Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி

Featured Replies

  • Replies 139
  • Views 20.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தான் முழுமையாக வாசித்து முடித்தேன்  நிழலி

அப்படியே சகல சுவைகளையும் கலந்து  

எமது தேசத்தின் மூச்சுடன் தருவதில்  தம்பி  நிழலி எப்பொழுதும் பிரியமானவர்

என்னிடம்  எப்பொழுதும் நிழலி  கேட்கும் (நேரிலும் சரி  திண்ணையிலும் சரி)

அண்ணை   ஊருக்கு எப்ப போவீர்கள் என்பது தான்.

அவரது பயணமும் 

அந்த பயணத்தினூடாக அவரது பார்வையும் 

நான் போனால் எப்படி என் இதயமிருக்குமோ அவ்வாறே உணரச்செய்தது

தொடருங்கள் 

நன்றி  நேரத்துக்கும் உங்கள் ஆக்கபூர்வமான எழுத்துக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

கொழும்பு - யாழ்ப்பாண பேருந்து எனும் ‘வெருட்டல்’ சேவை.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ‘யாழ் – கொழும்பு’ தனியார் சொகுசு (?) பேரூந்தில் செல்கின்றவர்கள் பலருக்கு பல விரும்பத்தகாத அனுபவங்கள் கிடைத்ததை அறிந்து இருந்தமையால்  அதை தவிர்த்து ரயிலில் செல்ல முதல் முடிவு செய்து இருந்தேன்.

ஆயினும் தனியப் போவது பம்பலாக இருக்காது என்பதால் மச்சானையும் இறுதி நேரத்தில் வரச் சொல்லிக் கேக்க, அவன் தனியாக வராமல் தன் மனைவியையும் இரு குட்டி வாண்டுகளையும் கூட்டிக் கொண்டு வர முடிவெடுக்க, ரயிலில் இனி இருக்கைகள முன்பதிவு செய்ய நேரம் போதாமையால் இறுதியில் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்தோம்.

யாழ் – கொழும்பு தனியார் சொகுசு (?) பஸ்களை சேவையில் ஈடுபடுகின்ற அநேக கம்பெனிகள் தமிழர்களின் கம்பெனிகள் தான். ஆனால் சாரதிகளாக சிங்களவர்களை தான் அதிகம் வைத்து உள்ளனர். இதன் காரணம் தமிழர்கள் சாரதிகளாக வர விரும்பான்மை அல்ல, வரும் பயணிகளிடம் சிங்களத்தில் கதைத்து தமிழ் பயணிகளை ‘வெருட்ட’. சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.

யாழ் கொழும்பு மார்க்கத்தில் ஈடுபடும் பேருந்து சேவையில் ‘PPT’ எனும் பேரூந்து சேவை ஒரு மோசமான உதாரணம் எனக் கேள்விப்பட்டு இருந்தேன். பேரூந்து சில கிலோ மீற்றர் கடந்து நகரப் பகுதிகளை தாண்டியபின் Air condition னை நிப்பாட்டி விடுவார்கள் என்றும், யன்னல்கள் திறக்க முடியாத அந்த பஸ்ஸில் வேர்த்து களைச்சு தான் ஊர் போய்ச் சேர்வார்கள் என்றும் அறிந்து இருந்தேன்.  எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிங்களத்தில் முரட்டுத்தனமாக கதைச்சு  வெருட்டி  பயணிகளை கேவலமாக நடத்துவர் என்றும் கேள்விப்பட்டு இருந்தமையால் எக்காரணம் கொண்டும் அந்த பஸ்ஸில் இருக்கைகளை முன் பதிவு செய்யாதே என்று மச்சானுக்கு சொல்லி இருந்தேன்.

பார்க்கின்றேன்.

கும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.

பல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.

இனி ஒரு போதும் இந்த சொகுசு பஸ்ஸில ஏறாதேயுங்கோ. நானும் ஒருபோதும் ஏறியதில்லை. சொந்த வாகனத்தில் பயணிப்பதால் பொதுப் போக்குவரத்து ஒரே ஒருமுறை தேவைப்பட்டது. போகும் போது கொழும்பு - பருத்தித்துறை - CTB. வரும்போது அப்போது கிளிநொச்சி வரைக்கும் புகையிரதம் ஓடியதால் பருத்தித்துறை - கிளிநொச்சி - சொந்த வாகனம் கிளிநொச்சி - கொழும்பு - புகையிரதம். என்னைக் கேட்டால், புகையிரதம் தான் பாதுகாப்பானதும் சொகுசானதும், ஆனால் இடங்கள் பார்ப்பது  கடினம். இடம் பார்க்க  வேண்டுமாயின் CTB பஸ் தான்.   

VW - Beatle எனக்கு பிடித்த கார். தொடர்ந்து வாசிக்கும் ஆவல்.

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் – 40 மணித்தியாலங்கள்

மாமாவின் கார் எம்மை பழைய பூங்கா வீதியால் கூட்டிக் கொண்டு செல்கின்றது.

பழைய பூங்கா வீதியின் மதில் சுவருக்கு அடுத்ததாக நான் படித்த பரியோவான் கல்லூரி சாம வேளை என்பதால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருக்கின்றது.

இந்த பழைய பூங்கா வீதியில் நான் பதின்ம வயதினான இருக்கும் போது தினமும் பயணித்து இருக்கின்றேன்.

ஒரு முறை  பயணித்த வேளை இலங்கை விமானப்படையின் விமானங்கள் குண்டுகளை பொழிந்து விட்டு போயிருந்தது. ஒருவர் வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றார். வீதி எங்கும் மரக்கிளைகளும் இலைகளும் குண்டு வீச்சில் சிதறிக் கிடக்கின்றன.  மரங்களின் பச்சையத்தின் கண்ணீர் மணம் துயர் அப்பி வீசுகின்றது. வீதி ஓரம் குண்டு வீச்சில் மாட்டுப்படாமல் பதுங்கி இருந்த நான் விமானங்கள் போன பின் ஓடிச் சென்று அவரது கைகளை பற்றி தூக்க முனைகின்றேன். ஒரு கை பிஞ்சு போய் அது மட்டும் தூக்குப்பட்டு தனிய வருகின்றது. அவர் உடல் சிதைந்து விட்டது. அப்படியே அதை அங்கு போட்டு விட்டு ஓடிப் போகின்றேன்

கார் பழைய பூங்கா வீதியில் இருந்து கொழும்புத்துறை வீதியில் இடப்பக்கமாக திரும்புகின்றது.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரி கண்ணில் படுகின்றது. எங்கள் வாலிப கனவுகளை அடை காத்த கிளிக்குஞ்சுகளின் கோட்டை அது. இதன் வாசல் கேட்டுக்கு முன்பாக எத்தனை தரம் என் சைக்கிளின் செயின் அறுந்து போயிருக்கும். கல்லூரி அருகே இருந்த ஷிரானி மிஸ்ஸின் கடையை கண்கள் தேடுகின்றது. ஷிரானி மிஸ்ஸின் நினைவுகளும் வந்து போகின்றது.

கார் அப்படியே விதானையார் ஒழுங்கை கடக்கின்றது.

இந்த ஒழுங்கையின் முடக்கில் ஒருவரை கதற கதற மண்டையன் குழு மண்டையில் போட்டதை அதிகாலை 5:30 மணிக்கு ரியூசன் போகும் போது நேரடியாக கண்டு இருக்கின்றேன்.  அந்த கணம் தந்த உதறலும் கொலையுண்டவரின் அலறலும் இதை எழுதும் போதும் எனக்குள் எழுகின்றது. இந்த படுகொலைக்கும் உத்தரவு கொடுத்த மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று முன்னால் எம்.பி / இன்றைய அரசியல் பிரமுகர் என்ற உயர் நிலைகளை வகித்த வண்ணம் இதமாக எலும்புத்துண்டுகள் பற்றி கனவு கண்டு கொண்டு கட்டிலில் தூங்கிக் கொண்டு இருப்பார்.

இப்ப கார் சந்தனமாதா கோயில் அருகே வருகின்றது. மனசில் ‘ஜின்’ கூந்தலில் இருந்து வரும் சன்சில்க் லைம் ஷாம்பு வின் வாசனை எழுகின்றது. ‘ஜின்’ எனும் எங்கள் வயசினை ஒத்த பேரழகியின் கடைக்கணுக்காக இந்த சந்தனமாதா கோவிலில் எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்து இருக்கும்! ஒரு முறை என்னுடன் படிச்ச ஒரு பெண் “ஜின் உன்னைப் பற்றி ஏன் என்னிடம் விசாரித்தாள்’ என்று கேக்க நான் கொஞ்ச நாட்கள் ‘எதுக்காக என்னைப் பற்றி விசாரிச்சாள்…அவளுக்கு ஏதும் ஐடியா இருக்கா என்னில்’ என யோசிச்சு யோசிச்சே பித்துப் பிடிச்சு அலைஞ்சு இருக்கின்றேன்.

இப்ப பாண்டியந்தாழ்வு என்று அழைக்கப்படும் நான் வாழ்ந்த பகுதிக்கு கார் வருகின்றது. நான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை கடக்கின்றது. வீட்டின் கேட்டில் சின்ன வயதில் நான் ஏறி ஊஞ்சலாடியதும், மதிலில் ஏறி அருகே இருந்த மாமரத்தில் தாவி மாம்பழம் உண்டதும் இன்னும் நிழலாக படிந்து இருக்கு. மாமரத்தின் பக்கத்தில் இருந்த பெரிய குரோட்டன் செடியில் ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. அதில் இருந்த தேனீக்களை புகை போட்டு கலைச்சு தேனை  திருடிய நாளில் இருந்து சரியாக ஐந்தம் நாள் நாம் இந்த வீட்டை விட்டு     நிரந்தரமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

கார் எம் வீடு தாண்டி நரசிம்ம ஞான வைரவர் கோயிலை கடந்து மாமாவின் வீட்டை அடைகின்றது. என் வீட்டுக்கும் மாமாவின் வீட்டுக்கும் இடையில் தூரம் இல்லை. இரு வீட்டிற்கும் இடையில் ஒரு வீடு, ஒரு கோயில், இன்னுமொரு வீடு என்று மிக அருகில் தான் மாமாவின் வீடு.

மாமாவின் வீடு!

இன்றும் கனவுகளில் அடிக்கடி வந்து போகும் வீடு. என் பால்ய கால தேவதையின் அரண்மனை அது. எம் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் இடையிலான வீதியில் தேவதையின் பாதம் பட்டு சாபவிமோசனம் பெற்ற கற்களில் இருந்து கிளம்பிய ஆண்களால் எங்கள் ஊர் ஒரு காலத்தில் நிரம்பி இருந்தது என நம்புகின்றேன். வைரவ கோயில் இருக்கும் அத்தி மரம் கூட அவளுக்காக உடனே காய்களாக்காமல் தன் பூக்களை ஏந்திக் கொண்டு இருந்திருக்கு.

இரவில் நிலவொளி ஒரு பசிய தாவரத்தின் மீது சிந்தும் போது ஏற்படும் அழகை என் தேவதை அன்று கொண்டு இருந்தாள்.

காலம் இன்று அவளற்ற வீட்டில் ஒரு விருந்தினராக வந்து தங்க வைக்கின்றது. இடையில் ஓடிய 27 வருடங்களில் கடந்து போன நாட்கள் எல்லாம் ஒரு வினாடியில் ஒடுங்கி போகாதா என மனம் அங்கலாய்க்கின்றது. வீட்டின் முகப்பில், உள் ஹோலில், பின்னால் இருக்கும் வாழை மரங்களின் பாத்திகளில், கிணற்றடியில், அதன் அருகே இருக்கும் உடுப்பு துவைக்கும் கல்லில், அடி வளவில் இருக்கும் நாவல் மரத்தின் கிளைகளில் எல்லாம் நாம் சிரித்து விளையாடிய தருணங்களின் சுவடுகள் இன்னும் ஒட்டியிருக்கின்றது என நம்புகின்றேன்.

காலை விடிந்து மதியம் எழுகின்றது.

(யாழ்ப்பாணம் – 40 மணித்தியாலங்கள் தொடரும். )

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி.... உங்கள்,  73  வயது மாமா... கார்  ஓடிய பாதைகள் எல்லாம். 
என்....  கண்முன்... விரிந்து.... இளைய காலத்தை தொட்டுச் சென்ற பருவங்கள்.

யாழ்.  அரச அதிபரின் வதி விடத்தில்  அந்த, காட்டுப் பூங்காவை, சுத்திகரிக்க  சாரணர் மாணவர்கள் தேவைப்பட்டார்கள்.  அந்த நேரம்....  என் உடம்பில்,   ஏற்பட்ட  காயத்தின் தழும்பு இன்றும்... என் உடலில் உள்ளதை,  பெருமையாக.... தடவிக் கொள்வேன். அந்தப்... பயிற்சியில் ஈடுபட்ட, பலர்... புலிப்படையில், பெரும் பதவிகள், வகிக்து..... மாவீரர்களாகி விட்டார்கள்.  

நீங்கள் சந்தன மாதா கோவில் என்று, குறிப்பிடுவது,
கொழும்புத்துறை...  அந்தோனியார், கோவிலையா?
அல்பிரட்  துரையப்பா..... வீடு  எல்லாம், அந்தப்  பகுதிக்குள் தானே... வருகின்றது.
அங்கு... ஒருவர், இசைக்கு....  பிரபலமாக இருந்தவர்.... 
"றீகல் ----  என நினைக்கின்றேன் 

நிழலி .... உங்கள் பதிவைப்  பார்த்து,   கனக்க  எழுத வேண்டும் போல் இருந்தது.
எல்லாம் நான்... பழகிய இடங்கள். அப்போ... நீங்கள், அரைக்  கால் சட்டையுடன்... சைக்கிள் ரயரை ஒட்டிய வயதாகவும்  இருக்கலாம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

யாழ்ப்பாணம் – 40 மணித்தியாலங்கள்

மாமாவின் கார் எம்மை பழைய பூங்கா வீதியால் கூட்டிக் கொண்டு செல்கின்றது.

பழைய பூங்கா வீதியின் மதில் சுவருக்கு அடுத்ததாக நான் படித்த பரியோவான் கல்லூரி சாம வேளை என்பதால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருக்கின்றது.

இந்த பழைய பூங்கா வீதியில் நான் பதின்ம வயதினான இருக்கும் போது தினமும் பயணித்து இருக்கின்றேன்.

ஒரு முறை  பயணித்த வேளை இலங்கை விமானப்படையின் விமானங்கள் குண்டுகளை பொழிந்து விட்டு போயிருந்தது. ஒருவர் வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றார். வீதி எங்கும் மரக்கிளைகளும் இலைகளும் குண்டு வீச்சில் சிதறிக் கிடக்கின்றன.  மரங்களின் பச்சையத்தின் கண்ணீர் மணம் துயர் அப்பி வீசுகின்றது. வீதி ஓரம் குண்டு வீச்சில் மாட்டுப்படாமல் பதுங்கி இருந்த நான் விமானங்கள் போன பின் ஓடிச் சென்று அவரது கைகளை பற்றி தூக்க முனைகின்றேன். ஒரு கை பிஞ்சு போய் அது மட்டும் தூக்குப்பட்டு தனிய வருகின்றது. அவர் உடல் சிதைந்து விட்டது. அப்படியே அதை அங்கு போட்டு விட்டு ஓடிப் போகின்றேன்

கார் பழைய பூங்கா வீதியில் இருந்து கொழும்புத்துறை வீதியில் இடப்பக்கமாக திரும்புகின்றது.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரி கண்ணில் படுகின்றது. எங்கள் வாலிப கனவுகளை அடை காத்த கிளிக்குஞ்சுகளின் கோட்டை அது. இதன் வாசல் கேட்டுக்கு முன்பாக எத்தனை தரம் என் சைக்கிளின் செயின் அறுந்து போயிருக்கும். கல்லூரி அருகே இருந்த ஷிரானி மிஸ்ஸின் கடையை கண்கள் தேடுகின்றது. ஷிரானி மிஸ்ஸின் நினைவுகளும் வந்து போகின்றது.

கார் அப்படியே விதானையார் ஒழுங்கை கடக்கின்றது.

இந்த ஒழுங்கையின் முடக்கில் ஒருவரை கதற கதற மண்டையன் குழு மண்டையில் போட்டதை அதிகாலை 5:30 மணிக்கு ரியூசன் போகும் போது நேரடியாக கண்டு இருக்கின்றேன்.  அந்த கணம் தந்த உதறலும் கொலையுண்டவரின் அலறலும் இதை எழுதும் போதும் எனக்குள் எழுகின்றது. இந்த படுகொலைக்கும் உத்தரவு கொடுத்த மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று முன்னால் எம்.பி / இன்றைய அரசியல் பிரமுகர் என்ற உயர் நிலைகளை வகித்த வண்ணம் இதமாக எழும்புத்துண்டுகள் பற்றி கனவு கண்டு கொண்டு கட்டிலில் தூங்கிக் கொண்டு இருப்பார்.

இப்ப கார் சந்தனமாதா கோயில் அருகே வருகின்றது. மனசில் ‘ஜின்’ னின் கூத்தலில் இருந்து வரும் சன்சில்க் லைம் ஷாம்பு வின் வாசனை எழுகின்றது. ‘ஜின்’ எனும் எங்கள் வயசினை ஒத்த பேரழகியின் கடைக்கணுக்காக இந்த சந்தனமாதா கோவிலில் எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்து இருக்கும்! ஒரு முறை என்னுடன் படிச்ச ஒரு பெண் “ஜின் உன்னைப் பற்றி ஏன் என்னிடம் விசாரித்தாள்’ என்று கேக்க நான் கொஞ்ச நாட்கள் ‘எதுக்காக என்னைப் பற்றி விசாரிச்சாள்…அவளுக்கு ஏதும் ஐடியா இருக்கா என்னில்’ என யோசிச்சு யோசிச்சே பித்துப் பிடிச்சு அலைஞ்சு இருக்கின்றேன்.

இப்ப பாண்டியந்தாழ்வு என்று அழைக்கப்படும் நான் வாழ்ந்த பகுதிக்கு கார் வருகின்றது. நான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை கடக்கின்றது. வீட்டின் கேட்டில் சின்ன வயதில் நான் ஏறி ஊஞ்சலாடியதும், மதிலில் ஏறி அருகே இருந்த மாமரத்தில் தாவி மாம்பழம் உண்டதும் இன்னும் நிழலாக படிந்து இருக்கு. மாமரத்தின் பக்கத்தில் இருந்த பெரிய குரோட்டன் செடியில் ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. அதில் இருந்த தேனீக்களை புகை போட்டு கலைச்சு தேனை  திருடிய நாளில் இருந்து சரியாக ஐந்தம் நாள் நாம் இந்த வீட்டை விட்டு     நிரந்தரமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

கார் எம் வீடு தாண்டி நரசிம்ம ஞான வைரவர் கோயிலை கடந்து மாமாவின் வீட்டை அடைகின்றது. என் வீட்டுக்கும் மாமாவின் வீட்டுக்கும் இடையில் தூரம் இல்லை. இரு வீட்டிற்கும் இடையில் ஒரு வீடு, ஒரு கோயில், இன்னுமொரு வீடு என்று மிக அருகில் தான் மாமாவின் வீடு.

மாமாவின் வீடு!

இன்றும் கனவுகளில் அடிக்கடி வந்து போகும் வீடு. என் பால்ய கால தேவதையின் அரண்மனை அது. எம் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் இடையிலான வீதியில் தேவதையின் பாதம் பட்டு சாபவிமோசனம் பெற்ற கற்களில் இருந்து கிளம்பிய ஆண்களால் எங்கள் ஊர் ஒரு காலத்தில் நிரம்பி இருந்தது என நம்புகின்றேன். வைரவ கோயில் இருக்கும் அத்தி மரம் கூட அவளுக்காக உடனே காய்களாக்காமல் தன் பூக்களை ஏந்திக் கொண்டு இருந்திருக்கு.

இரவில் நிலவொளி ஒரு பசிய தாவரத்தின் மீது சிந்தும் போது ஏற்படும் அழகை என் தேவதை அன்று கொண்டு இருந்தாள்.

காலம் இன்று அவளற்ற வீட்டில் ஒரு விருந்தினராக வந்து தங்க வைக்கின்றது. இடையில் ஓடிய 27 வருடங்களில் கடந்து போன நாட்கள் எல்லாம் ஒரு வினாடியில் ஒடுங்கி போகாதா என மனம் அங்கலாய்க்கின்றது. வீட்டின் முகப்பில், உள் ஹோலில், பின்னால் இருக்கும் வாழை மரங்களின் பாத்திகளில், கிணற்றடியில், அதன் அருகே இருக்கும் உடுப்பு துவைக்கும் கல்லில், அடி வளவில் இருக்கும் நாவல் மரத்தின் கிளைகளில் எல்லாம் நாம் சிரித்து விளையாடிய தருணங்களின் சுவடுகள் இன்னும் ஒட்டியிருக்கின்றது என நம்புகின்றேன்.

காலை விடிந்து மதியம் எழுகின்றது.

(யாழ்ப்பாணம் – 40 மணித்தியாலங்கள் தொடரும். )

கொஞ்சம் நெருங்கி வாறீங்கள் ..........
பாண்டியன்தாழ்வு பேக்கரி 
அருகாக ... எனது செருப்பும் கொஞ்சம் தேய்ந்து இருக்கிறது.

இதுக்கு மேலே .....
விவரிக்க முடியாது 
எல்லாம்  மகிழ்ச்சி ... உச்ச மகிழ்ச்சி ... சோகம் 
என்று முடிந்துவிட்டது 

விவரிக்க போனால் ....
எனக்கு சொந்தம் என்றும் வரலாம்.
எல்லாம் ஒரு கெட்ட கனவு மாதிரி .. மறந்திடவேணும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வீடு. என் பால்ய கால தேவதையின் அரண்மனை அது. எம் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் இடையிலான வீதியில் தேவதையின் பாதம் பட்டு சாபவிமோசனம் பெற்ற கற்களில் இருந்து கிளம்பிய ஆண்களால் எங்கள் ஊர் ஒரு காலத்தில் நிரம்பி இருந்தது என நம்புகின்றேன். வைரவ கோயில் இருக்கும் அத்தி மரம் கூட அவளுக்காக உடனே காய்களாக்காமல் தன் பூக்களை ஏந்திக் கொண்டு இருந்திருக்கு.

காதல் எனும் நோயினால் ரொம்பவும் நொந்திருக்கிறீர்கள் போல.

3 hours ago, நிழலி said:

யாழ்ப்பாணம் – 40 மணித்தியாலங்கள்

இப்பதான் இரெண்டாம் பக்கத்துக்கு வந்திருக்கின்றேன் 

இதுவரை எழுதியது // பிடிக்குது

ஆனாலும் ஒரு நெருடல் 

Frankfurt விமான நிலையம் வந்து இறங்கியாச்சு. 5 மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். மகனுக்கு தாகம் என்றான். மருந்துக்கும் தண்ணீர் குடிக்கும் fountain கள் இல்லை.  அங்கு இருக்கும் automated beverage system முழுதும் ஜேர்மன் மொழியில், சரி என்று credit card போட்டாலும் கோதாரி என்ன பதில் சொல்கின்றது என்றே தெரியவில்லை...ஆனால் தர மறுத்து விட்டது. 

ஆனால் என்ன.................. திரும்பும் இடமெல்லாம் தமிழ் தமிழ் தமிழ். கருப்பு நிற தமிழர்கள், தமிழச்சிகள் (அதிலும் சிலர் சூப்பர் பிகருகள்), தமிழ் பெயர் பலகைகள், தமிழ் உரையாடல்கள், தமிழ் அறிவிப்புகள்...என எல்லாமே தமிழாக இருந்தது மனசுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது. 

இதையே ஒரு ஜெர்மன்காரர் எழுதி இருந்தால் மாற்றி எழுதி இருப்பார்தானே 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

ஜீவன், ஒரு தமிழன் சக தமிழருக்காக எழுதியது இதற்குள் ஏன் மற்றய நாட்டுக்காரரை கொண்டு வருகிறீர்கள்? 

1 minute ago, MEERA said:

ஜீவன், ஒரு தமிழன் சக தமிழருக்காக எழுதியது இதற்குள் ஏன் மற்றய நாட்டுக்காரரை கொண்டு வருகிறீர்கள்? 

ஒரு மொழிவெறி எப்படியெல்லாம் மனிதரை சிந்திக்க வைக்குது என்பதற்காக எழுதினேன். வேறு காரணமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

ஒரு மொழிவெறி எப்படியெல்லாம் மனிதரை சிந்திக்க வைக்குது என்பதற்காக எழுதினேன். வேறு காரணமில்லை.

ஆயுபோவன், Ayubowan என்று விமானநிலையத்தில் எழுதியதில் இல்லாத மொழிவெறியா இது

4 minutes ago, MEERA said:

ஆயுபோவன், Ayubowan என்று விமானநிலையத்தில் எழுதியதில் இல்லாத மொழிவெறியா இது

அங்கு வணக்கம் என்றும் தமிழில் எழுதி இருந்தது கண்ணுக்கு தெரியவில்லையோ 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

அங்கு வணக்கம் என்றும் தமிழில் எழுதி இருந்தது கண்ணுக்கு தெரியவில்லையோ 

ஆயுபோவன் என்று தமிழில் இருக்கு, 2016 நவம்பரிலும் பார்த்தேன். Ayubowan என்று ஆங்கிலத்தில் எழுதுவது சரியா?

4 hours ago, நிழலி said:

(யாழ்ப்பாணம் – 40 மணித்தியாலங்கள் தொடரும். )

தொடருங்கள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

தொடருங்கள் நிழலி

ஏன் ஜீவன் ஓடுகிறீர்கள்? 

29 minutes ago, ஜீவன் சிவா said:

அங்கு வணக்கம் என்றும் தமிழில் எழுதி இருந்தது கண்ணுக்கு தெரியவில்லையோ 

இதை எழுதும் போது இருந்த தைரியம் எங்கே போனது? 

2 minutes ago, MEERA said:

ஏன் ஜீவன் ஓடுகிறீர்கள்? 

200w.webp#9

பக்கத்தில ஓடிவாற நபரை பாக்க பயமா இருக்கு 

அதுதான் ஓடுறன் 

  • கருத்துக்கள உறவுகள்

புல்லை மேய்ந்த ஒரு மாடு.....ஆறுதலாக இரை மீட்டுவது போல நகர்கின்றது உங்கள் வர்ணனை!

மீண்டும், மீண்டும் இரை மீட்டுவதைத் தவிர....பசுமைப் புல்வெளியை இழந்து....வெறும் கோதுமை வெளிகளில் மேய்ந்து கொண்டு திரிகிறோம் என்பதை நினைக்க வலி தான் மிஞ்சுகின்றது!

எனினும் பசுமைப் புல்வெளிகள் எமது கனவுகளாகவே எப்போதும் இருக்கப் போகின்றன!

மீண்டும் அங்கு சென்று வாழ்ந்தாலும்...அந்தப் புல்வெளிகளை நிரந்தரமாகத் தொலைத்த நினைவு தான் மிஞ்சப்போகின்றது!

அந்த நினைவுகள்...ஒரு காலப் பெட்டகத்தினுள் புதைக்கப் பட்டு விட்டன!

தொடருங்கள் நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

200w.webp#9

பக்கத்தில ஓடிவாற நபரை பாக்க பயமா இருக்கு 

அதுதான் ஓடுறன் 

சிறீலங்கா எனும் ஜனநாயக(?) நாட்டில் வாழும் தாங்கள் சிறீலங்கா அரசாங்கத்திற்கு பயப்படுகிறீர்கள். அவர்களின் பிழையை ஏற்கவேதயங்குகிறீர்கள் இதற்குள் மற்றவரை எப்படி குறை கூற உங்களால் முடிகிறது? 

உங்களுடன் ஒருத்தரும் ஓடி வரப்போவதில்லை. நீங்கள் ஓடிக் கொண்டே இருங்கள்.

நிழலி - உங்கள் திரியை திசை திருப்பியதாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
On 21.3.2017 at 3:39 AM, நிழலி said:

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டில், இலவசக் கல்வியினூடாக எனக்கு கல்வி புகட்டிய நாட்டில், முதல் முத்தத்தில் இருந்து, முதல் காதல் வரைக்கும் நான் பயின்ற நாட்டில், தொழில் பயிற்சியில் இருந்து முதல் பத்து வருடங்கள் எனக்கு வேலை வாய்ப்பு தந்து வளர்த்து விட்ட நாட்டில்,  எண்ணற்ற நண்பர்களையும் தோழிகளையும் வரமாக நான் பெற்றநாட்டில், அச்சம் கொள்ள வேண்டிய நேரங்களிலும் பயமற்று வாழக் கற்றுத் தந்த நாட்டில், உரிமைக்காக உரத்து குரல் கொடு என்று காட்டித் தந்த நாட்டில்,

என் தாய் நாட்டில் காலடி வைக்கின்றேன்.

இது உன் தாய் நாடு அல்ல, எங்காவது ஓடிப் போ அல்லது செத்து போ என்று பெரும்பான்மை சிங்கள அரசு மூர்க்கமாக மோதித் தள்ளினாலும் இல்லை, இதற்குள் தான் என் தாய் நாடும் உள்ளது என நாமும் மூர்க்கமாக மோதிக் கொண்ட நாட்டில் காலடி வைக்கின்றேன்.

தமிழன் என்ற காரணம் ஒன்றே போதும் படுகொலை ஆகவும் காணாமல் போக்கடிப்படவும்  என பயங்கரங்கள் மலிந்து போய் இருந்த காலத்திலும் பூக்களையும் ரசிக்க கற்றுத் தந்த நாட்டில் காலடி வைக்கின்றேன்.

அடர்ந்த காட்டில் நெடுதுயர்ந்து வீசிய பெரும் சுடர் ஒன்று அணைந்து போய்விட்ட காலமொன்றில் நான் இலங்கையில் காலடி வைக்கின்றேன்.

மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான எழுத்து உங்கள் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கிறது நிழலி. 
2009 பின்னரான எனது பயணங்களில், வவுனியா தாண்டியதுடன் வரும் காடுகளையும் , கிராமங்களையும் கடக்கும் போது இதே உணர்வு தான் ஏற்பட்டது நிழலி.
நெஞ்சிலே அமிலம் கரையும்... மூச்சு கூட தொண்டையில் அடைக்கும்...

என்ன மயிருக்கு இன்னும் உயிர் வாழுகிறோம் என்று கூட நினைப்பு வரும்...

அதே யாழ்ப்பாணத்தில் இருக்கும் சொந்தங்கள், அயலவர்கள் இப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதை போல இருப்பதை பார்க்க... எண்ணத்தை சொல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் நிழலி உங்கள் பதிவை முழுவதும் படித்து முடித்தேன். என்ன சொல்ல ? உங்கள் எழுத்தோடு சோ;ந்து பயணிக்கிறேன். பல இடங்களின் விபரிப்பு 90களில் உலவிய நினைவுகளை மீட்கிறது. காலம் எத்தனை கொடியது? நீண்ட நாளின் பின் வாசித்த அருமையான பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

இன்றுதான் நிழலி உங்கள் பதிவை முழுவதும் படித்து முடித்தேன். என்ன சொல்ல ? உங்கள் எழுத்தோடு சோ;ந்து பயணிக்கிறேன். பல இடங்களின் விபரிப்பு 90களில் உலவிய நினைவுகளை மீட்கிறது. காலம் எத்தனை கொடியது? நீண்ட நாளின் பின் வாசித்த அருமையான பதிவு.

யாழ் களத்து வராமல் விட்டால் நடக்கிற தெரியாது பாருங்கோ அதனால் ஒழுங்கா வந்து படித்து கருத்துக்களை  எழுதுங்கோ  என்ன விளங்கிச்ச்சோ??:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, முனிவர் ஜீ said:

யாழ் களத்து வராமல் விட்டால் நடக்கிற தெரியாது பாருங்கோ அதனால் ஒழுங்கா வந்து படித்து கருத்துக்களை  எழுதுங்கோ  என்ன விளங்கிச்ச்சோ??:unsure:

ஓமடாப்பா.:100_pray:

  • தொடங்கியவர்

“இன்று எழுக தமிழ் நடப்பதால் கடைகள் எல்லாம் பூட்டி இருக்கும் என்று முதல் நாளே ஆட்டிறைச்சி எல்லாம் வாங்கியாச்சு” என மாமா சொன்னார். ஆனாலும் எனக்கு மீனும் ஊர் சாவலும் சாப்பிட வேண்டும் போல இருந்தமையால் காரில் வெளியே வெளிக்கிட்டோம்.

பெரியளவில் கடைகள் பூட்டி இருக்கவில்லை. ரவுனுக்குள் பூட்டி இருக்கும் என மாமா சொன்னார்.

எனக்கு பிடிச்ச பாஷையூருக்கு கார் விரைகின்றது. இடையில் பாஷையூர் அந்தோனியார் கோவில் எதிர்படுகின்றது. அலையலையாக நினைவுகள் எழுகின்றன.

பாசையூர் அந்தோனியார் கோவில் ஒரு அழகான அமைவிடம். கோவிலுக்கு முன்பாக மூன்று குளங்கள். இக் குளங்களை ‘வண்ணார்’ குளம் என்று சாதிப் பெயர் கொண்டு அழைப்பர். நல்லா நீர் இருக்கும் காலங்களில் சலவைத் தொழிலாளர்கள் இங்கு உடுப்புகளை தோய்ப்பதை கண்டிருக்கின்றேன்.  முதல் இரு குளங்களுக்கும் இடையில் ஒரு பெரிய காணி பிரிச்சு இருக்கும். குளங்கள் கோடையில் காயும் போது குளத்துக்குள் இறங்கி பட்டம் விட்டு இருக்கின்றோம். கோவிலின் முன் பெரிய திடல் ஒன்றும் இருக்கு. இங்கு உள்ளூர் கழகங்களின் விளையாட்டு போட்டிகள் நடக்கும்.  இப்ப ஒரு குளத்தை காண முடியவில்லை. ( தூர்வாரப்படாமலேயே முற்றாக வற்றி வெறும் தரையாக போய்விட்டதா அல்லது குளத்தை மூடி விட்டார்களா எனத் தெரியவில்லை.

அந்தோனியார் கோவில் திருவிழா காலங்களில் ஊரே ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அடிக்கடி சுண்டிக்குளி ராஜன்ஸ் இசைக்குழுவினதோ அல்லது அருணா இசைக் குழுவினதோ இசை நிகழ்வுகள் திருவிழாக் காலங்களில் நடக்கும். அமுதன் அண்ணாமலை தன் கணீர் குரலால் பாட கிட்டார் ரமணன் “ராஜா ராஜாதி ராஜன் அல்ல ராஜா” பாட இரவுப் பொழுதுகள் திருவிழா காலங்களில் அற்புதமாக கழியும்.

அந்தோனியாரைக் கடந்து பாசையூர் கடற்கரையில் இருக்கும் மீன் சந்தைக்கு போகின்றோம். எனக்கு யாழ்ப்பாணத்தில் பிடித்த இடங்களில் ஒன்று இந்த மீன் சந்தை. நான் அப்பாவுடன் அடிக்கடி வந்து போன இடம். அதன் மீன் வாசனை நினைவுகளில் இன்றும் இனிப்பதுண்டு. ஆனால் அங்கு நான் எதிர்பார்த்தளவுக்கு பெரிய மீன்கள் எதுவும் இருக்கவில்லை. பெரிய மீன்களை தமிழகத்தில் இருந்து வரும் மீன் பிடி கொள்ளையர்கள் பிடித்துக் கொண்டு போகின்றனர் என்று உள்ளூர் மீனவர்கள் குறைபடுகின்றனர் என மாமா சொன்னார். 

2h6c0pl.jpg

1eavwz.jpg

(பாசையூர் சந்தையில் மீன்கள்)

பாசையூரில் மீன் பெரியளவில் இல்லாததால் சின்னக்கடை பக்கம் போகின்றோம். இடையில் 1986 June 10 அன்று மண்டை தீவில் வைச்சு கொல்லப்பட்ட 31 மீனவர்களுக்கான நினைவு தூபிதெரிகின்றன. வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கப் போன அப்பாவி 31 மீனவர்களை சிங்கள கடற்படை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்து இருந்தது. வெட்டுண்ட உடல்களை குருநகரில் இருக்கும் சன சமூக விறாந்தையில் அடுக்கி வைத்து இருக்கும் போது நானும் நண்பர்களுமாக போய் பார்த்து இருந்தோம். அப்படி பார்க்கும் போது என் வயது 11.

குருநகர் கழிய வந்த ஒரு பெரிய காணிகள் உள்ளடக்கிய பகுதியை இராணுவம் கையகப்படுத்தி இருந்தது. பொதுமக்களின் காணிகள் அவை. “இந்த --- மக்கள் என்னத்துக்கு இன்னும் இதை பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள்.. பாடையில போவார்” என மாமா தன் ஸ்ரைலில் திட்டிக் கொண்டு வந்தார்

இடையில் பண்ணை பாலம், கோட்டை பகுதி ஆகியவற்றை காரை நிறுத்த சொல்லி பார்க்கின்றேன். கோட்டையின் அருகே கடற்கரை ஓரங்களில் ஒரு சில இளம் சோடிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு மெய்மறந்து இருந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் கண்ட சோடிகளின் நினைவு வந்து போனது.

351g2z7.jpg

2up6yyw.jpg

2ez1tsn.jpg

(பண்ணை பாலம் மற்றும் அதனருகில் உள்ள இடங்கள்)

சின்ன கடை எழுக தமிழுக்காக சந்தை பூட்டி இருக்கும் என நினைச்சால், அங்கும் திறந்து இருந்தார்கள். இருப்பதில் ஓரளவுக்கு பெரிய ‘கலவாய்’ மீனை வாங்கிக் கொண்டு ரவுன்  பக்கம் போனோம். கடைகள் அநேகம் பூட்டி இருந்தன.

ரவுனை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டை வருகின்றோம். இடையில் எனக்கு செவ்விளனி குடிக்க ஆசை ஆசையாக வருகின்றது. கனடாவுக்கு வந்த பின் செவ்விளனி குடிக்கவே இல்லை. அங்கு ரின்னில் அடைச்சு வரும் இளநீரை குடிப்பதை விட கோமியத்தை குடிக்கலாம்.

மாமா பழைய பூங்கா வீதிக்கருகில் இருக்கும் ஒரு இளநீர் சிறு கடையின் அருகில் காரை நிறுத்த இறங்கிக் குடிக்கின்றோம். மாமாவுக்கு டயபடீஸ் உச்சத்தில் இருந்து பல்லிளிச்சுக் கொண்டு இருந்தாலும் நான் இளநீர் வாங்கி குடிக்கும் போது ஆளால் தன் ஆசையை மட்டுப்படுத்த முடியவில்லை. ஆசை diabetes அறியாது என முன்னோர் சும்மாவா சொன்னார்கள்.

5eizyq.jpg

வீட்டை வந்து மீனை எல்லாம் சமைச்சு சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித்தூக்கம் போட பொழுது மாலையாகின்றது.

மாலை மாமாவுடன் நான் நீண்ட காலமாக சந்திக்காமல் இருந்த பல உறவுகளின் வீடுகள் தேடிச் சென்று சந்திக்கின்றேன். அப்பாவின் மூத்த தமக்கை – என் பெரிய மாமியை கட்டிக் கொஞ்சி அணைத்துக் கொள்கின்றேன். அப்பாவின் செத்த வீட்டில் மாமியை பார்த்த பின் இன்று தான் 13 வருடங்களின் பின் பார்க்கின்றேன்.

பெரிய மாமியை சந்தித்த வீட்டின் கதியாலில் எங்கிருந்தோ வந்து ஒரு செண்பகம் அமர்கின்றது. யுத்தத்தின் பின் கனகாலமாக யாழ்ப்பாணத்தில் செண்பகத்தை காணவில்லை என சிலர் முன்னர் சொல்லியிருந்தனர். இப்பதான் மீண்டும் செண்பகம் அதிகமாக புழங்கத் தொடங்குகின்றது. செண்பகம் எத்தனை பசுமையான நினைவுகளை தன் இறக்கைகளில் காவிக் கொண்டு அமர்ந்து இருக்கின்றது. படம் எடுப்பம் என்றால் அவ்வளவு நேரமும் முகத்தை காட்டிக் கொண்டு நின்ற செண்பகம் தன் முதுகை காட்டத் தொடங்கிட்டு.

பெரிய மாமியை சந்தித்த பின் இன்னும் சில உறவுகளையும் சந்தித்து முடித்து வரும் வழியில் Rio வில் மச்சானின் பிள்ளைகளுக்கு ஐஸ் கிரீமையும் வாங்கிக் கொண்டு இரவு வீட்டை வர மாமாவுடன் பார்ட்டி ஆரம்பமாகியது. நான் கனடாவில் குடிப்பது St Remy எனும் French brandy தான். அது கிடைக்காவிடின் சில நாட்கள் வேறு எதுவும் குடிக்காமல் இருந்து விடுவதுண்டு. மாமா யாழ்ப்பாணத்தில் தேடிப் பிடித்து அதை வாங்கி வைத்து இருந்தார். இரவிரவாக மாமாவுடன் கதைத்துக் கொண்டு 2 மணி வரைக்கும் தண்ணி அடித்துக் கொண்டு இருந்தோம்.

மாமாவின் வாழ்க்கை ஒரு பெரிய நாவலுக்குரியது. ஒரு முறை அவரிடம் உங்கள் கதையை சிறுகதைகளாக எழுதட்டா எனக் கேக்க, “என் கதையை இரண்டு மூன்று திரைப்படங்களாகவே எடுக்க முடியும்” என சொன்னவர்.

தன் தாய் புற்றுநோயால் இளம் வயதில் இறக்க, குடிகாரத் தந்தை ஏற்க வேண்டிய பொறுப்பை தான் ஏற்று தன் சகோதரங்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து, காதல் திருமணம் முடிச்சு, சவூதி போய் உழைச்சு வீட்டை கட்டி,பின் 1987 இல் கனடா வந்து தன் குடும்பத்தை ஏஜென்சி மூலம் கூப்பிட்டு, 25 வருடம் கனடாவில் வாழ்ந்து, வாழும் போது தன் மனைவியை படிப்பித்து, பின் அவருடனேயே முரண்பட்டு மீண்டும் இலங்கை வந்து, வந்த பின் நோயில் விழ தன்னை பார்க்க மனைவியும் பிள்ளைகளும் வரவில்லை என்று இன்னொரு திருமணம் முடிச்சு……………… சுருக்கமாக சொல்ல முயலும் போதே நீள்கின்ற சரிதம் அவருடையது.

மாமா 2008 இன் பின் ஒவ்வொரு வருடமும் கனடா வருவார். இங்கு 3 பிள்ளைகளும் முதல் மனைவியும் இருந்தாலும் என்னுடன் மட்டும் 2 மாதம் தங்கி தன் பென்ஷன் வேலைகளை பார்த்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் சென்று விடுவார். சிறுவயதில் எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரு நபராக இருந்து 2004 இன் பின் மனசுக்கு மிகவும் நெருங்கிய உறவாக ஆனவர்.

அடுத்த நாள் உதயமாகின்றது

இரவு மீண்டும் கொழும்பு பயணம் என்பதால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு என் உறவுகளையும் முன்னர் இருந்த அக்கம் பக்கத்தினரையும் சந்தித்து கொள்கின்றேன். என்னுடன் எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் என் மச்சான் வருகின்றான். என் அம்மாவின் தம்பியின் இளைய மகன். வாழ்ந்தது முழுக்க கொழும்பில். நான் சந்திக்கும் எவரையும் அவன் முன்னர் கண்டதில்லை. ஆனாலும் என்னுடன் எல்லா இடத்துக்கும் வருகின்றான்.

மதியம் மாமா எம் வீட்டுக்கு ஒரு வீடு தள்ளி இருக்கும் வைரவர் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றார். மாமா கனடாவில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் வந்த பின் இக் கோயிலை மிகவும் பலரின் உதவியுடன் பெருப்பித்து இருந்தார்.

வெறும் கோவணம் மட்டும் கட்டி இருந்த ஞான வைரவர் இப்ப பட்டாடையுடனும் பெரும் ஆடம்பரத்துடனும் வீற்றிருக்கின்றார். கோவிலுக்குள் போகின்றேன். நான் தோழமையுடன் தோளில் கை போட்டு கதைச்சு சிரிச்ச வைரவரைக் காணவில்லை. பணத் திமிரும் செயற்கை உடையும் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு இருக்கின்றார்.

2ymxet3.jpg

சின்னத்துரை அங்கு வருகின்றார். பெரிய மேசன். அம்மா இவருக்கு ஒரு நாளும் நாம் வழக்கமாக விருந்தாளிகளுக்கு கொடுக்கும் கிண்ணத்தில் தேனீரோ அல்லது தண்ணீரோ கொடுப்பதில்லை. ஏனென்றால் சாதியில் குறைந்தவர் என்று சொல்லுவார். நான் இருந்த காலத்தில் கோவிலிற்கு வெளியில் தான் நிற்பார்.

இப்ப கோவிலின் உள்ளே வந்து சாதித் தடிப்பை தன் பிரதான குணாதிசயமாக கொண்ட மாமாவுடன் நேருக்கு நேராக நின்று கதைக்கின்றார். சந்தோசமாக இருக்கின்றது. மாற்றங்கள்……….!

257qats.jpg

(கோவிலில் இருந்த பெரிய வண்ணாத்திப் பூச்சி)

2r2n2bk.jpg

(இந்தப் பூவின் சரியான பெயர் என்ன? கோவிலின் வீதியில் இருந்தது. மிகவும் பரிச்சயமான பூ... ஆனால் பெயர் மறந்து விட்டது)

மதியம் மாமி அருமையாக சமைச்சு இருந்தார். நேற்று விட்ட மிச்சத்தினை குடிக்கின்றேன். மாமா Prostate cancer இல் அவதியுற்று கொண்டு இருப்பவர். அடுத்த நாள் Chemotherapy இற்குரிய Injection அடிக்க வேண்டிய நாள். குடிக்க கூடாது. ஆனால் என்ன நினைச்சாரோ ஒரு கிளாஸ் எனக்கும் ஊத்து எனச் சொல்லி ஊற்றிக் குடிக்கின்றார். மிகவும் மனக் கட்டுப்பாடுடைய மாமா எனக்காக இறங்கி வருவதை காண சந்தோசமாக இருக்கு

இரவு வருகின்றது. 7 மணி

மாமாவின் வீட்டில் இருந்து வெளிக்கிட்டு ரவுனுக்கு வருகின்றோம். பேரூந்து காத்து நிற்கின்றது

மாமாவின் கரங்களை பற்றி கை குலுக்கி, அணைத்து “மார்ச் மாசம் கனடாவில் சந்திப்பம்” என்று சொல்லி விடைபெறுகின்றேன்.

அப்ப தெரியவில்லை அந்த கைகுலுக்கல் தான் மாமாவினுடனான என் இறுதி கைகுலுக்கல் என்று. அந்த பிரியாவிடை மாமா எனக்கு சொல்லிய தன் இறுதி பிரியாவிடை என்றும்

இரவு பேரூந்தில் ஏறி கொழும்பை அதிகாலை 3 மணிக்கு அடைகின்றேன். மீண்டும் சென்னை செல்ல 21 மணித்தியாலங்கள் இருந்தன. விரைவாக ஷொப்பிங் செய்து விட்டு மச்சானின் வீட்டுக்கு போய் உணவும் அருந்தி விட்டு குட்டித் தூக்கம் போட இரவு 12 ஆகியது. குட்டித்தூக்கத்தின் பின் எழுந்து Taxi யில் விமான நிலையத்தை அடைந்து விமானத்தில் ஏற காலை 5:30 ஆனது. விமானத்தில் ஏறி என் இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்த சில நிமிடங்களில் என்னருகில் வந்து “கோமத ஐய்யே ஆயித் சென்னை யனவத” என்று ஒரு குரல் விசாரிக்க நான் நிமிர்ந்து பார்க்க கொழும்பு வரும் போது வந்த அழகு மயில் நெருக்கமாக வந்து நின்று சுகம் விசாரிக்கின்றது.

பெண் மயிலின் குரலில் ஆண் மயில் தோகை விரிச்சாட நினைக்கும் போது விமானம் மேலே எழும்பி பறக்கின்றது

ஒரு மணி நேரத்தின் பின் சென்னை என்னை மீண்டும் வரவேற்கின்றது

  • தொடங்கியவர்

என் பதிவுக்கு பின்னூட்டம் இட்டவர்களுக்கான பதிலை விரைவில் எழுதுகின்றேன். நேரப் பிரச்சனை ஒரு பெரும் இடைஞ்சல். கிடைக்கும் ஓய்வான நேரம் எல்லாத்திலும் எழுதும் மனநிலை தோன்றுவதும் இல்லை. பொறுத்துக் கொள்ளவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.