Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடலை அழகாக வைத்துக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அதுதான் எல்லோருக்கும் பெரிய பிரச்சனை. பல இடங்களில் இந்த எழு நாள் டயட் ஓடித் திரிய சரி எல்லாம் செய்து பாத்தாச்சு இதை மட்டும் ஏன் விடுவான் என எண்ணி செய்வதென முடிவெடுத்தேன்.

 

முதல் நாள் தனியப் பழங்கள். பழங்கள் உண்பது என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காத விடயம். அதுவும் குளிர் காலத்தில. சரி தொடங்கியாச்சு என்று முதல் நாள் காலையில வெறும் வயிற்றில் உண்டது வாழைப்பழம். காலையில் எழு மணிக்கு காலை  உணவை தொடர்ந்து உண்டுவந்த எனக்கு வாழைப்பழம் ஒரு மணிநேரம் கூடத் தாங்கவில்லை. அடுத்தது எதை உண்ணலாம் என்று எண்ணிவிட்டு தோடம்பழத்தை எடுத்து உரித்தால் அது கொஞ்சம் புளி. வேறு வழியில்லை என அதை மருந்து உண்பதாக எண்ணி மிண்டி விழுங்கியாயிற்று.

 

வீட்டில் அன்று மீன்குழம்பு, பொரியல் என எனக்குப் பிடித்த உணவு. மதியம் கணவர் உண்ணும்போது வாசம் மூக்கைத் துளைக்க கண்டறியாத டயட். பேசாமல் சாப்பிடுவோமா என எண்ணி ஐயோ சரியா பசிக்குதப்பா எந்தன். மனிசன் கொஞ்சம்கூட இறக்கம் காட்டாமல் தொடங்கிவிடாய். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இரு இன்னும் ஆறரை நாள்த்தானே என்று சொல்ல அதை மீறிச் சாப்பிட ரோசம் இடம் குடுக்கேல்ல. நான் என்ன இருக்கமாட்டன் எண்டு நினைச்சியளோ எண்டு வீறாப்பாச் சொல்லிவிட்டு வேறு பழங்கள் வாங்கி வரலாம் என்று எம்மூர்காரரின் கடைக்குப் போனால் பக்கத்தில சாப்பாட்டுக் கடை. சாப்பாட்டுமணம் முக்கியமா வடை, ரோல்ஸ். ஏன் கடைக்கு வந்தான் என்று ஆகிவிட்டது. எதுக்கும் ஒரேயொரு வடை அல்லது ரோல்ஸ்சை வாங்கிச் சாப்பிடுவமோ என்றும் மனம் அலைபாய இதுக்கு மிஞ்சியும் அங்கே நிண்டால் ஆபத்து என்று பப்பாப்பழம், மாம்பழம், கப்பல் வாழை, பேரீச்சம்பழம். விளாம்பழம் எண்டு எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் சரஸ்வதிபூசையோ இண்டைக்கு எண்டு கேட்கிறாள் மகள்.

 

அவ்வளவு பழங்களையும் பாத்திட்டு உதிலும்பாக்க நீ சாப்பாடே சாப்பிட்டிருக்கலாம் என்ற கணவரின் நக்கலைப் புறம்தள்ளிவிட்டு பலன்களை எல்லாம் வெட்டி பலச் சலாது செய்து உன்ன வெளிக்கிட வெறுமனையாக் கிடந்த வயிறு கொஞ்சம் சாப்பிடவே வயிற்றைப் புரட்டியது. இடைக்கிடை கிரீன் டீ, தேநீர் என்று குடித்தாலும் தண்ணீர் மட்டும் குடிக்கவே மனம் வரவில்லை. இரவு அவர்கள் பால் குடிக்கும்படி கூறவில்லை. ஆனால் எனக்கு அது குடித்தால்த்தான் நித்திரை வரும் போல் இருந்ததால் ஒரு கப் பாலைக் காச்சிக் குடித்துவிட்டுப் படுத்துவிட்டேன். அப்பாடா ஒருவாறு ஒருநாள் முடிந்துவிட்டது என்று பெரிய நின்மதியுடன் உடனே தூங்கியும் விட்டேன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 128
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி ஆறு நாட்களும் வெற்றிகரமாக முடிய என் வாழ்த்துக்கள். அடுத்து நான் தொடங்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி, கெளரி காப்பு விரதம், பிள்ளையார் கதை என்று பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்தால் ஏனிந்த பொல்லாலை அடிச்சவேலை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி, கெளரி காப்பு விரதம், பிள்ளையார் கதை என்று பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்தால் ஏனிந்த பொல்லாலை அடிச்சவேலை?

 

அதெல்லாம் அந்தக்காலம். எனக்கு ஒரு நேரம் பட்டினி இருந்தாலே தலை சுற்றும். வேளையில் மயக்கம் வந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் ஏழுமணிக்கே சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவேன்.

 

வருகைக்கு நன்றி நிலா அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் எட்டாம் நாள் கல்லறை டொட் கொம்மை பாத்திட்டு இறங்குவம்

எதுக்கும் எட்டாம் நாள் கல்லறை டொட் கொம்மை பாத்திட்டு இறங்குவம்

 

ஹா ஹா :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது மெலிவதற்கான வழியாத் தெரியேல்லை    :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 உந்த பால் பழங்களை விட ஏழுமிளகும் ஒருமுறடு தண்ணியும் இன்னும் நல்லாய் வேலை செய்யும்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

மனம் சாப்பாட்டுக்கு அலைபாய அலைபாய.... டயற்!

7 நாட்களின் பின் வெயிற் போட்டிருக்கா அல்லது வெயிற் குறைஞ்சிருக்கா எண்டு எழுதிவிடுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

இதுவம் கடந்து போகும், சுமே! :D

 

நான் எண்டால் தலைமயிர், அருந்தப்பில தப்பினதுடனேயே எல்லாத்தையும் விட்டிருப்பன்! :icon_mrgreen:

 

 ம்ம்ம்.............................விதியானப்பட்டது வலியது........அதை யாரும் வெல்ல முடியாது........!!! :icon_idea: 

 

இந்த ஏழு நாள் டயட்டில சொன்னதெல்லாம் பொய்யில்லே ........!!!

 

ஏழாவது நாள், என்ன நடக்கும் என்று அறிய ஆவல்....!

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

ரண்டாம் நாளேயா
  • கருத்துக்கள உறவுகள்

//எனது ழு நாள் டயட்//  தலைப்பு இப்படி இருக்க நான் பயந்து போனன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த  நந்தன், தமிழினி,சகாரா, குமாரசாமி, கறுப்பி,புங்கை, இசை,நெடுக்ஸ் ஆகிய உறவுகளே நன்றி.

இந்த 7 நாள் உணவுக் குறைப்பு முறையினை 7 day cleansing என்று அழைப்பர். இது உடல் மெலிவதற்காக மட்டுமன்றி, சமிபாட்டு உறுப்புகளை ஒருக்கால் service செய்வதற்கும் இதனை கடைப்பிடிப்பர். இதில் முக்கியமானது மாச்சத்து உள்ள பொருட்களையும் கொழுப்பு பொருட்களையும் முற்றாகத் தவிர்ப்பது.  அதிலும் பழங்கள் சாப்பிடும் போது வாழைப்பழத்தினை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

சுமே, முதல் நாளே வாழைப்பழத்தினை வெட்டி விட்டு பிறகு என்ன டயட் வேண்டிக் கிடக்கு? :icon_mrgreen:

 

 

ஏழாவது நாள், என்ன நடக்கும் என்று அறிய ஆவல்....!

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினி கிடப்பது ஒரு விடயம்.. ஆனால் அது உடலில் சுரப்பிகளின் வேலைகளை குழப்பிவிடாமல் இருக்கக்கடவது..

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  மிச்சத்தை காணவில்லை

 

மரண  அறிவித்தல்  பக்கம் :lol:

சி

காணவில்லை பகுதியில்  தேடுவமா?? :lol:  :D  :D


இங்கு 

என்னிடம் வரும் வாடிக்கையாளர் ஒருத்தி

ஆபிரிக்க  பெண்

நல்ல  வடிவாக  இருப்பார்

பொதுநிறம்

நல்ல  உயரம்

அளவான உடம்பு

கொஞ்சம் வயிறு  பெருத்து இருக்கும்

 

போன  மாதம்

வயிற்றிலுள்ள  கொழுப்பை வெட்டி எடுக்கப்போனார்

திரும்பி  வரவே  இல்லை........... :(  :(  :(

நேற்று அவரது மரண  அறிவித்தல் பிரசுரத்தைக்காட்டி ஒருவர்  ஓலமிட்டு அழுதார் என்னிடம்  இது தேவையா என. :(  :(

 

  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி பூசை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த 7 நாள் உணவுக் குறைப்பு முறையினை 7 day cleansing என்று அழைப்பர். இது உடல் மெலிவதற்காக மட்டுமன்றி, சமிபாட்டு உறுப்புகளை ஒருக்கால் service செய்வதற்கும் இதனை கடைப்பிடிப்பர். இதில் முக்கியமானது மாச்சத்து உள்ள பொருட்களையும் கொழுப்பு பொருட்களையும் முற்றாகத் தவிர்ப்பது.  அதிலும் பழங்கள் சாப்பிடும் போது வாழைப்பழத்தினை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

சுமே, முதல் நாளே வாழைப்பழத்தினை வெட்டி விட்டு பிறகு என்ன டயட் வேண்டிக் கிடக்கு? :icon_mrgreen:

 

அதில் வாழைப்பழத்தை உண்ணக்கூடாது என்று கூறவில்லையே

சரஸ்வதி பூசை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். :icon_mrgreen:

 

சரஸ்வதி பூசை எண்டால் இரவுமட்டும்தானே சாப்பிடலாம். ஆனால் இது எப்பவும் சாப்பிடலாமே.

வரவுக்கு நன்றி நிழலி, எழுமலை,விசுகு அண்ணா 

என்னப்பா  மிச்சத்தை காணவில்லை

 

மரண  அறிவித்தல்  பக்கம் :lol:

சி

காணவில்லை பகுதியில்  தேடுவமா?? :lol:  :D  :D

 

 

எப்பிடி எல்லாம் ஆசை சனத்துக்கு :lol:

 

 உந்த பால் பழங்களை விட ஏழுமிளகும் ஒருமுறடு தண்ணியும் இன்னும் நல்லாய் வேலை செய்யும்.  :D

 

ஏளென்ன பத்து மிளகு சாப்பிட்டே ஒண்டும் நடக்கேல்ல. :D

 

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

 

அந்தளவு சீக்கிரம் போமாட்டம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கலை எழும்பியதும் பசிப்பதுபோல இருந்தது. ஆனால் வெற்றிகரமா ஒரு நாளைக் கடத்தியாச்சே என்று மகிழ்வும் கூட. பல்லுக்கூடத் தீட்டாமல் போய் நிறுத்தால் ஐம்பது கிராம் கூடக் குறையவில்லை. இவ்வளவு பழங்களையும் சாப்பிட்டா எப்பிடிக் குறையும் எண்டு மனட்சாட்சி கேட்க, பேசாமல் போய் காலைக் கடன்களை முடித்து குசினுக்குள்ள வந்தால், வழமைபோல தனிப்பாலில மூண்டு கரண்டி சீனி போட்டு ஒரு கோப்பி குடிச்சா எப்பிடி இருக்கும் என்று மனம் உந்த அதை அடக்கிவிட்டு இஞ்சி போட்டு பால் காச்சிக் குடிச்ச உடன கொஞ்சம் சந்தோசமா இருந்துது.

 

பால் குடிக்கச் சொல்லி டயட் பிளானில இல்லைத்தான். எண்டாலும் பால் நிறையுணவுதானே ஒண்டும் செய்யாது எண்டு மனதைத் தேத்திக் கொண்டன்.

இன்று முழுவதும் மரக்கறிவகை. அவிக்கலாம், சலாட் போடலாம், சூப் வைக்கலாம். ஆனால் எண்ணெய் ஒண்டும் சேர்க்கக் கூடாது. மரக்கறிதானே பிரச்சனை இல்லை என்று எண்ணியபடி பூக்கோவா, காளான், புறோகோழி, இவற்றை முக்காப் பதத்துக்கு அவித்து உப்பு மிளகுதூள் போட்டு காலை எட்டு மணிக்கு சாப்பிட்டன். பிறகு இடையில் இருதடவை கிரீன் டீ . பச்சைத்தண்ணீர் குடிக்க மனம் வரவே இல்லை. வில்லங்கத்துக்கு இரண்டு கப் சாடையாச் சூடாக்கிக் குடித்ததோட சரி. அதன்பின் அதை நினைத்தாலே வயிற்றைப் புரட்டியது.

 

மதியம் வீட்டில் சமைக்கவில்லை. ஆதலால் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சைனீஸ் கடையில் உடோங் எடுத்தது. மனிசன் சாப்பிடும்போது மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்பாட்டில் திரும்பிப் பாராமலும் எதுவும் சொல்லாமலும் கணனியில் மனதைச் செலுத்தியபடி இருந்திட்டன். மனிசன் பாவம் எண்டு நினைச்சுதோ அல்லது சீண்டிப் பாக்க நினைச்சுதோ கொஞ்சமா சாப்பிடன் எண்டார். கனக்கக் கதைக்காமல் வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு இருந்திட்டன்.

 

மதியம் பன்னிரண்டுக்கு சலாட் ஒரு கோப்பை உண்ண நினைத்து அரைக் கோப்பைதான் உண்ண முடிந்தது. அதன்பின் ஒரு தேநீர் சீனி போட்டு. சாடையாத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. என் மனப்பிரமையா என்று புரியவில்லை. ஒரு இரண்டு மணிநேரம் தூங்கி எழுந்ததும் வசிறு மீண்டும் காலியானது. ஏதாவது வாய்க்குச் சுவையைக் குடிக்கவே வேண்டும் என மனம் அடம்பிடிக்க இரண்டு கரண்டி சீனி போட்டு நல்ல ஒரு கப்போசீனோ. ம் இப்பதான் திருப்தியாய் இருக்கு. இரவு புட்டு அவித்து கோழி இறைச்சி காச்சினது. பெரிய கொடுமைதான் காச்சிப்போட்டு சாப்பிடாமல் இருக்கிறது. சரி இன்னும் அஞ்சு நாள்த்தானே எண்டு மனதை சமாதானப் படுத்திக் கொண்டன். 

 

தலை சுற்று வருமளவிற்கு டயட் பண்ணுவது நல்லது இல்லை. எதுக்கும் டாக்டரிடம் கேட்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே

உது உங்களுக்கு சரிவராது

பேசாமல் விட்டுட்டு

மனம் போல  சாப்பிட்டு  

அருமையான கணவன் :wub:

மனம்   போல  வாழுங்கள்.... :icon_idea:

மற்றவர்களுக்காக எதையும் செய்யாதீர்கள்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் தவறாக விளங்கியுள்ளீர்களோ என சந்தேகமாயுள்ளது சுமோ  நிழலி சொல்வது சரிதான் நாலாம் நாள்தான் வாழைப்பழம்.General Motors Weight Loss Diet Program இதையா பின்பற்றுகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ,டயட் இருக்க வேண்டும்.உடம்பைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தது பாராட்டுக்குரியது தான்.ஆனாலும் இப்படி டயட் இருப்பதிலும் பார்க்க பேசாமல் இருக்கலாம் :D வழமையாக சாப்பிடுகின்ற சாப்பாட்டை குறைத்து,சாப்பாட்டோடு சேர்த்து நிறைய பழங்கள்,சலாட் சாப்பிடுங்கள்.ம்னதை அலைய விட்டு உடம்பை குறைக்க வேண்டும் என்டால் முடியாது என்பது என் கருத்து.
 
காலையில் வெறும் வயிற்றில் கிறீன் டீயில் தேசிக்காய் புளி சேர்த்து கடைசி 3 மாதமாவது குடியுங்கள்[உபயம் குட்டி] உடம்பு குறைந்தாலும் வயித்தை குறைக்க உடற்பயிற்சி செய்யுங்கோ :)  :icon_idea:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.