Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

 

jallikattu%202a%281%29.jpg

ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு பேரவை, விலங்குகள் நல வாரியம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தமிழக அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது. அதேபோல், விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகின்றன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றதா? என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகளை நியமிக்கலாம் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

போட்டிகளின்போது கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததால் ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நலவ வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

13 அம்சங்களை சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் சட்டம் அமலில் இருக்கும்போது மாநில அரசின் சட்டம் செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளது

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27667

நல்ல விடயம். வரவேற்கப்படவேண்டிய தீர்ப்பு!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டுகளில் ஒன்று.
இப்போது அதனை, நடத்துபவர்கள்... போதிய பயிற்சி இல்லாதவர்களையும், மது அருந்திய பின்பும் அந்த விளையாட்டில் ஈடுபடுவதாலும்....
பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாüப்பு இல்லாத இடத்தில் நடத்துவதாலும் விபத்துக்கள் அதிகம் சம்பவிப்பதால்... உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது கவலையே....

 

ஜல்லிக் கட்டு நடத்தும் இடத்தின் பாதுகாப்பு ஒழுங்களை கவனித்து ஆய்வு செய்ய‌, அரச உத்தியோகத்தர்களை நியமித்து... அதன் ஒழுங்கு முறையில், மீண்டும் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதே... என் விருப்பம்.

 

ஸ்பெயினில்... இன்றும் ஜல்லிக்கட்டு, தகுந்த ஒழுங்கு படுத்தலுடன்... நடந்து கொண்டுதான் உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் மாட்டுச் சண்டையின் இறுதியில் மாடு செத்து விருந்தாகிவிடும்.

 

ஜல்லிக் கட்டு அப்படியல்ல , பெரும்பாலும் காளை இறப்பதில்லை.

 

களையினால்  காளைகள்  காயப்படுவான்களே  தவிர காளைகள் கலாச்சிட்டுப் பாய்ந்து ஓடிடும்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

வெளித் தோற்றலுக்கு ஒரு நல்ல விடயம் போலத் தோன்றினாலும், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களை, அழித்தொழிக்கும் அங்கத்தின் ஒரு பகுதியாகவே இது நிறைவேறுகின்றது!

 

சஞ்சய் காந்தியின், மனைவியார் இது விடயத்தில் மிகவும் தீவிரமாகச் செயட்பட்டவர்களில் ஒருவராவார்!

 

அவரது காலத்தில் அது கை கூடாமல் போய்விட்டது! இப்போது அது நிறைவேற்றப்படுகின்றது!

 

தஞ்சைப்பெரிய கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த சர்க்கரவர்த்தி ராஜராஜ சோழனின் சிலை, அங்கிருந்து அகற்றப்பட்டு, வீதிக்குக் கொண்டுவரப் பட்டதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள், இதற்கான காரணத்தையும் புரிந்து கொள்வார்கள்!

 

மற்றவர்கள், இன்னுமொரு இருபது வருடங்களின் பின்னர், 'ஜல்லிக்கட்டைப் பற்றி' வரலாற்றுப்புத்தகங்களில் வாசிக்கும் போது புரிந்து கொள்வார்கள்!

 

ஆனால் தமிழனின் உயிரைப்பற்றி, உயர்நீதிமன்றம் கவலைப்படுகின்றது என நினைப்பவர்கள், நிச்சயம் அப்பாவிகள் என்பது எனது கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினில் பாரம்பரிய விளையாட்டாக காளை அடக்குதல் இன்றும் பல பாதுகாப்பு நடைமுறைகளோடு விளையாடப்பட்டு வருகிறது.

 

குத்துச் சண்டை என்று மனிதனை மனிதன் மோதவிட்டு மூக்குடைத்து.. வேடிக்கை பார்க்கும் போட்டியில்.. பாரதம் பதக்கம் பெறுவதை தடுக்காத இந்திய உச்ச நீதிமன்றம்.. இங்கு மட்டும்.. ஏன் தடை போடனும்.

 

பாதுகாப்பான அங்கிகளை அணிந்து கொண்டு.. ஜீவராசிகளை துன்புறுத்தாத வகைக்கு.. இந்த தமிழர்களின் பாரம்பரிய.. வீர விளையாட்டை புதிய விதிமுறைகளோட விளையாட அனுமதிக்க வேண்டும். இதனை வழக்கொழிக்கும்.. ஹிந்திய வெறித்தனத்தை பேரினவாதத்தை.. ஹிந்திய உச்ச நீதிமன்றம் தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது. !!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெய்னில் ஈட்டியால் குத்தி கொல்வது கொடூரமாக இருக்கும். அதுக்கு இந்த ஜல்லிக்கட்டு எவ்வளவோ பரவாயில்லை. இங்கே காளையை மடக்கி வீழ்த்துவது ஒன்றுதான் கலை. வீழ்த்துவதே தவறு என்றால் அமெரிக்காவில் தினம்தினம் இதைத்தான் செய்கிறார்கள்.

பொதுமக்கள் பாதுகாப்பு, மது அருந்துவது, பருக்குவது என்பன ஒழுங்கமைப்பு சம்பந்தப்பட்டவை..!

*********

இனிமேல் காளைகளை அடக்காமல் கன்னியரை எப்படி கோலம் போட வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.. :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது தமிழர் பண்பாட்டின் மீதான அத்துமீறல்: சீமான்

 

 ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பது, தமிழரின் பண்பாட்டின் மீதான அத்துமீறலாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் களமிறக்கப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியம் கூறியதை ஏற்று, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எதிராக நிரந்தர தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமை மீதான அப்பட்டமான அத்துமீறலாகும். இத்தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது.

 

இன்று, நேற்றல்ல... சிந்து சமவெளி நாகரீகம் செழித்து வளர்ந்திளர்ந்த காலத்தில் இருந்து தமிழர் வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்து, தமிழினத்தின் வீர அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டு எனும் பண்பாடு தொடர்பான விளையாட்டை, அதன் அடிப்படைகளில் இருந்து விளங்கிக்கொள்ள மறுக்கும் ஒரு மனப்பான்மையையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.

 

இதில் ஈடுபடுத்தப்படும் காளைகள், அதற்கென்றே கன்றிலிருந்து வளர்க்கப்பட்டவை என்கிற விவரங்களையெல்லாம் கொடுத்த பின்பும், இப்படியொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பது தமிழினத்தை அவமதிக்கும் செயலாகும்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் இன்று வரை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்பட்ட காளை ஒன்றாவது இறந்துள்ளது என்ற செய்தி இருக்கிறதா? துன்புறுத்தல் என்ற சொல்லை ஜல்லிக்கட்டு காளைகள் மீது மட்டும் விலங்கின நல வாரியம் பயன்படுத்துவது ஏன்?

 

கேரளத்தில் உணவிற்காக ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான மாடுகள் அடித்துக்கொல்லப்படுகிறதே? அது சரியா? கோயில் விழா என்ற பெயரில் பல யானைகள் கேரளத்தின் கோயில்களில் நிறுத்தப்படுவதும், அவைகள் மதம் பிடித்து மக்களை துரத்துவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதே? இதனை ஏன் விலங்கின நல வாரியமும், உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை?

 

இந்திய ராணுவத்தில் குதிரை படையும், ஒட்டகப் படையும் இருக்கின்றனவே, இப்படி போர்க் களத்தில் ஈடுபடுத்தப்படும் குதிரைகளும், ஒட்டகங்களும் அந்த விலங்குகள் பழக்குவது என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதில்லையா? இதெல்லாம் விலங்கின நல வாரியத்திற்குத் தெரியாதா?

 

தமிழ்நாட்டிற்கு வெளியே எது நடந்தாலும் அது சட்டப் பிரச்சனையாவதில்லை... ஆனால் தமிழனின் மொழி, பண்பாடு ஆகியன மட்டுமே இவர்களின் பார்வை உறுத்துகிறதே, அது ஏன்? இப்படிப்பட்ட நடவடிக்கைகள் யாவும் தமிழினத்தின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியாக நாம் தமிழர் கட்சி பார்க்கிறது.

இந்திய நாட்டில் இந்தி பேசும் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தொன்றுதொட்டு வணங்கிவரும் கோயிலில் தமிழில் இறைவனை வழிபட எதிர்க்கும் தீட்சிதர்களுக்கு சாதகமான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கிறது.

 

இப்போது தமிழரின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கிறது. இந்திய அரசும், அதன் அதிகார மையங்களும் இப்படி தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்தும் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தமிழர்களை தனிமைப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியன் என்கிற உணர்வில் இருந்து அந்நியப்படுத்தியும் வருகிறது என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறோம்" என்று சீமான் கூறியுள்ளார். 

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article5989048.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டுகளில் ஒன்று.

இப்போது அதனை, நடத்துபவர்கள்... போதிய பயிற்சி இல்லாதவர்களையும், மது அருந்திய பின்பும் அந்த விளையாட்டில் ஈடுபடுவதாலும்....

பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாüப்பு இல்லாத இடத்தில் நடத்துவதாலும் விபத்துக்கள் அதிகம் சம்பவிப்பதால்... உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது கவலையே....

 

ஜல்லிக் கட்டு நடத்தும் இடத்தின் பாதுகாப்பு ஒழுங்களை கவனித்து ஆய்வு செய்ய‌, அரச உத்தியோகத்தர்களை நியமித்து... அதன் ஒழுங்கு முறையில், மீண்டும் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதே... என் விருப்பம்.

 

ஸ்பெயினில்... இன்றும் ஜல்லிக்கட்டு, தகுந்த ஒழுங்கு படுத்தலுடன்... நடந்து கொண்டுதான் உள்ளது. :)

 

ஸ்பெயினில்... இன்றும் நடக்கும் இதே போன்ற  விளையாட்டை  நிறுத்த  பலமுறை  முயன்றும்  மக்களின் மறுப்பினால் தோற்றுப்போனார்கள்.  அண்மையில் பிரெஞ்சு பாராளுமன்றிலே சட்டம் கொண்டுவரு முயன்றும்

அமைச்சர்கள் உட்பட பலரின் எதிர்ப்பால் கைவிடப்பபட்டது

ஒரு அமைச்சர் தொலைக்இகாட்சியிலேயே  நேரடியாகச்சொன்னார்

நானே பர்பரை  பரம்பரையாக அதில் ஆர்வமாக  உள்ள ஒருவன் என.

இது தமிழனின் விளையாட்டுத்தானே

அவன் எங்கே மறுப்பது

எங்கே எதிர்ப்பது

பச்சோந்திக்கூட்டம்.... :(

நல்ல விடயம். வரவேற்கப்படவேண்டிய தீர்ப்பு!!!!

 

அண்ணர்கள் மேலுள்ள  அக்கறையால் தங்கை  இதை அழிக்கணும் என்கிறார்

ஆனால் தமிழரது வீர விளையாட்டை அழிப்பதை அவர் ஒருபோதும் வரவேற்கமாட்டார் :)

ஒரு பத்திரிகையில் ஜல்லிக்கட்டு பற்றிய மக்கள் கருத்துக்கள்............

 

"எத்தனையோ விதமான விளையாட்டுகள் இருக்கின்றன. அந்த விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களின் திறமையையும், வீரத்தையும் காண்பிக்க வேண்டியதுதானே. ஐந்து அறிவு உள்ள மிருகத்திடமா காண்பிப்பது? காளைகள் அவிழ்த்து விடப்பட்ட உடன் கூட்டத்தை பார்த்து மிரண்டு அங்குமிங்கும் ஓடுவதால், பிடிக்க வரும் இளைஞர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. மேலும் காளைகளும் பல்வேறு முறையில் துன்புறுத்தப்படுகின்றன. ஆதலால் ஜல்லி கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து மிகச் சரியே"

 

''ஆண்டுதோறும் வீர விளையாட்டு என்ற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுவதோடு, அப்பாவி மக்கள் பலரும் இறக்க நேரிடுகிறது. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கருத்து சரியே. இக்கால வாலிபர்கள் ராணுவத்தில் சேர்ந்து, நம் நாட்டைக் காப்பதில் தம் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் கால வாலிபர்கள் காளைகளை அடக்கும் அளவுக்கு வலிமை பெற்றிருந்தனர். இந்தக் காலத்தில் வாலிபர்களைவிடக் காளைகளே வலிமை பெற்றுள்ளன.''

 

''வீர விளையாட்டாகக் கருதப்பட்ட ஜல்லிக்கட்டு, இன்று, வியாபாரமாக மாறிவிட்டது. தங்கள் காளை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அதற்கு போதை பொருள் கொடுத்து வெறியையும் மூர்க்கத்தையும் ஊட்டும் கொடுஞ்செயல்களும் மறைமுகமாக நடத்தப்படுகின்றன. எனவே இந்த விளையாட்டை தடை செய்வது நியாயமே''

 

''ஒரு காலத்தில் காளையை அடக்குவது வீரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ "ஜல்லிக்கட்டு' என்ற பெயரால் வாயில்லாப் பிராணிகள் துன்புறுத்தப்படுகின்றன; காயங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இவ்விளையாட்டில் ஈடுபடும் வீரர்களும் உயிரை இழக்க வேண்டியதாகின்றது. எனவே, காலமாற்றத்தைக் கணக்கில்கொண்டு இதுபோன்ற விளையாட்டுகள் தடை செய்யப்பட வேண்டும்.''

 

http://www.dinamani.com/discussion_forum/2014/04/23/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF/article2183832.ece

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதிலும் உண்மையுள்ளது சகோதரி

 

என்ன  செய்வது

மிருகம் ஒன்று  தான் பகையை  உடனே  மறந்துவிடுகிறது

மனிதர்கள்  எத்தனை  பரம்பரையானாலும் வைச்சு வைச்சு சாதிக்கிறார்களே... :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்னண்டு ஒரு காலத்திலை வீரவிளையாட்டாக இருந்தது
இப்ப ஈன விளையாட்டாக மாறியது.
எல்லாம் அரசியல்தான் காரணம் .

மேலை சிலபேர் சொன்ன மாதிரி பாதுகாப்பு ஒழுங்கு நடவடிக்கை மூலமா
விபத்துக்களைக் குறைக்கலாம் .அதுக்காக எங்கடை பரம்பரை விளையாட்டை இல்லாமல் செய்யக்குடாது  
 

எனக்கு ரொம்ப நாளா புரியல ...

இவங்களுக்கு மாடு துயரப்படுதுன்னு கோபமா?? இல்ல மனிதன் துயரப்படுரானு கோபமா??

மாடு துயரப்படுதுன்னு கோபமா இருந்தா... தினமும் வண்டி வண்டியா கேரளாவிலும் இதரப் பகுதியிலும் வெட்டிச் சாப்பிடுகிறார்களே அதை என்ன செய்வது? ஜல்லிக்கட்டுவில் எப்பாவது காயம்தான் கிடைக்கும் ... ஆனால் தினமும் ஆயிரக்கணக்கில் கொல்லுவதை என்ன செய்வது? ஏன் செடி கொடிகளை மனிதன் திங்க வேண்டியதுதானே ?? அப்படி என்ன மாட்டுக்கறி ருசி கேக்குது !!?? இன்னும் கிண்டியில் குதிரைப் பந்தயம் போய்கிட்டு இருக்கு... அதை எதாவது பண்ண வேண்டியது தானே ...

மனிதன் துயரப்படுரானு கோபமா இருந்தா ... வருடத்திற்கு இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லச்சம் பேர், அதுக்கு மொதல்ல சட்டம் போடட்டும்..
அப்புறம் போலீஸ் பயிற்சின்னு சொல்லிட்டு மனித உரிமை மீறல் பண்றாங்க ....
இராணுவ பயிற்சின்னு சொல்லிட்டு மனித உரிமை மீறல் பண்றாங்க.. இதையும் கொஞ்ச கேளுங்க...

பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி நடுத்துவாங்கனு பார்த்தா...சின்னப்புள்ள தனமா...
 
பொதுவா மாடு பிடிப்பவர்கள் தண்ணி அடித்துவிட்டு மாடு பிடிப்பார்கள் என்கிற கருது நிலவுகிறது. அது முற்றிலும் தவறு. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தேதி அறிவித்தவுடன் பழனிக்கு மாலை போட்டால் எவ்வவளவு சுத்தமாக இருக்கிறார்களோ அதே அளவு பக்தியுடன் இருப்பார்களாம். இதில் ஒரு ஆச்சரியமான விடயம் சில பேர் இந்தக் கால கட்டத்தில் சைவம் மட்டும்தான் சாப்பிடுவார்களாம். இது எனக்கு  அலங்காநல்லூர் காரர் சொன்னது. இந்த சரக்கு அடிச்ச்சிட்டு சேட்டை பண்றது எல்லாம் வேற மக்கள்...

அப்புறம் மாட்டுக்கு எல்லாம் போதைப் பொருள் கொடுக்கிறது இல்ல...எந்தக் காலம் !!??
மருத்துவச் சோதனை பண்ணித்தான் மாட்டையும் மனிதனையும் மைதானத்துக்குள்லே இறக்குகிறார்கள்.

 

எங்க ஊர்ல துணி துவைக்க கழுதையை இன்னும் ஒருத்தர் உபயோகப்படுத்திக்கிட்டு இருக்கார்... அவர எதாவது பண்ண முடியுமா ??

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கிற்கு.... நேற்று முன் தினம் தீர்ப்பு வந்துள்ளது.
இந்த வழக்கு நடக்கும் போது... ஜல்லிக்கட்டு நடத்தி வரும் அமைப்பினருக்கு, தமிழக முக்கிய கட்சிகள் எந்த விதத்தில் துணையாக நின்றன?

 

தமது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் வழக்குகளிலும், சொத்துக் குவிப்பு வழக்குகளிலும்.... நல்ல வழக்கறிஞர்களை வைத்து வாதாடும் இவர்கள், தமிழனின் ஆயிரமாண்டு கலாச்சார நிகழ்வை  உலகின் முழுத்தமிழரின் வழக்காக கையாண்டு... ஜல்லிக்கட்டு உறுப்பினர்களுக்கு உதவ தயங்கியது ஏன்?

 

தேர்தல் வந்தால்... ஒரு வாக்குக்கு 5,000 ரூபாய் கொடுக்க முடிந்த இவர்களால், சில லட்சங்களை கொடுத்து நல்ல வழக்கறிஞரை ஒழுங்கு படுத்திக் கொடுத்தும், தமது ஆதரவை இவர்களுக்கு தெரிவித்தும் இருந்தால்.... இந்த நிலைமை வந்திருக்குமா?

 

இந்த வழக்கின் தீர்ப்பானது, உலகத் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல... இனியாவது உதவ‌ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தீர்ப்பு தவறானதாகப் படவில்லை எனக்கு. இந்த விளையாட்டினால் எருதிற்கும், போட்டியாளருக்கும் காயமோ அல்லது மரணமோ ஏற்படுமேயன்றி வேறெதுவுமில்லை. 

 

தமிழரின் பாரம்பரியம் என்று இந்த விபரீத விளையாட்டை அனுமதித்தால், இதோபோன்ற புராதன தமிழ்ப் பாரம்பரியங்களுடனேயே இருக்கும் பல விளையாட்டுக்கள் சம்பிரதாயங்களையும் நாம் காவிக்கொண்டுவரவேண்டியிருக்கும்.

 

உதாரணத்திற்கு, உடன்கட்டையேறுதல் என்னும் தமிழ்ப் பாரம்பரியம் இருக்கிறது. கணவன் இறந்தவுடன், அவனது சிதையிலேயே உயிருடன் இருக்கும் மனைவியும் ஏறி எரிந்து போவது. இதையும் நாம் தொடர்ந்து செய்யலாமே?

 

அதேபோல கணவன் இறந்தவுடன், விதவை வெண்ணிர ஆடையுடுத்தி, தலைவிரிகோலமாக, பூவிழந்து பொட்டிழந்து ஊராலேயே ஒதுக்கி வைக்கப்படுவது, இதுவும் தமிழ்ப் பாரம்பரியம்தானே?? தொடர்ந்து செய்வதில் என்ன பிழை ?

 

தமிழகத்தில் காளையேற்றத்தில் ஈடுபட்ட ஒருவனிடம் படித்தவர் ஒருவர் கேட்டாராம், "தம்பி, வருடம் முழுவதும் உங்களுக்காக வயலில் உழைத்துக் களைத்துப் போயிருக்கும் அந்த எருதினை எதற்கு வேதனைப் படுத்துகிறீர்கள்?" என்று. அதற்கு அந்த இளைஞனோ, "ஐய்யா, வருடம் தோறும் வயலில் வேலைசெய்து முறுக்கேறியிருக்கும் அந்தக் காளையை அடக்கி, நான் தான் அதன் எஜமான் என்று காட்டத்தான் இந்தக் காளையேற்றம்" என்று சொன்னானாம். அதற்கு அந்தப் படித்தவரோ, " அப்படியானால், காளையில்லாமல் டிராக்டரினால் வயலை உழுபவர்கள், டிராக்டரோடடு ஏற்றம் செய்வீர்களா?" என்று கேட்க, பதில் தெரியாமல் விழித்தானாம் அவன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோருக்கும்  புரியும் வடிவில் விவேக் சொல்லுகிறார், முடிந்தால் கேளுங்கள்..........

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காளையேற்றம் என்னும் ஜல்லிக்கட்டை நடத்தும் தமிழன் தான்.... மாட்டுப் பொங்கல் என்னும் விழாவையும் நடத்தி காளைகளை கௌரவிக்கின்றான் என்பதை மறவாதீர்கள்.

 

இந்தத் தீர்ப்பானது... தமிழனுக்கு என்று தனித்துவமான பழங்கலைகள் இருக்கப் படாது என்ற நோக்கில் வந்த தீர்ப்பாகவே நாம் கருத வேண்டும்.

 

தமிழ்ப் பகுதியில்... வரவிருந்த சேது கால்வாய்த் திட்டத்துக்கு, (இல்லாத) ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது என்று வந்த தடையும்..... இது போன்றதே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பழையன கழிதலும், புதிய புகுதலும் தான் ஒரு இனத்தினை மாற்றங்களினூடு வளர்த்துச் செல்லும். பழைய சம்பிரதாயங்கள் அந்தக் காலத்திற்கு ஏற்றவையாக இருந்ததினால், அவை அன்று பின்பற்றப்பட்டன. ஆனால் காலம் மாறிவிட்டது, தமிழரின் வழக்கங்களும் மாறிவிட்டன. ஆகவே காலத்திற்கு ஒவ்வாத பாரம்பரியங்களை விட்டு விட்டு புதியன புகுவோம். 

 

தமிழரின் கலைக் கலாச்சாரங்களைக் காட்டுவதற்கும் பின்பற்றுவதற்கு இதைவிடவும் மிகவும் நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். மிருக வதை வேண்டாமே !

 

சாராயம் ஊற்றிக்கொடுத்து, நீங்கள் தனக்கு என்ன செய்கிறீர்கள் என்கிற அறிவுகூட இல்லாமல் மிரண்டு ஓடும் காளையை ஆர்ப்பரித்துக்கொண்டு பத்துப் பதினைந்துபேர் அதன்மேல், தாவிக் குதிப்பதும், பினால் குத்துவதும், கழுத்தில் இறுக்கி இழுத்து விழுத்துவதும்தான் தமிழரின் வீரமா??? இதில்லை வீரம், போர்க்களத்தில் நெஞ்சில் வெடிதாங்கியபோதும்,  தாய் மண்ணிற்காக எதிரியின் பாசறைதேடி கால்கள் செல்லுமே, அதுதான் வீரம் ! 

Edited by ragunathan

உதாரணத்திற்கு, உடன்கட்டையேறுதல் என்னும் தமிழ்ப் பாரம்பரியம் இருக்கிறது. கணவன் இறந்தவுடன், அவனது சிதையிலேயே உயிருடன் இருக்கும் மனைவியும் ஏறி எரிந்து போவது. இதையும் நாம் தொடர்ந்து செய்யலாமே?

 

அதேபோல கணவன் இறந்தவுடன், விதவை வெண்ணிர ஆடையுடுத்தி, தலைவிரிகோலமாக, பூவிழந்து பொட்டிழந்து ஊராலேயே ஒதுக்கி வைக்கப்படுவது, இதுவும் தமிழ்ப் பாரம்பரியம்தானே?? தொடர்ந்து செய்வதில் என்ன பிழை ?

 

உடன் கட்டை ஏறலும், விதவைகள் வெள்ளைப்புடவை அணிவதும் இந்தியப் பண்பாடு. அது தமிழ்ப் பண்பாடு அல்ல. ஆரியத் தாக்கத்தின் காரணமாக நம்மவர்கள் அதைக் காவிக் கொண்டு திரிந்தனர்.

 

பழையன கழிதலும், புதிய புகுதலும் தான் ஒரு இனத்தினை மாற்றங்களினூடு வளர்த்துச் செல்லும். பழைய சம்பிரதாயங்கள் அந்தக் காலத்திற்கு ஏற்றவையாக இருந்ததினால், அவை அன்று பின்பற்றப்பட்டன. ஆனால் காலம் மாறிவிட்டது, தமிழரின் வழக்கங்களும் மாறிவிட்டன. ஆகவே காலத்திற்கு ஒவ்வாத பாரம்பரியங்களை விட்டு விட்டு புதியன புகுவோம். 

 

தமிழரின் கலைக் கலாச்சாரங்களைக் காட்டுவதற்கும் பின்பற்றுவதற்கு இதைவிடவும் மிகவும் நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். மிருக வதை வேண்டாமே !

 

சாராயம் ஊற்றிக்கொடுத்து, நீங்கள் தனக்கு என்ன செய்கிறீர்கள் என்கிற அறிவுகூட இல்லாமல் மிரண்டு ஓடும் காளையை ஆர்ப்பரித்துக்கொண்டு பத்துப் பதினைந்துபேர் அதன்மேல், தாவிக் குதிப்பதும், பினால் குத்துவதும், கழுத்தில் இறுக்கி இழுத்து விழுத்துவதும்தான் தமிழரின் வீரமா??? இதில்லை வீரம், போர்க்களத்தில் நெஞ்சில் வெடிதாங்கியபோதும்,  தாய் மண்ணிற்காக எதிரியின் பாசறைதேடி கால்கள் செல்லுமே, அதுதான் வீரம் ! 

 

 

விவேக் ஒரு படத்தில் சொல்லுவார் "பழையன கழிதலும், புதிய புகுதலும்" என்றால் வீட்டில் உள்ள வயதானவர்களை எரித்து விடலாமா ?!! ஜல்லிகட்டிலும்  காலதிற்க்  கேற்ப எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டது.
இங்கு மாடுபிடிப்பவர்கள் காயப்படுகிறார்கள் என்று சொன்னால் யோசிக்க வேண்டிய விடயம் ... எப்படி மேம்படுத்தலாம் என்று யோசிக்கலாம்.
 
போர்க்களத்தில் கொலை செய்வது வீரம் என்று கூறும் நீங்கள் மாடு பிடிப்பதை வதை என்று கூறுகிறீர்கள். முரணாக உள்ளதே !! 
 
சாராயம் ஊற்றிக்கொடுத்து மாடுகளை ஜல்லிகட்டில் விடுவது கிடையாது. இது எல்லாம் தவறான பரப்புரை. சொல்வதை எல்லாம் அப்படியே நம்பாதீர்கள். அப்படிச் செய்வதை விழா நடத்துபவர்களும் அனுமதிக்க மாட்டார்கள் மாடு பிடி வீரர்களும்  ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.  தெரியாமல் எதாவது நடந்தால்தான் உண்டு.
 
இதில் மிருக வதை என்று சொல்வதுதான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
  • முதலில் ஜல்லிகட்டுக்கு எல்லா மாடுகளையும் விட முடியாது. அதற்கென்ற பிரத்யோகமாக வளர்க்கப்பட்ட காளைகள்தான் விளையாட விடப்படும்
  • மாடுகள் களத்தில் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் தான் இருக்கும்(அலங்காநல்லூர் காட்சியைக் காணவும்)
  • ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பேர் திமிலைப் பிடித்து தொங்க முடியாது. விழா நடத்துபவர்கள் தொடர்ந்து இதை அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
  • மாடு அடக்கப்பட்ட உடனே வீரர்கள் காளையிடமிருந்து அகன்று சென்று அடுத்த மாடு காலத்திற்குள் வந்து விடும்.
  • சாராயம் குடித்த மாடுபிடிப்பவர்கள் காலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு முறை  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டால் இந்த உண்மை தெரியவரும். 
  • எப்பொழுதாவது காளை காயப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்டதுண்டா??

 

வைகோ கூற்று ...

ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தங்கள் பிள்ளைகளைப் போல, வீடுகளில் போற்றிப் பாதுகாத்து வளர்க்கின்றார்கள். அந்தக் காளைகள் சீறிப் பாய்ந்து வருகிறபோது வீர வாலிபர்கள் அதன் கொம்புகளையும், திமிலையும் பற்றிப் பிடித்துத் தங்கள் துணிச்சலையும், வேகத்தையும் நிலைநாட்டுகின்றார்கள். 

இதற்குத் தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் கூறி இருக்கின்ற காரணம் எவ்விதத்திலும் ஏற்கத் தகுந்தது அல்ல. மாடுகளைத் துன்புறுத்துவதாகச் சொல்வது உண்மைக்கு மாறானது.

 

மெக்சிகோ, ஸ்பெயின் போன்ற மேலை நாடுகளில் மாடுபிடிப் போட்டியில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு காளைகளைத் துன்புறுத்திச் சாகடிக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டில், மாடுகள் மீது பாய்கின்ற இளைஞர்கள், ஒரு சிறு தார்க்குச்சியைக் கூடப் பயன்படுத்துவது கிடையாது. உயிரைப் பணயம் வைத்து, வெறுங்கைகளால் மாடுகளைப் பிடிக்கின்ற இளைஞர்களுக்குத்தான் காயம் ஏற்படுகின்றது.

நாள்தோறும் எண்ணற்ற சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. பலர் உயிர் இழக்கின்றனர். அதற்காக இனிமேல் சாலைகளில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று உத்திரவிட முடியுமா?

 

தமிழர்களின் நெடிய பாரம்பரியப் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றான, பல நூறு ஆண்டுகளாகத் தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கின்ற ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற வீரத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர் நாகரிகத்தின் மீது தொடுக்கப்பட்ட அத்துமீறலாகவே இந்தத் தீர்ப்பு அமைந்து உள்ளது.

Source http://www.dinamani.com/latest_news/2014/05/09/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4/article2215041.ece

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

பழையன கழிதலும், புதிய புகுதலும் தான் ஒரு இனத்தினை மாற்றங்களினூடு வளர்த்துச் செல்லும். பழைய சம்பிரதாயங்கள் அந்தக் காலத்திற்கு ஏற்றவையாக இருந்ததினால், அவை அன்று பின்பற்றப்பட்டன. ஆனால் காலம் மாறிவிட்டது, தமிழரின் வழக்கங்களும் மாறிவிட்டன. ஆகவே காலத்திற்கு ஒவ்வாத பாரம்பரியங்களை விட்டு விட்டு புதியன புகுவோம். 

 

தமிழரின் கலைக் கலாச்சாரங்களைக் காட்டுவதற்கும் பின்பற்றுவதற்கு இதைவிடவும் மிகவும் நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். மிருக வதை வேண்டாமே !

 

சாராயம் ஊற்றிக்கொடுத்து, நீங்கள் தனக்கு என்ன செய்கிறீர்கள் என்கிற அறிவுகூட இல்லாமல் மிரண்டு ஓடும் காளையை ஆர்ப்பரித்துக்கொண்டு பத்துப் பதினைந்துபேர் அதன்மேல், தாவிக் குதிப்பதும், பினால் குத்துவதும், கழுத்தில் இறுக்கி இழுத்து விழுத்துவதும்தான் தமிழரின் வீரமா??? இதில்லை வீரம், போர்க்களத்தில் நெஞ்சில் வெடிதாங்கியபோதும்,  தாய் மண்ணிற்காக எதிரியின் பாசறைதேடி கால்கள் செல்லுமே, அதுதான் வீரம் ! 

 

நல்ல கருத்து அய்யா

அப்படியே மிருகவதைச் சட்டத்தை பூரணமாக அமுல்படுத்தி இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யவும். 
 
விலங்குகளை - மாடுகளை கொன்று இரத்தம் ஓட ஓட துண்டு துண்டுகளாக வெட்டி அதை சட்டியில் போட்டு அவித்து உண்ணும் மனித மிருகங்கள் உள்ள இந்த உலகம் ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்பமடைன்றன என்று "வேதனை" படுவது.....ஸ்ஸ்ஸப்பா.....   :D  
 
இலங்கையில் பசுக்கொலைச் சட்டம் பொது பல சேனா கொண்டுவருமானால் எம் ஆதரவு பல சேனாவிற்கே!!   :D
 
.
 
 
 
 

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்படியே மிருகவதைச் சட்டத்தை பூரணமாக அமுல்படுத்தி இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யவும். 
 
விலங்குகளை - மாடுகளை கொன்று இரத்தம் ஓட ஓட துண்டு துண்டுகளாக வெட்டி அதை சட்டியில் போட்டு அவித்து உண்ணும் மனித மிருகங்கள் உள்ள இந்த உலகம் ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்பமடைன்றன என்று "வேதனை" படுவது.....ஸ்ஸ்ஸப்பா.....   :D  
 
இலங்கையில் பசுக்கொலைச் சட்டம் பொது பல சேனா கொண்டுவருமானால் எம் ஆதரவு பல சேனாவிற்கே!!  :D
 

 

http://www.youtube.com/watch?v=XPhI00BJ5Do

 

எமக்கு.... வகுப்பு எடுக்கும் இவர்கள்,

தினமும்... சாப்பிடும் சாப்பாட்டில், பத்து மிருகங்கள் உயிரை விட்டிருக்கும். :D 

 

ஆடு நனையுதென்று... கோழி அழுததாம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.