Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் முன்னாள் தமிழீழ காவல்துறை வீரர் சுட்டுக்கொலை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamileelam_police.png

மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் தற்போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நகுலேஸ்வரனின் மனைவி கவிதா அப்பகுதி பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது. அவர்களிற்கு குழந்தைகளும் உள்ளன.

 

 

Police in #sriLanka says"rehabilitated" cadre shot dead in mannar- 4 photos sent #lka

 

B2Ty0LdIUAAlaLE.jpg

 

B2Ty-PcIMAAFD1D.jpg

 

B2TzWdWIgAAw8bw.jpg

 

B2TzgLvIgAA2nwf.jpg

 

 

#srilanka, Mannar - reports ex LTTE cadre shot dead by sniper around 8 last night while working on stones 2 build house with 2 other men.

 

 

#srilanka Mannar - bullet went though cheek and removed part of brain. body taken 2 Anaradapura 4 investigation along with 2 witnesses

 

(twitter)

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஆயுதங்கள் மெளனித்த பின்னும் சிங்கள இனவெறியின் ஆயுதம் மெளனிக்கவில்லை. இந்த அநியாயத்தை கேட்க இந்த உலகில் யாருக்கும் மனிதாபிமானமும் இல்லை..!!!!!!

 

கண்ணீரஞ்சலி.

 

Former Tamil Eelam policeman shot dead in Mannaar

[TamilNet, Wednesday, 12 November 2014, 22:01 GMT]

Unknown gunmen, believed to be the intelligence operatives of the Sri Lanka military, have shot and killed a former constable of Tamil Eelam Police at Ve’l’laang-ku’lam in Mannaar district Wednesday night around 8:30 p.m., news sources in Mannaar said. The victim, 34-year-old Sinniah Nakuleswaran, was cutting cement stones together with his wife for their resettlement house being constructed under the Indian Housing assistance, when the incident took place, according to initial reports. Mr Nakuleswaran, as several other former LTTE members, was facing continuous harassment from the occupying SL military in the former LTTE administered area.

The killing comes while the SL military has stepped up harassment of former LTTE members, especially before the Tamil Eelam Heroes Day on 27 November, the sources said.

Nakuleswaran was released after SL military custody following the genocidal onslaught on Vanni.

In the meantime, Sri Lankan military intelligence has deployed civil officials working under the SL Ministry of Resettlement, to collect particulars of the ex-LTTE members who are re-united with their families. The officials visiting the settlement had also instructed the former LTTE members not to change their mobile phone numbers without informing them.

Tension prevails at the settlement of Easan-kudiyiruppu at Kaneasapuram of Ve’l’laangku’lam.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37477

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை படைகளைக் குவித்துத் தேடினாலும் கொலையாளி கிடைக்க மாட்டார்.

ஒட்டுக்குழுக்கள் அவர்களுக்குள்ளேயே மறைந்திருப்பார்கள்

 

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.

ஒன்றும் அறியாமல் நிற்கும் குழந்தைகளை பார்க்கும் போது வயிற்றைப் பற்றி எரிகின்றது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

3ஆம் இணைப்பு- தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக கொலை:

 

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிறுப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று புதன் கிழமை (12) இரவு 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கருத்து தெரிவிக்கையில்,,,

நேற்று புதன் கிழமை (12) இரவு 7 மணியளவில் தனது வீட்டு வளாகத்தினுள் வீட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்ற நிலையில் தனது உறவினர்கள் சிலருடன் இணைந்து கல் அரிந்து கொண்டிருந்தார்.

இதன் போது வீட்டைச் சுற்றி மின் குமிழ்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. இந்த வேளையில் இரவு 8.30 மணியளவில் துவக்குச் சூட்டு சத்தம் ஒன்று கேட்டது.

அப்போது நாங்கள் அதனைப் பற்றி சிந்திக்கவில்லை.இந்த நிலையில் எனது சகோதரன் கத்தி சத்தம் போட்டு என்னை கூப்பிட்டார்.உடனடியாக விரைந்து சென்றேன்.

அப்போது எனது கணவர் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். தலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு பட்டிருப்பதை நான் உணர்ந்தேன்.என்னால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் எனது அழுகுரல் சத்தத்தை கேட்டு அயலவர்கள் திறண்டனர். பின் நான் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் விரைந்து வந்தனர்.அப்போது எனது கணவர் இறந்து விட்டார்.

எனது கணவர் விடுதலைப்புலிகளின் காவல் துறையில் கடமையாற்றி பின் இலங்கை அரசிடம் புணர்வாழ்வு பெற்று கடந்த 2012 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இணைக்கப்பட்டார்.

அன்று முதல் இன்று வரை சுய தொழில் செய்து குடும்பத்தை காத்து வந்தார். கிராம மக்களின் நலனுக்காகவும் இக்கிராமத்திற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.எனது கணவருக்கு எதிரிகள் யாரும் இல்லை.

கடந்த வாரம் எங்களுடைய வீட்டிற்கு வந்த இருவர் கடும் தொனியில் எனது கணவரின் பெயரை சொல்லி அழைத்து விட்டுச் சென்றனர்.எனது கணவர் வீடு திரும்பியவுடன் இச்சம்பவம் தொடர்பில் நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு  எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என அவர் என்னிடம்  கூறினார். இந்த நிலையிலே இவருக்கு இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன்(வயது-40) என்பவரது மனைவி தெரிவித்தார்.

-இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்ற வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும்,பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸாரும் வருகை தந்திருந்தனர்.

-இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று காலை(13) சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு சடலப்பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

-இந்த நிலையில் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

-தற்போது குறித்த கிராமத்தில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம் பெற்ற வீட்டிற்கு செல்வதற்கு வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சம்பவம் இடம் பெற்ற பகுதியில் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து தடையங்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து  அக்கிராம மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் வீட்டிற்கு மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம்,சமூக சேவையாளர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கத்தோழிக்க அருட்தந்தையர்கள் ஆகியொர் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 

தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரர் ஒருவர் இலங்கை படைப் புலனாய்வாளர்களால் சுட்டுக் கொலை: இணைப்பு 2:-

12-11-2014 - 15:18

மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்றிரவு (12-11-2014) 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான 40 வயதுடைய  கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக சென்ற ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் தற்;போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நகுலேஸ்வரனின் மனைவி கவிதா அப்பகுதி பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தக் கொலையினை இலங்கைப் படைப் புலனாய்வாளர்களே மேற்கொண்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மன்னாரில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடங்காதவர்களையும் துள்ளித் திரிபவர்களையும் களையெடுக்கும் காலம் நெருங்கிவிட்டதாக அண்மையில் படைப் புலனாய்வாளர்கள் மன்னாரில் முக்கியஸ்த்தர் ஒருவரிடம் உரையாடி இருந்ததாக தெரிய வருகிறது….

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113472/language/ta-IN/article.aspx

இதை விட ஈனமான கேவலமான செயல் எதுவும் இருக்கமுடியாது .

 

குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

இப்படியான கொலைகளை பல வருடங்களாக நாங்களும் நியாயபடுத்திக்கொண்டிருந்த காலங்களும் இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

ஆழ்ந்த இரங்கல்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் குடும்பத்துக்கு நேசக்கரம் போன்ற அமைப்புக்கள் உடனடி உதவிகள் செய்ய முன் வந்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்தக் குடும்பத்துக்கு கொஞ்சம் ஆறுதலாக அமையும்.

 

மேலும்.. இப்படியான கொலைகள் தொடர்பில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் காத்திரமான நடவடிக்கைக்கு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் தூண்ட வேண்டும். இன்றேல்.. இந்த படுகொலை அச்சுறுத்தலை சிங்களப் பேரினவாதம் முடிவின்றி தமிழர்கள் மீது துணிக்கக் கூடிய ஆபத்து மிகுந்து கிடக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக சிங்களம் இவரைக் கொல்ல வேண்டும் ? 2009 இலிருந்து இவர் அங்கேதானே இருந்திருக்கிறார்??

 

சிலவேளை மன்னாரில் இருந்து இயங்கும் மனிதவுரிமை அமைப்பொன்றுடன் இவருக்குத் தொடர்பிருந்திருக்கலாம். இவரைப்போலவே மன்னாரில் அரச அராஜகத்தை எதிர்த்து ஊடகங்களுக்கு செய்திவழங்கி வந்த இன்னொரு செயற்பாட்டாளரும் பலமுறை புலநாய்வுத்துறையால் கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டு, பல கொலை முயற்சிகளிலிருந்து  தப்பியிருந்தார் என்பது நினைவு.

 

தனக்கெதிராக இயங்கும் அனைத்து நிறுவனங்களையும், தனிமனிதர்களையும் அழித்துவிட சிங்களம் முயற்சி செய்துவருகிறது.

 

இவரது இழப்பிற்கு வழக்கம்போலவே நீதி கிடைக்கப்போவதில்லை.

 

அவரது இழப்பால் துயருறும் அவரது மனைவி பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

 

போரின்போதும் இழந்தோம், போர் முடிந்தபின்னரும் இழக்கிறோம்...எப்போதுதான் நிற்குமோ ?

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக சிங்களம் இவரைக் கொல்ல வேண்டும் ? 2009 இலிருந்து இவர் அங்கேதானே இருந்திருக்கிறார்??

 

சிலவேளை மன்னாரில் இருந்து இயங்கும் மனிதவுரிமை அமைப்பொன்றுடன் இவருக்குத் தொடர்பிருந்திருக்கலாம். இவரைப்போலவே மன்னாரில் அரச அராஜகத்தை எதிர்த்து ஊடகங்களுக்கு செய்திவழங்கி வந்த இன்னொரு செயற்பாட்டாளரும் பலமுறை புலநாய்வுத்துறையால் கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டு, பல கொலை முயற்சிகளிலிருந்து  தப்பியிருந்தார் என்பது நினைவு.

 

தனக்கெதிராக இயங்கும் அனைத்து நிறுவனங்களையும், தனிமனிதர்களையும் அழித்துவிட சிங்களம் முயற்சி செய்துவருகிறது.

 

இவரது இழப்பிற்கு வழக்கம்போலவே நீதி கிடைக்கப்போவதில்லை.

 

அவரது இழப்பால் துயருறும் அவரது மனைவி பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

 

போரின்போதும் இழந்தோம், போர் முடிந்தபின்னரும் இழக்கிறோம்...எப்போதுதான் நிற்குமோ ?

 

 

காரணம்

நாங்கள் இன்னும் விடுதலைப்புலிகளை வாட்டி வதக்கி காய்ச்சி வருகின்றோம்

(கருத்துக்களால் எழுத்துக்களால் நடவடிக்கைகளால்)

 

ஆனால் சிங்களத்தை அவன் பாட்டில் விட்டுவிட்டோம் என்பதை மறந்தே விட்டோம்......... :(  :(  :(  :(

நமது தற்போதைய நிலைப்பாடுகள்

இது போன்ற சிங்களத்தின் அடாவடிகளுக்கு உற்சாகம் தருகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை... :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

 

உங்களின் ஆதங்கம் புரிகிறது.

 

புலிகள் மேலான விமர்சனம் கூட இன்று நாங்கள் இருக்கும் கைய்யறுநிலையால் வந்த விரக்தியே அன்றி வேறில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆதங்கம் தான் பலரை புலிகளை விமர்சிக்கச் செய்கிறது.

 

இன்று சிங்களம் செய்துவரும் தடையற்ற ஆக்கிரமிப்பும், எம்மீதான அடக்குமுறைக்கும்கூட புலிகள்தான் காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது. போராட்டத்தை அரைவழியே விட்டு விட்டுச் சென்றதனால்த்தான் இப்படியெல்லாம் நடக்கிறதென்று எண்ணத் தோன்றுகிறது.

 

ஆகவே எல்லாவற்றிற்கும் புலிகளை விமர்சிக்கிறோம். சிங்களம் செய்யும் அடக்குமுறையின் அளவு கூடக் கூட புலிகள் மீது விழும் வசவும் கூடும். இதற்கெல்லாம் ஒரே காரணம் , அவர்கள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்கிற ஆதங்கமும், நப்பாசையும்தான்.

 

இதைவிட வேறு வழியில் என்னால் புரியவைக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக சிங்களம் இவரைக் கொல்ல வேண்டும் ? 2009 இலிருந்து இவர் அங்கேதானே இருந்திருக்கிறார்??

 

சிலவேளை மன்னாரில் இருந்து இயங்கும் மனிதவுரிமை அமைப்பொன்றுடன் இவருக்குத் தொடர்பிருந்திருக்கலாம். 

நமக்கும் சிங்களவனிற்க்கும் உள்ள வித்தியாசம் இந்த "சிலவேளை" இதுக்குள்ளை நிற்பவர்கள்தான் நாங்கள் .

ragunathan நீங்களா? யாழ்கள கருத்தாளர்களில் எனக்கு பிடித்தவர் அதுவும் இழவுவீட்டில் நின்றுகொண்டு நாங்கள் இப்படி. 

நகுலேஸ்வரன் படுகொலைக்கு கூட்டமைப்பு கண்டனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டமை முன்னாள் போராளிகள், மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

அத்துடன் இந்தச்சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மன்னார் - வெள்ளாங்குளம் இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிஸ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனவே, இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/35349/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நிழலி சொல்வதைப்போல் பிள்ளைகளை பார்க்க மனம் பொறுக்குதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.