Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது

Featured Replies

ஈழத்தின் முன்னணிப்  பாடகர் எஸ்.ஜே.சாந்தன் காலமானார்.
 
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
 
சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினா்.
 
1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.
 
முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.
 
இதன்போது 'மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.
 
இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.
 
அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.
 
1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.
 
அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/news/24353

  • Replies 51
  • Views 5.1k
  • Created
  • Last Reply

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Edited by போல்

  • தொடங்கியவர்

Image may contain: 1 person

 

  • கருத்துக்கள உறவுகள்

தாயகப்  போரின்  போது.... பல உணர்வு மிக்க பாடல்களை.. பாடியவர்.
அன்னாரின் மறைவுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரின் வீரம்செறிந்த போராட்டம் தலைமுறைகளுக்கும் அழியாமல் அறிவிக்கும் பணியை சாந்தன் அவர்களின் பாடல்களும் செய்துள்ளது.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!! Bildergebnis für பூ

ஆழ்ந்த அனுதாபங்கள்!

செய்தி திருத்தம்! ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

செய்தி திருத்தம்! ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில்

16996906_1844791162446409_1464959943_n.j

 
ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் சாந்தன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அவருக்கான தீவிர சிகிச்சைகள் இடம்பெற்று வருவதாகவும் யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இதேவேளை பாடகர் சாந்தனின் புதல்வர் கோகுலன் சாந்தன் தனது தந்தை இறந்துவிட்டதாக கூறிய செய்தியை அடுத்து சாந்தன் காலமாகியதாக செய்திகள் பரவத் தொடங்கின.
தற்போது அவரது மகன் கோகுலன் “அப்பாவின் நிலையினை கூறிய வைத்தியர்கள் அவரது அனைத்து அசைவுகளும் அடங்கிய நிலையிலும் நாடித்துடிப்பு காணப்படுவதாய் கூறி தங்கள் முழு முயற்சியையும் மேற்கொண்ட வண்ணம் உள்ளார்கள் அப்பா நலன் பெற அனைவரும் இறைவனை வேண்டுவோம்.” என முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/19113

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனை வேண்டுகிறேன் நலம்பெற

2ஆம் இணைப்பு – ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் உயிர் பிரிந்தது:-

16996906_1844791162446409_1464959943_n.j

 ஈழத்தின் புகழ்பெற்ற பாடகரான சாந்தன் என அழைக்கப்படும் குணரத்னம் சாந்தலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் 2.10க்கு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

ஈழத்தின் புகழ்பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் ஈழத்தின்  சிறந்த பாடகர். நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர்.

 

1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 26-02-2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.

இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

 
‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
 
இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார்.
 

1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.

இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்.

இவர் பாடிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார், ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா, இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற பல புரட்சிப் பாடல்கள் பிரபலமானவை. தன் புரட்சிகார பாடல்களால் உலக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்ற பாடகராகவும் மிளிர்ந்தவர்.

http://globaltamilnews.net/archives/19113

 

 

 

 

சாந்தன் உயிரிழந்தார்
 
 

article_1488099460-article_1488086803-Saஈழத்தின் புகழ்பெற்ற பாடகரான சாந்தன் என அழைக்கப்படும் குணரத்னம் சாந்தலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் 2.10க்கு உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/192197/ச-ந-தன-உய-ர-ழந-த-ர-#sthash.c4kyMGFe.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா கூட்டமும், அப்பலோ மருத்துவமனையும் யாழ்ப்பாணம் வந்தது எப்போது.........??????????

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார்

 

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். sg-santhan-dead.jpg

பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.16939634_983001111834747_357378336684569

தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.sg-santhan02.jpg

எண்பதுகளின் இறுதியில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற பாடலில் ஆரம்பித்து "களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....", "ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..", "கரும்புலிகள் என நாங்கள்...", "எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.

போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.sg-santhan01.jpg

கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

 

 
 

http://www.virakesari.lk/article/17095

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

அருமையான பாடகர், கண்ணன் கோஷ்டியில்  பாடியவர்....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பல எழுச்சிச்சிப்பாடல்களைப்பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இசைக்குயில் தன் இசையை நிறுத்திவிட்டது. 
ஆழ்ந்த இரங்கல்கள்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ எழுச்சிப் பாடல்களின் குரலாக என்றும் நிலைத்திருக்கும் பாடகர் சாந்தனின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen

  • கருத்துக்கள உறவுகள்

2005 ஆம் ஆண்டு வல்வை நெடியகாட்டு பிள்ளையார் முன்றலில் தாயகக்கலைஞர்களின் இசை நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் வளர்ந்து வரும் புதிய கலைஞர்களுடன் அமரர் திரு. சாந்தன் அவர்களும் இளையவர்களை ஊக்குவிக்குமுகமாக இணைந்து அந்நிகழ்வினைச் சிற்ப்புச் செய்தார். அச்சமயம் அந்நிகழ்வில் என்னால் எழுதப்பட்ட நெடியகாட்டு பிள்ளையார் மீதான பக்திப்பாடலை சாந்தன் அவர்கள் அழகாக சில மணித்துளிகளிலேயே இசையமைத்து பாடி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்த அனுபவம் மறக்கமுடியாதது. இன்றுவரைக்கும் வெள்ளி செவ்வாய் விசேட நாட்களில் அப்பாடல் அந்த ஆலயத்தில் ஒலித்தவண்ணம் உள்ளது. எனது எழுத்தில் முதன்முதல் இசையுடன் பாடப்பெற்ற பாடலும் அதுதான். தற்சமயம் அப்பாடலை இணைக்க முடியாத நிலையில் உள்ளேன். கைவசம் சரியான பதிவு இல்லை....

 

"வல்வையில் குடியிருக்கும் வன்னிமர நாயகா

சொல்லடுக்கிப் பாட வந்தேன் சொற்பதங்கள் தாருமய்யா

 

நெடியம்பதியானே நெஞ்சுருகிப் பாடுகின்றேன்

உன் வடிவைத் தினந்தினம் என் கண்களுக்குள் சூடுகின்றேன்.............."

 

அமரர் திரு சாந்தன் அவர்களுடைய மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தின் துயரில் நானும் எனது குடும்பமும் பங்கு கொள்கிறோம்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

போராட்ட காலத்திற்கு முன்னரும் தற்போதும் இநதிய திரையிசையிலேயே எமது ரசனை அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. எமது கலைஞர்கள் அவர்கள் படைப்புகள் இவ் ரசனை அடிமைத்தனத்தில் இருந்து வெளியே தனித்துவமாக வருவதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் எமது ரசனை இவ் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு தனித்துவமாக எமது மண் சார்ந்து எழுச்சிபெற்றிருந்தது. அக் காலத்தை உருவாக்கியதில் அமரர் சாந்தனின் குரலும் பங்கும் தனித்துவமானது. 

Edited by சண்டமாருதன்
எழுத்துப் பிழை

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.