Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் அறியாமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 பஸ் பயணம் என்பது  ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான்  எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும்  என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக பஸ் தரிப்பிடத்திற்கு  சென்றேன்  நல்ல காலம் பஸ் அந்த நேரத்திற்கு வந்து விட ஏறினேன்.

 

அவசரத்தில் ஏறிய நான் சில்லறை காசு எடுக்க வில்லை பஸ் நடத்துனர் ரிக்கட்  கொண்டு வர எனது பையை திறந்து பார்த்தேன் அதனுள் ஆயிரம் ருபாய் இருந்தது அதனை நீட்டினேன் அவர் அதை  பார்த்து விட்டு சில்லறை தரும் படி கூற எனக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை பக்கத்தில் இருந்தவர்களிடம் வினவ யாரிடமும் அந்த காசை மாற்ற இருக்க வில்லை. ஒரு குரல் மட்டும் இந்தாங்கோ என்று என்னிடம் நீட்டியது அவருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ஒரு படியாக ரிக்கட்டை பெற்றுக்கொண்டேன் ஆனால் பஸ்சில் காலை நேரம் என்பதால் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தது எல்லாம் வேலைக்கு செல்பவர்கள்  நின்று கொன்டே செல்ல நேர்ந்தது நிற்பது என்பது எனக்கு பிடிக்காது  .பிடிக்காது என்று ஏன் சொல்ல வந்தேன் என்றால் உள்ள ஒரு சின்ன இடுக்கு ஒருவரே நிற்க முடியாது  அதுக்குள்ள நின்று போவதென்றால் ??? ஒரு சில காமுகர்களால் பெண்கள் படும் வேதனை இருக்கே அம்மா சொல்ல முடியாது  உரசுவது கிள்ளுவது .இடிப்பது  இந்த நரக வேதனையில் இருந்து தப்ப நான் நான் படும் பாடு இருக்கே அம்மா அதை சொல்லவே முடியாது.

 

நான் இருக்கும் ஊரில் இருந்து மட்டுநகர் நாற்பது கிலோமீற்றர் தூரம்.  பஸ்சில் பாட்டு போட்டு சென்றார்கள் மாணவர்களும் உள் இருந்தார்கள் படிக்கிறார்கள் இல்லையோ ஆனால் பாட்டு மட்டும் நன்றாக பாடுகிறார்கள் , பஸ் இடையில் நின்றால் பிச்சைகாரர்கள் ஏறுவார்கள்  இவர்கள் தொல்லை ஒரு பக்கம் இருக்க  எனக்கு சில்லறை மாற்றிக்கொடுத்வர் என்னையே பார்த்து கொண்டிருந்தார் .நானும் அவரை உதவி செய்தவர் தானே என்று நினைத்து சிரித்தேன்  அவரும் சிரித்து விட்டு  மீண்டு மீண்டும்  என்னையே பார்த்து கொண்டிருந்தார் அது எனக்கு அருவ ருப்பாக இருந்தது நான் முறைக்க  அவர் அதை பொருட்படுத்தவில்லை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவ‌ர் கிட்ட வரும் படி  கூறி ஏதோ செய்கை காட்டினார் நான் ஒன்றும் பேசாமல் அவர் கிட்டே சென்று  உதவி செய்யுங்கள் உபத்திரம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டேன் .அவர் உடனே நீங்கள்  இங்க இருங்க‌ள் என்ற‌படி எழும்பினார் .நான்  இருக்கையில் அமர்ந்து  கொண்டேன் அவர் என்னருகில் நின்று கொண்டிருந்தார் அவர் இறங்கும் இடம் வர அவர் என்னை பார்த்து காயத்திரி தானே நீங்கள் எப்படி  இருக்குறீர்க்ள் என்று கேட்டு விட்டு இறங்கிவிட்டார் அவர் சென்ற பின்பு  யார் அவர் என்ற சிந்தனை ஓடியது.

 

பின்பு அவர்  பக்கத்தில் இருந்தவ்ர் ஒரு ஆண் பார்க்க நல்ல பண்பாக இருந்ததவர்  அவர் வேலையை காட்ட ஆரம்பித்தார் அவர் தொடைகள் என்னை உரசி உரசி உறுத்தியது அவரை  முறைத்து பார்த்தும் அவர் அவரின் வேலையை தொடர்ந்தார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை  ஒருவனிடம் இருந்து  இன்னொருவனிடம் சிக்கியுள்ளதாக நினைத்து கொண்டு  ஆண்வர்கத்தை நினைத்தும் கல்யாணம் எல்லாம் கட்ட கூடாது என்றும் நினைத்தேன் பொறுத்து பொறுத்து பார்த்தேன் என்னால் முடியவில்லை கூச்சல் இட்டு நடத்துனரை கூப்பிட நினைக்கும் போது அவரோ தம்பி  இங்க வாங்கோ என பஸ் நடத்துனரை கூப்பிட பஸ் நடத்துனர் நீங்கள் இறங்கும் இடமா என்று கேட்க ஓம் என்று சொல்ல ஒரு நிமிடம் பொறுங்கோ என்று சொல்லி விட்டு இரு ஊன்று கோல்களை எடுத்து அவரிடம் கொடுத்தார் அவர் அதை வாங்கிக்கொண்டு ஊன்றி எழும்பி நடக்க ஆரம்பிக்கும் போது தங்கை நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் இருக்கையில் இருக்கும் போது என் கால்கள்  என்னிடம் இருக்காது  அது அங்கும் இங்கும்  இருக்கும் அதனுள் பூட்டப்பட்டிருக்கும்  ஆணிகள் உங்களை குத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு இறங்கி சென்றார் .

 

அப்பொழுது என்னால் எதுவும் பேச‌ முடியவில்லை ஒரு சில ஆண்கள் செய்யும் சம்பவங்களால்  எல்லோரையும் தவறாகவும் தப்பாகவும் நினைக்க தோன்றினாலும் அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்  அவரை காணும் போது .பஸ் நடத்துனரோ அவர் போரில் இரு கால்களை இழந்தவர் என்ற் சொன்னார்.
பாடசாலை சென்றேன் அங்க நடந்தை நினைத்தும் என் அறியாமையை நினைத்தும் அவசரபுத்தியை நினைத்தும் கவலையுற்றேன் பாடசாலை நிறைவுற்றதும் மீண்டும் பஸ்சில் ஏறி வீடு வரும் பொழுது எனக்கு காசு மாற்றி தந்தவரை பார்த்தேன் ஆனால் அவர் என்னை பார்த்தும் பார்க்காம‌லும் ஒரு வெளிநாட்டவருடன் சரளமாக ஆங்கிலம் பேசி வருவதையும் அவர் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பேசியும் வந்தார் .நான் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து அதை கேட்டு வந்தேன் .அதற்கு அந்த வெள்ளகாரன் உடன் கட்டை ஏறுவது பற்றி  கேட்ட போது அது ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்ப இல்லை என்றும்  அவருக்கு தமிழர்களின் கலை கலாச்சாரம் பற்றியும் சொல்லியும்  வந்தார் .

 

 

நான் என் மனதுக்குள் அவரிடம் இவ்வளவு திறமை இருக்குமா  என நினைத்துக்கூட பார்க்க வில்லை நான் அவரிடம் எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என கேட்க உன் அண்ணனுடன் நான் வெளிநாட்டில் வேலை செய்த நான் அப்ப உங்களது குடும்ப‌ போட்டோவை உங்க அண்ணன் காட்டியிருக்கார்  என்று சொல்ல ஓ நீங்கதானா? மதன் என்றாள் ஓம்  என்று சொல்ல நீங்க நன்றாக படித்தவர் என்று அண்ணா சொன்னாரே ஓம் ந‌ல்லா  படித்தால் இங்க வேலை கிடைக்காதே இப்ப நான் ஒரு பாடசாலையில் சாதாரண பியுனாக‌ வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் இறங்கி செல்கிறார் நானும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்துடன் வீடு செல்கிறேன்

பெயர்கள் கற்பனை   
 

 

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ கலக்கிட்டிங்கள்...தொடருங்கள் உங்கள் பயணத்தை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர் ஜீ!

 

இந்த உலகத்தில் வாழ்வதற்கு அன்னப்பறவையாக இருக்கவேண்டும் என்பதை மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!

 

அதற்கு மட்டும் தான், பாலையும், நீரையும் எப்படிப் பிரித்தறிய முடியும் என்று தெரியும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பேரூந்துகளில் பயணம் செய்யும் பெரும்பாலானவர்கள் நற்பண்புகளுடன் இருந்தால், கதையில் வருவதுபோன்ற தவறான அபிப்பிராயங்கள் வந்திருக்காது. உண்மையில் ஒரு சிலர்தான் நல்லவர்களாக இருக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மான அவமானத்துக்கு அஞ்சி வாய் பேசாது இருப்பதனால்தான் இப்படியானவர்கள் வளர்கிறார்கள். துணிந்து மற்றவர்களுக்கு முன்னால் நல்ல பேச்சுக் கொடுத்தால் செய்யத் துணிய மாட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

முனீவர்ஜீ நீங்கள் தான் மதனோ :unsure: கதை நல்லாய் இருக்குது.நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் :D  :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீயை யாரோ ஒரு பெண் தவறாக நினைத்துவிட்டாள்..! அதுதான் இப்ப கதையாக வெளிவந்துள்ளது.. :rolleyes:

 

பெண்களைத் திரும்பிப் பார்க்கலாம்.. ஆனால் திரும்பித் திரும்பிப் பார்க்கக்கூடாது.. :( முடியுமானவரை மோட்டுவளையை அல்லது கட்டாந்தரையைப் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது.. :D



பெண்கள் மான அவமானத்துக்கு அஞ்சி வாய் பேசாது இருப்பதனால்தான் இப்படியானவர்கள் வளர்கிறார்கள். துணிந்து மற்றவர்களுக்கு முன்னால் நல்ல பேச்சுக் கொடுத்தால் செய்யத் துணிய மாட்டார்கள்.

 

மேடம்.. கதையை முழுமையாக வாசித்தனீங்களா? :D
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ கலக்கிட்டிங்கள்...தொடருங்கள் உங்கள் பயணத்தை

 

கதையை படித்து கருத்து கூறிய அனைவருக்கும்  நன்றிகள்;

 
ரதி அக்காவுக்கு சந்தேகம்தான் போல

 

 

 

முனிவர்ஜீயை யாரோ ஒரு பெண் தவறாக நினைத்துவிட்டாள்..! அதுதான் இப்ப கதையாக வெளிவந்துள்ளது.. :rolleyes:

 

 

 

 

 

போட்டு கொடுத்த டங்குவாரை வன்மையாக கண்டிக்கிறேன்

 

 

 

 

 

 

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி முனிவர்ஜி. அறியாமை பெண்களுக்கு மட்டுமல்ல (உங்கள் கதையில்) ஆண்களுக்கும்  தான் உண்டு. மனிதர்கள் தினமும் கற்கிறார்கள் என்பதே உண்மை.

 

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி முனிவர்

 

பெண்களைத்தான் ஆண்களால் புரிந்து கொள்ளமுடிவதில்லை என்றால்

பெண்கள் ஆண்களை தாறுமாறாக புரிந்து வைத்துள்ளார்கள் என்ற கருவுக்கு வாழ்த்துக்கள்

ஆனால் பெரும்பான்மை தானே எடுபடும்..... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி முனிவர்

 

பெண்களைத்தான் ஆண்களால் புரிந்து கொள்ளமுடிவதில்லை என்றால்

பெண்கள் ஆண்களை தாறுமாறாக புரிந்து வைத்துள்ளார்கள் என்ற கருவுக்கு வாழ்த்துக்கள்

ஆனால் பெரும்பான்மை தானே எடுபடும்..... :D

 

நன்றி நுனாவிலன்

நன்றி (குகதாசன் அண்ணா) விசுகு

உன்மை சம்பவங்களை கதையாக கொடுத்தேன் அவ்வளவுதான் :) :)

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை வாசிக்கும் போது ஏதோ ஒரு குறுந்திரைப்படம் பார்த்ததுபோல் இருந்தது.இன்னும் பல உண்மைக்கதைகளை எழுதுங்கள்....ஓய் முனி! சொல்லுறது காதிலை விழுதோ?????? :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் போது ஏதோ ஒரு குறுந்திரைப்படம் பார்த்ததுபோல் இருந்தது.இன்னும் பல உண்மைக்கதைகளை எழுதுங்கள்....ஓய் முனி! சொல்லுறது காதிலை விழுதோ?????? :)

 

ஓய் குமார சாமி உன்மை கதையையும் பெண்கள் படும் துன்பத்தையும் சொல்லவந்தேன்  நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் எழுதுவேன்  நன்றிங்கோ

நம்மட கள்ளு கொட்டில் பக்கம் தான் வாரியள் இல்லை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ,

சமகால நடப்பை கதையாக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பலர் செய்யும் தவறுகள் சில நல்லவர்களையும் தண்டித்துவிடுகிறது.
கதையோட்டம் மிகவும் அருமை. ஒரு தேர்ந்த சிற்பியின் கைவண்ணம் உங்கள் கதையில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முனி,
நீங்கள் கதையில்.. இடை வெளி விட்டு எழுதியிருக்கலாமே...
பென்னாம்... பெரிய பந்தியாய்.. இருந்த படியால்... கதையை வாசிக்கப் பயமாயிருக்கு.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சிறி அண்ணை இடை வெளி  விட்டு்ள்ளேன்


சாந்தி அக்காவின் கருத்துக்கு நன்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

காயத்ரி கொஞ்சம் ஒவராத்தான் நினைக்கிரற....ம்!

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான கதை முனிவர்ஜி...! எழுத்துநடை மிகநன்று...!! :)

 

சே! எவ்வளவு நல்ல ஆண்கள் பஸ்ஸில் போகிறார்கள், அதில்தான் எல்லா ஆண்களையும் தப்பாவே நினைக்கிற காயத்திரியும் போகிறாள்... கொஞ்சம்கூட மனஸ் இல்ல...! :lol::D

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2014 at 9:09 PM, suvy said:

யதார்த்தமான கதை முனிவர்ஜி...! எழுத்துநடை மிகநன்று...!! :)

 

சே! எவ்வளவு நல்ல ஆண்கள் பஸ்ஸில் போகிறார்கள், அதில்தான் எல்லா ஆண்களையும் தப்பாவே நினைக்கிற காயத்திரியும் போகிறாள்... கொஞ்சம்கூட மனஸ் இல்ல...! :lol::D

நன்றி சுவி அண்ணா 

இந்த பொண்ணுங்களே இப்படி தானே அண்ணே 

நாம லவ் பண்ணி பாருங்க உடனே அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்கிறது இது என்ன டிசைன் இறைவா நம்ம ராசி அப்படி??

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை மனித உணா்வுகளும் அப்படித்தான். அன்றும் இன்றும் தொடா்கதைதான். சிலசமயங்களில் தப்பபிப்பிராயம் ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது, கதை நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் முனிவா்ஜி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

பயணங்கள் முடிவதில்லை மனித உணா்வுகளும் அப்படித்தான். அன்றும் இன்றும் தொடா்கதைதான். சிலசமயங்களில் தப்பபிப்பிராயம் ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது, கதை நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் முனிவா்ஜி

நன்றி கண்மணி அக்கா   புரிதல்கள் மாறுதலாக தெரிவதால் தான் இப்படியான பிரச்சனைகள் வந்து சிலரை சிந்திக்க வைத்து விட்டு செல்கிறது.

11 hours ago, முனிவர் ஜீ said:

இந்த பொண்ணுங்களே இப்படி தானே அண்ணே 

லவ் பண்ணி பாருங்க

உடனே அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்கிறது

இது என்ன டிசைன்

இறைவா நம்ம ராசி அப்படி??

சுத்தி சுத்தி சிங்கன் இஞ்சதான் வருவார் எண்டு கதையை வாசிக்கேக்கையே நினைச்சனான் .:grin:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, முனிவர் ஜீ said:

நன்றி சுவி அண்ணா 

இந்த பொண்ணுங்களே இப்படி தானே அண்ணே 

நாம லவ் பண்ணி பாருங்க உடனே அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்கிறது இது என்ன டிசைன் இறைவா நம்ம ராசி அப்படி??

 உங்களுக்காவது பரவாயில்லை ஜீ.... லவ் பண்ணிய பெண்ணுக்குத்தானே  கல்யாணம் நடக்குது..., நமக்கு லவ் பண்ணிய பெண்ணோட கூட வந்த பொண்ணுக்கெல்லாம் கல்யாணம் நடந்தது...! :cool:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, முனிவர் ஜீ said:

நன்றி சுவி அண்ணா 

இந்த பொண்ணுங்களே இப்படி தானே அண்ணே 

நாம லவ் பண்ணி பாருங்க உடனே அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்கிறது இது என்ன டிசைன் இறைவா நம்ம ராசி அப்படி??

ஏனப்பா  நல்லவிடயம் தானே

அவரவருக்கு முடிஞ்சதை தானே செய்யணும்

செய்கிறீர்கள்...:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

சுத்தி சுத்தி சிங்கன் இஞ்சதான் வருவார் எண்டு கதையை வாசிக்கேக்கையே நினைச்சனான் .:grin:

ம்கும்  அந்த பொண்ணுலையும் ஒரு கண்தான் என்ன சிக்கவில்லை அண்ணா ?? முயற்சி திருவினையாக்குமாம் ஆனால் நமக்கு நாமே செய் வினை வைக்கிறது மாதிரி தான் இந்த லவ்வு

 

9 hours ago, suvy said:

 உங்களுக்காவது பரவாயில்லை ஜீ.... லவ் பண்ணிய பெண்ணுக்குத்தானே  கல்யாணம் நடக்குது..., நமக்கு லவ் பண்ணிய பெண்ணோட கூட வந்த பொண்ணுக்கெல்லாம் கல்யாணம் நடந்தது...! :cool:  tw_blush:

யாரோடு நடந்தது என் இன மடா பேசாம நாம் ஒரு கூட்டணி அமைப்போமா நெடுக்கர் தலைமையில் 

யாழ் கள காளைகள் சங்கம் என்று 

உடனே வந்து கேட்பானுங்கள் பாருங்கள் நல..... ...... ஹாஹா ??

4 hours ago, விசுகு said:

ஏனப்பா  நல்லவிடயம் தானே

அவரவருக்கு முடிஞ்சதை தானே செய்யணும்

செய்கிறீர்கள்...:grin:

என்னத்தை சொல்ல முடியல விசுகு அண்ணா 

சங்கம் திறக்க போறம் வரவீங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.