Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஸ்டர் பிரபாகரன் என்று சந்திரிக்கா கூறியது மிகப் பெரிய தவறு: குமுறும் கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவு அற்றவர் என்றும் அதேபோல் ரணில், பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் அறிவு அற்றவர்கள் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு சிங்கள அரச தொலைக்காட்சியில் நேரடி செவ்வியில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட கோத்தபாய,

சந்திரிக்கா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்றும் இந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ராஜபக்ஷவென்றும் யாழில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.

இந்த நாட்டின் இராணுவத்தையும் சிங்கள மக்களையும் அழிக்க முயன்ற பிரபாகரனை மிஸ்டர் என எவ்வாறு அழைக்கலாம்?

நாட்டுப்பற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் அதை எவ்வாறு தக்க வைக்க வேண்டும் என்பதிலும் மிகவும் அறிவுள்ளவர்.

இவரால் மட்டுமே சிங்கள மக்களையும் பௌத்த மதத்தையும் காப்பாற்ற முடியும்.

எதிரணியால் எதுவிதமான திட்டங்களையும் செய்ய திறன் அற்றவர்கள் என்ற காரணத்தினாலேயே விடுதலைப்புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்று குறிப்பிட்டதாகவும் சிங்கள மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், வட பகுதியில் இராணுவம் கைப்பற்றியுள்ள இடங்கள் யாவும் அரச காணிகளே. இதை எப்படி அங்குள்ள பொதுமக்கள் காணி என்று கூற முடியும் என்ற கேள்வியையும் கோத்தபாய எழுப்பினார்.

இராணுவத்திற்கு தேவையான காணிகளை பாதுகாப்பு கருதி விடுவிக்க முடியாது.

இராணுவத்தின் தேவைகளுக்கு மேல் உள்ள காணிகளை அப்பகுதி மக்களுக்கு கொடுக்க தற்போதைய அரசு கவனம் செலுத்தகிறது.

பல உயிர்த் தியாகங்களை செய்து புலிகளை அழித்தோம். ஆகவே நாட்டின் பாதுகாப்பு, சிந்தனையுடன் நானும் எனது சகோதரரும் இராணுவமும் இப்பொழுது அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறொம்.

தற்போது நாட்டின் மீது அக்கறை இல்லாத சந்திரிக்கா, ரணில், சம்பிக்க ரணவக்க, முஸ்லிம் அடிப்படைவாதிகளான ரிசாத், அசாத்சாலி போன்றவர்களினால் பௌத்த சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது.

சிங்கள மக்கள் புத்தி கூர்மையுடனும் செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

http://www.tamil.com/2015/01/01/85346

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பித்துவிட்டார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் பிரபாகரன் என்று, சந்திரிகா கூறிய படியால்,
மைத்திரிக்கு விழ வேண்டிய சிங்கள வாக்குகள் எல்லாம்... மகிந்தவுக்கு விழப் போகுது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலகட்டத்தில் தமிழன் இல்லாமல் அரசியல் இல்லை இப்ப புலி இல்லாமல் அரசியல் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தேர்தலில் வெல்லும் வரைக்கும்தான்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட கடந்த மாகாணசபை காலங்ககளில் பிரபாகரன் மாவீரன் என்று பேசினார்களே. அது போல தான் இதுவும். தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறவேண்டுமானல் அவர்களால் விரும்பபடுபவர்களை போற்றவேண்டும். அல்லது இகழாமல் இருக்க வேண்டும். சந்திரிகாவிற்கு இந்த சின்ன விடயம் கூட தெரியாதா? அதனால் மிஸ்ர்ர் பிரபாகரன் என்று மரியாதையுடம் தமிழ் மக்கள் முன் குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பொறுத்த வரை மகிந்தா வென்றால் தான் சர்வதேசத்தை வைத்து ஒரு நீதியான தீர்வை பெறமுடியும்.... சிங்கள மக்கள் கடும்போக்குள்ள சிங்கள தலைவர்களையே ஆதரிக்கின்றார்கள் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை அவர்கள் எக்காலத்திலும் தர விடபோவதில்லை என்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும் மாறி மைத்திரி வென்றால் தமிழர்களுக்கான தீர்வு இன்னும் இன்னும் இழுபடும்.... இப்போ தானே வந்திருக்கிறார் அவருக்கான கால அவகாசத்தை வழங்கணும் என்று பழையபடி சர்வதேசம் பல்லவியை பாட தொடங்கும்......

நீங்கள் கூறுவதில் நியாயம் உண்டு சுண்டல். ஆனால் அது விஷபரீட்சை ஆகிவிடுமோ என்பதே பலரது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பொறுத்த வரை மகிந்தா வென்றால் தான் சர்வதேசத்தை வைத்து ஒரு நீதியான தீர்வை பெறமுடியும்.... சிங்கள மக்கள் கடும்போக்குள்ள சிங்கள தலைவர்களையே ஆதரிக்கின்றார்கள் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை அவர்கள் எக்காலத்திலும் தர விடபோவதில்லை என்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும் மாறி மைத்திரி வென்றால் தமிழர்களுக்கான தீர்வு இன்னும் இன்னும் இழுபடும்.... இப்போ தானே வந்திருக்கிறார் அவருக்கான கால அவகாசத்தை வழங்கணும் என்று பழையபடி சர்வதேசம் பல்லவியை பாட தொடங்கும்......

இந்தியா போய் சர்வதேசமா?

முதலில் சர்வதேசம் என்பது பல நாடுகளை கொண்ட ஒரு அமைப்பில்லாத ஒன்று.

அதற்கு அமைப்பில்லை, தலைவர் இல்லை, கூட்டங்கள் இல்லை, அது முடிவுகளும் செய்வதில்லை.

ஐக்கிய நாடுகள் தமிழருக்கு தீர்வு தராது.

அமெரிக்காவும் தராது.

அவர்களின் தேவைகள் வேறு.

கனவுகள் காணலாம், ஆனால் தக்கனவே பிழைக்கும்.

ஈழத்தமிழ் இனம் பிழைக்க தக்க இனமாக தெரியவில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அப்போ மைத்திரி வந்தால் உடனே தீர்வை தூக்கி தருவாரா?

ஒரு காலகட்டத்தில் தமிழன் இல்லாமல் அரசியல் இல்லை இப்ப புலி இல்லாமல் அரசியல் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி அப்போ மைத்திரி வந்தால் உடனே தீர்வை தூக்கி தருவாரா?

நிச்சயமாக தரமாட்டார். ஆனால், நாட்டில் விலைவாசி ஓரளவுக்கு குறையும் என்பது எனது கணிப்பு. அதற்காகவே அவருக்கு வாக்களிக்க போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவும்.. மகிந்தவும்.. எப்பவும் சிங்கள மக்களை யுத்த வெற்றி நினைப்பில வைச்சிருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு இராணுவ அளவை பெருக்கி.. அதற்கு தமிழர் எதிர்ப்புணர்வை ஊட்டி.. ஆக்கிரமிப்பு எண்ணங்களை புகுத்தி வளர்க்கிறார்கள்.

ஆனால் சாமானிய சிங்கள மக்களை போர் நேரடியாகப் பாதிக்கவில்லை. அதிகம் பாதித்த சிங்களவர்கள் என்றால் தமிழீழத்தோடு எல்லையை  ஒட்டிய பொலநறுவை.. அனுராதபுரம் மாவட்டங்ளைச் சேர்ந்த வறிய சேனை செய்யும்.. ஊர்காவல் படைகுடும்பங்களாக இருந்த சிங்களவர்கள் தான். மிகுதி என்றால் கொழும்பில் சிலர்.

மற்றச் சிங்களவர்களுக்கு போரின் நேரடிப் பாதிப்பு இல்லை. இராணுவக் குடும்பங்களில் எல்லோரும் சண்டைக்கு போனதில்லை. வறிய மாவட்ட சிங்களவர்களே அதிகம் படை கீழ் நிலைகளில் இருந்துள்ளனர். அவர்களே அதிகம் போரில் கொல்லப்பட்டவர்கள்.

போர் வெற்றி என்ற 2009 புளகாங்கித கோசம்.. எனி பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு பழகிப் போன ஒன்று. இப்போ அவர்களுக்குள்ள பிரச்சனை.. பொருண்மியப் பிரச்சனை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு. சம்பள உயர்வுப் பிரச்சனை. உயர்கல்விப் பிரச்சனைகள். பல்கலைக்கழகப் பிரச்சனைகள் என்று.. பிரச்சனைகளுக்குரிய காரணிகள் சிங்கள மக்களிடையே மாறிவிட்டது.

மேலும்.. நீதி நிர்வாகச் செயற்பாடுகளில் சிங்கள மக்களே நம்பிக்கை இழந்து வருவதோடு.. வெளிப்படையாகவே அரசாங்கக் காடைகளின் அடாவடியால் அவர்களே பாதிக்கப்படும் நிலை பெருகுவதோடு.. ஊழல்.. கப்பம்.. இலஞ்சம்.. அதிகரித்திருப்பதும்.. எல்லாம் மகிந்த சொந்தமாவதும்.. சிங்கள மேட்டுக்குடி.. வியாபாரக் குடி மக்களால் வரவேற்க்கப்படக் கூடிய ஒன்றல்ல.

இந்த நிலையில்... எனி போர் வெற்றி.. மகிந்தருக்கு பெருமளவில் வாக்கை குவிக்காது என்பது எதிரணி கூட்டணிக்கு தெரியும். சந்திரிக்கா ஒன்றும் கணக்குப் போடாமல்.. மிஸ்டர் பிரபாகரன் என்று சொல்லவில்லை.

போரால் கொஞ்சம் என்றாலும்.. பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் முன்.. போர் வெற்றியை பேசும் சந்திரிக்கா.. மற்றைய இடங்களில் குடும்ப ஆட்சி.. அதன் தீமைகள்.. ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தின் தேவை.. ஊழல்.. இலஞ்சம்.. விலைவாசி.. ஏழமை பற்றியே பேசி வருகிறார். 

கோத்தா.. அடிப்படையில்.. ஒரு இன வெறியர். தமிழின எதிர்ப்பு வெறியர். அதற்குள் இருந்து அவரால் சாகும் வரை வெளிவர முடியாது. அவரின் அரசியல் அந்த வெறியை வைத்துத்தான் நடத்தப்பட முடியும். அவர் இப்படித்தான் பேசிக்கிட்டு இருப்பார். ஆனால் எனி இவர்களின் கூச்சலை பெரும்பான்மை சிங்கள மக்கள் கேட்கமாட்டார்கள்...!! இதுதான் இன்றைய நிலை தென்னிலங்கையில்.

இந்தப் பேச்சுக்களால்.. பாதிக்கப்படப் போவது.. மகிந்த கொம்பனி தான். போட நினைத்த தமிழர்கள் கூட எனி போட யோசிப்பார்கள். அதேபோல் முஸ்லீம்கள். கோத்தா நினைக்கிறார் இவர்கள் அறவே போட போவத்தில்லை.. எனவே ஒரேயடியா இவர்கள் மீதான இனவாத வெறியை சிங்கள மக்களிடம் விதைத்துவிட்டால் அது தமக்கு சாதகமாகலாம் என்று.

சிங்கள மக்கள் எல்லோரும் இனவாதத்துக்குள் வாழ நினைக்கவில்லை. அவர்களுக்கு தேவை சும்மாரா.. சிமூத்தான வாழ்க்கை. அவ்வளவே. அதனை மைத்திரி கொடுக்க முன் வந்தால் அவருக்கு வாக்கு. மகிந்த கொடுக்க முன் வந்தால் அவருக்கு வாக்கு. இப்போ தோல்வி பயத்தில்.. மகிந்த கொம்பனி.. என்ன பேசிறது என்று தெரியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதும் நன்மைக்கே. அது எவ்வளவு சிறுபான்மை இன விரோத எண்ணத்தோடு இருந்தது என்பதை தானே சொல்லி வருகிறது.

சிந்திக்க தெரிந்த சிங்கள மக்கள் நிச்சயம் இந்த இனவாதப் போக்கை வெறுப்பார்கள். வெறுக்கிறார்கள். இது தமிழர்களுக்கு சாதகமான சூழல். அவர்கள் சிங்கள மக்களிடம் தங்களின் நியாயபூர்வ ஆசைகளை வெளிப்படுத்தி... அதனை நிவர்த்திக்க ஒத்துழைப்புக் கேட்க. :icon_idea::)

"சிந்திக்க தெரிந்த சிங்கள மக்கள் நிச்சயம் இந்த இனவாதப் போக்கை வெறுப்பார்கள். வெறுக்கிறார்கள். இது தமிழர்களுக்கு சாதகமான சூழல். அவர்கள் சிங்கள மக்களிடம் தங்களின் நியாயபூர்வ ஆசைகளை வெளிப்படுத்தி... அதனை நிவர்த்திக்க ஒத்துழைப்புக் கேட்க. "

Good One.

Edited by sabesan36

சிங்கள மக்கள் எல்லோரும் இனவாதத்துக்குள் வாழ நினைக்கவில்லை. அவர்களுக்கு தேவை சும்மாரா.. சிமூத்தான வாழ்க்கை. அவ்வளவே. அதனை மைத்திரி கொடுக்க முன் வந்தால் அவருக்கு வாக்கு. மகிந்த கொடுக்க முன் வந்தால் அவருக்கு வாக்கு. இப்போ தோல்வி பயத்தில்.. மகிந்த கொம்பனி.. என்ன பேசிறது என்று தெரியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதும் நன்மைக்கே. அது எவ்வளவு சிறுபான்மை இன விரோத எண்ணத்தோடு இருந்தது என்பதை தானே சொல்லி வருகிறது.

சிந்திக்க தெரிந்த சிங்கள மக்கள் நிச்சயம் இந்த இனவாதப் போக்கை வெறுப்பார்கள். வெறுக்கிறார்கள். இது தமிழர்களுக்கு சாதகமான சூழல். அவர்கள் சிங்கள மக்களிடம் தங்களின் நியாயபூர்வ ஆசைகளை வெளிப்படுத்தி... அதனை நிவர்த்திக்க ஒத்துழைப்புக் கேட்க. :icon_idea::)

இதை செய்யும் தமிழர்களை ஒட்டுண்ணிகள்/எட்டப்பன் என்கிறீர்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை செய்யும் தமிழர்களை ஒட்டுண்ணிகள்/எட்டப்பன் என்கிறீர்கள் :)

அதெல்லாம் எங்களுக்குள்ளே சும்மா விளையாட்டு. சீரியசா எடுக்காதிங்கண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் அருமையான யதார்த்தமான பதிவு. :)

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:-

Prabakaran_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திரு.பிரபாகரன் என்றே அழைத்தார் எனவும், தம்மை வெறும் மஹிந்த என அழைத்தார் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இ;ன்றைய தினம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த போதே தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

தாம், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது நாட்டை ஐக்கியப்படுத்துவதே மிகவும் முக்கியமான இலக்காகக் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தளவாடங்களுடன் ஒப்பீடு செய்த போது, படையினரிடம் ஆயுதங்களும் தளவாடங்களும் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக படையினருக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது எனவும் அதன் ஊடாகவே புலிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அந்த சுதந்திரத்திற்கு துரோகம் இழைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் கூறுவதனைப் போன்று குறைந்த செலவில் பாதைகள் அமைக்கப்பட முடியாது எனவும், எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இவ்வாறு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115037/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர்களுக்கு சாதகமான சூழல்/////

என்று சொல்லி நெடுக்கர் காமடி பண்ணி இருக்கார்......

நெடுக்கர் சொன்னத பல தமிழர்கள் பல தடவைகள் ஜெயவர்த்தனா,பிரேமதாசா,சந்திரிக்கா,மகிந்தா என்று தேர்தலில் போட்டியிட்ட காலங்களில் சொன்னது தான்.........:D :d

கோத்தாவும்.. மகிந்தவும்.. எப்பவும் சிங்கள மக்களை யுத்த வெற்றி நினைப்பில வைச்சிருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு இராணுவ அளவை பெருக்கி.. அதற்கு தமிழர் எதிர்ப்புணர்வை ஊட்டி.. ஆக்கிரமிப்பு எண்ணங்களை புகுத்தி வளர்க்கிறார்கள்.

ஆனால் சாமானிய சிங்கள மக்களை போர் நேரடியாகப் பாதிக்கவில்லை. அதிகம் பாதித்த சிங்களவர்கள் என்றால் தமிழீழத்தோடு எல்லையை ஒட்டிய பொலநறுவை.. அனுராதபுரம் மாவட்டங்ளைச் சேர்ந்த வறிய சேனை செய்யும்.. ஊர்காவல் படைகுடும்பங்களாக இருந்த சிங்களவர்கள் தான். மிகுதி என்றால் கொழும்பில் சிலர்.

மற்றச் சிங்களவர்களுக்கு போரின் நேரடிப் பாதிப்பு இல்லை. இராணுவக் குடும்பங்களில் எல்லோரும் சண்டைக்கு போனதில்லை. வறிய மாவட்ட சிங்களவர்களே அதிகம் படை கீழ் நிலைகளில் இருந்துள்ளனர். அவர்களே அதிகம் போரில் கொல்லப்பட்டவர்கள்.

போர் வெற்றி என்ற 2009 புளகாங்கித கோசம்.. எனி பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு பழகிப் போன ஒன்று. இப்போ அவர்களுக்குள்ள பிரச்சனை.. பொருண்மியப் பிரச்சனை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு. சம்பள உயர்வுப் பிரச்சனை. உயர்கல்விப் பிரச்சனைகள். பல்கலைக்கழகப் பிரச்சனைகள் என்று.. பிரச்சனைகளுக்குரிய காரணிகள் சிங்கள மக்களிடையே மாறிவிட்டது.

மேலும்.. நீதி நிர்வாகச் செயற்பாடுகளில் சிங்கள மக்களே நம்பிக்கை இழந்து வருவதோடு.. வெளிப்படையாகவே அரசாங்கக் காடைகளின் அடாவடியால் அவர்களே பாதிக்கப்படும் நிலை பெருகுவதோடு.. ஊழல்.. கப்பம்.. இலஞ்சம்.. அதிகரித்திருப்பதும்.. எல்லாம் மகிந்த சொந்தமாவதும்.. சிங்கள மேட்டுக்குடி.. வியாபாரக் குடி மக்களால் வரவேற்க்கப்படக் கூடிய ஒன்றல்ல.

இந்த நிலையில்... எனி போர் வெற்றி.. மகிந்தருக்கு பெருமளவில் வாக்கை குவிக்காது என்பது எதிரணி கூட்டணிக்கு தெரியும். சந்திரிக்கா ஒன்றும் கணக்குப் போடாமல்.. மிஸ்டர் பிரபாகரன் என்று சொல்லவில்லை.

போரால் கொஞ்சம் என்றாலும்.. பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் முன்.. போர் வெற்றியை பேசும் சந்திரிக்கா.. மற்றைய இடங்களில் குடும்ப ஆட்சி.. அதன் தீமைகள்.. ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தின் தேவை.. ஊழல்.. இலஞ்சம்.. விலைவாசி.. ஏழமை பற்றியே பேசி வருகிறார்.

கோத்தா.. அடிப்படையில்.. ஒரு இன வெறியர். தமிழின எதிர்ப்பு வெறியர். அதற்குள் இருந்து அவரால் சாகும் வரை வெளிவர முடியாது. அவரின் அரசியல் அந்த வெறியை வைத்துத்தான் நடத்தப்பட முடியும். அவர் இப்படித்தான் பேசிக்கிட்டு இருப்பார். ஆனால் எனி இவர்களின் கூச்சலை பெரும்பான்மை சிங்கள மக்கள் கேட்கமாட்டார்கள்...!! இதுதான் இன்றைய நிலை தென்னிலங்கையில்.

இந்தப் பேச்சுக்களால்.. பாதிக்கப்படப் போவது.. மகிந்த கொம்பனி தான். போட நினைத்த தமிழர்கள் கூட எனி போட யோசிப்பார்கள். அதேபோல் முஸ்லீம்கள். கோத்தா நினைக்கிறார் இவர்கள் அறவே போட போவத்தில்லை.. எனவே ஒரேயடியா இவர்கள் மீதான இனவாத வெறியை சிங்கள மக்களிடம் விதைத்துவிட்டால் அது தமக்கு சாதகமாகலாம் என்று.

சிங்கள மக்கள் எல்லோரும் இனவாதத்துக்குள் வாழ நினைக்கவில்லை. அவர்களுக்கு தேவை சும்மாரா.. சிமூத்தான வாழ்க்கை. அவ்வளவே. அதனை மைத்திரி கொடுக்க முன் வந்தால் அவருக்கு வாக்கு. மகிந்த கொடுக்க முன் வந்தால் அவருக்கு வாக்கு. இப்போ தோல்வி பயத்தில்.. மகிந்த கொம்பனி.. என்ன பேசிறது என்று தெரியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதும் நன்மைக்கே. அது எவ்வளவு சிறுபான்மை இன விரோத எண்ணத்தோடு இருந்தது என்பதை தானே சொல்லி வருகிறது.

சிந்திக்க தெரிந்த சிங்கள மக்கள் நிச்சயம் இந்த இனவாதப் போக்கை வெறுப்பார்கள். வெறுக்கிறார்கள். இது தமிழர்களுக்கு சாதகமான சூழல். அவர்கள் சிங்கள மக்களிடம் தங்களின் நியாயபூர்வ ஆசைகளை வெளிப்படுத்தி... அதனை நிவர்த்திக்க ஒத்துழைப்புக் கேட்க. :icon_idea::)

எதுக்கெடுத்தாலும் எதிப்பு எண்றிருப்பிஙகள் இண்டைக்கு சரியான கணிப்பை எழுதியுள்ளீர்கள்.

தமிழர்களை பொறுத்த வரை மகிந்தா வென்றால் தான் சர்வதேசத்தை வைத்து ஒரு நீதியான தீர்வை பெறமுடியும்.... சிங்கள மக்கள் கடும்போக்குள்ள சிங்கள தலைவர்களையே ஆதரிக்கின்றார்கள் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை அவர்கள் எக்காலத்திலும் தர விடபோவதில்லை என்கின்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியும் மாறி மைத்திரி வென்றால் தமிழர்களுக்கான தீர்வு இன்னும் இன்னும் இழுபடும்.... இப்போ தானே வந்திருக்கிறார் அவருக்கான கால அவகாசத்தை வழங்கணும் என்று பழையபடி சர்வதேசம் பல்லவியை பாட தொடங்கும்......

அப்படியானால் இப்ப ஒரு தீர்வு ஒன்று வந்திருக்க வேண்டுமே, தமிழனுடைய வருங்காலத்தை தீர்மானிக்க போவது சர்வதேச அரசியல் இராணுவ பொருளாதார நலங்களே,அதற்கு சீனா தான் x factor

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதியில் இராணுவம் கைப்பற்றியுள்ள இடங்கள் யாவும் அரச காணிகளே. இதை எப்படி அங்குள்ள பொதுமக்கள் காணி என்று கூற முடியும் என்ற கேள்வியையும் கோத்தபாய எழுப்பினார்.

இராணுவத்திற்கு தேவையான காணிகளை பாதுகாப்பு கருதி விடுவிக்க முடியாது.

காங்கேசன் துறை தொகுதி  முழுக்க அரச காணியோ??

அரிஸோனா 7 11 ல்லிருந்தபோதும் கோத்தபாயாவை வந்த வாடிக்கையாளர்கள் மிஸ்டர் சொல்லித்தான் அழைத்திருப்பார்கள்.7 11 காசாளர் பதவியிலும் பார்க்க தமிழினத்தலைவர் என்ற பதவி யாருக்கும் கிடைக்காது

தேர்தல் மேடைகளில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள “திரு.பிரபாகரன்” JAN 02, 2015 | 0:01by கார்வண்ணன்in செய்திகள்

prabha-2003-300x222.jpgயாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டது, அரசதரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து, நேற்றுமுன்தினம் அரச தொலைக்காட்சி செவ்வி ஒன்றில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தீவிரவாதியான பிரபாகரனை மரியாதையோடு, திரு.பிரபாகரன் என்று சந்திரிகா கூறியிருப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, சாதாரணமாக, மகிந்த ராஜபக்ச என்றே குறிப்பிட்டதாகவும், அவர் விசனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று அரசதரப்பின் பரப்புரை மேடைகள் அனைத்திலும், திரு. பிரபாகரன் விவகாரமே, முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொடக்கம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், திரு.பிரபாகரன் விவகாரத்தை வைத்து, சந்திரிகா குமாரதுங்கவையும், எதிரணியினரையும், கடுமையாகத் தாக்கி விமர்சனங்களைச் செய்தனர்.

கண்டியில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சந்திரிகாவின் இந்த உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

தன்னை மரியாதையோடு அழைக்காமல் வெறுமனே மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிட்டதாகவும், ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனை மரியாதையாக, திரு.பிரபாகரன் என்று கூறியதாகவும், அவர் விசனத்தை வெளியிட்டார்.

அதேவேளை, கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலும், அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விவகாரம் குறித்து, சந்திரிகாவை கடுமையாக விமர்சித்தார்.

சந்திரிகாவின் யாழ்ப்பாண உரை ஒட்டுமொத்த நாட்டையுமே அவமானப்படுத்தி விட்டதாக அவர் கூறினார்.

“போரின் 75 சதவீதத்தை முடித்து வைத்தது தானே என்று கூறித் திரியும் சந்திரிகா,  தீவிரவாத தலைவரை, திரு.பிரபாகரன் என்று, மரியாதையாக அழைத்திருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சர்வாதிகாரி என்று கூறிவிட்டு, தீவிரவாத தலைவரை திரு.பிரபாகரன் என்று மரியாதை கொடுத்திருக்கிறார்.” என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.

கடந்த 30ம் நாள், யாழ்ப்பாணத்தில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, சந்திரிகா குமாரதுங்க, தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனுடன் பேச்சு நடத்த முயன்றதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/01/02/news/2300

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.