்ற பிக்குகளும் தீக்குளிக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சுட்டாலும் வெண்மைதரும்.

 

சூரியத் தேவனால் சுடப்பட்ட பல சங்குகள் இன்று உலகில் வெண்மை தந்து ஒளிவீசிவருகின்றமையைக் காணமுடிகிறது. யாழ்கள அங்கத்தவர்கள் பலரிடமிருந்தும் அந்த ஒளியைக் காண முடிகிறது. இருந்தும் சுடப்பட்ட சில சங்குகள் சுண்ணாம்பாகிப் போய்விட்டதையும் காண முடிகிறது.

 

ஏனெனில் சூரிய தேவன்.. வெளிர் சங்கில் பட்டால் வெள்ளொளி தெறிப்படையவும்.... கருஞ்சங்குகளில் பட்டால் வெள்ளொளியை அகத்துறிஞ்சவும்... செய்து அந்தக் கருமையை வெளிக்காட்டவும் கற்றுத் தந்துள்ளார்.

 

வெளிர் சங்கை வெண்மை என்று சொல்ல எந்த தயக்கமும் தேவையில்லை. அதேவேளை கருஞ்சங்குகளை வெளிர் சங்கென்று இனங்காட்டி பிழைக்க வேண்டிய தேவையும் சூரியத் தேவனின் வெள்ளொளிப் பிள்ளைகளுக்கு.. இல்லை..! :icon_idea::lol:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உடல்கள் வரிசையில் உயிருக்கு தவித்துக் கொண்டிருக்கும் போது தன் மடியில் நாய் ஒன்றைக் கிடத்தி அதன் காயத்துக்காய் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஒரு வைத்தியனின் மிருகாபிமானதை வியந்து கொண்டிருக்கும் இந்த வகைக்குரிய ஆச்சரியம் மனித உணர்விற்கு சொந்தமானதா என்றே ஆச்சரியப்படுகின்றேன்!
ஒன்று மட்டும் புரிகின்றது. அன்று இவர் மனித உயிர்களுக்காக தீக்குளித்திருந்தால், சிங்களத்தேசம் இன்று இவரின் மனிதாபிமானத்தை வணங்குவது போல், பதிலாக இவரது உயிர்தியாகத்தை தூசித்து குப்பையில் வீசி இருக்கும்!

மனிதவதையின் இரத்தம் சுமக்கும் வீதிக்கு மிருகவதை எதிர்ப்பு ஊர்வலம் நீதி வளங்குமா? இல்லை நல்ல பேரை வளங்க்குமா?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு வந்தா இரத்தம், மற்றவனுக்கென்றா தக்காளி சட்னி  :)

நாங்க தீக்குளிச்சா தியாகத்தின் உச்சம், மற்றவன் செஞ்சா முட்டாள்தனம் :)

 

பெற்றவளின் சோற்றுக்குத் திருடுவதும், விபச்சாரியின் வாய்ப்பிற்கு திருடுவதும் உணர்வுகளின் தரத்தால் ஒன்றில்லையே!

423952_607823342569253_314657866_n.jpg

 

தமிழரை நரபலியாடிய மிருகங்கள் மிருகவதையைக் கண்டிக்கின்றதா?(ஆசிரியர் பார்வை).

By writter

Posted on 26 May 2013 at 7:38am

 

monks_fighting-colombo-telegraph.jpg

இலங்கையில் பௌத்த துறவிகளின் தெருச்சண்டித்தனம்

 

 

மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு முன்னால் தனக்கு தானே தீமூட்டி எரிந்த பௌத்த மதகுரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் பௌத்த துறவி ஒருவர் தீமூட்டித் தற்கொலை செய்யமுற்பட்டுள்ளார்.இவரை தீயில் எரிந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.சிகிச்சை பலனின்றி அந்தப் பௌத்ததுறவி நேற்று உயிரிழந்துள்ளர்.

மிருகங்களைக் கொல்லக்கூடாது, சித்திரவதைசெய்யக்கூடாது, வதைக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் குறித்தபிக்கு தனது உயிரைமாய்த்துள்ளார்.

ஆனால் இச்சம்பவத்தினைக் கடந்த நான்கு வருடங்கள் பின்நோக்கிப் பார்ப்போமாயின் இலங்கைத்தீவில் சிங்கள, பௌத்த பேரினவாதிகளால் தமிழ் மக்கள் கதறக்கதறக் கொல்லப்படடுள்ளனர், பெண்களும் சிறுவர்களும் வதைக்கப்பட்டுள்ளனர், பாலியல் கொடுமைகள் நடைபெற்றுள்ளன, தமிழ் இனத்தினை முற்றாக அழிப்பதற்காக சுமார் இரண்டு இலட்சம் வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர்.

இந்த அக்கிரமங்களையும் கொடூரங்களையும் செய்வதற்கு சிங்கள பௌத்த துறவிகள் சிங்கள இராணுவத்துடன் இணைந்து களத்தில் செயற்பட்டுள்ளனர்.

பிறப்பால் இந்துவான சித்தாத்தர் என்ற புத்தபொருமானால் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பௌத்தம் என்கின்ற இந்த மார்க்கத்தில் அகிம்சை, கர்மம், சம்சாரம், ஆத்மன், தர்மம, நிர்வாணம், புத்தம், மீள்பிறவி ஆகிய எண்ணக்கருக்களுக்கமைய நற்காட்சி,நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை. நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் ஆகிய எட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் இந்த மர்க்கத்தினைப் பின்பற்றுகின்ற பெரும்பாலான சிங்கள பௌத்தர்களும் பௌத்த துறவிகளும் பௌத்தம் கூறுகின்ற விதிமுறைகளைப் சிறிதளவேனும் பின்பற்றுவதில்லை.

மாறாக இந்தமார்க்கத்தினைக் காட்டி இலங்கையிலிருந்து தமிழர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபடுகின்றன.

பௌத்தம் என்ற போர்வையில் தமிழ்மக்களுக்கான வாழ்வியல் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

பௌத்த மார்க்கக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்படாத சிங்கள கடும்போக்குக் கொள்கையுடைய சில துறவிகள் அரசியல்வாதிகளாகவும் மாறியுள்ளனர்.

இவர்கள் தமிழ் மக்களுக்கு இலங்கையில் உரிமையில்லை என்ற ஒரேயொரு கொள்கையுடன் செற்பட்டுத் தமிழர்களை அழிக்கின்றனர்.

இவ்வாறு மதவாதமும் இனவாதமும் கக்குகின்ற சிங்கள, பௌத்த துறவிகள் இலங்கையின் அரசியலை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த நிலையில் பௌத்ததுறவி ஒருவர் மிருகவதைகளைக் கண்டித்து தீக்குளித்து உயிரிழற்துள்ளார்.

தமிழர்கள் கண்ணுக்கு முன்பாக வகை தொகையின்றிக் கொல்லப்படும் பொழுது தியானத்திலிருந்த பௌத்த துறவிக்கு மிருகவதைமட்டும் ஞானக்கண்ணில் அகப்பட்டுள்ளது போலும்…ஊனக்கண்ணால் பார்க்க முடியாததை ஞானக்கண்ணால் பார்த்துள்ளார்.

உண்மையில் பௌத்த, சிங்களத்தின் பிடிக்குள் அகப்பட்டுள்ள தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டள்ளது. தமிழர்களைப் பௌத்த, சிங்களம் தொடர்ந்தும் கொல்கின்றது.

இந்த நிலையில் பௌத்த துறவிகள் பொதுபல சேன போன்ற அமைப்புக்களை உருவாக்கி முழு இலங்கையும் பௌத்த சிங்களவருக்கே செந்தமானது எனப் பறைசாற்றுகின்றனர்.

சிங்கத்தின் கோரப்பிடிக்குள் சிக்கிய தமிழ் மக்கள் தமிழத் தேசிய உணர்வினையும் விடுதலை வேட்கையினையும் சுமந்தவர்களாக தினமும் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மீட்பாரில்லாத இனமாக தம்மைத்தாமே பாதுகாக்க முடியாதவர்களாக தவிக்கின்ற எமதுமக்களை மீட்க மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதை சிங்கள, பௌத்த பேரினவாதம் எமக்குக் காட்டுகின்றது.

எனவே எம்மை நாமே பாதுகாக்கக்கூடிய இராணுவபலத்துடன் எமது போராட்டத்தினை நாம் மீண்டும் விரைவாக ஆரம்பிக்க வேண்டும். இதுவே இன்றய காலத்தின் தேவையாகும்.

ஓற்றுமையும் தேசிய உணர்வுமே எமக்கும் எமது இனத்திற்கும் பலமாக அமையும்.

-இராவணன்-

 

http://ttnnews.com/?p=2014

 

  • தொடங்கியவர்

இந்துக் கோவில்களில் வேள்விகள் நடக்கின்றன. இதற்கு அறிவியல், சரித்திர, சமய விளக்கங்கள் பல இருக்கின்றன. அறிஞர்கள், வேடுவர்களாக மிருகங்களை உண்டுவந்த ஆரிய குலத்தவரின் தலைவன் உருத்திரன் போன்றோர், தமது எதிரிகளை வென்ற போது அவர்களின் கணகில்லாத கால்நடைகளை கவர்ந்து கொண்டுவந்து, பராமரிக்க வழி தெரியாமல், ஓரிரு நாட்களிலேயே அவற்றை கொன்று தின்று வெற்றியை கொண்டாடிய Feast நாட்களாக இருக்கலாம் இந்த வேள்விகள் என்று நினைக்கிறாகள். இன்று இவற்றை நாம் தொடர்ந்து கொண்டாடும் போது, ஜீவகாருண்ணியம் மதிக்கப்படாததோடு, போரில் தோற்றவன் வென்றவனின் வெற்றி நினைவு நாட்களைக் கொண்டாடுவது மனம் வருந்த தக்க ஏமாற்றமும். இவை இன்று சமூகத்தில் மூட நம்பிக்கையின் நிலையை அடைந்துவிட்டன. ஆனால் இவற்றை நீக்க சமய விழிப்பு, மதமாற்றங்கள்  தேவை இல்லை. கல்வி, சட்டம், நாகரீக முதிர்வு மட்டும்தான் தேவை. இந்த முறைகளால், மேற்கு நாடுகளில், இதை விட பலவற்றை எவருக்கும் நோகாமல் நீக்கிவைத்துவிட்ட்டர்கள். மனநிலை குழம்பினாலோ, அல்லது தமது நிரலுக்கு ஏற்ப நடக்காவிட்டாலோ விச் கண்ட் என்று கூறி பெண்களை துன்புறுத்தி கொலை செய்வது அமெரிக்கா சுதந்திரம் அடிந்த பின்னர் கூட நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தவரான அமெரிக்கர் தமது மதத்தை அழிக்காமல்  இவற்றை திருத்திக்கொண்டனர்.

 

அதே மாதிரி வடக்கு, கிழக்கில் இருக்கும் இந்த இந்துகளின் குறைபாட்டை திருத்த அவர்களேதான் இதற்கு பொருத்தமானவர்கள். அதிகாரப்பரவல் அவர்களின் கைகளுக்கு வந்தவுடன் இவற்றை எப்படி கையாள வேண்டும் என்று அவர்களுக்கிடையில் இருக்கும், அறிஞர்கள், அரசியல், சமய, சமூக வாதிகளிடம் ஒரு நல்ல விளக்கம் இருக்கிறது.  இதை நாட்டு அதிபர்கள் கோவில் பூசாரிகளை அழைத்து அலரிமாளிகையில் வைத்து விருந்து என்ற பேரில் மிரட்டி அனுப்பியோ, அடாவடி மந்திரிகள்  கோவிலுக்கு கொண்டுவரபட்ட மிருகங்களை தாம் பறிமுதல் செய்து  விற்று தங்களுக்கு பணம் சம்பாதிப்பதாலோ திருத்த முடியாது. இந்துகளின் வேள்வியில் குறை உள்ளது என்று ஒரு போலிச்சாட்டை வைத்து அவர்களை அழிக்க அல்லது பௌத்தர்களாக மாற்ற இனக்கலவரங்களை  துண்டும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவை அல்ல. 

 

இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்களில்  சிலர் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்(இது மற்றைய மதங்களில் அறவே இல்லாததொன்றல்ல). இது அந்தந்த நாட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனை மட்டுமே. ஆனால் முஸ்லீகள் மிருக வதைத் தீவிர வாதத்தில் ஈடுபடுவதாக அறியப்படவில்லை. அவர்கள், ஒரு மிருகத்தை உணவுக்காக கொல்ல்லும் போது அதன் அடிப்பை உரிமையாளானான அல்லாவிடம் அதற்கான அனுமைதியை, மன்னிப்பை, பெற்றுக்கொண்ட பின்னர் செய்யும்படி மதத்தால் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காராணமாக முஸ்லீம்களால் மிருகவதை நடக்கிறதாயின் அவர்களின் மதத்லைவர்களிடம் அந்த செய்தியை எடுத்து சென்றாலே மிருகவதை தடுக்கப்பட்டுவிட போகிறது. இலங்கையில் காணப்படும் கலால் எதிர்ப்பு, எந்த இனத்தவரிடமிருந்து சிங்கள மக்கள் இறைச்சி வாங்குவது என்ற போட்டியில்த்தான் எழுந்தது என்றது அப்பட்டமான உண்மை. இதில் இருப்பது இனத்துவேசம், வியாபாரப்போட்டி மட்டுமே. புத்தர் கூட மாமிசம் புசித்தவராக இருக்கும் போது இலங்கையின் பெரும் பான்மை இனத்தவர் தாமும் மாமிசம் பூசித்துக்கொண்டு, எப்படி முஸ்லீம்களுக்கு மட்டும் கொன்று தின்னக்கூடாது என்று போதிக்க முடியும்?  இல்லையேல் கலாலுக்கான எதிர்ப்பு கடல் சார் விலங்குகளுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். எதோஒரு காரணத்துக்காக முஸ்லீம்கள் இதில் அதிகம் அக்கறை காட்டாததால் கலால் எதிர்ப்பாளர்கள் இந்த பக்கம் தமது எதிர்ப்பை காட்டவும் தயங்குகிறார்கள். எனவே முஸ்லீம் பகுதிகளில் மீன்பிடிதொழில் மட்டும் சமயப் பேரால் எதிர்ப்புகளை சந்திக்கத் தொடங்க இல்லை.    

 

இன்றைய காலங்களில் அரசியலை, இந்து மத கொள்கைகளை வைத்து கையாண்ட பிரபல நபர் காந்தி. அவர் போத்தித்தது அகிம்சை. இது இன்று எல்லா மதங்களாலும் அவர்களின் மதங்களுக்கேற்ப மாற்றப்பட்டு ஏற்கப்பட்டுவிட்டது. அது தற்கொலை போன்ற வன்முறைகளை எதிர்க்கிறது. எனவே அரசியலை தமது மதங்களால் கையாளுவோருக்கு, தற்கொலை ஒரு ஏற்கப்பட்ட தெரிவல்ல.

 

ஆனால் இலங்கையில் மதம் அரசியலாக்கப்படிருக்கிறது. சிறுபான்மை மதங்களை அவைகளின் இருப்பிடங்களில் இருந்து எடுத்து வீசி அழிக்க காரணங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன. பெரும்பான்மை இன மதத் தீவிர வாதிகள் சிறுபான்மை மதத்தினரின் 2000, 3000 ஆண்டுகாலமான அதே பழக்க வழகங்கங்களுடன்அவர்களுடன்  ஒன்றாகவே வாழ்ந்துமுடிய இன்று அதே பழக்க வழகங்களை, அவர்களின் மத சம்பிரதாயங்களை தமது மதத்துக்கெதிரான தீவிரவாதமாக காட்டி , ஜீவகாருண்ணியமற்ற நடத்தையாகக் காட்டி இனக்கலவரங்களை தூண்டத்தக்க தக்க வன்முறை முயற்சிகளில் இறங்குகிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. 

 

 

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பிக்கு தீக்குளித்து இறக்கும் அளவிற்கு அவருக்கு மிருகங்கள் மேல் அன்பிருக்கின்றது. சிலவேளை தமிழர்களை மிருகங்களைவிடக் கீழான நிலையில் உள்ளதாகக் கருதியதால் தமிழர்கள் கொத்து கொத்தாக அழிக்கப்பட்டபோது அக்கறை இல்லாமல் இருந்திருக்கலாம்.

எனினும் சிங்கள புத்த பிக்கு என்பதால் அவரின் மரணத்தை ஒரு சிங்களப் பிக்கு செத்தான் என்பதால் தமிழர்களின் எதிரிகளில் ஒருவர் குறைந்துவிட்டதாகக் கருதும் மனப்பான்மை நம்மில் சிலருக்கு வருமளவிற்கு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே விரிசல் வந்துவிட்டது அல்லது சிங்கள இனவாதிகள் தமிழர்களை வெறுப்பது போலவே தமிழர்களிடையேயும் இனவாதம் பெருகி சாதாரண சிங்களவர்களையும் வெறுக்குமளவிற்கு வந்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த பிக்குவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவரின் கொள்கையை  எத்தனை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என அறிய ஆவல்.இல்லை இவரும் ஒரு அரசியல் போடுதடியா??
 
பிரிட்டனிடம் சுதந்திரம் அடைந்த பின் பல தமிழர்கள் சிங்களவர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள்.அதாவது மிக கேவலமாக, கொடூரமாக கொதிக்கும் தாருக்குள் குழந்தைகளை போட்டு கொல்லியுள்ளார்கள். ஏதாவது ஒரு தருணத்தில் மிருகவதைக்கு எதிராக தீக்குளித்த சிங்களவர் போல் ஒரு சிங்களவர் மீண்டும் நினைவு படுத்துகிறேன் ஒரு சிங்களவர் தீக்குளித்து உள்ளாரா? இல்லை எனில் ஏன் இப்போ மட்டும் தீக்குளிக்க வேண்டிய மிக அவசியம் ஏற்பட்டது??
 
புலிகளின் ஆயுத போராட்டம் தொடங்கியது கடந்த 30 வருடங்கள் மட்டுமே.அதற்கு முதல் ஏறத்தாள 25 வருடங்கள் தமிழர்கள் அகிம்சை வழி போராட்டமே செய்தனர்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வீட்டில் நடக்கும் இழவுகளுக்கே என்னால் அழமுடியவில்லை

இங்கு ஒரு புத்த பிக்கு  தீக்குளிப்பு 

 

 

நோ கொமென்ட்ஸ்  

 

பௌத்த தேரர் மீது தீ மூட்டப்பட்டதா?

 

இந்திர இரத்தின தேரர் தீக்குளித்துக்கொண்டாரா அல்லது அவர் மீது தீ மூட்டப்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

அத தெரன வெளியிட்டுள வீடியோ காட்சியில் வெள்ளை நிற ஷேட் அணிந்த நபரொருவர் பிக்குவுக்கு தீ வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

 

 

 

http://www.jaffnamuslim.com/2013/05/2_27.html

 

பி.கு:

 

முதல் காணொளியில் முதல் 9 செக்கனும் பாருங்கள்
இரண்டாவது காணொளியில் 2.00 இலிருந்து 2.05 வரை பாருங்கள்.

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.