Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரந்தர வலி தரும் நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் பெற்றவரால், சுற்றத்தால், உறவினரால், நண்பரால்,கணவன் மனைவியால், காதலன் காதலியால், பிள்ளைகளால், ஆசிரியர்களால், சக மாணவர்களால்,ஏன் முகம் தெரியாத யாரோ ஒருவரால் கூட நாம் நிராகரிக்கப்படலாம். மற்றவரால் நாம் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் வேதனை, ஏமாற்றம், தவிப்பு என்பன எம்மை வாழ் நாள் பூராகவும் நினைவில் வந்து கொல்லும் வல்லமை கொண்டது.

சிலர் அவற்றை உடனே மறந்துவிட்டாலும் எப்பொழுதோ ஒருமுறை நினைவில் வந்து குதியாட்டம் போடுவதைத் தடுக்கவே முடியாது. சில நிராகரிப்புகள் காரணமின்றியே எம்முடன் கூடவே இருந்து தினமும் கொல்லும் தன்மை வாய்ந்தது. எம்மை எந்த வேலையும் செய்ய விடாது மனதை அழுத்தி எம்மை நோய்க்கு உட்படுத்தும். தூக்கம் தொலைக்க வழிவகுக்கும். இன்னும் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம்.

உறவுகளே உங்களுக்கும் ஏதாவது நிராகரித்தல் நடந்திருந்தால் உங்கள் உணர்வுகளையும் இதில் பகிரலாமே. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமே

வணக்கம்

என்னில்  ஏதாவது கோபமே...... :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெண்டிக்காய் பிடிக்காது. அதனால அதனை நிராகரிக்கிறன். அதுக்காக வெண்டிக்காய் கவலைப்படவா செய்யும். அவரவர் அவரவரின் வசதி.. தேவை.. நோக்கம்.. ஈர்ப்பு.. விருப்பு.. வெறுப்பு...அடிப்படையில் ஏற்கவும் நிராகரிக்கவும் செய்யினம். இதற்காக எல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தால்.. மனிதன் அதையே நினைச்சுக்கிட்டு சாகத்தான் முடியுமே தவிர வாழ முடியாது.

நாங்க இப்படித்தான் வாழுவம் என்பதில் உறுதியா இருக்கிறவன் செயற்படுறவன் முன் மற்றவர்களின் நிராகரிப்புக்கள் பெரிசா எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. பாதிப்புக்கள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வந்தும் விடுவான்..!

இங்கிலாந்தில் பார்த்தால் ஒரு பள்ளிப் பையன் பள்ளிக்காலத்தில்.. சராசரி 16.. 17 பெண்களால் நிராகரிக்கப்படுறான். அதுக்காக அவன் கவலைப்படவா முடியும். ஒரு பஸ் போனால் இன்னொன்று..! அதுவும் இல்லைன்னா.. இருக்கவே இருக்கு கால். நடந்திட்டாப் போச்சுது. இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு பஸ்ஸோ.. காரோ.. ரெயிலோ வரமலா போகும்..! :D:lol:

இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறான விடயங்கள் தவறாக உணரப்பட்டு..  ஊட்டப்படின்.. அவனை ஒரு மனிதனின் சுய நம்பிக்கையை,சுய முயற்சியை பலவீனப்படுத்தலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்பு என்பது ஒருவன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம்.

எங்கே எதற்காக நிராகரிக்கப்படுகின்றான் என்பதற்கப்பால்

தன்னை அறிந்து கொண்டு அந்த நிராகரிப்புக்குள் இருந்து

வெளியேறுபவன் வாழ்க்கையில் வெற்றிகளை அள்ளிச் செல்கின்றான்.

உலகிலேயே பல அறிஞர்களும் தலைவர்களும் இந்த நிராகரிப்புக்குள்

இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அதற்கெதிராகப் போராடி

வென்றவர்கள்தான். :D

ஒன்றா இரண்டா எதை எழுதுவது?

ஆனால் இதையெல்லாம் தலைக்குள் போட்டுக் கொண்டிருந்தால் சுயபச்சாதாபம்தான் மிஞ்சும். தனிப்பட்ட முறையில் நிராகரிப்புகள்தான் என்னை இன்னும் உத்த்வேகமாகச் செயற்பட வைக்கும். கைக்குக் கிடைக்காததை விட வருவது திறமாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை நிராகரித்த பெண்களையிட்டு நான் பரிதாபப்பட்டிருக்கிறேன், நல்லதொரு பையனை உதாசீனப்படுத்திவிட்டாளென. என்னை ஏற்றுகொண்ட சிலபெண்களை நான் நிராகரித்திருக்கிறேன் காரணம் இலகுவில் என்னை ஏற்றுக்கொண்டதற்காக. ஆம் காதலில் நிராகரிப்புக்களே நினைவுகளை எம்முடன் நிறுத்திவைக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

வலி  தந்த  நிராகரிப்பு என்று  சொந்த   வாழ்வில்  எதுவுமில்லை.

அந்தளவுக்கு எதையும்  எதிர்பார்ப்பதுமில்லை.

எதிர்பார்ப்பவனுக்கே  நிராகரிப்பு தெரிய  வாய்ப்புண்டு என்பது எனது அனுபவம்  தரும் பாடம்.

நிராகரிப்பு என்பது ஒருவன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம்.

எங்கே எதற்காக நிராகரிக்கப்படுகின்றான் என்பதற்கப்பால்

தன்னை அறிந்து கொண்டு அந்த நிராகரிப்புக்குள் இருந்து

வெளியேறுபவன் வாழ்க்கையில் வெற்றிகளை அள்ளிச் செல்கின்றான்.

உலகிலேயே பல அறிஞர்களும் தலைவர்களும் இந்த நிராகரிப்புக்குள்

இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அதற்கெதிராகப் போராடி

வென்றவர்கள்தான். :D

நிரந்தர வலி தரும் நிராகரிப்பு

திரிக்கும்

எனக்கும்  பொருந்தும்  வரிகள்

நான்   நிராகரிக்கப்பட்டேன்  சிங்களவனால் 1983 இல்.

அதை  இன்றும்  என்றும்  மறவேன்.

இது சிங்களம்  எனக்குத்தந்த பாடம்

நீ  யார்???

எங்கு வாழணும் என்று.

அதற்காக  தொடர்ந்து உழைக்கின்றேன்

உழைப்பேன்

(இப்படி   பலரை

பல லட்சம் தமிழரை  சிங்களம்  நிராகரித்ததே  தமிழீழப்போர்  ஆனது)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, அவர்களது நிராகரிப்பு எமை என்னசெய்துவிடும்.ஆம் எம்மை நிராகரிக்கவும் அவர்களுக்குத் தகுதிவேண்டும். உலகில் தமிழனை ஏற்றுக்கொள்ளவோ அன்றேல் நிராகரிக்கவோ எவருக்கும் தகுதியில்லை என்பதே எனது எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிக்கப்படுவதன்,ஏமாற்றப்படுவதன் வேதனையை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அதுவும் நன்றாக பழகினவர்களே இப்படியான கேடு கெட்ட வேலை செய்தால் அதை விட கொடுமை வேறெதுவும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

எனக்கு வெண்டிக்காய் பிடிக்காது. அதனால அதனை நிராகரிக்கிறன். அதுக்காக வெண்டிக்காய் கவலைப்படவா செய்யும். அவரவர் அவரவரின் வசதி.. தேவை.. நோக்கம்.. ஈர்ப்பு.. விருப்பு.. வெறுப்பு...அடிப்படையில் ஏற்கவும் நிராகரிக்கவும் செய்யினம். இதற்காக எல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தால்.. மனிதன் அதையே நினைச்சுக்கிட்டு சாகத்தான் முடியுமே தவிர வாழ முடியாது.

இந்த விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறான விடயங்கள் தவறாக உணரப்பட்டு..  ஊட்டப்படின்.. அவனை ஒரு மனிதனின் சுய நம்பிக்கையை,சுய முயற்சியை பலவீனப்படுத்தலாம். :icon_idea:

வெண்டிக்காய்க்கும் மனித மனத்துக்கும் நெடுக்குக்கு வித்தியாசம் தெரியவில்லை. என்ன செய்யிறது. ஆனாலும் நீங்கள் கூறுவதுபோல நிராகரிப்பு ஒரு தனி மனிதனின் சிந்தனையையே சிதறடித்து தன்னம்பிக்கையை மட்டுமன்றி அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

நிராகரிப்பு என்பது ஒருவன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம்.

எங்கே எதற்காக நிராகரிக்கப்படுகின்றான் என்பதற்கப்பால்

தன்னை அறிந்து கொண்டு அந்த நிராகரிப்புக்குள் இருந்து

வெளியேறுபவன் வாழ்க்கையில் வெற்றிகளை அள்ளிச் செல்கின்றான்.

உலகிலேயே பல அறிஞர்களும் தலைவர்களும் இந்த நிராகரிப்புக்குள்

இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு அதற்கெதிராகப் போராடி

வென்றவர்கள்தான். :D

ஆனால் நிராகரிப்பின் மூர்க்கமான தாக்குதலால் அழிவின் விளிம்புக்குச் செல்பவர்களும் இருக்கின்றனர்தானே?? தம் சுயமிழந்து ,சுகமிழந்து, சொல்லொனா வேதனையில் சித்தம் கலந்கியவர்களும் உள்ளனர்தானே வாத்தியார். அவர்களால் சிந்திக்க முடியுமா??
 
ஒன்றா இரண்டா எதை எழுதுவது?

ஆனால் இதையெல்லாம் தலைக்குள் போட்டுக் கொண்டிருந்தால் சுயபச்சாதாபம்தான் மிஞ்சும். தனிப்பட்ட முறையில் நிராகரிப்புகள்தான் என்னை இன்னும் உத்த்வேகமாகச் செயற்பட வைக்கும். கைக்குக் கிடைக்காததை விட வருவது திறமாகவே இருக்கும்.

இந்த விடயத்தில் சுய பட்சாதாபமே மனிதரைத் தினமும் கொல்லும் திறன் வாய்ந்தது. அதிலும் ஆணிலும் பெண் இவற்றைத் தாங்குவது கடினமே. பெண்களைப் போல் ஆண்கள் எதையும் பெரிதாக எடுப்பதுமில்லை. தன்னைச் சுற்றி உள்ளவற்றை மட்டும் சுயநலத்தோடு பார்ப்பதுடன் மற்றவரைப் பற்றி எண்ணாமலேயே இருந்துவிடுகின்றனர்.

என்னை நிராகரித்த பெண்களையிட்டு நான் பரிதாபப்பட்டிருக்கிறேன், நல்லதொரு பையனை உதாசீனப்படுத்திவிட்டாளென. என்னை ஏற்றுகொண்ட சிலபெண்களை நான் நிராகரித்திருக்கிறேன் காரணம் இலகுவில் என்னை ஏற்றுக்கொண்டதற்காக. ஆம் காதலில் நிராகரிப்புக்களே நினைவுகளை எம்முடன் நிறுத்திவைக்கின்றன.

உங்கள் கதையைப் பார்த்தால் நாம் யாரிடமும் வலிந்து செல்லாமலிருப்பதே நல்லது என்று படுகிறது.
 
விசுகு, அவர்களது நிராகரிப்பு எமை என்னசெய்துவிடும்.ஆம் எம்மை நிராகரிக்கவும் அவர்களுக்குத் தகுதிவேண்டும். உலகில் தமிழனை ஏற்றுக்கொள்ளவோ அன்றேல் நிராகரிக்கவோ எவருக்கும் தகுதியில்லை என்பதே எனது எண்ணம்.

தமிழனே தமிழனை நிராகரிக்கும்போது, சிங்களவனைச் சொல்லி என்ன பயன்.
 
நிராகரிக்கப்படுவதன்,ஏமாற்றப்படுவதன் வேதனையை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அதுவும் நன்றாக பழகினவர்களே இப்படியான கேடு கெட்ட வேலை செய்தால் அதை விட கொடுமை வேறெதுவும் இல்லை

சரியாகச் சொன்னீர்கள் ரதி. நாம் ஒருவர்மேல் அதீத அன்பு அல்லது நம்பிக்கை வைத்துப் பழகும்போது அது பொய்த்துப் போவதை அல்லது அவர்களால் நிராகரிக்கப்படுவதை அல்லது ஏமாற்றப்படுவதை தாங்கிக்கொள்ளவே முடியாதுதான். அது அனுபவித்தவர்களுக்குத்தான் விளங்கும் என நினைக்கிறேன்.

எனக்கும்  பொருந்தும்  வரிகள்

நான்   நிராகரிக்கப்பட்டேன்  சிங்களவனால் 1983 இல்.

அதை  இன்றும்  என்றும்  மறவேன்.

இது சிங்களம்  எனக்குத்தந்த பாடம்

நீ  யார்???

எங்கு வாழணும் என்று.

அதற்காக  தொடர்ந்து உழைக்கின்றேன்

உழைப்பேன்

(இப்படி   பலரை

பல லட்சம் தமிழரை  சிங்களம்  நிராகரித்ததே  தமிழீழப்போர்  ஆனது)

அதுக்குத் தான் பிராண்ஸிற்கு ஓடி வந்தீர்களா விசுகு???? :lol:  :lol:

நல்ல தலைப்பு சுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளையே நிராகரிக்கிறார்கள்.மனிதன் எம்மாத்திரம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளையே நிராகரிக்கிறார்கள்.மனிதன் எம்மாத்திரம்?

கடவுளை நிராகரிக்கலாம் ஏனெனில் அவருக்கு கவலைப்பட நேரம் இருக்காது.

அப்ப நேற்று என்னோடு pub க்கு வந்தார்  :o  :o அந்தாள் உங்களுக்கு நேரமில்லை என்று சொல்கிறார் சுமே அக்கா  :D  :D 

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்டிக்காய்க்கும் மனித மனத்துக்கும் நெடுக்குக்கு வித்தியாசம் தெரியவில்லை. என்ன செய்யிறது. ஆனாலும் நீங்கள் கூறுவதுபோல நிராகரிப்பு ஒரு தனி மனிதனின் சிந்தனையையே சிதறடித்து தன்னம்பிக்கையை மட்டுமன்றி அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

ஆம்பிளையள் வெண்டிக்காய் கனக்க சாப்பிட்டால் வில்லங்கமெண்டது நெடுக்கருக்கும் தெரியும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நேற்று என்னோடு pub க்கு வந்தார்  :o  :o அந்தாள் உங்களுக்கு நேரமில்லை என்று சொல்கிறார் சுமே அக்கா  :D  :D 

அவருக்கும் என்னைப்பற்றித் தெரிஞ்சிட்டுதே :lol:

ஆம்பிளையள் வெண்டிக்காய் கனக்க சாப்பிட்டால் வில்லங்கமெண்டது நெடுக்கருக்கும் தெரியும். :lol:

வெண்டிக்காயுமா??? நான் இன்றுதான் கேள்விப்படுறன். 

வலி தரும் நினைவுகளை நீக்குவது எப்படி?

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் நவோமி எய்சென்பெர்கர் அவர்கள் அவமானம், நிராகரிப்பு போன்ற உணர்வுகள் மூளையில் வலி ஏற்படுத்தக் கூடியவை என்று கண்டறிந்துள்ளார். 
 
ஒரு உரையாடலின் போதோ, குழுவினராக இருக்கும் போதோ, பணிபுரியும் இடத்திலோ நிராகரிக்கப்படுதல் அல்லது ஒதுக்கப்படுதல் மிகுந்த வேதனை தரக்கூடியது. உண்மையாக சொல்வதென்றால் முகத்தில் அடித்தாற்போன்ற உணர்வினைப் பெறுவீர்கள். என்ன உண்மைதானே?
 
உங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த வேதனை தரும் நினைவிலிருந்து மீள்வது சிறிது கடினம்தான். இன்னமும் தெளிவாகச் சொல்வதென்றால், கத்தி அல்லது வாள் கொண்டு உங்கள் உடலில் செலுத்துவதற்கு நிகரான வேதனையை உணர்வீர்கள். இது போன்ற உணர்வுகளே வேதனை தரும் நினைவுகளிலிருந்து மீள்வதற்கு தடைகளாக அமைகின்றன. வலியின் வேகம் அதிகரிக்கும் போது தடைகளும் வலிமை பெறுகின்றன. இதை சரி செய்ய உங்களுடைய உடல், மனது மற்றும் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொணர்தல் வேண்டும். 
 
உடலுக்கு ஏற்படக் கூடிய வலி மற்றும் வேதனைகளை மருத்துவரின் உதவியுடன் குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவரா உங்களைக் குணப்படுத்துகிறார்? உண்மை என்னவென்றால் உங்களுடைய உடல் குணமடைவதற்காக மருத்துவர்கள் உதவுகிறார்கள். அவர்கள் அளிக்கும் உதவிகளைக் கொண்டு குணமடைகிறது உங்களுடைய உடல்.
 
அதே போல் மனதின் வேதனைகளும் உதவிகளைக் கொண்டு குணமடைந்திட வேண்டும். அது போன்ற உதவிகள் சிலவற்றைக் காண்போம். 
 
அவைகளில் ஒன்று காலம். காலம் ஒரு நல்ல மருந்தாக உதவும். ஆனால் அதற்காக பல வருடங்கள் வேதனையில் வாழ்ந்திட எவராலும் முடியாது. இதற்கென தனித்திறமை வாய்ந்த வல்லுனரின் உதவியை நாடுவது மற்றொரு வகை உதவி. 
 
வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் பல வகையான சிகிச்சைகள் பலன் தருபவையே. 
 
சிகிச்சைகள் எதுவும் பெறாமல் இருப்பதும் ஒரு விதமான சிகிச்சையே. 
 
உங்கள் வேதனைகளிலிருந்து மள்வதற்காக பல ஆயிரங்களை செலவிடுமுன், ஓரு எளிய பயிற்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம். 
 
இப்பயிற்சி உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை மாற்றாது. மாற்றவும் முடியாது. ஆனால் பயிற்சி உங்கள் உணர்வில் மாற்றம் ஏற்படுத்தும். உங்களுடைய உணர்வுகளை பிரித்துப் பார்க்க உதவும். நிகழ்வுகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.
 
பயிற்சியை ஆரம்பிப்போமா? 
 
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள். மேற்கூறிய வாக்கியங்களை வேகமாக படித்திருந்தால் நிதானமாக பயிற்சியை செய்து பாருங்கள். அற்புதமான உணர்வினைப் பெறுவீர்கள். 
 
இப்போது எதிர்மறையாக செய்து பாருங்கள். அந்தக் காட்சியை சிறிது சிறிதாக உங்களுக்கு தெளிவற்ற தூரத்தில் கொண்டு செல்லுங்கள். இப்போது உங்களுள் ஏற்படக்கூடிய மாற்றத்தையும் உணருங்கள். 
 
காட்சி பெரிதாகவும், தெளிவாகவும் தெரியும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்? காட்சி சிறிதாக தெளிவற்று தெரியும்போது உங்களுள் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? காட்சி தெளிவாகவும், பெரிதாகவும் தெரியும்போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதேநேரம் சிறிதாகவும், தெளிவற்றும் காணும்போது உணர்வுகளற்று இருக்கிறீர்கள்.
 
இப்பயிற்சி உங்களுக்கு வேதனையளிக்கூடிய நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கு எவ்வாறு உதவுகிறதென்று பார்ப்போமா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு நினைவை காட்சியாக எண்ணிக் கொள்ளுங்கள். அதை பெரிதாக்கி அருகில் தெளிவாக காணும்போது நீங்கள் அனுபவிக்கக்கூடிய வேதனை அளவற்றது. அதே காட்சியை சிறிதாக தொலைவில் தெளிவற்று காணும் போது வேதனை குறைவதை உணர்வீர்கள்.
 
தன்னிரக்கம், மோசமான நிலை மற்றும் வாழ்வில் யாதொரு பிடிப்புமற்ற நிலை போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் தெளிவான, பெரிதாக்கப்பட்ட, விருப்பமற்ற காட்சிகளை மிக அருகில் காண்பர். அவர்களால் மகிழ்ச்சியளிக்கக் கூடிய எண்ணங்களை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த மாற்றத்தைப் பெறுவார்கள்.
 
நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதனாலேயே பிறந்த நாள், திருமண நாள், சண்டையிட்ட நாள், அவமானமடைந்த நாட்கள் போன்றவைகளை நாம் எளிதாக நினைவில் கொள்கிறோம். அது போன்ற நினைவுகள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆதலால் இப்பயிற்சியைப் பின்பற்றுவது நன்கு பலனளிக்கும். 
 
வேதனை தரும் நினைவுகளை சிறிதாக்கி உங்களிடமிருந்து விலகுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். நினைவுகள் விலகி மறைவது போல அவை ஏற்படுத்தும் வேதனைகளும் விலகி மறையும். 
 
யாழ் நிர்வாகம் என் கேரிக்கையை நிராகரித்துவிட்டதே, இப்படி சிலருக்கும் நடந்திருக்குமா?

தமிழனே தமிழனை நிராகரிக்கும் காலமிது.

எம்போராட்டத்தை பலர் நிராகரித்தால்தான் நாம் இன்னும் அடிமை வாழ்கையில் வாழ்கின்றோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் வந்தி. அனைவருக்கும் பயன்படக் கூடியது.

யாழ் நிர்வாகம் என் கேரிக்கையை நிராகரித்துவிட்டதே, இப்படி சிலருக்கும் நடந்திருக்குமா?

தமிழனே தமிழனை நிராகரிக்கும் காலமிது.

எம்போராட்டத்தை பலர் நிராகரித்தால்தான் நாம் இன்னும் அடிமை வாழ்கையில் வாழ்கின்றோம்

நீங்கள்  விபரமா எழுதினால்த்தானே  நாங்கள் நிர்வாகத்தோட சண்டை போடலாம் சாம்பவி. :D

நிராகரிப்பு ,

ஒருவர் வாழ்கையே மாற்றிபோட கூடிய ஒரு நிகழ்வு .உலகிலேயே நான் வெறுக்கும் ஒரு விடயம் பாரபட்சம் தான் (DISCRIMINATION) .இது ஒரு வகை நிராகரிப்பு தான் .திறமையை நிராகரித்து தமக்கு வேண்டியவர்களை அதில் புகுத்துவது .

நிராகரிப்பால் ஒன்று இரண்டு பெயர்கள் போராடி வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் பெரும்பான்மை அதனால் வாழ்க்கையை துலைத்தது தான் உண்மை .உரிமைக்காக போராட வெளிக்கிட்ட இயக்கங்களில் கூட அது இருந்தது 

இன்று கூட  எனது நண்பர்கள்  பலர் யாழ் இந்துவில் கிரிக்கேட் ,உதைபந்தாட்ட டீமில் தெரிவு செய்யப்படாமல் நிராகரிக்க பட்ட கோவத்தில் இருக்கின்றார்கள் .(பந்தம் பிடித்தவர்கள் பலர் விளையாடினார்கள் ).

இது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் .போன வருட யாழ் இந்து இரவு போசன நிகழ்விற்கு பிரதம விருந்தினர் அமெரிக்காவில் இருந்து வந்தார் .அவர் படிக்கும் காலங்களில் GCE O/L இல்   7D 1Cயும் ,GCE A/L இல்  3A 1B யும் எடுத்தவர் .ஆனால் அந்த வருட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரே இருக்கவில்லை .எனக்கு முதலிடம் எனது நண்பன் ஒருவனுக்கு இரண்டாம் இடம் இருந்தது .

பரிசளிப்பு விழா அன்று முதலிடம் அவருக்கும் இரண்டாம் இடம் எனக்கும் கிடைத்து .இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை .முப்பது வருடங்களுக்கு பின்னர் போன வருடம் அவரை சந்திக்கும் போது அதை சொன்னேன் அவருக்கு சரியான கோவம் வந்துவிட்டது .தனக்கு அது பற்றி தெரியாது என்றார் .

முப்பது வருடங்கள் மறந்திருந்த அந்த நிராகரிப்பு எங்கேயோ மறைந்து இருந்திருக்கின்றது தானே .

வலி தரும் நினைவுகளை நீக்குவது எப்படி?

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் நவோமி எய்சென்பெர்கர் அவர்கள் அவமானம், நிராகரிப்பு போன்ற உணர்வுகள் மூளையில் வலி ஏற்படுத்தக் கூடியவை என்று கண்டறிந்துள்ளார். 
 
ஒரு உரையாடலின் போதோ, குழுவினராக இருக்கும் போதோ, பணிபுரியும் இடத்திலோ நிராகரிக்கப்படுதல் அல்லது ஒதுக்கப்படுதல் மிகுந்த வேதனை தரக்கூடியது. உண்மையாக சொல்வதென்றால் முகத்தில் அடித்தாற்போன்ற உணர்வினைப் பெறுவீர்கள். என்ன உண்மைதானே?
 
உங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த வேதனை தரும் நினைவிலிருந்து மீள்வது சிறிது கடினம்தான். இன்னமும் தெளிவாகச் சொல்வதென்றால், கத்தி அல்லது வாள் கொண்டு உங்கள் உடலில் செலுத்துவதற்கு நிகரான வேதனையை உணர்வீர்கள். இது போன்ற உணர்வுகளே வேதனை தரும் நினைவுகளிலிருந்து மீள்வதற்கு தடைகளாக அமைகின்றன. வலியின் வேகம் அதிகரிக்கும் போது தடைகளும் வலிமை பெறுகின்றன. இதை சரி செய்ய உங்களுடைய உடல், மனது மற்றும் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொணர்தல் வேண்டும். 
 
உடலுக்கு ஏற்படக் கூடிய வலி மற்றும் வேதனைகளை மருத்துவரின் உதவியுடன் குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவரா உங்களைக் குணப்படுத்துகிறார்? உண்மை என்னவென்றால் உங்களுடைய உடல் குணமடைவதற்காக மருத்துவர்கள் உதவுகிறார்கள். அவர்கள் அளிக்கும் உதவிகளைக் கொண்டு குணமடைகிறது உங்களுடைய உடல்.
 
அதே போல் மனதின் வேதனைகளும் உதவிகளைக் கொண்டு குணமடைந்திட வேண்டும். அது போன்ற உதவிகள் சிலவற்றைக் காண்போம். 
 
அவைகளில் ஒன்று காலம். காலம் ஒரு நல்ல மருந்தாக உதவும். ஆனால் அதற்காக பல வருடங்கள் வேதனையில் வாழ்ந்திட எவராலும் முடியாது. இதற்கென தனித்திறமை வாய்ந்த வல்லுனரின் உதவியை நாடுவது மற்றொரு வகை உதவி. 
 
வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் பல வகையான சிகிச்சைகள் பலன் தருபவையே. 
 
சிகிச்சைகள் எதுவும் பெறாமல் இருப்பதும் ஒரு விதமான சிகிச்சையே. 
 
உங்கள் வேதனைகளிலிருந்து மள்வதற்காக பல ஆயிரங்களை செலவிடுமுன், ஓரு எளிய பயிற்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம். 
 
இப்பயிற்சி உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை மாற்றாது. மாற்றவும் முடியாது. ஆனால் பயிற்சி உங்கள் உணர்வில் மாற்றம் ஏற்படுத்தும். உங்களுடைய உணர்வுகளை பிரித்துப் பார்க்க உதவும். நிகழ்வுகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.
 
பயிற்சியை ஆரம்பிப்போமா? 
 
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள். மேற்கூறிய வாக்கியங்களை வேகமாக படித்திருந்தால் நிதானமாக பயிற்சியை செய்து பாருங்கள். அற்புதமான உணர்வினைப் பெறுவீர்கள். 
 
இப்போது எதிர்மறையாக செய்து பாருங்கள். அந்தக் காட்சியை சிறிது சிறிதாக உங்களுக்கு தெளிவற்ற தூரத்தில் கொண்டு செல்லுங்கள். இப்போது உங்களுள் ஏற்படக்கூடிய மாற்றத்தையும் உணருங்கள். 
 
காட்சி பெரிதாகவும், தெளிவாகவும் தெரியும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்? காட்சி சிறிதாக தெளிவற்று தெரியும்போது உங்களுள் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? காட்சி தெளிவாகவும், பெரிதாகவும் தெரியும்போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதேநேரம் சிறிதாகவும், தெளிவற்றும் காணும்போது உணர்வுகளற்று இருக்கிறீர்கள்.
 
இப்பயிற்சி உங்களுக்கு வேதனையளிக்கூடிய நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கு எவ்வாறு உதவுகிறதென்று பார்ப்போமா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு நினைவை காட்சியாக எண்ணிக் கொள்ளுங்கள். அதை பெரிதாக்கி அருகில் தெளிவாக காணும்போது நீங்கள் அனுபவிக்கக்கூடிய வேதனை அளவற்றது. அதே காட்சியை சிறிதாக தொலைவில் தெளிவற்று காணும் போது வேதனை குறைவதை உணர்வீர்கள்.
 
தன்னிரக்கம், மோசமான நிலை மற்றும் வாழ்வில் யாதொரு பிடிப்புமற்ற நிலை போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் தெளிவான, பெரிதாக்கப்பட்ட, விருப்பமற்ற காட்சிகளை மிக அருகில் காண்பர். அவர்களால் மகிழ்ச்சியளிக்கக் கூடிய எண்ணங்களை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த மாற்றத்தைப் பெறுவார்கள்.
 
நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதனாலேயே பிறந்த நாள், திருமண நாள், சண்டையிட்ட நாள், அவமானமடைந்த நாட்கள் போன்றவைகளை நாம் எளிதாக நினைவில் கொள்கிறோம். அது போன்ற நினைவுகள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆதலால் இப்பயிற்சியைப் பின்பற்றுவது நன்கு பலனளிக்கும். 
 
வேதனை தரும் நினைவுகளை சிறிதாக்கி உங்களிடமிருந்து விலகுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். நினைவுகள் விலகி மறைவது போல அவை ஏற்படுத்தும் வேதனைகளும் விலகி மறையும். 
 
http://www.yarl.com/forum3/index.php?showtopic=112806&page=9

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: .

நிராகரிப்பு என்னும் பதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்  உண்மை,நீதி ,தர்மம் ....................இவை சாராமல் நிராகரிக்கப்படும் நிராகரிப்புகள் என் மனத்தை உறுத்த்துவதில்லை ................ஆகவே எனக்கு அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை ..............................

  • கருத்துக்கள உறவுகள்

இது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் .போன வருட யாழ் இந்து இரவு போசன நிகழ்விற்கு பிரதம விருந்தினர் அமெரிக்காவில் இருந்து வந்தார் .அவர் படிக்கும் காலங்களில் GCE O/L இல்   7D 1Cயும் ,GCE A/L இல்  3A 1B யும் எடுத்தவர் .ஆனால் அந்த வருட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரே இருக்கவில்லை .எனக்கு முதலிடம் எனது நண்பன் ஒருவனுக்கு இரண்டாம் இடம் இருந்தது .

பரிசளிப்பு விழா அன்று முதலிடம் அவருக்கும் இரண்டாம் இடம் எனக்கும் கிடைத்து .இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை .முப்பது வருடங்களுக்கு பின்னர் போன வருடம் அவரை சந்திக்கும் போது அதை சொன்னேன் அவருக்கு சரியான கோவம் வந்துவிட்டது .தனக்கு அது பற்றி தெரியாது என்றார் .

முப்பது வருடங்கள் மறந்திருந்த அந்த நிராகரிப்பு எங்கேயோ மறைந்து இருந்திருக்கின்றது தானே .

கவலைப் படாதீர்கள், அர்ஜுன்! காலம் அவரிடம் தோற்றுப்போய் விட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்! காலம் பொதுவாகக் 'காயங்களை' ஆற்றிவிடும் வலிமை படைத்தது!

சில பேர் பாலை மரம் போல! வயது போகப்போக, உள்மரம் மேலும் மேலும் வலிமை பெறுகின்றது!

சில பேர் முருக்கமரம் போல.... :o

சில நாட்களுக்கு முன் எனது வேலையில் நான் நிராகரிக்கப்பட்டேன் .....அது பற்றி ஒரு திரியும் திறந்துள்ளேன் .....................ஆனால் அங்கே உண்மை இருக்கவில்லை ...............அந்த நேரத்த்தில் நான் எடுத்த முடிவு எந்தளவு உண்மையானதோ ................அது இன்று பிரதிபலிக்க தொடங்கிவிட்டது ................

ஆகவே எம்மை நிராகரிக்கப்படும் போது ...அது பிழையான நிராகரிப்பாக இருந்தால் ,அங்கே ஏன்,எதற்கு என்ற காரணங்களை பகிர்த்தறிந்து ...............அந்த காரணிகளை உடைத்தெறியும் எம் செயல்பாட்டிலேயே  எம் இனிய நேரங்கள் தங்கியுள்ளது ................ :)

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிக்கப்படுவதன்,ஏமாற்றப்படுவதன் வேதனையை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அதுவும் நன்றாக பழகினவர்களே இப்படியான கேடு கெட்ட வேலை செய்தால் அதை விட கொடுமை வேறெதுவும் இல்லை

உண்மை தான்..என்ன செய்வது புரிந்து கொள்ள முடியாதவர்கள் அப்படியே தான் இருக்க பிரியப்படுகிறார்கள்..

சொல்லிக்கொள்வதற்கு ஒன்று,இரண்டு அல்ல...வேலை இடங்களில் மற்றும் இதர விடையங்கள் எம்மோடு தொடர்பு தூரத்தில் இருப்பவகைள் நிராகரிப்பு செய்தால் ஆ கிடந்தார்கள்...என் திறமை எனக்கு கை கொடுக்கும் என்று விட்டு திரும்பி பாராமல் போய்க்கொண்டே இருக்கலாம்..

ஆனால் நன்கு பழகப்பட்டவர்கள்,விருப்பமானவர்கள் கொடுக்கும் தண்டனை இருக்கே...சொல்லி மாளாது..அப்படியானவர்கள் மற்றவர்களின் மனதை அறியாமலே இருந்துட்டு போகட்டும் பாவங்கள்..பழகியவர்களை நிராகரித்தால் தான் தங்களுக்கு சந்தோசம் என்றால் என்ன செய்ய முடியும்..நாமள் ஒரு யூஸ்லெஸ்ஸாக இருக்கிறம் போலும்..

ஏன் இதைக் கொண்டு வந்து பேசாப் பொருளுக்குள் பதிந்தார்களோ தெரியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.