Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் போதைப்பொருள் வியாபாரிகளல்ல ; தெற்கு அதிகாரிகளுக்கு அடித்துக் கூறினார் வடக்கு முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். 
 
வடக்கில் போதைப் பொருள் பாவனையினால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. 
 
அதில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார். 
 
அதன்போது வடக்கு மாகாணத்தில் வருமானம் ஈட்டத்தக்க வகையில் பயங்கரவாதிகள் முன்னர் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தகைய நடவடிக்கைகளை இப்போது முன்னாள் புலிகள் மேற்கொள்கின்றனர். 
 
இதன் காரணமாகவே வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனை மறுத்து பேசிய போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
போருக்குப் பின்னரே வடபகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. 
 
இல்லாதவர்கள் மீது குற்றஞ்சுமத்துவதன்மூலம் அத்தகைய குற்றங்களைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் பின்நிற்கிறார்களா என்ற சந்தேகத்தையே உருவாக்கிறது. 
 
தற்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கட்டுப்பாடற்ற வகையில் கேரளக் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, போதைப்பொருள் பாவனையினாலேயே வடக்கில் பாலியல் வன்புணர்வுகள் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் , ஆசிரியர்கள்  , வடக்கு முதல்வர் மற்றும்  அதிகாரிகளும்  தெரிவித்திருந்தனர்.
 
இதனையடுத்து வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும்  வியாபாரத்தையும் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே இன்றைய கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=604624074308659379#sthash.wKrJJBuJ.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

இதனையடுத்து வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும்  வியாபாரத்தையும் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

அப்படியானால்  போதைப்பொருள் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள்தான் என்ற உண்மை வெளிவந்துள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருந்து ஒருவர் வந்து மீன் பிடிக்க இலங்கை கடற்படை அவர்களை பிடிப்பது அடிப்பது ,வலைகளை பறிப்பது ,சுட்டுக்கொல்வது என செய்கிறது. போதை பொருள் மட்டும் எப்படி இவர்களுக்கு தெரியாமல் எமது தேசத்துக்குள் வர முடியும்?

விக்கி ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. புலிகள் இலங்கைக்கு வெளியே சர்வதேச அளவில் தூள் வியாபாரம் செய்து கிடைத்த பணத்தில் ஆயுதம் வாங்கினார்களே தவிர தமிழ் ஈழத்தில் எந்த வித போதை பொருள் பாவனையும் இல்லாது செய்தார்கள். போதை பொருள் பாவனிக்கு அதிக பட்ச தண்டனை வழங்கினார்கள். :D

வடக்கில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.    வடக்கில் போதைப் பொருள் பாவனையினால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார்.    அதன்போது வடக்கு மாகாணத்தில் வருமானம் ஈட்டத்தக்க வகையில் பயங்கரவாதிகள் முன்னர் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தகைய நடவடிக்கைகளை இப்போது முன்னாள் புலிகள் மேற்கொள்கின்றனர்.    இதன் காரணமாகவே வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனை மறுத்து பேசிய முதலமைச்சர் போருக்குப் பின்னரே வடபகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை.    இல்லாதவர்கள் மீது குற்றஞ்சுமத்துவதன்மூலம் அத்தகைய குற்றங்களைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் பின்நிற்கிறார்களா என்ற சந்தேகத்தையே உருவாக்கிறது.

தற்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கட்டுப்பாடற்ற வகையில் கேரளக் கஞ்சா யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.    வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என்றும்; தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/40709/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எப்போதுமே போதைப்பொருள் சம்பந்தமான நடவடிக்கைகளில் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஈடுபட்டதில்லை. நான் இருக்கும் புலம்பெயர் நாட்டில் அப்படி நடக்கவில்லை என்பதை என்னால் ஆணித்தரமாக அடித்துக் கூறமுடியும். புலிகள் என்ற போர்வையில் மற்றவர்கள் தான் அந்த காலக்கட்டத்தில் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஆள் ஏற்றி இறக்கும் தொழிலிலும் ஈடுபட்டு பின்னர் புலிகளை சாட்டிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொண்டார்கள். இன்னும் பலர் அமுசடக்கமாக இருந்து புலிகளுக்கு ஆதரவு வழங்கியவாறே புலிகளால் தமக்கு ஆபத்து அதனால் தான் தாங்கள் நாட்டை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்தோம் என்று அரசாங்கத்துக்கு சொல்லி அசைலம் அடித்து இங்கே நிரந்தர பிரஜைகளானவர்களும் இங்கு இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் எம்மக்களையும் தாய் நாட்டையும் சூழ்ந்திருக்கும் ஆபத்து எப்பேற்பட்டது என்பதை எம்மில் பலர் உணர்ந்து செயற்படுவதாக தெரியவில்லை. நிகழ்ந்து முடிந்ததற்கு அவர் இவர் என்று காரணம் கற்பித்தபடி காலத்தை கடத்திக்கொண்டே இருக்கிறோம். ஆபத்திலிருந்து மக்களை காப்பதுதான் முதல் தேவை. வீதியில் விபத்து நடந்தபோது அதற்கு யார் காரணம் என்பது முக்கியமல்ல விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக காப்பதுதான் முக்கியம். பொது விடயங்களை திட்டமிடுவதும் அதை செவ்வனே செயற்படுத்துவதும் சும்மா வேலையல்ல அதை எல்லோராலும் செய்ய முடியாது. ஆனால் புறஞ் சொல்லிதிரிவதும் வெறும் வாயை மெல்வதும் பலபேருக்கு செய்ய முடியும். புலிகளின் வழிகாட்டலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்று தமிழினம் விரும்பியதும் அதற்காக போராடியதும் குற்றம் அல்ல. இந்த உலகில் மனித இனம் தனது சுதந்திரத்தை வென்றெடுக்க எப்படியும் போராடமுடியும். எதிரி எப்படி தமிழர்களையும் அவர்களது விடுதலை உணர்வுகளையும் ஓடுக்க நினைத்தானோ அதை அவன் வெற்றிகரமாகவே திட்டமிட்ட முறையில் சர்வதேச உதவியுடன் செய்திருக்கிறான். இந்த இக்கட்டான நிலையில் இருந்து எமது இனம் வெளிவர வேண்டுமாயின் இப்போது எங்கள் கடமை என்ன என்பதை மட்டுமே அனைவரும் சிந்தித்து அதற்காக செயற்படுவோம்.

புலிகள் எப்போதுமே போதைப்பொருள் சம்பந்தமான நடவடிக்கைகளில் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஈடுபட்டதில்லை. நான் இருக்கும் புலம்பெயர் நாட்டில் அப்படி நடக்கவில்லை என்பதை என்னால் ஆணித்தரமாக அடித்துக் கூறமுடியும். புலிகள் என்ற போர்வையில் மற்றவர்கள் தான் அந்த காலக்கட்டத்தில் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஆள் ஏற்றி இறக்கும் தொழிலிலும் ஈடுபட்டு பின்னர் புலிகளை சாட்டிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொண்டார்கள். இன்னும் பலர் அமுசடக்கமாக இருந்து புலிகளுக்கு ஆதரவு வழங்கியவாறே புலிகளால் தமக்கு ஆபத்து அதனால் தான் தாங்கள் நாட்டை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்தோம் என்று அரசாங்கத்துக்கு சொல்லி அசைலம் அடித்து இங்கே நிரந்தர பிரஜைகளானவர்களும் இங்கு இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் எம்மக்களையும் தாய் நாட்டையும் சூழ்ந்திருக்கும் ஆபத்து எப்பேற்பட்டது என்பதை எம்மில் பலர் உணர்ந்து செயற்படுவதாக தெரியவில்லை. நிகழ்ந்து முடிந்ததற்கு அவர் இவர் என்று காரணம் கற்பித்தபடி காலத்தை கடத்திக்கொண்டே இருக்கிறோம். ஆபத்திலிருந்து மக்களை காப்பதுதான் முதல் தேவை. வீதியில் விபத்து நடந்தபோது அதற்கு யார் காரணம் என்பது முக்கியமல்ல விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக காப்பதுதான் முக்கியம். பொது விடயங்களை திட்டமிடுவதும் அதை செவ்வனே செயற்படுத்துவதும் சும்மா வேலையல்ல அதை எல்லோராலும் செய்ய முடியாது. ஆனால் புறஞ் சொல்லிதிரிவதும் வெறும் வாயை மெல்வதும் பலபேருக்கு செய்ய முடியும். புலிகளின் வழிகாட்டலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்று தமிழினம் விரும்பியதும் அதற்காக போராடியதும் குற்றம் அல்ல. இந்த உலகில் மனித இனம் தனது சுதந்திரத்தை வென்றெடுக்க எப்படியும் போராடமுடியும். எதிரி எப்படி தமிழர்களையும் அவர்களது விடுதலை உணர்வுகளையும் ஓடுக்க நினைத்தானோ அதை அவன் வெற்றிகரமாகவே திட்டமிட்ட முறையில் சர்வதேச உதவியுடன் செய்திருக்கிறான். இந்த இக்கட்டான நிலையில் இருந்து எமது இனம் வெளிவர வேண்டுமாயின் இப்போது எங்கள் கடமை என்ன என்பதை மட்டுமே அனைவரும் சிந்தித்து அதற்காக செயற்படுவோம்.

நீங்க எங்கதான் இருக்குறீங்கள். சும்மா இருக்குமிடத்தை மறைத்து நல்லாயிருக்குமுடிந்தால் இருக்குமிடத்தை சொன்னால் நாங்கள் ஒட்டுண்ணிகள், ஒட்டு, ஒட்டாத குழுக்கள் ஏதாவது சொல்லலாம்.
 
 என்ன முடியாதா
 
டண்டணக்கா எழுதியது அவ்வளவும் உண்மை.
  • கருத்துக்கள உறவுகள்

புளொட் காரர் ஊரெல்லாம்.. போதைவஸ்து.. ஆட்கடத்தல் செய்திட்டு.. பழியை புலி மேல போட்டதும் அடங்கும்.. வணங்காமுடி. கனடாவுக்கு ஆட்கடத்தல் வேலை செய்த பல ஏஜென்டுகள்.. புளொட் காரர்கள். அவர்களில் பலர் போதைவஸ்துக் கடத்தல் முகவர்கள். மாலைதீவை பிடிக்க முனைந்ததும்.. இதனைப் பலப்படுத்தத்தான். ரோவிட்ட வாங்கின காசுக்கு.. கொழுப்பெடுத்துச் செய்தது அது. :)

 

புலிகள்.. போதைவஸ்துக்கடத்தலுக்காக.. சர்வதேச அளவில் தேடப்பட்டதாகத் தெரியவில்லை.

 

இங்கு சிலர் அப்படியும் காட்ட ஆசைப்படுகிறார்கள் போலும். அதுவும் மாற்றுக்கருத்து என்று கருதினமோ என்னமோ..?! :lol::D


இப்ப போதைவஸ்து எமது மண்ணை அடையும் மார்க்கத்தைப் பார்த்தால்.. ஹிந்தியாவும் சிங்களமும் இணைந்து எமது மக்களின் விடுதலை உணர்வைச் சீரழிக்க முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது. கேரளாவில் இருந்து கஞ்சா வருகுது. தமிழக மீனவன் மீன்பிடிப்பது மட்டும் தான் பிரச்சனையா இருக்குது. :icon_idea::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

"இல்லாதவர்கள் மீது குற்றஞ்சுமத்துவதன்மூலம் அத்தகைய குற்றங்களைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் பின்நிற்கிறார்களா என்ற சந்தேகத்தையே உருவாக்கிறது. "

சீவி தான் ஒரு வக்கீல் என்பதை சொல்லாமல் சொல்லுறார் :)

இதில் எங்கேயும் புலி தூள் கடத்தவில்லை எனச் சொல்லவில்லை. புலியை சாட்டி இப்போ நீங்கள் நடவடிக்கை எடாமல் இருக்க முடியாது என்பதே சீவி சொன்னது.

பிரபாவுக்கு/புலிக்கு பின்னான நாட்களில் நாம் வாழ்கிறோம் என்கிறார் முதல்வர்.

ஒண்டும் விளங்காம அதுக்கும் விசிலடிக்க ஒரு கூட்டம். :)

கடத்தியவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள் இதற்குள் ஓடிவந்தவர்கள் கதை கேட்டு காது புளிக்குது .

அனைத்து இயக்கங்களிலும்  அடிமட்ட போராளிகளுக்கு நடந்த பல விடயங்கள் தெரியாது தலைமை சொல்வதை நம்பி விசுவாசமாக செயற்பட்டார்கள் .

மேலிடத்தில் இருந்தவர்களுக்கு தான் தெரியும் தலைமைகளின் வண்டவாளங்கள் .அதுவும் டெல்கி மும்பையில் இருந்த எங்களுக்கு யாரும் இங்கு வந்து கதை விட முடியாது .

 

இது குடும்பப்பிரச்சனைபோல இருக்கு.இங்கே இப்படித்தான் எழுதுவார்கள்.பின்னேரம் பாட்டியிலே ஒன்றாக நின்று தண்னி அடிப்பார்கள்?கடந்த ரணில் ஆட்சியில் போர் நிறுத்தம் என்று கூறி உளவாளிகள் எப்படி புலிகள் இயக்கத்துக்குள்  நுளைந்தார்களோ அதேபாணியில் ரணிலின் நல்லாட்சியில் யாழ் களத்திலுமா? அது தான் போல நேற்றைய என்கவுண்டர்

 

Error

The website encountered an unexpected error. Please try again later.

Error message

PDOException: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'yarlcom_mugappu.semaphore' doesn't exist: SELECT expire, value FROM {semaphore} WHERE name = :name; Array ( [:name] => variable_init ) inlock_may_be_available() (line 167 of/var/www/vhosts/yarl.com/httpdocs/includes/lock.inc).

Uncaught exception thrown in shutdown function.

PDOException: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'yarlcom_mugappu.semaphore' doesn't exist: DELETE FROM {semaphore} WHERE (value = :db_condition_placeholder_0) ; Array ( [:db_condition_placeholder_0] => 17188659865573cf8773f530.52275407 ) in lock_release_all() (line 269 of /var/www/vhosts/yarl.com/httpdocs/includes/lock.inc).

எந்த விடயத்திலும் அவர்களை அடிக்க ஆட்கள் அந்த நாளிலுமில்லை இந்த நாளிலுமில்லை .மற்றவர்கள் இவர்களுடன் ஒப்பிடும் போது யுயூப்பிகள் .

பிரான்சில் இதற்காக சிறை சென்ற செம்மல்கள் பலர் இருக்கின்றார்கள் அவர்களை கேட்டால் தெரியும் உண்மை அல்லது சர்வதேச போலீசாரிடமே கேட்கலாம் .

பாவங்கள் நாட்டுக்காக என்று நினைத்து தமது வாழ்வையும் பிறர் வாழ்வையும் தொலைத்தார்கள் .

 


பயங்கரவாதிகள் பட்டியலில் போக இவையும் ஒரு காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவர்களைப் பாவித்து சுருட்டி வந்து புலத்தில் இராஜபோகம் அனுப்பவிப்பவர்கள் பலர்!

ஆயிரத்தில் ஒரு வார்த்தை! இதைத்தான் சேம் சைட் கோல் போடுறது எண்டு சொல்லுவாங்களோ? :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடு வாங்க காணி வாங்க கார் வாங்க வசதியாய் வாழ கண்கண்ட களிசறையளை கடத்துறது விற்கிறது......... எடக்கு மடக்காய் அப்புப்பட்டவுடனை புலியளை சாட்டிவிடுறது  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போதைப்பொருள் கடத்தினார்கள், ஆனால் இலங்கைக்கு வெளியே என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக அந்தச் செய்தியெல்லாம் உண்மையாகிவிடவேண்டும் என்றில்லை. ஆரம்பத்தில் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பணம் தேவையாகவிருந்தது, ஆகவே கடத்தியிருக்கலாம் என்றும் எடுத்துக் கொள்ள்லாம் அல்லவா/ ஆனால் போதைப் பழக்கத்தை புலிகள் உருவாக்கினார்கள் என்று அரசாங்கம் கூறுவதும், அதை இங்கே வாலியும், அர்ஜுனும், கோஷானும் வழிமொழிவதையும் எனால் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புலிகளை நாரடிக்கும் இன்னொரு சந்தர்ப்பம் கிடத்தது என்பதற்காகத்தான் அவர்கள் மூவரும் இப்படி எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்காக அவர்களை நாம் குறைகூறவும் முடியாது. பதிலுக்கு நாமும் சோத்துப் பாசல், மாலைதீவு என்றெல்லாம் சேறுபூசும்போது, அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்குமா என்பது சந்தேகமே.

 

என்னைப் பொறுத்தவரை இப்போது புளொட்டும் இல்லை, புலிகளுமில்லை. பிறகு எதற்காக இல்லாதவர்கள் பற்றி இன்னும் வசைகள் தொடரவேண்டும் /

 

நாங்கள் சொல்லாவிட்டலும்கூட, புலிகளின் காலத்தில் போதைபோருள் என்பது தாயகத்தில் இருக்கவில்லை என்பது அர்ஜுன் அண்ணணாவுக்கோ , வாலிக்கோ அல்லது தம்பி கோஷானுக்கோ தெரியாமல் இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், கருத்தாடலின் பாதை அவர்களை அதை மறைக்கப் பண்ணிவிட்டது, அவ்வளவுதான்.

 

புலிகளியக்கம், புலத்திலிருந்து பணம் கிடைக்கும்வரை வேறு சில வழிமுறைகளைக் கொண்டே பணத்தை சம்பாதித்தது. வங்கிக் கொள்ளைகள் முதல், சர்வதேச கப்பல் வியாபரம் வரை இது நடந்தடு பலருக்கும் தெரியும். ஆனால், புலம்பெயர்ந்தவர்களின் பணம் இயக்கத்தை தொடர்ந்து நடத்துமளவிற்கு வந்தபின்னர், மற்றிஅய வழிகளை அவர்கள் விட்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ரகுநாதன் இந்த பதிவை முதலில் இருந்து படிக்கவும் .

காலம் காலமாக யாழின் விதி இதுதான் .

சிலர் தங்களை நல்லவர்களாக அடையாளம் காட்ட நாலு பேரை வம்பிற்கு இழுப்பார்கள் திரும்ப நாங்களும் அடித்தால் அவர்களாலும் பொறுக்க முடியாது .நிர்வாகத்தாலும் பொறுக்க முடியாது .

அந்த விசமிகளின் வாயை யாழ் மூடும்வரை இது தொடரும் .என்னை யாழ் தடை செய்யலாம் ஆனால் இன்னொருவர் அந்த இடத்தில் வருவார் .

உதாரணம் வேணுமென்றால் ஆயிரம் தருகின்றேன் .

தமிழ் தேசியத்தை உடைப்பவர்களே இந்த விசமிகள் தான் .

 


நட்பாக நாகாரீகமாக எழுதுவதே எனது விருப்பமும் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ரகு சாரின் கருத்து எண்ட பிள்ளை நல்லா வாழவேண்டும் எண்டால் அடுத்தவன் பிள்ளை எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை என்பது தான். ஆயுதங்கள் வாங்க பணம் தேவை என்றால் தமிழன் தவிர்ந்த எந்த இனத்தானும் கெட்டுப்போனால் சரிதான் நமக்கு. புலிகள் காலத்தில் போதைப்பொருள் இல்லை என்பது உண்மையே. அது போலவே தரகுப் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள்களை வேறுநாடுகளுக்கு ட்ரபிக்கிங் செய்தார்கள் என்பதும் உண்மையே! நீங்கள் கேட்டதையே நானும் கேட்கிறேன் ரகு சார். கிண்டிக் கிழங்கெடுக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் பேரில் ஏன் வாலுகள் ஆடவேணும். புலிகள் எண்ட அமைப்பே இல்லை. பேசாமல் இலங்கையில் இருக்கிற முன்னாள் போராளிகள் உட்பட்ட மக்களை வாழவிடுங்க. இல்லையென்றால் நானும் எனக்குத் தெரிஞ்சதுகளையும் கண்டதுகளையும் எழுதிக்கொண்டு இருப்பன். காலம் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கு, நாங்கள்தான் கேட்க ரெடியாக இல்லை!

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்பு செயலணி JUN 09, 2015 | 1:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

CM-WIGNESWARAN-300x198.jpgவடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, இந்த  செயலணியை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாணம் போதைப்பொருள் பரிவர்த்தனை நிலையமாக மாறியிருப்பதாகவும், தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் போதைப்பொருள் வடபகுதி இளைஞர்களுக்கு மட்டுமன்றி தென்பகுதி இளைஞர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தவைர் டாக்டர் திலங்க சமரசிங்க கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறவில்லை. ஆயுதமோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மிக வேகமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் 17 முக்கிய புள்ளிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் 07 பேர் தமிழர்கள். வடக்கு மாகாணத்திற்கு போதைப்பொருளை கொண்டு வருபவர்களும் தமிழர்கள் தான்.

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறப்பு காவல்துறை குழுவொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்துக்கு யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள 05 அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்படும்.

அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

அத்துடன் யாழ். மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் போதைவஸ்து ஒழிப்பு குழுக்கள் நிறுவப்படும்.

மாதம் ஒருமுறை இந்த குழுக்கள் முதலமைச்சரின் தலைமையில் கூடி முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, மாதகல் பகுதி ஊடாக கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை தடுக்கவும், அவை மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விற்கப்படுவதை தடுக்கவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இளவாலை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலைகளின் முன்பாகவும் அருகிலும் விற்கப்படும் பொருட்கள், பாடசாலைகளுக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்களைச் சோதனையிடுமாறும், பாடசாலைகளுக்கு அருகே தேவையின்றி  நடமாடுவோரைக் கட்டுப்படுத்துமாறும், பெண்கள், மாணவிகளுக்குத் தொல்லை கொடுப்போரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறும் யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/06/09/news/6864

 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா,

நாங்கள் எல்லோரும் ஒண்டல்ல. ஒரே மாரி கதைக்க, நான், அர்ஜூன், வாலி ஜீவன் எல்லாம் ஒரே பஜனை கோஸ்டியல்ல.

நான் புலி போதைப் பொருள் கடத்தியதாய் சொல்லவில்லை. நான் சொல்ல வந்தது சீவி என்ன சொன்னார் அதை எப்படி பிறவழமாய் நாம் விளங்கிறோம் என்பதை பற்றி.

உங்களை போல நானும் கேள்விப் பட்டது வெளியிநாட்டில் கடத்தினர் என. ஆனால் உண்மை தெரியாது.

அவர்கள் வெளிநாட்டில் கடத்தி இருந்தால் - அதை ஆயுதம் வாங்க கடத்தினர் என சப்பை கட்டு கட்ட என்னால் முடியாது.

தன் இனம் வாழ என, அப்பாவி வேற்றினத்தவரை ஒரு இயக்கம் போதையில் தள்ளி இருக்குமானால் (ஆல் விகுதி - நோட் திஸ் பிளீஸ்) அவர்கள் விடுதலை இயக்கம் அல்ல, வெறும் மாபியா கூட்டமே.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்கி மும்பையிலிருந்து தமிழ் மக்களுக்கு விமோசனம் பெற்று தந்தவைக்கு "காத்தானை" தெரியவில்லை. கள்ளன் பிடிபட்டவுடன் புலிக்காக கடத்தினேன் என்று சொன்னதை நம்பும் அறிவாளிகளை என்ன செய்வது

அடடா இப்ப இந்த குற்ற சாட்டா .... எவரிடமும் சாட்சி இல்லை ஏன் சும்மா பழி போடுகின்றீகள் ...
சீ .வீ  ஐயா சொன்னதின் சாராம்சம் புலிகள் ஒருபோதும் இப்படியான கேவலத்தை செய்யவில்லை அவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்பதை சாதுரியமாக சொல்கின்றார் ...
 
மாற்று கருத்து மாணிக்கங்கள் முதலில் உங்கள் அறிவினை தெளிவாக்குங்கள் அதுக்கப்புறம் விமர்சனம் எழுதலாம் .... நிறைகுடம் தளம்பாது ...
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகள், தேவாலயங்கள், வைத்தியசாலைகள் மேல் குண்டுகள் போடுவது, நச்சுக் குண்டு அடிப்பது.....

போன்றவைகள் குற்றமில்லை என்றால்.... மற்ற எதுவும் குற்றமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.