Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

61 வயது தாத்தாவுடன் குடும்பம் நடத்தும் 22 வயது கோப்பாய் யுவதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 வயதான யாழ்ப்பாண யுவதியொருவர் 61வயது தாத்தாவில் காதல் வசப்பட்டு, அவருடன் குடியும் குடித்தனமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாயை சேர்ந்த யுவதியும், பளையை சேர்ந்த தாத்தாவும் குடும்பம் நடத்திய பின்னர், கர்ப்பிணியான யுவதி, தமக்கு தெரிந்த குடும்பம் ஒன்றின் வீட்டில் சென்று குழந்தை பிரசவித்தபோது, ஆடிய அதிர்ச்சி நாடகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோப்பாயை சேர்ந்த இந்த யுவதியின் வீட்டிலிருந்த எண்ணெய் செக்கில் பணிபுரிந்து வந்தவர்தான் இந்த தாத்தா. காதலுக்கு கண்ணில்லையே. தெய்வீககாதலின் முன்பாக வயதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைத்த இருவரும் காதல் வசப்பட்டுவிட்டனர். தாத்தா ஏற்கனவே பேரப்பிள்ளையெல்லாம் கண்டவராம்.

தாத்தாவுடன் ஏற்பட்ட தெய்வீககாதலால் யுவதியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தாத்தாவின் வாரிசொன்றை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். இனியும் பொறுத்தால் வீட்டில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என நினைத்தவர், அனைவரும் அசரும் விதமான திட்டமொன்று தீட்டினார். திடீரென காரணமில்லாமல் தாயாருடன் சண்டைபிடித்துள்ளார். சண்டை முற்றியதும், கோபத்தில் வீட்டைவிட்டு செல்வதைப்போல வெளியேறிவிட்டார். வவுனியா திருநாவற்குளத்தில் உள்ள தெரிந்தவர்கள் வீட்டிற்கு சென்று இறங்கியுள்ளார். செல்லும்போது தன்னை முற்றிலும் மாற்றி, கழுத்தில் மஞ்சள்கயிறு, நெற்றியில் குங்குமம் என சென்றுள்ளார். யுவதியில் நல்ல அன்பான அந்த குடும்பத்துடன் சில நாட்கள் தங்கப் போவதாக கூறியுள்ளார். தான் திருமணம் செய்துவிட்டதாகவும், கணவன் கட்டாரில் உள்ளதாகவும்,விரைவில் பிரசவம் நடக்கவுள்ளதாகவும், ஆனால் உதவிக்கு ஆள் இல்லையென்றும் கூறி வருந்திருக்கிறார்.

அந்த அப்பாவி உறவுக்காரர்களும், நாங்கள் இருக்கும்போது எதற்காக யோசிக்கிறாய்? இங்கிருந்து பிரசவத்தை முடித்துவிடு என அங்கேயே மறித்துவிட்டனர். குழந்தை பிரசவிக்க என்னதான் தலைமறைவானாலும், காதலனை சந்திக்காமலிருக்க முடியாதல்லாவா. 61 வயது காதலனை தொலைபேசியில் அங்கும் அழைத்துள்ளார். தனது கணவனின் தந்தையென அங்கு அறிமுகப்படுத்தினார். தாத்தாவும் மாமா என்ற போர்வையில் அங்கு அடிக்கடி சென்று காதல்மழை பொழிந்துள்ளார். யுவதி குழந்யொன்றை பிரசவித்த பின்னரும், தற்போதும் அங்கேயே தங்கியுள்ளார். தாத்தாவும் அங்கு அடிக்கடி சென்று தங்கி வருகிறாராம். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த யுவதியின் உறவினர்கள், அந்த பகுதி சமூகசேவை உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளனர்.

http://www.tamilspy.com/archives/50249

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் பொண்ணு வெளிநாட்டு மாப்பிளையோட போய்ட்டாளே என்று தூக்கில் தொங்கிறான்.. :o ஆனால் தாத்தா உள்ளூரிலேயே ஜமாய்க்கிறார்.. :icon_idea:

"சுறுசுறுப்பாக" இருந்ததாலை அவரை யாராலயும் அசைக்க முடியேல்ல.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் சமூகம் இன்னும் திருந்தல்ல. உலகத்தில்.. வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் தாம் விரும்பிய படி வாழ வழி இருக்குது.

வயசு..  வசதி.. தொழில்.. படிப்பு.. சம்பளம்.. விசா.. பார்த்து வந்தால்.. அது கண்றாவி காதல் கிடையாது. காசுக்கு உடலை விற்கும் விபச்சாரம் ஆகும்.

சட்டப்படி திருமணமாகும் வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் விருப்புக்கு வாழ்வதை கேள்வி கேட்க இந்த உலகில் மற்றைய மனிதர்களுக்கு இடமில்லை. இந்தப் பக்குவத்தை எம்மவர்கள் அடைய வேண்டும்.

ஒரு 12 சிறுமியை 84 வயது தாத்தாக்கு கல்யாணம் முடிச்சுக் கொடுக்கும்.. சவுதியில்.. போய் நின்று இந்த சவுண்டை விடட்டும் பார்ப்பம். கல்லால எறிஞ்சே கொன்றிடுவாங்கள். அப்படி அவங்கள் செய்வதால் தான் உலகத்தையே அல்லாவின் பெயரால்.. ஆக்கிரமிச்சு வாழ முடியுது.

எம்மவர்களுக்கு பொறாமை. அதில தாங்களும் அழிஞ்சு மற்றவனையும் குறை சொல்லி அழிக்கிறதே தான் தெரிந்த.. ஒரே வழி.

61 வயது நபருக்கு வாழ்க்கை வாய்ச்சிருக்கு வாழுறார். அதுபோல் 22 யுவதிக்கு வாழ்க்கை வாய்ச்சிருக்கு வாழிறா. இதில ஊராருக்கு என்ன பிரச்சனை..??! பொறாமை..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
இங்கு யேர்மனியில் ஒரு திடகாத்திரமான தாத்தா தன்வயதைத் தெரிவித்ததும். ஓ.... அத்தனை இளமையானவரா நீங்கள் என்று தாத்தாவையும் மகிழ்விப்பார்கள். ஒரு தாத்தா இளம் பெண்ணுடன் சேர்ந்திருப்பதையும், ஒரு கிழவி குமரனுடன் சேர்ந்திருப்பதையும், இயல்பாகக் கருதுகிறார்கள். இதுபற்றிச் அவர்கள் சமுதாயம் பெரிதாக அலட்டிக்கொள்வதும் இல்லை. இது என்ன பண்பாடு என்று எங்களுக்கு எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஆனால் இந்த எரிச்சல் தரும் பண்பாட்டைக் கொண்டவர்களிடம்தான் நாங்கள் அடைக்கலம் தேடி வந்துள்ளோம். அவர்கள் எங்களிடம் வந்ததில்லை. எங்கள் வளர்ச்சிக்குத் தடையாக எங்கள் பண்பாடும் ஒரு காரணமாகிச் செயல்படுகிறதா... ??  :(  :o    
 
  • கருத்துக்கள உறவுகள்

இதே ஜேர்மனியில் இருந்து வந்த ஒரு தமிழ் குடும்பத்தில்.. கணவர் 1960 களிலும் மனைவி 1980 களும் பிறந்து திருமணம் செய்து பிள்ளை குட்டியும் இருக்குது. கணவரின் ஜேர்மன் பாஸ்போட்.. மற்றவர்களுக்கும் அதனை எடுத்துக் கொடுக்கச் செய்துள்ளது. இப்போ பிரித்தானியாவில் தஞ்சம்.

எம்மவர்கள் வெளிப்படைக்கு எரிச்சலைக் கொட்டினாலும்.. சுயநலனுக்கு.. நசுக்கிடாமல் எல்லாம் செய்வார்கள். வெள்ளைகள் அதனை வெளிப்படையாக எரிச்சலைடையாமல் செய்கிறார்கள் (அங்கும் ஒன்றிரண்டு பொறாமை பிடிச்சதுகள் உண்டு விளம்பரம் தேட). மனித இயல்புகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைந்திருக்கிறார்கள். அது நம்மிடம் இன்னும் முழுமையாக வளரவில்லை. அதுதான் பிரச்சனை. அடுத்தவனின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடும் எம்மவர்களின் பொறாமை தான்.. அவர்களைச் சீரழிப்பது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

27831DD100000578-3036560-This_happened_M

Madonna (56) French Kissed Drake (28) onstage at Coachella on Sunday night after singing her hit Human Nature

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யேர்மனியில் ஒரு திடகாத்திரமான தாத்தா தன்வயதைத் தெரிவித்ததும். ஓ.... அத்தனை இளமையானவரா நீங்கள் என்று தாத்தாவையும் மகிழ்விப்பார்கள். ஒரு தாத்தா இளம் பெண்ணுடன் சேர்ந்திருப்பதையும், ஒரு கிழவி குமரனுடன் சேர்ந்திருப்பதையும், இயல்பாகக் கருதுகிறார்கள். இதுபற்றிச் அவர்கள் சமுதாயம் பெரிதாக அலட்டிக்கொள்வதும் இல்லை. இது என்ன பண்பாடு என்று எங்களுக்கு எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஆனால் இந்த எரிச்சல் தரும் பண்பாட்டைக் கொண்டவர்களிடம்தான் நாங்கள் அடைக்கலம் தேடி வந்துள்ளோம். அவர்கள் எங்களிடம் வந்ததில்லை. எங்கள் வளர்ச்சிக்குத் தடையாக எங்கள் பண்பாடும் ஒரு காரணமாகிச் செயல்படுகிறதா... ??  :(  :o    

ஒரு நாள் முதல் பிறந்தவரையே மதிப்பளிக்கும் பழக்கமுள்ள எம்மிடம் 

தாத்தா வயதிலிலுள்ளவரை அங்கு தான் வைக்கமுடியும்...

எல்லோரிடமும் நன்மையுமுண்டு

தீயவையுமுண்டு

நல்லவற்றை பொறுக்கலாமே..... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

61 வயதை ஒரு பெரிய வயதெண்டு எல்லாரும்  தூக்கிப்பிடிக்கினம். mad0251.gif

இதுக்கை தாத்தா எண்டு பட்டம் வேறை..sign0186.gif

அப்ப 90 வயதுக்காரனை என்னெண்டு சொல்லுவியள்? confused0006.gif

  • கருத்துக்கள உறவுகள்

மித்திரன் செய்திகள் யாழின் அடிப்படை பிரச்னைகளை மறைமுகமாய் மறைக்க பார்க்குது .

சுன்னாகம் நீரின் நச்சுத்தன்மையும் அதை வெளிக்கொணர முற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யபட்டது பற்றி இருட்டடிப்பு இவ்வாறான செய்திகள் தாரளமாக .....

  • கருத்துக்கள உறவுகள்

61 வயதை ஒரு பெரிய வயதெண்டு எல்லாரும்  தூக்கிப்பிடிக்கினம். mad0251.gif

இதுக்கை தாத்தா எண்டு பட்டம் வேறை..sign0186.gif

அப்ப 90 வயதுக்காரனை என்னெண்டு சொல்லுவியள்? confused0006.gif

தியாகி என்று சொல்லுவோம்....   :rolleyes:  :rolleyes:

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி தனது 90வது வயதில் 60 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். கோழிக்கோடு அருகேயுள்ள வெஸ்டுகில் பகுதியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை(90). சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த 1942ம் ஆண்டு கோழிக்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு திருமணமாகி 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
 
கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது மனைவி மரணமடைந்தார். மனைவி இறந்த பின் பல வருடங்களாக தனியாக வசித்து வந்த இவருக்கு 2வது திருமணம் செய்து வைக்க நண்பர்களும் உறவினர்களும் முயன்றனர். ஆனால் அவர் மறுத்து வந்தார். தற்போது 90வது வயதில் நாராயண பிள்ளைக்கு 2வது திருமணம் செய்ய ஆசை ஏற்பட்டது. தனது விருப்பத்தை அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். முதலில் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பின்னர் அவருக்கு திருமணம் முடிக்க திட்டமிட்டு பல்வேறு இடங்களில் பெண் தேடினர்.
 
இதற்கிடையில் வயநாட்டில் திருமணம் ஆகாத 60 வயது மூதாட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாராயணபிள்ளை தனது நண்பர்களுடன் ராதாவை பெண் பார்க்க வயநாட்டிற்கு சென்றார். ராதாவும் விருப்பம் தெரிவித்தார். அந்த திருமணத்திற்கு நாராயண பிள்ளையின் மகன்கள், மகள்கள் உள்பட அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் வெஸ்டுகில்லில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது. 
 
இதுகுறித்து நாராயணபிள்ளை கூறுகையில், ‘எனது முதல் மனைவி இறந்த பின்னர் 2வது திருமணம் செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. தற்போது எனக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. எனக்கு மனைவி இல்லாவிட்டால் எனது மரணத்திற்கு பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு விடும். எனவே அந்த ஓய்வூதியம் யாரும் இல்லாத ஒருவருக்கு கிடைக்கட்டும் என்று கருதி தான் 2வது திருமணத்திற்கு சம்மதித்தேன்‘ என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

பாண்டிச்சேரியில், பிரஞ்சு குடியுரிமை, பென்சன் தொடர்ந்து பெறுவதற்காக இந்த வயதானவர்களை கட்டுவது நடந்தது.:D

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வயதானால் என்ன காதல் என்று வந்துவிட்டால் ஒளித்துத் திரிவதும் , ஓடித் திரிவதும்  எழுதப்படாத விதிபோல ....!

இங்கு யேர்மனியில் ஒரு திடகாத்திரமான தாத்தா தன்வயதைத் தெரிவித்ததும். ஓ.... அத்தனை இளமையானவரா நீங்கள் என்று தாத்தாவையும் மகிழ்விப்பார்கள். ஒரு தாத்தா இளம் பெண்ணுடன் சேர்ந்திருப்பதையும், ஒரு கிழவி குமரனுடன் சேர்ந்திருப்பதையும், இயல்பாகக் கருதுகிறார்கள். இதுபற்றிச் அவர்கள் சமுதாயம் பெரிதாக அலட்டிக்கொள்வதும் இல்லை. இது என்ன பண்பாடு என்று எங்களுக்கு எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஆனால் இந்த எரிச்சல் தரும் பண்பாட்டைக் கொண்டவர்களிடம்தான் நாங்கள் அடைக்கலம் தேடி வந்துள்ளோம். அவர்கள் எங்களிடம் வந்ததில்லை. எங்கள் வளர்ச்சிக்குத் தடையாக எங்கள் பண்பாடும் ஒரு காரணமாகிச் செயல்படுகிறதா... ??  :(  :o    

அடைக்கலம் கோருவதற்கும் அடையாளங்களைக் காப்பதற்கும் என்ன தொடர்பு? அடைக்கலம் கோரினால் எல்லாவற்றையுமே இழந்துவிட வேண்டுமா.. அதற்கு அடைக்கலம் தேவையா?!

எங்கள் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக பண்பாடோ கலாச்சாரமோ காரணமில்லை... திறமைகளை காசாக்க முயல்வதுதான் வளர்ச்சிக்கு முக்கிய தடை!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் பொண்ணு வெளிநாட்டு மாப்பிளையோட போய்ட்டாளே என்று தூக்கில் தொங்கிறான்.. :o ஆனால் தாத்தா உள்ளூரிலேயே ஜமாய்க்கிறார்.. :icon_idea:

"சுறுசுறுப்பாக" இருந்ததாலை அவரை யாராலயும் அசைக்க முடியேல்ல.. :huh::D

உழுகிற மாடு உள் ஊரிலும் உழும்.
 
உளவு தெரியாத மாடுகள்தான் அங்கும் இங்கும் அலைகளிவது. 
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் அங்க நடக்கப் போகுது.

பொடியள் குறைவு. கணபேர் சண்டையில போட்டினம். பலபேர், கோத்தா, டக்கி அம்மான் புண்ணியத்தால நாட்டை விட்டே போட்டினம்.

இப்பத்தைய இளசுகள், தண்ணி, தூள், மோட்டார் சைச்கிள், தமது வயது பெட்டையள் எண்டு திரிய, முதிர் கன்னிகள், விதவைகள் நிலைமை ....

tip of the iceberg....

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

21 வயசில கொழுப்பெடுத்து கலவியில் ஈடுபடுவதற்கு என்ன செய்யலாம். இப்பத்தைய இளசுகள் என்றில்லை எப்பவுமே இளசுகள் தமது வயது பெட்டையள் என்டுதான் திரிவான். சிலதுகள் ட்ரயல் பார்க்க மட்டும் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

61 வயதை ஒரு பெரிய வயதெண்டு எல்லாரும்  தூக்கிப்பிடிக்கினம். mad0251.gif

இதுக்கை தாத்தா எண்டு பட்டம் வேறை..sign0186.gif

அப்ப 90 வயதுக்காரனை என்னெண்டு சொல்லுவியள்? confused0006.gif

கொள்ளுத் தாத்தா!

இல்லாட்டி லொள்ளுத் தாத்தா!

  • கருத்துக்கள உறவுகள்

....

சட்டப்படி திருமணமாகும் வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் விருப்புக்கு வாழ்வதை கேள்வி கேட்க இந்த உலகில் மற்றைய மனிதர்களுக்கு இடமில்லை. இந்தப் பக்குவத்தை எம்மவர்கள் அடைய வேண்டும்.

...

இவ்வளவு விவரமான காதலர்கள், சமூகத்தில் வெளிப்படையாக, தைரியமாக சட்டப்படி திருமணம் செய்துகொண்டு வாழலாம்.. :)

வாழ்த்துக்கள், தாத்தா தம்பதிகளுக்கு..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

------

கோப்பாயை சேர்ந்த இந்த யுவதியின் வீட்டிலிருந்த எண்ணெய் செக்கில் பணிபுரிந்து வந்தவர்தான் இந்த தாத்தா. காதலுக்கு கண்ணில்லையே. தெய்வீககாதலின் முன்பாக வயதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைத்த இருவரும் காதல் வசப்பட்டுவிட்டனர். தாத்தா ஏற்கனவே பேரப்பிள்ளையெல்லாம் கண்டவராம்.

------

இந்த தாத்தா.... அந்த 21 வயது யுவதியின் வீட்டில், எண்ணெய் செக்கில்.... பணி புரிந்து வந்துள்ளார்.

இன்னும்... சில நாளில், அவர் மண்டையை போட்டால்,

பிறக்கப் போகும் குழந்தையின்... பொருளாதார வசதியைப் பற்றி அந்த இருவரும் சிந்தித்துப் பார்த்தார்களா?

நாசமாய் போனவர்களின் காதல், அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை பாதித்து விட்டது. :o

21 வயதிலும் மண்டையைப் போடலாம். இப்படியான எண்ணம் மனிதருக்கு இருந்தால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று அஞ்சி எவருமே குழந்தை பெற்றுக்கொள்ள முன்வரமாட்டார்கள். தாத்தாவின் அல்லது அந்தப் பெண்ணின் வயது வேறுபாடு அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. நான் ராமன்வழி வாழ்கிறேன் அது என்விருப்பம். அவன் கண்ணன் வழி வாழ்கிறான் அது அவன் விருப்பம். இரண்டு கடவுள்களையும் பூப்போட்டு வணங்கத்தான் செய்கிறார்கள். சொந்த வாழ்க்கையையும் அதுபோல் ஏற்றுக்கொள்ள முன்வரலாமே.  :)
  • கருத்துக்கள உறவுகள்

தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

21 வயதில்... மண்டையை போடுபவர்கள் ஒரு சிலர் தான்..... :D 

61 வயதில் மண்டையை போடுபவர்கள் அநேகம் பேர் என்பதால் தான்.... :icon_idea: 

45 வயதிற்குப் பிறகு, குழந்தை பெற்றுக் கொள்வதை பல தம்பதிகள், குழந்தையின் எதிர்காலம் கருதி விரும்புவதில்லை.  :)

  • 4 weeks later...

இதற்காகத்தான் மிகவும் குறைந்த விலையில் மதுவும் போதைமருந்தும் வடக்கு கிழக்கில் விற்பனை செய்கின்றார்கள் போல? எதையும் செய்யுங்கள் மீண்டும் ஒரு ஈழமோ.. நாடோ...சுதந்திர தாகமோ.... வேண்டாம் அனுபவித்துகொண்டு போய் கொண்டே இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டை நாய்களாக கலாச்சாரக் காவலர்கள் அலையும்  எங்கள் கலாச்சாரத்தில் இத்தகைய  விடயங்களை விவாதிக்கவோ  சமூக விஞான ரீதியாகப் புரிந்துகொள்ளவோ சுதந்திரம் அதிகம் இல்லை. இளமையில்  உடலில் நிறைந்திருந்த காமம். வயசாக  தலைகுள் நிறைகிறது என்று அமிர்தா பச்சன் ஒருமுறை சொன்னார். பிஞ்சுக் குழந்தை காமத்தை குறியில் உணர்கிறதாக வைதிய நிபுணர்கள் சொல்லுகிறார்கள்.  ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில்  ஜனநாயகமே கற்ப்பு. ஜனநாயகமே ஒழுக்கம், ஜனநாயகம் அமைந்தவை மட்டுமே காதல்.

குழந்தை பருவத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது  சமவயதை தாண்டியவர்கள் காமநோக்கில் தீண்டுவது பாதகமும் குற்றமும் ஆகும்.  வளர்ந்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகளை அல்லது உள்ளுறவுகளின் பிள்ளைகளைக் காம நோக்கில் தீண்டுவது பாதகமும் குற்றச் செயலுமாகும். 

வயசைப் பொறுத்து 18 வயசுக்கு குறைந்த ஒரு பெண்ணை அவளைவிட அதிகம் வயதுள்ளவர்கள் காம நோக்கத்தோடு தீண்டுவயது மட்டுமே சட்டப்படி குற்றம். அதன்பின்னர் நெருங்கிய குடும்ப இரத்த உறவுகளைத் தவிர்த்த்து  ஜனநாயக ரீதியாக உடல் ஆரோக்கியமும் இயலுமையும் உள்ள இருபாலாருக்கும்  வயசு விதியாசமில்லாமல் கலவிச் சுதந்திரம் இருக்கு.

அதன்பிறகு அவர்களது வயசல்ல இருசாராரும் ஜனநாயகம் ரீதியாக கலவிக்கான முடிவெடுத்தார்களா  இல்லையா என்பது மட்டுமே கேழ்வி.

காதல் நிலவின் அது மகத்துவந்தான்.

சூழலின் இக்காட்டுக்களை பயன்படுத்தாமை பால்வினை மற்றும் தொற்று நோய்களை மறைக்காமை. பின்விழைவுகழுக்கு பொறுப்பெடுக்கும் பண்பு என்பவை அறம்,. 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத்தனமா வார்த்தையை விட்டுட்டீங்களே வ.செ.ஜெ,

வரிசையில் வந்து சாமியாடப் போறோம், தயாராய் இருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.