Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறையில் நாய் வளர்த்த மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறையில் நாய் வளர்த்த மகிந்த
8372e478432b1b4b94b50263025c3dda.jpg

முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக விலை மதிப்பான 43 நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நாய்களை பராமரிப்பதற்கென பிரத்தியோகமாக அறைவடிவமைக்கப்பட்டு அவை குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாக  அலங்கரிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இதனை தவிர பெறுமதியான 23 அரிய வகை பறவைகளும் ஒரு குதிரையும் இரண்டு போனிக்குதிரைகளும் அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்காக கடந்த காலங்களில் கோடிக்கணக்கில் பொது நிதி செலவு செய்யப்பட்ட விதம் பற்றி தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டுள்ள நிலையில் வாகனங்களை பராமரிப்பதற்காக மாத்திரம் கடந்த வருடம் 250 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு முன்னர் இவ்விதமான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான பேர்டினட் மார்கோஸ் குடும்பத்தினர் என்பது இங்கு நினைவுக்கூறத்தக்கது

இதேவேளை அலரி மாளிகையில் வளர்க்கப்பட்ட மில்லியன் ரூபா பெறுமதியான மெகோ வகை கிளிகள் நான்கு கூண்டை விட்டு பறந்து போனதுடன் அவற்றை பிடிக்க இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டதாக 2014 ஆம் ஆண்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=465583826823195811#sthash.NT8BB8Of.dpuf

அந்த 43 நாய்களில் ஒன்றிற்காவது டக்கி என்று பெயர் வைத்திருப்பார் மகிந்த.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 43 நாய்களில் ஒன்றிற்காவது டக்கி என்று பெயர் வைத்திருப்பார் மகிந்த.

 அதுக்கு ac தேவைப்பட்டு இருக்காது மகிந்தவுக்கு 2க்கு போகக்கிலை துடைபதுக்கு tolite பேப்பர் உடன் மகிந்த முன்னும் பின்னும் திரிந்த டக்கி . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 43 நாய்களில் ஒன்றிற்காவது டக்கி என்று பெயர் வைத்திருப்பார் மகிந்த.

அவர் இன்று இலங்கையிலும்

புலத்திலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர்... :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் இன்று இலங்கையிலும்

புலத்திலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவர்... :(  :(  :(

உழைப்பு அந்த மாதிரியெல்லே...

பல தலைவர்கள் இப்படிதான் .தலை கால் தெரியாமல் ஆடினார்கள் .

தன்ரை பிள்ளைக்கு சுவிம்ங் பூல் கட்டினார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தன்ரை பிள்ளைக்கு சுவிம்ங் பூல் கட்டினார்கள் .

தண்ணியை தொட்டிக்குள் விட்டால் அது கனடாவில் சுவிமிங் பூல்.  :icon_mrgreen:
 
தனது குடும்பத்தையே பலி கொடுத்த தலைவர் எங்கே வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் காசை பதுக்கிய மகிந்த எங்கே. எனக்கு ஒரு சந்தேகம் யாழ் இந்துவில் படித்த எல்லோருக்கும் லொஜிக் தெரியும் போது ஏன் இவருக்கு மட்டும் விளங்குவதே இல்லை? :D
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ....ஆமா போட்டிருந்தால் இன்று மகிந்தா தான் ஜனாதிபதி.....இன்னும் 100 நாய் வாங்கி வளர்த்திருப்பார்....அமெரிக்காவும் கண்டிருக்காது....

தன்ரை பிள்ளைக்கு சுவிம்ங் பூல் கட்டினார்கள் .

அந்த 43 ல் ஒன்றினால் இப்படித்தான் சிந்திக்க முடியும்.

நாளைக்கு ஒரு செய்தியாக வந்துகொண்டிருக்கிறது. எனகென்னமோ சில ஊடகங்கள் தாங்களும் வைச்சு வாசிக்கிறமாதிரி கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியை தொட்டிக்குள் விட்டால் அது கனடாவில் சுவிமிங் பூல். :icon_mrgreen:

தனது குடும்பத்தையே பலி கொடுத்த தலைவர் எங்கே வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் காசை பதுக்கிய மகிந்த எங்கே. எனக்கு ஒரு சந்தேகம் யாழ் இந்துவில் படித்த எல்லோருக்கும் லொஜிக் தெரியும் போது ஏன் இவருக்கு மட்டும் விளங்குவதே இல்லை? :D

தலைவரின் குடும்ப வாழ்கையை பற்றி எவனாலும் குறை சொல்ல முடியாது. வெளிநாட்டிலிருக்கும் தங்கட பிள்ளைகளுக்கு மன அழுத்தம் பற்றி கவலைப்படுபவர்கள் அந்த பிள்ளைகளை நினைத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் குடும்ப வாழ்கையை பற்றி எவனாலும் குறை சொல்ல முடியாது. வெளிநாட்டிலிருக்கும் தங்கட பிள்ளைகளுக்கு மன அழுத்தம் பற்றி கவலைப்படுபவர்கள் அந்த பிள்ளைகளை நினைத்தில்லை.

ஏன் தலைவரது பிள்ளைகள் மட்டும் தான் கஸ்டப்பட்டார்களா?....வன்னியில் இருந்த மற்றப் பிள்ளைகள் சொகுசாக வாழ்ந்தார்களோ?...தலைவரது பிள்ளைகள் கஸ்டப்பட்டு இருக்காவிடில் தான் அது செய்தியாக வர வேண்டும்.கடைசி சண்டையில் சித்திரவதைப்பட்டு இறந்ததை தவிர ஓரளவுக்கு வன்னியில் இருக்கும் குழந்தைகளை விட வசதியாகத் தான் வாழ்ந்தார்கள்

உங்களுக்கு மன அழுத்தம் மன உளைச்சலுக்கும் சொகுசு வசதிக்குமான வித்தியாசம் புரியவில்லை.

தண்ணியை தொட்டிக்குள் விட்டால் அது கனடாவில் சுவிமிங் பூல்.  :icon_mrgreen:
 
தனது குடும்பத்தையே பலி கொடுத்த தலைவர் எங்கே வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் காசை பதுக்கிய மகிந்த எங்கே. எனக்கு ஒரு சந்தேகம் யாழ் இந்துவில் படித்த எல்லோருக்கும் லொஜிக் தெரியும் போது ஏன் இவருக்கு மட்டும் விளங்குவதே இல்லை? :D

தவறு யார் செய்தாலும் தவறுதான் .

என்ரை தலைவர் தவறு விட்டாலும் அது தவறில்லை என்பதால் தான் கருணாநிதி ,ஜெயலலிதா ,மகிந்தா போன்றவர்கள் உருவாகின்றார்கள் .

வேணுமென்றால் படம் இணைத்துவிடுகின்றேன் அது தண்ணீர் தொட்டியோ என்று பாருங்கள் அல்லது எந்த ஊரில் அப்படி ஒரு தண்ணிதொட்டி இருக்கென்று சொல்லுங்கள் .

உங்களது இரண்டாவது பந்தி பற்றி இங்கு யாரும் கதைக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சுமிங் பூலில குளிக்கிறதில என்ன பிழை ? அந்தாள் கடற்கரைக்குப் போய் மற்றச் சங்களோட குளிக்கிறதுக்குள்ள ஆராவது போட்டுத் தள்ளீட்டால்?? அல்லது தகவல் குடுத்திட்டால் என்ன செய்யிறது ? அதனாலதான் வீட்டுக்குள்ள சுமிங் பூல் !

அதே மாதிரித்தான் மகிந்த வீட்டு நாய்களும். மகிந்த இருக்கிற வீட்டுக்கு கட்டாயம் ஏ. சி இருக்கும். அந்த வீட்டில நாய்களிருந்தால் , உடனே நாயுக்கு ஏ.சி போட்டு ரூம் போட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?? சரி, நாய்க்கென்று ஏ.சி ரூம்தான் இருந்தால்த்தான் இப்ப என்ன?? அந்தாள் காசு கட்டுறான் அல்லது சனம் கட்டுது, எங்களுக்கு ஏன் குடையுது ?

  • கருத்துக்கள உறவுகள்

தவறு யார் செய்தாலும் தவறுதான் .

என்ரை தலைவர் தவறு விட்டாலும் அது தவறில்லை என்பதால் தான் கருணாநிதி ,ஜெயலலிதா ,மகிந்தா போன்றவர்கள் உருவாகின்றார்கள் .

வேணுமென்றால் படம் இணைத்துவிடுகின்றேன் அது தண்ணீர் தொட்டியோ என்று பாருங்கள் அல்லது எந்த ஊரில் அப்படி ஒரு தண்ணிதொட்டி இருக்கென்று சொல்லுங்கள் .

உங்களது இரண்டாவது பந்தி பற்றி இங்கு யாரும் கதைக்கவில்லை .

அப்போ ஏன் கனேடிய பிரதமர் இவ்வளவு பாதுகாப்பாக திரிகிறார் என கேட்கவில்லை? மக்களின் வரிப்பணத்தில் இவருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என கேட்கவில்லை?? அல்லது அவர் வெள்ளை என்றபடியால் அது சரியோ??

ஏன் தலைவரது பிள்ளைகள் மட்டும் தான் கஸ்டப்பட்டார்களா?....வன்னியில் இருந்த மற்றப் பிள்ளைகள் சொகுசாக வாழ்ந்தார்களோ?...தலைவரது பிள்ளைகள் கஸ்டப்பட்டு இருக்காவிடில் தான் அது செய்தியாக வர வேண்டும்.கடைசி சண்டையில் சித்திரவதைப்பட்டு இறந்ததை தவிர ஓரளவுக்கு வன்னியில் இருக்கும் குழந்தைகளை விட வசதியாகத் தான் வாழ்ந்தார்கள்

இறுதியில் உயிரையே விட்டு விட்டார்கள் என்பதை பற்றி பேசுகிறோம். நீங்கள் சொகுசு பற்றி பேசுகிறீர்கள். தலைவர் தன்னுடையை பிள்ளைகளை அனுப்பி போட்டு ஏனையவகளின் பிள்ளைகளை போராட விட்டு விட்டார் என்று விமர்சித்தவர்கள் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தவர்கள் தான் என்பது மிகச்சிரிப்பானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ ஏன் கனேடிய பிரதமர் இவ்வளவு பாதுகாப்பாக திரிகிறார் என கேட்கவில்லை? மக்களின் வரிப்பணத்தில் இவருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என கேட்கவில்லை?? அல்லது அவர் வெள்ளை என்றபடியால் அது சரியோ??

இறுதியில் உயிரையே விட்டு விட்டார்கள் என்பதை பற்றி பேசுகிறோம். நீங்கள் சொகுசு பற்றி பேசுகிறீர்கள். தலைவர் தன்னுடையை பிள்ளைகளை அனுப்பி போட்டு ஏனையவகளின் பிள்ளைகளை போராட விட்டு விட்டார் என்று விமர்சித்தவர்கள் அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தவர்கள் தான் என்பது மிகச்சிரிப்பானது.

எழுந்தமானத்தில் கருத்திடுபவர்களுக்கு நல்ல சாட்டையடி கொடுத்திருக்கின்றீர்கள். :)

சொகுசாக வாழ்ந்தார் அதில் என்ன பிழை என்று கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கு ?

சொகுசாக வாழ்ந்தார் அதில் என்ன பிழை என்று கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கு ?

நாற்பத்திமூன்றில் ஒன்று சொன்னால் அது சரியாக தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக அரசியல் வரலாறுகள் தெரியாதவர்களுக்கெல்லாம் முட்டையில் மயிர் புடுங்குவதுதான் தஞ்சம்.  :lol:  :D

10390055_10204424717559512_2375628068658

10527737_10204425593221403_7121298903408

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அமெரிக்கா ஐரோப்பாவிலை எல்லாம் ஆயுதம் / பயிற்சிகள் படங்கள் இல்லாமலே பள்ளிக்கூடங்களிலை பிள்ளையள் சுட்டு விளையாடுதுகள். :D
 
பள்ளிக்கூடங்களை இழுத்து மூடுற அளவுக்கு வந்திட்டுது. :o
 
அண்ணை CNN / BBC ஒண்டும் பாக்கிறேல்லை போலை...படம் பாக்கவே நேரம் காணாது....உலக நடப்புகளை பாக்க எங்கை எப்பிடி நேரம் வரும்?
 
அட விஜய் ரிவியை விட்டுட்டன்  :icon_mrgreen:
 
 ஆனால் தலைவர் தற்பாதுகாப்பிற்கும் நாட்டு பாதுகாப்பிற்குமே ஆயுத பயிற்சிகள் கொடுத்தார். :icon_idea:
கராத்தே மூலமும் ஒரு மனிதனை சாகடிக்க முடியும். :icon_idea:  :icon_idea:  :icon_idea:
எனவே சிறுவர்களுக்கான கராத்தே பாடசாலைகளை உடனடியாக மூடப்பட வேண்டும். :D

புதிதாக இருந்ததால் படங்களை இணைத்தேன் .

நான் கருத்தே எழுதவில்லை நியாயப்படுத்த தொடங்கிவிட்டார்கள் .

இனி விக்கிபிடியாவில் சீனன் பெண்களின் குதியை வெட்டினான் ,பிரிட்டிஷ்காரன் பெண்களின் இடுப்பு மெல்லியதாக இருக்க ஆடையை இறுக்கினான் அமெரிக்கன் பல தரவு உறவுகள் வைத்திருந்தான்  இப்படி பல வரப்போகுது .

சுய அறிவு என்பது எவருக்கும் இல்லையா? மற்றவன் சொல்லியா எமக்கு சரி பிழை தெரியவேண்டும் .இன்னொருவன் தவறு செய்தால் அந்த தவறுதான எமக்கு முன்னுதாரணம் .

கொஞ்சம் அடுத்த படிக்கு ஒரு அங்குலதையாவது நகர்த்துங்கள் பிள்ளைகளே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.