Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில்.... எம்.கே. நாரயணன் மீது, "செருப்படி"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

former NSA m.k.Narayanan attacked in chennai

சென்னையில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் மீது தாக்குதல்- பிரபாகரன் கைது!!

சென்னை: நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் மீது சென்னையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்தவர் எம்.கே. நாரயணன். ஐந்தாண்டு அந்த பதவியில் இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இலங்கை அகதிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் கருத்தரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நாராயணன் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் ஒருவர் நாரயணனை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், தாக்குதல் நடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அந்த கருத்தரங்கம் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறி அண்ணா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு "சிறப்பு செய்தி" அல்லது "சிரிப்புச் செய்தியோடு" வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்...

ஆனால் "செருப்புச்" செய்தியோடு வந்து எங்களை சந்தோசப் படுத்தி இருக்குறீர்கள் .
சூப்பர் நைனா ... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்.கே.நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டார்.

151104163547_mknarayananformer_indian_na

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.

சென்னையிலிருந்து வெளியாகும் "தெ ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.

151104164944_mknarayananmeetingchandraha

அதில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.

அந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, "எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்" என்று கூறியபடியே அடித்தார்.

இதில் இரண்டு - மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்தன.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்

தாக்கியவர் புதுக்கோட்டை பிரபாகரன்

திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை , அவரது அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.

151104163714_prabakaran_mknarayanan_atta

தாக்குதல் நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர், பிரபாகரன் என்றும் தெரிகிறது.

தான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.

கண்டனம்

இதற்குள் அங்கு விரைந்த போலிசார் , பிரபாகரனைக் கைது செய்தனர்.

நாராயணனுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

http://www.bbc.com/

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணர், பழைய பாக்கி இருக்குது,,,,

துனிசியா அரபி கதை என்னாச்சு?? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009-05-21T153428Z_01_DBG291_RTRIDSP_2_S

உண்மையிலேயே.... மிக்க மகிழ்ச்சியான செய்தி, சசி.
இந்த நாராயணன் பதவியில் இருக்கும் போது.....  பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த கூட்டம் ஒன்றுக்கு இவரையும் 
ஸ்ரீலங்கா அழைத்து இருந்தது. கூட்டம் முடிந்த பின், இவர் தங்கியிருந்த ஹோட்டேலுக்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் வேண்டுமென்றே.... அரச வாகனத்தை அனுப்பாமல், மாநாட்டு மண்டபத்திலிருந்து தனது ஹோட்டேல் வரை நடந்து போக வைத்தவர்கள்.
அதற்குப் பிறகும், இவர் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாகவே செயல் பட்டு, தமிழ் மக்களை கொன்றொழிக்க இந்தியாவுக்கும் துணை நின்றவர்.
அவர் இன்று வாங்கிய அடி, பிரபாகரன் என்னும் பெயருடைய  தமிழகத் தமிழரிடமிருந்து என்னும் போது.... மகிழ்ச்சி இரட்டிப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாராஜணன்மீது விழுந்த செருப்படி சோணியாமீது விழ்ந்த செருப்படிக்குச் சமம். இதே செருப்படியை எரிக் சொல்கைம் மீதும் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் அது எங்களால் முடியாதவிடையம். காரணம் ஏழுகோடி தமிழர்களுக்குள் ஓரிரு வேட்டி கட்டிய ஆம்பிளைதான் இருப்பான்.

அதிசரி எல்லாமே முடிந்துவிட்டதே இதுக்குப்பின்பின் அவர்களுக்கு என்ன அலுவல் ஈழத்தமிழனைப்பற்றி கருத்தரங்குவைக்குமளவுக்கு!

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாராஜணன்மீது விழுந்த செருப்படி சோணியாமீது விழ்ந்த செருப்படிக்குச் சமம். இதே செருப்படியை எரிக் சொல்கைம் மீதும் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் அது எங்களால் முடியாதவிடையம். காரணம் ஏழுகோடி தமிழர்களுக்குள் ஓரிரு வேட்டி கட்டிய ஆம்பிளைதான் இருப்பான்.

அதிசரி எல்லாமே முடிந்துவிட்டதே இதுக்குப்பின்பின் அவர்களுக்கு என்ன அலுவல் ஈழத்தமிழனைப்பற்றி கருத்தரங்குவைக்குமளவுக்கு!

எல்லாம் ஒருசாண் வயிறுக்குத்தான்...:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
ஈழப்பிரச்சனையால் ஆவேசம் : 
எம்.கே.நாராயணனுக்கு செருப்படி 
சென்னையில்  பரபரப்பு
 pirapakaran%20pkt.jpg
 
இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் செருப்பால் தாக்கியுள்ளார்.
 
சென்னையிலிருந்து வெளியாகும் "த ஹிந்து" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.
 
 அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.
 
அந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, "எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்" என்று கூறியபடியே அடித்தார்.  இதில் இரண்டு - மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்துள்ளன.
 இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார்.
 
திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை ,  அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங் கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.
  
தாக்குதல் நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர், பிரபாகரன் என்றும் தெரிகிறது.  தான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இதற்குள் அங்கு விரைந்த போலிசார் , பிரபாகரனைக் கைது செய்தனர்.  நாராயணனுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்.
 
முன்னதாக இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தி ருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நாராஜணன்மீது விழுந்த செருப்படி சோணியாமீது விழ்ந்த செருப்படிக்குச் சமம். இதே செருப்படியை எரிக் சொல்கைம் மீதும் கொடுத்திருக்கவேண்டும் ஆனால் அது எங்களால் முடியாதவிடையம். காரணம் ஏழுகோடி தமிழர்களுக்குள் ஓரிரு வேட்டி கட்டிய ஆம்பிளைதான் இருப்பான்.

அதிசரி எல்லாமே முடிந்துவிட்டதே இதுக்குப்பின்பின் அவர்களுக்கு என்ன அலுவல் ஈழத்தமிழனைப்பற்றி கருத்தரங்குவைக்குமளவுக்கு!

வணக்கம் எழுஞாயிறு!

இங்கு தான் பிராமணீயத்தின் ஆளுமை மறைந்திருக்கின்றது!

உதாரணமாக..இந்தியாவில் கம்யூனிசத்தை அழிக்க வேண்டுமென்றால்.. அதற்கெதிராக நேருக்கு நேர் போராடுவது தான் சாதாரண மனிதன் செய்ய முனைவது!

ஆனால் பிராமணிய சிந்தனை வேறு மாதிரிச் செல்லும்! அவர்கள் கம்யூனிசக் கட்சியைத் தாங்களாகவே தொடங்கிப் பின்னர் மெது..மெதுவாகக் கம்யூனிசக் கட்சியினுள் ஊடுருவது..! பின்னர் தீர்மானங்களை எடுக்கும் 'வலு' கைக்கு வந்ததும் கம்யூனிசத்தைச் சாகவும் விடாமல்.. வாழவும் விடாமல் தங்கள் தேவைகளுக்கேற்ப அதைக் கையாள்வது...! அத்துடன் கம்யூனிசத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று கம்யூனிசம் சார்பான நாடுகள் வழங்கும் நிதி வளத்தையும் பெற்றுக்கொண்டு தங்கள் தேவைகளுக்காகப் பயன் படுத்துவது..!

இதையே தான் இவர்கள் பத்திரிகைத் துறையிலும், சினிமாத் துறையிலும் செய்கிறார்கள்!

நாராயணனை விடவும் வேடிக்கை என்னவென்றால்... இந்து பத்திரிகை ஈழத் தமிழ் அகதிகளுக்காக அழுவது தான்.! 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வருத்தமெல்லாம்.. இந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய சர்வதேச நீதிநடைமுறைகள்.. அவர்களை பாதுக்காக்க.. ஒரு அப்பாவி இளைஞன் இவர்களை தண்டிக்கப் போய் இன்று தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி உள்ளது தான்.

இப்போதைய தேவை அந்த இளைஞனை கொலைகார..ஹிந்திய சர்க்காருக்கு வேலை பார்க்கும் தமிழகக் கூலிப் பொலிஸாரிடம் இருந்து காப்பாற்றுவது தான். tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனதின் மூலையில் பளீரென சிறு சந்தோசக் கீற்று! mdr-ordi.gif

அதேநேரம் அவ்விளைஞனின் எதிர்காலம் பற்றியும் நெருடல்!! striste.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே மண்டபத்துக்கு வெளியே.... தமிழ் ஆர்வலர்கள், "நாராயணனுக்கு செருப்பு அடி" விழப் போகுது என்று.....
நாசுக்காக, அவர்களின் புகைப் படங்களுக்கு   செருப்பால் அடித்து, சிக்னல் காட்டியும்..... 
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், சரமாரியாக..... செருப்படி, hammer.sml.gif வாங்கிக் கொண்டு போனது நல்ல காமெடி.  lol.gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

311051076_01a8ea2d47 gota.jpg

தமிழ் இன அழிப்புக்கு,  முக்கிய காரணமானவர்களாக இருந்த,
ஸ்ரீலங்கா - இந்திய.... பாதுகாப்பு ஆலோசகர்களும், அடி வாங்கியுள்ள ஒற்றுமை... மிக நன்றாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இன அழிப்புக்கு,  முக்கிய காரணமானவர்களாக இருந்த,
ஸ்ரீலங்கா - இந்திய.... பாதுகாப்பு ஆலோசகர்களும், அடி வாங்கியுள்ள ஒற்றுமை... மிக நன்றாக உள்ளது. :)

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வாங்கிய அடியை சிறீ லங்கா பாதுகாப்பு ஆலோசகருடன் ஒப்பிட முடியாது. சிறீ லங்கா அரசியல் வாதிகள் தங்களுக்குத் தாங்களே சீன் போட்டுக்கொள்வதில் வல்லவர்கள்.:grin: சட்டம் அந்த இளைஞனை தண்டிக்கும். ஆனால் சித்தரவதையின்றித் தண்டிக்கவேண்டும் என்பது என் பிரார்த்தனை.

இன்னும் கொஞ்சநாளில் உது தானா செத்து போயிடும். உதுக்காக ஒரு செருப்பையும் வீணாக்கி எதிகாலத்தையும் பாழாக்கியதுதான் கண்ட மிச்சம் !

 

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளுக்கு சிங்களவன் குடுக்காத அடியா, செய்யாத அவமரியாதையா? இருந்தாலும் அவனுக்கு சொறியுதுகள். சூடு, சொரணை இல்லாததுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன், இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர் 

சென்னை: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சென்னை நிகழ்ச்சி ஒன்றில் செருப்பால் அடித்ததால் கைது செய்யப்பட்ட பிரபாகரன், இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர் என தெரியவந்துள்ளது. சென்னையில் ஈழ அகதிகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள எம்.கே. நாராயணன் நேற்று வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் நாராயணனுக்கு கை கொடுக்க நெருங்கிச் சென்று வலது கையால் செருப்பை எடுத்து, இலங்கை படுகொலைக்கு காரணமே நீதான் என கூறியபடியே கழுத்து, முகம், தலை என பல இடங்களில் எம்.கே.நாராயணனை சரமாரியாக அவர் அடித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நாராயணனை செருப்பால் அடித்த பிரபாகரன் கைது செய்யப்பட்டார். பிரபாகரனின் தந்தை மெய்யப்பன், இலங்கை மலையகப் பகுதியில் வசித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டை இவரது சொந்த ஊர். பிரபாகரன் சிறுவயது முதலே தமிழகத்தில் உறவினர்களுடன்தான் வசித்து வருகிறார். தமிழகத்தில் ஈழத் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு சென்று வருபவர். சென்னை கோயம்பேட்டில் பிரபாகரன் அறை எடுத்து தங்கியிருந்துதான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கோயம்பேட்டில் பிரபாகரன் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sri-lankan-tamil-attack-mk-narayanan-chennai-239294.html

Edited by Nathamuni

இன்னும் கொஞ்சநாளில் உது தானா செத்து போயிடும். உதுக்காக ஒரு செருப்பையும் வீணாக்கி எதிகாலத்தையும் பாழாக்கியதுதான் கண்ட மிச்சம் !

 

புலம் பெயர்ந்த தேசங்களுக்கு  சிங்கள போர்குற்றவாளிகள் சிலர்  வந்துபோகினம் ,சிலர் நிரந்தரமாக இருக்கினம் எங்கட ஆட்கள் யாராவது அவர்களுக்கு செருப்பால அடிப்பார்களா ?

அடுத்த விடுமுறைக்கு எங்கே போவது என்ற நினைப்புடன் தானே  இவர்கள் வாழ்க்கை போகுது .பேய்காய்கள்.

.பாவம் பெடி. எய்தவன் யாரோ பெடி களி தின்னப்போகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு என்ன ஒரு குருரமான சந்தோஷம் இதில்.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சநாளில் உது தானா செத்து போயிடும். உதுக்காக ஒரு செருப்பையும் வீணாக்கி எதிகாலத்தையும் பாழாக்கியதுதான் கண்ட மிச்சம் !

 

அதை விட முக்கியமான விடயம் ......
நாங்கள எல்லோரும் கொஞ்ச நாளில் இறந்துவிடுவோம் .

இருந்தும் விஞ்ஞானம் ... போராட்டம் ... மனித முன்னேற்றம் என்று 
ஒரு லூசு கூட்டம் சுத்திகொண்டு திரியுது.

இதில பெரிய பகிடி படிப்பு என்று பள்ளிக்கூடம் போகுது ஒரு கூட்டம் 

வணக்கம் எழுஞாயிறு!

இங்கு தான் பிராமணீயத்தின் ஆளுமை மறைந்திருக்கின்றது!

உதாரணமாக..இந்தியாவில் கம்யூனிசத்தை அழிக்க வேண்டுமென்றால்.. அதற்கெதிராக நேருக்கு நேர் போராடுவது தான் சாதாரண மனிதன் செய்ய முனைவது!

ஆனால் பிராமணிய சிந்தனை வேறு மாதிரிச் செல்லும்! அவர்கள் கம்யூனிசக் கட்சியைத் தாங்களாகவே தொடங்கிப் பின்னர் மெது..மெதுவாகக் கம்யூனிசக் கட்சியினுள் ஊடுருவது..! பின்னர் தீர்மானங்களை எடுக்கும் 'வலு' கைக்கு வந்ததும் கம்யூனிசத்தைச் சாகவும் விடாமல்.. வாழவும் விடாமல் தங்கள் தேவைகளுக்கேற்ப அதைக் கையாள்வது...! அத்துடன் கம்யூனிசத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று கம்யூனிசம் சார்பான நாடுகள் வழங்கும் நிதி வளத்தையும் பெற்றுக்கொண்டு தங்கள் தேவைகளுக்காகப் பயன் படுத்துவது..!

இதையே தான் இவர்கள் பத்திரிகைத் துறையிலும், சினிமாத் துறையிலும் செய்கிறார்கள்!

நாராயணனை விடவும் வேடிக்கை என்னவென்றால்... இந்து பத்திரிகை ஈழத் தமிழ் அகதிகளுக்காக அழுவது தான்.! 

நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை.

இன்னொரு நுற்றாண்டு கழியும்போது நாம் யாரும் இருக்க மாட்டோம்.

இன்னார் வாழ்ந்தார்கள் என்று ஒரு குறிப்பு மட்டும் எஞ்சியிருக்கும்.

அதில் நாய்கள் இருக்காது ....
ஒரு மணி நேரமோ ..... ஒரு நாளிகையோ வாழ்ந்தவன் மட்டுமே இருப்பான். 

அது ஒன்று தான் எமக்கு இறுதி நாடகளில் அமைதியை கொடுக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான பிரபாகரனுக்கு : அசோக்

அன்பான பிரபாகரனுக்கு,

pirabaharanநீங்கள், கொடுமை மிக்க சித்திரவதைகளுக்கு, மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பீர்கள் என அஞ்சுகின்றேன்.

பொலீஸாரின் சித்திரவதைகளை ஒரு காலத்தில் நானும் இலங்கையில் அனுபவித்தவன். அடக்குமுறைகொண்ட கொடிய அரச கருவிகளின் தொழிற்பாடு எங்கும் ஒன்றுதான்.

இன்று காலையில் எழுந்தவுடன், உங்கள் நிலை அறிய பத்தி ரிகைகளையும் ,இணையங்களையும், முகப் புத்தகங்களையும் தேடினேன். தகவல் பெற முடியவில்லை.

உங்களின் “செருப்படியை” கொண்டாடிய முகப் புத்தக நண்பர்களின் பக்கங்களிலும் உங்கள் நிலை பற்றி அறிய முடியவில்லை. அவர்கள் அடுத்த ” பலிக்கடாவை” கொண்டாடுவதற்காக தயாராகிக்கொண்டிருப்பார்கள்.

உங்களுக்கு ஏதாவதொருவகையில் உதவ முடியுமா என எண்ணினேன். உங்களின் குடும்ப வாழ்வு பற்றி எதுவும் எனக்கு தெரியாது. எனினும், இலங்கையிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கிக்கு அருகே உள்ள ஆவனந்தான் கோட்டையில் நீங்கள் வாழ்வதாக அறிந்துகொண்டேன்.

பிரபாகரன், உங்களின் உணர்வுகளை – உணர்ச்சிகளை நான் மதிக்கிறேன்.

முன்னொரு காலத்தில், உங்களைப்போன்றுதான் நாங்களும் இருந்தோம்.எமது தலைவர்கள் சுட்டிக்காட்டிய “துரோகிகள்” எல்லோருக்கும் முதலில் முட்டைகள் அடித்தோம்.செருப்புக்கள் வீசினோம்.கற்களைக்கொண்டும், தடிகளைக்கொண்டும் மண்டைகளை உடைத்தோம்.நாங்களும் எமக்கான “துரோகிகளை” உருவாக்கிக் கொண்டோம்.

“துரோகிகள்” உயிர்வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் என எமது தலைவர்கள் சூளுரைத்தார்கள். நாம் ‘தனிநபர் பயங்கரவாதத்தை’ தேர்ந்தெடுத்தோம்.

துப்பாக்கிகளுக்கு வேலை கொடுத்தோம்.பல “துரோகிகளது” வாழ்வை முடித்து வைத்தோம்.

காலமும் – அரசியல் புரிதலும் ஏற்பட்டபோது, கடந்தகால இந்த அனுபவங்களும், செயற்பாடுகளும் எமது “கோரமுகத்தை” எங்களுக்கு காட்டியது.

எம்மைப்போல்தான், ஒருகாலத்தில் தோழர் லெனின் அவர்களின் அண்ணணார் அலெக்ஸாந்தரும் இருந்தார்.தனிநபர் பயங்கரவாதமே அனைத்திற்கும் தீர்வு என நம்பினார்.ஜார் மன்னனை கொலை செய்ய முயன்று தோல்வியுற்றார்.

அப்போது, தோழர் லெனின் இவ்வாறு கூறினார்.

“…அலெக்ஸாந்தர் நீ ஜாரை வெறுத்தாய். ஜாரை கொல்ல விரும்பினாய்.அவனைக்கொன்றுவிட்டால் சமூக அமைப்பு மாறிவிடும் மக்களின் வாழ்க்கை மேம்படும் என நீ நினைத்தாய். ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாச் மாதம் முதல் தேதியன்று மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புரட்சியாளர்கள் ஜார் இரண்டாம் அலெக்ஸாந்தரை கொன்றார்கள். அதனால் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுவிட்டதா என்ன? கொஞ்சம்கூட இல்லை.இரண்டாம் அலெக்ஸாந்தரின் இடத்தில் அமர்ந்தான் புதிய ஜார்- மூன்றாம் அலெக்ஸாந்தர்.நிலமை சீர்பட்டதா? இல்லவே இல்லை.எனவே வேறுவிதமாகப் போராடவேண்டும் என்றுபடுகிறது “…

அன்பான பிரபாகரன், வரலாறுகள் எமக்கு பலவற்றை படிப்பிக்கின்றது. நாம்தாம் அனைத்தையும் நிராகரிப்பவர்களாக மாறிக்கொண்டு வாழ்கின்றோம்.

 

http://inioru.com/அன்பான-பிரபாகரனுக்கு-அச/

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவின் நீலிக்கண்ணீர் நல்லாவே துதிபாடுது.

உண்மையான அக்கறை இருக்கிறவை எழுதிக்கிட்டு இருக்கமாட்டினம்.. செயற்பட்டுக் கொண்டிருப்பினம். இவை இப்படியே எழுதி எழுதி அடிமையாகக் கிடப்பினம்.

மாற்றம் என்பதன் மறுபெயர் தான் புரட்சி. பிரபாகரன் தனி ஒருவனாக புரட்சி செய்தபடியால்.. சித்திரவதை செய்ய முடிகிறது. அதே தமிழகம் ஒன்றாகி நின்றிருந்தால்.. நாராயணனோ.. ராமோ சென்னையில் காலடி வைத்திருக்கவே முடியாது. உந்த எழுத்துக்களை வைச்சு..அதைச் செய்ய திராணியற்றவர்கள்.. நீலிக்கண்ணீர் தான் வடிக்க முடியும்.

துரோகம் என்பது ஊருக்கு தண்ணீர் வழங்கும்..குழாயில் அடையும் சுண்ணாம்புக்கல் போன்றது வளரவிட்டால்.. அடைப்பு குழாயை பாதிக்கும் ஊரை அழிக்கும். காலத்துக்கு காலம்.. அகற்றிக் கொண்டால் பிரச்சனை இல்லை.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.