Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு

Featured Replies

ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு

ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு
 
யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா்.

http://newuthayan.com/story/40010.html

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நல்ல செய்தி.  பசியற்றபோது மிருகங்களும் இரையைக் கொல்லாது. :100_pray: 

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்களில் பலியிடுவதற்கு மட்டுமே தடை. மிருகங்களை வேறு இடங்களில் தாராளமாக பலியிடலாம் 

  • தொடங்கியவர்

கோவிலில் ஆடுவெட்ட இறைச்சிக்கடைச் சட்டம்; கேவலம் என்றார் நீதிபதி!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் மிருகங்களினைப் பலியிடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று யாழ் மேல் நீதிமன்றம் இன்றைய தினம் (24.10.2017) தீர்ப்பு ஒன்றினை உத்தரவாகப் பிறப்பித்துள்ளது.

இதன்படி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிபதி தனது தீர்ப்பின்போது சில முக்கியமான விடயங்களினை காரசாரமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் கோவிலில் ஆடு வெட்டுவதற்கு இறைச்சிக்கடைச் சட்டத்தினைப் பயன்படுத்தியமை கேவலமான செயலாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆலயத்தில் பத்தாயிரம் தொடக்கம் பதினையாயிரம் வரையிலான மக்கள் கூடும் சமய விழாவில், முன்னூறு தொடக்கம் ஐநூறு வரையிலான கோழிகள், ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக்கப்பட்டு ஆலயத்தினுள் விற்பனை செய்யப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

சங்கானை பிரதேசசபை, தெல்லிப்பழை பிரதேசசபை, உடுவில் பிரதேசசபை, சண்டிலிப்பாய் பிரதேசசபை, கோப்பாய் பிரதேசசபை ஆகியன ஆலயத்தினுள் வேள்வியினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இறைச்சிக்கடை சட்டத்தினை பயன்படுத்தியுள்ளமை கேவலமான விடயம் என தெரிவித்த நீதிபதி இறைச்சிக்கடைச் சட்டம், மிருக வதைச் சட்டம், அரசியல் சட்டம் ஆகிய சட்டங்களின் படி ஆலயங்களில் மக்கள் கூடும் பொது இடங்களில் மிருகங்களை பலியிடல் குற்றச்செயலாகும்.

முன்னூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த சமய அனுஷ்டானமான மிருக பலியிடலை நிறுத்துவது சட்டப்படி தவறானது என கவுணாவத்தை நரசிம்மரால் கூறப்பட்டது. இதற்கு இறைச்சிக்கடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறைச்சிக்கடை சட்டத்திற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என நீதிபதி மன்றில் கேள்வியெழுப்பினார்.

2014 ஆம் ஆண்டு வேள்விக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட போதும் குறிப்பிட்ட நீதவானுக்கு அவ்வாறு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என தெரிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், இது தொடர்பில் மேல்நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பவற்றுக்கே அதிகாரம் உள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.

இறைச்சிக் கடை சட்டமென்பது இறைச்சிகளை விற்பனை செய்யும் சட்டமாகும் இதனை தவறாக புரிந்து கொண்ட வலிகாமம் பகுதி பிரதேச செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் மன்றில் நீதிபதி குறிப்பிட்டார். பிரதேச சபைகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் கோழிகள், ஆடுகளை வெட்டி மக்கள் கூடும் பொது இடங்களில் சமூக சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளன.

பொது இடத்தில் மிருகங்களை பலியிட முடியுமா என மன்றில் கேள்வியெழுப்பிய நீதிபதி, பேருந்து நிலையத்தில் மிருக பலியிடமுடியுமா? யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானம் மக்கள் கூடும் பொது இடம் அங்கு மிருகபலியிட முடியுமா? தலதா தாளிகையில் 1 இலட்சம் மக்கள் கூடும் சமய நிகழ்வில் மிருகங்களை பலியிட அனுமதி கோர முடியுமா? உள்ளுராட்சி சபைகள் இதற்கு அனுமதி வழங்குமா?

அதே போல் நல்லூர் ஆலய திருவிழாவின் போது மிருகங்களை பலியிட முடியமா? கிறிஸ்மஸ் நிகழ்வின் போது அந்தோனியார் கொச்சிக்கடை ஆலயத்தில் மிருகங்களைப் பலியிட முடியுமா என்றும் கேள்வியெழுப்பியதுடன், யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் மிருகபலி இடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பின் பின்னர் மிருக பலி குறித்த காரசாரமான விவாதங்களினை முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Meat-law-in-jaffna-Hindu-temples

நல்ல  முடிவு!

  • தொடங்கியவர்

வேள்வி மீதான கேள்வி

யாழ்ப்பாண மேல் நீதி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்­குள் இருக்­கும் இந்­துக் கோவில்­க­ளில் பலி­யி­டல் முற்­றா­கத் தடைசெய்­யப்­பட்­டுள்­ளது.

தம்மை முற்­போக்­குச் சக்­தி­க­ளா­கக் காட்டிக்கொள்ளும் இந்து அமைப்­புக்­க­ளுக்கு இந்­தத் தீர்ப்பு கொண்­டாட்­ட­மான வெற்றி என்­ப­தில் மாற்­றுக் கருத்­து எது­வும் இல்லை.

இறைச்­சிக் கடைச் சட்­டத்­தின் கீழ் ஆல­யங்­க­ளில் மிரு­கங்­க­ளைப் பலி­யி­டு­வ­தையே நீதி­மன்­றம் தடை செய்­துள்­ளது. சைவ மகா சபை­யின் சார்­பில் இந்த வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

ஆல­யங்­க­ளில் வேள்­வி­க­ளைத் தடை­செய்­யு­மாறு கோரா­மல், இறைச்­சிக் கடைச் சட்­டங்­க­ளின் கீழ் ஆல­யங்­க­ளில் மிரு­கங்­க­ளைப் பலி­யி­டு­வ­தைத் தடை செய்­யு­மாறே வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அதன் அடிப்­ப­டை­யி­லேயே தீர்ப்­பும் வழங்­கப்­பட்­டுள்­ளது.
ஆல­யங்­க­ளில் இந்­தப் பலி­யி­டலை நிகழ்த்­து­வ­தற்கு இறைச்­சிக் கடைச் சட்­டத்­தின் கீழ் இது­வரை கால­மும் அனு­மதி வழங்­கப்­பட்­டமை அதி­கார முறை­கேடு என்று நீதி­பதி தனது தீர்ப்­பில் சுட்­டிக்­ காட்­டி­யுள்­ளார்.

ஆல­யங்­கள் கொல் க­ளங்­க­ளாக மாற்­றப்­ப­டு­வது ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­த­து­தான். இறை­வன் என்­ப­வன் அன்­பின் வடி­வா­ன­வன் என்று வணங்­கும் பக்­தர்­கள் அந்த இறை­வ­னின் அன்­புக்­கு­ரிய உயிர்­களை அவ­னுக்கே காணிக்­கை­யாக்­கு­கின்­றோம் என்­று­கூ­றிக் கொல்­வது ஒரு­ போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­ததே! அதில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை.

ஆனால், அது நீதி­மன்­றத்­ தின் ஊடா­கச் சட்­டத்­தின் வழி­யா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்றா என்­பதே கேள்­வி.

கிரா­மிய, பாரம்­ப­ரிய வழி­பாட்டு முறை­க­ளை­யும் சிறு தெய்வ வழி­பாட்டு முறை­க­ளை­யும் இந்து மதம் என்­கிற பொதுச் சமய வழி­ மு­றைக்­குள் அடக்­கு­வ­தும் ஓர் அடக்­கு­மு­றையே.

ஈழத் தமி­ழர்­கள் இந்­ துக்­கள் அல்­லர், சைவர்­கள் என்று ஓங்­கும் குரல்­க­ளை­யும் இங்கே இப்­போது கேட்க முடி­கி­றது. இந்த வழக்­கைத் தாக்­கல் செய்த சைவ மகா சபையே அத்­த­கைய கொள்­கை­யைத்­தான் முன்­வைக்கி­றது.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது இந்து மதக் கொள்கை என்­கிற அடிப்­ப­டையில் கிரா­மிய சிறு தெய்வ வழி­பா­டு­களை, தமி­ழர்­க­ளின் வேரடி வழி ­பாட்டு முறை­யின் மீது இந்­துக் கொள்­கை­யைத் திணிக்க முயற்­சிப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல.

காலப் பொருத்­த­மற்ற வழி­பாட்டு முறை­கள் கிரா­மிய, சிறு தெய்வ வழி­பா­டு­க­ளில் காணப்­பட்­டால் சம­யப் பெரி­யோர்­கள், மனி­தா­பி­மா­னி­கள், சமூக ஆர்­வ­லர்­கள் அது குறித்­துச் சம்­பந்­தப்­பட்­ட­வர் களு­டன் பேசி அந்த வழி­பாட்டு முறை­களை மடை­மாற்­றம் செய்­வதே பொருத்­த­மா­னது.

பலி­யி­டல் வழக்­கத்­தில் ஏற்­க­னவே இத்­த­கைய மடை­மாற்­றம் சில கோவில்­க­ளில் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. அங்­கெல்­லாம் பலி­யி­டல் இல்­லா­மல் வேள்வி பூசை­கள் இன்­றும் நடக்­கின்­றன.

அதற்­குள் சட்­டம் தலை­யிட்டு அடி­யோடு அந்­தப் பாரம்­ப­ரி­யத்­தைச் சிதைப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது. அது அவர்­க­ளின் பாட்­டன் முப்­பாட்­டன் வழி வந்த உரி­மையை, இன்­னும் சொல்­லப்­போ­னால் அந்த மண்­ணின் மைந்­தர்­க­ளது இறை­மையை கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

அது­வும்­போக, இந்த வேள்வி முறை­யில் ஒரு சிறு கிரா­மி­யப் பொரு­ளா­தா­ர­மும் கலந்­தி­ருந்­தது. வேள்வி தடைப்­பட்­டுப்­போ­னால் அது­வும் சிதைந்­து­போ­கும்.

நாளாந்­தம் நூறு அல்­லது இரு­நூறு ரூபா­ வுக்கு ஆடு­க­ளுக்­குச் சாப்­பாடு போட்டு வளர்க்­கும் ஒரு­வர், 10 மாதம் முதல் ஒரு வரு­டத்­தில் 80 ஆயி­ரம் தொடக்­கம் ஒரு லட்­சம் வரை சரா­ச­ரி­யா­கப் பெற்­றுக்­கொள்ள அல்­லது அதற்­கும் மேலே இலா­பம் பெறும் ஒரு முறைமை இருந்­தது.

வேள்­வி­கள் நிரந்­த­ர­மா­கத் தடை செய்­யப்­பட்­டால் இந்­தச் சேமிப்பு நிச்­ச­யம் இல்­லா­மல் போய்­வி­டும்.
இன்­னும் சொல்­லப்­போ­னால், இந்த வேள்வி முறை­யின் மூலம் நல்­லின ஆடு­கள் பாது­காக்­கப்­பட்டு வந்­தன. உள்ளூர் மற்­றும் கலப்பு இனங்­கள் தொடர்ச்­சி­யாகப் பெருக்­கப்­பட்­டன.

கடாக்­க­ளின் பெருப் பம், வனப்பு என்­ப­வற்­றுக்­கு வேள்­வி­க­ளில் பெரும் செல்­வாக்கு இருந்­த­தால் நல்­லின ஆடு­க­ளின் வளர்ப்­புக்கு அது பெரும் ஊக்­கி­யாக இருந்­தது. வேள்­வி­கள் நிரந்­த­ர­மா­கத் தடை செய்­யப்­ப­டும்­போது, இனி ஆடு­க­ளின் மீதான காத­லும் ஆர்­வ­மும் அற்­றுப்­போ­கும்.

இறைச்­சிக்கு மட்­டுமே ஆடு வளர்க்­கும் போக்கு மட்­டுமே எஞ்­சும். அதன் மூலம் உள்ளூர் இனங்­க­ளும் நல்­லி­னங்­க­ளும் அழிந்­து­போ­கும்.

தமி­ழ­கத்­தில் ஜல்­லிக்­கட்­டுக்­குத் தடை விதிக்­கப்­பட்­ட­போ­தும் இது­போன்ற விட­யங்­கள் அங்கே சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. தமி­ழ­கத் தமி­ழர்­கள் உணர்­வு­பூர்­வ­மா­ன­வர்­க­ளாக இருந்­த­த­னால் தமது பாரம்­ப­ரி­யத்­தைக் காக்­கப் போரா­டி­னார்­கள்.

நாம் அப்­ப­டிச் செய்­ய­வில்லை.
பலி­யி­ட­லுக்­கான தடை வேள்­வி­க­ளை­யும் நிரந்­த­ரமா­கத் தடுத்­து­விட்­டால் இதெல்­லாம் நடக்­கும்.

இந்­தப் பாதிப்­புக்­களை எல்­லாம் தவிர்க்­ கக்­கூ­டிய விதத்­தில் பலி­யி­டல் மடை­மாற்­றம் செய்­யப்­பட்டு வேள்­வி ­கள் வேறு வடி­வங்­க­ளில், உதா­ர­ண­மாக நல்­லின பெரும் கடாக்­க­ளுக்­கான பெரும் பரி­சு­க­ளைத் தரும் போட்­டி­யி­டங்­க­ளாக என்ற வகை­யில் மடை­மாற்­றம் செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

அது நடக்­கா­மல் போன­தன் பாதிப்பை இந்­தச் சமூ­கம் விரை­வில் உண­ரும்.
இனத்­தின் பேரா­லா­னால் என்ன மதத்­தின் பேரா­லா­னால் என்ன சிறு­பான்மை மக்­கள் கூட்­டம் நசுக்­கப்­ப­டு­வ­தும் அதன் மீது ஏனை­ய­வர்­க­ளின் நம்­பிக்­கை­க­ளும் கொள்­கை­க­ளும் திணிக்­கப்­ப­டு­வ­தும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­ மு­டி­யா­ததே.

http://newuthayan.com/story/40620.html

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல ஐயா மது பான விற்பனை நிலையங்கள் பல குடும்ப ஆலயங்களை சிதைக்கிறது ப்ல குடும்பங்களை நடுத்தெருவில்  வர வழி சமைக்கிறது அதையும் ஏதாவது செய்யப்பார்த்தால் புண்ணியமா போகு ம்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதே போல ஐயா மது பான விற்பனை நிலையங்கள் பல குடும்ப ஆலயங்களை சிதைக்கிறது ப்ல குடும்பங்களை நடுத்தெருவில்  வர வழி சமைக்கிறது அதையும் ஏதாவது செய்யப்பார்த்தால் புண்ணியமா போகு ம்:unsure:

நீங்க  மடியில  கைவைக்கப்படாது

ஐயாவுக்கு உயர்நீதிமன்றநீதிபதியாகும் விருப்பத்தில  மண்  அள்ளிப்போடப்படாது...

தமிழரின்கலாச்சார  பாரம்பரியங்கள் மீது  மட்டுமே கை  வைக்க  அனுமதி..

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎.‎10‎.‎2017 at 6:31 AM, நவீனன் said:

கோவிலில் ஆடுவெட்ட இறைச்சிக்கடைச் சட்டம்; கேவலம் என்றார் நீதிபதி!

2014 ஆம் ஆண்டு வேள்விக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட போதும் குறிப்பிட்ட நீதவானுக்கு அவ்வாறு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என தெரிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், இது தொடர்பில் மேல்நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பவற்றுக்கே அதிகாரம் உள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.

அப்போ மல்லாகம் நீதவான் தவறிழைத்துள்ளார்.......!!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு செய்தியில் கூறப்பட்டவை மட்டுமல்ல வேள்வியின் நோக்கம்.

இதில் அன்னதானம், பாணக்கம் போன்ற இலவசமாக, இறைவனின் பெயரில் சமூகத்தில் மிகவும் நலிவுற்று இருக்கும் பகுதியினரரருக்கு  உணவு வழங்கும் நோக்கம் போன்ற நோக்கமும் இருக்கிறது.

வேள்வி, அன்னதானம், பாணக்கம் போன்ற நிகழ்வுகள் மிகவும் மண் வாசனை மற்றும் கிராமிய மயப்படுத்தப்பட்டவை.

அதனால், வேள்வி நடுத்துவோரிற்கு அந்தந்த ஊரில் உள்ள மிகவும் நலிந்தவர்களை தெரியும்.

நான் அறிந்த வரையில்,  அப்படிப்பட்ட நலிந்த பகுதியினருக்கு வேள்வியில் இறைச்சி இலவசமாக வழங்கப்படும் என்பதை எனது பாட்டி வழியாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

வேள்விக்கு வந்த எவரும் வெறும் கையுடனோ, அல்லது அந்த இறைச்சியை சமைக்குமிடத்து அதில் உண்ணவோ அருந்ததாலோ வீயெடு திருமபாக் கூடாது என்பது ஓர் ஐதீகம் என்று எண்டது பாடி சொல்லி அறிந்துளேன்.

இதன நோக்கம் என்னவென்றால், சமூகத்தில் மிகவும் நலிந்த பகுதியினர் வருடத்தில் அவ்வப்போது மாமிச உணவுகளை யாசகம் செய்யாமல் பெறுவதற்கே.

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில், இறைவனின் பெயரில் வேள்வி நடத்தப்டுவதற்கான காரணம் எல்லோரும், அதாவது சைவ மற்றும் அசைவ உணவு முறையுளோர் கேள்வியின்றிய பங்களிப்பை அவர்கள் செய்வதத்திற்கு ஏதுவாக இருக்கும் என்பதாலேயே.   

மேலும் வேள்வி, அன்னதானம், பாணக்கம் போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் மிகவும் நலிவுற்டோரில் அக்கறை எடுப்பதற்கான ஓர் சமூக கவனிப்பு பொறி முறையாகும்.

ஏறத்தாழ, இங்கு மேலை நாடுகளில் இருக்கும் WELFARE STATE  எனப்தின் நிறுவனமயப் படுத்தப்படாத, சமூக ரீதியில் கட்டமைக்கப்பட்ட, சமூகத்தில் மிகவும் நலிந்தோரை வசதி படைத்த சமூகத்தின் பகுதி கவனிப்பதற்காக எமது மூதாதயரின் பஞ்சம் பசை பட்டினி என்பதன் அனுபவ வாயிலாக அந்தந்த ஊர்களின் மிகவும் நலிந்த பகுதியினர் தாம் உணவுக்கு கூட கையேந்தும்  நிலையில் இருக்கிறோமே என்ற உணர்வுகளை ஏற்றப்படுத்தாமல் அவர்களுக்கு உணவினை அவ்வப்போது வழங்கும் சமூக பொறிமுறையை இந்த  வேள்வி, அன்னதானம், பாணக்கம் போன்ற நிகழ்வுகள்.

வேள்வி, அன்னதானம், பாணக்கம் போன்ற நிகழ்வுகளில் உணவினை ஓர் சாமோகமா ஒன்று சேர்த்து, கோயிலே (அல்லது இறைவனே) அந்த  உணவினை வந்திராபூர் எல்லோருக்கும் கொடுக்கிறது என்ற உணர்வே சமூக ஏற்றத்தாழ்வு  இன்றி முனைந்திருக்கும்.

இவற்றை சீர்திருத்த வேண்டமேயொழிய, ஒரு போதும் தடை செய்யக் கூடாது.        

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24.10.2017 at 10:31 AM, நவீனன் said:

ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு

ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு
 
மதங்களின் பெயரால் நடக்கும் அநாகரீக மிருகவதை அல்லது கொலைகளை தடைசெய்ய முனைபவர்கள்.....
நவநாகரீக நாடுகளில் நடக்கும் இப்படிப்பட்ட கொலைகளை அறிவார்களா?

அதிலும் சேவல் வர்க்கத்தை தேடிப்பிடித்து அழிக்கின்றார்கள்.tw_angry:

7 hours ago, Kadancha said:

கோயிலில், இறைவனின் பெயரில் வேள்வி நடத்தப்டுவதற்கான காரணம் எல்லோரும், அதாவது சைவ மற்றும் அசைவ உணவு முறையுளோர் கேள்வியின்றிய பங்களிப்பை அவர்கள் செய்வதத்திற்கு ஏதுவாக இருக்கும் என்பதாலேயே.   

மேலும் வேள்வி, அன்னதானம், பாணக்கம் போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் மிகவும் நலிவுற்டோரில் அக்கறை எடுப்பதற்கான ஓர் சமூக கவனிப்பு பொறி முறையாகும்.

ஏறத்தாழ, இங்கு மேலை நாடுகளில் இருக்கும் WELFARE STATE  எனப்தின் நிறுவனமயப் படுத்தப்படாத, சமூக ரீதியில் கட்டமைக்கப்பட்ட, சமூகத்தில் மிகவும் நலிந்தோரை வசதி படைத்த சமூகத்தின் பகுதி கவனிப்பதற்காக எமது மூதாதயரின் பஞ்சம் பசை பட்டினி என்பதன் அனுபவ வாயிலாக அந்தந்த ஊர்களின் மிகவும் நலிந்த பகுதியினர் தாம் உணவுக்கு கூட கையேந்தும்  நிலையில் இருக்கிறோமே என்ற உணர்வுகளை ஏற்றப்படுத்தாமல் அவர்களுக்கு உணவினை அவ்வப்போது வழங்கும் சமூக பொறிமுறையை இந்த  வேள்வி, அன்னதானம், பாணக்கம் போன்ற நிகழ்வுகள்.

வேள்வி, அன்னதானம், பாணக்கம் போன்ற நிகழ்வுகளில் உணவினை ஓர் சாமோகமா ஒன்று சேர்த்து, கோயிலே (அல்லது இறைவனே) அந்த  உணவினை வந்திராபூர் எல்லோருக்கும் கொடுக்கிறது என்ற உணர்வே சமூக ஏற்றத்தாழ்வு  இன்றி முனைந்திருக்கும்.

இவற்றை சீர்திருத்த வேண்டமேயொழிய, ஒரு போதும் தடை செய்யக் கூடாது.        

நல்ல கருத்து 

மிருக பலி என்ற இந்த பண்பாட்டு முறை பல நல்ல காரணங்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆனால் அதை தடைசெய்பவர்கள் பண்பாட்டு முறைகளை தமது அந்தஸ்த்து அடயாளங்களுக்காக மாற்றியமைப்பவர்கள் அல்து திருடுபவர்கள் தவிர சமூக சீர்திருத்தவாதிகளோ அல்லது சமூக நீதிக்காக போராடுபவர்களோ இல்லை. மிகக் குறுகிய மனப்பான்மைகொண்டவர்கள். ஆனால் எல்லாம் மாறும் என்றவகையில் இவைகள் தவிரக்க முடியாத நிகழ்வுகள். தொடரவே செய்யும். கோயிலும் கடவுளும் இயல்பானது. மனிதனுக்கும் அவனது வழ்க்கை முறைக்கும் அப்பாற்பட்டதில்லை. அதில் ஒரு அங்கமே. ஆனால் தடைகோரும் இந்த பூசுவாக்கள் கடவுள் கோயில் எல்லாத்தையும் வாழ்க்கை முறை மற்றும் இயல்பில் இருந்து பிரித்து புனிதமாக்கி பட்டு பீதாம்பரங்கள் தங்கம் வைர வைடூரியங்களால் அலங்கரித்து அவர்கள் இருப்பிடத்தை தங்க கூரைகளால் வேய்ந்து கடவுள்களை மிக மேலான பணக்காரர்களாக்கி ஆடம்பரக்காரர்களாக்கி பூசுவாக்களாக உருவாக்கிவிடுகின்றார்கள். ஒரு காலத்தில் சமூக நீதிக்கும் நலனுக்கும் கடவுள் காரணப்பொருளாக இருந்தது. இப்போது சுரண்டலுக்கும் அடயாளம் அந்தஸத்துக்கு காரணப்பொருளாக்குகின்றார்கள். 

On 24/10/2017 at 4:31 AM, நவீனன் said:

யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா்.

இந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடைகோரி சைவமகா சபை மனு தாக்கல்.

காலக்கொடுமை !!! 

ஆன்மாக்கள் லயிக்கும் இடமாகிய ஆலயத்தில் உயிர்வதையை எந்தவொரு நொண்டிச் சாட்டையும் சொல்லி செய்வது மிருகத்தனமாகவே காணப்படும்.

ஏழைகளுக்கு மாமிசம் கொடுக்க வேறு இடங்களை தெரிவு செய்வது நல்லது. ஆலயங்கள் அதற்கான இடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வேள்விகளை மட்டும் அல்ல தேவதாசி கலாச்சரத்தையும் காப்பாற்ற வேண்டும். ஏழை பெண்களுக்கு வாழ வகை செய்யும் இந்த பண்டைய கலாச்சார முறைகள் அழிந்து போக விடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிகாலத்தில் எதற்காக கொண்டுவந்தார்கள் என்ற 
காரணம் ...
நிகழ்காலத்தில் நடக்கும் கொடுமையை மறைத்து விடாது. 

ஆதிகால வாழ்க்கை முறைமையும் 
நிகழ்கால வாழ்க்கை முறைமையும் முற்றாக மாறியபின் 
ஆதிகால வழக்கங்களை நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்காது 
போனால் அவை முற்றாக அழியும் ஆபாயமே உண்டு. 

எனது சொந்த அனுபவமே மிக நெருடலானது ...
முதன் முதலில் இப்படி ஆடு வெட்டுவதை பார்க்கும்போது 
எனக்கு வயது 11 .... பலிகொடுப்பது ... பலிகொடுப்பது என்று சொன்னார்கள் 
இப்படி வெட்டுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அப்போது எமது வீட்டிலும் ஆடு இருந்தது கிட்டதட்ட எமது வீட்டில் நின்ற ஒரு 
கிடாய் போலவே அதுவும் இருந்தது ....
தலை வீழ்ந்த பின்பும் அந்த ஆடு கொஞ்ச தூரம் ஓடியது .....
உண்மையிலேயே எனது மனதை அது மிகவும் பாதித்தது.
அதன் பின்பு இருட்டு வர முன்னரே எமது ஆடுகளை சாய்த்து கொண்டு வந்துவிடுவேன் 
எங்கள் ஆட்டையும் இப்படி வெட்டுவார்களோ?
என்ற ஒரு பயமும் ஏக்கமும் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
பெண்கள் ..சிறு குழந்தைகள் என்று எல்லோர் முன்பும் இப்படி செய்வது 
வளர்ந்த சமூகத்த்தில் மிகவும் கேவலமான வேலை என்பது 
எனது தனிப்பட்ட கருத்து.

முன்னைய நாளில் எல்லோரும் வேடுவராக இருந்து இருக்கலாம் 
சிறுவர்களுக்கும் கொலை போன்றவற்றை சிறு வயதிலேயே பழக்க கூட 
அப்படி செய்திருக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2017 at 3:21 AM, தனிக்காட்டு ராஜா said:

இதே போல ஐயா மது பான விற்பனை நிலையங்கள் பல குடும்ப ஆலயங்களை சிதைக்கிறது ப்ல குடும்பங்களை நடுத்தெருவில்  வர வழி சமைக்கிறது அதையும் ஏதாவது செய்யப்பார்த்தால் புண்ணியமா போகு ம்:unsure:

மிருகபலியிடுவதன் மூலம் அரசங்கத்திற்கு நல்ல வருமானம் வந்திருந்தால் நீதிபதி இந்த சட்டத்தை அமுல்படுத்தியிருக்க முடியாது... தனி நீங்கள் ரொம்ப சின்னபையனாக இருக்கிறீர்கள்

வடமாகாணத்தில் இளைஞர்களை பலியிடுவதையும் தடை செய்ய வேண்டும்tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

மிருகபலியிடுவதன் மூலம் அரசங்கத்திற்கு நல்ல வருமானம் வந்திருந்தால் நீதிபதி இந்த சட்டத்தை அமுல்படுத்தியிருக்க முடியாது... தனி நீங்கள் ரொம்ப சின்னபையனாக இருக்கிறீர்கள்

வடமாகாணத்தில் இளைஞர்களை பலியிடுவதையும் தடை செய்ய வேண்டும்tw_cry:

ம்ம் உன்மைதான் புத்து தேவையானவைகளூக்கு   தடை கொண்டுவர இன்னும் நிறைய விடயங்கள்  இருக்கிறது  அனால் அவைகளுக்கு தடை போடவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் உன்மைதான் புத்து தேவையானவைகளூக்கு   தடை கொண்டுவர இன்னும் நிறைய விடயங்கள்  இருக்கிறது  அனால் அவைகளுக்கு தடை போடவில்லை 

காரணம் நீதிபதிகளும் அரசாங்கத்திடம் ஊதியம் பெறுபவர்கள்.....

வேள்வியில் ஆலயங்களில் மிருகங்களை பலியிடுதல் புலிகளின் காலத்தில் புலிகளால் யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்டு இருந்தது. புலிகள் யாழில் பலமாக இருந்த 95 வரைக்கும் கவுணாவத்தையில் இருந்து எந்த கோவிலிலும் வேள்வி என்ற பெயரில் மிருக பலி இடம்பெற்று இருக்கவில்லை. நேர்த்திக்கு விடப்பட்ட மிருகங்களை கோவிலுக்கு கொண்டு வந்து மஞ்சள் தண்ணீர் தெளிக்க வைத்து பின் வீட்டில் கொண்டு போய் வெட்டுவர்.

புலிகளின் சட்டத்தினை அமுல்படுத்திய நீதிபதிக்கு வாழ்த்துக்கள்

10 hours ago, Maruthankerny said:

ஆதிகாலத்தில் எதற்காக கொண்டுவந்தார்கள் என்ற 
காரணம் ...
நிகழ்காலத்தில் நடக்கும் கொடுமையை மறைத்து விடாது. 

ஆதிகால வாழ்க்கை முறைமையும் 
நிகழ்கால வாழ்க்கை முறைமையும் முற்றாக மாறியபின் 
ஆதிகால வழக்கங்களை நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்காது 
போனால் அவை முற்றாக அழியும் ஆபாயமே உண்டு. 

எனது சொந்த அனுபவமே மிக நெருடலானது ...
முதன் முதலில் இப்படி ஆடு வெட்டுவதை பார்க்கும்போது 
எனக்கு வயது 11 .... பலிகொடுப்பது ... பலிகொடுப்பது என்று சொன்னார்கள் 
இப்படி வெட்டுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அப்போது எமது வீட்டிலும் ஆடு இருந்தது கிட்டதட்ட எமது வீட்டில் நின்ற ஒரு 
கிடாய் போலவே அதுவும் இருந்தது ....
தலை வீழ்ந்த பின்பும் அந்த ஆடு கொஞ்ச தூரம் ஓடியது .....
உண்மையிலேயே எனது மனதை அது மிகவும் பாதித்தது.
அதன் பின்பு இருட்டு வர முன்னரே எமது ஆடுகளை சாய்த்து கொண்டு வந்துவிடுவேன் 
எங்கள் ஆட்டையும் இப்படி வெட்டுவார்களோ?
என்ற ஒரு பயமும் ஏக்கமும் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
பெண்கள் ..சிறு குழந்தைகள் என்று எல்லோர் முன்பும் இப்படி செய்வது 
வளர்ந்த சமூகத்த்தில் மிகவும் கேவலமான வேலை என்பது 
எனது தனிப்பட்ட கருத்து.

முன்னைய நாளில் எல்லோரும் வேடுவராக இருந்து இருக்கலாம் 
சிறுவர்களுக்கும் கொலை போன்றவற்றை சிறு வயதிலேயே பழக்க கூட 
அப்படி செய்திருக்கலாம்.
 
உளவியல் அடிப்படையில் உங்கள் கருத்து கவனிக்கத்தக்கது. மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் நிகழத்தான் செய்யும் அந்த வகையில் இவ்வாறன தடைகள் உங்கள் கருத்து சார்ந்து ஏற்புடையது. ஆனால் தடை கோருபவர்கள் இவ்வாறான உளவியல் கோணத்தில் இருந்து ஆராய்ந்து செய்பவர்கள் இல்லை. மோடியின் மாட்டுக்கறி தடைபோல் மதவாத புனிதத்தை கட்டமைக்க முனைபவர்கள் தவிர இதர நலன் சார்ந்தவர்கள் இல்லை.

அக்காலத்தில் சிறு தெய்வ வழிபாடுகள் பலிகள்என்பன அச்சத்தை கட்டமைக்கும் செயலை பிரதானமாகக் கொண்டதுதான். பலிகளும் ஒரு உளவியல் உத்திதான். சாமி கண்ணைக் குத்தும் தண்டிக்கும் என்பதன் ஊடாகத்தான் குற்ங்களுககான தடுப்பு மனவளத்தில் ஏற்படுத்தப்படுகின்றது.( இது அதிகளவு விரிந்த பார்வை கொண்டது). தற்போது குற்றங்களை தடுக்க நீதிமன்றம் காவல்துறை ராணுவம் எல்லாம் வந்துவிட்டது. வழிபாடுகள் மதம் என்ற வேறு நிலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது. எல்லாம் மாற்றத்திற்கு உட்படுகின்றது. ஆனால் எவ்வளவுதான் வளர்ந்தாலும் நாகரீகமடைந்தாலும் சட்டதிட்டங்கள் மனித உரிமை காவல் துறைகள் இருந்தாலும் குற்றங்கள் பெருகிவருகின்றது தவிர குறைவதில்லை. ஒருவனைக் கொல்வதற்கான மன நிலை முன்பை விட தற்போது அதிகம். 

வழிபாடுகள் மதமாகி மதம் இன்று எத்தனை பலிகளை எடுக்கின்றது. இந்துத்துவா எத்தனையோ இஸ்லாமியர்களை கொன்று குவித்தது. இஸ்லாம் எண்ணிக்கை இல்லாமல் கொன்று குவிக்கின்றது. பொளத்தம் இலங்கையில் எம்மவரை எப்படி பலி எடுத்தது என்று சொல்லத் தேவையில்லை. 

மனிதன் அடிப்படையில் ஒரு வேட்டை விலங்கு. அதன் தன்மைகளை மாற்றவே கடவுள் என்ற ஒன்றை உருவாக்குகின்றான். திரும்ப கடவுளை வைத்தே மதம் என்று நிறுவனமயப்படுத்தி ஒருவனை ஒருவன் வேட்டையாடுகின்றான். இது ஒரு உளவியல் கேம் போன்றது. முட்டாள்கள் தேற்பார்கள் , சாவார்கள்

உங்கள் கவனிக்கத்தக்க அனுபவக் கருத்துக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

இதவும் சாமத்திய வீடு செய்வத மாதிரித்தான்.காலத்திற்க்கு ஏற்ற மாதிரி மாற வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, சுவைப்பிரியன் said:

இதவும் சாமத்திய வீடு செய்வத மாதிரித்தான்.காலத்திற்க்கு ஏற்ற மாதிரி மாற வேணும்.

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் ....?
ஆட்டையும் கெலியில் ஏத்தி பறக்கவேண்டும் என்று சொல்லுறீங்களோ ?? 

2 hours ago, சண்டமாருதன் said:

உளவியல் அடிப்படையில் உங்கள் கருத்து கவனிக்கத்தக்கது. மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் நிகழத்தான் செய்யும் அந்த வகையில் இவ்வாறன தடைகள் உங்கள் கருத்து சார்ந்து ஏற்புடையது. ஆனால் தடை கோருபவர்கள் இவ்வாறான உளவியல் கோணத்தில் இருந்து ஆராய்ந்து செய்பவர்கள் இல்லை. மோடியின் மாட்டுக்கறி தடைபோல் மதவாத புனிதத்தை கட்டமைக்க முனைபவர்கள் தவிர இதர நலன் சார்ந்தவர்கள் இல்லை.

அக்காலத்தில் சிறு தெய்வ வழிபாடுகள் பலிகள்என்பன அச்சத்தை கட்டமைக்கும் செயலை பிரதானமாகக் கொண்டதுதான். பலிகளும் ஒரு உளவியல் உத்திதான். சாமி கண்ணைக் குத்தும் தண்டிக்கும் என்பதன் ஊடாகத்தான் குற்ங்களுககான தடுப்பு மனவளத்தில் ஏற்படுத்தப்படுகின்றது.( இது அதிகளவு விரிந்த பார்வை கொண்டது). தற்போது குற்றங்களை தடுக்க நீதிமன்றம் காவல்துறை ராணுவம் எல்லாம் வந்துவிட்டது. வழிபாடுகள் மதம் என்ற வேறு நிலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது. எல்லாம் மாற்றத்திற்கு உட்படுகின்றது. ஆனால் எவ்வளவுதான் வளர்ந்தாலும் நாகரீகமடைந்தாலும் சட்டதிட்டங்கள் மனித உரிமை காவல் துறைகள் இருந்தாலும் குற்றங்கள் பெருகிவருகின்றது தவிர குறைவதில்லை. ஒருவனைக் கொல்வதற்கான மன நிலை முன்பை விட தற்போது அதிகம். 

வழிபாடுகள் மதமாகி மதம் இன்று எத்தனை பலிகளை எடுக்கின்றது. இந்துத்துவா எத்தனையோ இஸ்லாமியர்களை கொன்று குவித்தது. இஸ்லாம் எண்ணிக்கை இல்லாமல் கொன்று குவிக்கின்றது. பொளத்தம் இலங்கையில் எம்மவரை எப்படி பலி எடுத்தது என்று சொல்லத் தேவையில்லை. 

மனிதன் அடிப்படையில் ஒரு வேட்டை விலங்கு. அதன் தன்மைகளை மாற்றவே கடவுள் என்ற ஒன்றை உருவாக்குகின்றான். திரும்ப கடவுளை வைத்தே மதம் என்று நிறுவனமயப்படுத்தி ஒருவனை ஒருவன் வேட்டையாடுகின்றான். இது ஒரு உளவியல் கேம் போன்றது. முட்டாள்கள் தேற்பார்கள் , சாவார்கள்

உங்கள் கவனிக்கத்தக்க அனுபவக் கருத்துக்கு நன்றி 

இடி முழக்கத்துக்கு விளக்கம் அறியாத மனிதன்தான் 
மேலே தன்னை மீறிய ஒரு சக்தி இருந்து 
தன்னை அச்சம் ஊட்டுகிறது என்று எண்ணினான் ......
கடவுள் என்றதும்  மேலே என்ற எண்ணமே அதில் இருந்துதான் வந்தது. 

ஆதி மனிதனுக்கு 
தனது குழுமம் பாதுகாக்க படவேண்டும் 
தனது குழுமம் பலம் பொருந்தி இருக்க வேண்டும் 
என்று பல தேவை இருந்தது 

இயற்கை இடையூறுகள் ஊடே 
விலங்குகளின் அச்சுறுத்தல் அருகே 
அச்சம் இன்றி வாழ பெண்கள் குழந்தைகளுக்கும் 
பழக்க வேண்டிய பொறுப்பும் இருந்து இருக்கும்.

இப்போது அடுத்த சமூகத்துடன் தொடர்பு பேணுவது 
என்பது இன்றி அமையாத ஒன்று 
அந்த இடத்தில் எம்மையும் மாற்றியே ஆகவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

வேள்வியில் ஆலயங்களில் மிருகங்களை பலியிடுதல் புலிகளின் காலத்தில் புலிகளால் யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்டு இருந்தது.

12 hours ago, putthan said:

வடமாகாணத்தில் இளைஞர்களை பலியிடுவதையும் தடை செய்ய வேண்டும்tw_cry:

புலிகளின் காலத்தில் புலிகளால் வடமாகாணத்தில் இளைஞர்களை பலியிடுவது தடை செய்யப்பட்டு இருந்ததா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Jude said:

புலிகளின் காலத்தில் புலிகளால் வடமாகாணத்தில் இளைஞர்களை பலியிடுவது தடை செய்யப்பட்டு இருந்ததா?

ஆட்டுக்கை மாட்டை கொண்டுவந்து ஓட்டுற நல்லவர்கள் வல்லவர்கள் வந்துட்டினம்.....பதில் சொல்லிப்பாருமன்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.