Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் பணம் வசூலிக்கும் நாம் தமிழர் கட்சி!

Featured Replies

புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் பணம் வசூலிக்கும் நாம் தமிழர் கட்சி!

தமிழக தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரத்தியேகமாக கையடக்கத் தொலைபேசிகளுக்கு இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் பகிரப்படுவதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் தமிழர், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பதங்களை பெருவாரியாக பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சி, தமிழர்களே தமிழகத்தை ஆழவேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

இதனை மையப்படுத்தியே, தமிழகத்தில் தமது தேர்தல் பணிகளுக்காக புலம்பெயர் தமிழரிடம் இவ்வாறு நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக எமக்குத் தகவலளித்த புலம்பெயர் இலங்கைத் தமிழர் தெரிவித்தார்.

தனது கையடக்கத் தொலைபேசிக்கு இந்த தகவல் பிரத்தியேகமாக அனுப்பப்ட்டுள்ளதாகவும், இதனையடுத்து தான் பல நண்பர்களிடம் விசாரித்தபோது, பல நண்பர்களுக்கும் இந்த தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தகவலளித்தார்.

இந்த நிதி சேகரிக்கும் திட்டத்திற்கமைய நாம் தமிழர் கட்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஏற்கனவே பெருமளவிலான நிதியை அனுப்ப ஆரம்பித்துள்ளதாகவும் எமக்குத் தந்தவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த தகவலையும் எமது இணையத்தளத்திற்கு அவர் அனுப்பிவைத்தார்.

நன்கொடை வழங்க - நாம் தமிழர் கட்சி

Account Name: Naam Thamizhar Katche Bank Name: Indian Overseas Bank

Account Number: 168702000000150 ISFC code - IOBA0001687 
Branch - Rajaji 
Bhavan, Besant Nagar, Chennai

w w w . naamtamilar . o r g

எவ்வாறாயினும், இதுகுறித்து புலம்பெயர் தமிழர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, நாம் தமிழர் கட்சி விடுதலைப் புலிகளையும், புலிகளின் தலைவரையும் விற்பனைப் பொருளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

http://www.tamil.srilankamirror.com/news/item/7177-naam-tamilar-seeman

13 minutes ago, Kashni said:

நல்லவிடயம், பலர் அனுப்ப தொடங்கிவிட்டார்கள், இந்த ஒரு சிலரால்தான் எங்கள்
போரட்டமும் தோற்கடிக்கப்பட்டது. இந்த வைக்கோல் பட்டறைகளை ஒன்றும் சொய்யமுடியாது.

விரைவில் அனுப்ப வேண்டும் பணம்.

http://www.naamtamilar.org/donate-us/

நல்லவிடயம், பலர் அனுப்ப தொடங்கிவிட்டார்கள்.

விரைவில் பணம் அனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு கோடி அனுப்பலாம் என்று இருக்கேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நானும் ஒரு கோடி அனுப்பலாம் என்று இருக்கேன்.

ரூபாவா? டொலரா?

  • கருத்துக்கள உறவுகள்

இன.. நம்பிக்கையுள்ள.. விருப்பமுள்ள மக்கள் தங்கள் தார்மீகக் கடமையை செய்வார்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

ரூபாவா? டொலரா?

பழைய (செல்லா) சிம்பாப்வே டொலர். ஒரு அரசியல் செல்லாக்காசுக்கு இதுவே ஓவர்.

என்னிடம் கனேடியன் ரயர் காசு இருக்கு அனுப்பிவிடுவம் .

1 hour ago, arjun said:

என்னிடம் கனேடியன் ரயர் காசு இருக்கு அனுப்பிவிடுவம் .

கனேடியன் ரயர் காசு அவ்வளவுக்கு நக்கலாய் போச்சுதோ? tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

கொடுப்பவர்கள்  எந்தக்கேள்வியும் எந்த கட்டுப்பாடும் பேசாது கொடுக்கப்போவதாக  சொல்கிறார்கள்

வாழ்க்கையில் கொடுக்கவே போவதில்லை

அதற்குள் நையாண்டி

பதைபதைப்பு

நக்கல்....

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

கொடுப்பவர்கள்  எந்தக்கேள்வியும் எந்த கட்டுப்பாடும் பேசாது கொடுக்கப்போவதாக  சொல்கிறார்கள்

வாழ்க்கையில் கொடுக்கவே போவதில்லை

அதற்குள் நையாண்டி

பதைபதைப்பு

நக்கல்....

பஞ் டயலாக்கு ஒன்று சொல்லுறேன் கேட்டுக்கோங்க,

நல்ல காரியத்து கொடுத்தவன் அழிந்ததாயும்

நாதாரிக்கு கொடுத்தவன் வாழ்ந்ததாயும்

சரித்திரம், பூளோகம், இராசயனவியல் எதுவுமே இல்ல ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பஞ் டயலாக்கு ஒன்று சொல்லுறேன் கேட்டுக்கோங்க,

நல்ல காரியத்து கொடுத்தவன் அழிந்ததாயும்

நாதாரிக்கு கொடுத்தவன் வாழ்ந்ததாயும்

சரித்திரம், பூளோகம், இராசயனவியல் எதுவுமே இல்ல ?

அதைவிட சுருக்கமா ...
பிறந்தவர் எவரும் தொடர்ந்து வாழ்வதில்லை என்று சொல்லி இருக்கலாம்.

எமாத்துறவந்தான் உலகில் கொடி கட்டி வாழ்கிறான்.

மூன்றாம் உலகை சுரண்டும் நாடுகளே உலகில் முதன்மை நாடுகள் 

முதலாம் நாடுகளுக்கு வரி கட்டுறவன் 
மூன்றாமுலகில் வாழ்பவரை காட்டிலும் வசதியுடன் வாழ்கிறான்.  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

பஞ் டயலாக்கு ஒன்று சொல்லுறேன் கேட்டுக்கோங்க,

நல்ல காரியத்து கொடுத்தவன் அழிந்ததாயும்

நாதாரிக்கு கொடுத்தவன் வாழ்ந்ததாயும்

சரித்திரம், பூளோகம், இராசயனவியல் எதுவுமே இல்ல ?

நான் சுயநினைவோடு உள்ளவரைக்கும்

எனது பக்கெற்றுக்கள் எவரும் கையை வைத்து எடுக்காதவரைக்கும்

எடுத்து கொடுக்காதவரைக்கும்

அது எனது முடிவு.

அதை தட்டிக்கேட்கும் உரிமை எவருக்குமில்லை.

நல்ல காரியம்

நாதாரிக்காரியம்

அழிவது

வாழ்வது 

எனது கையில்

அதை மற்றவர் எடுப்பதற்கு ஏது உரிமை.....??

போராட போகாதவர்கள் அள்ளி கொடுக்கிறம் ? என்று சொல்லியாவது திருப்தி படட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் தன்ர காசை கொடுத்தால் என்ன பிரச்சனை? போரடப் போய் மக்களின் காசை கரியக்கினவர்களை என்ன செய்வது? கொடுத்தவன் சொல்லிக்காட்னினால் என்ன?

யாழ் களத்தில் உள்ள யாராவது சீமானிற்கு கொடுத்துள்ளார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

அவனவன் தன்ர காசை கொடுத்தால் என்ன பிரச்சனை? போரடப் போய் மக்களின் காசை கரியக்கினவர்களை என்ன செய்வது? கொடுத்தவன் சொல்லிக்காட்னினால் என்ன?

யாழ் களத்தில் உள்ள யாராவது சீமானிற்கு கொடுத்துள்ளார்களா? 

எந்த நிலையிலும்  தமிழக மக்களுக்கு

தலைவர்களுக்கு பணம் கொடுத்ததில்லை

கொடுக்கவும் மாட்டேன்

காரணம் எங்கள் தாயகத்தை விட தமிழகம்  உட்பட

எவருமே இழிவான நிலையில் இல்லை என்பதே எனது தனிப்பட்ட நிலை.

எனது தாயக மக்கள் இருக்கும் நிலையில் எமது வளங்கள் யாவும் அவர்களை நோக்கியே இருக்கணும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

அதேநேரம்

மாறுபட்ட அரசியல் சிந்தனை 

வேறுபட்ட பார்வைகள்

எதிர்பார்ப்புக்கள்

அனுசரணையான போக்குக்கள்....

இருக்கலாம்.

அது அவரவர் விருப்பம்

ஆனால் நானறிய சீமானுக்கு காசு அனுப்பிய எவரையும் கண்டதில்லை

தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையாவது கட்டாயபடுத்தி பணம் பறித்தால் குற்றம்.

விரும்பி கொடுத்தால் கொடுக்கட்டுமே.

மற்றவர்கள் ஏன் துள்ளிக் குதிப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

நன்றி விசுகு

எனக்கும் உதவி செய்ய ஆசை தான்  ஆனால் அனுப்புற காசு சீமான் அவர்களை சென்றடையுமா? இதைப்பற்றி சீமான் அவர்கள் ஏதும் கூறியுள்ளாரா? 

17 minutes ago, ஈழப்பிரியன் said:

யாரையாவது கட்டாயபடுத்தி பணம் பறித்தால் குற்றம்.

விரும்பி கொடுத்தால் கொடுக்கட்டுமே.

மற்றவர்கள் ஏன் துள்ளிக் குதிப்பான்.

நானும் இதே கண்ணோட்டத்தில் சில நாட்களின் முன் யாழ் களத்தில் பகிரப்பட்ட கருத்தாடல் ஒன்று சம்மந்தமாக எனக்குள் சிந்தித்தேன். ஆனால், பலவிதமாக யோசித்து பார்த்தபோது "யாராவது காசு கொடுப்பவர்கள் கொடுக்கட்டும் நான் கொடுக்காதவரை எனக்கு ஒன்றும் இல்லை" எனும் போக்கில் விடயங்களை அணுகுவது உண்மையில் சரியானதா என்று எனக்குள் கேள்வி. ஏன் என்றால்.... சமூக அக்கறை என்பதன் அர்த்தம் மற்றவர்களுக்கானது மட்டும் இல்லை. அது என்னையும் எதிர்காலத்தில் பாதிக்கும். உதாரணமாக, பிழையான ஒரு விடயம் மற்றவர்களால் அவதானமில்லாமல் ஊக்குவிக்கப்பட்டது உருவாக்கப்பட்டால் கடைசியில் அது என்னையும் பாதிக்கும்போது ஆரம்பத்தில் நான் மெளனமாய் இருந்ததன் விளைவை நானும் எதிர்காலத்தில் அனுபவிக்கவேண்டியே வரும். 

எனவே, நான் செய்வதை செய்வேன், கொடுப்பதை கொடுப்பேன், காசு, நேரம், உழைப்பு என்னுடையது, உனது பிரச்சனை என்ன என்று அடுத்தவரை பார்த்து கேட்பதும் நியாயமானதா என்பது கேள்விக்குறியே. ஏன் என்றால் நான் ஊக்குவிக்கின்ற ஓர் விடயம் அடுத்தவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கும் என்றால் அடுத்தவர்கள் ஏன் பிழையான ஓர் விடயத்தை நான் ஊக்குவிக்கவேண்டும் என்று என்னை கேட்டால் அது தவறு என்று சொல்லலாமா? சொல்லக்கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை தீர்ந்து விட்டது கலைஞன்.

விசுகு,

உங்கள் பணம் கொடுக்கும் உரிமையையையோ அல்லது அது எங்கே போகுது என்பதை பற்றியோ நீங்கள் மட்டும்தான் முடிவெடுக்க முடியும்.

அது உங்கள் முழு உரிமை.

அதே போல் அது ஒரு உருப்படாதா காரியம் என்று எனக்குப் பட்டால் அதைச் சொல்லுவது என் முழு உரிமை.

  • கருத்துக்கள உறவுகள்

சமூக அக்கறை உள்ளவர்கள் கேள்விகேட்க ஜனநாயக நாடுகளில் உரிமை உள்ளது. எனவே எனது பணத்தைக் கொடுக்கின்றேன் உனக்கு அதில் என்ன பிரச்சினை என்று கேட்பவர்களுக்கு அப்படிப் பணத்தைக் கொடுத்து ஊக்குவிப்பதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் "கெடுகிறன்; பந்தயம் பிடி" என்பவர்களை கெடுகுடி சொல்கேளாது என்று விட்டுவிடவேண்டியதுதான்.

பி.கு. கட்டுக்காசையும் இழக்கப் போகும் நாம் தமிழர்களுக்கு இளிச்சவாய் ஈழத்தமிழன் உதவ இருக்கின்றான் என்ற செய்தியைச் உலகறியச் செய்யவேண்டியது சிலருக்கு தேசியக் கடமை என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.<_<

  • கருத்துக்கள உறவுகள்

இங்கின வாறவை என்ன சொல்லினம்.. தி முக வுக்கும்.. அதிமுகவுக்கும் கொடுக்கனுன்னா. இல்லை டக்கிளஸ்.. சித்தார்த்தனுக்கு கொடுக்கனுன்னா..?!

இப்ப உங்கட அரசியல் தான் என்னா.. முன்னாள் போராளிகளின் கஸ்டத்தை வைச்சு ஒப்பாரி வைப்பது மட்டும் தானா..??! :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கீர்த்தி said:

எனக்கும் உதவி செய்ய ஆசை தான்  ஆனால் அனுப்புற காசு சீமான் அவர்களை சென்றடையுமா? இதைப்பற்றி சீமான் அவர்கள் ஏதும் கூறியுள்ளாரா? 

கீர்தி,

அதிக பிரசங்கிதனமாய் உங்களுக்கு அட்வைஸ் பண்ணவில்லை. அப்படி தெரிந்தால் மன்னிக்கவும்.

எமக்காக போராடிய பலருக்கு எம்மாலானதை செய்யும் பல திட்டங்கள் யாழ் நாற்சந்தி எனும் பகுதியில் நடந்து வருகிறது.

சென்னையில் பொறுத்த இடத்தில் வீட்டுக்குள்ளே கோழி வளர்க்கும் அளவு பெரிய விஸ்தீரணத்தில் வீடு, மனைவியின் பலகோடி பெறுமதியான சொத்துக்கள், தோட்டம், கார், என சீமான் வெல்செட்டில்ட்.

உங்கள் உதவியை எமக்காக தம் வாழ்வை தொலைத்து விட்டு இப்போ வறுமையில் தவிப்போர்க்கு தரலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கேட்கேக்கையும் புறுபுறுப்பு.. இப்பவும் அதே. இதைத் தவிர எம்மவர்கள் செய்து முடித்தது என்ன.. உலகம் எல்லாம் பொருண்மிய அசைலம் அடிச்சது தான். அரசியல் அகதிகள் என்று உள்ள பொய்களை புரட்டுக்களை வைச்சு... இட்டுக்கட்டி. இதனை நாம் தமிழரும் செய்தால்.. நாங்கள் சந்தோசப்படுவம். மற்றும்படி.. புறுபுறுக்கத்தான் செய்வம்.  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.