Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் இருந்து சென்ற தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Featured Replies

தாயைப் பார்க்க இலங்கை சென்ற பகீரதி தடுப்புக்காவலில் - கைதான பகீரதி மீது 'வழக்கு தொடரப்படும்'
 
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.

2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று திங்கட்கிழமை கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்களுக்கு காவல்துறையினர் விளக்கமறியலில் வைத்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகீரதியின் சகோதரர் முருகேசு வேலவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த பகீரதி, அதன் பின்னர் அந்த இயக்கத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் வேலவன் கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயையும் தந்தையையும் பார்த்துச் செல்வதற்காக இலங்கை வந்திருந்தபோதே, பகீரதி கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் பிறந்த அவரது 8 வயது மகளும் பகீரதியுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், யுத்தம் இல்லாத சூழ்நிலையிலும் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே தனது சகோதரி இலங்கை வந்திருந்ததாகவும் வேலவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும், பகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல்துறை கூறியுள்ளது.

விமான நிலையத்தில் கைதான பகீரதி மீது 'வழக்கு தொடரப்படும்'

http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo7C.html

  • Replies 79
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசின் பார்வையில் இப்பெண் கைது செய்யபட்டது நியாயம். இதில் எவரும் எதுவும் கூற முடியாது. ஏற்றுகொள்ளவேண்டியது. ஆனால்  எமக்காக ஒரு காலத்தில் உயிரை கொடுக்க தயாரான நிலையில் போராடப்போன ஒரு பெண் ஏதோ அவரது துரதிஷ்ரத்தால் கைது செய்யபட்ட சம்பவம் தொடர்பாக எம்மவர்கள் இங்கு விமர்சனம் என்ற போர்வையில் கொட்டும்  நக்கல் விஷக் கருத்துகள் அவரவர் தனிமனித பண்பை மிக தெளிவாக காட்டுகிறது. அப்பெண்ணிற்கு ஆதரவாக கருத்து எழுத மனமில்லாதவர்கள் ஆக குறைந்ததது மெளனத்தின் மூலமாவது எமக்காக ஒரு காலத்தில் போராடிய அந்த பெண்ணிற்கு உரிய கெளரவத்தை கொடுத்திருக்கலாம்.

சரியான கருத்து, ருல்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை உண்மையை பேசுபவர்களாக இல்லாமல் போலியாக வேஷம் போட்டு பொய் வாழ்வு வாழுவதுவதுதான் கெட்டித்தனம் என்று எம்மவர் பலர் நினைக்கின்றார்கள் .

மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே நடிகர் திலகங்களை இனம் காணலாம் . 

இணையத்தில் வந்து அழுதுவிட்டு மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு நித்திரைக்கு போவதே பலருக்கு தொழிலாகிவிட்டது .

பிரச்சனை எதுவென்றாலும் அதை முகம் கொடுத்து நியாயத்தை கதைக்கவேண்டும் அதைவிட்டு கள்ள மௌனம் பேணக்கூடாது .

நீங்களும் உங்களோடு பச்சை போட்ட ஆட்களும் அரை வயிறோடு பட்டினி கிடந்ததை நாமறிவோம். :icon_mrgreen:  :icon_mrgreen:

நீங்களும் உங்களோடு பச்சை போட்ட ஆட்களும் அரை வயிறோடு பட்டினி கிடந்ததை நாமறிவோம். :icon_mrgreen::icon_mrgreen:

இப்போது ஐரோப்பிய நேரம் காலை என்பதால் மூக்கு முட்ட சாப்பிட்டு படுத்த நாங்கள் எழும்பி விட்டோம். இப்ப கனடா நேரம் இரவு என்பதால் அவர் மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு நித்திரைக்கு போயிற்றார்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஐஐயோ நீங்கள் பரிதாபப்பட எல்லாம் வேண்டாம், இப்படி வார்த்தைகளால் கொல்லாமல்  இருந்தாலே காணும்!

எத்தனையோ போராளிகள் நாட்டை விட்டு வெளியேறிய பின் அந்த நாட்டுக்குப் போவதை தவிர்த்தே வருகிறார்கள்.

இந்த அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் புலிகள் தொடர்பாக தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது மாற்றுக் கொள்கை இல்லை. ஏலவே.. இப்படியான கைதுகள்.. சிறை மரணங்கள் தொடர்பில் அறிந்திருந்தும் அங்கு செல்பவர்களை இட்டு எப்படி பரிதாபப்படுவது.

மேலும்.. இன்று இப்படியானவர்கள்.. இரண்டு வழிகளில்.. சொந்தங்களை பார்க்கலாம்.. (இவர்களுக்கு அகதி அந்தஸ்து மட்டும் கிடைச்சு.. பாஸ்போட் கிடைக்கல்லைன்னா.. அம்மாவுக்கு என்ன தான் வருத்தம் என்றாலும் போய் இருப்பார்களா..?!)

1. நாட்டுக்கு வெளியே அவர்களை வரவழைத்து.

2. ஸ்கைப் போன்ற சமூக இணைய வலை சேவைகள் மூலம்.

------------------------------------

மேலும் இங்கு சிலர்.. இப்படியான கைதுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும்.. தமிழர் உரிமைப் போராட்டமே காரணம் என்று சொல்கிறார்கள். அதைக் கைவிட்டால் மட்டும் எல்லா தமிழர்களுக்கும் பாதுகாப்பை சிங்களம் வழங்கும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு.. 1972 இல் ஆயுதப் போராட்டத்தில் தமிழன் இறங்க வேண்டி வந்தது. சும்மா பொழுதுபோக்கிற்கும்.. இங்கு சிலர் முன்னாள்.. இன்னாள் இயக்கம் என்று சொல்லி உலகம் பூரா அசைலம் அடிக்கவுமா..?!

அகதி உரிமைகள் வழங்கும் நாடுகள்... அதனை ஏன் வழங்குகின்றன என்று புரியாமலே அதனை எம்மவர்கள் இலகுவில் பெற்றுக் கொள்வதன் விளைவுகளில்.. இந்த விளக்கம் குறைஞ்சவர்கள் அதிகம்.  :icon_idea:  :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் சீனை போடும் புலிகள் உள்ளவரை நிஜ புலிகள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் வேதனை மிகுந்ததா ..

என்ன கவலை கண்டனம் என்று சொல்லிட்டு நாளைக்கு துள்ளுவம் இதனால் பாதிக்கப்படுபவன் உண்மையில் அந்த போரில் போர் முனையில் நின்று வெளியில் வந்தவன் மட்டுமே .நாங்க கணனியில் நாடு பிடிச்சுட்டு நாட்டுக்கும் போயிட்டு வந்து ஈழம் பிடிக்க வேண்டியது தான் :(

Posted 10 February 2015 - 01:33 PM

வாத்தியார், on 10 Feb 2015 - 1:30 PM, said:

கருணா எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதை விட வெளியேற்றப்பட்டதும் அவர் எப்படிச் செயற்பட்டார்....

எப்படி இப்போதும் செயற்படுகின்றார் என்பது முக்கியம் அஞ்சரன்.

ஒப்பீடு சரியல்ல

வாத்தியார் ஐயா அமைப்பில் இருந்து விலகினாலோ ..அல்லது வெளி ஏற்றப்பட்டலோ அவர் சாதாரண பொது மகன் அதன் பின் அவர் புலிகளின் பெயரில் அல்லது செயலில் இறங்கினால் தவறு தண்டனைக்கு உரியது அது யாராக இருந்தாலும் எப்படி இவர் அதில் விதிவிலக்கு ஆகுவார் .

இதுவும் அஞ்சரன் தான் எழுதியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகீரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை! - சிறிலங்கா காவல்துறை கூறுகிறது. 

ajith-rohana-200-news.jpg

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட முருகேசு பகீரதி என்ற தாய் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பிரான்ஸிலிருந்து கடந்த மாதம் இலங்கை சென்றிருந்த பகீரதியும் அவரது 8 வயது மகளும் கிளிநொச்சியில் உள்ள பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் விடுமுறையை கழித்துவிட்டு திரும்பும் வழியிலேயே திங்கட்கிழமை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பகீரதியை மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்துவருவதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் மூன்று ஆண்டுகள் இருந்துள்ள பகீரதி 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் செல்ல முன்னர் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தாக அவர் குற்றம்சாட்டினார்.

'உண்மையில் இந்தப் பெண் 1997-ம் ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டு வரை கடற்புலிகளின் தலைவியாக இருந்துள்ளார். அவர் 2005-ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் அவரது காலப்பகுதியில் இலங்கை கடற்படை மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகின்றது' என்றார் அஜித் ரோஹண.

'அவ்வாறே, தற்கொலை குண்டுதாரிப் பெண்களை தயார்படுத்தும் திட்டங்களிலும் அவர் பங்கெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இந்த சந்தர்ப்பத்தில் அவர் இலங்கை வந்துள்ளதாகவும் தெரியவந்தது. அவர் இலங்கையிலிருந்து வெளியேறபோன சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்' என்றும் கூறினார் காவல்துறை பேச்சாளர்.

'இப்போது எல்டிடி பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையில் கடந்த காலத்தில் யாராவது குண்டுத் தாக்குதல் அல்லது கொலைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு 20 ஆண்டுகாலத்திற்கு எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது' என்றும் கூறினார் அஜித் ரோஹண.

பகீரதி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்கள் இருப்பதாகவும் அவற்றை எதிர்காலத்தில் வெளிப்படுத்துவதாகவும் கூறிய காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண, விசாரணைகளின் முடிவில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=127644&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாறியதால் பாலும் தேனும் ஓடிவிட்டது என்று கூறியவர்களும் இந்நிலை ஏற்படக் காரணமானவர்கள்.. அவர்களின் கதைகளை நம்பியும் இவர் போன்றவர்கள் தாயகம் சென்றிருக்கலாம்.. இணையத்தில் இணக்க வீரர்களின் தொல்லை தாங்க முடியல.. :D:o

  • கருத்துக்கள உறவுகள்

இணக்க வீரர்களின் தொல்லை தாங்க முடியல.. :D:o

இணக்கம் தமிழர்களுடன் மட்டும் தான்....புலிகளுடன் இணக்கமில்லாயாம்.....என்று இணக்கவாதிகள் சொல்லியினம் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசின் பார்வையில் இப்பெண் கைது செய்யபட்டது நியாயம். இதில் எவரும் எதுவும் கூற முடியாது. ஏற்றுகொள்ளவேண்டியது. ஆனால்  எமக்காக ஒரு காலத்தில் உயிரை கொடுக்க தயாரான நிலையில் போராடப்போன ஒரு பெண் ஏதோ அவரது துரதிஷ்ரத்தால் கைது செய்யபட்ட சம்பவம் தொடர்பாக எம்மவர்கள் இங்கு விமர்சனம் என்ற போர்வையில் கொட்டும்  நக்கல் விஷக் கருத்துகள் அவரவர் தனிமனித பண்பை மிக தெளிவாக காட்டுகிறது. அப்பெண்ணிற்கு ஆதரவாக கருத்து எழுத மனமில்லாதவர்கள் ஆக குறைந்ததது மெளனத்தின் மூலமாவது எமக்காக ஒரு காலத்தில் போராடிய அந்த பெண்ணிற்கு உரிய கெளரவத்தை கொடுத்திருக்கலாம்.

ஐயா

இதில் எழுதுவதில்லை என்று தான் எழுதி விலகிச்சென்றேன்

அன்றிலிருந்து இன்றுவரை நான் கடைப்பிடிக்கும் ஒரு விடயம்

உதவி  செய்யாது விட்டாலும் பரவாயில்லை

உபத்திரவம் செய்யாதிருப்பது....

நீங்கள் விலகிச்செல்ல என்கின்றீர்கள்

அந்த மௌனத்தையும் இங்கு கள்ளமௌனம் என்கின்றனர்  சிலர்.

ஒன்று மட்டும் தெரிகிறது

இங்கு அந்தப்போராளி மீது கருணை கொண்டு எழுதுபோல் காட்டும் சிலர்

அவர் மீதான கருணைக்காக எழுதவில்லை

எம்போன்ற சிலரை இதை வைத்து தூற்ற கிடைத்த சந்தர்ப்பமாக பயன்படுத்துகின்றனர்

இது எவ்வளவு கொடிய செயல்......

இவர்கள் தமிழருக்காக உழைத்தார்களாம்

முன்னைநாள் போராளிகளாம்... :(  :(  :(

Edited by விசுகு

Posted 10 February 2015 - 01:33 PM

வாத்தியார், on 10 Feb 2015 - 1:30 PM, said:

கருணா எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதை விட வெளியேற்றப்பட்டதும் அவர் எப்படிச் செயற்பட்டார்....

எப்படி இப்போதும் செயற்படுகின்றார் என்பது முக்கியம் அஞ்சரன்.

ஒப்பீடு சரியல்ல

வாத்தியார் ஐயா அமைப்பில் இருந்து விலகினாலோ ..அல்லது வெளி ஏற்றப்பட்டலோ அவர் சாதாரண பொது மகன் அதன் பின் அவர் புலிகளின் பெயரில் அல்லது செயலில் இறங்கினால் தவறு தண்டனைக்கு உரியது அது யாராக இருந்தாலும் எப்படி இவர் அதில் விதிவிலக்கு ஆகுவார் .

இதுவும் அஞ்சரன் தான் எழுதியது

இரண்டு கருத்தும்  எழுதபட்ட  சந்தர்ப்பம் வேறு வேறு  என்பதை  கவனத்தில்  கொள்ளுங்கள்  மீரா ..

ஆட்டுக்குள் மாட்டை  விடாமல் .

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கருத்தும் எழுதபட்ட சந்தர்ப்பம் வேறு வேறு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் மீரா ..

ஆட்டுக்குள் மாட்டை விடாமல் .

"ஆட்டுக்குள் மாட்டை விடாமல்" எல்லாம் பழசு.. "அது போனமாசம்" இதுதான் கரெக்ட்.. :D

ஸ்ரீலங்கா அரசின் பார்வையில் இப்பெண் கைது செய்யபட்டது நியாயம். இதில் எவரும் எதுவும் கூற முடியாது. ஏற்றுகொள்ளவேண்டியது. ஆனால்  எமக்காக ஒரு காலத்தில் உயிரை கொடுக்க தயாரான நிலையில் போராடப்போன ஒரு பெண் ஏதோ அவரது துரதிஷ்ரத்தால் கைது செய்யபட்ட சம்பவம் தொடர்பாக எம்மவர்கள் இங்கு விமர்சனம் என்ற போர்வையில் கொட்டும்  நக்கல் விஷக் கருத்துகள் அவரவர் தனிமனித பண்பை மிக தெளிவாக காட்டுகிறது. அப்பெண்ணிற்கு ஆதரவாக கருத்து எழுத மனமில்லாதவர்கள் ஆக குறைந்ததது மெளனத்தின் மூலமாவது எமக்காக ஒரு காலத்தில் போராடிய அந்த பெண்ணிற்கு உரிய கெளரவத்தை கொடுத்திருக்கலாம்.

உண்மை தான்  அதுக்கான  மாற்றீடு அல்லது  சட்ட  நடவடிக்கை  பற்றி  சிந்திக்காது  ,ஐயகோ  சிங்களம்  மாறவில்லை  இனவாதம்  இன்னும்  அப்படியேதான் இருக்கு  என்று  இங்கு  நீலக்கண்ணீர் வடித்து  ஒரு  நன்மையையும்  இல்லை ..

ஆக அவரை  வைத்து  இங்கு  நான்  அதி உயர்  பற்றாளன்  என்று  காட்டிக்கொள்ளாமல் தமிழர் தரப்பு  இன்னும்  அதே  இடத்தில்  நின்றுகொண்டு  சிங்களம் மாறவில்லை  என்பதுதான்  வேடிக்கை ,அவன்  யுத்தத்தில்  வென்றதில்  இருந்து  இன்றுவரை  தன்னை பாதுகாக்கும் சகல வழியும் நேர்த்தியா  செய்கிறான் ...

நாங்கள்  தான் பிரிப்பு  பிரிவினை  துரோகி  பட்டம்  உள்ளவன்  கெட்டவன்  என்று  சொல்லி  கொடும்பாவி  எரிப்பு  என்று  சொல்லு கொண்டு  நிக்கிறம் அரசியலில்  எந்த  அடிப்படை  மாற்றமும்   இல்லாமல் ....

கருத்தெழுதினால்  காரியம் நடக்கும்  என்னும்  ஆசையில் .

நீங்களும் உங்களோடு பச்சை போட்ட ஆட்களும் அரை வயிறோடு பட்டினி கிடந்ததை நாமறிவோம். :icon_mrgreen:  :icon_mrgreen:

நாங்கள் ஒன்றும் இணையத்தில் வந்து  முதலைகண்ணீர் விட்டு விட்டு முழுங்கி விட்டு படுக்கவில்லை .வழக்கம் போல முழுங்கிவிட்டுத்தான் படுக்கின்றோம் .

ஆட்சி மாற்றத்தின் பின்  தமிழன் களவெடுத்தாலும் போலிஸ் பிடிக்ககூடாது என்றும் இனி சொல்லுவினம் போல .

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கருத்தும் எழுதபட்ட சந்தர்ப்பம் வேறு வேறு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் மீரா ..

ஆட்டுக்குள் மாட்டை விடாமல் .

சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கருத்தை மாற்றி எழுத கூடாது அஞ்சரன்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா,பிள்ளையான்,கேபி போன்றவர்களை விட அப்படி என்ன பெரிய தவறைச் செய்து விட்டார்.பெற்று வளர்த்த தாய், தகப்பனை பார்க்க விரும்புவது. ஒரு உணர்வு பூர்வமான விடயம்.சிறிலங்காவின் சட்டம் ஒரே இயக்கத்தில் இருந்தவர்கள் விடயத்தில் இருவேறுபட்ட கொள்கையைப் கடைப்பிடிக்க பிடிக்கின்றது.ஆட்சி மாறினாலும் சிங்களத்தின் தமிழர் மீதான பார்வை மாறவில்லை.ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவளித்த கூட்டமைப்பின் தலமை இந்த விடயத்தில் தலையிடாமல் ஏன் மெளனம் காக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ போராளிகள் நாட்டை விட்டு வெளியேறிய பின் அந்த நாட்டுக்குப் போவதை தவிர்த்தே வருகிறார்கள்.

இந்த அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் புலிகள் தொடர்பாக தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது மாற்றுக் கொள்கை இல்லை. ஏலவே.. இப்படியான கைதுகள்.. சிறை மரணங்கள் தொடர்பில் அறிந்திருந்தும் அங்கு செல்பவர்களை இட்டு எப்படி பரிதாபப்படுவது.

மேலும்.. இன்று இப்படியானவர்கள்.. இரண்டு வழிகளில்.. சொந்தங்களை பார்க்கலாம்.. (இவர்களுக்கு அகதி அந்தஸ்து மட்டும் கிடைச்சு.. பாஸ்போட் கிடைக்கல்லைன்னா.. அம்மாவுக்கு என்ன தான் வருத்தம் என்றாலும் போய் இருப்பார்களா..?!)

1. நாட்டுக்கு வெளியே அவர்களை வரவழைத்து.

2. ஸ்கைப் போன்ற சமூக இணைய வலை சேவைகள் மூலம்.

------------------------------------

மேலும் இங்கு சிலர்.. இப்படியான கைதுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும்.. தமிழர் உரிமைப் போராட்டமே காரணம் என்று சொல்கிறார்கள். அதைக் கைவிட்டால் மட்டும் எல்லா தமிழர்களுக்கும் பாதுகாப்பை சிங்களம் வழங்கும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு.. 1972 இல் ஆயுதப் போராட்டத்தில் தமிழன் இறங்க வேண்டி வந்தது. சும்மா பொழுதுபோக்கிற்கும்.. இங்கு சிலர் முன்னாள்.. இன்னாள் இயக்கம் என்று சொல்லி உலகம் பூரா அசைலம் அடிக்கவுமா..?!

அகதி உரிமைகள் வழங்கும் நாடுகள்... அதனை ஏன் வழங்குகின்றன என்று புரியாமலே அதனை எம்மவர்கள் இலகுவில் பெற்றுக் கொள்வதன் விளைவுகளில்.. இந்த விளக்கம் குறைஞ்சவர்கள் அதிகம்.  :icon_idea:  :rolleyes:

அகதிகள் பற்றிய பார்வையில் உங்களுடன் விவாதித்துப் பயனில்லை, அது நீங்களாகவே அனுபவப் பட்டு ஒரு நாள் உணர்வீர்கள். ஆனால் வருத்தமாக உள்ள உறவை ஸ்கைப்பிலும் சிங்கப்பூருக்கு எயார் அம்புலன்சிலும் அழைத்தும் பார்க்கலாம் என்ற உங்கள் ஆலோசனை உங்கள் படிப்பின் வழியாக வந்த அறிவாக எடுத்துக் கொள்கிறோம்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் "பு" என்ற எழுத்த கண்டவுடன் வந்துடுவார் காலதூக்கிகொண்டு, இன்னொருவர் "அகதி" என்ற சொல்லை கண்டவுடன் போலிஅகதி, பொருளாதார அகதி என்று வகுப்புஎடுக்க வந்திடுவார். இவர்கள் தாங்கள்தான் அறிவாளிகள், படித்தவர்கள் என்று தங்களுக்குதாங்களே பட்டம் சூடிய ----. சிங்களவன் ராணுவ உடையுடனும், சாதாரண உடையுடன் காடயனாகவும் எத்தனை கொலைகளை,வன்புனர்வுகளை,இடபெயர்வுகளை, நிலஆக்கிரமிப்புகளை, 77 ஆம் ஆண்டில் இருந்து செய்கிறான், எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்திருக்கு? அவன் தெளிவா இருக்கிறான், எங்கட ----- புலத்து தமிழருக்கு பாடம் எடுக்குதுகள்.

Edited by நிழலி
அவச்சொல் நீக்கம்

மேலும்.. இன்று இப்படியானவர்கள்.. இரண்டு வழிகளில்.. சொந்தங்களை பார்க்கலாம்.. (இவர்களுக்கு அகதி அந்தஸ்து மட்டும் கிடைச்சு.. பாஸ்போட் கிடைக்கல்லைன்னா.. அம்மாவுக்கு என்ன தான் வருத்தம் என்றாலும் போய் இருப்பார்களா..?!)

1. நாட்டுக்கு வெளியே அவர்களை வரவழைத்து.

2. ஸ்கைப் போன்ற சமூக இணைய வலை சேவைகள் மூலம்.

------------------------------------

மேலும் இங்கு சிலர்.. இப்படியான கைதுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும்.. தமிழர் உரிமைப் போராட்டமே காரணம் என்று சொல்கிறார்கள். அதைக் கைவிட்டால் மட்டும் எல்லா தமிழர்களுக்கும் பாதுகாப்பை சிங்களம் வழங்கும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு.. 1972 இல் ஆயுதப் போராட்டத்தில் தமிழன் இறங்க வேண்டி வந்தது. சும்மா பொழுதுபோக்கிற்கும்.. இங்கு சிலர் முன்னாள்.. இன்னாள் இயக்கம் என்று சொல்லி உலகம் பூரா அசைலம் அடிக்கவுமா..?!

அகதி உரிமைகள் வழங்கும் நாடுகள்... அதனை ஏன் வழங்குகின்றன என்று புரியாமலே அதனை எம்மவர்கள் இலகுவில் பெற்றுக் கொள்வதன் விளைவுகளில்.. இந்த விளக்கம் குறைஞ்சவர்கள் அதிகம்.  :icon_idea:  :rolleyes:

உங்கள் கருத்து புரியவேயில்லை.
என்னதான் சொல்ல முயற்சிக்கிறீர்கள்?
 
படிப்பு என்ற காரணத்தை வைத்துக்கொண்டு புலம் பெயர்ந்தாலும் நாமும் அகதிகளே. மனதில் கொள்ளவும். மற்றவர்களை புண்படுத்த இதனை ஒரு உக்தியாக பயன்படுத்த வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

எங்களை  அகதிஆக்கி தாங்கள் வலுத்து  விட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து விடுமுறைக்காக ஸ்ரீலங்கா சென்று திரும்பிய வேளை கைதான பகீரதி என்கிற பெண்ணும் அவரது மகளும் கைது செய்யப்பட்டது செய்தி பரவலாக வெளி வந்துள்ளது .இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர் ஸ்ரீ தரனின் நெருங்கிய உறவினர் .அவரது கணவர் புலிகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருந்தவர். பகீரதி ஊரில் இருந்த வேளை அவரது உறவினர்களாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டதால் கைது செய்யப் பட்டுள்ளார் .அவரது கைது பிரான்சு தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படுள்ளது .விரைவில் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என நம்பலாம்...அதே நேரம் அவரது  கணவன் தனக்கும் மனைவிக்கும் விவாக ரத்து ஆகி விட்டது என்று ஒரு தகவலை சொல்லியுள்ளார் .அவரது கணவன் யார் ?? அவர்களது வழக்கு முடிந்த பின்னர் போடுகிறேன்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:"குட் ஜொப்" சாத்திரி!

எத்தனையோ போராளிகள் நாட்டை விட்டு வெளியேறிய பின் அந்த நாட்டுக்குப் போவதை தவிர்த்தே வருகிறார்கள்.

இந்த அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் புலிகள் தொடர்பாக தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது மாற்றுக் கொள்கை இல்லை. ஏலவே.. இப்படியான கைதுகள்.. சிறை மரணங்கள் தொடர்பில் அறிந்திருந்தும் அங்கு செல்பவர்களை இட்டு எப்படி பரிதாபப்படுவது.

மேலும்.. இன்று இப்படியானவர்கள்.. இரண்டு வழிகளில்.. சொந்தங்களை பார்க்கலாம்.. (இவர்களுக்கு அகதி அந்தஸ்து மட்டும் கிடைச்சு.. பாஸ்போட் கிடைக்கல்லைன்னா.. அம்மாவுக்கு என்ன தான் வருத்தம் என்றாலும் போய் இருப்பார்களா..?!)

1. நாட்டுக்கு வெளியே அவர்களை வரவழைத்து.

2. ஸ்கைப் போன்ற சமூக இணைய வலை சேவைகள் மூலம்.

------------------------------------

மேலும் இங்கு சிலர்.. இப்படியான கைதுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும்.. தமிழர் உரிமைப் போராட்டமே காரணம் என்று சொல்கிறார்கள். அதைக் கைவிட்டால் மட்டும் எல்லா தமிழர்களுக்கும் பாதுகாப்பை சிங்களம் வழங்கும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு.. 1972 இல் ஆயுதப் போராட்டத்தில் தமிழன் இறங்க வேண்டி வந்தது. சும்மா பொழுதுபோக்கிற்கும்.. இங்கு சிலர் முன்னாள்.. இன்னாள் இயக்கம் என்று சொல்லி உலகம் பூரா அசைலம் அடிக்கவுமா..?!

அகதி உரிமைகள் வழங்கும் நாடுகள்... அதனை ஏன் வழங்குகின்றன என்று புரியாமலே அதனை எம்மவர்கள் இலகுவில் பெற்றுக் கொள்வதன் விளைவுகளில்.. இந்த விளக்கம் குறைஞ்சவர்கள் அதிகம்.  :icon_idea:  :rolleyes:

சீன அதிபர் மாவோவின் காலத்தில் அனைவருக்கும் அவரின் பொன்மொழிகள் அடங்கிட சிகப்பு புத்தகம் வழங்கப்பட்டதாம். Little red book என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அப்படி நீங்களும் ஒரு புத்தகத்தை அடிச்சு எப்படி பாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது, பரிசு வென்றால் என்ன செய்வது, வெளிநாடு வந்தால் என்ன செய்வது, ஊரில அப்பா அம்மாவுக்கு சுகயீனம் வந்தால் என்ன செய்வது என்ற குறிப்புகளோடு வெளியிட்டீர்கள் என்றால் விளக்கம் குறைஞ்ச இந்த தமிழ் இனம் அதை வாசித்து விளக்கம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

இங்கு பின்னூட்டம் இட்டவர்களில் பலர் கைது செய்யபட்டவரில் காட்டும் அனுதாபத்தைவிட -நாங்கள் அப்பவும் சொன்னோம் சிங்களவன் மாறமாட்டான் " என்ற முனைப்பே இருந்தது .அதிலும் "நாங்கள் அப்பவும் சொன்னோம்" என்பது தான் அவர்களுக்கு முக்கியம் .

இழவு வீட்டில் சுகம் தேடும் இவர்கள்  கனவு இனி பலிக்காது .

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள்தான் இனி இல்லையே இறப்பதற்கு ..........
அப்ப உங்களுக்கு இனி கனவே இல்லையா ??
 
ரொம்ப பவம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.