Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது மட்டுமில்லை வலவன் 
முகப்புத்தகமூடாக ஏதாவது பரிமாறினால் அதனை விசாரிக்க மாகாண கட்டமைப்பில் கூட அதிகாரம் இல்லை , சைபர் கிரைம் தொடர்பாக 
BMICH இல் தற்காலிகமாக இயங்கும் அலுவலகத்திலேயே விசாரணை நடைபெறுகிறது .அதன்படி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தகவல்கள்களை  TID (Terrorism Investigation Department) இனரிடம் கையளிப்பர் 
அத்தோடு விவகாரம் காலி . கொழும்பிற்கு அலைந்தே காலம் போயிரும் . அத்தோடு வழக்கு தொடரப்பட்டால் அதனை தொழிலிற்கு விண்ணப்பிக்கும் போது  மறக்காமல் குறிப்பிடவேண்டும். 
TID வழக்கு என்றால் முடிந்தது  விண்ணப்பம் நேரடியாக குப்பைக்குத்தான் ...இதுவெல்லாம் புலம்பெயர்ந்தோருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு 

இலத்திரனியல் தடயங்களை ஏற்றப்படுத்தும் முறைகள் தவிர்ப்பது  மட்டுமன்றி, நிலைமைகளிற்கு ஏற்ப நடப்பதே நல்லது.

  • Replies 60
  • Views 3.4k
  • Created
  • Last Reply
On 1/10/2018 at 2:46 AM, கிருபன் said:

ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நாட்டில் அதன் கொடி, இலச்சினை, அமைப்பின் பிரசுரங்கள், படங்கள் எதையும் வைத்திருந்தால் சிக்கல்கள் வரத்தானே செய்யும்.

தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு தான் வீரர்களால் மாவீரர்தினம் தாயகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது! இது நடப்பது தமிழன படுகொலைகளை செய்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாய் மண்ணில்!

2009 இன் பின்னரும் வட-கிழக்கு ஈழமண்ணில் மட்டுமல்ல கொழும்பில் கூட தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் மாவீரர் வாரம் முழுவதும் வீடுகளின் வாசல்களில் தீபமேற்றி உணர்வு பூர்வமாக அனுட்டிக்கும் பல வீரத் தமிழர் குடும்பங்கள் தாய் நாட்டில் உண்டு!   

தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் போராளிகள் பலர் இன்றும் ஈழமண்ணில் வாழ்கின்றனர்! இவர்களில் பலரது வீடுகளின் வரவேற்பறைகளை இன்னுயிர் ஈந்த வீரமறவர்களின் படங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் அலங்கரிக்கின்றன!

எனது வீட்டிலும், எனது உறவினர், நண்பர்கள் பலர் வீடுகளிலும் மாவீரர் வார தீபமேற்றல் வருடா வருடம்  தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் சில மாவீரர்கள் மட்டுமல்ல தலைவர் பிரபாகரன் படமும் வீடுகளில் பேணப்பட்டு வருகிறது.

இவ்வாறு வீர உணர்வுள்ள பலரும் தாய் மண்ணில் இன்றும் பயமின்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் எமது தாய் நாட்டில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்று இவர்கள் யாரும் நினைக்கவில்லை.

ஆனால், எம் மத்தியில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதனால் தானே போராட்டம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இல்லையென்றால் என்றோ வென்றிருப்போம்!!!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சில பயமற்ற சில தலைவர்கள், வீரர்கள்  தாய் மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்வதால் தான் தாய் நாட்டிலுள்ள கோழைகளும் ஆக்கிரமிப்புக்களின் மத்தியில் ஓரளவு பாதுகாப்பாக வாழ முடிகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!  

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

On 1/9/2018 at 3:40 PM, அக்னியஷ்த்ரா said:

வெளிநாட்டிலிருக்கும் கோழைகளுக்கும்  வழிமட்டும்தான் காட்டத்தெரியும் என்பதும் இந்த்ததம்பிக்கு தெரியும்  

ஆனால் வெளிநாட்டிலுள்ள, உள்நாட்டிலுள்ள  வீரர்கள் செய்துவரும் சாதனைகள் உலகிலுள்ள சகல கோழைகளுக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, போல் said:

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

ஊருக்க வந்து இப்படி ஒரு பிரச்சாரம் செய்ய இயலுமா  போல் சும்மா வார்த்தைகளை அள்ளிவிடாமல் அமைதியா இருங்க அமைதியாக இருப்பவன்  எல்லாம் கோழைகள் அல்ல அதை புரிந்து கொள்ளுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா”

யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. :rolleyes: ..சரி இதுக்கு இப்ப யாரிண்ட  தலை உருளும் 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா”

யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. :rolleyes: ..சரி இதுக்கு இப்ப யாரிண்ட  தலை உருளும் 

குருக்களின் குசு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்   சந்தர்ப்பவாதந்தான். த. தே. கூட்ட்டமைப்புக்கும் இவர்கள்மேல் காதல் வந்திடுச்சு, சிங்களவனுக்கு இவர்கள்மேல் மரியாதை வந்துடுச்சு.  தேர்தல் படுத்துற பாடு.  எல்லோரின் வாய் வாக்கும் மாறிடுச்சு. தென்பகுதியில் இதற்கு எதிரான பாடல் ஒலிக்கும். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், தமிழனை எல்லாரும் எல்லாக்காலமும் ஏமாத்தலாம் என்ற வரலாறு மாற்றப்படும்வரை இப்படிப் பல பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டுக்கொண்டே ஏமாறலாம்.  காக்கா, நரி, வடை, தந்திரம் கதைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2018 at 2:02 PM, வைரவன் said:

ஊருக்கு அடுத்த முறை
போகும் போது
தலைவரின் படத்தை போட்ட
ஷேர்ட்டை  போட்டுக்
கொண்டு தானே தம்பி
போய்
விமான நிலையத்தில்
இறங்குவீர்கள் ?

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

நுணா அண்ணை 
2015 ஜனாதிபதி தேர்தல் வடக்கிற்கு வந்த மகிந்த ஒரு கதை கூறினார், கண்ணுக்கு தெரியாத தேவதையை விட்டு கண்ணுக்கு தெரிந்த பேயை ஆதரியுங்கள் 
எனக்கு இறந்து போன உயிர்களை தவிர அனைத்தையும் தரமுடியும் என்றார் ...
அனைத்தையும் என்றால் தமிழீழமும் அடங்குமல்லவா  ...ஏன் வடக்கு தமிழர்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை , மூன்று தசாப்த்தம் போராடி பெறமுடியாததை ஒரு வாக்களிப்பில் பெற்றிருக்கலாமே 
ஏன் சிங்களவர்கள் மகிந்தவிற்கு எதிராக கிளர்ந்தெழவில்லை ..தமிழருக்கு எப்படி இவர் அனைத்தையும் தரமுடியும் என்று ....?
சமீபத்தில் ஞான சார தேரர் பிரபாகரன் நல்லவர் அவர் அவர் சார்ந்த இனத்திற்கு உண்மையாய் நடந்தார் என்றும்  கூறினார்  ....சிங்களவர் உண்மையில் இவருக்கு விகாரை புகுந்து அடித்திருக்க வேண்டும் 
நடந்ததா ...? 
எல்லோருக்கும் தெரியும் தேர்தலுக்காக எவரும் எவற்றையும் கூறுவார்கள் ...
இங்கு அப்படித்தான் தலைவர் பெயரை எந்த இனம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து நீதியும் மாறுபடும்  தண்டனையும் மாறுபடும், நாம் தான் சூதானமாக நடந்து கொள்ளவேண்டும்    

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

யதார்த்தமான, ஞாயமான கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

தமிழர்களை கொன்று குவித்த

சிங்கள தேசிய கட்சி ஒன்று

தேர்தல் ஒன்றுக்காக 

புலிகளின் பாடல்களை

போட்டு வாக்கு அரசியலுக்கு

பயன்படுத்தி அப் பாடல்களின்

புனித தன்மையையே கேவலப்படுத்துகின்றார்கள்

இதற்காக நாம் 

வெட்கப்பட வேண்டும்

ஆனனால் தை தம்பியர்

உணரவில்லை போல

சரி

உங்கள் வழியில் வந்தே 

கேள்வி கேக்கிறன்

உள்ளூராட்சி தேர்தலில்

யாழில் சுக கட்சி

தோல்வி அடைந்தால்

அது 

புலிகளின் பாடல்களை 

ஒலிபரப்பியதால் மக்கள்

வாக்களிக்கவில்லை

என்று எடுத்துக் கொள்ளலாமா?

On 1/9/2018 at 3:01 PM, Sasi_varnam said:

வைரவரின் சூலாயுதத்தின்  கூர்மை வாசிப்பிலும் அதை கிரகித்து கொள்வதிலும் இருக்கவேண்டும்.
நான் கொழும்பு போகும் வரை பொறுத்திருப்பீர்களா?
இல்லை என்றால் விமானப் பற்று சீட்டை அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆசையை நிறைவேற்றுகின்றேன்.

கண்டிப்பாக

காத்திருக்கின்றன்

தம்பி

நீங்களும்

அங்கால தும்பளையான்

படம் போட்டு

பயணக் கட்டுரை

எழுதுவது போல்

கட்டுநாயக்காவில்

இறங்கி

தலைவரின் படம் போட்ட
ரீ ஷெர்ட் டுடன்

படம் எடுத்து

எமக்கு உங்கள்

வீரத்தை தெரிவிப்பீர்கள்

என நம்புறம்

அதுவரைக்கும் 

இந்த அண்ணன்

காத்திருப்பான்

Edited by வைரவன்

On 1/12/2018 at 8:28 PM, தனிக்காட்டு ராஜா said:

ஊருக்க வந்து இப்படி ஒரு பிரச்சாரம் செய்ய இயலுமா  போல் சும்மா வார்த்தைகளை அள்ளிவிடாமல் அமைதியா இருங்க அமைதியாக இருப்பவன்  எல்லாம் கோழைகள் அல்ல அதை புரிந்து கொள்ளுங்கள் 

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, போல் said:

அதை விட படு

கோழைகள் தான் 

வெளிநாடுகளில் வாழ்வினும் 

கூட சிங்களத்துக்கு 

அஞ்சி தொடை நடுங்கி

தம் படத்தை கூட

avatar ஆக போடாமல்

பொய் பெயரில் வந்து

ஊரில் இருப்பவர்களை

பார்த்து கோழைகள் என்பர்

Just now, வைரவன் said:

அதை விட படு

கோழைகள் தான் 

வெளிநாடுகளில் வாழ்வினும் 

கூட சிங்களத்துக்கு 

அஞ்சி தொடை நடுங்கி

தம் படத்தை கூட

avatar ஆக போடாமல்

பொய் பெயரில் வந்து

ஊரில் இருப்பவர்களை

பார்த்து கோழைகள் என்பர்

உங்களைப்பற்றி மிகமிகத் தெளிவாக எழுதியுளீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமடா ...எமது இரண்டு வீரத்திலகங்கள் ...இப்படித்தான் யாரோ முகப்புத்தகத்தில் அடித்த விசிலடிப்பை பார்த்து மெரசலாகி 
கம்பி மேல கம்பியும் எண்ணி வாய்தா மேல வாய்தா வாங்குரானுகள். விசிலடிக்கும் கூட்டம் அத்துடன் களண்டுக்கும் என்பது அந்த  வீர மறவர்களுக்கு 
தெரியாதது பரிதாபம். வெளிநாட்டு வீர மறவர்களும் வாயால் வடை சுடாமல்  அவர்களது சொந்த செலவில் திறமான வக்கீல்களை ஏற்பாடுசெய்து கொடுத்து வழக்கையும் உடைத்து நாட்டிலிருக்கும் வீரத்திலகங்களை காப்பாற்றி  கோழைகள் எங்களை மூக்கில் விரல்வைக்க வைக்கலாம்  ...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

இங்கு அப்படித்தான் தலைவர் பெயரை எந்த இனம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து நீதியும் மாறுபடும்  தண்டனையும் மாறுபடும், நாம் தான் சூதானமாக நடந்து கொள்ளவேண்டும்    

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தி வீர பிரதாங்களைக் காட்டி ஒன்றும் புடுங்கமுடியாது என்பதை கடந்த கால வரலாறு காட்டியும் சிலருக்கு அது இன்னமும் புரியாமல் இருக்கின்றது. களிதின்று கம்பி எண்ணிக்கொண்டு தொடையில் இருக்கும் சிரங்கை சொறியும்போது புரியக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலாவை ஒளிச்சு வைத்தவர்கள் இப்போது அவருக்கு சிலை வைக்க போட்டி போடுகிறார்கள். 

இந்த நிலையும் மாறும்... நாம் தான் உறுதியாக எம் தலைவரை போற்ற வேண்டும்.. அவரின் மதிப்புக்களை அவர் மீதான பற்றுதலை சர்வதேசத்தின் முன் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருப்பவர்களே தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்களை கோழைகள் என்று கூறும் உரிமை யாருக்குமே இல்லை. மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் தேர்தல் காலத்தில் நடப்பவை விக்கி அய்யாவின் பேச்சு என்பவற்றை இன்னுமா சனம் நம்பிக்கொண்டிருக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த மட்டில்  தனியும்,அக்கினியும்  கையை மடக்கி(சீமானை போல்,என்ன ஒரு கேவலமான உதாரணம்  எண்டு நீங்க சொல்லுறது  எனக்கு கேட்குதம்மா)  சிங்கள ஏகாதிபத்திய ( வேற என்னப்பா சொல்லுறது.) அரசுக்கு எதிராக புலிக்கொடியை ஏந்தி போராடணும்.அப்போ தான்  நாங்க எங்க புள்ளை குட்டியுடன் வரமுடியும்

ஈழத்தமிழர் மத்தியில் கோழைகளும், பிற்போக்கு சிந்தனாவாதிகளும் கணிசமாக இருப்பதால் தான் நீதிக்கான தமிழர் போராட்டங்கள் கூட வெல்லமுடியாமலும், சர்வதேசத்தின் ஆதரவை பெறமுடியாமலும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று

இவர்கள் தமிழர்களை பூச்சாண்டி பயம் காட்டி அடக்கியொடுக்கும் வேலைகளை செய்ய முற்படுகின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை என்று கூறுமளவுக்கு அளவுகடந்த உரிமை கொண்ட பேர்வழிகள் தாராளமாக உலவுகின்றனர். இப்படிப்பட்ட அராஜக உரிமை கொண்டவர்கள் தமிழின விடுதலைக்கு - நீதிக்கு எதிராகவும், தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் செயற்படுவது கண்கூடு. இவர்களை ஆராய்ந்தால் இவர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, வேலை, தமிழின விரோதிகள் தயவு போன்றவற்றின் அடிப்படையில்  சுயபிழைப்புக்காகவே கருத்தெழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு வகையினர் தங்களுடன் உடன்வாழும் தமிழ்ச் சகோதரர்களின் சட்டவிரோத கைதுகளை எதிர்க்கும் துணிவு இல்லாமால், அதை பிறர் வந்து செய்யுமாறு சவால் விடுமளவுக்கு சுயநலவாதிகளாக உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்கள், கோழைகள் என்று இணையத்தில் மார்தட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள்களின் கதியை அறிந்து சொல்லமுடியுமா?

  • தொடங்கியவர்

வாழ்த்து தெரிவிக்க விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இருவருக்கு விளக்கமறியல்

Bookmark and Share
 
இந்த ஆண்டு புது வருட பிறப்பின் போது வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=99279

23 hours ago, Rajesh said:

ஈழத்தமிழர் மத்தியில் கோழைகளும், பிற்போக்கு சிந்தனாவாதிகளும் கணிசமாக இருப்பதால் தான் நீதிக்கான தமிழர் போராட்டங்கள் கூட வெல்லமுடியாமலும், சர்வதேசத்தின் ஆதரவை பெறமுடியாமலும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று

இவர்கள் தமிழர்களை பூச்சாண்டி பயம் காட்டி அடக்கியொடுக்கும் வேலைகளை செய்ய முற்படுகின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை என்று கூறுமளவுக்கு அளவுகடந்த உரிமை கொண்ட பேர்வழிகள் தாராளமாக உலவுகின்றனர். இப்படிப்பட்ட அராஜக உரிமை கொண்டவர்கள் தமிழின விடுதலைக்கு - நீதிக்கு எதிராகவும், தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் செயற்படுவது கண்கூடு. இவர்களை ஆராய்ந்தால் இவர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, வேலை, தமிழின விரோதிகள் தயவு போன்றவற்றின் அடிப்படையில்  சுயபிழைப்புக்காகவே கருத்தெழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு வகையினர் தங்களுடன் உடன்வாழும் தமிழ்ச் சகோதரர்களின் சட்டவிரோத கைதுகளை எதிர்க்கும் துணிவு இல்லாமால், அதை பிறர் வந்து செய்யுமாறு சவால் விடுமளவுக்கு சுயநலவாதிகளாக உள்ளனர்.

நல்ல கருத்து..

தாயகத்தில் இருப்பவர்கள் தாங்களுடைய சந்தர்ப்ப சூழுலுக்கு ஏற்ப மாவீரர் தினத்தை கொண்டாடவோ இல்லை வீரவணகக நிகழ்வுகளை கொண்டாடவோ அவர்கள் படங்களை பயன்படுத்தவோ உரிமையுடையவர்கள்.. அதனால் ஏற்படும் இடர்பாடுகள் நெருக்கடிளுக்கு புலத்தில் உள்ளவர்கள் முடிந்தால் ஆதரவு கொடுக்கலாம். மற்றபடி உசுப்பேத்துதல் அல்லது புறணிபாடுதல் என்பதன் காலம் கடந்து விட்டது வேணுமானால் இனிவருங்காலங்களில் இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். இங்கு நடக்கும் இது குறித்த விவாதங்கள் தாயகத்தில் மேற்கண்ட நடவடிக்கைகள் சார்ந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அனுமதிக்கப்பட்ட நாடுகளில் கூட மவீரர் நாள் நினைவு கூரல்களை பலமாக ஒற்றுமையாக எழுச்சியுடன் புலம்பெயர்ந்தவர்களால் கொண்டாட முடியவில்லை ஆனால் கடந்த மாவீரர் தினம் தாயகத்தில் மிக எழுச்சியுடன் ஐக்கியப்பட்ட நிலையில் நினைவு கூரப்பட்டுள்ளது. இவ் நினைவுகூரலானது சிங்களம் மற்றும் தமிழ் கட்சிகள் மேலும் உங்கள் கருத்தில் இருக்கும் உரிமைகள் தொடர்பான புலத்து நிலைப்பட்டிற்கும் பல விசயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. சொந்த நிலத்தில் வாழ்பவர்களே அவர்களது உரிமைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள்  முடிந்தால் அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே ஏனையவர்களால் இருக்கமுடியும் தவிர அட்வைஸ் ஆலோசனைகள் நடத்துதல் மேய்தல் என்ற எதுவும் சாத்தியமில்லை அது நியாயமும் ஆகாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2018 at 9:49 PM, போல் said:

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

நான் இதெல்லாம் சீரிசா எடுக்கிரல்ல கண்டியளோ ஏனென்றால் பழகிப்போன ஒன்று  இதை விட இன்னும் எதிர்பார்த்தன் உங்ககிட்ட இப்படி கொஞ்சத்தோடு நிறுத்தி விட்டியல் இன்று என்ன கேஸ் எதுக்கு போட்டார்கள் என்று தெரியாமல் இருக்கிறார்கள் பல ஜெயிலில் எனது நண்பர்கள் பலர் சிறைக்காவலர் மற்றும் பொலிசார்கள் அவர்கள் சொல்லுவதையெல்லாம் உங்களிடமும் சொல்ல முடியாது  நீங்க உசுப்பேத்தி மகிழ்கிறீர்கள் ஆனால் அவர்களின் எதிர்க்காலம் என்பது ????? அண்மையில் மொன்றாகல நீதிமன்றத்தில் ஒரு தமிழ் கைதிக்கு வழக்கில் பல வ்ருடம் தண்டனை ஆயூட்காலம் முடியப்போகுது விசாரித்து பாருங்கள் அவரை காப்பாற்ற நாதியுமில்லை ஒருத்தனும் இல்லை இதுக்குள்ள நீங்க வெலாட்டு காட்டுறியள் 

இப்படி கோழைகள் என்று சொல்லிவிட்டு தாங்கள் கச்சைக்குள் ஒளிந்திருந்து அடியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் லாபம் சார் நான் ஊரில் இருக்கிறன் இங்க ஊர் வந்து போனவனுகளுக்கும் நிலமை தெரியும் நான் இப்படும் சொல்வது நீங்கள் ஊர் வந்து ஒரு போராட்டம் தொடங்கப்படாது நாங்கள் கோழைகள் நீங்கள் வீராதி வீரன் வாங்களன் எத்தனை பேர் வாரானுகள் என்று பார்ப்போம் tw_blush:tw_blush:

On 1/16/2018 at 12:00 PM, நந்தன் said:

என்னை பொறுத்த மட்டில்  தனியும்,அக்கினியும்  கையை மடக்கி(சீமானை போல்,என்ன ஒரு கேவலமான உதாரணம்  எண்டு நீங்க சொல்லுறது  எனக்கு கேட்குதம்மா)  சிங்கள ஏகாதிபத்திய ( வேற என்னப்பா சொல்லுறது.) அரசுக்கு எதிராக புலிக்கொடியை ஏந்தி போராடணும்.அப்போ தான்  நாங்க எங்க புள்ளை குட்டியுடன் வரமுடியும்

ஏதோ ஒன்று சொல்வார்கள் அண்ண பாட்டு வாச்ச கிழவியும் பாடுவாளாம் அது போல தான் இருக்குது சிலரின் கதை இன்னும் உசுப்பேத்தாம இருக்கிர வழியை பாருங்கள் என்று சொல்ல வந்தம் இது கூட விளங்குதில்லை  அரசியல் கட்சிகளே அரசாங்கத்துக்கு சோப்பு போடுது இதுக்குள்ள இவங்க வேற  ஒரே சிரிப்பா வருகுதண்ண 

On 1/16/2018 at 1:11 PM, கிருபன் said:

வீரர்கள், கோழைகள் என்று இணையத்தில் மார்தட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள்களின் கதியை அறிந்து சொல்லமுடியுமா?

கிருபன் இதைதான்  சிலர் எதிர்பார்க்கிரார்கள் என்ன செய்ய  எது நடந்தாலும் அது சிலரை கம்பிக்கூண்டுக்குள் இழுத்து செல்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.