Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவை ரத்து செய்தது: ஐரோப்பிய நீதிமன்றம்- இணைப்பு 3:

 

 

புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை மீளாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவு-

LTTE.jpg

ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை லக்ஸம்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை விதித்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து வி.புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை.

 

விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றும் குறிப்பிட்டுள்ளது.

 

எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடககத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் பிபிசியிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஹேக்கில் இருக்கின்ற நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்புதானே தவிர சர்வதேச சட்டங்களின் அதனை பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாது என அந்த அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது என கிறிஸ்டஃபர் குறிப்பிட்டார்.

 

 புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மீளாய்வு செய்ய உத்தரவு-

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

எனினும் இது பற்றி  உத்தியோக பூர்வ தரப்புகளிடம் ஆராய்ந்த போது விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைப் பபட்டியலிலேயே இருக்க வேண்டுமா என்பது பற்றி ஆராய, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு  3 மாத கால அவகாசத்தை வழங்கிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை மேற்கொண்ட போது ஏற்பட்ட தவறுகளை ஆராய்ந்து மீண்டும் முடிவை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

 

 ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார்.

இந்த வழக்கின்  விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையின் போது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.

மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார்.

இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையின் போது கையாண்ட விடயங்கள், தடையை விதிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளில் தவறுகள் இருப்பதாக கூட்டிக் காட்டியுள்ள நீதிமன்றம் அவை குறித்து ஆராய்ந்து 3 மாத கால அவகாசத்தில் தீர்பை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்பானது புலிகள் தரப்பில் ஒரு சாதகமான நிலையை தோற்றுவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112634/language/ta-IN/article.aspx

  • Replies 200
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விக்கிப்பீடியாவை அரைகுறைகள் பாவித்தால் என்ன நடக்கும் என்பதை இந்த வழக்கு விளக்கியுள்ளது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு ரத்து: நீதிமன்றம் உத்தரவு

 

ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை ரத்து செய்து லக்ஸம்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தடை விதித்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து வி.புலிகள் அமைப்பு நீக்கப்படவில்லை.

 

 

விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் ஐரோப்பிய கவுன்சில் கையாண்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய கவுன்சில் முடிவெடுத்திருந்ததாகவும், அது முறையல்ல என்றும் நீதிமன்றும் குறிப்பிட்டுள்ளது.

 

 

எனவே ஒரு மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய கவுன்சில் மறுபடியும் பரிசீலித்து புதிதாக முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடககத்துறை அதிகாரியான கிறிஸ்டஃபர் ஃப்ரெட்வெல் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

 

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஹேக்கில் இருக்கின்ற நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

 

மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்புதானே தவிர சர்வதேச சட்டங்களின் அதனை பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாது என அந்த அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது என கிறிஸ்டஃபர் குறிப்பிட்டார்.

 

இலங்கை அறிக்கை

 

 

ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும் விஷயம் இந்த உத்தரவில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி ஐரோப்பிய கவுன்சிலுக்கு இலங்கை அரசு இதுவரை தகவல் வழங்கி வந்ததுபோலவே இனியும் தொடர்ந்து தகவல் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலைப் புலிகள் சம்பந்தமாக ஐரோப்பிய ஆணையம் செய்யும் மறு பரிசீலனையிலும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/10/141016_ltteeuropebandecision

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க பாடசாலைகளிலே விக்கிபேடியாவை தகவலாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியிருக்கையில் ஒரு உச்ச நீதிமன்றம்... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த நேரத்தல் தடைசெய்து அவர்கள் செயற்படாத வேளையில் தடையை நீக்கியிருக்கிறார்கள்..எப்படியோ மகிழ்ச்சியான செய்தி!!!!

நல்ல செய்தி ,

 

2009 ஆம் ஆண்டே செய்திருக்கவேண்டியது .

குடும்பப் பிணக்கு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் இறந்த பின்னர் விவாகரத்து வழங்குவதற்கு சமனான தீர்ப்பிது. அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. ஆனாலும் காலங்கடந்து கிடைத்த நீதியாகவே எனக்கு இது படுகிறது. இந்தத் தடை நீக்கத்தினால் தமிழர்களுக்கு குறிப்பாக தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையென்ன? அவர்களது இருண்ட வாழ்விற்கு ஏதாவது ஒரு வகையில் வெளிச்சம் கிடைக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்து ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் பல கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தனிநபர்கள் மீதும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யக் கோரி விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் சில தனிநபர்கள் மீதான கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ள நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை என்று தீர்ப்பளித்துள்ளது.

கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அது பற்றி 2 மாதங்களுக்குள் யோசனைகளை வழங்கலாம் என்றும், கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டது 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், விடுதலைப்புலிகளின் வழக்கு செலவை ஐரோப்பிய யூனியன் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=33599

குடும்பப் பிணக்கு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் இறந்த பின்னர் விவாகரத்து வழங்குவதற்கு சமனான தீர்ப்பிது. அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. ஆனாலும் காலங்கடந்து கிடைத்த நீதியாகவே எனக்கு இது படுகிறது. இந்தத் தடை நீக்கத்தினால் தமிழர்களுக்கு குறிப்பாக தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையென்ன? அவர்களது இருண்ட வாழ்விற்கு ஏதாவது ஒரு வகையில் வெளிச்சம் கிடைக்குமா?

 

எம் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் அல்ல, அரச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற தெளிவான கருத்தினை வலுப்படுத்துவதற்கு இவ் தீர்ப்பும், 3 மாதங்களின் பின் ஐரோப்பிய யூனியன் சாதகமாக முடிவெடுப்பின் அதுவும் துணை புரியும். 

 

தாயகத்தில் பெளத்த பேரினவாத செயல்களும் வடக்கு கிழக்கு முழுவதையும் பெளத்தமயப்படுத்தப்படும் செயல்களும் தீவிரமாக நிகழும் காலகட்டத்தில் அவற்றிற்கு எதிரான காத்திரமான போராட்டங்கள் வெடிக்க கூடிய சாத்தியங்கள் உருவாகிக்கொண்டு வருகின்றன. ஆயுதம் அற்ற அமைதி முறையிலான இப் போராட்டங்கள் பெருமளவில் அங்கு உருவாகுமாயின்,  இத்தகைய தீர்ப்புகள் சர்வதேச அரங்கில் அப் போராட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்புகின்றேன்.

 

அத்துடன்,

 

ஐரோப்பிய நாடுகளில் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அகற்றப்படுமாயின்,  இறுதிப் போருக்கு காசு சேகரித்து அவற்றை சுருட்டி தம் பைக்குள் போட்டுக் கொண்ட கயவர்களுக்கு எதிராக அவ்வாறு பணம் கொடுத்தவர்கள் துணிவாக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மனதிற்கு மகிழ்சி தரும் செய்தி.
எமது மாவீரர்களின் கனவு வீண்போகாது.

இதற்கான முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்.

 

கூகிள் தமிழ் செய்தியில் முக்கிய செய்தியாக இதைக் காட்டுகிறது. ஆனால் ஒருசில இந்தியத் தமிழ் ஊடகங்கள் தவிர்ந்த ஏனையவை செய்தியை மூடி மறைக்கின்றன.

 

915285gnews.png

Edited by இணையவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஐரோப்பிய நாடுகளில் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அகற்றப்படுமாயின்,  இறுதிப் போருக்கு காசு சேகரித்து அவற்றை சுருட்டி தம் பைக்குள் போட்டுக் கொண்ட கயவர்களுக்கு எதிராக அவ்வாறு பணம் கொடுத்தவர்கள் துணிவாக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும்.

 

இதை ஒருக்கா விரிவா சொல்லுங்கோ. காசு சேர்க்கும் போது அமைப்பின் பெயரில் தானே சேர்க்கப்பட்டது. அப்படியாயின் அமைப்பின் மேல் தானே சட்டநடவடிக்கை எடுக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்; இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று: வைகோ

 

 

சென்னை: இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப் வாதாடினார். இலக்சம்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகவும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிப் பீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது என்பது நியாயமற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தியா உள்ளிட்ட உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகள், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணைபோனதும், நிதி மற்றும் ராணுவ உதவிகளை வாரி வழங்கியது சர்வதேச சட்ட நியதிகளுக்கும், உலக நீதிக்கும் எதிரானது ஆகும்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011 அக்டோர் 21ல் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்ரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு 2013 ஜூன் 23ல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது.

சர்வதேச சட்டங்களின்படி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் 2009ல் தெளிவுபடுத்தியது.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிதான், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும்  ரிட் மனு தாக்கல் செய்தேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.

இந்தச் சூழ்நிலையில், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உலக நாடுகளும் இதனைப் பின்பற்றி தடையை நீக்கும் என்பது உறுதி.

இந்தியாவும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=33614

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செய்தி. :)

இனிமேலாவது ஒருங்கிணைந்து முன்னேறி சென்றால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான காரணங்கள் வலுவானதாக இல்லை,எனவே தடை செய்வதற்கான தாற்பரியங்கள் சட்ட ரீதியாக செல்லாது என்பது தான் நீதிமன்ற தீர்ப்பு. வலுவான காரணங்களை காட்டி தடையை 3 மாதங்களுக்குள் நீடித்துக்கொள்ளலாம் என்பது நீதிமன்ற ஆணை.எனினும் நம்மாளுங்க இங்கு ஏதும் கோல்மால் செய்து நந்த வனத்தில் ஓர் ஆண்டி என்ற கதையாக ஆக்காமல் இருக்கும் வரை வலுவான காரணங்களை இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் குறிப்பிட முடியாது.ஏனெனில் இந்த வழக்கு 2011 ல் புலிகளின் ஆயுத மௌனிப்பின் பின் தொடரப்பட்டது.எனவே முறையாக தடை நீங்க 3 மாதங்கள் ஆகும்.

மிகவும் மகிழ்வான செய்தி..........!

 

 

http://youtu.be/Xqb3pKcCh2k

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான தருணங்களில் நீதி தேவைப்படும் பொழுது அது எப்பொழுதுமே காலம் தாழ்த்தி தான் நீதி வேண்டி நிற்பவர்களை வந்தடைகின்றது என்பதற்கு ஒரு உதாரணம் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம்.....

தமிழர்தரப்பு மிகத்தீவிரமாக தங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டு இருந்த பொழுது இந்த தீர்ப்பு வந்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

நிறையக் கடக்க வேண்டிய பாதையில் அமைக்கப்பட்டுள்ள முதற் படி இது. தொடர்ந்து.. நிதானமாக விவேகமாக சட்டரீதியாக செயற்பட்டால் மட்டுமே மீதி.. படிகளையும் இலக்கை நோக்கிய பாதையில் பதிக்க முடியும். இன்றேல் இன்னும் பல தாமதங்களே பரிசாகும்.

 

இந்தத் தீர்ப்பை நிரந்தரமாக்கி... அதனை மையப்படுத்தி.. தாயக மக்களின் அவலங்களை.. நிலப்பறிப்பை.. சிங்கள மயமாக்கத்தை தடுக்க பயன்படுத்தக் கூடிய வழிமுறைகளை ஆராய்தலே இன்றைய தேவை..!!! :icon_idea:

காலம் கடந்து வந்த தீர்ப்பு என்றாலும் இத்தீர்ப்பினால் மகிழ்ச்சி.

இதற்கான முயற்சியில் ஈடுபட்ட உறவுகள் அனைவருக்கும்  நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒருக்கா விரிவா சொல்லுங்கோ. காசு சேர்க்கும் போது அமைப்பின் பெயரில் தானே சேர்க்கப்பட்டது. அப்படியாயின் அமைப்பின் மேல் தானே சட்டநடவடிக்கை எடுக்க முடியும்?

உங்கள் பின்னூட்டம் இங்கு வயிறுகலங்கிய பல புலிப் பினாமிகளை நிச்சயம் நிம்மதியாக உறங்க வைத்திருக்கும் என நம்பலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்
இறுதியாக புலிகளை பயங்கரவாதிகளாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் முதலாவதாக தடையை நீக்கியதும் ஐரோப்பிய ஒன்றியம் தான். கருத்துக்கு கருத்து புலிகளை பயங்கரவாதிகளாக்கி விட்டார்கள் என எக்காளம் இட்டவர்களின் தொனி மாறுவது சிரிப்பை வரவளைக்கிறது.
 
மாவீர்ர்களினதும் மக்களதும் எண்ணற்ற தியாகங்கள் வீண் போகாது.  அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை தடையை நீக்கச்செய்ய எம்மாலான முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும்.

 

இறுதியாக புலிகளை பயங்கரவாதிகளாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் முதலாவதாக தடையை நீக்கியதும் ஐரோப்பிய ஒன்றியம் தான். கருத்துக்கு கருத்து புலிகளை பயங்கரவாதிகளாக்கி விட்டார்கள் என எக்காளம் இட்டவர்களின் தொனி மாறுவது சிரிப்பை வரவளைக்கிறது.
 
மாவீர்ர்களினதும் மக்களதும் எண்ணற்ற தியாகங்கள் வீண் போகாது.  அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை தடையை நீக்கச்செய்ய எம்மாலான முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும்.

 

2009 ஆம் ஆண்டிற்கு முதல் இந்த செய்தி வந்திருந்தால் உங்கள் பதிவில் ஒரு நியாயம் இருக்கு ,இப்ப உதை வாசிக்க சிரிப்பாய் இருக்கு .யுத்தம் முடிந்து புலிகளை அழித்துவிட்டோம் என்று அரசு அறிவித்து சரணடைந்த பலரை புலிகளை புனரமைப்பிற்கு அனுப்பி பின்னர்  எல்லாம் முடிந்த கதை என்று அவர்களை வெளியிலும்  விட்டும் விட்டது .

 

முன்னாள் புலிப் போராளிகள் 132 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!   இது தான் இன்றைய நடப்பு நுணா .

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை பயங்கரவாதிகளாக்கியது இவர்கள். இப்போ அதை நீக்குவதும் இவர்கள். இந்த கோணத்தில் எப்போ நீங்கள் சிந்தித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சியான.... செய்தி.
தமிழர் மேல்... படிந்த கறை நீங்கிய நாள் இன்று.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.