Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே எழுதியது போல தமிழர்கள் தம்மை தாமே ஆழும் ஆற்றல் குறைந்தவர்கள் என்பதற்கு உங்கள் இந்த வாதமும் ஒரு உதாரணம்.

 

தமிழர்கள் தாங்களே தங்களை.. ஆளும் ஆற்றலுக்கு.. சிங்களம் தடை போடுகிறது என்பது தான் நிதர்சனம். அதைச் சொல்ல நீங்கள் தயங்குவது புதிதல்ல. ஆச்சரியமும் இல்லை.  :icon_idea: 

Edited by nedukkalapoovan

  • Replies 169
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற இந்த கண்டன அஞ்சலிக்கூட்டத்தில் 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

தமிழ்ப்பெண்கள் அமைப்பு - FRANCE

தமிழர் பேரவை

நாடுகடந்த அரசு

தமிழர் வர்த்தகசபை

மற்றும்

ஒன்றியங்கள்

பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் 

கலைஞர்கள்

திரைப்படத்துறையினர் உட்பட

பிரான்சிலுள்ள  ஏனைய சங்கங்கள்

அமைப்புக்கள்

பொதுமக்கள் என பலரும் கலந்து

அஞ்சலியைச்செலுத்தியதோடு தமது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்

 

மேலும்

குற்றவாளிகளுக்கு  கடும் தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு கோரியும்

இனிமேல் இவ்வாறு நடக்காது தடுக்க ஆக்கபூர்வான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும்

வந்திருந்த மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது

இதுவரை 250 க்கும்  மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன..

அவை வடபகுதி மாகாணசபை முதலமைச்சர் அவர்கட்கு அனுப்பி வைக்கப்படும்.

 

 

Edited by விசுகு

மேலும் 

குற்றவாளிகளுக்கஎ கடும் தண்டனையை பெற்றுக்கொடுக்கமாறு கோரியும்

இனிமேல் இவ்வாறு நடக்காது தடுக்க ஆக்கபூர்வான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் 

வந்திருந்த மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது

இதுவரை 250 க்கும்  மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன..

அவை வடபகுதி மாகாணசபை முதலமைச்சர் அவர்கட்கு அனுப்பி வைக்கப்படும்.

 

நல்ல விடயம் விசுகு
 
இவ்வாறான நடவடிக்கைகளைத்தான் புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்தும் தாயகத்திலுள்ள பாடசாலைகள், பல்கலைக் கழகங்களிடமிருந்தும் பரவலாக நடைபெற வேண்டுமென எதிர்பார்த்தேன்.  
 
நன்றி
  • கருத்துக்கள உறவுகள்

‪#‎அவன்‬ ‪#‎இருந்தால்‬; ‪#‎எவன்‬ ‪#‎எம்மீது‬ ‪#‎கைவைப்பான்‬ பாலியல் வல்லுறவுக்கு முன்னும் பின்னும் எந்த நாய்களுக்கும் அன்னையின் முகமும் தெரிவதில்லை.. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் நாய்களே.. ஓ.. நாய்களே.. கடித்துக் குதறுங்கள் - உங்கள் காம இச்சை தீரும் வரை நீங்கள் என்ன செய்தாலும் ஏது செய்தாலும் தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்குண்டு இத் தரணியில்? நடந்த கதையைச் சொல்லி முன்று மணித்தியாலமாய் முக்கைச் சிந்த அப்பாவித் தமிழனிடம் தொலைக்காட்சியா இருக்கிறது? நாங்கள் செத்தாலும் பிழைத்தாலும் என்ன நடந்ததென்று எடுத்துச் சொல்ல பீபீசீயா வந்து பேட்டி காணப் போகிறது..? ஒவ்வொரு ஓநாய்க்கும் வாதிட யாரோ ஒரு வக்கீல் நாய் பணத்திற்காக வருகிறதுதானே.. இந்த நாய்களுக்கு எந்த நாய் வரப்போகுதோ..? ‪#‎அவன்‬ ‪#‎இருந்தால்‬; ‪#‎எவன்‬ ‪#‎எம்மீது‬ ‪#‎கைவைப்பான்‬ thanks-facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நடைபெற்ற இந்த கண்டன அஞ்சலிக்கூட்டத்தில் 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

தமிழர் பேரவை

நாடுகடந்த அரசு

தமிழர் வர்த்தகசபை

மற்றும் ஏனைய சங்கங்கள்

ஒன்றியங்கள்

பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள்

கலைஞர்கள்

திரைப்படத்துறையினர் உட்பட

பிரான்சிலுள்ள அமைப்புக்கள்

பொதுமக்கள் என பலரும் கலந்து

அஞ்சலியைச்செலுத்தியதோடு தமது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்..

 

மேலும் 

குற்றவாளிகளுக்கஎ கடும் தண்டனையை பெற்றுக்கொடுக்கமாறு கோரியும்

இனிமேல் இவ்வாறு நடக்காது தடுக்க ஆக்கபூர்வான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் 

வந்திருந்த மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது

இதுவரை 250 க்கும்  மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன..

அவை வடபகுதி மாகாணசபை முதலமைச்சர் அவர்கட்கு அனுப்பி வைக்கப்படும்.

 

நல்ல செயல் விசுகர். இப்படியான செயல்கள் மூலமும் புலம்பெயர் தமிழர்களின் பலத்தை காட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் பதட்டம் தொடர்வதாகவும்

முன்னையவிட கலவரங்கள் அதிகரித்திருப்பதாகவும்

கைது செய்யப்பட்டவர்களை தங்களிடம் தரும்படி 500க்கும் அதிகமான மக்கள்

காவல்த்துறையினருடன் கைகலப்பில் ஈடுபடுவதாகவும்

கைது செய்யப்பட்ட 5 பேர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளதாகவும்

அவர்களது குடும்பங்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும் தெரிகிறது

வெளியிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர்

ஊர் மக்களுடன் கலந்து இந்த கிளர்ச்சிக்கு துணைநிற்பதாகவும் தெரிகிறது..

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பல social engineers சாய்மானக் கதிரையில் இருந்தபடி விழிப்புக் குழு வேணும் பளிப்புக் குழு வேணும் எண்டு எழுதும் போதே சொன்னனான் - இது இப்படியான vigilantism திற்கு வழி கோலும் என.

குற்றவாளிகள் போலீஸ் பாதுகாப்பில் இருக்க, உணர்சியேற்றப் பட்ட மக்கள் - அவர்களின் குடும்பத்தை, வீட்டை தாக்கியுள்ளனர்.

இணியத்தில் வந்து வெட்டுடா கொத்துடா என்ற ***************** இந்த கலவரத்துக்க்கு பொறுப்பு.

இருந்து பாருங்கள் இது விரைவில் சாதிச்/ குறிச்சி சண்டையில் சென்று முடிக்கப்படும்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கொலைஞர்கள்.....

மக்களுடன் வாழத்தகுதியற்றவர்கள்...

 

image.jpg

ஆவேசத்திலுள்ள மக்களிடமிருந்து

கொலையாளிகளைக்காப்பாற்ற முடியாமல் திணறும் காவல்த்துறை...

 

image.jpg

 

image.jpg

 

அளவுக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்..

 

image.jpg

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் இருந்து சென்றவரும் புங்குடுதீவு வித்தியா கொலையில் தொடர்பு…! திடுக்கிடும் தகவல்….??

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். 17.05.2015 மாலையே இக்கைது இடம்பெற்றதாக புங்குடுதீவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் வேலணை பிரதேச சபையில் கடமையாற்றுபவர் எனவும் மற்றைய 4 பேரும் கொழும்பில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபையில் கடமையாற்றுபவரின் வீட்டிற்கு வந்து விட்டு இன்றைய தினம் மதியம் இவர்கள் கொழும்பு செல்லவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட கொலை சந்தேகநபர்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை தாக்கு முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து பொதுமக்களுக்கு அஞ்சி சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்துக்கு கடல்வழியாக கொண்டு சென்றுள்ளனர்.

இது தவிரஇ இன்றும் மாணவியின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிலையம் தாக்குதல்…

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட ஐவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ள நிலையில்

அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொலிஸாரை பின்தொடர்ந்தனர். வீதிகளை முற்றுகையிட்டு ரயர்களைப் போட்டுக் கொழுத்தி ஆர்ப்பரித்தனர்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பொலிஸார் சந்தேகநபர்களை ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்றனர். அதனைக் கேள்வியுற்ற பெதுமக்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு வீதிகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடல்வழியாக சந்தேகநபர்களை குறிகாட்டுவானுக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். அதனையும் கேள்வியுற்ற பொதுமக்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலின் போது பொலிஸார் இருவர் காயமடைந்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ம.சிவதேவன், துசாந்தன், சசிதரன், சந்திராஜ, நிசாந் உள்ளிட்டோர் வயது முறையே 31, 31, 26, 25, 23 ஐ உடையவர்களாவர். இந்த ஐந்து பெரும் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகிறது.

அத்துடன் இவர்களது கைதினை அடுத்து மற்றுமொரு சந்தேகநபரும் மக்களினால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டு பொதுமக்களினால் தாக்கப்பட்டார். இவர் சுவிசில் இருந்து சென்றவர் எனவும் தெரிய வருகிறது.

உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வேலணை பிரதேசசபை தலைவர் தவராசா ஆகியோர் தலையிட்டு மக்களிடையே சமரசத்தை ஏற்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மரணமடைந்த வித்தியா கொலை செய்யப்பட்ட இடத்தில் நின்று கொண்டு பிரேதத்தை மீட்க உதவியதாகவும் ,அவர்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவ்வாறு நடந்து கொண்டதாகவும் மக்கள் எமது செய்தியாளரிடம் குறிப்பிட்டனர்.

அத்துடன் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம் சந்தேகநபர்களின் விபரங்களை அடங்கிய கைத்தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய கையேடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

சந்தேகநபர்களின் விபரங்களை அடங்கிய கைத்தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கிய கையேடு குறித்த மேலதிக செய்திகளும், விரிவான விபரங்களும் விரைவில் வெளியாகும்…

புங்குடுதீவு வித்யாவின் கொலையில் ஒருவர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாக கூறியுள்ள காவல் துறை தரப்பு முழுமையான விபரத்தை நீதிமன்றின் அனுமதி இன்றி வெளியிட மறுத்து விட்டதாக கூறினாலும் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர் சுவிஸ் பிரஜை உள்ளார் என்பதை பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

http://www.vivasaayi.com/2015/05/swiss-tamil.html

எது சரி, எது பிழை?

புங்குடுதீவில் ஈனர்களால் வல்லுறவுக்குட்படுத்தி சிறுமியைக் கொன்ற ஈனர்கள் மீதும் அவர்களது உடமைகள் மீதும் பொதுமக்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.

 

ஈனர்களை தம்மிடம் ஒப்படைக்கும் படியும் தாமே தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் முயல்கின்றனர்.

அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன, சகோதரர்கள் தாக்கப்படுகின்றனர், அவர்களின் குடும்பங்கள் வாழ அஞ்சி ஒளிந்து கொள்கின்றனர்

 

விசாரணை, நீதிமன்றம், தீர்ப்பு, தண்டனை போன்றவனவற்றை எல்லாம் தாண்டி பொது மக்களின் கூட்டு மனநிலை ஈனர்களின் கொடூர சாவை வேண்டி அவாவி நிற்கின்றன..

 

இது சரியா பிழையா?

 

இப்படியான சிறுமிகள் மீதான குற்றம் கனடா, நோர்வே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்திருப்பின் சட்டமும், காவல்துறையும் நீதிமன்றமும் குற்றவாளிகளை சரியாக இனம் கண்டு உரிய தண்டனை வழங்கி கொள்ளும்

 

ஆனால் மாபெரும் இனப்படுகொலையையும், கூட்டு வன்புணர்வுகளையும் திட்டமிட்டு ஒரு அரசே நிகழ்தி எளிதாக தப்பிக் கொள்ளும்

ஒரு நாட்டில்

அவ் அரசின் நிர்வாக இயந்திரமான காவல்துறை, நீதிமன்றம் போன்றன இவ் ஈனர்களுக்கு எவ்விதமான தண்டனையை பெற்றுக் கொடுக்கும்?

 

ஒரு அரச அதிபரின் மகனே/மகன்களே பாலியல் வல்லுறவு புரிந்து தப்பித்தார்கள் என்ற குற்றம் சாட்டப்படும் அறமும் தர்மமும் அழிந்த நாட்டில் எவ் விதமான நீதி நாட்டப்படும்?

 

பணம் பாதாளம் வரைக்கும் மட்டுமல்ல, அரச அதிபர் மாளிகையையும் கடந்து அதிகாரம் செலுத்தும் நாட்டில் எப்படியான நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்?

 

நான் அந்த சனங்களின் உணர்வுகளை மதிக்கின்றேன்

 

அறம் பொய்த்த நாட்டில்
மக்களே அரசு
அவர்களே நீதி
அவர் தீர்ப்பே இறுதி தீர்ப்பு

 

அந்த ஈனர்களை சனங்களின் கைகளில் இவ் ஈனர்களை ஒப்படையுங்கள்
இவ் ஈனர்களுக்கு சனங்களே தீர்ப்பு எழுதட்டும்!

 

 

---------------

என் சொந்தப் பெயரில் இருக்கும் முகநூலில் எழுதியது

அந்த ஈனர்களை சனங்களின் கைகளில் ஒப்படையுங்கள்
இவ் ஈனர்களுக்கு சனங்களே தீர்ப்பு எழுதட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
இப்போது வரைக்கும் நான் பார்த்த,வாசித்த விடையங்களை வைத்துப் பார்க்கும் போது இவர்களுக்கு உரிய தீர்ப்பை மக்களிடமே விட்டுவிடுவது நன்று..காரணம் ...இவர்களுக்கு உரிய தீர்ப்பை காவல் துறையினரோ மற்றையவர்களோ தகுந்த முறையில் வளங்க மாட்டார்கள்..மக்கள் தகுந்த முறையில் தண்டனை வளக்கினால் மட்டுமே இப்படியான தவறுகள் எதிர் காலத்திலாவது நடக்காமல் எங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளலாம்..இவ்வாறன படுகொலைகள் புங்குடுதீவு பிள்ளைகளை குறி பார்த்தே அடிக்கடி நடப்பது அனேகரும் அறிந்து கொண்டு தான் இருப்பீர்கள்..
 
இத்தோடு பல இளம் பெண்பிள்ளைகளை புங்குடுதீவில் உள்ள மக்கள் இளந்துள்ளார்கள்.இந்த பிள்ளைக்கு நடந்துள்ள கொடுமைகளின் படங்களைப் பார்க்கும் போது உண்மையாக இவர்கள் சகோதரங்களுடன் பிறந்தார்களா இல்லை ஒழுங்கான பெற்றோருக்கு பிறந்தார்களா என்பதே சந்தேகமாகத் தான் இருக்கிறது..அது மட்டுமல்ல சுவிசிலிருந்து ஒருவர் போய் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அவரது படங்களையும் பல இடங்களில் பார்க்க கூடியதாக இருக்கிறது..வித்தியா என்னும் பெண் அந்த நபருக்கு  பிள்ளை போன்ற ஒரு ஸ்த்தானதில் இல்லை ஒரு சகோதரி போன்ற ஸ்தானத்தில் தான் வைத்து பார்க்க கூடியதாக இருந்திருக்கும்..தோற்றம் அவ்வாறு இருக்கிறது..ஆகவே இவர்கள் அனைவருக்கும் உரிய தீர்ப்பை மக்கள் கையில் விடுவதே நன்று..
 
சிலவேளைகளில் எனது கருத்துக்கள் சில கள விதி முறைகளை மீறியதாக கூட இருக்கலாம்..ஆனால் இப்படியான சம்பவங்களைப் பார்க்கும் போது கட்டுப்பாடுகளைக் கூட பின்பற்ற முடியாதுள்ளது..மன்னிக்கனும்..
 
 

தற்போது ஊர் ஓன்றியங்கள், பழைய மாணவ சங்கங்கள் எனும் பெயரில் சமூக விரோதிகளும், கடந்த காலங்களில் சிங்களத்துடன் இணைந்து சமூக விரோத செயல்களில் புலத்திலும், களத்திலும் செயற்பட்ட ஒட்டுக்குழு உறுப்பினர்கள் பலர் இணைந்து விட்டனர், இவர்களும் இப்படியான வித்தியாக்களை எதிர்காலத்திலும் பலி எடுக்கலாம்.

 

இனத்துரோகி சுவிஸில் இருந்து பல காட்டிக்கொடுப்புக்கள், சமூக விரோத செயல்கள் மேற்கொண்ட  சுவிஸ் ரஞ்சன் இன்று புங்குடுதீவு முக்கியஸ்தகராம்?

  • கருத்துக்கள உறவுகள்
செல்வி வித்தியாவின் ஆத்மா சாந்தயடைய இறைவனை வேண்டுவதோடு, அவரது இழப்பால் துயருற்றிருக்கும் களஉறவான அஞ்சரனோடும், ஏனைய உறவுகளோடும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
 
தண்டனை இனிமேல் இதுபோன்றதொரு செயலை எவரும் சிந்திக்காத வகையில் அமைய வேண்டும். இன்னொரு டெல்லி மாணவியின்படுகொலையா என்று எண்ணுமளவிற்கு எமது நாட்டை சீரழித்த கொடுமையாளர்களை மன்னிக்கக்கூடாது! 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நிழலி யாயினி போன்றோரின் நிலைப்பாடுதான் நானறிந்தவரையில் பலரிடம் இருக்கின்றது. 
தீர்ப்பை அவரவர் தங்கள் கையிலெடுப்பது தவறுதான்.
 
இருந்தாலும் நாட்டின் அரசியலும் பாதுகாப்பும் ஒரு ஒழுங்கான நிலையின்மையால் மக்களே தீர்ப்பை வழங்கட்டும்.

தண்டனை இனிமேல் இதுபோன்றதொரு செயலை எவரும் சிந்திக்காத வகையில் அமைய வேண்டும். இன்னொரு டெல்லி மாணவியின்படுகொலையா என்று எண்ணுமளவிற்கு எமது நாட்டை சீரழித்த கொடுமையாளர்களை மன்னிக்கக்கூடாது! 

 

  • கருத்துக்கள உறவுகள்

ருல் ஆப் லா என்பது ஆளுக்கு ஆள், குற்றத்துக்கு குற்றம் மாற முடியாதது.

இலங்கை ஒரு மோசமான நாடுதான். அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பிப் போய்விடுவார்கள்தான். ஒரு அரசே சேர்ந்து எம்மக்களை அழித்ததுதான்.

ஆனால் அதுக்காக ஒவ்வொரு வன்புணர்வுக்கும் மக்கள் கையில் சட்டத்தை எடுத்தால் அங்கே இப்போதிருப்பதை விட கொடுமையான காட்டாட்சி (anarchy) யே மிஞ்சும்.

குற்றவாளிகளின் உறவுகளை இடம்பெயர வைப்பதும், தாக்குவதும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

தவிரவும் குற்றம்சாட்டப் பட்டவரை நேற்று சந்தித்தார். முந்தநாள் வீதியில் போகும் போது குற்றவாளியை பார்த்து சிரித்தார் எனும் ரேஞ்சில் எல்லாம் "இளஞர்கள்" தமக்கு பிடிக்காதோரை எல்லாம் மின்கம்பத்தில் கட்டி வைத்து விளாசப் போகிறார்கள்.

இந்த கொடுமைக்கான எம் மறுவினை, மனித உரிமை அமைபுகளுடன் சேர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதிலேயே இருக்க வேண்டும்.

அதை விடுத்து குற்றவாளிகளுக்கு வக்கீல் யாரும் வாதாடக் கூடாது, விசாரணை இல்லாமல் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் சுத்த காட்டுமிராண்டித்தனம்.

சட்டப் படி எது அதிக பட்ச தண்டனையோ (ஆயுள்) அது போதுமானது.

பிள்ளையின் உறவுகள் உணர்சி வசப்படுவது புரிந்து கொள்ளகூடியது. சற்றே விலகி இருக்கும் நாம்தான் அறிவார்ந்த ரீதியில் சிந்திக்க வேண்டும்.

இல்லாவிடில் அந்த மிருகங்களை வேட்டையாடிய இன்னுமொரு வகை மிருகங்களாகவே நாம் இருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சிறிலங்காவில் பணமிருந்தால் எதையும் செய்யலாம்.எவரும் தப்பிக்கலாம். பணமிருந்தால் சட்டத்தையும் நீதிபதியையும் வாங்கலாம். இதுதான் இந்தியாவிலும்.
 
இவற்றை சீர்திருத்திவிட்டு வந்து பந்தி பந்தியாக எழுதி போதனை செய்யுங்கள். ஏற்றுக்கொள்கின்றோம்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உதாரணத்திற்கு ஜேர்மனியில் குற்றம் செய்த பல கோடீஸ்வரர்கள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.
 
சிறு பிள்ளைகளின் நிர்வாண படங்களை பார்த்தாலே அதியுச்ச தண்டனை வழங்கும் உலகில் வாழ்கின்றோம். மறந்து விடாதீர்கள்.

 அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சட்டங்கள் ஒழுங்காக இருக்கின்றன. அதனால் மக்கள் தீர்ப்புகளை கையிலெடுப்பத்தில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம், நீதி என்பன செத்துப்போன ஒரு தேசத்தில்... குற்றம் செய்தவர்கள் இவர்கள் தான் எனச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிந்த பிறகு... ஊர் மக்களிடம் விட்டு விடுவதே.. இப்படியான சம்பவங்கள் இனிமேலும் நடக்காமலிருக்க வழி வகுக்கும்!

 

ஊரவர்கள் இவர்களை ஒரு நாளும் அடித்துக் கொலை செய்து விடப் போவதில்லை!

 

ஆனால் இவ்வாறான செயல்கள் இனிமேலும் நடைபெறாதிருக்கும் வகையில்.. அவர்கள் இவர்களை நெறிப்படுத்துவார்கள்!

 

ஏனெனில் நான் அந்த ஊரில் நீண்ட காலம் வாழ்ந்தவன்!

 

இவர்களது கடந்த கால நடவடிக்கைகளைப் பார்க்கையில், பல குற்றங்களைச் செய்து காவல் துறையின் அனுசரணையுடன் 'தப்பியவர்கள்' போல உள்ளது! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பல social engineers சாய்மானக் கதிரையில் இருந்தபடி விழிப்புக் குழு வேணும் பளிப்புக் குழு வேணும் எண்டு எழுதும் போதே சொன்னனான் - இது இப்படியான vigilantism திற்கு வழி கோலும் என.

குற்றவாளிகள் போலீஸ் பாதுகாப்பில் இருக்க, உணர்சியேற்றப் பட்ட மக்கள் - அவர்களின் குடும்பத்தை, வீட்டை தாக்கியுள்ளனர்.

இணியத்தில் வந்து வெட்டுடா கொத்துடா என்ற ***************** இந்த கலவரத்துக்க்கு பொறுப்பு.

இருந்து பாருங்கள் இது விரைவில் சாதிச்/ குறிச்சி சண்டையில் சென்று முடிக்கப்படும்.

இல்லாத ஒன்றை தேடி எடுத்து பரப்புரை செய்வதில் கில்லாடி நீங்கள் உங்கள் ஆசையும் அதுதான் உங்களுக்கு வலி பிடிக்கும் மட்டும் உங்கள் ஈனத்தனமான கருத்துக்களை நாங்கள் சகித்து கொள்ளவேண்டியதுதான் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு

பல தசாப்தங்களாய் சிறுவரை, பிபிசி ஸ்டுடியோக்களில், ஆஸ்பத்திரி வாடுகளில், பல பொது இடங்களில் துஸ்பிரயோகம் செய்த

சேர் ஜிம்மி செவேல். 2011 இல் சாகும்வரை ஒரு கதாநாயகனாய் இருந்தான்

http://en.m.wikipedia.org/wiki/Jimmy_Savile

ஜென்னர் பிரபு - இன்னும் உயிரோடு இருக்கிறான். பல சிறுவரை துஸ்பிரயோகம் செய்ததற்க்கு போதியதற்கு மேலாகவே சாட்சிகள் இருந்தும் வயது, நோயை காரணம் காட்டி வழக்குத்தொடுக்க மறுக்கிறது சி பி எஸ்

http://en.m.wikipedia.org/wiki/Greville_Janner,_Baron_Janner_of_Braunstone

இது அண்மைய இங்கிலாந்து உதாரணங்கள். மேற்குலகு பூராவும் இப்படி பல சட்டம் தவறிய கதைகள் இருக்கிறன.

அதுக்காக சட்டத்தை கையில் எடுக்க முடியுமா?

இலங்கையின் சட்டத்துறை மேற்கோடு ஒப்பிடும் படி இல்லை. ஆனால் போதிய அளுத்தம், மனித உரிமை அமைப்புகளின் கரிசனம் இருந்தால் தக்க முடிவை பெற முடியும். இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=SmFsxJHsPyY

 

வித்யா கொலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு.... அடி பலமாக விழுந்துள்ளது போலுள்ளது.
குதிக்காலை நிலத்தில் வைக்க முடியாமல், கூனி நடக்கிறார்கள்.
இதனை இந்த விசரன்கள், முன்பே.... சிந்தித்து இருந்தால், எத்தனை அவலம் தடுக்கப் பட்டிருக்கும்.

 

1) பாடசாலை சென்ற அப்பாவி மாணவி கொலை.
2) அந்த மாணவியின், பெற்றோருக்கு.... அவர்களது வாழ்நாள் முழுக்க சோகம்.
3) கைது செய்யப் பட்ட எட்டுப் பேரின், குடும்பத்தவர்களது வீடுகள் எரிக்கப் பட்டு... நடுத்தெருவில்.
4) இவர்கள் செய்த குற்றத்துக்காக, அந்தக் குடும்பங்கள்... வெளியில் தலை காட்ட முடியாத நிலைமை.
5) சுவிசிலிருந்து.... சுற்றுலா சென்றவர், இனி... சுவிஸ் பக்கம் வந்தாலும், மிச்ச அடி வாங்க வேண்டிய கட்டம்.

 

என்று.... பலபக்க துக்கங்களும், அவமானங்களும்.
இதனைப் பார்த்த பின்பாவது, வித்தியாவின் கொலையே..... தமிழ் பிரதேசத்தில் நடந்த இறுதிக் கொலையாக இருக்க வேண்டும்.
அத்துடன்.... தொட்டதெல்லாத்துக்கும், வாழை தூக்கும்... சண்டியர்களுக்கும், இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! இது வெளி வந்த கதை. இன்னும் வெளி வராத காடை, கடைப்புளியளிண்ட கதை நிறைய இருக்கு. உதுகளை அழித்து விடலாம் எண்டு நினைக்கிறீர்களா? அதுகளை உருவாக்கி விட்டவர்களே ஒரு நாள் அழிப்பார்கள். அப்போது இவர்களுக்காக அழவோ, நீதி கோரவோ யாரும் முன்வர மாட்டார்கள். யாரால் தன் கதை முடியுது என்பதை இறுதி நேரத்தில் அவன் மட்டுமே அறிவான். கதை முடித்தவன் அப்பாவியாய் துக்கம்  விசாரிக்க வருவான். ஒருவேளை அவனால்  பாதிக்கப்  பட்டவர்கள்தான் செய்திருப்பார்கள் என்ற யூகத்துடன் முடியும். இது தெரியாமல் தங்களை கதாநாயர்களாக எண்ணிக்கொண்டு அலையுதுகள். உதுகளின்ர ஊத்தையை ஏத்தி கதைக்கவும் சிலதுகள் இருக்குதுகள். 

இதை செய்தவர்களும் தமிழர்கள் தானா ? 

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.

 
இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே  சட்டத்தரணி தமிழ்மாறனை பொலிஸாருடன் செல்ல அனுமதிப்போம் எனக்கூறி பொலிஸாரது வாகனத்தை இடைமறித்து புங்குடுதீவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
இதனால் பொலிஸாருக்கும்,மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
8888(11).jpg
 
88888888888888(1).jpg
 
8888888888888888888888888888888(1).jpg
 
888888888888888888888888888(1).jpg
 
8888888888888888888888888(1).jpg
 

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=239394040819239174#sthash.X8ydFzBd.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.