Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலம்!!

5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார்.

india

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ மீற்றர் நீளமுடையதாக இந்த இணைப்புப் பாலத்தை கடலுக்கு மேலாகவும், கடலடி சுரங்கமாகவும் அமைப்பது தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துரையாடியுள்ளார்.

ஏற்கனவே, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளைத் தரைவழிப் பாதைகளால் இணைக்கும் 8 பில்லியன் டொலர் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, 5.19 பில்லியன் டொலர் செலவிலான இந்திய – இலங்கை தரைவழிப்பாதை இணைப்புத் திட்டத்துக்கு உதவ ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilsvoice.com/

என்னதான் தற்காலிக பாதகங்கள் இருந்தாலும் நிண்டகால அடிப்படையில் இது ஒரு நல்ல திட்டம் என்றே படுகிறது. 

இரண்டு தமிழ் மண்ணை இணைக்கும் பாலம் என்பதில் நோக்கும்போது தேவையானதே. 

எதிர்கால சமூக அரசியல் சூழல் எப்படி இருக்குமோ என்னமோ, எம்மினத்தொடு எமக்கு ஒரு தரைவழி தொடர்பு நிச்சயம் வேண்டும்.

  • தொடங்கியவர்

நீங்கள் தமிழ் என்ற கோணத்தில் சிந்திக்கின்றீர்கள். பாலம் போடுபவர்கள் எந்த கோணத்தில் சிந்திக்கின்றார்களோ யாருக்குத்தெரியும்? :)

நீங்கள் தமிழ் என்ற கோணத்தில் சிந்திக்கின்றீர்கள். பாலம் போடுபவர்கள் எந்த கோணத்தில் சிந்திக்கின்றார்களோ யாருக்குத்தெரியும்? :)

நீங்கள் சொல்வது சரிதான், அவர்களின் திட்டம் என்னவோ தெரியாது.

உந்த திட்டத்தில் முக்கிய பங்குதார்களாக இருக்கவேண்டிய தமிழர்களின் கருத்தை யாரும் கேட்டறிந்ததாக தெரியவில்லை. 

பாலம் போடுட்டு முடியட்டும் அம்மா மனசு வைச்சா ஏலாது என்று எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடற் படுக்கை சுரண்டப் படுவது போல... வளமான நிலங்களும் சுரண்டப் படும்!

இதைத் தடுக்கவியலாமல் நாம் எமக்குள் பொருமிக் கொள்வது போலச் சிங்களவனும் தனக்குள் பொருமிக்கொள்ளும் நாள் நிச்சயம் வரும்!

வேண்டுமானால் 'தரிசனப் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொடுக்கப் போபவர்களுக்கு' பாலம் ஒரு வரப்பிரசாதமாக அமையக் கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இருந்து கியூபாவுக்கு பாலம் போட்டால் கியூபாவுக்கு என்ன நிலைமையோ, அதுதான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இருந்து கியூபாவுக்கு பாலம் போட்டால் கியூபாவுக்கு என்ன நிலைமையோ, அதுதான். tw_blush:

தமிழருக்கான தீர்வை வைக்காத சிங்களவரின் விடாப்பிடியான  நரிக்கொள்கையின் அடுத்த கட்டம்..

தமிழர் இழப்பதற்கு எதுவுமில்லை

ராமன் ஆண்டாலென்ன?

இராவணன் ஆண்டாலென்ன?

ஆனால் சிங்களவருக்கு.....?

Edited by விசுகு

இந்தியா இலங்கைக்கு அருகில் இருந்து அலுப்பு கொடுப்பது சிங்களவனுக்கு தான் சகிக்கமுடியாதவிடயம் .ஏற்கனவே சிங்களவர்கள் தமது இருப்பு பற்றி பயந்துதான் இவ்வளவு அநியாயங்களும் செய்கின்றான்.இருந்தாலும் நோகாத மாதிரி அரசியல் செய்கின்றான் எமக்கு அருகில் தமிழ் நாடு இருந்தும் கூட எவரையும் அரவணைக்க தெரியாத  எமது நிலையால் எல்லாரும் எம்மை ஒதுக்கியபடி .

மன்னர் ஆட்சிக்காலத்தில்  இருந்து படையெடுப்பு நடைபெறுகின்றது .

சின்ன மீனை பெரிய மீன் உண்ணுவது சர்வதேச அரசியலில் எழுதாத விதி .

பாலம் போட்டாலும் இரு வேறு நாடுகள் என்ற நிலையே தொடரும் .தமிழர்களை பொறுத்தவரை இது நன்மையே .

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் இந்தியாவின் வர்த்தகத்திற்குத் தான் நன்மை. இலங்கைக்கோ தமிழருக்கோ ஒரு நன்மையும் இருக்காது. இராணுவ ரீதியிலும் இந்தியா இலகுவாக அச்சுறுத்தல் செய்ய ஒரு  வழி. 

ஒரு சின்ன உதாரணம்: கோமாரி (rinderpest) என்கிற கொடிய ஆடு/மாடுகளுக்கு வரும் நோயை இலங்கை மிருக வைத்தியர்கள் மிகுந்த நுண்ணறிவோடு இலங்கையில் இல்லாதொழித்தார்கள். 1987 இல் இந்திய ராணுவம் கப்பலில் வடக்கில் கொண்டு வந்து இறக்கிய ஆடுகளோடு மீண்டும் இலங்கைக்கு இந்த நோய் வந்து சேர்ந்து இப்போது பெரும் சேதம் ஏற்படுத்தி வருகிறது! இது போல இந்தியாவில் இருக்கும் இலங்கையில் இல்லாத பிளேக் (கொள்ளை நோய்) போன்றவையும் தரைவழியில் இலகுவாக இலங்கைக்கு வரும்! 

எங்கள் ஜே.வி.பி நண்பர்கள் இதப் பாலத் திட்டத்தைத் தடுத்து எங்களைக் காப்பார்கள் என நம்புகிறேன்! <_< 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பிரதேசத்தின் பாரிய வளர்ச்சிக்கு இந்தப் பாலம் மிகவும் உதவி செய்யும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 4 5 மணித்தியாலங்களில் தமிழ் நாட்டைச் சென்றடையலாம்.
ஏன் தல, தளபதியின் சினிமாக்களைக் கூட ராமேஸ்வரத்தில் முதல்  சோ பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னதான் குத்தி முறிஞ்சாலும் உலக நாடுகளின், தீவுகளின் இணைப்புகள் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது...!

இனி பிரமாண்டமாக வளர்ந்து நிக்கும் கொன்ராக்ட் கம்பனிகளுக்கும் தீனி போட வேண்டிய அவசியம் அரசுகளுக்கும் உண்டுதானே...!!

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடற் படுக்கை சுரண்டப் படுவது போல... வளமான நிலங்களும் சுரண்டப் படும்!

இதைத் தடுக்கவியலாமல் நாம் எமக்குள் பொருமிக் கொள்வது போலச் சிங்களவனும் தனக்குள் பொருமிக்கொள்ளும் நாள் நிச்சயம் வரும்!

வேண்டுமானால் 'தரிசனப் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொடுக்கப் போபவர்களுக்கு' பாலம் ஒரு வரப்பிரசாதமாக அமையக் கூடும்!

இதுதான் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் எங்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாங்கள் போல  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை- இந்திய பாலம் Phase 2
(அன்று ராமர் பாலம், இன்று மோடி)

தமிழகத்துடன் தரை வழி தொடர்பு இருப்பது வர்த்தக நோக்கில்  நல்லது, அதுவும் இந்தியாவின்  தென் கோடியில்.
கலாசாரம், சீரழிவு என்று பார்த்தால் பாதகம்.

 அரசுகள் நினைத்தால் இப்படியான திட்டங்களை  யாராலும் தடுக்க முடியாது. நல்ல உதாரணம் பிரித்தானியாவில் அமைய இருக்கும் HS2 எனப்படும் அதிவிரைவு ரயில் பாதை. இது லண்டனையும், Birmingham தையும் அழகிய இயற்கை வளங்களை அழித்து உருவாவதை பல உள்ளூர் பிரமுகர்கள் எதிர்த்தார்கள். பல வழக்குகள் போட்டார்கள். இறுதியில் அரசாங்கமே வென்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

india

ஏன் பாலத்தை வளைவாக கட்ட இருக்கின்றார்கள்? :oO:

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமானால் 'தரிசனப் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொடுக்கப் போபவர்களுக்கு' பாலம் ஒரு வரப்பிரசாதமாக அமையக் கூடும்!

நாங்கள் டொலரிலும் ,யுரோவிலும் விமானத்தில கொண்டு போய் அள்ளி கொடுப்பதுடன் அதை  ஒப்பிடும் பொது அது  ஜுஜுப்பி 

india

ஏன் பாலத்தை வளைவாக கட்ட இருக்கின்றார்கள்? :oO:

தாங்கள் நல்லாய் வளைந்து கொடுப்போம் சிறிலங்காவுக்கு என்ற சிக்னலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் டொலரிலும் ,யுரோவிலும் விமானத்தில கொண்டு போய் அள்ளி கொடுப்பதுடன் அதை  ஒப்பிடும் பொது அது  ஜுஜுப்பி 

அதைவிட இஞ்சையிருக்கிற ஆக்கள் மாதத்துக்கு மாதம்  பெஞ்சன்காசு  / சம்பளக்காசுமாதிரி சொந்தபந்தங்களுக்கு அனுப்புறதை கணக்கிலையெடுத்தால் நீங்கள் சொன்னதும் ஜுஜுப்பி..:)

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தடுக்கவியலாமல் நாம் எமக்குள் பொருமிக் கொள்வது போலச் சிங்களவனும் தனக்குள் பொருமிக்கொள்ளும் நாள் நிச்சயம் வரும்!

நவீன துட்டகெமுனுவின் அம்மே: ------என்ன புத்தே இணையத்தை பார்த்து முழிச்சுகொண்டிரிக்கிறாய்?
நவீன துட்டகெமுனு:------ தெமிழனை அனுராதபுரத்தில வெற்றி கொண்டேம்.,முள்ளிவாய்காலில் வெற்றி கொண்டோம்.....அவன் என்னடா என்றால் பாலம் போட்டு உள்ள  வரப்போகிறான்
நவீன துட்டகெமுனுவின் அம்மே:------புத்தே யு டொன்ட் வொறி......நீ அவங்கள் கட்டுகின்ற பாலத்தால் அங்கே சென்று அவர்களை வெற்றி கொள்
நவீன துட்டகெமுனு:.......Mum that is an awesome idea

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நவீன துட்டகெமுனுவின் அம்மே: ------என்ன புத்தே இணையத்தை பார்த்து முழிச்சுகொண்டிரிக்கிறாய்?நவீன துட்டகெமுனு:------ தெமிழனை அனுராதபுரத்தில வெற்றி கொண்டேம்.,முள்ளிவாய்காலில் வெற்றி கொண்டோம்.....அவன் என்னடா என்றால் பாலம் போட்டு உள்ள  வரப்போகிறான்
நவீன துட்டகெமுனுவின் அம்மே:------புத்தே யு டொன்ட் வொறி......நீ அவங்கள் கட்டுகின்ற பாலத்தால் அங்கே சென்று அவர்களை வெற்றி கொள்
நவீன துட்டகெமுனு:.......Mum that is an awesome idea

பாலம் இல்லாமல் இருக்கிற காலத்திலேயே புத்தன் வந்தான்!

விஜயன் என்று தந்தையால் விரட்டப் பட்ட 'காவாலியும்' வந்தான்!

பாலம் போட்ட பிறகு...மகாவலி கங்கைக் கரையில் கும்ப மேழா தான்!

சீதா எலியவில் 'சீதைக்கு' ஒரு பெரிய சிலை வைச்சால் போச்சு!

ஒரு சின்னப் பிரச்சனை.. அப்பே மினிஹாக்களுக்கு!

புத்தன் பிறந்த இந்தியாவிலேயே 'புத்தத்தை' வழிச்சுத் துடைச்சவன் இந்தியன்!

வாரணாசியில் மிஞ்சின மயிரும், பல்லும் தான் இலங்கையில மிச்சமிருக்கு!

பாலம் போட்டால் அதுவும் போய்ச் சேர்ந்திரும்!

புத்தரும் அறுபத்தியைந்தாவது 'நாயனார்' என்று பத்தோடு..பதினொன்றாகி விடுவார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.