Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


859f782c5ad8d52de41b046ce0576245
  • Replies 108
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
தாய் விடுதலை அடைந்ததில் மகிழ்ச்சி. இதேபோல் இன்னும் பலர் கூடிய சீக்கிரம் விடுதலை அடையவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்துக்கள் எழுதுவோர், அண்மையில் காலமான ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் தொடர்பில் ஒரு அஞ்சலி கூட செலுத்தவில்லை.

போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்த பொன்.சிவகுமாரன் அவர்களுடன் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னர் ஒதுங்கி இருந்த இந்திய தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களை ஈழப் போராட்டம் பக்கம் திருப்பியவர்களில் ஒருவர். இவரின் முயற்சியினால்தான் அன்டன் பாலசிங்கம் அவர்களின் பேட்டி விகடனிலோ எதனிலோ வந்தது என நினைக்கின்றேன்.

விடுதலைப் போராட்டத்தினை ஊடகங்கள் வாயிலாக நியாயப்படுத்தியவரும் கூட.

புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் பெருமளவிலானோர் இவரை கண்டு கொள்ளவில்லை என்பது வேதனைக்கு உரியது.

விடுதலைப் புலிகள் தற்போது இருந்து இருந்தால் இவருக்கான மதிப்பினை நிச்சயம் வழங்கி இருப்பார்கள்.

இங்கே, ஒரு தாய் எப்படியோ விடுதலை அடைந்து வந்து விட்டார். அவர் அணிந்து வந்த ஆடை தொடக்கம் சுப்பர் சிங்கரில் ஜெசிக்கா இரண்டாவது இடம் வந்தது தொடர்வில் விவாதிப்பதற்கு சிறந்த இடம் போல் உள்ளது.

மீண்டும் தெளிவாக இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன். வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர்களால்தான் மீண்டும் ஒரு பாரிய அழிவு வரும். இதனை நீங்கள் உணர்ந்து இருக்கின்றீர்களோ தெரியாது. ஆனால், அங்கே வாழும் மக்கள் மிகவும் தெளிவாகப் புரிந்து வைத்து இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை! இது போற்றுதல் தூற்றுதல் விடயம் அல்ல! மேலே என்ன விவாதமெண்டு வாசியுங்கள். நீங்கள் எப்பவாவது சிறி லங்காவில் ஜெயிலில் இருந்திருக்கிறீர்களா? "நீதியின் சக்கரங்கள் மெதுவாகத் தான் சுழலும்" என்பதற்கு நல்ல உதாரணங்கள் ஆசிய நாடுகளின் ஜெயில்கள் தான். அந்த நரகத்தில் இருந்து வெளியே வரும் இடைக்கால நிவாரணம் தான் பிணை. வழக்கு இனி வருடக் கணக்காக இழு படும், அது வேறு கதை. ஆனால் அந்தத் தாய் பிள்ளையோடு வீட்டில் இருக்கப் போகுது என்பது அந்தக் குடும்பத்திற்கு இப்போது நல்ல செய்தி. அதற்காக உழைத்தவர்கள் நன்றிக்குரியவர்கள்! இதில் என்ன தவறு இருக்கிறது? இந்த முட்டைக்குச் சவரம் செய்யும் கூட்டத்தின் விசைப்பலகைப் போராலா விடுதலை வந்தது? இதில் கருத்துச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு?

ஜஸ்ரின்.. மேலே உள்ளவற்றில் முக்கால்வாசியை படித்திருந்தேன். அவற்றைப் பற்றி கருத்துச்சொல்ல விரும்பவில்லை..

கரட்டை காட்டி குதிரையை அங்கும் இங்கும் ஏய்ப்பதுதான் நடக்கிறது. இதில் குதிரைபோன்று நாம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

ஜெயகுமாரியை கைது செய்ததே தவறு என்று ஒரு கருத்தில் இருக்கும்போது, ஆகா.. வெளியில் விட்டுட்டாங்கள்.. இதுவே பெரிய விடயம்.. மகிந்த இருந்திருந்தால் இப்படி ஒரு வரப்பிரசாதம் கிடைத்திருக்குமா என்பதுபோல சில கருத்துக்கள் இருக்கின்றன.. :D இவைதான் அந்த குதிரை கருத்துக்கள்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

தாயே உனக்கு தலை வணங்குகிறேன்.

 

நீயும் ஒரு போராளி தான்.

ஜஸ்டின்,நெடுக்ஸ் நான் உங்கள் இரண்டு பேரிலும் நல்ல மதிப்பு வைத்துள்ளேன் ,நீங்கள் இருவரும் ஏன் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்கிறீர்கள்? மிகவும் கவலையாக இருக்கிறது, ஒற்றுமாயாக இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமது விசைப்பலகை வீரத்தாலும், அவர் லீடர் கூச்சலாலும், கொடியாட்டும் போராட்டாத்தாலும் ஜெயக்குமாரி விடுதலையானார் என்று கதை அளப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

வருடம் ஒருதரம் ஜெனிவா போவதை, இணையம் எங்கும் கூவிக் கூவி சுயதம்பட்டம் அடிக்கும் போலிப் புலம்பெயர் தேசிய வாதிகள் எங்கே, மாற்று இனப் பெண்ணுக்காக வீதியில் இறங்கிய சிங்கள முற்போக்கு சக்திகள் எங்கே?

உண்மையையை சொன்னால் சிங்களவனின் அடிமை என்று அதே பழைய பல்லவியை பாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாய்க்காகக் குரல் கொடுத்ததால் ருகி பெர்ணான்டோவையும் சிறையில் போட்டார்கள்! நல்ல வேளையாக இந்த விசைப் பலகைப் போராளிகளுக்கு சிங்களத்திலோ அல்லது திருத்தமான ஆங்கிலத்திலோ இங்கே எழுதுவது போல எழுத வராது! அது இருந்திருந்தால் இருக்கும் இது போன்ற நல்ல சிங்களவர்களையும் எதிரிகளாக்கிப் போட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்களால் தான் ஜெயகுமாரி பிணையில் விடுதலை! - சட்டத்தரணி கே.எஸ். ரத்தினவேல் 

[Tuesday 2015-03-10 19:00]
rathnavel-350-news.jpg

மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெயகுமாரியின் விடுதலையைத் தொடர்ந்து ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புவதாக பிரபல சட்டத்தரணி கே.எஸ். ரத்தினவேல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயகுமாரி சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல், இன்று ஜெயகுமாரிக்கு பிணை வழங்கப்பட்டவுடன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

   

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்: ‘உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே ஜெயகுமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் எமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் யாரும் குற்றப்பத்திரிகை இன்றி தடுத்து வைத்திருக்கப்படக்கூடாது. ஜெயகுமாரி விடயத்தில் அதுதான் நடந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் குற்றப்பத்திரிகை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. எதிர்காலத்தல் பூசா தடுப்பு முகாமினை மூடவேண்டியதான ஒரு நிலைமை ஏற்படும் என்று நினைக்கின்றேன்.

இலங்கை அரசாங்கம் பலரை புனர்வாழ்விற்கு உட்படுத்துகின்றது. புனர்வாழ்வு என்பது அவர்களின் விருப்பத்துடன் வழங்கப்பட வேண்டுமே தவிர பலவந்தமாக அல்ல. ஆனால் இங்கு புனர்வாழ்வானது பலவந்தமாகவே வழங்கப்பட்டுள்ளதென நினைக்கின்றேன். அதேபோல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இதுபோன்று விடுதலை செய்யப்படவேண்டும். அவர்களின் விடுதலைக்கான எமது போரட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை. குறிப்பாக கூட்டமைப்பினர் இது தொடர்பில் காத்திரமான ஒரு வேலைத்திட்டத்தை செயற்படுத்தவில்லை. அவர்கள் தமது சுய இலாப அரசியலுக்காகவே செயற்படுகின்றனர். அவர்கள் தமது பதவிகளைக் காப்பாற்றுவதிலும், ஐ.நா அறிக்கையினை பிற்போட்டமை குறித்து மகிழ்ச்சியிலும் இருப்பார்களாயின் அது பாரிய துரோகமாகும். எனவே தமிழ் அரசியில் கைதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் சட்டரீதியாக நாம் போராட தயாராகவே உள்ளோம்’ என்றும் கூறினார்.

http://www.seithy.com/breifNews.lNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 சாட்டப்படாத குற்றத்துக்கு நிபந்தனை, பிணை விசித்திரமான  நாடும் , நீதி அமைச்சும். இதுக்கு புகழாரம் வேறை. 

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தினவேல் சொல்லும் "சர்வதேச அழுத்தம்" புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளில்லை. அது அம்னெஸ்டி, எச் ஆர் டபிள்யூ இதை ஒத்த அமைப்புக்களை குறிக்கிறது.

கூட்டமைப்பு பற்றி ரத்தினவேல் சொல்வதும் மிகச்சரி - யாழ்பாணத்தில் 6 (1 டக்கி) எம்பி யில் ஒருவராய் வருவதில் காட்டும் கரிசனத்தை அரசியல் கைதிகள் விடுதலையில் கூட்டமைப்பு காட்டுவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்தினவேல் சொல்லும் "சர்வதேச அழுத்தம்" புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளில்லை. அது அம்னெஸ்டி, எச் ஆர் டபிள்யூ இதை ஒத்த அமைப்புக்களை குறிக்கிறது.

கூட்டமைப்பு பற்றி ரத்தினவேல் சொல்வதும் மிகச்சரி - யாழ்பாணத்தில் 6 (1 டக்கி) எம்பி யில் ஒருவராய் வருவதில் காட்டும் கரிசனத்தை அரசியல் கைதிகள் விடுதலையில் கூட்டமைப்பு காட்டுவதில்லை.

 

அம்னெஸ்டி எச் ஆர் டபிள்யூ  இதை ஒத்த அமைப்புகளெல்லாம் கூகிள் மப்பில தான் பார்த்து பிரச்சனையளை கண்டு புடிச்சு மைத்திரிக்கு அழுத்தம்  குடுத்தவையாம்..

சீலையில்லாமல் சட்டையுடன் சிங்களவர் மாதிரி வந்தது பிழை 

ஒரு பிழையும் விடாமல் பிடித்துக்கொண்டு போனவர்கள் பிறகு எப்படி பிணையில் விடுவது 

இவர் போல இன்னும் பலர் உள்ளுக்கு இருக்க இவர் மட்டும் எப்படி வெளியில் வரலாம் .

 

எனவே யாழ் கள மேதாவிகளின் தீர்ப்பின் படி இவர் விடுதலை வேண்டாம் என்று திரும்ப சிறைக்கு போகவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்கா முடிந்து விபுசிகா தொடங்கியிருக்கு . :(

இந்த திரியில் இருக்கும் சில கருத்தாடல்களை பார்த்த பின்பு இங்கு ஏதும்  எழுத மனம் இருக்க வில்லை.
உங்களுடைய இந்த கருத்தை பார்த்தும் இப்படி எழுதாமல் போக முடியவில்லை....
 
ஜெசிக்கா முடியலாம் ...
விபுசிகா .... முடியலாம்.
கொடி எங்கும் தொடரும் ............. மறக்காமல் எல்லா திரியிலும் ஏற்றும் உங்கள் பணிக்கு !
நன்றி !
 
2009 இற்கு முன்பு புலிகள் வற்றுபுருத்தி பிடிக்கிறார்கள் என்றார்கள்.
அதையும் மறந்து விட முடியவில்லை.
40 ஆயிரம் வரையான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் தமது இரத்தத்தால் ஏற்றியது.
காட்டு கத்தலால் காணாமல் போகாது.
 
என்று திரும்ப திரும்ப ஏற்றும் உங்கள் பணி அபரீதமானது! 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாய்க்காகக் குரல் கொடுத்ததால் ருகி பெர்ணான்டோவையும் சிறையில் போட்டார்கள்! நல்ல வேளையாக இந்த விசைப் பலகைப் போராளிகளுக்கு சிங்களத்திலோ அல்லது திருத்தமான ஆங்கிலத்திலோ இங்கே எழுதுவது போல எழுத வராது! அது இருந்திருந்தால் இருக்கும் இது போன்ற நல்ல சிங்களவர்களையும் எதிரிகளாக்கிப் போட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள்!

உங்கள் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் இருப்பதால் 
இதை எழுதுகிறேன் .......
 
ஒரு விடயம் பற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி கருத்துதான்  இருக்க வேண்டும் என்பது ஒரு அநியாய அடக்குமுறையின் இன்னொரு வடிவமாகும்.
அவர் வெளியில் வந்ததார் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.
ஆனால் உள்ளே ஏன் போனார்?
இன்னும் உள்ளே போக எத்தனையோ பேர்கள் அங்கே இருக்கிறார்கள் இங்கும் இருக்கலாம்.
இவர்களை உள்ளே போக விடாது தடுப்பது என்றால்.............   இவர் வந்ததில் மகிழ்ச்சி கொண்டாடமுடியாது. மாறாக இவர் உள்ளே போன விடயம்தான் இப்போதும் பெரிதாக்க பட வேண்டும்.
இவர் உள்ளே போனது தோற்கடிக்கப்படும் போதுதான் 
ஆயிரக்கணக்கான சிறை போக காத்திருக்கும் தமிழர்களின் சிறைவாசத்தை தடுக்க முடியும்.
 
எழுந்த மாத்திரத்தில் விசைபலகை வீரர் என்ற வார்த்தையை நீங்களும் தத்தெடுத்து இருக்கிறீர்கள். 2011 இல் தொடக்கபட்டு வெற்றி வாகை சூடபோகிறது 
என்று சவூதியராபியா காசை கொட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு சார்பாக இஸ்ரேல் விமான கொண்டு வீச இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆயுத பரிவர்த்தனையை அமெரிக்க இரசான ஆயுதம் முதற்கொண்டு ஆலவட்டம் சுற்றிய சிறிய போர்.
முறியடிக்க பட்டதற்கு முதற்காரணம் விசைபலகை வீரர்கள்தான். யாரும் எதிர்பாராத வியுகமாக சிரியாவின் உள்நாட்டு விபரம் சோசல் மீடியா வாயிலாக பூதமாக  வெளிவருவதை மையின் மீடியா ஸ்ட்ரீமால் தொடர்ந்தும் பொய் ஊதாவிடாது படுக்க வைத்தது. 
 
நேற்று  இவருடைய சிறைபிடிப்பை யார் முன்னின்று விளம்பர படுத்தினார்?
யாழ் களத்தில் கூட பல திரிகள் இருக்கிறது.
 
சென்ற கிழமை ஒரு முன்னாள் போராளி கைது செய்யபாட்டார்...... 
"ஆயிர கணக்கான வர்கள் போய்வருகிறார்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை" இப்படி ஒரு நடிகர் திலகம் அங்கு எழுதினார் இப்போ இங்கே 
பட்டு வெட்டி சட்டையுடன் வந்து நிற்கிறார். 
அவரின் கூற்றுப்படி இலங்கையில் இன்னமும் தமிழர்கள் இருப்பதால் அங்கே இன போர் நடக்கவில்லை என்பதாகும். 
முடிந்த அளவில் விடயங்களை பரப்ப வேண்டும்.
அதை விசைபலகை ஊடாகத்தான் செய்ய முடியும்.
இங்கு துளசி என்று ஒரு கள உறவு இருந்தார் இப்போதும் சோசல் மீடியாவில் இங்கு எதை செய்தாரோ அதை அங்கே தொடர்கிறார்.
இங்கிருக்கும் நடிகர் திலகங்கள் நடிப்பால் இங்கிருந்து ஒதுங்கி கொண்டார்.  அகூதா என்று ஒருவரும் அப்படியே சென்று இப்போதும் தொடர்கிறார்.
 
சிங்கள முற்போக்கு வாதிகள் இவர்கள் சொல்லித்தான் போராடியது மாதிரி ஒரு பில்டப்பில் ஒரு கோஸ்டி புதுசா இறங்கி இருக்கு.....
அவர்களுடைய போராட்டம் மதிப்புக்கு உரியது.
எங்களுடைய போராட்டம் ஜெயகுமரியின் விடுதலை அல்ல ........... இன்னமும் 10 ஆயிரம் ஜெயகுமாரிகள் உள்ளே இருக்கிறார்கள். 
செய்திகளை தமது கட்டுபாட்டில் வைத்திருக்க அரசுகள் எப்போதும் எத்தனிக்கும் ....
இப்போதைய தொழில்நுட்பம் எமக்கு கிடைத்த வர பிரசாதம்.
வீம்முக்கு விசைபலகை வீரர் என்று வெளியில் நிற்காதீர்கள்.
கடந்த 30 வருடமாக புலிவாந்தி எடுத்ததை தவிர வேறு எதையும் ஒரு கூட்டம் செய்ததே இல்லை...... ஏதும் நடக்கும்போது வெள்ளை வெட்டி சட்டையுடன் சுய விளம்பர  பலகைகளை தூக்கிக்கொண்டு வந்து விடும். 
யாழ் களத்தை எமக்கு இடையான கருத்து பரிமாற்ற இடமாகத்தான் பாவிக்க முடியும். யாழுக்கு வெளியில்தான் எமது போராட்டம் தொடர வேண்டும். 
உங்களின் கருத்துக்களை நான் மறுக்கிறேன் என்று பொருள் இல்லை ... எல்லா கருத்தும் உள்வாங்க பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். 

அம்மாவின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி: விபூசிகா 

 

article_1426054403-vipoosika.jpg

 

எனது அம்மா ஜெயக்குமாரி பாலேந்திரனை விடுதலை செய்வதற்கு போராடிய சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயக்குமாரியின் மகள் விபூசிகா தெரிவித்துள்ளார்.

 

 http://www.tamilmirror.lk/141438#sthash.6vmoSJYg.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள முற்போக்குவாதிகளுக்கும்,தமிழ்தேசியவாதிகளுக்கும் ,யாழ்விசைபலகை வீரர்களுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மருதங்கேணி ஐயா

நான் எழுதணும் என்று நினைத்தை அப்படியே எழுதியுள்ளீர்கள்

 

நண்பர்களை  உருவாக்காது போனாலும்

இருப்பதை  இழக்காமலாவது இருப்போம்

இதுவே இன்றைய தேவை

அதையே நான் செய்ய முயல்கின்றேன்

Edited by விசுகு

விடுதலை குறித்து கருத்து வௌியிட்ட இலங்கை சமாதானம் மற்றும் நியாயத்திற்கான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வே,

'இது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. அவருக்கும் மகளுக்கும் பாரிய விடுதலை. சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் சிறிய வெற்றியே அவரது விடுதலை.''

அம்மாவின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி: விபூசிகா 

இவர்களுக்கு யாழ் கருத்தாளர்கள் போல அறிவு இல்லை .பாவங்கள் நன்றியும் மகிழ்சியும் என்கின்றார்கள் .

நீங்கள் உள்ளே இருப்பதை வைத்து அரசியல் செய்து நாங்கள் நாட்டையே பிடித்திருப்பம் அதற்குள் உந்த விடுதலை என்ற சிறு விடயத்திற்கு ஆசைப்பட்டுவிட்டீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நவீன உலகில் விசைப்பலகையின்  அதி உச்சப்பலன்களைப்பற்றி

அறியாதவர்களை என்ன செய்வது.
இன்று உலகமே அதற்குள்தான் அடங்கியிருக்கின்றது.

ஜெயக்குமாரியின் பிணை சிங்கள அரசின் ராஜதந்திரம்.
மைத்திரியின் பிரித்தானிய விஜயம்,மோடி வருகை
இப்படிப் பல விடையங்கள் அடங்கியிருக்கின்றன.


சிங்கள முற்போக்குவாதிகள் எத்தனையோ போராட்டங்களைச் செய்திருக்கின்றார்கள் இப்போதும் செய்கின்றார்கள். எத்தனை வெற்றியை அவர்களால் பெற முடிந்தது.

எழுத வேண்டுமென்றால் எதனையும் எழுதலாம்.
வாசகர்களுக்கு அறிவில்லை என்றுமட்டும் யாரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது.
 

 

விடுதலை குறித்து கருத்து வௌியிட்ட இலங்கை சமாதானம் மற்றும் நியாயத்திற்கான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வே,

'இது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. அவருக்கும் மகளுக்கும் பாரிய விடுதலை. சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் சிறிய வெற்றியே அவரது விடுதலை.''

அம்மாவின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி: விபூசிகா 

இவர்களுக்கு யாழ் கருத்தாளர்கள் போல அறிவு இல்லை .பாவங்கள் நன்றியும் மகிழ்சியும் என்கின்றார்கள் .

நீங்கள் உள்ளே இருப்பதை வைத்து அரசியல் செய்து நாங்கள் நாட்டையே பிடித்திருப்பம் அதற்குள் உந்த விடுதலை என்ற சிறு விடயத்திற்கு ஆசைப்பட்டுவிட்டீர்கள் .

 

அண்ணே  எப்படி  அண்ணே  எந்த  பக்கம்  பந்து போட்டாலும்  தூக்கி  வெளியில் அடிக்க  முடியுது  உங்களுக்கு  :D

 

அரசியலை எதிராளியிடம் கற்றுக்கொள் என்று  எங்க  அப்பத்தா  சொல்லுவா ஏனெனில்  கூட  உள்ளவன் ஒருநாளும் உன்  பிழை சரி சொல்லமாட்டான் என்பதால்  :)

 

விடுதலை குறித்து கருத்து வௌியிட்ட இலங்கை சமாதானம் மற்றும் நியாயத்திற்கான இயக்கத்தின் பணிப்பாளர் பிரெட் கார்வே,

'இது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. அவருக்கும் மகளுக்கும் பாரிய விடுதலை. சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் சிறிய வெற்றியே அவரது விடுதலை.''

அம்மாவின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி: விபூசிகா 

இவர்களுக்கு யாழ் கருத்தாளர்கள் போல அறிவு இல்லை .பாவங்கள் நன்றியும் மகிழ்சியும் என்கின்றார்கள் .

நீங்கள் உள்ளே இருப்பதை வைத்து அரசியல் செய்து நாங்கள் நாட்டையே பிடித்திருப்பம் அதற்குள் உந்த விடுதலை என்ற சிறு விடயத்திற்கு ஆசைப்பட்டுவிட்டீர்கள் .

 

 

உங்களை ஒரு அரக்கன் பிடித்து கொண்டு போய் இரண்டு வருடம் சித்திரவதையின் பின்னர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக விடுதலை செய்கிறான் என்று வைத்து கொள்வோம். அப்போது உங்கள் அம்மா, மனைவியும் மிக்க மகிழ்ச்சியில் அந்த அரக்கனுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் என்று தான் சொல்லுவார். அதை தான் இங்கு பல கள உறவுகள் சுட்டிக்காட்டினார்கள். நீங்கள் பாட்டிற்கு கற்பனையில் அந்த அம்மாவின் விடுதலையில் யாழ்கள உறவுகளுகு விருப்பம் இல்லை என்பது போலும் உங்களுக்கு மட்டும் தான் சமூக அக்கறை இருப்பது போலவும் காட்டி விசைபலகையால் உங்கள் கற்பனைக்கு நீங்களே பதில்  எழுதி தள்ளுகிறீர்களே.

 

Edited by trinco

இந்த அம்மாவின் கைது, தற்போது விடுதலை மூலம் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு கூறிய செய்தி காணாமற் போன உங்கள் உறவுகளை மறந்து விடுங்கள். அவர்களுக்காக போராடுகிறோம் என்று எங்களை தொந்தரவு செய்தால் இந்த அம்மாவிற்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் என்பதே. எனவே இனிமேல் அரசாங்கத்தின் அடக்குமுறைக்குக்கு எதிராக குரல் கொடுப்பதை விட்டு அவர்களின் சிறிய சலுகைகளை பாராட்டி நன்றி சொல்லுவோம்.

உங்களை ஒரு அரக்கன் பிடித்து கொண்டு போய் இரண்டு வருடம் சித்திரவதையின் பின்னர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக விடுதலை செய்கிறான் என்று வைத்து கொள்வோம். அப்போது உங்கள் அம்மா, மனைவியும் மிக்க மகிழ்ச்சியில் அந்த அரக்கனுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் என்று தான் சொல்லுவார். அதை தான் இங்கு பல கள உறவுகள் சுட்டிக்காட்டினார்கள். நீங்கள் பாட்டிற்கு கற்பனையில் அந்த அம்மாவின் விடுதலையில் யாழ்கள உறவுகளுகு விருப்பம் இல்லை என்பது போலும் உங்களுக்கு மட்டும் தான் சமூக அக்கறை இருப்பது போலவும் காட்டி விசைபலகையால் உங்கள் கற்பனைக்கு நீங்களே பதில்  எழுதி தள்ளுகிறீர்களே.

 

எங்களுக்கு எல்லாம் அவர்கள் அரக்கர்கள் என்று தெரியாது அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் போல .

 

கைது செய்தது பிழை என்று நிறுவுவது முக்கியமா ? அல்லது முதலில் அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது முக்கியமா ?

முதலில் அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்றுதான் மனிதர்கள் நினைப்பார்கள் .அதற்காகத்தான் எத்தனையோ மனித உரிமை ஆர்வலர்கள் பாடுபட்டார்கள் (சிங்களவர்கள் உட்பட )

இந்த கைதை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் உங்களை போன்றவர்களுக்கு அவர்களின் விடுதலையை விட அரக்கர்களின் முகத்திரை கிழிப்பதுதான் முக்கியம் அதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் பரவாயில்லை .

 

எமது விடுதலை போராட்டத்திலும் சிங்கள அரசிசின் முகத்திரை கிழிக்கவேண்டும் என்பதற்காகவே எத்தனை உயிர்களை பலி கொடுத்தீர்கள் .உங்கள் அரசியலுக்கு மற்றவன் உயிரும் கைதும் தேவைபடுகின்றது.நல்லா இருங்கோ . 

அந்த கருத்தாடல்கள் முழுவதும் வாசித்து பார்த்தேன். அவரது விடுதலையை எல்லா கள உறவுகளுமே மகிழ்ச்சியுடன் வரவேற்று தான் கருத்து எழுதியுள்ளார்கள் ஒருவர் கூட அந்த அம்மாவின் விடுதலைக்கு எதிராக எழுதவில்லை. அப்படி இருக்க உங்களுக்கும் மட்டும் உங்களது சக கள உறவுகள் எழுதியது புரியாமல் இருக்கிறது. கள உறவுகள் அப்படி அந்த அம்மாவின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், என்று படு பொய் கூறி வழமையான உங்கள் பாணி அரசியலை செய்கிறீர்கள். யாழ்கள உறவுகள் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாக பொய் கூறி அரசியல் செய் வது அர்ஜீன் தான். (பாவம் அந்த மகாபாரத காவிய நாயகன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.