Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனின் தனித்துவமான அடையாளங்களைத் தேடியழிக்கத் தொடங்கிய 'கரிநாள்'!

  • கருத்துக்கள உறவுகள்

இனத்தின் இருப்பிற்குத் தீயிட்ட முதல் நாளா
இனத்தை அழிப்பதற்கு சுழியிட்ட முதல் நாளா
அனைத்தும் இழந்துவிட்ட அகதி இனமே
யுகத்திடம் விடுதலையை கேட்டுப் பெறமுடியாது
அகத்தில் விடுதலையை விதைக்கின்ற நாளாக்கி
எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் நாம் எழுவோமா?

புளொட்டின் தாக்குதலும் யாழ்.நூலக எரிப்பும்! அன்று நடந்து என்ன?

BurntLibrary1.jpg
வைகாசி 31, 2013
1981 மே 31 அன்றுதான்மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தல் இறுதிப்பிரசார நாள். யாழ்.நாச்சிமார் கோவிலடியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் இறுதிப்பிரசாரக்கூட்டம் நடத்த ஏற்பாடாகியிருந்தது.தமிழ் ஆயுதப்போராளிககள் அத்தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரியிருந்தனர்.இந்தக்கூட்டத்தில் தாக்குதல் ஒன்றை நடத்துவதன் மூலம் மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் தடுக்கமுடியும்என் உமா மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய அமைப்பான புளொட் முடிவெடுத்தது.
BurntLibrary.jpg

அன்று

blo.jpg இன்று

கூட்டணியின் கூட்டம் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்தது.பொலிஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சைக்கிள்களில் சில இளைஞர்கள் வந்திறங்கினர்.வந்திறக்கிய வர்களில் மாணிக்கம் தாசன்(பின்னாளில் புளொட் இராணுவ்பொறுப்பாளராக இருந்தவர்) றொபேட் (83 வெலிக்கடை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்) ஆகியோர் பொலிஸாரை நோக்கிய சரமாரியாகச் சுட்டனர்.இரண்டு பொலிஸார் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர்.

manikkadasan-guards.jpg

மாணிக்கதாசன் அவரது குழுவினருடன்

கூட்டத்தில் இருந்தவர்கள் பரபரப்பாயினர்.மேடையில் இருந்த யாழ்.மேயர் விசுவநாதன்(தற்போதைய நாடுகடந்த தமிழீழ  அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் தந்தை) அதை பட்டாசு என நினைத்து பட்டாசுச்சத்தம் தான் பயப்படவேண்டாம் என ஆதரவாளர்களுக்குச்சொல்லிக்கொண்டிருந்தார். எனினும் பின்னர்தான் தெரிந்தது விபரீதம். ஆம் இந்தத்தாக்குதலைத்தொடர்ந்துதான் யாழ் நகரமே பற்றிஎரிந்தது!

மேலதிகமாக விரைந்த சிங்களபொலிஸ்படை நாச்சிமார் கோவிலடி தொடக்கம் யாழ் நகர் வரையான  பெரும்பாலான கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்து கொளுத்தினர்.யாழில் இருந்து வெளியான ஈழநாடு பத்திரிகை காரியாலயமும் சேர்ந்து எரிக்கப்பட்டது.யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.யோகேஸ்வரனும் அவர் மனைவி சறோஜினி யோகேஸ்வரனும் பின்வாசல் வழியாக ஓடித்தப்பபினர். கூட்டணி அலுவலகமும் எரிக்கப்பட்டது.யாழ் நகரேமே எரிந்து கொண்டிருந்தது.

V_Yogeswaran.jpg

யோகேஸ்வரன்

9193939.jpg சறோஜினி

இந்தவேளையில் தான் யாழில் தேர்தல் பணிக்காக வந்திருந்து யாழ் சுபாஸ் விடுதியில் இனவாதிகளும் அமைச்சர்ளுமான் காமினி திசநாயக்க சிறில் மத்தியு ஆகியோர் குண்டர்கள் சகிதம் தங்கியிருந்தனர்.யாழ் நகர் எரிவதை கண்குளிரக்கண்டவர்கள் திருப்திப்படவில்லை.அவர்களின் கண்களை தமிழர்களின் கல்விக்பொக்கிசமான யாழ் நுாலகம் உறுத்தியது. அநுராதபுரத்திலிருந்து யாழ் வந்தபெற்றோலியக்கூட்டுத்தபனத்துக்குச்சொந்தமான பெற்றோல் நிரப்பிய பவுஸர்கள் நுாலகத்தை நோக்கித்திருப்பபட்டன.ஆசியாவின் மிகப்பெரிய நுாலகங்களில் ஒன்றும் தமிழர்களின் பெரும் சொத்துமாகிய யாழ் நுாலகம் இனவாத்தீக்கு சாம்பலானது.

இன்றுடன் 32 ஆண்டுகள் கடந்தாகிவிட்டது! 

z_p01-great.jpg

காமினி திசநாயக்க

குறிப்பு- இதில்இடம்பெற்ற பெயர்களும் பின்னரான அவர்களின் மரணங்களும் மாணிக்கதாசன் – 1999 இல் வவுனியாவில் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். யோகேஸ்வரன்- 1989 .ல் அமிர்தலிங்கத்துடன் சேர்த்து கொழும்பில் புலிகளால் கொல்லப்பட்டார் சறோஜினி யோகேஸ்வரன் -1998 இல் யாழ்.மேயராகஇருந்த வேளையில் புலிகளால் கொல்லப்பட்டார் காமினி திசநாக்கா- 1994 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் கொழும்பு தொட்டிலங்க பகுதியில் புலிகளின் தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

http://urumal.com/archives/புளொட்

ம்ம்    வரலாறு.......

  • கருத்துக்கள உறவுகள்

துக்கத்திற்கான நாள்..!

இதில் சம்பந்தப்பட்ட சிறில் மத்தியூ ஒரு மலையாளி என்று விக்கிப்பீடியா சொல்லுதே..

http://en.wikipedia.org/wiki/Cyril_Mathew

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதும் இந்த மிருகங்களுடன் பேசிக்கொண்டு இருப்பது தான் எமது இனத்தின் சாபக்கேடு.

ஒரு சிறு திருத்தம் நூலகம் எரிக்கப்ட்டது யூ ன் 1 ம் திகதி 

31ம் திகதி நள்ளிரவு கடந்தமுதலாம் திகதி அதிகாலை 1மணிக்கும் 2மணிக்கும் இடையில் நூலகத.தக்கு தீவைக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கல்வியறிவும் அந்த அறிவியல் சிந்தனையும், சிங்களவரை விடவும் தமிழர்களைத் தரமுயர்த்தி வைத்துள்ளதைத் சகிக்கமுடியாத சிங்களம், தமிழர் கல்விக்கான மூலாதாரங்களை அழிக்கத் திட்டமிட்டது. அதன்வழி யாழ் நூலகத்தை அழிக்கும் பொறுப்பும் சிறில் மத்யூ மற்றும் காமினி திசநாயக்கா என்ற இரண்டு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பின்பு ஜனாதிபதியாக வந்த ரணசிங்க பிரேமதாசாவே வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளிவந்தன. யாழ் நூலகம் அழிக்கப்பட்டமை, பொலிசார் சுட்டப்பட்டதனால் ஏற்பட்ட தற்செயலான நிகழ்வல்ல. தமிழின அழிப்பிற்காக ஆழ்ந்து முன்னரே திட்டமிடப்பட்டு சந்தற்பத்துக்காகக் காத்திருந்து நடாத்தப்பட்ட ஒரு நிகழ்வு.

நவம் அவர்கள் தெரிவித்துள்ளபடி மே31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னரே நூலகம் எரிக்கப்பட்டதாக அன்றைய செய்திகளைப்படித்த ஞாபகமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் பொக்கிஷம்

இனத்துவேசிகளால் அழிக்கப்பட்ட தினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் பொக்கிஷம்

எரித்தவர்களை எரித்த நிம்மதி

எரித்தவர்களை

எரித்தவர்களுக்கு நன்றி

தமிழர்ட்களின் அறிவுகளஞ்சியம் அழிக்கப்பட்ட துன்பமான நாள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாளில் இந்தச் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியில்.. ஒரு கிறிஸ்தவ அடிகளார் தெய்வ பதம் எய்தியதாக நூல்களில் படித்திருக்கிறேன். தாவீது அடிகளாரின் வரலாற்றில் அது உள்ளது என்று நினைக்கிறேன். அந்தளவுக்கு இந்த நூலகத்தை அவர் நேசித்திருக்கிறார். அப்படியான தமிழ் உள்ளங்களையும் இந்த நூலகம் உருவாக்கி இருந்துள்ளது.

இதன் இடம்பெயர் நூலகமாக இயங்கிய நல்லூர் நூலகம்.. எங்களத்து தேடலுக்கும் பயன்பட்டுள்ளது. ஆனால்... இந்த நூலகத்தில் இருந்து நேரடிப் பயனை இதுவரை அனுபவிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை சிங்களம் எமக்கு விட்டு வைக்கவில்லை..!

இந்த நூலக எரிப்பினால் இழந்த கட்டடத்தை வெண்டாமரையும் செங்கல்லும் திட்டத்தின் மூலம் சந்திரிக்கா - ரத்வத்தை கூட்டணி சரிக்கட்டி இருப்பதாக எண்ணிக் கொள்ளலாம்.. ஆனால் இழந்து போன நூல்கள் விட்டுச் சென்ற வலியும்.... தூண்டப்பட்ட இனவெறிப் பகமையையும் என்றும் ஆறாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நினைவு கூறத்தக்க வகையில் ஈழத்தமிழர் ஏதாவது செய்யவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலகத்தில் நேரம் போவதே தெரியாமல் எத்தனையோ நாட்கள் இருந்திருக்கிறேன்.அதை நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சில் அந்தத் தீ மீண்டும் கொழுந்து விட்டு எரிகிறது. எப்பேர்பட்ட நூலகம் அது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தாவீது அடிகளார் 28 இற்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவர்.இந்த நூலகத்தின் உருவாக்கத்திற்கு பெரிதும் உழைத்தவர்.

பல கையெழுத்துப் பிரதிகள்.(ஆறுமுகநாவலர்) உட்பட எரிந்து சாம்பலாகின.

நானும் அடிக்கடி போகும் இடமது.இரண்டாம் மாடியில் இருந்து காற்று வேறு வாங்கியிருக்கின்றேன் .(புகை பிடித்ததாகவும் ஞாபகம் )

மாவட்ட சபை தேர்தலை பகஸ்கரிக்க சொல்லி இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்தன ,அதையும் மீறி தேர்தலில் பங்குபற்ற கூட்டணி முடிவு செய்தது .காசி ஆனந்தன் மேடைகளில் "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் ' மேடைக்கு மேடை பேசிவந்தார் .இரண்டு போலீஸ்காரர் சூட்டுடன் நாச்சிமார் கோவில் தேரும் எரிக்கப்பட்டு ஆமி போனவன் வந்தனுக்கு எல்லாம் அடித்தான் .அடுத்த நாள் அரசுக்கு சொந்தமான சில கடைகள் பொதுமக்களால் அடித்து உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன .குறிப்பாக வெலிங்கடன் தியேட்டருக்கு அருகில் இருந்த கட்டிட பொருட்கள் விற்கும் நிலையம் .யாழ்பாணத்தில் வெலிங்டன் தியேட்டர் அருகிலேயே மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் .உடனே ஊரடங்கு சட்டம் போட்டார்கள் .அன்று இரவுதான் யாழ்பாண நூலகம் தீ வைக்கப்பட்டது என நினைக்கின்றேன் .

ஊரடங்கு சட்டம் எடுபடவில்லை நானும் எனது இரு நண்பர்களும் பொழுது போகாமல் ஒருக்கா யாழ்பாணம் போய் பார்ப்போம் என்று இரண்டு சயிக்கிளகளில் புறப்பட்டோம் .ஆமி,போலிஸ் எவரையும் வீதியில் சந்திக்கவில்லை .நூலகம் புகைந்துகொண்டிருந்தது .துரையப்பா ஸ்டேடியத்தில் ஆமிக்காரன் பெரிய சத்தத்துடன் பாட்டு போட்டு ஆடிக்கொண்டுஇருந்தான் .சிறிது பயம் வந்துதுவிட்டது .உடனே வீடு திரும்பினோம் .என்னுடன் வந்த நண்பன் வெலிங்டன்  தியேட்டரடியில் கண்ணாடிகள் எல்லாம் உடைத்து கொள்ளையிடப்பட்டிருந்த அந்த கடைக்குள் போய் பார்த்துவிட்டு வருகின்றேன் என்று சயிக்கிளை ஒரு மரத்துடன் சாத்திவிட்டு உள்ளே போனான் .போன நண்பன் திரும்பி ஓடி வருகின்றான் அவன் பின்னால் ஆமிக்காரன் துவக்குடன் துரத்தி வருகின்றான் .நான் லிங்கம் கூல் பாருக்கு அருகில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்துவிட்டேன்.மற்ற நண்பன் சயிக்கிளுடன் ஓடிவிட்டான் .நான் புகுந்த வீட்டுக்கார மனுசி என்னை திட்டுகின்றார் .நேற்றுத்தான் இதே இடத்தில் இருவரை சுட்டார்கள் இதற்குள் விடுப்பா பார்க்க வந்த நீ என்று .வெளியில் வருகின்றேன் பெருமாள் கோவிலடியில் சயிக்கிள் நண்பர் நிற்கின்றார் .கடை பார்க்க போன நண்பர் தாண்டி தாண்டி ஓடிக்கொண்டுஇருக்கின்றார் .நான் அவனுக்கு பின்னால் ஓடத்தொடங்கினேன் .ஆமிக்காரன் எறிந்த பற்றன் பொல்லு நண்பரின் முதுகை தாக்கியிருந்தது .அப்படியே சுற்றி யோகேஸ்வரன் எம் பி வீட்டிற்கு போய் நடந்ததை சொல்லி சயிக்களை எடுக்கவேண்டும் என்று கேட்கின்றோம் .ஊரடங்கு சட்டம் முடிய வரச்சொல்லி அனுப்பிவிட்டார் .ஒரு நண்பரை சயிக்கிளில் அனுப்பிவிட்டு சிறிதர் தியேட்டர் மட்டும் வந்து தண்டவாளத்தில் ஊடாக நடந்து வந்து வீடுவந்து சேர்ந்தோம் .நண்பரின் முது வீக்கம் மாற மாதக்கணக்கில் எடுத்தது .

அடி வாங்கிய நண்பர் ஜெர்மனில் இருந்து விட்டு இப்போ போய் மன்னாரில் வசிக்கின்றார் .சயிக்கிள் நண்பர் கனடாவில்தான் .பல வருட இடைவெளியால் அவருடனும் பெரிய தொடர்பு இல்லை .

அதே வருடம் யூனில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன் .

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2z7e80h.jpg

மேலேயுள்ளது அந்த நூலகம்தானே? :o

ஆம்..சகோதரா! அதே நூலகம்தான்....சிங்கள இனவெறியன்...எரிச்சல் பொறாமை மிகுந்த காமினி திசநாயக்கவின் மேற்பார்வையில் அரியபொக்கிசங்கள் அழிக்கப்பட்ட நூலகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Spoiler

தகவலுக்கு நன்றி அண்ணா.

ராஜவன்னியன் .நீங்கள் இணைத்த படம் நூலகத்தின் பின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது .யாழ் மத்திய கல்லூரியும் செல்வா நினவு தூபியும் தெரிகின்றது .

ஒரு சிறு திருத்தம் நூலகம் எரிக்கப்ட்டது யூ ன் 1 ம் திகதி 

31ம் திகதி நள்ளிரவு கடந்தமுதலாம் திகதி அதிகாலை 1மணிக்கும் 2மணிக்கும் இடையில் நூலகத.தக்கு தீவைக்கப்பட்டது

இந்தத்தகவல்தான் சரி என நினைக்கிறேன்

தமிழர்களின் கல்வியறிவும் அந்த அறிவியல் சிந்தனையும், சிங்களவரை விடவும் தமிழர்களைத் தரமுயர்த்தி வைத்துள்ளதைத் சகிக்கமுடியாத சிங்களம், தமிழர் கல்விக்கான மூலாதாரங்களை அழிக்கத் திட்டமிட்டது. அதன்வழி யாழ் நூலகத்தை அழிக்கும் பொறுப்பும் சிறில் மத்யூ மற்றும் காமினி திசநாயக்கா என்ற இரண்டு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பின்பு ஜனாதிபதியாக வந்த ரணசிங்க பிரேமதாசாவே வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளிவந்தன. யாழ் நூலகம் அழிக்கப்பட்டமை, பொலிசார் சுட்டப்பட்டதனால் ஏற்பட்ட தற்செயலான நிகழ்வல்ல. தமிழின அழிப்பிற்காக ஆழ்ந்து முன்னரே திட்டமிடப்பட்டு சந்தற்பத்துக்காகக் காத்திருந்து நடாத்தப்பட்ட ஒரு நிகழ்வு.

நவம் அவர்கள் தெரிவித்துள்ளபடி மே31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னரே நூலகம் எரிக்கப்பட்டதாக அன்றைய செய்திகளைப்படித்த ஞாபகமுண்டு.

சிங்களவன் சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழர்களை அழிப்பதே அரசியலாகக்கொண்டவன்.பொலிஸார் கொல்லப்பட்டது வெறும் சாட்டுத்தான்.இதேபோல்தான் பின்னாளில் 83 கலவரமும் திருநெல்வேலித்தாக்குதலை தொடர்நந்து நடந்நது என்பதும் நினைவுகூரத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் .நீங்கள் இணைத்த படம் நூலகத்தின் பின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது .யாழ் மத்திய கல்லூரியும் செல்வா நினவு தூபியும் தெரிகின்றது .

அது யாழ் மத்திய கல்லுரி அல்ல. யாழ்ப்பாண நீதிமன்றம். யாழ் மத்திய கல்லுரி இடது பக்கத்தில் உள்ளது.

http://www.google.com/mapmaker?ll=9.66119,80.012687&spn=0.002972,0.007328&t=h&z=18&vpsrc=6&q=jaffna+srilanka&hl=en&utm_medium=website&utm_campaign=relatedproducts_maps&utm_source=mapseditbutton_normal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நூலகம் மட்டுமல்ல 
எங்கள் சோலை மனங்களும் தீப்பற்றிற்று   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.