Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது

Featured Replies

நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது

colmf-01114209537_5680559_30102017_MFM_C

சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார்.

http://www.thinakaran.lk/2017/10/31/உள்நாடு/20861/நீதிபதி-எம்இளஞ்செழியனுக்கு-சர்வதேச-இளம்-பெளத்த-துறவிகள்-உயர்-விருது

தமிழ் நீதி­ப­தி­கள் இரு­வ­ருக்கு பௌத்த அமைப்பு மதிப்­ப­ளிப்பு

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன், சாவ­கச்­சேரி மாவட்ட நீதி­பதி திரு­மதி ஸ்ரீநிதி நந்­த­சே­க­ரன் ஆகி­யோரை உலக பௌத்த இளை­யோர் சங்­கச் சபை மதிப்­பு­றுத்­தி­யது.

நியா­யத்தை நிலை­நாட்­டு­ வ­தற்­காக ஆற்­றிய சேவை­யைப் பாராட்டி உலக பௌத்த இளை­யோர் சங்­கச் சபை­யி­னால் இவர்­கள் மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.

கண்டி பல்­லே­க­ல­யில் உள்ள மத்­திய மாகாண சபைக் கேட்­போர் கூடத்­தில் நடை­பெற்ற இளை­யோர் சங்க சபா­வின் 14ஆவது வரு­டாந்த மாநாட்­டில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றது. நீதி­ப­தி­க­ளுக்கு விரு­தும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அஸ்­கி­ரிய பீடத்­தின் மஹா­நா­யக்­கர் வரக்­கா­கொட ஸ்ரீ ஞான­ரத்ன தேரர் இதனை வழங்கி வைத்­தார். 56 நாடு­க­ளின் மஹா­நா­யக்­கர்­கள், பிக்­கு­கள், பௌத்த தூது­வர்­கள் உள்­ளிட்ட பல­ரின் பங்­கேற்­பு­டன் இந்த மாநாடு நடை­பெற்­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/42176.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நீதிபதிக்கான மதிப்பளிப்பைக்கூட எழுந்துநின்று உரிய மதிப்புடன் வழங்கமுடியாத பெளத்தமதத்துறவிகளின் திமிர்த்தனத்தை  என்னவென்று சொல்வது. இதனை மதிப்பளிப்பென்றே கொள்ளமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாளை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டங்கள் போல கிடக்குதே... tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

'உயர் விருது' ரொம்பவும் சின்ன சைஸா இருக்கும் போல கிடக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

 இது அளவுக்கதிகமான ஐஸ். உருகமுதல் இதை வைத்தே ஒரு பெரிய வேலைக்கு பிளான் பண்ணுவாங்கள். பொறுத்திருந்து பாப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, satan said:

 இது அளவுக்கதிகமான ஐஸ். உருகமுதல் இதை வைத்தே ஒரு பெரிய வேலைக்கு பிளான் பண்ணுவாங்கள். பொறுத்திருந்து பாப்போம்.

சர்வதேசமே! இங்கே பாருங்கள்...

நாங்கள் தமிழர்களை விரோதிகளாக பார்க்கவில்லை.

உரிய மதிப்பும் அந்தஸ்தும் கொடுக்கின்றோம்.

தமிழரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளோம்.

ஏன் சின்னையாவைக்கூட பெரிய பதவியில் வைத்து அழகு பார்த்துள்ளோம்.

சின்னையா ஒரு தமிழ் பெயர் என்பதை கவனத்திலெடுக்கவும்.....:cool:

பயங்கரவாதிகளை/பிரிவினைவாதிகளை அழித்ததிற்கு இன அழிப்பு என்று  எம் மீது குற்றம் குறை கூறினால் நியாயமா தகுமா?

12 minutes ago, குமாரசாமி said:

விருதுகள் பதவிகளின் பின்னால் உள்ள உண்மை இதுதான். 

இளஞ்செழியன் எத்தனை பேருக்கு ஆயுள் தண்டனை மரண தண்டனை எழுதினாலும் அவர் சிங்கள பேரினவாத அரச எந்திரத்தில் ஒரு ஊழியர். அவர் தன் கடமையை செய்கின்றர். அல்லது மிகச் சரியாகச் செய்கின்றர். சிங்கள அரச எந்திரத்தின் இந்த ஊழியரால் தமிழ்த்தேசீயத்திற்கு அல்லது இன விடுதலைக்கு எந்த முன்னேற்றமும் கிடையாது. துரதிஸ்டவசமாக பின்னடைவே உண்டு. தமிழர்கள் சம உரிமையோடு இலங்கையில் உள்ளனர் உயர் பதவிகளிலும் அரச எந்திரங்களை இயக்குபர்களாகவும் உள்ளனர் என்று உலகிற்கு காட்டுவதற்கு இவர்கள் பயன்படுகின்றனர். அரச எந்திரங்களில் நசுக்கப்படும் தமிழர்களை மறைத்து அரச எந்தித்தின்  மேல் குந்தியிருக்கும் நீதியரசரே கண்களுக்கு புலப்படும். இது நீதிபதிக்கு எதிரான கருத்தல்ல ஆனால் யதார்த்தம் இதுதான். 

தமிழர்களால் நம்பிக்கை வைக்கவே முடியாத சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் (அ)நீதித்துறையில் பல கூத்துக்களை தமிழர் 60+ வருடங்களாக கண்டு உணர்ந்துள்ளனர்.

பாலியல் படுகொலை வழக்கில் விஜயகலா மகேஸ்வரனை வசை பாடியதற்கும் (விஜயகலா ஒன்றும் சிறந்தவர் அல்ல) சிங்கள-பௌத்த  போலீஸ் பயங்கரவாதி லலித் ஜெயசிங்கவை ஐ விடுதலை செய்ததுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் மூலஸ்தானத்தினால் நீதி­பதி இளஞ்­செ­ழி­யனுக்கு வழங்கப்படும் பரிசாக இது கருதப்படலாம்.  

நீதி­பதி திரு­மதி ஸ்ரீநிதி நந்­த­சே­க­ரன் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பௌத்த விகாரையை தடுக்க காணி அதிகாரங்களைக் கொண்ட பிரதேச சபைக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை வழங்கிய காரணத்தால் சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் மூலஸ்தானத்தினால் அவர் கௌரவிக்கப்படுகிறார்.

பாலியல் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏனைய இரண்டு நீதிபதிகளும் நீதியை நிலைநாட்ட சேவை­ ஆற்­றவில்லை என்று சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் மூலஸ்தானத்தினால் கருதப்படுவதால் இந்த பரிசுகளில் உள்ளடங்கியுள்ள அரசியல் எவ்வித சந்தேகத்துக்கு அப்பால் தெளிவாகிறது.

உணர்ச்சி வசப்படுபவர்கள் இதுபோன்ற பரிசுகளால் விலை போகக்கூடியவர்கள் என்பது வரலாறு. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது

colmf-01114209537_5680559_30102017_MFM_C

"சர்வதேச" 
"இளம் பௌத்த துறவிகள்" 

இந்த இரு சொற்களுக்கும் மேலே இருக்கும் படத்துக்கு விருதுக்கும் 
ஏதும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

ஒரு நீதிபதிக்கான மதிப்பளிப்பைக்கூட எழுந்துநின்று உரிய மதிப்புடன் வழங்கமுடியாத பெளத்தமதத்துறவிகளின் திமிர்த்தனத்தை  என்னவென்று சொல்வது. இதனை மதிப்பளிப்பென்றே கொள்ளமுடியாது. 

விருதை கொடுப்பவரும், அதை வாங்குபவரும் சமநிலையிலிருந்து கொடுப்பதுதான் எங்கும் காணும் பெரும்பாலான மரபு.. இலங்கை மட்டும் வித்தியாசமாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

விருதை கொடுப்பவரும், அதை வாங்குபவரும் சமநிலையிலிருந்து கொடுப்பதுதான் எங்கும் காணும் பெரும்பாலான மரபு.. இலங்கை மட்டும் வித்தியாசமாய் இருக்கிறது.

Bildergebnis für narendra modi sri lanka parliament

க்கும்.... நாங்கள், உங்கள் மோடிக்கே.... எழுந்திருக்கவில்லை  என்பதும், 
அதை.... திரும்பி  கூட... பார்க்கவில்லை என்பதும்,  உங்களுக்கு  தெரியாதாக்கும்.  
:grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

"சர்வதேச" 
"இளம் பௌத்த துறவிகள்" 

இந்த இரு சொற்களுக்கும் மேலே இருக்கும் படத்துக்கு விருதுக்கும் 
ஏதும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.

colmf-01114209537_5680559_30102017_MFM_C

மருது...  அவர்கள்,  மொட்டை  அடித்திருப்பதால்... உங்கள் கண்ணுக்கு  வயோதிபர்கள் போல் தெரிகிறார்கள்.
மயிர் வளர்த்து இருந்தால்... அப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள். :grin:

Bildergebnis für ஸ்ராலின் கருணாநிதி

64 வயதில்... தி.மு.க.  இளைஞர் அணித்   தலைவராக,  தளபதியாக... ஸ்ராலின்  இருக்கும் போது...
பிக்குகள்,   பென்ஷன் எடுக்கும் வயதில், இளம் துறவிகளாக இருப்பதில்  என்ன குறையை கண்டீர்கள். :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை தேர்தலில் இவர்தான் வடமாகாண முதலமைச்சர். பௌத்தத்தோடு, துறவிகளோடு, சிங்கள மக்களோடு,அரசாங்கத்தோடு பவ்வியமாக நடந்து பாராட்டப்பெறுபவர். இந்தத் தகைமையே போதும் எங்கட தலைமையும் தாராளமாய் வரவேற்கும். அமெரிக்காவும் இவரால் நெகிழ்ந்துபோய் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

அடுத்த முறை தேர்தலில் இவர்தான் வடமாகாண முதலமைச்சர். பௌத்தத்தோடு, துறவிகளோடு, சிங்கள மக்களோடு,அரசாங்கத்தோடு பவ்வியமாக நடந்து பாராட்டப்பெறுபவர். இந்தத் தகைமையே போதும் எங்கட தலைமையும் தாராளமாய் வரவேற்கும். அமெரிக்காவும் இவரால் நெகிழ்ந்துபோய் இருக்குது.

உங்கள் கணிப்பு உறுதியானால் விரைவில் வடக்கு முழுமையாகப் பறிபோய்விடும்போல் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

"துறவிக்கு வேந்தன் துரும்பு" 

ஒரு மடாதிபதி எம் மதத்தவராயினும் அவர் அவருக்கு மேற்பட்ட குரு  தவிர வேறு யாருக்கும் எழுந்து மரியாதை செய்ய வேண்டியதில்லை. அது பிரதமரோ அன்றி ஜனாதிபதியாயினும் கூட.அது ஒரு குறையும் அல்ல.( அவர் முற்றும் துறந்தவராயினும் பெற்றோருக்கு ஈமக்கடன்கள் செய்யலாம். உதாரணம் ஆதிசங்கரர்,பட்டினத்தார்).

ஆனால் எம் நாட்டில் பல பிக்குகள் ஆசைகளை துறந்தவர்களாகவோ , ஜீவகாருண்யம் உடையவர்களாகவோ இல்லை. அது எமது துரதிஷ்டமே....!  

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளஞ்செழியன் ஐயா புத்த பிக்குகள் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள் சிங்கள மக்கள் மனதில் நீங்கள் இடம்பிடித்துள்ளீர்கள் அதே போல் தமிழ் மக்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளீர்கள்  விக்னேஸ்வரன் ஐயா கூட முன்னாள் நீதியரசர்  வட மாகாண முதலமைச்சர்  நாளை உங்களை கூட எங்கள் சனம் முதல்வர்  வேட்பாளராக நியமிக்கலாம்.

தூற்றுவதும் நாங்களே போற்றுவதும் நாங்களே 

ஒரு சின்ன துறவிக்கும் ஜனாதிபதியே விழுந்து  வணக்குவார் இலங்கையில் பொளத்த துறவிகளை அவர்கள் புத்தன் என்ற கண்னோட்டத்திலே நோக்குறார்கள் ஆனால் அவர்களில் சிலர் உன்மையாக இல்லை இது எல்லா மதத்திலும் தானே  பஸ்ஸில் கூட துறவிகளுக்கு என ஒதுக்கப்பட்ட ஆசனம் இருக்கிறது  இலங்கையில் பெளத்த துறவிகளுக்கு கொடுக்கும் மரியாதை மற்ற இன  துறவிகளூக்கு இல்லை இருந்தாலும் ஆளும்  வர்க்கம் அவர்கள் என்ற படியால்  

6 hours ago, ராசவன்னியன் said:

விருதை கொடுப்பவரும், அதை வாங்குபவரும் சமநிலையிலிருந்து கொடுப்பதுதான் எங்கும் காணும் பெரும்பாலான மரபு.. இலங்கை மட்டும் வித்தியாசமாய் இருக்கிறது.

இலங்கையென்பதே வித்தியாசம் தானே 

இலங்கை  அரசாங்கமே காவிக்குள்ள இருந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது  இது தெரியாமல் இளஞ்செழியன்  ஐயா மாத்திரம் எம்மாத்திரம்  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

colmf-01114209537_5680559_30102017_MFM_C

மருது...  அவர்கள்,  மொட்டை  அடித்திருப்பதால்... உங்கள் கண்ணுக்கு  வயோதிபர்கள் போல் தெரிகிறார்கள்.
மயிர் வளர்த்து இருந்தால்... அப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள். :grin:

Bildergebnis für ஸ்ராலின் கருணாநிதி

64 வயதில்... தி.மு.க.  இளைஞர் அணித்   தலைவராக,  தளபதியாக... ஸ்ராலின்  இருக்கும் போது...
பிக்குகள்,   பென்ஷன் எடுக்கும் வயதில், இளம் துறவிகளாக இருப்பதில்  என்ன குறையை கண்டீர்கள். :D:

அதை கூட ஏற்று கொள்ளலாம் ...
கண்டி கிணத்துக்குள் இருந்து குப்பை கொட்டுவதை 
"சர்வதேச" என்று இழுக்கிறார்களே ?  

On 11/1/2017 at 10:09 PM, Maruthankerny said:

அதை கூட ஏற்று கொள்ளலாம் ...
கண்டி கிணத்துக்குள் இருந்து குப்பை கொட்டுவதை 
"சர்வதேச" என்று இழுக்கிறார்களே ?  

குப்பைகள் கொட்டுவதும், பொய்களை அள்ளி வீசுவதும் அவர்களது பாரம்பரிய தொழில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.