Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கைகலப்பு : ஐங்கரநேசன், சர்வேஸ்வரன் ஆகியோர் காயம்

Featured Replies

ing1.jpg
- யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமாகியது. 

வடமாகாண சபைக்கான நிதியை செலவு செய்வது தொடர்பில் வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக்கொண்டிருக்கையில், அவர் அருகே சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் தவிசாளர் போல் சிவராசா, சிவாஜிலிங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது போத்தலால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் தாக்குதல் மேற்கொள்ள, கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். முதலமைச்சரும் வெளியேறினார். 

இந்நிலையில், ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ing2.jpg

 

ing3.jpg

 

http://www.tamilmirror.lk/pirasitta-seithi/136014-2014-12-16-05-40-17.html

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இனி கூட்டங்களை நாற்சந்தியில் / சந்தையில் வைத்தால் இன்னும் நல்லது

  • தொடங்கியவர்
வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை போத்தலால் தாக்கினார் டக்ளஸின் தம்பி! 
 
DCC%20jaffna%209855845.jpg
 
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை போத்தலால் எறிந்து காயப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளரும் அவரது தம்பியாருமான தயானந்தா. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியது.இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு குழப்பம் ஏற்பட்டது.
 
அமைச்சர் ஐங்கரநேசன் மீது தண்ணீர்ப் போத்தலால் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் காயமடைந்தார். இந்தக் குழப்பத்தை அடுத்து கூட்டம் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை எதுவும் செய்யாது குழப்பம் ஏற்படுத்திவருகிறது என்று குற்றஞ்சாட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார். இதன்போது வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்த நிலையில் சபையில் வாக்குவாதம் எழுந்து அது தண்ணீர்ப் போத்தல்களால் தாக்கும் அளவுக்கு வலுப்பெற்றது. இந்த சமயம் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்த பொலிஸார் சபையை விட்டு வெளியேறினர். இதன் போது விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது இரண்டு தண்ணீர்ப் போத்தல்கள் வீசப்பட்டன. இதனால் அவர் காயமடைந்தார். இதனையடுத்து கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர். தாக்குதல் சம்பவம் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயும் பொருட்டு தற்பொழுது முதலமைச்சர் அலுவலகத்தில் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கலந்துரையாடி வருகின்றனர் என்று தெரிய வருகிறது. - 
 
DCC%20jaffna%209855846.jpg
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்பு ஆயுத அரசியல் செய்தவங்களுக்கு ஜனநாயக முலாம் பூசி.. சிங்களம்.. மேடையில் உட்கார வைச்சதே இதற்காகத் தானே.

 

தமிழ் மக்கள் விழித்துக் கொண்டால் அன்றி.. இந்த சிங்கள உதவியில் நடைபெறும்.. பயங்கரவாதத்திற்கு முடிவில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்ததுதானே ..... இதில் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஐனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீது

அதே சபையில் 

வன்முறையில் ஈடுபடுவோரை கண்டிக்க

இங்கும் எங்கும் எவருமில்லை..

இது தான் இவர்களின் நாடகம் :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயகம் என்றால் அதற்கு சன+நாய்+அகம் என்றும் பொருள்கொண்டு ஆட்சி நடாத்தும் நாடுகளில் சிறீலங்காவும் ஒன்று. :blink:   

  • தொடங்கியவர்
அடியாள்களுடன் வந்த அமைச்சர் டக்ளஸாலேயே குழப்பம் ஏற்பட்டது! முதலமைச்சர் அலுவலகம் தெரிவிப்பு
 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்துவந்த சம்பந்தமில்லாத வெளியாள்களுமே காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம், அடிதடி சண்டையாகியதில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வர் காயமடைந்தனர்.
 
இந்த நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஊடகங்களுக்கு முதலமைச்சர் தெரிவித்தவை வருமாறு:-
 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மிகத் துரதிர்ஷ்டவசமாக திடீரென முடிவுக்கு வந்தது. இதற்கான முழுப்பொறுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அவர் வெளியிலிருந்து கூட்டத்திற்குக் கொண்டு வந்த வெளியாள்களையுமே சாரும். தேர்தல் ஆணையாளரினால் அரசியல் சம்பந்தமாகவோ அரசியல் கட்சிகள் பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் உரை எதுவும் நிகழ்த்தக்கூடாது என்று இன்றைய கூட்டத்தில் அரச அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில் இணைத்தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையில் அரசியல் ரீதியாகப் பேசி வடக்கு மாகாண சபையையும் அதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் வடக்கு மாகாண சபையின் தேர்தல் விஞ்ஞானபனத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
 
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சர்வாதிகாரமாக அடக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் முயன்றார். இதனால் அங்கு குழப்பம் ஆரம்பமாகியது. இதன்போது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாத மர்ம நபர்கள் சிலரும் குறுக்கிட்டுக் கொண்டனர். இதனால் குழப்பம் மேலும் அதிகரித்தது.
 
அமைச்சர் டக்ளஸ் சார்பில் கலந்துகொண்டவர்கள் கையில் கிடைத்த பொருள்களால் வன்முறைத் தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தில் பதற்றம் தோன்றியது. மக்கள் பிரதிநிதிகளும் கூட்டத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைய ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு சம்பந்தமில்லாது அழைத்துவரப்பட்ட வெளியாட்களும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாரித்து எடுத்துவந்திருந்த நான்கு பக்க அரசியல் அறிக்கை வாசிக்கப்பட்டமையும், இது முற்கூட்டியே நன்கு திட்டமிட்டு குழப்பத்தை உண்டாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது.
 
மிகவும் வெட்கப்படவேண்டிய இந்த வன்முறைத் தாக்குதலில் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரத்தினம், சி.சிவயோகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மேலும் சில உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின்போது பாதுகாப்புப் பிரிவினர் ஈ.பி.டி.பி.உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எவரும் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதும் கவலைக்குரியதே என்று முதலமைச்சர் தெரிவித்தார். -
 
http://malarum.com/article/tam/2014/12/16/7475/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html#sthash.SIVO7F6Q.dpuf
 
 
 
 
 

CM%20OFFICE%209898848.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரையும் சண்டியராக மாற்றாமல் விட்டால் சரி  :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை என்ன செய்யலாம்? வேண்டுமென்றே ஈபிடிபி ஒவ்வொரு மாவட்ட அபிவிரிருத்தி கூட்டத்தையும் குழப்பி தள்ளி வைக்கிறது. அடுத்த தேர்தலிலாவது மக்கள் இவர்களை முற்றாக புறக்கணிக்க வேண்டும்.

மைதிரியும், மகிந்தவும் வேட்புமனுதாக்கலில் ஆளாளை கைகூப்பி வணக்கம் சொல்கிறார்கள்.

இது தமிழரின் பரவணிக் குணம்.

என்ன முன்பு துவக்கால் ஆளாளுக்கு சுடுபட்டோம் இப்ப போத்தில எறியுறம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை என்ன செய்யலாம்? வேண்டுமென்றே ஈபிடிபி ஒவ்வொரு மாவட்ட அபிவிரிருத்தி கூட்டத்தையும் குழப்பி தள்ளி வைக்கிறது. அடுத்த தேர்தலிலாவது மக்கள் இவர்களை முற்றாக புறக்கணிக்க வேண்டும்.

மைதிரியும், மகிந்தவும் வேட்புமனுதாக்கலில் ஆளாளை கைகூப்பி வணக்கம் சொல்கிறார்கள்.

இது தமிழரின் பரவணிக் குணம்.

என்ன முன்பு துவக்கால் ஆளாளுக்கு சுடுபட்டோம் இப்ப போத்தில எறியுறம்.

 

 

ஆனால்  ஆயுதம் வைத்திருந்தாலும்

ஐனநாயகம் வைத்திருந்தாலும்

குழப்புகிறார்கள்

ஒன்றையும் செய்யவிடுகிறார்கள் இல்லை

அவர்கள் எப்பொழுதும் ஒரே ஆட்களாகவே இருக்கிறார்கள்... :(  :(

 

ஐனநாயகம் தோற்றே

ஆயுதம் வந்தது வரலாறு.....

  • கருத்துக்கள உறவுகள்

அடியாட்களுடன் வந்த டக்ளஸ் ; விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு 

 

Edited by தமிழரசு

இவர்கள் எவரும் திருந்த போவதில்லை .

மக்களால் எதுவும் முடியாது அவர்களின் வாயை மூடி பலவருடங்களாகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எவரும் திருந்த போவதில்லை .

 

 

திருந்துவதற்கு முன்பு எப்போது நல்ல இருந்தார்கள்  .......??????? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜங்கரநேசன் தன்னைத் தானே தாக்கி காயம் விளைவித்து இருக்கலாம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:-

 
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

Douglas-Devananda%20mahi_CI.jpg

வடமாகாணசபை விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் தனக்க தானே தாக்கிக்கொண்டு காயம் விளைவித்திருக்கலாம் என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் தனது இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.சிறீதர் திரையரங்கில் அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் தெரிவிக்கையில்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் இணைத்தலைவர்களான எனது மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்திலேயே இணைத்தலைமைக்கு கட்டுப்படுமாறு இணைத் தலைவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை மீறி கூட்டமைப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இணைத்தலைமைக்கு கட்டுப்பட்டு கூட்டத்தை தொடர்வதற்கு உதவுமாறு நானும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதனை நிராகரிக்கும் வகையில் கூட்டமைப்பினர் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். இதில் கூட்டமைப்பினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை தாக்கும் வகையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் முன்னோக்கிச் சென்ற போது அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ராஜ்குமார், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சிறிரங்கேஸ்வரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சிவராசா, வலி.தெற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் அரிகரன், கடற்றொழில் சங்கத்தைச் சேர்ந்த ரட்னகுமார் ஆகியோர் காயங்களுக்குள்ளாகினர்.

இத்தாக்குலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், ஆனோல்ட், சுகிர்தன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆனைமுகன் ஆகியோர் நடத்தினர் எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114516/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜங்கரநேசன் தன்னைத் தானே தாக்கி காயம் விளைவித்து இருக்கலாம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:-

 

 

நாயைக்குளிப்பாட்டி

நடுவீட்டில் வைத்தாலும்.......?? :(  :(  :(


இவருக்கு தமிழர்கள் ஆதரவாம்

அதை முழங்க ஒரு கூட்டம்... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

40 வருடத்திற்க்கு முன்பு நாட்டைப் பிரித்து கொடுத்திருந்தால் இப்ப ரத்தம் இன்னறி முழு நாடும் சிங்களவன் கையில் இருந்திருக்கும்.இதைத்தான் சொல்வது மோட்டு சிங்களவன் என்று. :rolleyes: :rolleyes:

சிவாஜிலிங்கத்திற்கு நாலு கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் , :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்திற்கு நாலு கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் , :icon_mrgreen:

இத வாசிச்சிட்டு சிரிசிரியெனச் சிரிச்சன். எனக்கு ஏதும் பிடிச்சுப்போட்டுதோ எண்டு மனைவி கேட்கிறாள். பதில் சொல்லாமல் சிரிச்சுக்கொண்டு நிக்கிறன்! :D :d :D

Edited by வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் எவரும் திருந்த போவதில்லை .

மக்களால் எதுவும் முடியாது அவர்களின் வாயை மூடி பலவருடங்களாகிவிட்டது

 

இப்படியான நிலைமைகள் தெரிந்துதானே தனி/ஒரு வழிப்பாதையாக விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது. 
 
அண்ணருக்கு இப்பத்தான் கால்வாசி விளங்கிக்கொண்டு வருது போலை......சுத்தம் .
  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியான நிலைமைகள் தெரிந்துதானே தனி/ஒரு வழிப்பாதையாக விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது. 
 
அண்ணருக்கு இப்பத்தான் கால்வாசி விளங்கிக்கொண்டு வருது போலை......சுத்தம் .

 

 

 

அதெப்படி  புலிகள் தடியை  எடுக்கலாம்

பள்ளிக்கூடம் போனவர் தான் எடுக்கலாம்..........

ஆனால் அந்த உரிமையை யார் கொடுத்தது என்று தான் தெரியவில்லை...

 

சகோதர அடிபாட்டை புலிகள் செய்தார்கள் என்பதே குற்றச்சாட்டு

அதை தொடக்கி  வைத்ததும்

இன்று தொடக்க முயல்வதும் நாமே  தான்......

குரு செய்தால் குற்றமில்லை... :(  :(  

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் தேசியத்தலைவர் வேண்டுமென்பது.தலைவர் ஒரு கூட்டம் நடத்தினால் கூட்டம் கப்சிப் என்று அமைதியாக இருக்கம்.பேச்சுரிமை இஜனநாயகம் எல்லாம் தமிழனுக்குச் சரிவராது.காட்டக்கத்தல் கத்திறாங்கள்.2 பகுதியும் வித்தியாசமான் கலரில் உடப்ப போட்டிருந்தால் யாரையார் தாக்ககிறார்கள் என்பத nதரியும். இது ஒரே வெள்ளை வேட்டி அடிபாடhய் இருக்குது;.

Edited by புலவர்

ஜெர்மனிலும் பிரான்சிலும் இருந்துகொண்டு இரானிலும் சிரியாவிலும் நடப்பதுதான் சரி என்று சொல்லும் அறிவுஜீவிகள ,

நேற்றைய கூட்டத்தில் டக்கிலஸ் இன் பிரபா இருந்திருந்தால் ஐங்கரநேசனும் சர்வேயும் காயத்துடன் போயிருக்கமாட்டார்கள் தலையில்லாமல் போயிருப்பார்கள் .எவ்வளவு பொறுமையாக டக்கிலஸ் இருந்து கதைக்கின்றார் .

முதலில் கூட்டமே நடந்திராது பிள்ளைகளே :icon_mrgreen: எல்லாவற்றிற்கும் அவரின் தீர்வு போடுகின்றதுதான் அதுதான் முடிவும் அப்படி இருந்தது . :lol:

ஓரத்த நாட்டில் பலரை  போட்டு தள்ளிவிட்டு தப்பி  ஓடி வந்தவர்கள் எல்லாம் இப்போது ஜனநாயகவகுப்பு எடுக்கின்றனர். இது தான் காலம். ஆதாரம் இல்லாவிட்டால் கொலைகாரர்கள் எல்லாம்  சாமியார்கள் தான். நடக்கட்டும் பஜனை.

  • கருத்துக்கள உறவுகள்
பொறுப்பான பத‌விகளில் இருந்து கொண்டு. சிறுவயது பாடசாலை மாணவர்கள் போல், ஒருவரோடு ஒருவர் அடிபடுவது எவ்வளவு கேவலம். எந்த ஒரு விடயத்திலும் விட்டுக்கொடுப்பு இல்லை. 
 
இவர்ளுக்கு ஒரு போதும் எதுவும் சிங்களவனிடமிருந்து கிடைக்க கூடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.