Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்

Featured Replies

அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்

அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்
 
அம்பாறை மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் 52 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தை ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த மகான்கோடீஸ்வரன் என்பவரே திராய்க்கேணி கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இவர் யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஜெர்மனியக் கிளையின் உறுப்பினராவார்.

மகான்கோடீஸ்வரன் மற்றும் ஜெர்மனியக் கிளைத்தலைவர் கிளாரன்ஸ் செல்லத்துரை ஆகியோர், அம்பாறை மாவட்ட சமூகசேவையாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த மாதம் திராய்க்கேணி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்கள்.

அதன்பின் ஜெர்மன் சென்ற இவர்கள், திராய்க்கேணியை தாம் தத்தெடுப்பதாகவும், இதன் முதற்கட்டமாக 16 வீடுகளை கட்டிக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்ற நிலையில், தற்போது 5 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

ஏனைய வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அதன் திறப்பு நிகழ்வில் ஜெர்மனிலிருந்து மகான்கோடீஸ்வரன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gbhfgh.png

dgdgf.png

http://newuthayan.com/story/25369.html

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செயல் .....வாழ்த்துக்கள்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ....:100_pray::100_pray:இப்படியான செயல்கள் தொடரவேண்டும்....(முக்கிய குறிப்பு: நீர் போய் செய்யுமன் என்று யாரும் கேட்காதீர்கள் நான் செய்யபோவதில்லை:100_pray:....)

நான் படிச்ச பள்ளியில் தான் அவரும் படிச்சிருக்கிறார்
 
Edited by putthan

39 minutes ago, putthan said:

வாழ்த்துக்கள் ....:100_pray::100_pray:இப்படியான செயல்கள் தொடரவேண்டும்....(முக்கிய குறிப்பு: நீர் போய் செய்யுமன் என்று யாரும் கேட்காதீர்கள் நான் செய்யபோவதில்லை:100_pray:....)

நான் படிச்ச பள்ளியில் தான் அவரும் படிச்சிருக்கிறார்
 
வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செயல்.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வந்தியத்தேவன் said:

வாழ்த்துக்கள்

அப்படியே ஒரு பச்சையை குத்துரது தானே. :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரர் அம்பாறை யில் பல தமிழ் கிராமங்கள்  அழிந்து ஒண்டு செல்கின்றன அதில் ஒரு கிராமம் இந்த திராய்க்கேணி கிராமமும் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டு இன்று ஒரு சில நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இரு பகுதியிலும் முஸ்லீம்களால் சூழப்பட்ட  ஒரு சிறிய கிராமம் இது போன்ற நடவடிக்கைகளே அந்த மக்களை அங்கே நிலைநிறுத்த செய்யும் மீண்டும் வாழ்த்துக்கள் இதுரைக்கும் அங்கே வாக்குகள் கேட்கச்செல்லும் அரசியல் வாதிகள் அந்த கிராமத்தில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பெரிதாக பெயர் சொல்லுமளவுக்கு செய்ததில்லை 

பல பேர் தங்கள் இடங்களை விற்று விட்டு வெளியேறி விட்டார்கள் அதில் ஒன்று அட்டைப்பள்ளம் என்கிற ஊர் மக்களூம் சில ரே இருக்குறார்கள்  இன்னும் அங்கே 

மீண்டும் வாழ்த்துக்கள்  சகோதரா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, putthan said:

வாழ்த்துக்கள் ....:100_pray::100_pray:இப்படியான செயல்கள் தொடரவேண்டும்....(முக்கிய குறிப்பு: நீர் போய் செய்யுமன் என்று யாரும் கேட்காதீர்கள் நான் செய்யபோவதில்லை:100_pray:....)

நான் படிச்ச பள்ளியில் தான் அவரும் படிச்சிருக்கிறார்
 
எங்கடை சனம் பெயரான பள்ளிக்கூடங்களின்ரை பேரைச்சொல்லி பொம்புளை/மாப்பிளை எடுத்து முடிஞ்சுது.....இப்ப இது வேறை......:grin:

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் பெயரான பள்ளிக்கூடங்களின்ரை பேரைச்சொல்லி பொம்புளை/மாப்பிளை எடுத்து முடிஞ்சுது.....இப்ப இது வேறை......:grin:

அந்த ஆள் ...என்ன பொம்பிளையா கேட்டது?

வெறும் பச்சை தானே கேட்டது...!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மகான்

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதை விட இது மேலான காரியம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்மாதிரி. tw_blush:

உள்நோக்கம்.. கிள்நோக்கம் இல்லாமல்.. மக்கள் நலன்.. மண் நலன் என்றிருந்தால்.. இன்னும்.. நல்லம். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு எடுத்துக்காட்டான விடயம். வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2017 at 3:08 PM, nedukkalapoovan said:

நல்ல முன்மாதிரி. tw_blush:

உள்நோக்கம்.. கிள்நோக்கம் இல்லாமல்.. மக்கள் நலன்.. மண் நலன் என்றிருந்தால்.. இன்னும்.. நல்லம். 

நிட்சயமாக இருக்காது என நம்புவோம் ஆனால் ஜெயசிறில் என்பவர் தமிழரசு கட்சியின் விசுவாசி மற்றும் பிரதேச சபை தேர்த்தலிலும் நின்றவர் வெற்றி பெறவில்லை  ஆனால் அந்த அமைப்பில் அதாவது ஜேர்மனின் நம்பிக்கை ஒளி சில நல்ல காரியங்களை செய்து வருகிறார் மக்களை பொறுத்தவரைகும் ஏழை மக்களுக்கு யார் செய்து கொடுத்து பாராட்டலாம் ஊக்கு விக்கலாம் அவர்கள் நம் மக்கள் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

 இது வவுனியாவில் நான் சொன்னது இதுதான் ஒருவருக்கு கிடைக்கும் அதே சமயத்தில் இன்னொருவருக்கு கிடைக்காது காத்துக்கொண்டிருக்க வேண்டும் மாதமாகலாம் வருடமாகலாம் பொருத்து வீட்டுப்பகுதியில் இணைக்க தேடினேன் அந்த திரி கண்ணில் படவில்லை நிர்வாகம் வேண்டுமானால் மாற்றிவிடலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு எடுத்துக்காட்டான விடயம். வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.9.2017 at 11:33 AM, வாத்தியார் said:

நன்றி மகான்

கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதை விட இது மேலான காரியம்

தமிழர் பிரதேசங்களில் மூலைக்கு மூலை அவசியமில்லாத இடங்களில் விகாரைகள் முளைக்கும் போது நமது கோவில்களின் புனருத்தாரணமும் அவசியமாகவே தெரிகின்றது.

இன்று ஆசியாக்கண்டத்தில் உள்ள பலநாடுகளில் எமது இனம் பழமைவாய்ந்த இனம்/பரந்துபட்டு வாழ்ந்த இனம் என்பதற்கு சான்றுகளாக கோவில்களும் முக்கியபங்கு வகிக்கின்றன.அங்கு தமிழ்மொழி அதிகபட்சமாக தெரியப்படுத்தப்படுகின்றது.

அன்னிய மொழியையும் அன்னிய கலாச்சாரத்தையும் தோளில் சுமந்துகொண்டு.... நடைப்பிணமாக இருக்கும் எமது மதத்தை அழிக்க/சீரழிக்க இடமளியோம்.tw_angry:

வாத்தியார்! நீங்கள் வேறுமதத்தை சார்ந்தவர் என நினைக்கின்றேன், இருந்தாலும் நீங்கள் விரும்பினால் வாருங்கள். இதயபூர்வமாக உள்நாட்டு வெளிநாட்டு  மதம் சம்பந்தப்பட்ட விடயங்களை விவாதிக்கலாம்.:)

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

வாத்தியார்! நீங்கள் வேறுமதத்தை சார்ந்தவர் என நினைக்கின்றேன், இருந்தாலும் நீங்கள் விரும்பினால் வாருங்கள். இதயபூர்வமாக உள்நாட்டு வெளிநாட்டு  மதம் சம்பந்தப்பட்ட விடயங்களை விவாதிக்கலாம்.:)

என்னுடைய பெயர் தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்
ஆனாலும் நான் மதம் சார்ந்தவன் அல்ல  அல்ல  அல்ல  
ஆலயங்கள் இருக்கலாம். ஆனால் அதுவே எல்லாம் அல்ல அல்ல அல்ல:11_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, வாத்தியார் said:

என்னுடைய பெயர் தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்
ஆனாலும் நான் மதம் சார்ந்தவன் அல்ல  அல்ல  அல்ல  
ஆலயங்கள் இருக்கலாம். ஆனால் அதுவே எல்லாம் அல்ல அல்ல அல்ல:11_blush:

பார்த்தீர்களா??? பெயரை சொன்னாலே அதிர்ந்து விடுவீர்கள் என்கிறீர்கள். அந்தளவிற்கு பெயர் பல பங்கு வகிக்கின்றது. அது போல்தான் இதுவும்.

நான் கோவில்களில் நடக்கும் மூட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவன். அதுவும் புலம்பெயர் தேசங்களில் கோவில்களை ஆத்மதிருப்தி எனும் கண்ணோடு பார்ப்பவன்.
ஆனால் எமது நாட்டில் எதிரி எதை செய்ய முற்படுகின்றானே அந்த விடயத்திலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 அதுவும் புலம்பெயர் தேசங்களில் கோவில்களை ஆத்மதிருப்தி எனும் கண்ணோடு பார்ப்பவன்.
 
புலம்பெயர் தேசங்களில் ஆத்ம திருப்தியா?
கோவில் கட்டுபவர்கள் ஆட்டையைப் போடும் நினைப்பில் தான் இருக்கின்றார்கள்.
இந்தக் கோவில்களை விட கிறிஸ்தவத் தேவாலயங்கள் மக்களிற்கான பணிகளைத் திறம்படக் செய்கின்றார்கள் அண்ணை:100_pray:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, வாத்தியார் said:

புலம்பெயர் தேசங்களில் ஆத்ம திருப்தியா?
கோவில் கட்டுபவர்கள் ஆட்டையைப் போடும் நினைப்பில் தான் இருக்கின்றார்கள்.
இந்தக் கோவில்களை விட கிறிஸ்தவத் தேவாலயங்கள் மக்களிற்கான பணிகளைத் திறம்படக் செய்கின்றார்கள் அண்ணை:100_pray:

அவர்களின் நோக்கம் தெரியும். பணம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லைத்தானே? எங்கும் கட்டாயப்படுத்தவில்லை.மத வரியும் அறவிடவில்லை.

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் உண்டியல் குலுக்குகின்றார்கள் தானே? எங்கே இல்லையென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
 
அவர்கள் திறம்பட செய்கின்றார்கள் என்பதை விட கிறிஸ்தவ அமைப்புகள் உலகளாவியது....சட்டபூர்வமானது என முன்னிலைப்படுத்தி விட்டார்கள்..சகலதும் சுலபமாகவே அரசுபோல் செயல்படுகின்றார்கள்.:)

  • கருத்துக்கள உறவுகள்
On 12.9.2017 at 0:48 AM, குமாரசாமி said:

அவர்கள் திறம்பட செய்கின்றார்கள் என்பதை விட கிறிஸ்தவ அமைப்புகள் உலகளாவியது....சட்டபூர்வமானது என முன்னிலைப்படுத்தி விட்டார்கள்..சகலதும் சுலபமாகவே அரசுபோல் செயல்படுகின்றார்கள்.:)

அப்படியான முறையில் இந்து ஆலயங்களால் ஏன் செயற்படமுடியவில்லை. தேவாலயங்கள் மதம் இனம் பார்க்காமல் மற்றவர்களுக்குச் செய்யும் பணிகளை இந்து மத ஆலயங்களால் செய்ய முடிவதில்லையே .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அப்படியான முறையில் இந்து ஆலயங்களால் ஏன் செயற்படமுடியவில்லை. தேவாலயங்கள் மதம் இனம் பார்க்காமல் மற்றவர்களுக்குச் செய்யும் பணிகளை இந்து மத ஆலயங்களால் செய்ய முடிவதில்லையே .

வாத்தியார்..இந்து மதம் என்று திரும்பத் திரும்பக் கூறுவதால்....நாம் ஏதோ ஒரு விதத்தில்...எம்மையறியாமலே ஆரிய அழுக்குகளுக்குள் புதைந்து போகின்றோம்!

நாங்கள் சைவர்கள்....சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள்! உருத்திரன் எமது கடவுளல்ல! அவர் எமது மதத்துக்குள் திணிக்கப்பட்டவர்களில் ஒருவர்! முருகன் எமது கடவுள் எனினும் கந்தனும், பிள்ளையாரும் எம்மீது திணிக்கப் பட்டவர்கள்! அம்மன் எமது கடவுள்...ஆனால் துர்க்கை எம்மீது திணிக்கப் பட்டவர்!

வரி அறவிடுதல், பொதுச்சேவை செய்தல் போன்றவற்றை...அரசோ...அரச அதிகாரிகளோ பார்த்துக்கொண்டார்கள்!

மாதமும்...மாரி பெய்தது..! எம்மக்களிடம் வறுமை இருக்கவில்லை!
எமது மதம்...ஆண்..பெண் என்ற வேறுபாட்டைக் காட்டியதில்லை!
காமத்தை விலக்கி வைக்கவில்லை! தாலி கட்ட வேண்டும்! திருமணத்தின் அடையாளமாகப் பெண்ணுக்குக் 'குறி' சுட வேண்டும் என்று கூறியதில்லை!
அவை அனைத்துமே ஆரியச் சடங்குகளே! சோமன் ( சந்திரன்)....இந்திரன் போன்றவர்கள் நுகர்ந்த பின்னர்...அவர்களின் அனுமதியோடு...தான் ...நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுகிறோம்! அந்த மந்திரங்களை....அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிந்து ஆராய்ந்தால்....எவ்வாறு ஆரியம் எங்கள் மீது குதிரை ஒட்டியுள்ளது என்பது நன்றாகப் புரியும்!

நாவுக்கரசர், சம்பந்தர் காலத்திலிருந்தே எமது மதத்தின் பெயரால் பல அன்னதான மடங்களும், பாடசாலைகளும்...கல்லூரிகளும் நடத்தப் பட்டன! நடத்தப் படுகின்றன!
இன்றும் கூட...திருக்கேதீஸ்வரத்துக்கோ, செல்வச் சந்நிதிக்கோ...அல்லது நயினா தீவுக்கோ போனால்...நான் அந்த மடங்களில் சாப்பிட்டுத் தான் வருவேன்!
ஒரு தடவை....நயினாதீவில் சாப்பிட்டு வரும்போது...எனது மகள் கேட்டாள்! 
பணம் கொடுக்க வேண்டாமா என்று!
இல்லை...நீ ..பேசாமல் வா...! நாங்கள் கோவில் உண்டியலில் போடுவோம் என்று கூறினேன்!
அப்போது அவள்...சிங்களவர்களுடன் பிரச்சனை என்று கூறினீர்களே...அவர்களும் வந்து ஒன்றாகச் சாப்பிட்டு விட்டும் போகின்றார்களே என்றும் கேட்டாள்!
நான் அது வேறு....இது வேறு என்று கூறிச் சமாளித்து விட்டேன்!
எனவே எமது மதம்...பல சேவைகளைச் செய்கின்றது!
வெளி நாடுகளில்...எமது மதத்தின் பெயரால்....ஆரியம் வளர்க்கப்படுகின்றது என்பதே எனது கருத்து!
Wollongong  என்னுமிடத்தில்...எம்மவர்கள் காணி வாங்கி....சந்திர மௌலீஸ்வரருக்கு ஒரு கோவில் கட்டினார்கள்! அதற்குள் எவ்வாறோ...விஷ்ணு கோவிலோன்றைப் புகுத்தி விட்டார்கள்! பின்னர் சிவன் கோவில் அரைவாசியில் நிற்க....விஷ்ணு கோவில் முதலில் கட்டி முடிக்கப்பட்டது! சிவன் கோவில் உண்டியல் மூலம் சேர்க்கப்பட்ட பணம்....விஷ்ணு கோவிலுக்குப் பயன் படுத்தப் பட்டது! இப்போது எம்மவர்கள்...இரண்டு கோவிலுக்கும் போகின்றார்கள்! அங்கே இருக்கிற அனுமானுக்கும் ஒரு வணக்கம்.....இராம லட்சுமணருக்கும் ஒரு வணக்கம்....கருடனுக்கும் ஒரு வணக்கம்!
எனது அவதானங்கள் தவறாக இருந்தால்...யாராவது விளக்கம் தாருங்கள்!
சிட்னி முருகன்....கிட்டத்தட்ட ஒரு வியாபாரியாகவே மாறி விட்டார்!
வடைக் கடை, தோசைக்கடை, சைவக் கடை என்று ....கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவைத் தான் நினைவு படுத்துகின்றார்!

இறுதியாக எமது மதம்....வாழ்க்கைக்கான வழியைக் காட்டியுள்ளது!
பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம்...சந்நியாசம்.......!
வாழ்க்கை அவ்வளவு தான்.....வாத்தியார்!
இருக்கும் போது நல்ல காரியங்களை...முடிந்தால் செய்வோம்!
தீயவைகளிளிருந்து...முடிந்தவரை ஒதுங்குவோம்!

கொலை...களவு.....கள் ....காமம்...சூது...அனைத்தையும் பஞ்சமா பாதகங்கள் என்றது எமது மதம்!
மக்கள் சேவையே ...மகேசன் சேவை என்றதும் எமது மதம்!
ஆவுரித்துத் தின்றுழலும் புலையனேனும் .....அவனும் சிவனுக்கு அன்பனே...என்றதும் எமது மதம்!

மழித்தலும்....நீட்டலும் வேண்டாம்....உலகம் பழித்தது ஒழித்து விடின்!

அவ்வாறு வாழ்வோமெனின் ...எமக்குக் கோவில்கள் தேவையில்லை!
காயமே....கோயிலாகக்...கடி மனம் அடிமையாக....வாய்மையே...தூய்மையாகுவோம்!   

நன்றி  !

  • கருத்துக்கள உறவுகள்
On 15/09/2017 at 8:54 AM, புங்கையூரன் said:

Wollongong  என்னுமிடத்தில்...எம்மவர்கள் காணி வாங்கி....சந்திர மௌலீஸ்வரருக்கு ஒரு கோவில் கட்டினார்கள்! அதற்குள் எவ்வாறோ...விஷ்ணு கோவிலோன்றைப் புகுத்தி விட்டார்கள்! பின்னர் சிவன் கோவில் அரைவாசியில் நிற்க....விஷ்ணு கோவில் முதலில் கட்டி முடிக்கப்பட்டது! சிவன் கோவில் உண்டியல் மூலம் சேர்க்கப்பட்ட பணம்....விஷ்ணு கோவிலுக்குப் பயன் படுத்தப் பட்டது! இப்போது எம்மவர்கள்...இரண்டு கோவிலுக்கும் போகின்றார்கள்! அங்கே இருக்கிற அனுமானுக்கும் ஒரு வணக்கம்.....இராம லட்சுமணருக்கும் ஒரு வணக்கம்....கருடனுக்கும் ஒரு வணக்கம்!
எனது அவதானங்கள் தவறாக இருந்தால்...யாராவது விளக்கம் தாருங்கள்

தவறா ....உங்கள் அவதானத்தில் ...
இரததோற்சவம்  சிவனுக்கு 
பிறமோற்சவம் வெங்கேடஸ்வருக்கு
 இரண்டு  தேர்திருவிழா, ஒருவருடத்தில் ஒரே ஆலய வளவில், இந்துக்கள் என்ற அடையாளத்துடன் நம்மவர்களும் சென்று வருகின்கின்றனர் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.