Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு : 10 பேர் பலி ? பதட்டம்

Featured Replies

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6 பேர் பலியானதாகவும் தெரிகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 7. 40 மணியளவில் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது. 

 

காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 6பேர் இறந்துள்னர். ரயில் பெட்டிகள் எஸ். -4 எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.

 

 
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய ஹெல்ப்லைன்: 044 - 2535 7398
 
Chennai_central_1871057f.jpg
The HinduChennai Central railway station cordoned off after the blast on Guwahati Express. Photo: Petlee Peter
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை சென்ட்ரல் இரட்டை குண்டுவெடிப்பு- ஒருவர் கைது
Posted by: Mathi Updated: Thursday, May 1, 2014, 9:50 [iST]
 
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.25 மணிக்கு இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் சுவாதி என்ற 40 வயது பெண் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
01-chennaicentral-600-jpg.jpg
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பெட்டிகளும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அப்போது ரயில் பெட்டி ஒன்றின் கழிவறையில் பதுங்கியிருந்த மர்ம நபரை போலீசார் பிடித்துள்ளனர்.
01-chennai-blast454-600-jpg.jpg
பிடிபட்ட நபருக்கும் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கிறதா? அந்த நபர் வசம் இருக்கும் மிகப் பெரிய பையில் இருப்பது என்ன? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது பிளாட்பாரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர சப்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுஹாத்தி-பெங்களூரு விரைவு ரயில் 9-வது நடைமேடைக்கு வந்த போது இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் எஸ்3 மற்றும் எஸ்5 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் இரு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் 2 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவவும் தெரிகிறது.

ஒருவர் பலி:

சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற  பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் சதியா?

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகீர் உசேன் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டுவெடித்துள்ளது.

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை அளிக்க உத்தரவு:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை தர தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு அறிவிப்பு:

குண்டுவெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்ததோருக்கு ரூ.25,000, லேசான காயமடைந்தோருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ராதெரிவித்தார். குண்டுவெடிப்பு தொடர்பாக தொலைபேசியில் ரயில்வே அமைச்சர் விசாரித்ததாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். பிற ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரயில் குண்டுவெடிப்பு தகவல்களை பெற 044 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறினார்.

சென்னையிலிருந்து புறப்பட்ட கவுகாத்தி ரயில்:

சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கவுகாத்தி விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. பலத்த பாதுகாப்புடன் குண்டுவெடிப்பு நிகர்ந்த விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது
.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமானை தூக்கி உள்ளுக்கு போடா போறாங்களோ ,,,,,,,,,,,,??

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது தமிழ்நாட்டில் என்பதோடு மத்திய அரசின் அதிகாரவர்க்கம் நின்றுவிடும். ஆனால் எதற்காக எல்லாம் என அறிய முற்பட்டால் உண்மை வெளிவரும். புலிகளதுகாலத்தில் இந்துசமுத்திரத்தின் தமிழ்நாட்டுக் கடற்கரையோரம் எங்கும் அந்நியர் எவருமே கால்பதிக்கமுடியாது எனும் நிலையிருந்தது. இப்போதுதானே பாகிஸ்தானிய இராணுவத் தலைமைகள் யாழ்குடாநாடுவரைக்கும் வந்து குப்பைபோட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இனிமேல் நிம்மதி இல்லை எனுமளவிற்கான ஒரு செய்தியே இது.

 

நேற்று விதைத்தீர்கள் இன்று அறுக்கிறீர்கள்.

 

ஆனால் அதுவும் தமிழ்நாட்டில்தான் விடியனுமா?

 

இதற்குக்காரணமானவர்கள், கருனாநிதி, சிதம்பரம், சுப்ரமணியன்சாமி, சோ ராமசாமி, இந்துராம், தமிழ்நாடுகாங்கிரசார்.

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி.. வழக்கம்போல சடையாமல் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பாகிஸ்தான் - சிறீலங்கா - முஸ்லீம் மதவாதப் பயங்கரவாதிகளின் கூட்டுச் சதியாக இருக்கலாம்.

 

அண்மையில்.. நடந்த கைதுகளை அடுத்து.. பாரிய திட்டங்கள் வெளிப்பட்டதால்.. இந்தக் குண்டு அவசர அவசரமாக வெடிக்கவைக்கப்பட்டது போலத் தெரிகிறது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சம்பவங்கள் மூலம்  தமிழ் நாட்டின் அமைதியைக் குலைத்து
சட்ட ஒழுங்குகள் சீர்குலைந்துள்ளது எனக்கூறி மாநில அரசைக் கலைக்க முடியும் .

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அடுத்த கட்ட  முடிவுகளை எடுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தென்பகுதியில் குண்டுவெடித்திருக்கின்றது. அது அவர்கள் நாடு அவர்கள் அதைப் பார்த்துக்கொள்ளுவார்கள். நாங்கள் திரைப்படங்களுடனும் தொலைக்காட்சிகளுடனும் சஞ்சிகைகளுடனும் ஐபில் உடனும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

இறந்த பெண்ணுக்கும் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

பல விடையங்களை தொகுத்துப்பார்க்க வேண்டியுள்ளது. குசெனின் கைது, தமிழ்நாட்டில் ப.ஜ.க ஊன்றியிருக்கும் கால், தேர்தலில் மோடிக்கு முஸ்லீம்கள் வாக்களிப்பதை தடுக்கும் பாகிஸ்தனின் முயற்சி போன்றவை இங்கே இருக்கலாம். எந்த அமைப்பு செய்திருந்தாலும் நிச்சயம் அண்மைய கள்ள நோட்டு, மருந்துகடத்தல், பயங்கரவாதி குசெயினின் கைதின் பழிவாங்கள் இருக்கும். தமிழ் நாட்டில் ப.ஜ.க தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை சோனியா அரசாங்கம் வேண்டுமென்றே அசட்டை செய்துவிட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் விடுதலை புலிகள் வேட்டையில் இருந்தது.

 

இலங்கையில் சீன உறவை சோனியா அரசாங்கம் ஊக்குவித்தது. இதன் நோக்கம் மேற்கு நாட்டு அரசுகள் இலங்கையின் அரசியலில் தலையிட முயன்றால் இலங்கைக்கு நல்ல ஊன்று கோலாக, சீமெந்து சுற்றுமதிலாக சீனா விளங்கும் என்றதை சோனிய அரசு அனுமானித்தமையாலேயே நடந்தது. இந்தியாவின், “சீனா வியாபாரத்துடன் இலங்கையை விட்டுவிடும்” என்ற கொள்கையை ஆராய்வது வேறு.   “இலங்கை ஊடாக முத்து மாலை திட்டத்துடன் சீனா இந்து சமுத்திரத்தை ஆள முயல்கிறது” என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டின் சரி பிழையை ஆராய்வது வேறு. ஆனால் சீனாவின் உறவோடு கள்ள உறவாக இலங்கைக்கு சேர்ந்து வந்த சர்வதேச பயங்கரவாதிகளை இந்தியா மறிக்காமல் கோமாளிக்கூத்தாடியமை மிகப்பெரிய தவறு. ஈரானும் பாகிஸ்தானும் இலங்கையில் புக இந்தியா மட்டுமே காரணம். அவர்கள் இந்தியாவை ஊருவ மட்டுமே இலங்கைகையுடன் நட்பானார்கள். இதற்கும், சீனாவின் வர்த்தக உறவுகளுக்கும் தொடர்பில்லை என்றதை சோனியாவின் மலையாள மாந்திரிக ஆலோசகர்கள் அவருக்கு மூடி மறைத்தார்களா அல்லது சோனியாவுடன் சேர்ந்து செயல்பட்டார்களா தெரியாது.

 

மோடி வருவதை தடுக்க முடியாது. அதன் பின்னர் மோடி இந்த தீவிரவாதிகளை களை எடுக்க வேண்டியதை தவறவிடவும் முடியாது.  பாகிஸ்தானிய கள்ள நோட்டுவியாபாரிகளுக்கு சோனியாவிடன் தொட்பு என்ற செய்திகள் வெளிவந்திருந்தது. அந்த உரிசை(ருசி) கண்டவர்களை நிறுத்துவது எளிதும் அல்ல. இதனால் சோனியா தமிழ் நாட்டுக்கு செய்த மிக பெரிய துரோகம், ஒருகாலத்தில், இன்று இலங்கை முஸ்லீம்களும், தமிழரும் வந்திருக்கும் வலி சேர்ந்த உறவு தமிழ் நாட்டிலும் வந்துவிடும் ஆபத்து இருக்கிறது. வெற்றிகரமாக இலங்கைத் தமிழ் இனங்களை பிரித்த இலங்கை அரசு இதை பாகிஸ்தானுடன் சேர்ந்து திட்டமிட்டே சென்னையூடாக செய்து வந்திருக்கிறது. வேண்டுமென்றே மலையாளத்தில் இருக்கும் பாரிய முஸ்லீம்மக்கள் தொகையை இந்த அழிவுக்கு பயன் படுத்தாமல், திருவனந்த புரத்தை தங்கள் நிலையமாக்காமல் தமிழ்நாட்டை, சென்னையை இலக்கு வைத்தது இலங்கையின் சதித் திட்டமே.  திருவனந்தபுரத்தில் புலிகளை தேடிக்கொண்டு சென்னையில் பயங்கரவாதத்தை விதைத்திருக்கிறார்கள்.

 

சிறுநீராக வியாபாரத்தை அறிய இலங்கைக்கு இந்திய விசாரணை அதிகாரிகள் வரப்போகிறார்கள். கூடாது அல்ல. அது சாதரண குற்றத்திற்கான தனிய இந்த இருநாடுகளுக்குமிடையிலான கள்ளத்தொடர்பு. அண்மையில் இலங்கை அரசின் மருந்து கடத்தல்கள் அகப்பட்ட போது இங்கிலாந்து மட்டும் தனது ஒற்றர் சம்பந்தமாக இலங்கையுடன் பேசியது. அதை இந்தியா அதிகாரிகள்  இலங்கை வந்து விசாரிக்கவில்லை. இலங்கையின்  பாகிஸ்தானிய தூதரகம் பல ஆண்டுகளாக இந்தியக் கள்ள நோட்டு வியாபாரத்தில் இருக்கிறது. இந்தியா இலங்கைக்கு வந்து விசாரிக்கவில்லை. ஏற்கனவே மருந்து வியாபாரத்தில் இலங்கை அரசும், கள்ள நோட்டு வியாபாரத்தில் பாகிஸ்தானிய அரசும் தொடர்பு படுத்த பட்டிருக்கின்றன.  சோனியாகாந்தி இவற்றை இலங்கை சென்று விசாரித்து பிடித்து அம்பலமாக்க விரும்பவில்லை.

ஜெயலலிதா இனங்களுகிடயான உறவை நுணுக்கமாக உணர்ந்து, பதவிக்கு வரும் மோடியிடம் தேவையான உதவிகளை பெற்று, இலங்கையும் பாகிஸ்தானும் சேர்ந்து நடத்தும் இந்த சதியை முற்றாக அழிக்க வேண்டும். சென்னையை முஸ்லீம்களும் தமிழர்களும் அன்னோஉன்னியமாக உறவாடி வாழும் நகரமாக தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும்.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இது றோவின் திட்டமிட்ட சதி

இந்தியாவின் தென்பகுதியில் குண்டுவெடித்திருக்கின்றது. அது அவர்கள் நாடு அவர்கள் அதைப் பார்த்துக்கொள்ளுவார்கள். நாங்கள் திரைப்படங்களுடனும் தொலைக்காட்சிகளுடனும் சஞ்சிகைகளுடனும் ஐபில் உடனும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

நீங்கள் பகிடிக்கு சொன்னீர்களோ அல்லது உண்மையாகச் சொன்னீர்களோ தெரியாது.ஆனால் என்னைத் பொறுத்த வரை நீங்கள் எழுதினது தான் எனது நிலைப்பாடும்.அவர்களும் 5,10%த்தினரை தவிர மிச்சப் பேர் இதைத் தானே செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது றோவின் திட்டமிட்ட சதி

நீங்கள் பகிடிக்கு சொன்னீர்களோ அல்லது உண்மையாகச் சொன்னீர்களோ தெரியாது.ஆனால் என்னைத் பொறுத்த வரை நீங்கள் எழுதினது தான் எனது நிலைப்பாடும்.அவர்களும் 5,10%த்தினரை தவிர மிச்சப் பேர் இதைத் தானே செய்தார்கள்.

 

இல்லை ரதி இது பகிடிக்கு எழுதவில்லை. இந்தியா குறிப்பாக தமிழகம் தொடர்பான எனது உறுதியான நிலைப்பாடு இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரதி இது பகிடிக்கு எழுதவில்லை. இந்தியா குறிப்பாக தமிழகம் தொடர்பான எனது உறுதியான நிலைப்பாடு இதுதான்.

 

தவறான நிலைப்பாடு!  :o

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரதி இது பகிடிக்கு எழுதவில்லை. இந்தியா குறிப்பாக தமிழகம் தொடர்பான எனது உறுதியான நிலைப்பாடு இதுதான்.

ஓ நன்றி வாலி

  • கருத்துக்கள உறவுகள்

தவறான நிலைப்பாடு!  :o

 

தமிழகத்தின் தமிழர்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எனது நிலைப்பாட்டில் மாற்றம்வரப்போவதில்லை!

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் தமிழர்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எனது நிலைப்பாட்டில் மாற்றம்வரப்போவதில்லை!

 

 

அது கவலைக்குரிய விடயம் தான்.. ஆனால் அவர்களை இந்தியர்களாக வைத்திருப்பதற்கு அங்குள்ள ஊடகங்கள் மிகத்திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

குறிப்பாக, ஈழ அவலங்கள் பிரதான ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தன. இப்போதுகூட சிறிதளவு மாற்றம்தான் ஏற்பட்டு உள்ளது. ஆனால் தமிழர் எதிர்ப்புக்கு தேவையான அனைத்தும் இந்த ஊடகங்களில் வெளிவரும். இவ்வாறாக மக்களை ஒருவித இருட்டில் வைத்திருக்கிறார்கள்.

 

10% மாறியதுகூட ஒரு சில அமைப்புகள், கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் இணைய வசதியினால்தான்.

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க தமிழ் நாட்டு தமிழர்களோ அல்லது அரசியல் தலைமைகளோ தயாரில்லை .தமது தமது மாநிலங்களில் அவர்கள் ஓரளவு சந்தோசமாகவும்  சுதந்திரமாகவும் வாழ்வதுதான் முக்கிய காரணம்.

 

தமிழ் நாடு மட்டுமல்ல கிந்தி தவிர்த்து அனைத்து மொழி பேசும் மாநிலங்களினதும் நிலை அதுதான் .

இதனால் பல பிரபலங்கள் அவமானப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கு இருந்தும் எதுவும் நடக்காத மாதிரி இருந்துவிடுவார்கள் . இயலாமை தான் காரணம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்ததுதான்,

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139541

 

இந்திரா காந்தி காலத்திலோ, ப.ஜ.க காலத்திலோ இந்திய பாதுகாப்பில் ஓட்டை இருந்தது என்று ஆராய்வோர் புகழுக்காகமட்டும் அதை செய்கிறார்கள். அதில் அடிப்படை கிடையாது. இந்திரா கந்தியும், வாஜ்பாயும் பாகிஸ்த்தானுக்கு நன்றாகத்தான் படிப்பித்தவர்கள். இந்த பிரச்சனை இந்த்தியா-பாகிஸ்தான்-இலங்கை மூன்றும் கடலால் இணைக்கப்பட்டிருகிறது என்பதால் எழுகிறது என்பது அபத்தம். மேலும் இந்திராகாந்தி காலத்திலேயே இலங்கையூடாக பாகிஸ்தானிய இராணுவ வீரர்களின் ஆகாயக்கப்பல்கள் பறந்தன. இது இந்திய ஆகாயப்பாதுகாப்பில் இருந்த ஓட்டையும் தான்.   இன்று வடக்கில் எல்லையில் சீனா எல்லை மீறுவதும், பாகிஸ்த்தான் இராணுவீரர்களில் தலையை கொய்து செல்வதும், கடல் பாதுகாப்பு ஓட்டைகளால் அல்ல.  அதில் 0% உண்மை கூட இல்லை. முத்து மாலை திட்டத்தை வாஜ்பாய் கண்டு கொள்ளாதமை, சீனாவின் மிகப்பெரிய வியாபாரம், அமெரிக்காவுடன்தான் என்பதாலாகும். அமெரிக்கா தான் அந்தளவு வியாபாரத்தை சீனாவுடன் செய்துகொண்டு இலங்கை செய்த சிறு வியாபாரத்தை சுட்டிக்காடியது. மேலும் அது கூட 2008 ஆண்டுக்குப்பிறகுதான் பாரிய துறைமுக அபிவிருத்தி இலங்கையில் நடந்தது.  எனவே தனது காலத்தில் இலங்கையுடன்  நடந்த சிறு வியாபாரத்தை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை. கடல்ப் படையில் இந்தியா சீனாவை விட முன்னணியில் இருக்கிறது. அந்த வகையில் அவர்கள் சீனக் கடல்படையை காட்டி அமெரிக்கா அல்ல, எந்த பேரறிஞர் சொல்வதற்கும் சிரத்தை காட்டவில்லை.

 

பாகிஸ்த்தான் முன்னைய மும்பாய் தாக்குதலை கடல் மூலம் செய்தது. அதை இதனுடன் சம்பந்த படுத்துவது அரசியலை விளங்காமை மட்டுமே. மேலும் இது விவாதித்து உண்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்ட வெறும் கருத்து கோள் ஒன்று மட்டுமே.http://www.yarl.com/forum3/index.php?showtopic=124691&p=911824

 

இன்று மிக கவனமாக காவல் காக்கப்படும் கடல்களில்  வட இலங்கை கடல்களும் ஒன்று. ஒவ்வொரு தமிழ்நாட்டு சின்ன வள்ளமும் எல்லை தாண்டியவுடன் கைது செய்யப்படுகிறது.

எனது முதல் பதில் காட்டியவை எதுவும் நடந்தது கடல் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளால் அல்ல. அது நடந்தமை 2009 ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட சோனியா-சிதம்பரம்-பசில் வர்த்தக தொடர்புகளில் ஏற்பட்ட சட்டத்திற்கு முரணான வர்த்தகத்தால் வந்த கொள்கைப் பிறள்வாலேயே. இந்தியா, அந்தமான் கரையில் வேவு பார்த்த சீனக் கப்பலை இந்திய கடல்படை கலத்துக்கொண்டுவந்து கொழும்பில் விட்டுவிட்டுப் போனது. அது பாதுகாப்பில் இருந்த திறமை. ஆனால் இலங்கையில் கப்பல் ஒன்று பாகிஸ்தானிய துறைமுகத்தை மருந்துடன் விட்டு வெளிக்கிட்டிருக்கிறது என்றதை அமெரிக்கா சென்றவருடம் அறிவித்தது. அந்த கப்பலை இலங்கை திசை திருப்பிவிட்டது. இந்தியா கப்பலை தேடிப்பிடிக்க முயவில்லை. இலங்கையின் புதிய பலமான கடத்தல் இந்தியா துணிச்சலாக கண்டிக்க வேண்டும். இலங்கையின் முஸ்லீம் சமுத்தாயத்தை கேவலக்கெட்ட முஸ்லீம் மந்திரிகள் புலிகள் காலத்தில் இருந்து திசை திருப்பி இன்று முழுமையாக அரசுக்கு பாவிக்கிறார்கள். இந்தியா, இலங்கை தனது முஸ்லீம்களை தவறாக வழி நடத்துவதை பற்றி பகிரங்கமாக அறிக்கைவிட வேண்டும். இது தான் தமிழ் நாட்டு முஸ்லீம்கள் இலங்கை, பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு உதவ முன்வருவதை விலக்கும்.

 

இன்றைய இந்தியாவிடம் பாதுகாப்பு கொள்கை ஒன்று இல்லை என்பது இன்றைய பிரச்ச்சனை. இதை நான் மூன்று ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  அது ஓட்டை அல்ல. அது கொள்கை.

 

அரசியலை விளங்காத யத்தீந்திரா இந்திய பாதுகாப்புகொள்கையை விளங்கப்படுத்துகிறார் இப்படி..

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=4a2e1c4a-dbab-42a6-afc6-dc3d15f8a0da

 

உள்ளே நடப்பதை அறிந்துவைத்திருக்கும் Diplomat எனது கருத்துடன் உடன்படுகிறது.  அதாவது இன்றைய இந்தியாவிடம் அயல் நாட்டுக்கொள்கை, பாதுகாப்பு கொள்கை இல்லை.

The outgoing United Progressive Alliance government has had a mixed record on strategic issues. It vacillated between unusual firmness on some issues (the Devayani Khobragade affair with the U.S. for example) but was erratic in dealing with China and Pakistan and sent out mixed signals in its interactions with other smaller neighbors like Sri Lanka, Myanmar, Maldives, Nepal and Bangladesh. In several instances, New Delhi failed to deliver on promises made to its neighbors, often putting the local leaders in those countries in awkward positions. For instance, New Delhi, despite its best intentions, could not fulfill two major promises made to Dhaka on concluding a land boundary agreement and sharing the waters of the Teesta river. Bangladesh Prime Minister Sheikh Hasina faced a major political embarrassment at home because of New Delhi’s failure to keep its word.

With Colombo too, India swung between two different positions during the vote against Sri Lanka in the UN Human Rights Council, and paid the price by losing considerable ground to China in terms of influence with the island nation. New Delhi’s failure to calibrate events in the Maldives is also seen as a setback for its own clout in the region.

 

http://thediplomat.com/2014/04/india-urgent-defense-reforms-needed/ 

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த பெண்ணுக்கும் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்

திருமண கனவோடு பயணம் செய்த இளம் பெண் சிறிலங்கா முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை.

 

Untitled-182-150x150.jpg

திருமண கனவோடு, முதல் மாத சம்பளத்தில் குடும்பத்தினருக்கு பரிசு பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு செல்லும்போது சுவாதிக்கு எமனாகியது சிறிலங்கா முஸ்லீம் பயங்கரவாதிகள் வைத்த குண்டு.  கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலியான சுவாதியின் தந்தை ராமகிருஷ்ணன் ஒரு விவசாயி. அவரது மனைவி காமாட்சி தேவி. இவர்கள் குண்டூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக கடந்த மாதம் தான் பணிக்கு சேர்ந்துள்ளார் 24 வயதான சுவாதி.  அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் ஒருமாத விடுப்பில் சென்னை வழியாக குண்டூருக்கு கவுகாத்தி ரயிலில் பயணம் செய்துள்ளார்.

தனது பாட்டியிடம் நேற்றிரவு தொலைபேசியில் பேசிய சுவாதி, முதல் மாத சம்பளத்தில் பரிசுப் பொருட்களை வாங்கி வருவதாக தெரிவித்திருக்கிறார்.  இந்நிலையில் சுவாதியின் வருகைக்காக காத்திருந்த குடும்பத்தினருக்கு, அவரது இறப்பு செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.thinakkathir.com/?p=58147

 

391xNxnewPic_3564_jpg_1871862g.jpg.pages

 

513xNxnewPic_8749_jpg_1871863g.jpg.pages

 

513xNxkr_1871864g.jpg.pagespeed.ic.A4fFa
ஸ்வாதியின் பாட்டி கட்ரகட்டா ராஜ்யலக்‌ஷ்மி.|
 

24 வயதான பர்சூரி ஸ்வாதி, சில மணி நேரங்களில் அவரது வீட்டுக்கு ஆவலுடன் ஓடோடிச் சென்றிருப்பார். பெற்றோர், உற்றார் உறவினர் அவரை ஆவலுடன் வரவேற்றிருப்பார்கள். ஆனால் ஸ்வாதியின் பயணம் இன்று காலை திரும்பாப் பயணமாகி விட்டது.

கடந்த ஜனவரி மாதம் தான் ஸ்வாதி பெங்களூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார். 4 மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு ஸ்வாதி தனது சொந்த ஊருக்கு நேற்று (புதன் கிழமை) புறப்பட்டிருக்கிறார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் மரணத்தில் பிடியில் சிக்கிக் கொண்டார். எம்.டெக். பட்டதாரியான ஸ்வாதி, கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4 பெட்டியில் பயணித்துள்ளார். அந்தப் பெட்டியில் தான் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அவர் உயிர் பிரிந்தது.

ஸ்வாதியின் பாட்டி கட்ரகட்டா ராஜ்யலக்‌ஷ்மி கண்ணீருடன் கூறியதாவது: "டிக்கெட் கிடைக்காததால் தட்கல் முறையில் டிக்கெட் வாங்கியதாக ஸ்வாதி கூறினாள். அவளை, விஜயவாடாவில் இருந்து அழைத்து வர அவளது தந்தை செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் இந்த துயரம் நடந்துவிட்டது".

ஸ்வாதி படிப்பில் மிகவும் கெட்டிக்காரி, எங்கள் வீட்டு பொக்கிஷம் அவள் என அவரது தாத்தா சத்ய நாராயணன் கூறினார்.

ஸ்வாதிக்கு, பிரதயுமா என்ற சகோதரர் இருக்கிறார். அவர் மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் பயின்று வருகிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்வாதி. அண்மையில் தான் அவரது தந்தை கிராமத்தில் இருந்து குண்டூருக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

ஸ்வாதி அவரது பள்ளிக்கூட தோழரை திருமணம் செய்ய இருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். ஸ்வாதியின் தந்தை பர்சூரி ராமகிருஷ்ணன், தாய் காமாட்சி சென்னைக்கு விரைந்துள்ளனர்.

தமிழில்: பாரதி ஆனந்த்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article5966261.ece?homepage=true

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தென்பகுதியில் குண்டுவெடித்திருக்கின்றது. அது அவர்கள் நாடு அவர்கள் அதைப் பார்த்துக்கொள்ளுவார்கள். நாங்கள் திரைப்படங்களுடனும் தொலைக்காட்சிகளுடனும் சஞ்சிகைகளுடனும் ஐபில் உடனும் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

 

இலங்கையின் வடகிழக்கில் சிலர் சிலகாலமாக இறந்துள்ளனர், இன்றும் அல்லலுறுகின்றனர். அது இலங்கையர் நாடு, அவர்களே தீர்த்துக்கொள்வர், எமெக்கென்ன வந்தது?

 

ரெண்டு சிலோன் 'பைலா' பாட்டை கேட்டோமா, நாலு மீனை பிடித்தோமா என்று இந்தியர்கள் இருக்கோணும்.

இதுவே எம் இன்றைய நிலைப்பாடு.

 

இறந்தவருக்கு அஞ்சலியும், காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுதல்களும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் வடகிழக்கில் சிலர் சிலகாலமாக இறந்துள்ளனர், இன்றும் அல்லலுறுகின்றனர். அது இலங்கையர் நாடு, அவர்களே தீர்த்துக்கொள்வர், எமெக்கென்ன வந்தது?

 

ரெண்டு சிலோன் 'பைலா' பாட்டை கேட்டோமா, நாலு மீனை பிடித்தோமா என்று இந்தியர்கள் இருக்கோணும்.

இதுவே எம் இன்றைய நிலைப்பாடு.

 

இறந்தவருக்கு அஞ்சலியும், காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுதல்களும்.

 

ராசவன்னியன்;

 

தமிழர்கள் பலர். அவர்கள் பலவாறு பலரால் நொந்தவர்கள், பலருக்கு சக தமிழன் மீது அன்பும் பாசமும் காட்டுகிற தமிழ்நாட்டு தமிழர்களை பார்த்திருக்கிற சந்தர்ப்பமே இருந்திருக்காது..தமிழகம் என்றால் இந்தியா என்றும் அவர்களும் எங்களை அழித்தவர்கள் என்கிற உணர்வும் இருக்கிறது.

 

நான் ஒருவரை சந்தித்த்து இருந்தேன், சரியான "சிடு மூன்சி" , மிக சிறந்த ஆசிரியர் , 2 அல்லது 3 முறை சிறந்த ஆசிரியர் குரிய விருது பெற்றவர் ..ஒரு மாத பயிற்சியில் முதல் நாள் "தமிழா?" என்று கேட்டதை தவிர ஏதும் கேக்கவில்லை..கடைசி கிழமை , ஒரு நாள் ஒரு வகையான லீவு நாளில் , கதை கதை என்று கதைத்த்தார் ...80 களில் என்ன என்ன இயக்கம் இந்தியாவில் இருத்த்தது யார் யாருக்கு யார் உதவி செய்தது எல்லாம் ஒரு கோவையாக சொன்னார் ..,   அவரை போன்ற பெரிய பதவிகளில் இருப்பவர்கள் யாரோ இலங்கை தமிழன் அடிபடுகிரான் அழிகிறான் என்று பார்க்கவில்லை...ஆனால் அவர்களின் குரல்தான் வெளியே வருவது குறைவு..

 

ஆழ்ந்த இரங்கல்கள் ...

இலங்கையின் வடகிழக்கில் சிலர் சிலகாலமாக இறந்துள்ளனர், இன்றும் அல்லலுறுகின்றனர். அது இலங்கையர் நாடு, அவர்களே தீர்த்துக்கொள்வர், எமெக்கென்ன வந்தது?

 

ரெண்டு சிலோன் 'பைலா' பாட்டை கேட்டோமா, நாலு மீனை பிடித்தோமா என்று இந்தியர்கள் இருக்கோணும்.

இதுவே எம் இன்றைய நிலைப்பாடு.

 இறந்தவருக்கு அஞ்சலியும், காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுதல்களும்.

இறந்த உறவுக்கு அஞ்சலிகள் ......................
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.