Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
my3_jff_001.jpg
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

maithiri_jaffna_visit_001.jpg

maithiri_jaffna_visit_005.jpg

maithiri_jaffna_visit_002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இந்த செயலில் "அரசில்" இருக்கு இல்லை என்பதை ஆராய்வதை விட்டு ஒரு இலங்கையின் குடிமகனாக மக்களின் துயர் கேட்க பாதையில் இறங்கியமை குறித்து சந்தோசப்படலாம்.
இது போன்ற நெகிழ்வான சம்பவங்கள் இரு இனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை கொஞ்சமாவது குறைக்கும். "பொறுத்தார் பூமியால்வார்...."

  • கருத்துக்கள உறவுகள்

MRN021313.jpg

rajapaksa_1_jpg_358695f.jpg

Chunnakam_People_1.jpg

இந்தப் படங்களைக் காட்டிப்போடாதேங்கோ... இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு ஜனாதிபதியா என்று நெகிழ்ந்தாலும் நெகிழ்வார்கள். tw_blush::rolleyes:

சிங்களவன் இத்தனை வருசமா எங்களை எப்படி ஆளுறான் என்பது இப்ப தெளிவா விளங்குது. :rolleyes:

kilinoch_04_07_10_12_88643_445.JPG

Cabinet meetings inKilinochchi

Cabinet meetings inKilinochchi

Cabinet meetings inKilinochchi

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வருகின்றது.
அங்கஜன் அவர்களும் திருமதி மகேஸ்வரன் அவர்களும் மைத்திரி அவர்கள் மூலம் இப்போதே வாக்குச் சேகரிக்கத் தொடங்கிட்டார்கள்

நாங்கள் அடிமைகள் தான். இவற்றை பார்த்து பெருமிதம் கொள்வோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழரசு said:
my3_jff_001.jpg
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இதிலை சனம் சொல்லுற பிரச்சனையள் எங்கடை சுந்தர தேவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தெரியுமோ? :cool:

படம் காட்டுவதற்கும் உணர்ந்து நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஆனால் அதை புரிய கொஞ்சம் விஷயம் தெரியவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

"நம்ம நட நம்பி நடவாதே" என்பதை மட்டும் எனது அன்பான தமிழ் மக்களுக்கு சொல்லி வைக்க  விரும்புகிறேன். இதற்காக நான் புலிவால் என்று சிலர் சொன்னாலும் ஆச்சரியப்பட மாட்டேன்.

1 hour ago, nunavilan said:

"நம்ம நட நம்பி நடவாதே"

"நம்ப நட நம்பி நடவாதே". யாவரும் இதைப் பின்பற்றினால் எவரும் எவரையுமே நம்ப முடியாதே. அப்புறம் எப்படி நம்ப நடப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது "நம்ப நட" என்பதற்கு மற்றவர்கள் நம்பும் படியாக முதலில் நீங்கள் இருக்க பழகி கொள்ளூங்கள். அதாவது பேச்சோ அல்லது பழக்க வழக்கங்களாகவோ இருக்கலாம்."நம்பி நடவாதே" என்பதற்கு, இன்னும் ஒருவரை நம்பி நீங்கள்  இருக்காதீர்கள் அதாவது இன்னும் ஒருவருடைய தயவை நீங்கள் நம்பி இருக்க முற்படாதீர்கள் என்பதாகும். நாம் நம்பியர்வர்கள் கடந்த காலத்தில் எத்தனை பேர் எமக்கு குழி பறித்தார்கள் என்பது நான் சொல்லி தெரிய வேண்டும் என்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஜீவன் சிவா said:

"நம்ப நட நம்பி நடவாதே". யாவரும் இதைப் பின்பற்றினால் எவரும் எவரையுமே நம்ப முடியாதே. அப்புறம் எப்படி நம்ப நடப்பது.

 யாரையும் நம்ப முடியாமல்த்தான் உள்ளது, ஆனாலும் யாராவது ஒருவரை நம்பித்தான் ஆகவேண்டும். வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி. அப்படியிருந்தும் பிழைத்துப் போகிறது. அவர்கள் நம்மை நம்ப வைத்து கழுத்தறுத்து விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.sundaytimes.lk/081116/images/Wimal-with-Sirimao.jpg

இது சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்வந்தபோது. அப்போது அவரை வரவேற்றவர்களை மண்டையில் போடவேண்டும் என தமிழரசு கட்சியினர் பிரச்சாரம் செய்தார்கள். அன்று அவர்களது பதவிக்கு அது தேவையாக இருந்தது. இன்று அவர்களது பதவிக்கு சிங்கள ஜனாதிபதி நல்லவர் என்று காட்டுவது தேவையாக உள்ளது. எல்லாம் அரசியல் தான்.

http://3.bp.blogspot.com/-VawvlV0Jy-I/VKnvnQ4t0lI/AAAAAAAAAOw/vgBwSXfXqxA/s1600/Eelam%2BDinamani%2BNews%2B1973%2B001.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, trinco said:

இவை அப்பையும் வாயால தான் வடை சுட்டிருக்கினம். இப்பவும் அதையே தான். அதுதான் இடையில் பொடியள் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்குது. இப்ப அவை பயங்கரவாதிகள் இவை சுத்தவாதிகள்...! சிங்களவனை விட எங்களையளை தான் சுத்திகரிக்க வேண்டி இருக்குது. நன்றி ரிக்கோ.. இது ஒரு வரலாற்றுப் பதிவு. தேடி இணைத்தமைக்கு மிக்க நன்றி. அன்று சிறிமாவோ ஆயுதம் இல்லாத பொலிஸோட தான் வந்திருக்கிறா.... பிறகெதற்கு அமிர்தலிங்கம்... தனிநாடு.. தமிழீழம் கேட்டு உரை போட்டவர். அப்ப சம்பந்தன் என்ன காதை பொத்திக்கிட்டு இருந்தவரோ..??! :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, trinco said:

http://www.sundaytimes.lk/081116/images/Wimal-with-Sirimao.jpg

இது சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்வந்தபோது. அப்போது அவரை வரவேற்றவர்களை மண்டையில் போடவேண்டும் என தமிழரசு கட்சியினர் பிரச்சாரம் செய்தார்கள். அன்று அவர்களது பதவிக்கு அது தேவையாக இருந்தது. இன்று அவர்களது பதவிக்கு சிங்கள ஜனாதிபதி நல்லவர் என்று காட்டுவது தேவையாக உள்ளது. எல்லாம் அரசியல் தான்.

http://3.bp.blogspot.com/-VawvlV0Jy-I/VKnvnQ4t0lI/AAAAAAAAAOw/vgBwSXfXqxA/s1600/Eelam%2BDinamani%2BNews%2B1973%2B001.jpg

இவை அப்பையும் வாயால தான் வடை சுட்டிருக்கினம். இப்பவும் அதையே தான். உவைட வடை சுடலை நம்பி எனியும் வேலைக்காது என்று தான் இடையில் பொடியள் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்குது. இப்ப அவை பயங்கரவாதிகள் இவை சுத்தவாதிகள்...! சிங்களவனை விட எங்கடையளை தான் சுத்திகரிக்க வேண்டி இருக்குது. நன்றி ரிங்கோ.

இது ஒரு வரலாற்றுப் பதிவு. தேடி இணைத்தமைக்கு மிக்க நன்றி. அன்று சிறிமாவோ ஆயுதம் இல்லாத பொலிஸோட தான் வந்திருக்கிறா.... பிறகெதற்கு அமிர்தலிங்கம்... தனிநாடு.. தமிழீழம் கேட்டு உரை போட்டவர். அப்பவே இணங்கிப் போயிருந்தா.. இத்தனை அழிவுகள்.. இத்தனை காட்சிகள்.. சுத்தி சுத்தி யாழ் நகரில்.. இத்தனை படப்பிடிப்புக்கள் என்று அவசியம் வந்திராதே. புலி வாலுகள்.. புலம்பெயர் வாலுகள்.. வியாபாரிகள் என்று சொல்லாடல்களே வந்திராதே. அப்ப சம்பந்தன் என்ன காதை பொத்திக்கிட்டு இருந்தவரோ..??! :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், Trinco  நீங்கள் பழைய பேப்பர் இணைப்புகளையும் போட்டு இப்படிக்கேள்விகளும் கேட்டால்  நங்கள் யாழ் பக்கமே வரமாட்டம் சரியோ:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

படம் காட்டுவதற்கும் உணர்ந்து நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஆனால் அதை புரிய கொஞ்சம் விஷயம் தெரியவேண்டும் .

அட ...அட.... இதுக்குதான் இவயளிட்ட கிளாஸ் எடுக்கணும் நிக்கிறமுறையிலேயே எப்படி விஷயத்தை கண்டுபிடிக்கினம்....
தொடர்ந்து கிளாஸ் எடுங்கோ .....நல்லா வருவீங்க ...கடைசில நிக்கிறவர் யார் என்று மறந்திடபோகுது 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

படம் காட்டுவதற்கும் உணர்ந்து நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஆனால் அதை புரிய கொஞ்சம் விஷயம் தெரியவேண்டும் .

ஆஹா வந்திட்டாரையா வந்திட்டார். அதி மேதாவி. இதையே  டேவிட் கமரூன் செய்தால் அதுக்கு ஆயிரம் நக்கல் வேற. 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனை, வடக்கில் வசந்தம் பலருக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.