Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவுடன் சிங்களர்கள் தகராறு!

Featured Replies

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோவுடன் சிங்களர்கள் தகராறு!

Jeniva_16514.jpg

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களவர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 25-ம் தேதி ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை பேசினார். முதல் உரையில், "இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012-ம் ஆண்டிலிருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை. தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத காலத்தில் அதிலும் 2009 மே மாதம் வரையில் 1,46,000 தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா மன்றம் தவறிவிட்டது. இன்னும் வேதனையானது என்னவென்றால், தற்போது தமிழ் இனக் கலாசாரப் படுகொலை உட்பட, கட்டமைக்கப்பட்ட படுகொலை சிங்கள அரசால் நடத்தப்படுகிறது. தமிழ்ப்பெண்கள், குறிப்பாக, 90,000 போர்க்கால விதவைகள் கதறுகிறார்கள். பெண்கள் காணாமல்போன தங்கள் கணவன், தந்தை, பிள்ளைகளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல், துயரத்தில் வாடுகிறார்கள். தமிழ் ஈழப் பகுதியிலிருந்து இலங்கை அரசின் ராணுவத்தை முற்றாக வெளியேற்ற மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் இனத்தை மொத்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கவுன்சிலும் முன் வர வேண்டும்" என்று பேசினார்.

இந்த உரை முடித்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து, வைகோ ஆற்றிய இரண்டாவது உரை, "வருகின்ற நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து, அனைத்துலக ஆய்வு நடைபெறப் போகின்றது. முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் தான் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களில் இருந்தும், 2015 தீர்மானத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ள இலங்கை அரசு தந்திரமான வழிகளைக் கையாள்கின்றது.
இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், ஊடக நேர்காணல்களில் 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியது இல்லை என்றும், போர்க்குற்றங்கள் விசாரணை எதுவும் நடக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சித்ரவதையும், படுகொலைகளும் சிங்கள ராணுவம், போலீஸால் நடத்தப்படுகின்றது. உதாரணமாக 2016 டிசம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் நடராஜன் கஜன், பவுன்ராஜ் சுலக்சன் சிங்களப் போலீஸாரால் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு சிங்கள ராணுவம் ஆளாக்குகிறது. கிளிநொச்சியில் கடந்த 210 நாள்களாக ஈழத்தமிழ்ப்பெண்கள் தாய்மார்கள் நீதிகேட்டு தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களின் விம்மல்களையும், அழுகைச் சத்தத்தையும் மனித உரிமைகள் கவுன்சில் செவி கொடுத்துக் கேட்கட்டும்
கொடுமையானபோது பால சேனா அமைப்பு, சிங்களக் குண்டர்களைக்கொண்ட அமைப்பு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மசூதிகளைத் தாக்குவதோடு, இஸ்லாமிய மக்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது.
ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கும், நீதி கிடைப்பதற்கும் இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், மனித உரிமைகள் கவுன்சில் இந்தப் பிரச்னையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு அனுப்புவதோடு, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்.

மனித குலத்துக்கு எதிராக வட கொரியா நடத்திய குற்றங்களை விசாரிக்க என்ன ஏற்பாடுகள் நடந்தனவோ, அதே ஏற்பாடு ஈழத்தமிழர்களுக்கும் நடக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள ஆபத்தான நிலைமையை மனித உரிமைகள் கவுன்சில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான மனித உரிமைகள் காவலர் அண்டோனியோ குட்டரெசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் இலங்கைத் தீவுக்குச் சென்று நேரில் பார்வையிட்டுக் கண்காணித்து முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும்" என்று பேசினார். இந்த உரையை, குர்திஸ்தான் பிரதிநிதி உட்படப் பலரும் வைகோவுக்குக் கை கொடுத்துப் பாராட்டினர். ஆனால், உரை முடித்துவிட்டு இரண்டு எட்டு நடப்பதற்குள் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோவைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார். உடனே வைகோ பொறுமையாக, நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி ஆமாம் என்றார். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி ரத்த உறவு இருக்கின்றது. எனக்குப் பேச உரிமை உண்டு என்றார். அதற்குள் அவரைச் சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள், விடுதலைப்புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அக்கிரமக்காரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்? என்றார்கள். அப்போது வைகோ, "லட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள். எங்கள் தாய்மார்கள் சகோதரிகளைக் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றீர்கள். எங்கள் பச்சைக் குழந்தைகளைக் கொன்றீர்கள். நீங்கள் கொலைகாரப் பாவிகள்" என்றார்.
இப்படிச் சூழ்ந்துகொண்டு வைகோவிடம் தகராறு செய்த சிங்களவர்களுள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினர்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் 35 பேர் வந்து இருக்கின்றார்கள்.

"அந்தப்பெண்மணி வைகோவுடன் தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தார்கள். அவ்வாறு யாரும் அங்கே எடுக்கக் கூடாது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள் கவுன்சிலுக்குள்வர விடாமல் தடுக்கச் செய்கின்ற சதி இது" என்று ஈழத்தமிழர்கள் கூறினார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/103253-sinhalese-in-argument-with-vaiko-at-un-meet.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் புத்தகத்தில் கறுப்புப் பக்கத்தில் சிங்கள ----- , ---- க்கு சொந்தக்காரர்களுக்கும் நிச்சய இடமுண்டு...

Edited by நிழலி
அநாகரீக / அருவருப்பான சொற்கள் நீக்கம்

  • தொடங்கியவர்

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோவுடன் சிங்களர்கள் தகராறு!

  • கருத்துக்கள உறவுகள்

அநாகரீக அருவருப்பான சொற்கள் நீக்கம்...

வரவேற்கிறேன்...

அநாகரீகமாகவும், அருவறுக்கத்தக்கமாகவும் உலகம் இயங்குகிறதே...

அதற்க்கு ஈடாக பீ யை மன்னிக்கவும், நிலத்திற்கு உரமாக பயன்படும் மலம் எவ்வளவோ மேல்...

ஒரேடியாக அணுகுண்டை போட்டு மொத்த பூமியை தான் அழிக்க வேண்டும்... உங்கள் மொழியில் நீக்கப் பெற வேண்டும்... அடுத்த பரிணாம வளர்ச்சிக்காகவாவது வழிவிட்டோம் என்ற புண்ணியமோ பெருமையோ வந்தடையும்...

உலக வரலாற்றில் முடை நாற்றத்தை உலகெங்கிலும் பரவச்செய்யும் இந்த மலத்தை துடைக்காமல் பயணம் செய்யும் மனிதன், எதிர்கால மனித குலம் காரி உமிழும் படியான துர்நாற்றத்தை தாங்கி பிடித்த வாறு பல்லிளித்துக் கொண்டு நிற்பான்...

நாகரீக உலகில் தான் நாகரீக மொழியை பயன்படுத்த முடியும், நாகரீகமாகவும் நடந்துகொள்ள முடியும்... இந்த உலகிற்கு அம்மணமாக அலைவதே போதுமானது... 

நாகரீகமாம்... நாகரீகம்... 
பச்சிளங்குழந்தைகாளையும், சிறார்களை அழித்த
பல்லிளிக்கும் உலக நாகரீகம்... 
முட்டாள்களாக்கும் உண்ணாவிரத நாகரீகம்...

இன்றும் நாடகம் தொடர்கிறது...  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வு சிங்களவர்கள்ஒரு போதும் மாறமாட்டார்கள்.அவர்கனு;கு முன்னால் போர்க்குற்றம் ,சமஷ்டி,தமிழீழம்,தமிழ் உரிமை  போன்ற  சொற்களைப் பேசக்கூடாது என்பதையே காட்டுகின்றது. இது ராஜபக்க ஆட்சியாக இருந்தாலும் சரி,மைத்திரி,ரணில் அரசாங்கமாயினும் ஒன்றுதான். இதைப் போன்ற நிகழ்வை சம்பந்தர் ஒருபோதும் சந்திக்கவே இல்லை. ஏனென்றால் அவர் ஒருபோதும் தமிழர் உரிமை பற்றிப் பேசுவதே இல்லை.  பிருpக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு என்று சிங்களவர்களுக்கு இதமாகாத்தான் பேசுவார். இவர்தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தருவார் என்று நம்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:

வை கோவை நம்புங்கள். தமிழீழம் பிறக்கும்.

அமெரிக்கா வந்து காப்பாற்றும் என்று இவர் சொன்னதை நம்பி மக்கள் எல்லோரையும் அரசியல் துறை புலித்தேவனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பி வைத்தார்களே? அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. நீங்கள் இன்னும் கூடவே நம்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ வை.கோ தான் அமெரிக்கா வரும் என்று பழியை அவர் மீது சிலர் போட்டு விட்டார்கள். சாதாரண மக்களே அமெரிக்கா வரும் என்று சொன்னார்கள். அத்தகைய ஒரு சூழலில் சொன்னார்களோ தெரியவில்லை. புலிகள் வை.கோவின் சொல்லை கேட்டார்கள் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.
ஆனால் மேற்படி அவர் ஐ.நாவுக்கு சென்று எமக்கு ஆதரவாக சொன்னவரை பாராட்ட, நன்றி சொல்ல  இங்கு சிலருக்கு பழக்க வேண்டி உள்ளது.

30 minutes ago, Jude said:

அமெரிக்கா வந்து காப்பாற்றும் என்று இவர் சொன்னதை நம்பி மக்கள் எல்லோரையும் அரசியல் துறை புலித்தேவனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பி வைத்தார்களே? அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. நீங்கள் இன்னும் கூடவே நம்புங்கள்.

இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா ஜூட்?

வைகோ வின் பேச்சு தமக்கு எதிரான நிலையை தோற்றுவிக்கும் என்பதற்காக போர்க் குற்றவாளிகளும் அவர்தம் குடும்பங்களும் வைகோ வை எதிர்க்கின்றனர். முக்கியமாக முன்னாள் இரா­ணுவத் தள­ பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய விற்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் கொண்டுவரப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான வழக்கின் பின்பே அவர்கள் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் ஏன் ஐ.நா வில் அவர் கலந்து கொண்டதையிட்டு எதிர்க்கிண்றீர்கள் ஜூட்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப  இது தான்  நடக்குது

தமிழர்  சார்பாக  கதைப்பவர்  எல்லோரும் இன  அழிப்பின் போது துரோகம்  செய்தோராக  காட்டப்படுகிறார்கள்

இதன்  மூலம்  குற்றவாளிகள்  தப்பித்தாலும்  பரவாயில்லை

நம்மவருக்கு கண்போனால்  போதும்...tw_angry:

28 minutes ago, நிழலி said:

இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா ஜூட்?

வைகோ வின் பேச்சு தமக்கு எதிரான நிலையை தோற்றுவிக்கும் என்பதற்காக போர்க் குற்றவாளிகளும் அவர்தம் குடும்பங்களும் வைகோ வை எதிர்க்கின்றனர். முக்கியமாக முன்னாள் இரா­ணுவத் தள­ பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய விற்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் கொண்டுவரப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான வழக்கின் பின்பே அவர்கள் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் ஏன் ஐ.நா வில் அவர் கலந்து கொண்டதையிட்டு எதிர்க்கிண்றீர்கள் ஜூட்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

வை கோவை நம்புங்கள். தமிழீழம் பிறக்கும்.

அமெரிக்கா வந்து காப்பாற்றும் என்று இவர் சொன்னதை நம்பி மக்கள் எல்லோரையும் அரசியல் துறை புலித்தேவனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பி வைத்தார்களே? அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. நீங்கள் இன்னும் கூடவே நம்புங்கள்.

அப்ப சம்பந்தரை நம்பினால் இரக்கிற மாகாணசபையாவத ஒழுங்காகக்கிடைக்குமா?போர்க்குற்ற விசாரணை .காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினை.காணிவிடுவிப்பு போன்ற பல பிரச்சினைகள் இருக்க ஏதாவது ஒருவிடயத்தை வந்து ஐநாவில கதைக்க வக்கில்லாத சம்பந்தர் கொம்பனியை நம்பிநதிலும் பார்க்க எங்கள் பிரச்சினையை ஐநாவில் கதைக்கிற ஐவகோ எவ்வளவோ மேல்.எதிர்க்கட்சித்தரைலவ் பதவியை வைத்துக்கொண்டே எதுவும் செய்யாதவர் என்ன ம..ப்புடுங்கப்போறார்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

வை கோவை நம்புங்கள். தமிழீழம் பிறக்கும்.

அமெரிக்கா வந்து காப்பாற்றும் என்று இவர் சொன்னதை நம்பி மக்கள் எல்லோரையும் அரசியல் துறை புலித்தேவனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பி வைத்தார்களே? அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. நீங்கள் இன்னும் கூடவே நம்புங்கள்.

ரோக்கியோவில் நடந்த இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட புலிகள்.. அமெரிக்காவில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. அப்படியாப்பட்ட அமெரிக்கா.. தமிழ் மக்களை காப்பாற்ற வரும் என்று புலிகள் நம்பினார்கள் என்பது.. தற்போது பலரும் பரப்பும் விடு கதை.

அமெரிக்கா வெளிப்படையாக உதவி செய்து தான்.. இந்த யுத்தமே முன்னெடுக்கப்பட்டது.. அதுவும் புலிகளுக்குத் தெரியும்.

அமெரிக்காவின் சூழ்ச்சி வலை தங்களைச் சுற்றிப் பின்னப்படுவதும் புலிகளுக்குத் தெரியும்.

அதனால்.. தான் இறுதி வரை அவர்களை நோர்வேயை நம்பினார்கள்.. தொடர்பு கொண்டார்கள்.. அமெரிக்காவை அல்ல. 

உண்மையில்.. தமிழ் மக்களை ஏமாற்றிய நாடு நோர்வே தான். அமெரிக்கா தமிழ் மக்களுக்கு எதிராகவே நின்றமை.. இந்தியா.. சீனா.. பாகிஸ்தான்.. இஸ்ரேல்.. ரஷ்சியா.. ஜப்பான்..எல்லாரும் நின்றமை வெளிப்படை. ஆனால் நோர்வே மட்டும் தான் நடுநிலைமை என்று கைவிட்ட நாடு. அதன் பொறுப்புக்களில் இருந்து விலகி நின்ற நாடு. 

வைகோ தமிழீழம் எடுத்துத் தருவார் என்று எப்போதும் தமிழ் மக்கள் நம்பியதில்லை. தங்களின் எண்ணங்களை வைகோ தமிழகத்தில்.. சர்வதேச அரங்கில் பிரதிபலிப்பார் என்று மட்டுமே தமிழ் மக்கள் நம்பினார்கள்.. இப்பவும் அந்த நம்பிக்கை அவரிடம் தமிழ் மக்களால் வைக்கப்பட்டுள்ளது. அதை அவர் எவ்வளவு தூரம் தூய்மையாகச் செய்கிறார் என்பதற்கு அவரின் செயற்பாடுகள் தான் பதில் சொல்லனும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா ஜூட்?

வைகோ வின் பேச்சு தமக்கு எதிரான நிலையை தோற்றுவிக்கும் என்பதற்காக போர்க் குற்றவாளிகளும் அவர்தம் குடும்பங்களும் வைகோ வை எதிர்க்கின்றனர். முக்கியமாக முன்னாள் இரா­ணுவத் தள­ பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய விற்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் கொண்டுவரப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான வழக்கின் பின்பே அவர்கள் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் ஏன் ஐ.நா வில் அவர் கலந்து கொண்டதையிட்டு எதிர்க்கிண்றீர்கள் ஜூட்?

வைகோ ஐ.நா.வில் கலந்து கொண்டதை எதிர்க்கவில்லை.

சம்பந்தனை நம்ப வேண்டாம் என்றும் வை.கோவை நம்புங்கள் என்றும் புலவர் எழுதியதற்கு பதில் எழுதினேன். வை.கோ. இறுதி நாட்களில் தனது நண்பர்கள் ஊடாக அமெரிக்க ஒபாமா  அரசின் உயர்மட்ட தொடர்புகள் மூலம்     மக்களை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் அவரின் முயற்ச்சியால் அமெரிக்க பசிபிக் கடற்படை தளத்தின் உயர் அதிகாரிகள் கொழும்பு வரை வந்தும் கோத்தபாய விடவில்லை என்றும் சில ஊடகங்களில் ஆக்கங்கள் வந்திருந்தன. அந்த நம்பிக்கையிலேயே குடி தண்ணீர் கூட   இல்லாத     முள்ளி வாய்க்காலுக்கு    கடல் வழியே மக்களை அமெரிக்க கப்பல்கள் மூலம் வெளியேற்ற  மக்கள்     கொண்டு வரப்பட்டார்கள்    என்றும்      அந்த செய்திகளில்  படித்திருந்தேன்.   அவற்றின் பிரதிகளை    சேர்த்து வைக்கவில்லை.

வை.கோ. தனக்கு தெரிந்ததை செய்கிறார். சம்பந்தனும் தன்னால் முடிந்ததை செய்கிறார். இவரை நம்பு அவரை நம்பாதே என்று இன்று சொல்லும் புலவர் தேசிய தலைவரை நம்பாதே, தமிழ் ஈழம் கிடைக்காது என்று சொன்னாரா? இல்லையே? வை. கோவை நம்பி மக்கள் இன்று அழிந்து போகவில்லையா? சம்பந்தனை நம்பி மக்கள் நிம்மதியாக வாழ்ந்தால் புலவருக்கு நிம்மதி போய் விடுமா?

Edited by Jude

45 minutes ago, Jude said:

வை. கோவை நம்பி மக்கள் இன்று அழிந்து போகவில்லையா? சம்பந்தனை நம்பி மக்கள் நிம்மதியாக வாழ்ந்தால் புலவருக்கு நிம்மதி போய் விடுமா?

சற்று புரியும் படியாக எழுதினால் விளங்க ஏதுவாய் இருக்கும்

வைகோவை நம்பி எந்த மக்கள் அழிந்தார்கள் ? மக்கள் நிம்மதியாய் வாழ்வதற்கும் சம்மந்தனுக்கும் என்ன தொடர்பு ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

வைகோ ஐ.நா.வில் கலந்து கொண்டதை எதிர்க்கவில்லை.

சம்பந்தனை நம்ப வேண்டாம் என்றும் வை.கோவை நம்புங்கள் என்றும் புலவர் எழுதியதற்கு பதில் எழுதினேன். வை.கோ. இறுதி நாட்களில் தனது நண்பர்கள் ஊடாக அமெரிக்க ஒபாமா  அரசின் உயர்மட்ட தொடர்புகள் மூலம்     மக்களை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் அவரின் முயற்ச்சியால் அமெரிக்க பசிபிக் கடற்படை தளத்தின் உயர் அதிகாரிகள் கொழும்பு வரை வந்தும் கோத்தபாய விடவில்லை என்றும் சில ஊடகங்களில் ஆக்கங்கள் வந்திருந்தன. அந்த நம்பிக்கையிலேயே குடி தண்ணீர் கூட   இல்லாத     முள்ளி வாய்க்காலுக்கு    கடல் வழியே மக்களை அமெரிக்க கப்பல்கள் மூலம் வெளியேற்ற  மக்கள்     கொண்டு வரப்பட்டார்கள்    என்றும்      அந்த செய்திகளில்  படித்திருந்தேன்.   அவற்றின் பிரதிகளை    சேர்த்து வைக்கவில்லை.

வை.கோ. தனக்கு தெரிந்ததை செய்கிறார். சம்பந்தனும் தன்னால் முடிந்ததை செய்கிறார். இவரை நம்பு அவரை நம்பாதே என்று இன்று சொல்லும் புலவர் தேசிய தலைவரை நம்பாதே, தமிழ் ஈழம் கிடைக்காது என்று சொன்னாரா? இல்லையே? வை. கோவை நம்பி மக்கள் இன்று அழிந்து போகவில்லையா? சம்பந்தனை நம்பி மக்கள் நிம்மதியாக வாழ்ந்தால் புலவருக்கு நிம்மதி போய் விடுமா?

சம்பந்தனை நம்ப வேண்டாம் என்றும் வை.கோவை நம்புங்கள் என்று  எங்கே நான் எழுதினேன்.நான் எழுதியதை மீண்டும் வாசித்துப்பாருங்கள். இப்படித்தான் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று வைகோ சொன்னதாக நீங்கள் அவிழ்த்து விட்ட கட்டுக்கதையும் இருக்கும்.சம்பந்தரை எப்படி நம்புவது?1977இல் தமிழீழம் கேட்டார்.2004 இல் புலிகளே தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று புலிகளின்ஏற்றுக்கொண்டார்.20ழ(இல் புலிகள் கொடிய பயங்கரவாதிகள் என்றார். 2016இற்குள் தீர்வு வரும் என்றார். பிறகு அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும் என்றார். இப்ப தீர்வு வரும் ஆனால் வராது என்கிறார். அடிக்கடி கொள்கைகளை மாற்றிமாற்றிப் பெசும் சம்பந்தரை எந்த அடிப்படையில் நம்பச் சொல்கிறீர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புலவர் said:

கேள்வியும் நானே! பதிலும் நானே! என்று நீங்களே இருக்கும் போது ...

23 hours ago, சண்டமாருதன் said:

சற்று புரியும் படியாக எழுதினால் விளங்க ஏதுவாய் இருக்கும்

வைகோவை நம்பி எந்த மக்கள் அழிந்தார்கள் ? மக்கள் நிம்மதியாய் வாழ்வதற்கும் சம்மந்தனுக்கும் என்ன தொடர்பு ?

வைகோ என்றால் என்ன? யார் சம்பந்தன்? நீங்களும் இந்த திரியை முதல் இருந்து படித்துவிட்டு கேள்விகளையும் விளக்கமாக கேட்கலாமே?

31 minutes ago, Jude said:

வைகோ என்றால் என்ன? யார் சம்பந்தன்? நீங்களும் இந்த திரியை முதல் இருந்து படித்துவிட்டு கேள்விகளையும் விளக்கமாக கேட்கலாமே?

வைகோ ஒருவரது பெயர் - வை. கோபல்சாமி வைகோ என்ற பெயரலேயே நீண்டகாலமாக அழைக்கப்படுகின்றார் தவிர வை.கோ அல்ல. 

Quote

தி.மு.க மேடையில் வைகோ..!' உற்சாகத்துடன் அணி சேரும் எதிர்க்கட்சிகள்! - ஆனந்த விகடன்

ஐ.நா.மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சி; இலங்கை தூதரகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு- இந்து

வைகோ தான் அவரின் முகநூலிலும் ஆங்கிலத்தில் vaiko'

கூகுளில் தேடினாலும் இப்பயேதான் அவரது பெயர் வரும் 

எனவே உங்கள் முதல் கேள்வி புரிந்தும்  அஃறிணையில் விழிக்கப்பட்டுள்ளது ஆரோக்கியமற்றது.

--------------------------

வைகோ முப்பது வருடகாலமாக தமிழீழ மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவருகின்றார். தமிழர்கள் மீதான சிங்கள இந்திய அரசின் மனித உரிமை மீறல்களு;கு எதிராக குரல் கொடுத்துவருகின்றார். அவர் தமிழீழ மக்களின் ஆதரவாளர். அவரை நம்பி யாரும் அழிந்துபோனதும் இல்லை அதற்கான அடிப்படையும் இல்லை அவசியமும் இல்லை. அவர் ஒடுக்கப்படும் தமிழீழ மக்களுக்காக நீண்டகாலமாக குரல்கொடுத்துவருகின்றார் அவரை நம்பி மக்கள் எதற்கு அழியவேண்டும்?

சம்மந்தன் குறித்து எந்த ஒரு நல் அபிப்பிராயமும் கிடையாது. அவரிடம் எக்காலத்திலும் உறுதியான நிலையான போச்சோ வாக்கோ கொள்கையோ அடிப்படையில் அரசியல் ரீதியாக இருந்ததில்லை. அவரது அரசியல் ஈடுபாட்டால் தமிழர்களுக்கு எக்காலத்திலும் எந்த ஒரு சிறு நன்மையும் ஏற்பட்டதில்லை ஏற்படவும் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2017 at 8:39 AM, Jude said:

மக்களை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் அவரின் முயற்ச்சியால் அமெரிக்க பசிபிக் கடற்படை தளத்தின் உயர் அதிகாரிகள் கொழும்பு வரை வந்தும் கோத்தபாய விடவில்லை என்றும் சில ஊடகங்களில் ஆக்கங்கள் வந்திருந்தன.

இதனை கோத்தாவிட்க்கு பயந்து அமெரிக்கர்கள் பின்னங்கால் பிடரியிலடிபட ஓட்டம் என்றும் எழுதலாம் ...லங்காவின் செய்தி போல 
கோத்தாவையே எதிர்க்க துப்பிலாத அமேரிக்கா தமிழர்களை நிச்சயம்  காப்பாற்றியிருக்கும் ...
அனைத்தையும் செய்மதியில் பார்த்துகொண்டு கார்டிநேட் பண்ணிக்கொண்டிருந்த பெரிய அண்ணை வாய்ப்பைத்தான் தேடிக்கொண்டிருந்தவர் ...என்ன செய்வது கோப்பால் அதுதான் கிடைக்கவில்லையே 
சம்மு தீர்வை வெட்டி எடுத்துகொண்டுவருவார் என்று நம்புவதுபோல் இதையும் நம்புங்கள்  ஆனால் அவரோ சிங்களவன் பேளப்போகும் அசிங்கத்திற்கு அவரோட நம்பர் பிளேட் அடிக்க ஓடித்திரியுறார் அது என்ன கன்றாவியாக இருந்தாலும் பிளேட் அவரோடது அசிங்கம்  அவர்களோடது ....தின்னும் வேலை எங்களோடது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

கேள்வியும் நானே! பதிலும் நானே! என்று நீங்களே இருக்கும் போது ...

வைகோ என்றால் என்ன? யார் சம்பந்தன்? நீங்களும் இந்த திரியை முதல் இருந்து படித்துவிட்டு கேள்விகளையும் விளக்கமாக கேட்கலாமே?

இது ஆரம்பத்தில் எழுதப்பட்ட பதிவல்ல. சம்பந்தரை நம்பச் சொல்லி நீங்கள் எழுதிய பதிவிற்கே கேள்வியாக அமைந்த பதில் .

இந்த நிகழ்வு சிங்களவர்கள்ஒரு போதும் மாறமாட்டார்கள்.அவர்கனு;கு முன்னால் போர்க்குற்றம் ,சமஷ்டி,தமிழீழம்,தமிழ் உரிமை  போன்ற  சொற்களைப் பேசக்கூடாது என்பதையே காட்டுகின்றது. இது ராஜபக்க ஆட்சியாக இருந்தாலும் சரி,மைத்திரி,ரணில் அரசாங்கமாயினும் ஒன்றுதான். இதைப் போன்ற நிகழ்வை சம்பந்தர் ஒருபோதும் சந்திக்கவே இல்லை. ஏனென்றால் அவர் ஒருபோதும் தமிழர் உரிமை பற்றிப் பேசுவதே இல்லை.  பிருpக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு என்று சிங்களவர்களுக்கு இதமாகாத்தான் பேசுவார். இவர்தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தருவார் என்று நம்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

வை கோவை நம்புங்கள். தமிழீழம் பிறக்கும்.

அமெரிக்கா வந்து காப்பாற்றும் என்று இவர் சொன்னதை நம்பி மக்கள் எல்லோரையும் அரசியல் துறை புலித்தேவனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பி வைத்தார்களே? அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. நீங்கள் இன்னும் கூடவே நம்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும்  ஆதரித்தவர்களை அவர்கள் எந்த பிண்ணனியைக் கொண்டவர்களாக இருந்தாலும் எதிர்ப்பதென்பது தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு குழுவினரின் யுக்தியாக இரருந்து வருகிறது. இந்தக் குழுவினர் 2009 இற்குமுன்னார் இருந்ததைக் காட்டிலும் இப்போது அதிகரித்தவர்களாக (பின்னாட்களில் இணைந்துகொண்டவர்கள் புலிகளை 2009 வரை ஆதரித்து , தோல்வியின் விரக்தியில் இக்குழுவினருடன் இணைந்தவர்கள்) இருக்கிறார்கள்.

அந்தவகையில்த்தான் திரு வை. கோபாலசாமி மீதான காழ்ப்புணர்வும் பார்க்கப்படல் வேண்டும். சிங்களவர்கல் எதிர்க்கிறார்கள் என்றால் அதை புரிந்துகொள்ளுதல் கடிணமானது இல்லை. மிகவும் வெளிப்படையானது. தமது அநியாயங்களை உலக அரங்கில் அவர் பேசுகிறார் என்பது நிச்சயம் சிங்களவர்களைக் கோபப்பட வைக்கும். ஆனால், தமிழர்களாக இருக்கும் ஒருவருக்கு இது எந்தவகையில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்பது மிகவும் கேள்விக்குறியானது. ஆக, அவர் பேசும் விடயம் பற்றி நோக்கப்படாது, அவரது பின்புலம் பற்றி நோக்கப்பட்டே இந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அதாவது புலிகளை தொடர்ந்தும் ஆதரிப்பவர் என்கிற பின்புலம்.

மற்றும்படி அமெரிக்கா வருகிறது, ஆப்பிரிக்கா வருகிறது என்றெல்லாம் இவர் புலிகளை நம்பவைத்து முள்ள்வாய்க்காலுக்குத் தள்ளிச் சென்று பலிகொடுத்தார் என்பதெல்லாம் அவர்மீதான காழ்ப்புணர்விற்கு வலுச்சேர்க்க கட்டப்பட்ட கட்டுக்கதைகள்தான். 

சிங்களவர்கள் ஆத்திரப்படும் விடயம் ஒன்றை ஒரு தமிழர் செய்கிறார் என்றால், தமிழராக இருக்கும் எல்லோரும் ஆதரிக்கவேண்டும். அதை விட்டு விட்டு அவர் பலிகொடுத்தார், இன்னும் நம்புங்கள், இன்னும் பலிகொடுப்பார் என்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சியே !!!

  • தொடங்கியவர்

இது நேற்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27.9.2017 at 5:09 AM, Jude said:

வை.கோ. இறுதி நாட்களில் தனது நண்பர்கள் ஊடாக அமெரிக்க ஒபாமா  அரசின் உயர்மட்ட தொடர்புகள் மூலம்     மக்களை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் அவரின் முயற்ச்சியால் அமெரிக்க பசிபிக் கடற்படை தளத்தின் உயர் அதிகாரிகள் கொழும்பு வரை வந்தும் கோத்தபாய விடவில்லை என்றும் சில ஊடகங்களில் ஆக்கங்கள் வந்திருந்தன. அந்த நம்பிக்கையிலேயே குடி தண்ணீர் கூட   இல்லாத     முள்ளி வாய்க்காலுக்கு    கடல் வழியே மக்களை அமெரிக்க கப்பல்கள் மூலம் வெளியேற்ற  மக்கள்     கொண்டு வரப்பட்டார்கள்    என்றும்      அந்த செய்திகளில்  படித்திருந்தேன்.   அவற்றின் பிரதிகளை    சேர்த்து வைக்கவில்லை.

காத்தான் பூத்தான் எழுதும் செய்திகளையெல்லாம் வாசித்துவிட்டு இங்குவந்து பட்டணத்தில் பூதம் ரேஞ்சில் கதைவிடுபவரா நீங்கள்?????? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 28.9.2017 at 12:32 PM, ragunathan said:

புலிகளையும், அவர்களின் போராட்டத்தையும்  ஆதரித்தவர்களை அவர்கள் எந்த பிண்ணனியைக் கொண்டவர்களாக இருந்தாலும் எதிர்ப்பதென்பது தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு குழுவினரின் யுக்தியாக இரருந்து வருகிறது. இந்தக் குழுவினர் 2009 இற்குமுன்னார் இருந்ததைக் காட்டிலும் இப்போது அதிகரித்தவர்களாக (பின்னாட்களில் இணைந்துகொண்டவர்கள் புலிகளை 2009 வரை ஆதரித்து , தோல்வியின் விரக்தியில் இக்குழுவினருடன் இணைந்தவர்கள்) இருக்கிறார்கள்.

அந்தவகையில்த்தான் திரு வை. கோபாலசாமி மீதான காழ்ப்புணர்வும் பார்க்கப்படல் வேண்டும். சிங்களவர்கல் எதிர்க்கிறார்கள் என்றால் அதை புரிந்துகொள்ளுதல் கடிணமானது இல்லை. மிகவும் வெளிப்படையானது. தமது அநியாயங்களை உலக அரங்கில் அவர் பேசுகிறார் என்பது நிச்சயம் சிங்களவர்களைக் கோபப்பட வைக்கும். ஆனால், தமிழர்களாக இருக்கும் ஒருவருக்கு இது எந்தவகையில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் என்பது மிகவும் கேள்விக்குறியானது. ஆக, அவர் பேசும் விடயம் பற்றி நோக்கப்படாது, அவரது பின்புலம் பற்றி நோக்கப்பட்டே இந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அதாவது புலிகளை தொடர்ந்தும் ஆதரிப்பவர் என்கிற பின்புலம்.

மற்றும்படி அமெரிக்கா வருகிறது, ஆப்பிரிக்கா வருகிறது என்றெல்லாம் இவர் புலிகளை நம்பவைத்து முள்ள்வாய்க்காலுக்குத் தள்ளிச் சென்று பலிகொடுத்தார் என்பதெல்லாம் அவர்மீதான காழ்ப்புணர்விற்கு வலுச்சேர்க்க கட்டப்பட்ட கட்டுக்கதைகள்தான். 

சிங்களவர்கள் ஆத்திரப்படும் விடயம் ஒன்றை ஒரு தமிழர் செய்கிறார் என்றால், தமிழராக இருக்கும் எல்லோரும் ஆதரிக்கவேண்டும். அதை விட்டு விட்டு அவர் பலிகொடுத்தார், இன்னும் நம்புங்கள், இன்னும் பலிகொடுப்பார் என்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சியே !!!

உண்மை!

உங்கள் நேரத்துக்கு நன்றி!

70ஆண்டுகளாக அழிவைச்சந்தித்த ஒரு இனத்துக்கு ஒரு இராயதந்திரி(பாலாஅண்ணாவைவிடுத்து) இல்லை.  யாராவது இப்படிப் போர்க்குணமுள்ள ஒருவர் இன்றுவரை  இல்லையே. வை .கோ அவர்கள் தனது முயற்சியைச் செய்கிறார் இதற்கேன் இங்குசிலர் பிரதட்டை செய்கிறார்கள்.  2009பின் புலத்திலிருந்து யாராவது தன்னெழுச்சியாகத் தாயகப்பணியாற்றுகிறார்களா? (உதவிகள் தவிர்த்து) எனவே நான் எனது இனத்துக்கான கடமையில் என்ன செய்தேன் என்று தமிழர்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய சூழலில் சிந்திப்பவர்களையும்  நிந்திக்கும் செயற்பாடென்பது ஆரோக்கியமா?

16 minutes ago, nochchi said:

எலும்புத் துண்டுக்கு... அலையும் தமிழ் கூட்டம், 
காக்கை வன்னியன் காலத்தில் இருந்தே....  நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரிவதால் தான்.....
இன்றும்... தமிழனுக்கு ஒரு விடிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2017 at 12:28 AM, சண்டமாருதன் said:

வைகோ ஒருவரது பெயர் - வை. கோபல்சாமி வைகோ என்ற பெயரலேயே நீண்டகாலமாக அழைக்கப்படுகின்றார் தவிர வை.கோ அல்ல. 

கூகுளில் தேடினாலும் இப்பயேதான் அவரது பெயர் வரும் 

தாய் தந்தை வைத்த பெயரை மாற்றி வைத்து கொள்வது பெற்றவர் விருப்பை உதறித்தள்ளும் செயல் அல்லவா?

பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கி விட இப்படி பெயரை மாற்றி, ஏதோ பெற்றவர்களுக்கு சரியான பெயர் வைக்க தெரியாதது போல, அவர்கள் விருப்பை உதறித்தள்ளிய இவர் சரியாக செயற்பட்டுள்ளாரா?

Quote

எனவே உங்கள் முதல் கேள்வி புரிந்தும்  அஃறிணையில் விழிக்கப்பட்டுள்ளது ஆரோக்கியமற்றது.

தமிழீழம் என்றால் என்ன?

தமிழீழம் உயர்திணையா அஃறிணையா?

தமிழீழத்தை அஃறிணையில் விழிப்பது ஆரோக்கியமற்றதா?

22 hours ago, தமிழ் சிறி said:

எலும்புத் துண்டுக்கு... அலையும் தமிழ் கூட்டம், 
காக்கை வன்னியன் காலத்தில் இருந்தே....  நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரிவதால் தான்.....
இன்றும்... தமிழனுக்கு ஒரு விடிவில்லை.

இப்படியே ஒப்பாரி வைப்பதால் விடிவு வந்து விடுமா? என்ன செய்யப்போகிறீர்கள்?  தொடர்ந்தும் ஒப்பாரி மட்டும்தானா?

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Jude said:

தாய் தந்தை வைத்த பெயரை மாற்றி வைத்து கொள்வது பெற்றவர் விருப்பை உதறித்தள்ளும் செயல் அல்லவா?

பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆளாக்கி விட இப்படி பெயரை மாற்றி, ஏதோ பெற்றவர்களுக்கு சரியான பெயர் வைக்க தெரியாதது போல, அவர்கள் விருப்பை உதறித்தள்ளிய இவர் சரியாக செயற்பட்டுள்ளாரா?

உங்கள் பெயர்???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.