Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு தண்ணீர்: விவசாயிகள் ஒப்புதலில்லை

Featured Replies

131019132546_c_v_vigneswaran_624x351_bbc

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கள் குறித்து கவனம் செலுத்தப்படாவிட்டால், யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உடன்பாடு இல்லாத காரணத்தினால் இந்தக் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்ற நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கிளிநொச்சியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் இரணைமடுக்குளத்தின் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் தமக்கு ஏற்படவுள்ள பாதிப்புக்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து வட மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், முக்கியஸ்தர்களிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். 

இந்தக் குடிநீர்த்திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசனை அதிகாரி எஸ்.எம்.குரூஸ் மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் இரணைமடுக்குளத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர் பாலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

விவசாய அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தத் திட்டத்தினால் ஏற்படப்போகின்ற விவசாயச் செய்கைக்கான பாதிப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர்த்தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும், இந்தக்குடிநீர்த் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் விவசாயிகளைப் பாதிக்கத்தக்க வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கருதும் விடயங்களையும் சுட்டிக்காட்டி, இந்த சிக்கல்களுக்கு வடமாகாண சபை நல்லதொரு தீர்வைக்காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

131019132337_iranai_madu_304x171_bbc_noc

 

குடிநீர்த்திட்டம் தொடர்பான விபரங்கள், இதுவரையில் நடைபெற்றுள்ள வேலைகளின் நிலைமைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.

இதனையடுத்து, இந்த விடயம் குறித்து வடமாகாண சபை செயற்படத் தொடங்கியதும் உடனடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/10/131019_farmersoniranaimaduwater.shtml

  • Replies 53
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

131019132546_c_v_vigneswaran_624x351_bbc

 

ஏன் போத்திலை   சரிச்சு வைச்சிருக்கினம்?

  • கருத்துக்கள உறவுகள்

131019132546_c_v_vigneswaran_624x351_bbc

 

ஏன் போத்திலை   சரிச்சு வைச்சிருக்கினம்?

நான்கு பேருக்கு இரண்டு போத்தல் தண்ணீர் !   :unsure: பங்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக சரித்து வைத்திருக்கினம் என்று நினைக்கின்றேன். :D  

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பூநகரி போன்ற இடங்களுக்கு நீர் விநியோகம் சரியாக செய்யப்படாத நிலையில் ஏன் யாழ்ப்பணத்துக்கு நீர் கொண்டு செல்லப்படுகின்றது போன்ற விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.வன்னியின் தேவையை நிவர்த்தி செய்த பின்னர் யாழ்ப்பணத்துக்கு நீர் கொண்டு போவது பற்றி சிந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பூநகரி போன்ற இடங்களுக்கு நீர் விநியோகம் சரியாக செய்யப்படாத நிலையில் ஏன் யாழ்ப்பணத்துக்கு நீர் கொண்டு செல்லப்படுகின்றது போன்ற விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.வன்னியின் தேவையை நிவர்த்தி செய்த பின்னர் யாழ்ப்பணத்துக்கு நீர் கொண்டு போவது பற்றி சிந்திக்கலாம்.

 

 

இத்திட்டம்

மகிந்தவின் வடக்கில்  வசந்தம் மூலம் மக்களிடம் பரப்பப்படடது

இதன்படி

தீவுப்பகுதிகளுக்கும் (புங்குடுதீவு  உட்பட)

நீர்வளங்கலை செய்ய  முடியும் என அப்பகுதி  மக்களுக்கு சொல்லப்பட்டது.

நாங்கள் எமது ஊரில் சில நீர் சம்பந்தமான முயற்சிகளை  செய்தபோது

இதனால்  பயனடையலாம்

எனவே வேறு முயற்சி தேவையற்றது என அங்குள்ள இது சம்பந்தமான படிப்புக்களை மேற்கொண்டவர்களால்  கூறப்பட்டிருந்தது

தற்பொழுது 

அதுவும் இல்லை

இதுவும் இல்லை........... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

 

131019132546_c_v_vigneswaran_624x351_bbc

 

ஏன் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கதிரை தாழ்ந்துபோய்க் கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிப்போத்தில சரித்து வச்சு, புலம் பெயர் புண்ணியவான்களின் மனதை புண்படுத்தியதற்க்கு விக்னேஸ்வரன் சம்பந்தன் மன்னிப்பு கேட்க்க வேண்டும்.

தண்ணிப்போத்தலை கிடையாய் வைக்கவா மக்கள் உங்களுக்கு வாக்குப்போட்டார்கள்?

76 இல் வட்டுக்கோட்டையில் இருந்து நாம் போத்திலை நிமித்திதானே வைத்தோம்? அதுதானே மக்கள் ஆணை?

விக்னேஸ்வரன் அரசின் காலில் விழுந்து விட்டார் அவர் ஒரு மேட்டுக்குடி போர்சுவா என்பதற்கு இந்த சரித்து வைக்கப்பட்ட போத்திலை விட்வும் வேறு ஆதாரம் வேண்டுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கதிரை தாழ்ந்துபோய்க் கிடக்கு?

 

கேள்வியல் எண்டால் அந்தமாதிரியாக் கிடக்குது!
 
பின்னுக்கு புரஜக்டர்ல படம் காட்டுகினம். அந்தாளிண்ட தலை மறைக்கும் எண்டு தான் கதிரையை பதிச்சு வைச்சிருக்கு.
 
விளங்கிச்சுதோ?
  • கருத்துக்கள உறவுகள்

இரணை மடு தூர்வாரினால் மழை நீரை மேலும் அதிகளவு சேமிக்கலாம். நிச்சயம் பூநகரி போன இடங்களுக்கும் நீர் பங்கிடப்பட் வேண்டும். இவ்வாறான விடயங்களை சரியான முறையில் சுமூகமாக நாம் தீர்த்துகொல்வதன் மூலம் நம்மை நாமே ஆளும் தகமைஉடையோர் நாம் என நிறுவலாம்.

மேலும் தொண்டைமனாற்று பாலம், ஆனையிறு கடல் சேர்க்கை ஆகியவற்றை தடுத்தாலே காலப்போக்கில் யாழில் ஓர் நீண்ட நன்னீர் ஏரியை ஏற்படுத்தலாம். இதனால் நிலத்தடி நீரின் உவர்ப்பும் குறையும். ஒரு 10 வருடத்தில் நீரும் பாசனத்துக் ஏற்ப அமையும். பின்னர் இரணைமடுவை இணைக்கலாம்.

வன்னியின் எனைய குளங்களையும் தூர்வாரி ஒரு வலைப்பின்னலை ஏற்ப்படுத்தலாம்.

தமிழ் நாட்டு அரசிடம் ஒரு கடல் நீரை நன்னீராக்கும் நிலையம், மழைநீர் சேகரிப்பு ஆலோசனை தரும் படி கேட்கலாம்.

  • தொடங்கியவர்

இரணை மடு தூர்வாரினால் மழை நீரை மேலும் அதிகளவு சேமிக்கலாம். நிச்சயம் பூநகரி போன இடங்களுக்கும் நீர் பங்கிடப்பட் வேண்டும். இவ்வாறான விடயங்களை சரியான முறையில் சுமூகமாக நாம் தீர்த்துகொல்வதன் மூலம் நம்மை நாமே ஆளும் தகமைஉடையோர் நாம் என நிறுவலாம்.

மேலும் தொண்டைமனாற்று பாலம், ஆனையிறு கடல் சேர்க்கை ஆகியவற்றை தடுத்தாலே காலப்போக்கில் யாழில் ஓர் நீண்ட நன்னீர் ஏரியை ஏற்படுத்தலாம். இதனால் நிலத்தடி நீரின் உவர்ப்பும் குறையும். ஒரு 10 வருடத்தில் நீரும் பாசனத்துக் ஏற்ப அமையும். பின்னர் இரணைமடுவை இணைக்கலாம்.

வன்னியின் எனைய குளங்களையும் தூர்வாரி ஒரு வலைப்பின்னலை ஏற்ப்படுத்தலாம்.

 

உண்மைதான் இந்த திட்டமும் என் மனதில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு திட்டம் . இதுவே இதற்கு தீர்வை இருக்கும் 

யாழ்ப்பாணத்தில் இயற்கையான நிலக்கீழ் சுண்ணப்பாறைகள் இருக்கிண்றன...  அவைகளை சீமெந்துக்காக தோண்டி எடுக்காமல் விட்டாலே நிலத்துக்குகீழ் இயற்கையாக  நீர் சேமிக்கப்படும்...   

 

மண்ணுக்கு மேல் பெய்யும் மழை நீர்  வழிந்தோடி கடலில் கலக்க வைக்காமல்  மண்ணுக்குள் ஊறு சுண்ணப்பாறைகள் மீது சேமிக்க வைக்கும் பொறி முறையை  உருவாக்கினாலே யாழில் இருக்கும் பெரும் பிரச்சினை தீரும்... 

 

யாழ்ப்பாணத்தில் , சவர் தன்மையான நீர் குடிக்க முடியாமல்  இருப்பதுக்கு காரணம்களில் ஒண்று  கிணறுகளுக்கு அருகில் இருக்கும் சில வகையான  மரங்களின் வேர்கள் தான் முக்கிய பங்காற்றுகிறது எண்டு தமிழீழ பொருண்மிய கண்காட்சி ஒண்றில் சொன்னார்கள்...    இவைகளை கவனத்தில் எடுத்தால்  இரணைமடு குளத்து நீரை நம்பி விவசாயம் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரிய அளவில் கைவைக்காமல்  செயலாற்ற முடியும்.. 

  • கருத்துக்கள உறவுகள்

இரணை மடு தூர்வாரினால் மழை நீரை மேலும் அதிகளவு சேமிக்கலாம். நிச்சயம் பூநகரி போன இடங்களுக்கும் நீர் பங்கிடப்பட் வேண்டும். இவ்வாறான விடயங்களை சரியான முறையில் சுமூகமாக நாம் தீர்த்துகொல்வதன் மூலம் நம்மை நாமே ஆளும் தகமைஉடையோர் நாம் என நிறுவலாம்.

மேலும் தொண்டைமனாற்று பாலம், ஆனையிறு கடல் சேர்க்கை ஆகியவற்றை தடுத்தாலே காலப்போக்கில் யாழில் ஓர் நீண்ட நன்னீர் ஏரியை ஏற்படுத்தலாம். இதனால் நிலத்தடி நீரின் உவர்ப்பும் குறையும். ஒரு 10 வருடத்தில் நீரும் பாசனத்துக் ஏற்ப அமையும். பின்னர் இரணைமடுவை இணைக்கலாம்.

வன்னியின் எனைய குளங்களையும் தூர்வாரி ஒரு வலைப்பின்னலை ஏற்ப்படுத்தலாம்.

தமிழ் நாட்டு அரசிடம் ஒரு கடல் நீரை நன்னீராக்கும் நிலையம், மழைநீர் சேகரிப்பு ஆலோசனை தரும் படி கேட்கலாம்.

பச்சை முடிந்து விட்டது goshan_che நான் பார்த்ததில் உங்களிடம் இருந்து வந்த ஆக்கபூர்வமான கருத்தாடல் நன்றி goshan_che.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இயற்கையான நிலக்கீழ் சுண்ணப்பாறைகள் இருக்கிண்றன...  அவைகளை சீமெந்துக்காக தோண்டி எடுக்காமல் விட்டாலே நிலத்துக்குகீழ் இயற்கையாக  நீர் சேமிக்கப்படும்...   

 

மண்ணுக்கு மேல் பெய்யும் மழை நீர்  வழிந்தோடி கடலில் கலக்க வைக்காமல்  மண்ணுக்குள் ஊறு சுண்ணப்பாறைகள் மீது சேமிக்க வைக்கும் பொறி முறையை  உருவாக்கினாலே யாழில் இருக்கும் பெரும் பிரச்சினை தீரும்... 

 

யாழ்ப்பாணத்தில் , சவர் தன்மையான நீர் குடிக்க முடியாமல்  இருப்பதுக்கு காரணம்களில் ஒண்று  கிணறுகளுக்கு அருகில் இருக்கும் சில வகையான  மரங்களின் வேர்கள் தான் முக்கிய பங்காற்றுகிறது எண்டு தமிழீழ பொருண்மிய கண்காட்சி ஒண்றில் சொன்னார்கள்...    இவைகளை கவனத்தில் எடுத்தால்  இரணைமடு குளத்து நீரை நம்பி விவசாயம் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரிய அளவில் கைவைக்காமல்  செயலாற்ற முடியும்.. 

உண்மைதான் சோழககாற்று அடித்துவீசும் வறண்ட காலபகுதிகளில் யாழ் கிணற்று தண்னீர் கலர் சோடா மாதிரி வந்துடும் அதுவும் பழை மிருசுவில் ஒரேன்ஞ் பார்லி சோடாகலரில் கசப்பாய் இருக்கும் தண்னீர்.

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றைச் சுற்றி மாதுளை மரம் இருந்தாலும் தண்ணீர் கசக்கும் என்று சொல்வார்கள் . :( எங்கள் வீட்டில் மூன்று மாதுளை கிணற்றைச் சுற்றிவர நின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டுக்கு இரணைமடுக்குளத்துநீரை கொண்டுசெல்வதை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். காரணம் இப்படிச்செய்வதால் யாழ் குடாநாட்டுமக்களுக்கு தன்ணீர் முகாமைத்துவத்தைப்பற்றிய எந்தவித அறிவும் எதிகாலத்துக்குக் கிடைக்காதுபோகும், தங்களது வளங்களை தாங்களே கரிசனைகொண்டு சேமிக்கும் தன்மை மற்றும் அவ்வளங்கள் மாசுபடுமானால் அன்றேல் அதை அவர்கள் முற்றிலுமே இழக்கநேரிடும் சந்தர்ப்பம் ஏற்படுமானால் அவர்களே தங்கள் பிரதேசங்களில் மாற்று ஏற்பாடுகளையோ அன்றேல் அவ்வளங்களை திரும்பவவும் பெற்றுக்கொள்வதற்கோ அவர்களே முனையவேண்டும். இரணைமடுத் தண்ணீரை வன்னிமக்களிடமிருந்து பகிர்ந்துகொள்ளும் தார்மீக உரிமைகூட இவர்களுக்கு இல்லை. காரணம் யாழ்ப்பாணாத்துக் கனவான்கள் வன்னிக்குழந்தைகளது கல்விகற்கும் உரிமையயே பறித்தவர்கள் ஆம், இவர்களில் அனேகர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வன்னிப்பாடசாலைகளில் கல்விகற்பிப்பதற்கு முன்வராது இப்போதும் வைத்திய விடுமுறையிலோ அன்றேல் வேறு சாக்குப்போக்குகள் சொல்லியோ அக்குழந்தைகளது கல்விகற்கும் உரிமையைப் பறித்த அயோக்கியர்கள் நிறைந்த யாழ்குடாநாட்டு மக்களுக்கு தண்ணீரைப்பகிர்வதில் எவ்விதத்திலும் நியாயமில்லை.

 

தவிர கோசன் சொன்னதுபோல் தொண்டைமனாறு கடல் களியாற்றினை செப்பனிடுதல்மூலமும், சுண்ணப்பாறைகளை பாதுகாப்பதன்மூலமும் தண்ணீர்த்தேவையைப் பூர்திசெய்யலாம்.

 

இவ்வளவுக்கும் மத்தியில் நான் யாழ் நகரின் மையப்பகுதியிலேயே பிறந்துவளர்ந்தேன் எனக்கும் வன்னிக்கும் சொல்லிக்கொள்ளும்படியான எத்தொடர்பும்  இல்லாதுவிடினும், இதை நான் அனுமதியேன். பொறுப்பற்ற ரீதியில் சூழலை மாசுபடுத்தி தண்ணீரை உவர்நீராகச் செய்ததில் முக்கிய பங்கு யாழ்ப்பாணத்துக் கல்விச்சமுதாயத்துக்கும் உண்டு. இவர்களே கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட அபிவிருத்திக்குத் தடையாக இருப்பவர்கள்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி விவசாய நிலங்களின் சொத்து. இரு போக பயிற்செய்கைக்கு உகந்ததும் கூட. எனவே அதற்குரிய நீர் வளம் சேமிக்கப்பட்ட பின்.. அண்டை மாவட்டங்களுக்கு நீர் பங்கீடு செய்யப்படுவதில் தவறில்லை.

 

யாழ் குடாநாடு.. உவர் நீராதல் பிரச்சனையை பெருமளவில் சந்தித்து வரும் நிலையில்.. வன்னியில் உள்ள மேலதிக நீர் குடாநாட்டு.. விவசாய நோக்கங்கள்.. குடிநீர் நோக்கங்களுக்காகக் கொண்டு செல்லப்படுதல்.. இரண்டு பிராந்தியங்களும் நெருங்கி ஒருவருக்கு ஒருவர் தங்கி இருப்பதும்.. ஒத்துழைக்கும் பாங்கும்.. இன்னும் அதிகரிக்கும்..! அது வட தமிழீழ மக்களிடையே உறுதியான பிணைப்புக்களை உண்டு பண்ணும்.

 

அதேபோல்.. தென் தமிழீழத்திற்கு வரும் மகாவலியை தென் தமிழீழத்தின் நீர்தேவை பகுதிகளூடு.. வன்னியை நோக்கி கொண்டு வருதலும்... எதிர்கால நீர்த் தேவைகளை சரிக்கட்ட உசிதமான நடவடிக்கைகளாக இருக்க முடியும். ஆனால் 100% மகாவலியை நம்பி இருப்பது.. சிங்களத்திடம் கையேந்து நிலைக்கு எம் மக்களைக் கொண்டு செல்லும். சுய நன்னீர் வள இருப்பை.. சேமிப்பை வளர்க்கும் அதேவேளை கடலில் கலக்கும் நன்னீரை சேமித்துப் பரிமாறும் மார்க்கங்களை தேடுதல் நல்லது. இவை நன்னீர் ஏற்றுமதிக்கும் உதவலாம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்து விட்டது நெடுக்குத்தம்பி.யாழ்ப்பாணத்துக்குளங்களையும்,கிணறுகள் ,ஏனைய நீர்த்தேக்கங்களைத் தூர்வாரி நீரைத்தேக்க வேண்டும்.பெய்யும் மழைநீரை ஒரு சொட்டும் கடலில் கலக்காதவாறு நீர்த் தேக்கங்களை உருவாக்கி மழைநீரைத்தேக்க வேண்டும்.அதேநேரம் கடும் மழையின்போது வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் சிறந்த வடிகால்களை அமைப்பதன் மூலம் வெள்ள நீரை நீர்த்தேக்கங்களை நோக்கி திசை திருப்ப வேண்டும்.அதை விட தமிழ்நாட்டில் செய்தது போல ஒவ்வொரு வீட்டிலும் நீர்த் தொட்டிகளை நிறுவி மழைநீரைத் தேக்க வேண்டும்.இப்படிச்செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கான நீர்த்தேவையை ஓரளவுக்குப் பூர்த்தி செய்யலாம்.இதே போல வன்னிஇமன்னார்.கிழக்கு மாகாணம் போன்றவற்றிலும் செய்தால் நாம் நீருக்கு யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.பயன்படுத்தப்படாமல் இருக்கும்பொட்டல்காடுகளை நீர்த்தேக்கங்களை அமைப்பதற்குப் பயன்படுத்தலாம்.நீர்வளம் இருந்தால் விவசாயம் பெருகும்.மக்கள் பொருளாதாரதன்னிறைவு அடைவார்கள். வரப்புயர நீர்உயரும்! நீர் உயர நெல்உயரும்! நெல் உயர குடி உயரும்! குடி உயரக் கோன் உயர்வான். வடமாகாணசபை இந்த விடயத்தில் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்ன யாழ் கடல்நீரேரியை நன்னீரேரியாக்கும்ம்திட்டம் 48 க்கு முன்பே திட்டமிடல் நிலையில் இருந்ததோடு, 30 ஆண்டுகளுக்கு முன் அரைவாசி வேலைகளும் முடிந்து விட்டிருந்தன. எனவே இது எனது ஐடியா இல்லை. மேலும் அது மாகாண சபையால் இலகுவில் செய்யக்கூடிய வேலைத்திட்டம். பெரிதாய் செலவழியாது. என்ன சூழல் பிரச்சினைகளை தகுந்த முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

நெடுக்கு சொல்வது போல் கிழக்கில் இருந்து மகாவலி வடக்கு நோக்கி திரும்ப புவியியல் இடம் கொடாது. அப்படி செய்தாலும் பொருள் கால்ப்பணம் சுமை முக்கால் பணம் எனும் நிலையே மிஞ்சும்.

சிலசமயம் பராக்கிரம சமுத்திரத்தில் வைத்து ஐரோப்பிய நாடுகளில் இருப்பதை போல ஒரு புவியல் உயரத்துகேற்ப்ப மாறும் வாய்க்கால் (canal) ஒன்றை அமைத்து, மின்னேரியா, கடுல்ல வாவிகளுடன் இணைத்து பாவற்க்குளம் அல்லது பதவியா வழியாக இரணைமடுவை அடைந்து அங்கிருந்து ஆனையிறவில் போய் யாழ் நீரேரியில் கலக்க செய்யலாம். இது முற்று முழு வடமாகாண நீர்ப்பிரச்சினையையும் தீர்க்கும். இத்துவும் எனது ஐடியா இல்லை.

ஆனால் சட்டப்படி ஆற்றுப்படுக்கை குறிப்பாக மகாவலி திட்டங்கள் நடைபெறும் பகுதி காணியதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமானதே. இப்போதிருக்கும் காணி அதிகார பிரச்சினைகளை பார்க்குமிடத்து, இது உள்ளதையும்ம்கெடுத்த நொள்ளை கண்ணன் நிலையாகிவிடலாம்.

தல, சுண்ணாம்பு அகழும் கிடங்குகளை முடிந்தால் செயற்க்கை நீரேரிகளாக்கலாம். இல்லாதுவிடின், ஆலையை மூடுவதைதவிர அல்லது வேறு வழியில் சீமேந்து தயாரிப்பதை தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகாவலியை வாகரையின் பெரும் பகுதிக்கும்...மணலாறு ஊடாக வன்னிக்கும் கொண்டு வரும் திட்டத்தை சிங்களம் ஏலவே தீட்டி இருந்தது..! மணலாற்று சிங்களக் குடியேற்றங்களின் பயிர்செய்கைக்காக இந்தத் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

 

அப்படி வாறதை இரணைமடுவில் இணைக்க முடியாது என்றில்லை..! அது சாத்தியமோ இல்லை என்றும் இல்லை ஆனால் இன்று உள்ள அளவில் இருந்தும்.. இரணைமடுவின் நீர்க் கொள்ளவை அதிகரிப்பதன் மூலம்.. வடக்கின் இதர நன்னீர் தேவை அதிகம் உள்ள பகுதிகளுக்கு நீர் வழங்கலை கூடிய சாத்தியமாக்கவும் முடியும்.

 

வன்னியில் பெருமளவு நன்னீர் வீணாகிறது. அவற்றை நன்றாக தேக்கி வைக்கும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுவதும்.. உள்ள நீர் நிலைகள் மேம்படுத்தப்படுவதும்.. மாரிகாலத்தில் நீர் வீணாதல் தடுக்கப்படுவதும்.. அவற்றை சேமிப்பதும்.. இந்த இரணமடு நீர் உபயோகத்திட்டத்தின் தொடர்ச்சியாக அமைதலே சிறப்பு..! :icon_idea::)


அதேபோல் மன்னார் மாவட்டத்தின் கட்டுரைக் குளமும்.. அந்த மாவட்டத்தின் நன்னீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. அதனையும் ஏனைய வன்னியில் உள்ள குளங்களையும் அபிவிருத்தி செய்வதோடு யாழ் குடாவில் உள்ள சிறு குளங்களில் நீர்த்தேக்கத்தை அதிகரிக்கும் வாய்ப்பையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆரிய குளம் எல்லாம் எப்போதுமே வற்றாத குளமாக உள்ள போதும் சரியான நீர் பராமரிப்பின்றி.. அந்தக் குளம் கழிவு நீர்க் குளமாகி உள்ளது. ஆரிய குளத்தை சிறந்த நீர்த்தேக்கமாக்கும் திட்டம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திடம் 1990 களிலேயே இருந்தது..! இது குறித்த சாத்தியப்பாடுகளை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் அன்றைய காலங்களில் நல்லூரில் நடத்திய கண்காட்சியில் சிறந்த முறையில் மக்களுக்கு விளக்கியும் இருந்தனர். அவற்றை எல்லாம் நல்ல முன் மாதிரியாகக் கொள்ள முடியும். :icon_idea:

Edited by nedukkalapoovan

இரணைமடுத் தண்ணீர் கிளிநொச்சி வயல்களுக்கே கோடைப்போகத்துக்கு பத்தாது.
 
நீர்ப்பங்கு எனப்படும் முறைமூலம் தான் விவசாயிகளுக்கு நீர்வளங்கப்படுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளில் யாழ் வலிகாமத்தில்  இரண்டு நன்னீர் திட்டங்கள் போடப் பட்டது. அதில் ஒன்று நிலாவரைக் கிணற்றில் இருந்து குடிநீரை  பகிர்ந்து கொள்வது.அடுத்தது வழுக்கையாறு தொட்டு செல்லும் அனைத்து குளங்களையும் ஆழப் படுத்தி வழுக்கையாற்றில் அணைகளை ஏற்படுத்தி மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை வளப் படுத்துவதோடு விவசாயத்திற்கும் பயன்படுத்துவது. இவை இரண்டுமே அன்றைய போராட்ட சூழலால் பாழடைந்த திட்டங்கள். இதற்காக அமெரிக்காவில் இருந்து வந்த வந்த பொறியியலாளர்கள்தான் அலன் தம்பதிகள். இதற்குமேல் போனால் வழைமையான அரசியலாகி விடும்.அடுத்ததாக

goshan_che சொன்னது போல போல தொண்டைமானாறு நன்னீர் ஏரியை கடலில் கலக்காமல் அணை போட்டு தடுக்கலாம்.

நிலாவரை கிணற்றைப் போல நவாலியிலும் ஒரு வற்றாத கிணறு ஒன்று பாழடைந்து உள்ளது அதனை இடி விழுந்த கிணறு என்று சொல்வார்கள்.அதனை புனரமைத்தாலும் நல்ல குடிநீர் பல கிராமங்களிற்கு வழங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நீங்கள் சொல்வது இடிகுண்டு தானே. இதுவும் நிலாவரையும், நிலக்கீழ் ஆறு ஒன்றின் வெளித்தள்ளும் புள்ளிகளாய் இருக்கலாம் என்பது என் அனுமானம். நான் நினைக்கிறேன் யாழிற்க்கு கீழே ஒர் subterranean river ஓடுகிறது. அதுவும் எதோஒரு இடத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் நிலத்துக்கு கீழாகவே கடலில் கலக்கிறது. இந்த நிலக்கீழ் முகத்துவாரங்களை கண்டுபிடித்தால், அவற்றை தடுத்து அணை கட்டினால்,நாம் பெரும் செயற்க்கை நீரேரிகளை அமைக்கலாம், மேலும் வல்லை வெளி போன்ற உவர் நில கண்டல்களை நன்னீர் சுவர்க்கங்கள் ஆக்கலாம்.

ஆனால் இது பெரிய வேலை, மாகாணசபை மட்டுமல்ல இலங்கைஅரசாலுமே ஏலுமோ தெரியாது.

வழுக்கையாறை மறிப்பதுடன், சீரணி கேணி, ஐந்து கண்மதவை வைத்து சண்டிலிபாய்/எளுமுள்ளி பகுதியில் ஒரு சிறு நன்நீர்த்தேக்கமும் அமைகாலாம். இது புலம் பெயர் வலி மேற்கு அமைப்புகள் மற்ரும் மாகாணசபை சேர்ந்து செய்யக்கூடிய வேலை. ஆனால் எங்களுக்குதான் மருதடியானை கருங்கல்லில் அமைப்பது, அந்தோனியார் கோவிலுக்கு பெயிண்ட் அடிப்பது போல மிக முக்கிய வேலைகள் இருக்கிறனவே.

  • கருத்துக்கள உறவுகள்

மில்க்வைட் கனகராசா இருந்த காலத்தில் வடமாகாணத்தில் உள்ள ஏராளமான குளங்களை தூர்வாரி புனரமைத்து நிலத்தடி நீரைப் பாதுகாத்து வந்ததுடன் விழிப்பணர்ச்சி கூட்டங்களையும் நடத்தினார். அவருடைய காலத்தில்தான் மரம் வளர்ப்பினை ஊக்குவிக்கும் செயலும் நடைபெற்றது.

 

இதற்காகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது காலில் வீழ்ந்து வணங்கினார்.

 

இவ்வாறானவர்கள் எல்லாம் தற்போது இல்லை. அந்த இடத்தினை நிரப்ப ஓரளவு ஐங்கரநேசன் என்கின்ற தனிநபர் அமைச்சராவதற்கு முன்னரே தனது சொந்தச் செலவில் சுவரொட்டிகளையும் ஒட்டி விழிப்புணர்வு கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

 

வடபகுதியில் இன்று மண் வளத்தினை சீரழிக்கின்ற பணியினையே அந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னர் எல்லாம் மங்கல அமங்கல நிகழ்வுகளில் எல்லாம் வாழை இலையில் உணவு பரிமாறினர். ஆனால், இன்றோ கோப்பைகளில் பொலித்தீன் பேப்பர்களை வைத்து உணவுகளைப் பரிமாறுகின்றனர். அதே போன்று பிளாஸ்டிக்கிலான கப்களில் பானங்களையும் வழங்கி வருகின்றனர்.

 

இதனை இங்கே தவறு என்று நான் வாதிட வரவில்லை. ஆனால், உரிய முறையிலான Recycling இல்லாத காரணத்தினால் பலர் பிளாஸ்ரிக் பொருட்களை எரிப்பதும் மண்ணுக்குள் வைத்தும் மூடுகின்றனர்.

 

இதன் காரணத்தினால் அந்த பிளாஸ்ரிக் பொருட்கள் 25 வருடங்களுக்கு மேலாக உக்காது மண் வளத்தினை சீரழிக்கின்றது.

 

அதே போன்று பயிர்களுக்கான கிருமி நாசினிகளை கண்மூடித்தனமாக பாவிப்பதனால் நைதரசன் செறிவு கூடி மண்ணின் வளம் பாதிக்கப்படுகின்றது.

 

இதன் காரணமாக இன்று யாழ். மாவட்டத்தில் நீரில் நைதரசன் செறிவு கூடிய காரணத்தினால் கிட்னி பாதிப்பினால் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்னுமொரு கவலைக்குரிய விடயம் மரங்களை தறிப்பதில் காட்டும் ஆர்வத்தினை மரம் வளர்ப்பதில் எவருமே காட்டுவதில்லை.

 

ஐங்கரநேசனின் முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் நாம் தனிப்பட்ட ரீதியில் உதவி புரிந்தால் நல்லது. அவர் தனிப்பட்ட ரீதியிலேயே பல விடயங்களைச் செய்தும் உள்ளார்.

 

அதே போன்று திருநெல்வேலி விவசாய பீட மாணவர்களும் துடிப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கும் உதவி புரிந்தால் மர வளர்ப்பினையும் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கையினையும் ஊக்குவிக்கலாம்.

 

இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

 

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் காக்கைதீவு வழியாக பயணம் செய்வதில்லையோ என்கின்ற ஐயம் எனக்கு நிறையவே உண்டு.

 

அந்த வழியாக செல்லும் போது வீசும் துர்நாற்றம் சகிக்க முடியாதது. அங்கேதான் யாழ். மாவட்டத்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள் உட்பட அனைத்துக் கழிவுகளையும் கொட்டுகின்றனர்.

 

இதன் காரணத்தினாலேயே அருகில் வசிக்கும் மக்கள் பெருமளவு துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.

 

டக்ளஸ் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அந்த மக்கள் முறையிட்டுப் பார்த்தனர் எதுவுமே நடக்கவில்லை.

 

Recycling முயற்சியினை ஒருவர் அண்மையில் தொடங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால், அது தொடர்பிலான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை என்று நான் அங்கு இருந்த போது பலரும் தெரிவித்தனர்.

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.