Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனும் தலைக்கனமும்....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனும் தலைக்கனமும்.... 

சம்பந்தனும் தலைக்கனமும்.... 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் தலை விதி என்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்,  அண்ணை?

அமிர்தலிங்கமும் எதிர்க்கட்சித் தலைவராயிருந்த காலத்தில... இப்படித் தான் தலைக்கனம் பிடிச்சுத் திர்ந்தாதாகச் சொல்லுவார்கள்!

இதை விட ஒரு சிங்களவன் கொஞ்சம் ஈர மனதோடு.. பிரச்சனைகளைக் கேட்பான் என்று நினைக்கிறேன்!

மேட்டுக்குடித் திமிர் என்பதைத் தவிர...வேறு ஒன்றும் கூற முடியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காட்சியை இன்னொரு ஐரோப்பிய ஒளியூடகமொன்றில் பார்த்தபோது எனக்கு இவரெல்லாம் ஒரு தலைவரா(?) என்ற எண்ணமே மேலோங்கியது.

 ஒரு தமிழ்க்குடிமகனின் கருத்தைக்கேட்கிறாரா அல்லது பத்திகையை மேய்கிறாரா என்பது மிகப்பெரும் வினா! இவர்களை நம்பியிருந்தால் தமிழினத்தின் அழிவையாராலும் தடுக்கமுடியாது என்பதற்கான சான்றாக இந்தக்காட்சியமைகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்கள்  இவர்களை  பற்றி ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதில் சொல்லவேண்டிய தமிழ் தலைவர்களே இப்படி நடக்கும் போது!!!!!!
இலங்கை அரசியலில் நடக்கும் மறைமுக விளையாட்டுக்களை நீங்களே கணக்கிடுங்கள்.

வழமையாய் சம்சும் கோஷ்டிக்கு செம்பு தூக்குறவை ஒரேயடியாய் வராமல் தயவு செய்து வரிசயிலை வந்து பஞ்சபுராணம் பாடவும்.....:cool:
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பதில் சொல்லவேண்டிய தமிழ் தலைவர்களே இப்படி நடக்கும் போது!!!!!!
இலங்கை அரசியலில் நடக்கும் மறைமுக விளையாட்டுக்களை நீங்களே கணக்கிடுங்கள்.

வழமையாய் சம்சும் கோஷ்டிக்கு செம்பு தூக்குறவை ஒரேயடியாய் வராமல் தயவு செய்து வரிசயிலை வந்து பஞ்சபுராணம் பாடவும்.....:cool:
 
இனி அரசாங்கத்தின் பக்கம் துதி பாடினால் நல்லது நடக்கும் தமிழ் மக்களுக்கு 

நிலம் கூட அரசாங்கம் தான் விடுவிக்கிறது இவர்கள் அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்

போனதுதான் போனீர்கள் அந்தாள் பேப்பர் படிக்கிற நேரமே போறது? நாளைக்கு பாராளுமன்றத்தில ஓங்கி குரல் குடுக்கிறதுக்கு ஏதாவது பிரச்சனை வந்திருக்கா என்று தேடிக்கொண்டிருக்கிறார். உதெல்லாம் எலெக்சன் வரேக்கை கதைக்கிற கதையல்லோ. உங்களுக்கும் எதை எந்த நேரம் கதைக்கிறதென்ற விவஸ்தை இல்லாமற் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இது காலம் கடந்த ......

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் எனது எழுத்துக்களில் இவருக்கு எந்த மரியாதையும் இருக்காது என்பதை நிர்வாகத்தினருக்கும்

உறவுகளுக்கும்  தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது சார்ந்து இங்கு இவரை ஆதரித்து

இவர் தமிழருக்கு ஒரு தீர்வைத்தருவார் என  எழுதும் கருத்தாளர்களின் பதில் என்ன என அறிய ஆவல்.

ஒரு  எதிர்கட்சி  தலைவரை  அதுக்கான  வரையறையுடன்  சந்திக்க  வேணும் ,நேரம்  காலம்  ஒதுக்கி  பார்க்க  வேண்டும்  இவ்வாறு  திடீர்  என  போய்  நின்று  சும்மா  இருப்பவரிடம்  கேள்விகள்  கேட்டால்  பதில்  இவ்வாறுதான்  வரும் 

இதை  ஏற்பாடு  செய்தவர்கள்  அதை  கவனித்து  இருக்க  வேணும்  யாரோ  பின்னாடி  இருந்து  ஏவி  விடுறான்  ,என்று  போய்  நிண்டுகொண்டு  பேசுவது  ஒரு தலைவரை  அவமதிக்கும் செயல் , விடியோவை  எடுத்து  ஏற்றுவது  மட்டும்  ஒரு  வேலையாக  சம்மந்தர்  எங்கு  போனாலும்  பின்னாடி  ஒரு  குறுப்  திரியும்,  அவர்  என்ன பேசுறார்  என்பதை  விட   எங்கு  நிண்டவர்கள்  என்ன  சம்மந்தரை  பேசுறார்கள்  என விடியோ  எடுக்க ..

ஆகவே  இதுவும்  ஒரு  திட்டமிட்ட  சேறடிப்பு  நிகழ்வாகவே தெரிகிறது  ஏனெனில்  உத்தியோகபூர்வ  சந்திப்பு  இல்லை  என்பதால் .

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த வீட்டுக்குள் நாய் புகுந்த மாதிரி இவர்கள் புகுந்தார்கள் என்று கூறுகிறீர்கள். 

நான் பேப்பர் படிக்கும் நேரம் இது என்று சம்பந்தர் சந்தப்பை மறுத்திருக்கலாம் அல்லவா.

சந்திக்க சம்மதித்துவிட்டு அவர்களை அவமானப்படுத்தும் வித்த்தில் சம்பந்தர் நடந்திருக்கிறார். 

23 minutes ago, அஞ்சரன் said:

13 minutes ago, MEERA said:

திறந்த வீட்டுக்குள் நாய் புகுந்த மாதிரி இவர்கள் புகுந்தார்கள் என்று கூறுகிறீர்கள். 

நான் பேப்பர் படிக்கும் நேரம் இது என்று சம்பந்தர் சந்தப்பை மறுத்திருக்கலாம் அல்லவா.

சந்திக்க சம்மதித்துவிட்டு அவர்களை அவமானப்படுத்தும் வித்த்தில் சம்பந்தர் நடந்திருக்கிறார். 

ஒருவேளை  அப்படி  மறுத்து  இருந்தால்  விடியோ  மாறி  வந்திருக்கும்  ........சந்திக்க   வந்த  முன்னாள்  கைதிகளை  விரட்டினார்  சம்மந்தர்  என ஏனெனில்  எங்களுக்கு  வேணும் சம்ந்தரை  கேவலபடுத்துவது  மட்டுமே .

இதில்  தமிழன்  ஒற்றுமை  தனிநாடு  தீர்வு  என வெறும்  பேச்சுக்கள்  வேற போங்க ....உருப்படியாக  என்ன தான்  செய்து  இருக்கிறம்  இப்படியான  வசைவுகளை  தவிர .

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் பேப்பரைப் பறிச்சிட்டு.. பிடரில ரெண்டு கொடுத்திட்டு வந்திருப்பன்... தாய் தகப்பன் வளர்ப்புச் சரியில்லை.. சம்பந்தருக்கு. இவர் இப்படின்னா.. இவருடையை சிஷ்யன் சும்.. எப்படி இருப்பார்.

மக்களின் வாக்குகளில் பதவிகளை அனுபவிக்கும் இவர்கள் மக்களின் பிரச்சனையை செவி மடுக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும். இன்றேல்.. மக்கள் அளித்த வாக்குகளுக்காக செயற்பட முடியல்லைன்னா.. பதவியை விட்டிட்டு போயிடனும். சரியான பொருத்தமான ஒருவர் அந்த இடத்தை நிரப்பலாம். 

இவர்களுக்கு.. வாக்குப் போட்ட மொக்குக் கூட்டமான மக்கள் தான் சிந்திக்கனும். இவர்களை நம்பி இருந்ததால் தான் ஒரு இனப்படுகொலையையே சிங்களவனால் நடத்தி முடிக்க முடிஞ்சிருக்குது. அதுக்கும் இவர்கள் மறைமுகமாக துணைபோயே இருப்பர். tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித்தலைவரா?

மண்ணாங்கட்டி....

யாருடைய வாக்கில் வந்தது இந்த பதவி???

அந்த மக்கள் தமது பிரச்சினையை சொல்லப்போனால்

பேப்பர் படிப்பதா?

உலகத்தில்  எங்காவது உண்டா இந்த அநியாயம்

**************

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தான் 2016 இல் அதிசயத்தை நிகழ்த்தி முடிக்கப் போயினம்.  இன்னும் 8 மாதம் தான்...  அந்த டூப்பும் டோப்பும்.. டமார் டமார் என்று வெடிச்சுத் சிதறப் போகுது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்த மக்களுக்கு சம்பந்தன் ******** காட்டியிருக்கிறார்.வாக்களித்த மக்களை மக்கள் பிரதிநிதி எந்த நேரமும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.சம்பந்தர் பேப்பர் ஒழுங்காய் படித்திருந்தால் அவருக்கு யாரும் விளக்கம் சொல்ல வேண்டிய தேவையே இருக்காது.வாக்களித்த கூழ்முட்டைத் தமிழருக்கு இது வேணும்.

இப்படித்தான் கமரோன் யாழ்ப்பாணம் வந்த போதும் மக்களைச் சந்திக்காமல் ஓடினவர்.அவருக்கு வக்காலத்து வாங்குபவர்களை ******* ********** பார்க்கிறேன்.

சம்பந்தர் ஒரு வாழும் வீர்ர் தான் வாக்களித்த மக்களை இப்படி அவமானப்படுத்தின வாழும் வீர்ருக்கு எனது வாழ்த்துக்கள்.மானம் கெட்ட தமிழன்.சீ தூ!!!!

Edited by நியானி
தணிக்கை

சம்பந்தர் சரியான தடிப்பு பிடித்தவர் என்பது தெரிந்த விடயம் தான் ,

கனேடிய வானொலி ,பி பி சி பேட்டிகளில் கூட தனக்கு பிடிக்காத கேள்விகளை கேட்டதற்காக   தொலைபேசியை துண்டித்தவர் .

இதற்குள் அமிரை கொண்டு வந்து இழுப்பது மகாதவறு .அவரின் அரசியல் பிடிக்காமல் இருக்காலாம் ஆனால் எப்போதும் முகம் சுழிக்காமல் தம்பி வாரும் என்று இன்முகத்துடன் வரவேற்பவர் .சிவசிதம்பரம் ,யோகேஸ்வரன் போன்றவர்கள்  தனிப்பட மிக நல்ல மனிதர்கள் .

இந்தியாவில் இவர்களை சந்திக்கும்போது சம்பந்தர் எப்போதும் சாபரி சூட்டுடன் 555 சிகெரட்டை இழுத்துக்கொண்டு ஸ்டைலாகதான் இருப்பார் .திருகோணமலை நண்பர்களிடம் விசாரித்தபோது பணக்கார பரம்பரை ,லோயர் காரை விட்டே இறங்கமாட்டார் என்று எல்லாம் சொன்னார்கள் .அதைவிட அதிலும் பேய்காய் என்றார்கள் .

அமிரின் இறப்பிற்கு பன் அந்த இடைவெளியை நிரப்ப அப்போது இவர்தான் ஒரே தெரிவாக இருந்தார் .

 .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, அஞ்சரன் said:

ஒரு  எதிர்கட்சி  தலைவரை  அதுக்கான  வரையறையுடன்  சந்திக்க  வேணும் ,நேரம்  காலம்  ஒதுக்கி  பார்க்க  வேண்டும்  இவ்வாறு  திடீர்  என  போய்  நின்று  சும்மா  இருப்பவரிடம்  கேள்விகள்  கேட்டால்  பதில்  இவ்வாறுதான்  வரும் 

இதை  ஏற்பாடு  செய்தவர்கள்  அதை  கவனித்து  இருக்க  வேணும்  யாரோ  பின்னாடி  இருந்து  ஏவி  விடுறான்  ,என்று  போய்  நிண்டுகொண்டு  பேசுவது  ஒரு தலைவரை  அவமதிக்கும் செயல் , விடியோவை  எடுத்து  ஏற்றுவது  மட்டும்  ஒரு  வேலையாக  சம்மந்தர்  எங்கு  போனாலும்  பின்னாடி  ஒரு  குறுப்  திரியும்,  அவர்  என்ன பேசுறார்  என்பதை  விட   எங்கு  நிண்டவர்கள்  என்ன  சம்மந்தரை  பேசுறார்கள்  என விடியோ  எடுக்க ..

ஆகவே  இதுவும்  ஒரு  திட்டமிட்ட  சேறடிப்பு  நிகழ்வாகவே தெரிகிறது  ஏனெனில்  உத்தியோகபூர்வ  சந்திப்பு  இல்லை  என்பதால் .

ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை திடீர் என்று பார்க்க முடியுமா? பேசமுடியுமா? அப்படியாயின் சம்பந்தைரை நினைத்த மாத்திரத்தில் உடனடியாக சந்திக்க முடியுமா?  
நான் நினைக்கிறன் சம்பந்தன் கச்சான் கடலை வித்துக்கொண்டிருக்கேக்கை குறுக்காலை போய் குழப்பிப்போட்டாங்கள் எண்டு.....
வந்தாரை மதிக்க தெரியாதவர் எல்லாம் தமிழர் தலைவராம் எதிர்க்கட்சி தலீவராம்....tw_rage:
செம்பு பத்திரம்...பத்திரம் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, arjun said:

சம்பந்தர் சரியான தடிப்பு பிடித்தவர் என்பது தெரிந்த விடயம் தான் ,

கனேடிய வானொலி ,பி பி சி பேட்டிகளில் கூட தனக்கு பிடிக்காத கேள்விகளை கேட்டதற்காக   தொலைபேசியை துண்டித்தவர் .

இதற்குள் அமிரை கொண்டு வந்து இழுப்பது மகாதவறு .அவரின் அரசியல் பிடிக்காமல் இருக்காலாம் ஆனால் எப்போதும் முகம் சுழிக்காமல் தம்பி வாரும் என்று இன்முகத்துடன் வரவேற்பவர் .சிவசிதம்பரம் ,யோகேஸ்வரன் போன்றவர்கள்  தனிப்பட மிக நல்ல மனிதர்கள் .

இந்தியாவில் இவர்களை சந்திக்கும்போது சம்பந்தர் எப்போதும் சாபரி சூட்டுடன் 555 சிகெரட்டை இழுத்துக்கொண்டு ஸ்டைலாகதான் இருப்பார் .திருகோணமலை நண்பர்களிடம் விசாரித்தபோது பணக்கார பரம்பரை ,லோயர் காரை விட்டே இறங்கமாட்டார் என்று எல்லாம் சொன்னார்கள் .அதைவிட அதிலும் பேய்காய் என்றார்கள் .

அமிரின் இறப்பிற்கு பன் அந்த இடைவெளியை நிரப்ப அப்போது இவர்தான் ஒரே தெரிவாக இருந்தார் .

 .

 அர்ஜுன் அண்ணா,

அந்த ஆள் செய்ததுதான் சரி என்று எழுதாத அளவுக்கு நீங்கள் கருத்து எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சி.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு. 

இது மட்டுமல்ல, தினமும் சாம்பூர் மக்கள் இந்த கோதாரி அரசியல் வாதிமீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சொல்லி மாளாது.  இதெல்லாம் வடிவாக கல்குலேட் பண்ணிதான் இவரை எதிர் கட்சி தலைவராய் சிங்களம் போட்டிருக்கிறது. 
 
Edited by Sasi_varnam

எல்லாம் பிளான் பன்னி செய்யபட்டது சம்பச்தரை கொச்சைபடுத்த?????

7 minutes ago, Sasi_varnam said:

 அர்ஜுன் அண்ணா,

அந்த ஆள் செய்ததுதான் சரி என்று எழுதாத அளவுக்கு நீங்கள் கருத்து எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சி.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு. 

இது மட்டுமல்ல, தினமும் சாம்பூர் மக்கள் இந்த கோதாரி அரசியல் வாதிமீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சொல்லி மாளாது.  இதெல்லாம் வடிவாக கல்குலேட் பண்ணிதான் இவரை எதிர் கட்சி தலைவராய் சிங்களம் போட்டிருக்கிறது. 
 
சசி சம்பந்தன் நடந்துகொண்ட விதம் அப்பட்டமாக பிழை என்று தெரிகின்றது பிறகு எப்படி சரி என்று எழுதுகின்றது ,

சார்புநிலை எடுப்பவர்களுக்குத்தான் உந்த பிரச்சனை எனக்கல்ல .

பாலசிங்கம் இப்படி நடந்திருந்தால் சசி நீங்களும் அவர் செய்தது சரி என்றுதான் நின்றிருப்பீர்கள் ஆனால் நான் அப்படியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அஞ்சரன் said:

ஒரு  எதிர்கட்சி  தலைவரை  அதுக்கான  வரையறையுடன்  சந்திக்க  வேணும் ,நேரம்  காலம்  ஒதுக்கி  பார்க்க  வேண்டும்  இவ்வாறு  திடீர்  என  போய்  நின்று  சும்மா  இருப்பவரிடம்  கேள்விகள்  கேட்டால்  பதில்  இவ்வாறுதான்  வரும் 

இதை  ஏற்பாடு  செய்தவர்கள்  அதை  கவனித்து  இருக்க  வேணும்  யாரோ  பின்னாடி  இருந்து  ஏவி  விடுறான்  ,என்று  போய்  நிண்டுகொண்டு  பேசுவது  ஒரு தலைவரை  அவமதிக்கும் செயல் , விடியோவை  எடுத்து  ஏற்றுவது  மட்டும்  ஒரு  வேலையாக  சம்மந்தர்  எங்கு  போனாலும்  பின்னாடி  ஒரு  குறுப்  திரியும்,  அவர்  என்ன பேசுறார்  என்பதை  விட   எங்கு  நிண்டவர்கள்  என்ன  சம்மந்தரை  பேசுறார்கள்  என விடியோ  எடுக்க ..

ஆகவே  இதுவும்  ஒரு  திட்டமிட்ட  சேறடிப்பு  நிகழ்வாகவே தெரிகிறது  ஏனெனில்  உத்தியோகபூர்வ  சந்திப்பு  இல்லை  என்பதால் .

அண்ணை சும்மா வந்தவரைக்கும் இலாபம்  என்று   அடிச்சு விடாதிங்கோ ......
அண்மைக்காலமாய் ஐயா போகும் வரும் இடமெல்லாம் இப்படித்தான் கண்ட பாட்டிற்க்கு வாங்கித்தள்ளுறார்(பதில் இருந்தால் தானே சொல்ல)...தொடர்ந்து சக்தி டீ வி நியூஸ் பாருங்கோ... இங்கையும் தொடர்ந்து  பார்ப்பவர்கள் இருக்கினம்....இது சேறடிப்போ ....அப்போ சம்பூர் மக்களிடம் நடுரோட்டில வாங்கிக்கட்டியது.....? எதோ ஐயா தெரியாமல்,அறியாமல்  இவங்களை சந்தித்துப்போட்டார் அவங்கள் வீடியோ எடுத்து அப்லோட் பண்ணிட்டினம்  என்ற கணக்கில அடுக்கிறீங்கள்.
இவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் யாருக்கு என்ன பிரயோசனம் ....? நீங்கள் வேண்டுமென்றால் சேர்ட்டை தூக்கிவிட்டுகொண்டு திரியுங்கள்...
இவரின்ட கையாலாகாத்தனத்தை காட்டும் நிகழ்வே அன்றி ....மினக்கட்டு இவைகளுக்கு ஒரு சேறடிப்பு நிகழ்வு ...விடுவிக்க மாட்டேன் என்று ஒற்றை வார்த்தையில் இவரிட்ட சொன்னால் இவரால் என்ன புடுங்கமுடியும் ...வேண்டுமானால் மாவையை விட்டு போராட்டம் வெடிக்கும், பொறுமையை சோதிக்காதீர்கள் சர்வதேசத்திட்க்கு பதில்சொல்லவேண்டி வரும் என்று உறுமல் வறுவல்களை விடலாம் ...இவர் தீர்வினை புடுங்கிக்கொண்டு வருவார் 
,தீர்வு பார்சல் கட்டுப்பட்டு விட்டது எடுத்து தருவதில் தான் பிரச்சினை என்று கதை விட்டவர்களே இப்போது பம்மிக்கொண்டிருக்கினம் ....
நீங்கள் சும்மா குறுக்காலை புகுந்து அடிவாங்காதீர்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, arjun said:

சசி சம்பந்தன் நடந்துகொண்ட விதம் அப்பட்டமாக பிழை என்று தெரிகின்றது பிறகு எப்படி சரி என்று எழுதுகின்றது ,

சார்புநிலை எடுப்பவர்களுக்குத்தான் உந்த பிரச்சனை எனக்கல்ல .

பாலசிங்கம் இப்படி நடந்திருந்தால் சசி நீங்களும் அவர் செய்தது சரி என்றுதான் நின்றிருப்பீர்கள் ஆனால் நான் அப்படியல்ல.

பாலசிங்கம் ஐயாட்ட போய் நிண்டு மக்களின் அவலநிலை கதைக்கும் நிலைக்கு ...உங்கள் அதித கற்பனை வெறும் விதண்டாவாதம் மட்டுமே..

வந்தவர்கள் என்ன நோக்கத்திற்கென வந்தவர்கள் என சம்மந்தருக்கு சரியாகத் தெரியாது, அவர்களிடம் தான் மேற்கொள்ளும் ராஜ தந்திர நகர்வுகளை சம்மந்தர் விளக்கத் தேவையில்லை.
ஆனால் அவர்களை அன்பாக உபசரித்து நிலமைகளை விசாரித்திருக்கலாம், ஒரு உண்மையான தலைவன் விடுதலையான கைதிகள் தன்னைத் தேடி வருவதற்கு முன் தான் அவர்களைத் தேடிச் சென்றிருப்பார்........., சம்பந்தர் குறைந்த பட்சம் அந்த பத்திரிகையை யாவது மடித்து வைத்திருக்கலாம்......,

உயர் சாதிச் செருக்கு, உயர் பதவி /அதிகாரச் செருக்குகள் இவை தான் எமது தலை விதி

புலம் பெயர் தமிழர் தம்மால்  இயன்ற வரை தாயகத்தில் உள்ள இளையோருக்கு கல்வியூட்ட வேண்டும், அதி உயர் கல்விகளை அவர்கள் பெற நாம் வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும் , இது ஒன்று தான் அவர்களை சகல துன்பங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நாங்கள் குத்தி முறிந்தாலும் சம்பந்தரின் உயிர் உள்ளவரை 

அவர் கையில் தான் ஈழத் தமிழர்களின் தலைவிதி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.