Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு துரோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலை முடிந்து வழமையாக வீடு செல்லும் பாதையால் பராக்கு பாாத்த படி சென்று கொன்டிருந்த வாசனை வணக்கம் என்ற ஒரு பெண்  குரல்  இடை  மறித்தது.நிமிர்ந்து பார்த்தவன் தானும் ஒரு வணக்கத்தை உதிர்த்து  விட்டு  நடையை தொடர்ந்தவனை  உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்ற வாாத்தை தடுத்தது.

நின்றவன் ஒரு கணம் தாறுமாறாய் குழம்பி தெளிந்தான்

 

.அது வேறுயாரும் இல்லை அவனது நன்பன் கரனின் மனைவி தான்.குழப்பத்துக்கு காரணம் வழமையாக வணக்கத்துடன் போறவா இன்று கதைக்க வேணும் என்று சொன்னது தான்.தான் அவாகளிடம் கடணாக வாங்கிய பணம் ஞாபகம் வர தெளிந்தான்.

ஓம் சொல்லுங்கோ அக்கா என்றவன் தவனைசொல்வதற்க்குஅவசரமாக வசதியான திகதியை தேடிக்கொன்டிருந்தான்.வாசன் நீங்கள்  அந்தக்காசை கரனிடம் கொடுக்க வேண்டாம் என்னிடம் தாங்கோ அதையும் ஆறுதலாக தாங்கோ என்றவ வாசனுக்கு எந்த அவகாசமும் வழங்காமல் தானே தொடர்ந்தா.

 

வாசன்
உங்களுக்கு தொியுமே கரன் ஊருக்கு போய் கலியானம் கட்டிப்போட்டு வந்திட்டார்.இனியும் அவரை நம்பி ஏமாற நான் தயார் இல்லை. வீட்டிலை ஒரே சன்டை நாலு தரம் பொலிசிலும் பிடிச்சு குடுத்திட்டன்.என்று இன்னும் அவா தொடர

வாசனுக்கோ தலைக்கு மேல் மிக அருகில் காத்தாடி  சுழல ஆரம்பிச்ச மாதிரி ஒரு உணர்வு வர மெல்ல காய் வெட்டிக்கொன்டு இடத்தை காலி பண்ணினான்

 

.இப்போதைக்கு
காசு குடுக்க தேவையில்லை என்ற அற்ப்ப ஆறுதல் ஒரு பக்கமும் கரன் இப்படி செய்திருப்பானோ என்ற குடைச்சலும்
சோ்த்து அலைக்களிக்க பக்த்திலிலந்த கடைக்குள் நுளைந்தான்

அங்கு போய் நாலு பியரை வாங்கிக்கொன்டு பக்கத்திலிருந்த புங்காவை நோக்கி நடந்தவனின் மனதில் கரன்.

 

அப்படி ஒன்றும் பொிய நட்ப்பு இல்லை என்றாலும் இருக்கிற நாலைந்து நன்பர்களில பத்தோடு பதினொன்று காதலித்து திருமணம் முரட்டு சுபாவம் இப்ப இரன்டு பிள்ளைகள்.

அவனவன் ஒன்டுக்கே பஞ்சாய் பறக்கிறான் இவனுக்கு சின்ன வீடு வேறை என்று ஒரு கற்ப்னை குதிரைக்குட்டி எட்டிப்பாக்க
நாலு தரம் பொலிஸ் பிடித்து குளிருக்கை கரனை விட்டது நிநைவுக்கு வர குதிரைக்குட்டி வந்த வேத்திலேயே பறந்திட்டுது.ஒரு ஒதுக்குப்புறமாய் இருந்து பியரை எடுத்து திறக்க கை பேசி கன்டாங்கி கன்டாங்கி  என்று சிணுங்கியது.
கொஞ்சம் தாமதமானாலும் இவளவை தொடங்கிடுவாளவாய் என்று மனைவியை செல்லமாக திட்டியவாறு
கைபேசியை எடுத்து பாத்தவனுக்கு பியர் திறக்காமலையே தலை கிர்ர்ர் என்றது.

 

 

இன்னும் வரும் :)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ படிக்கும் ஆவலுடன்...

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவைபிரியன். வாசிக்க ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவைபிரியன் தொடருங்கோ...சின்னவீடு செட் பண்ணுகிற டெக்னிக் எதாவது தெரிந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதியவர்களுக்கும் பச்சை முலம் என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் மிக்க நன்றிகள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ வில்லங்கமான கதையா இருக்கும்போல இருக்கு..  :wub: நானும் ஆவல்.. :D

தொடருங்கள் சுவைப்பிரியன்...

 


அவனவன் ஒன்டுக்கே பஞ்சாய் பறக்கிறான் இவனுக்கு சின்ன வீடு வேறை என்று ஒரு கற்ப்னை குதிரைக்குட்டி எட்டிப்பாக்க

 

இந்த வயிற்றெரிச்சல் வராமல் இருக்குமா என்ன... சேம் பிளட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தருக்கும் நீங்கள் துரோகம் செய்யேல்லை
பணம் உங்கள் கையில் இருக்கும் வரை லாபம் தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சுவைப்பிரியன்..!

 

கதையின் முடிவு, எக்கச்சக்கமாய் ஆரையும் மாட்டிவிடுகிறமாதிரி இருக்கும் வரையும் நமக்கு ஒக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் சுவைப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞசம் நேரப்பற்றாக்குறை விரைவில் அடுதடத பகுதி வரும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்க ஆவல்.

தொடருங்கள் வாசிக்க ஆவல்

  • கருத்துக்கள உறவுகள்

கைபேசி கன்டாங்கி கன்டாங்கி  என்று சிணுங்கியது.

கொஞ்சம் தாமதமானாலும் 'இவளவை தொடங்கிடுவாளவாய்' என்று மனைவியை செல்லமாக திட்டியவாறு

கைபேசியை எடுத்து பாத்தவனுக்கு பியர் திறக்காமலையே தலை கிர்ர்ர் என்றது.

எழுத்து நடை பல சின்னவீடுகளைத் தாண்டிச் செல்வதை உணர்த்துகிறது. சுவைப்பிரியன் என்றால் சும்மாவா..! உங்கள் காட்டில் மழை. வாழ்த்துக்கள்!! தொடருங்கள்.

தொடருங்கள், வாசிக்க ஆவல்!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலை பேசியில் கரன்.எடுத்த எடுப்பிலேயே அந்தக்காசை என்னட்டை தான் தர வேணும்.அல்லாட்டால் வீண் பிரச்சனை வரும் என்று வெடித்தான்.இது வாசன் எதிர் பாத்ததுதான்.அது பிரச்சனை இல்லை உன்னிடம் தானே தர வேணும் அது தானே முறை என்று சொல்லி வைத்தான் வாசன்.கிழிஞ்சுது இவங்கடை பிரச்சனையால நான் இப்ப டபிளா கொடுக்க வேண்டி வருமோ என்று யோசித்த படியே பியரை உறுஞ்சினான்.

 

அடுத்த சில தினங்களில் கரனை நோில் சந்திக்கும் வாயப்பு கிடைத்தது வாசனுக்கு.என்னடாப்பா உன்ரை மனிசி இப்படி ஒரு குண்டைத்துக்கிப்போடுது என்று கேட்டான் வாசன்.ஒமடாப்பா ஊரிலை போய் மகளின் சாமத்திய வீடு செய்தனான் எல்லோ அப்ப வந்த தொடர்பு அது மனிசிக்கும் சாடைமாடையாய் தொியும் என்று அவனும் வஞ்சகம் இல்லாமல் கொஞ்சம் பொிய குண்டாய் துக்கிப்போட்டான்.அப்ப வாற கிழமை நடக்கப்போற உன்ரை மகளின் பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போறாய் எனறு கேட்டான் வாசன்.அவளைப்பற்றிக் கதைக்காதே அவள் தானே பொலிசுக்கு அடித்தது அல்லாட்டி மனிசிக்கு உதுக்கெல்லாம் பாசை தொியுமே என்றவன் தனிய நின்டு செய்யட்டும் என்று பொருமினான்.

 

அடப்பாவிகளா மனிசிக்கு பாசை தொியாததை எப்படி எல்லாம் பயன் படுத்துறாங்கள் என்று நினைத்துக்கொன்டு அப்ப பொலிஸ் உன்னை எங்கை கொன்டு போனது எனறு விடுப்பினான்.வாசன்.அவங்கள் என்ன 5 ஸ்ரார் கொட்டலுக்கே அனுப்புவாங்கள் வீட்டில நிக்ககுடாது எங்கையாவது போய்த்துலை என்று கலைத்து விட்டாங்கள் அந்த சாமத்தில எங்க போறது. நேசனுக்கும் கமலுக்கும் போன் அடித்தேன் அவங்கள் எதுக்கும் நீ நாளைக்கு வா என்று மறை முகமாய் மறுத்திட்டாங்கள் துரோகிகள்.என்றவன் அநதக்குளிலருக்குள்ள காருக்குள்ள தான் படுத்தனான் என்றான் கரன்.ஆக இரன்டுக்கு ஆசைப்பட்டால் கடைசியில ஒன்டும் இல்லாமல் காருக்குள்ள தான் படுக்க வேணும் என்ற உலக மாகா உண்மை புரிய குடவே மனைவியின் ஞாபகம் வந்தவனாய் அப்போதைக்கு கரனிடமிருந்து விடை பெற்றான் வாசன்.

 

அடுத்த கிழமை அப்பன் இல்லாமல் நடந்த மகளின் விழாவின் முலம் இந்த வள்ளி தெய்வானை பிரச்சனை  சுற்று வட்டாரத்தின் பேசுபொருள் ஆனது.அப்படியாம் ஒமாம் என்ற பெண்களின் குசுகுசுப்பும் அவன் சுழியனடா அவனுக்கு மச்சமடா என்ற ஆண்களின் அங்கலாய்புடனும் அடுத்த சில தினங்கள் நகன்றன.தாயுடன் பாதையை கடக்கும் போது தனது பொம்மையை தவற விட்ட குழந்தைக்கு அதை எடுத்து கொடுத்து விட்டு நிமிர்ந்த வாசன் கையில் ஒரு கடிதத்துடன் கரன் நிற்பதைக்கண்டு அவனிடம் சென்றான்.டேய்  நீதிமன்றத்தில் இருந்து கடிதம் வந்திருக்கு.நாளை மறுநாள் விசாரனையாம் எனக்கு அவசரமாய் ஒரு வக்கீல் ஒழுங்கு பண்ண வேண்டுமடா என்று  படபடத்தான் .எனக்கு பொிசாய் ஒருத்தரையும் தொியாது நீ தேவனைக்கேள் அவனுக்குத் தொிந்திருக்கும் என்று சொல்லி முடிக்க முன்பே தேவன் வீடு நோக்கி பறந்தான் கரன்.

 

தேவனும் ஒரு நாள் தவனையில் வக்கீலை ஒழுஙகு பண்ணி கொடுத்து கரனின் மனைவி மற்றும் மகளிடமிருந்து துரோகிப் பட்டத்தை வெற்றிகரமாக பெற்றுக்கொன்டான்.நீதிமன்ற விசாரனையில் மறந்து மன்னித்து சோ்ந்து வாழப் போகீறீர்களா என்றதுக்கு மனைவி அது கனவிலும் நடக்காது என்று சொல்ல பிரிவு என்று தீர்ப்பானது. இந்தப்புடுங்குப்பாடால வாசன் கொடுக்க வேண்டிய காசு காலவரையறை இன்றி பிற்போடுப்பட்டு விட்டது என்று நினைத்துக்கொன்டிருந்தவனின் எண்ணத்தில் மண்ணை போட்டது அவர்களின் அடுத்த சந்திப்பு

 

.இனி அந்த ஏரியாவில இருக்க ஏலாது இங்க  சின்ன வீீடாய் ஒன்று பாரடா என்று வந்து நின்றான் கரன்.அதுக்கு அட்வானஸ் கொடுக்க உன்ரை காசைத்தான் நம்பியிருக்கிறேன்.என்றான்.
என்னடா மீன்டும் சின்ன வீடா உதால தானே இவளவு பிரச்சனையும் என்று கேட்டு சின்ன வீடு பற்றிய விடுப்புக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தான் வாசன்

.
அடுத்து வந்த மாதங்கள் எல்லாம் தனி வாழக்கை என்பதால் கரனின் ஓய்வு நேரங்கள் பெரும்பாலும் வாசனுடனே கழிந்ததால் தேவைக்கும் அதிகமாகவே தகவல்கள் கிடைத்தன வாசனுக்கு. நான் அவளை வேலையால் நிற்பாட்டிப்போட்டன்.ஒருக்கா இங்கை ஸ்பொன்சரிலையாவது அழைத்து முன்னால மனைவிக்கு கடுப்பேத்த வேணும் .அதுக்குரிய அலுவல் எல்லாம் நடக்குது அவளும் தன்னிடம் உள்ளதை அடைவு வைத்து கட்ட வேண்டிய காசெல்லாம் கட்டிப்போட்டாள்.முந்தி தான் ஒழிச்சு மறைச்சு கதைக்க வேணும் இப்தானே என்ரை முன்னால் லைனை கிளியராக்கிப் போட்டாள்.என்றெல்லாம் தனது சாதனைகளை அடுக்கும் போது வாசனும் தனது பங்கிற்க்கு அப்ப அவாவிற்கு்கு ஊரில உள்ள உறவுகளால பிரச்சனை ஒன்டும் இல்லையோ என்று கேட்டான்.பிரச்சனை இல்லாமல் இருக்குமே அவளுடன் தாய் சகோதரங்கள கதைப்பது இல்லை நானும் முன்னால் மனிசியும் வாங்கிய வீட்டில தான் இப்ப இருக்கிறாள் என்றவன் நானும் அடுத்த வருடம் ஒரேயடியாய் அங்கு போய் விடுவேன் என்றவனை இடைமறித்த வாசன் ஒரு வேளை நீ அங்கு நிரந்தரமாக போனால் அவா உன்னை நிராகரித்தால் என்டு இழுக்க.அது கடைசி வரைக்கும் நடக்காது என்று உறுதியாய் மறுத்தான்.

 

எப்படியும் கிழமைக்கு இரன்டு நாட்கள் ஆவது சந்திப்பார்கள்.ஆனால் ஒரு கிழமை காண வில்லை இரன்டாவது கிழமையும் காண வில்லை வாசனும் தனது வேறு சோலிகளில் இருந்து விட்ட நிலையில் ஒரு நாள் எதிர்பாராமல் கரனை சந்தித்தவன் எங்கையடா கன நாளாய் கானவில்லை  ஊருக்கு போட்டாய் என்று நினைத்தேன்.என்ற வாசனை உணர்ச்சி இல்லாமல் பார்த்தவன் நான் இப்ப அவையோட எல்லோ இருக்கிறன் என்றவனின் நாக்கு வறன்டு இருந்தது.அப்ப பிரச்சனை எல்லாம் இப்ப சரியோ சந்தோசம் என்று விரைவாக விடை பெற்றவனுக்கு கொஞ்சம் தலை சுற்றுவது போல் இருந்தது

 

இவனால் இரன்டு பேருக்கு துரோகிப்பட்டம் இவனது முன்னால் ச்சா இன்னால் மனைவியால ஒருத்தனுக்கு துரோகிப்பட்டம்.இனி இவைக்கு என்ன நடக்கும்.எல்லாத்துக்கும் மேலால இவனை நம்பி தன்னையும் தனது வேலை தனது சிறு சேமிப்பு தனது உறவுகள் எல்லாத்தையும் இழந்த அந்த்பெண்ணுக்கு என்ன நடக்கும் எல்லாத்தையும் ஒன்டாய் யோசிக்க தலை எந்திரன் பாணியில் சுத்தியது.விளைவு தற்காலிய நிவாரனியுடன் அதே புங்காவிற்க்கு போய் ஒன்றை திறந்து வாய்க்கு கொண்டு போனவன் ஏதோ நினைவு வந்தவனாய் தனது அலை பேசியை
அணைத்து விட்டு பியரைக் குடிக்க தொடங்கினான்.

 

 

யாவும் கற்பனை இல்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் கதைகளும் நன்றாக எழுதுவார் என்று இப்போதுதானே தெரிகிறது பாராட்டுகள். ஆமா சயீவன்இப்படி கதாப்பாத்திரங்களை முடிவில்லாத அந்தர வழியில் விட்டு விட்டீர்களே....இந்தப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?????? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காவில இருந்து தண்ணி அடிச்சதில சுவைப்பிரியனுக்கு மிச்சக் கதை மறந்திட்டுது சகாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்காலிக நிவாரணி எப்பவும் கைகொடுக்கும்   :D .....தற்கால கதைக்கு நன்றி சுவைப்பிரியன்  :)

  • கருத்துக்கள உறவுகள்

நீதி : தண்ணியடிக்கும் போது  கட்டாயம் அலைபேசியை அணைக்க வேண்டும்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் கதையை முடிக்க வேண்டும் என்ட அவசரத்தில் எழுதியிருக்கார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவைப்பிரியன் கதைகளும் நன்றாக எழுதுவார் என்று இப்போதுதானே தெரிகிறது பாராட்டுகள். ஆமா சயீவன்இப்படி கதாப்பாத்திரங்களை முடிவில்லாத அந்தர வழியில் விட்டு விட்டீர்களே....இந்தப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?????? :blink:

நன்றிகள் சகாரா.அதுதான் சொல்லிட்டனே உண்மைச்சமபவம் என்று.உங்களை மாதிரித்தான் வாசனும் குழப்பத்தில் உள்ளார்.  :)

பூங்காவில இருந்து தண்ணி அடிச்சதில சுவைப்பிரியனுக்கு மிச்சக் கதை மறந்திட்டுது சகாரா

மேல சகாராவுக்கு எழுதிய பதில் தான் உங்களுக்கும்.நான் என்ன வைச்சுக்கொன்டா வஞசனை பண்னுறன்  :)

தற்காலிக நிவாரணி எப்பவும் கைகொடுக்கும்   :D .....தற்கால கதைக்கு நன்றி சுவைப்பிரியன்  :)

நன்றிகள் கு சா. நிவாரனி தற்காலிகமாக இருந்தால் ஒ கே

நீதி : தண்ணியடிக்கும் போது  கட்டாயம் அலைபேசியை அணைக்க வேண்டும்...! :)

இல்லையா பின்ன. பொல்லைக்கொடுத்து அடி வாங்குவதையாவது தவிர்க்கலாம் எல்லோ  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் கதையை முடிக்க வேண்டும் என்ட அவசரத்தில் எழுதியிருக்கார்

உண்மை தான் ரதி.3 பகுதியாக எழுதுவம் என்று தான் நினைத்தேன்.நேரப்பற்றாக்குறை அதோட இதை ஒரு சம்பவமாக எழுதுவம் என்று தான் நினைத்தேன்.பின்பு கதையாக முயற்ச்சி பண்ணுவம் என்றது தான் இந்த பரீட்சை.எனது நோக்கம் இந்த விடையத்தை கள உறவுகளுடன் பகிர்வதே.நன்றி ரதி.

மற்நறும் பச்சை குத்தி உற்ச்சபகப்படுத்திய புத்தனுக்கும் விசுகுவுக்கும் மிக்க நன்றிகள்.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.