கிருபன்

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Recommended Posts

பொட்டம்மான் தலைவருக்கு இறுதிவரை விசுவாசமாக இருந்தவர். கருணா அப்படி இல்லை. 

சுயநலத்திற்காக ஒரு இனத்தின் இருப்பையே ஆட்டம் காணச்செய்துவிட்டு மகிந்தவோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். 

பீஷ்மர் இன்னும் பல விடயங்களைச் சொல்லுவார்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

போராட்டத்தினதும்,இயக்கத்தினதும் அஸ்தமனத்திற்கு தனி தனியாக ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்

பொதுவாக ஒரு காரணமும் இருந்தது ,அது மிக நீண்டகாலமாக ஒரு போராட்டத்தை நடத்தியது என்பது!

சர்வவல்லமை பொருந்திய ஒரு அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் ,வளங்களிலும் மக்கள் தொகையிலும்

மிகவும் சொற்பமாக உள்ள ஒரு சிறுபான்மையினம் எதிரிக்கு மிக நீண்டகால அவகாசம் கொடுத்தால் ,

என்றோ ஒருநாள் அவன் தன்னிடமுள்ள சகல வழிகளையும்,தந்திரங்களையும் பயன்படுத்தி எம்மை நசுக்கிவிடுவான் என்பதை,        ஆயுதம் தாங்கி இனிமேல் உலகில் அநீதியான அரசுகளுக்கெதிராக நீதிகேட்டு போராட நினைக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கு சொல்ல..

 அழிந்துபோன எமது போராட்ட சக்தியும்,இன்றும் முள்ளிவாய்க்கால் நிலப்பரப்பில் மிச்சம்மீதியாய் இருந்து நடந்து செல்பவர்களின் காலில் தடக்குபடும் எமது இனத்தின் மனித எலும்புகளின் எச்சங்களும்... ஒரு அரிவரி பாடமாக இருப்போம்.

யார் பிரிந்தாலும் பிரியாவிட்டாலும் எமதுபோராட்டம் இப்படித்தான் அழிவிற்கு வந்திருக்கும்,

ஏனென்றால் இறுதிபோரில் வென்றது ஆட்பலம் வீரம் என்பவை அல்ல, வென்றது.. போதிய அளவு கால இடைவெளியில் அளவிற்கு அதிகமாக எதிரி சேர்த்துவைத்த கனரக ஆயுதங்களும் தொழில்நுட்பமுமே.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தராகி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றிலும் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றியதும் அதன் பின்னர் தீச்சுவாலை நடவடிக்கையை முறியடித்ததும் ஆயுதப் போராட்டத்தின் உச்சம் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் யுத்தம் இல்லாமல் ஒரு தீர்வுக்குப் போயிருக்கவேண்டும். ஆனால் தமிழீழம் என்ற இலட்சியத்தை கைவிடாமல் தீர்வு ஒன்றையும் எட்டியிருக்கமுடியாது. அதனைக் கைவிட்டாலும் தமிழீழ இலட்சியத்திற்காக மரணித்த போராளிகளுக்கு துரோகம் செய்ததாக கருதப்படும் இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கும்.

ஒரு இனத்தின் இருப்பா அல்லது இலட்சியமா முக்கியம் என்ற கேள்விக்கான விடையை தூரநோக்கத்துடன் எடுக்கவில்லை என்று மட்டும் சொல்லமுடியும்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, கிருபன் said:

ஒரு இனத்தின் இருப்பா அல்லது இலட்சியமா முக்கியம் என்ற கேள்விக்கான விடையை தூரநோக்கத்துடன் எடுக்கவில்லை என்று மட்டும் சொல்லமுடியும்.

அதைவிட இந்த அவல நிலைக்கு மிகவும் பிரதானமான காரணி எமது இனம் .... நிச்சயமாக எமது இனம்.. வன்னியில் நடந்த அவலத்தின்  பொது வடக்கு கிழக்கில்  அமைதியாக இருந்த எமது இனம் .... தான் மட்டும் தப்பினால் போதும் என்று அமைதி காத்த எமது இனம் ...

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, வாத்தியார் said:

அதைவிட இந்த அவல நிலைக்கு மிகவும் பிரதானமான காரணி எமது இனம் .... நிச்சயமாக எமது இனம்.. வன்னியில் நடந்த அவலத்தின்  பொது வடக்கு கிழக்கில்  அமைதியாக இருந்த எமது இனம் .... தான் மட்டும் தப்பினால் போதும் என்று அமைதி காத்த எமது இனம் ...

அமைதியாக இருந்தது என்று சொல்லமுடியாது. மகிந்த அரசின் அடக்குமுறைக்குள் உள்ளே குமுறிக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம் கூடச் செய்யமுடியாதவாறு அடக்கப்பட்டிருந்தார்கள். தமிழ் அரசியல் தலைமைகள் தலைமைதாங்கி எதிர்ப்பை தெரிவிக்கமுடியாமல் கோழைகளாக இருந்தார்கள்.

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, வாத்தியார் said:

அதைவிட இந்த அவல நிலைக்கு மிகவும் பிரதானமான காரணி எமது இனம் .... நிச்சயமாக எமது இனம்.. வன்னியில் நடந்த அவலத்தின்  பொது வடக்கு கிழக்கில்  அமைதியாக இருந்த எமது இனம் .... தான் மட்டும் தப்பினால் போதும் என்று அமைதி காத்த எமது இனம் ...

அந்த  நேரம்  யாழ்  பல்கலைக்கழகத்தின் இறுதி  ஆண்டு மருத்துவ  மாணவராக  இருந்த ஒருவருடன் பேசக்கிடைத்தது

அவர்  சொன்னார்

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள்   உட்பட  பல ஆயிரக்கணக்கான  இளைஞர்களும் யுவதிகளும்  பயிற்சிக்குள்ளாக்கப்பட்டு

அழைப்புக்காக  காத்திருந்தார்கள்

அழைப்பு  வரவே  இல்லை

எதைச்செய்தும்  பயன் இல்லை  என்ற  முடிவுக்கு  தலமை  வந்திருந்தது என்றார்.

Share this post


Link to post
Share on other sites

பொட்டம்மான்- கருணா முதலாவது மோதல்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 15

May 23, 2018
ltte-pottan.jpg

பீஷ்மர்

ஜெயசிக்குறு களமுனையில் 1997ஆம் ஆண்டு நடந்த சம்பவமொன்றை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாங்குளத்திற்கு அண்மையாக நிலைகொண்டிருந்த ஜெயந்தன் படையணி போராளிகளை மாற்றிவிடும்போது, புலனாய்வுத்துறையின் இரகசிய உறுப்பினர்களை கவனயீனமாக கையாளப்பட்டிருந்தனர், அந்த களமுனைக்கு கருணாதான் பொறுப்பானவர், இதனால் கருணாவிற்கும் பொட்டம்மானிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததென்பதை குறிப்பிட்டிருந்தோம்.

பொட்டம்மான்- கருணாவிற்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதற்கு, மாங்குளத்தில் நடந்த அந்த சம்பவம் மட்டுமே காரணமா என்று கேட்டால்… பதில் இல்லையென்பதே!

பொட்டம்மானிற்கும் கருணாவிற்குமிடையில் கிட்டத்தட்ட பதினேழு வருடத்திற்கும் அதிகமான உள்மோதல் இருக்கிறது. இப்படி நாம் குறிப்பிடுவது பலரிற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இத்தனை நாளாக நாம் இதை அறியாமல் விட்டுவிட்டோமே என்றும் நினைக்கலாம். விடுதலைப்புலிகளிற்குள் உள் மோதலா என்றும் சிலர் நினைக்கலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் தளபதிகளிற்குள் உள்மோதல் வருவது அரிது. அதற்காக அப்படியொரு மோதல் வரவேயில்லையென்று அர்த்தமல்ல. முன்னரும் மோதல் நடந்திருக்கிறது. அதில் பகிரங்கமாக வெளியில் தெரிந்த பெரிய மோதல் மாத்தையா- கிட்டு மோதல். இதைவிட, வேறு தளபதிகளிற்குள் சின்னசின்ன மோதல் அடிக்கடி இடம்பெற்றுக்கொண்டுதானிருந்தது.

Image result for à®à®¿à®à¯à®à¯ கிட்டு- மாத்தையாவுடன் பிரபாகரன்

1984 இல் கிட்டு யாழ்ப்பாண தளபதியானார். மாத்தையா வன்னித்தளபதி. பொதுவாகவே தமிழ் சமூகத்திற்குள் யாழ்ப்பாண மேலாதிக்க மனோபாவம் இருக்கும். வன்னிக்குள் யாழ் உணவகம், யாழ் கல்விச்சாலை, யாழ் உற்பத்திகள் என்ற பெயரில் பல நிறுவனங்கள் இருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்திற்குள் வன்னி உணவகம் என்றோ, கிளிநொச்சி பாதணியகம் என்றோ கிடையாது. அரசஅதிகாரிகள் என்றாலும் சம பொறுப்பில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுபவர் வன்னிக்குள் கடமையாற்றுபவர்களை விட அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். புலிகளிற்குள்ளும் இதுதான் நடந்தது.

கிட்டு விரைவில் புகழ்பெற்றுவிட்டார். கிட்டுவை பிரபாகரனிற்கும் நன்றாக பிடித்தது. அதிகமாக நம்பினார். வெளிநாட்டில் இருந்து இந்தியா வழியாக வரும் ஆயுதங்கள் யாழ்ப்பாணத்திற்குத்தான் வந்துசேர்ந்தது. அப்பொழுது பிரபாகரன் இந்தியாவில் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தை கிட்டு, மன்னாரை விக்டர், வன்னியை மாத்தையா, திருகோணமலையை புலேந்திரன், மட்டக்களப்பை குமரப்பா கவனித்துக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு வரும் ஆயுதங்கள் முறையாக பகிரப்படுவதில்லையென மாத்தையா நினைத்தார். புலேந்திரனிடமும் இந்த அதிருப்தி இருந்தது. யாழ்ப்பாணத்தில் புலிகள் அதிக நிதி வசூலித்தார்கள். ஆனால் அதில் கணிசமான பணம் யாழ்ப்பாணத்திலேயே புலிகளால் செலவிடப்பட்டது. புலிகளின் நிர்வாக மையம் யாழ்ப்பாணத்தில் இருந்ததும் அதற்கு ஒரு காரணம்.

மாத்தையா இந்தியா போகும்போதெல்லாம் வன்னிக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக பிரபாகரனிடம் முறையிட்டார். கிட்டுவும் இந்தியா போகும்போது பிரபாகரன் இதுபற்றி பேசியிருக்கிறார். ஆனால் யாழ்ப்பாண களம்தான் முக்கியமானதென்ற அபிப்பிராயம் பிரபாகரனிடமும் இருந்தது.

Image result for à®à®¿à®à¯à®à¯

கிட்டுவின் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த மாத்தையா வன்னிக்குள் ஒரு வரி நடைமுறையை கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் கிளிநொச்சியில் வரி செலுத்த வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால், யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டுவரும் வர்த்தகர்கள் ஏற்கனவே யாழில் வரி கட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டு இடத்தில் வரி கட்டவேண்டும் என்றதும், வர்த்தகர்கள் நிலைகுலைந்து விட்டார்கள். வர்த்தகர்கள் குழுவாகவும் தனிப்பட்டரீதியிலும் கிட்டுவை சந்தித்து முறையிட்டனர். அப்பொழுது வர்த்தகர்களிடம் கிட்டு சொன்ன பதில்- “வன்னி வரியை நான் கட்டுப்படுத்த முடியாது. நான் தலைவருடன் பேசுகிறேன். எதற்கும் நீங்களும் ஒரு கடிதம் மூலம் தலைவரிடம் முறையிடுங்கள். அந்த கடிதத்தின் பிரதியை என்னிடம் தாருங்கள். நானும் தலைவரிடம் அதை சேர்ப்பிக்கிறேன்“ என்பதே.

 

இந்த பிரச்சனை பிரபாகரன் வரை சென்றது. ஆனால் மாத்தையா கிளிநொச்சி வரியை நிறுத்திக்கொள்ளவேயில்லை.

கிட்டு மீது யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு தாக்குதல் நடந்தபோது, அது மாத்தையா அணியின் வேலையாக இருக்கலாமென்ற அபிப்பிராயம் புலிகளின் ஒரு சிறுபகுதியிடம் இருந்தது. மாத்தையா- கிட்டு மோதலை அறிந்து வைத்திருந்த மாற்று இயக்கங்கள், மாத்தையா குறூப்தான் கைக்குண்டை வீசியதாக கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார்கள். அவர்கள் இதை தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததால் மக்களில் ஒரு பகுதியினரும் அதை நம்பினார்கள்.

உண்மையில் கிட்டுவுக்கு கைக்குண்டு வீசியது மாத்தையா குழு அல்ல. புளொட்டில் இருந்து பிரிந்து தீப்பொறி என்ற குழு தனியாக செயற்பட்டது. அவர்கள்தான் இந்த தாக்குதலை செய்தனர். அந்த குழுவின் பத்து, பதினைந்து பேர்தான் இருந்தனர். இந்த தாக்குதலுடன் இரகசியமாக கொழும்பு சென்றுவிட்டனர். பின்னர் வெளிநாடுகளிற்கு சென்றுவிட்டனர். இந்த கைக்குண்டு தாக்குதலை நடத்தியவர்கள் இப்பொழுது கனடாவில் இருக்கிறார்கள். யுத்தம் முடியும் வரை இதற்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை. புலிகளின் எதிர்வினை எப்படியிருக்குமென தெரியாதென்ற பயத்தில் சத்தமின்றி இருந்து விட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் இப்பொழுதுதான் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கிறார்கள்.

 

Image result for பà¯à®à¯à®à®®à¯à®®à®¾à®©à¯

புளொட்டில் நடந்த உள் படுகொலைகளை புதியதோர் உலகம் என்ற நாவலாக எழுதிய கோவிந்தனும் தீப்பொறி குழுவில்தான் இருந்தார். இப்பொழுது கனடாவில் உள்ள கந்தர்மடத்தை சேர்ந்த ஒருவரும் தீப்பொறி குழுவில் இருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டில் 1990இல் யாழ்ப்பாணம் இருந்தாலும் இவர் வவுனியா, மன்னார் காடுகளிற்குள்ளால் கொழும்பிலிருந்து தமது அமைப்பு ஆட்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தார். இப்படி ஒருமுறை வந்து கோவிந்தன், செல்வியுடன் (கவிஞர் செல்வி) தொடர்பேற்படுத்தி, மீள அமைப்பை யாழ்ப்பாணத்திற்குள் செயற்பட முயற்சித்த சமயத்திலேயே கோவிந்தனும், செல்வியும் புலிகளால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் புலிகளின் சிறைச்சாலையில் கொல்லப்பட்டனர்.

தீப்பொறி குழுவின் தாக்குதலை மாத்தையாவின் தாக்குதலாக இன்றும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 1993இல் புலிகளும் அப்படித்தான் நம்பினார்கள். மாத்தையா புலிகளிற்கு எதிராக சதி செய்தாரா என்பதற்கு அப்பால், கிட்டு மரணமானதும் புலிகளின் சந்தேகம் மாத்தையா மீது விழுந்தது. காரணம், பழைய கிட்டு- மாத்தையா மோதல்.

இரண்டு தளபதிகளிற்கிடையிலுமான மோதல் 1994இல் புலிகளிற்குள் பெரிய புயலை வீசச்செய்தது. சுமார் நானூறு வரையான போராளிகள் கொல்லப்பட்டனர். கிட்டுவும் இல்லை. மாத்தையாவும் இல்லை.

இதற்கு பின்னர் உக்கிரமாக தளபதிகளிற்குள் நடந்த உட்பகை, பொட்டம்மான்- கருணா விற்கிடையில் நடந்ததுதான். இதன் முடிவு என்னவென்பதை நாம் உங்களிற்கு சொல்ல வேண்டியதில்லை. தமிழர் தரப்பின் உள்ளக மோதல்கள்தான் நமது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

 

சரி, விடயத்திற்கு வருகிறேன். பொட்டம்மானிற்கும் கருணாவிற்குமிடையிலான மோதல் எப்படி ஆரம்பித்தது?

(தொடரும்)

 

http://www.pagetamil.com/5784/

Share this post


Link to post
Share on other sites
On ‎6‎/‎22‎/‎2018 at 9:49 AM, கிருபன் said:

பொட்டம்மான் தலைவருக்கு இறுதிவரை விசுவாசமாக இருந்தவர். கருணா அப்படி இல்லை. 

சுயநலத்திற்காக ஒரு இனத்தின் இருப்பையே ஆட்டம் காணச்செய்துவிட்டு மகிந்தவோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். 

பீஷ்மர் இன்னும் பல விடயங்களைச் சொல்லுவார்.

பொட்டு,கடைசி வரைக்கும் தலைவரோடு இருக்கத் தானே வேண்டும் ...தானா,கருணாவா என்ட  போட்டியில் அவரை இயக்கத்தை விட்டு துரத்தியவரே  இவர் தானே...இருந்து பாருங்கள் இன்னும் நிறைய வரும் ....
 

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, ரதி said:

பொட்டு,கடைசி வரைக்கும் தலைவரோடு இருக்கத் தானே வேண்டும் ...தானா,கருணாவா என்ட  போட்டியில் அவரை இயக்கத்தை விட்டு துரத்தியவரே  இவர் தானே...இருந்து பாருங்கள் இன்னும் நிறைய வரும் ....
 

பொட்டம்மான் சுயநலத்திற்காக சூழ்ச்சி செய்தவரில்லை. அவரும் தன்னையும் தனது குடும்பத்தையும் தனிநாட்டுக்கான போரில் ஆகுதியாக்கியவர்களில் முக்கியமானவர்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, கிருபன் said:

பொட்டம்மான் சுயநலத்திற்காக சூழ்ச்சி செய்தவரில்லை. அவரும் தன்னையும் தனது குடும்பத்தையும் தனிநாட்டுக்கான போரில் ஆகுதியாக்கியவர்களில் முக்கியமானவர்.

 

 

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம் ...

 மனைவி  எங்கை சண்டைக்கு போனவ?.(பொட்டாரே போகேல்ல).....மூத்த பிள்ளைக்கே அந்த நேரம் 18 வயசுக்குள் தான் இருக்கும்....சில நேரம் கடைசி யுத்தத்தில் பங்கு பற்றி இருக்கலாம்...காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் பேர் வந்து இருக்கு பார்க்கேல்லையா?

ஊரான் பிள்ளைகளை எல்லாம் பலவந்தமாய் இயக்கத்திற்கு கொண்டு வந்தவை தங்கட குடும்பத்தையும் தியாகம் செய்யத் தான் வேண்டும் .. 

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, ரதி said:

 

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம் ...

 மனைவி  எங்கை சண்டைக்கு போனவ?.(பொட்டாரே போகேல்ல).....மூத்த பிள்ளைக்கே அந்த நேரம் 18 வயசுக்குள் தான் இருக்கும்....சில நேரம் கடைசி யுத்தத்தில் பங்கு பற்றி இருக்கலாம்...காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் பேர் வந்து இருக்கு பார்க்கேல்லையா?

ஊரான் பிள்ளைகளை எல்லாம் பலவந்தமாய் இயக்கத்திற்கு கொண்டு வந்தவை தங்கட குடும்பத்தையும் தியாகம் செய்யத் தான் வேண்டும் .. 

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

 

 

தெரிந்துதான் அடிபட்டவை ஆனால் ஆயதம் மவுநித்தபின் பத்து வருடங்களின் பின் தமிழ் மக்களின் தே000000 கர்ணாவை விட பாலசிங்கத்தை வி000பொட்ட0000 தெளிவா தெரிந்து இருக்கு .

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம்

கருணா சொன்னது போலவே வடக்கர்கள் (அதாவது யாழ்பாணிகள்) கிழக்கர்களை (அதாவது மட்டக்கிளப்பாரை), அல்லது நீங்கள்குறிப்பிட்டு சொன்னது  போலவே பொட்டர் கருணாவை அடக்கி வைத்திருக்கலாம் என்று நினைத்தை, உடைத்த கருணாவை, கருணாவுடன் பிரிந்தவர்கள், முன்பு போலவே கேட்டுக் கேள்வி இன்றி பணம் வருவதை விருப்பியோரை தவிர,  ஏன் கருணாவிடம் இருந்து பிரிந்தனர். இதில் முக்கியமாக, கருணாவின் மெய்ப்பாதுகாவல் துறைக்கு தலைமை தாங்கிய வரதன் மற்றும் அணியினர்.

சரி, பிழை, உட்பூசல்களுக்கு அப்பால், கொள்கையளவில் கருணா புலிகளிடம் இருந்து பிரிந்து, சிங்கள புலனாய்வுடன் இயங்கத்  தொடங்கிவிட்டார்.

ரணில் ஓர் இடத்தில மிகவும் வெளிப்படையாக கூறியிருந்தார், அதாவது கருணாவை புலிகள் எம்மை உளவு பார்ப்பதற்கு அனுப்பினார், ஆனால் கருணா புலிகளைப் பிரிந்து எம்பக்கம் வந்து விட்டார் என்று.

நீங்கள் எத்தனையோ விதமாக கருணாவை நியப்படுத்தலாம்.

 

Edited by Kadancha

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

வேற்றுமை, கருணா தெரிந்தே கொள்கையைக் கைவிட்டது.

கருணா புலிகளின் ஓர் பகுதி தனது என்றும் பொட்டு தானும் தான் பொறுப்பாக இருக்கும் பகுதியும் புலிகளின் ஓர் பகுதியாக என்று எண்ணியதுமே வேறுபாடு.

பொட்டு பொறுப்பாகவிருந்த பகுதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டது, அந்தப் பகுதியின் எதிரியோடு இரண்டறக் கலந்த தன்மையில் இருப்பதால், பொட்டு விரும்பி அன்று.

எந்தவோர் சிறிய அரசிலும் அதுவே நடை முறை.

நீங்கள் ஒன்றை கவனிக்க தவறி விட்டீர்கள், பொட்டு எந்தவோர் முடிவையும் தானாக எடுக்கவில்லை. பெறப்பட்ட துல்லியமான தகவல்களை தலைமையிடம் அளித்து முடிவை தலைமையிடமே விட்டார். இதுவே, வலரசிலும் கூட வளமை.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

 

மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற மாதிரி கருணாவையும் தன்னுடைய ஆளுமைக்குள் வைத்திருக்கலாம் என்று பொட்டு நினைத்தார்...அது சரி வரேல்ல...இயக்கம்  பிரிஞ்சது தான் மிச்சம்...கருணா பிரிஞ்சது சுயநலம் தான்...ஆனால் பிரித்தது அதை விட சுயநலம் ...

 மனைவி  எங்கை சண்டைக்கு போனவ?.(பொட்டாரே போகேல்ல).....மூத்த பிள்ளைக்கே அந்த நேரம் 18 வயசுக்குள் தான் இருக்கும்....சில நேரம் கடைசி யுத்தத்தில் பங்கு பற்றி இருக்கலாம்...காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் பேர் வந்து இருக்கு பார்க்கேல்லையா?

ஊரான் பிள்ளைகளை எல்லாம் பலவந்தமாய் இயக்கத்திற்கு கொண்டு வந்தவை தங்கட குடும்பத்தையும் தியாகம் செய்யத் தான் வேண்டும் .. 

கருணாவும் சரி ,பொட்டும் சரி தங்கட சுயநலத்திற்காக இயக்கத்தை அழித்திடடினம் (தெரிந்தோ/தெரியாமலோ)

 

 

பிரிவது அவரவர் விருப்பம்.  

பிரிந்த பின் தனியாக, தனி மாநிலமாக, மாவட்டமாக நின்றிருக்கலாம்.

தான் துணை நின்று வளர்த்தெடுத்த போராட்டத்தை எதிரியுடன் நின்று அழிக்க உதவியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

தனிமன உழைச்சலுக்காக கொள்கை மாறியவர் அல்லவா?

எடுத்த சத்தியபிரமாணத்தையே தவறவிட்டவருக்கு எப்படி உங்களால் வக்காலத்து வாங்க முடிகின்றது????

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கருணா கொம்மான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை 

பொட்டு அவர்கள் பாரிய துரோகம் செய்துவிடடர்.

இதுக்கு பிறகும் ஏன் போராட்டம் தோத்தது என்று விவாதம் வேற. 
தமிழன் கேட்ட கேட்டுக்கு விடுதலைதான் ஒரு கேடு. 

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பொட்டருக்கு வழங்கப்பட்ட பணியும் பொறுப்பும் இதர தளபதிகளுடன் ஒப்பிடமுடியாதது. உண்மையில் பொட்டர் தேசியதலைவரையும் கட்டுப்படுத்தும் பொறுப்பான பணியில் இருந்தார் என்றுதான் கருதவேண்டும். ஆனால் அந்தளவுக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இந்த ஜதார்த்தத்தை கடஞ்சா(Kadancha)  மட்டும் தனது கருத்தில் சிறிது தொட்டுச்சென்றிருக்கிறார். 
பொட்டரின் மேல் மற்றைய தளபதிகளின் விருப்பு வெறுப்பு தவிர்க்கமுடியாதது. தங்களை பிறர் ஒருவர் வேவுபார்ப்பதையும் அதை பின்னர் தலைமையிடம் கொண்டு செல்வதையும் எந்த தளபதியும் விரும்பியிருக்கமாட்டார்கள். அதனால் வந்ததுதான் பொட்டரின் மீதுவந்த காழ்ப்புணர்வு. இதுபோன்ற சம்பவங்களை  தளபதிகளுக்கிடையிலான தனிப்பட்ட மோதலாக சித்தரிப்பதும் தவறு.

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, குமாரசாமி said:

பிரிவது அவரவர் விருப்பம்.  

பிரிந்த பின் தனியாக, தனி மாநிலமாக, மாவட்டமாக நின்றிருக்கலாம்.

தான் துணை நின்று வளர்த்தெடுத்த போராட்டத்தை எதிரியுடன் நின்று அழிக்க உதவியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

தனிமன உழைச்சலுக்காக கொள்கை மாறியவர் அல்லவா?

எடுத்த சத்தியபிரமாணத்தையே தவறவிட்டவருக்கு எப்படி உங்களால் வக்காலத்து வாங்க முடிகின்றது????

 

ஐயோ அண்ணா மீண்டும் முதலில் இருந்தா ? ....வரலாற்றை திரும்பி பாருங்கோ 

 

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, vanangaamudi said:

பொட்டருக்கு வழங்கப்பட்ட பணியும் பொறுப்பும் இதர தளபதிகளுடன் ஒப்பிடமுடியாதது. உண்மையில் பொட்டர் தேசியதலைவரையும் கட்டுப்படுத்தும் பொறுப்பான பணியில் இருந்தார் என்றுதான் கருதவேண்டும். ஆனால் அந்தளவுக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இந்த ஜதார்த்தத்தை கடஞ்சா(Kadancha)  மட்டும் தனது கருத்தில் சிறிது தொட்டுச்சென்றிருக்கிறார். 
பொட்டரின் மேல் மற்றைய தளபதிகளின் விருப்பு வெறுப்பு தவிர்க்கமுடியாதது. தங்களை பிறர் ஒருவர் வேவுபார்ப்பதையும் அதை பின்னர் தலைமையிடம் கொண்டு செல்வதையும் எந்த தளபதியும் விரும்பியிருக்கமாட்டார்கள். அதனால் வந்ததுதான் பொட்டரின் மீதுவந்த காழ்ப்புணர்வு. இதுபோன்ற சம்பவங்களை  தளபதிகளுக்கிடையிலான தனிப்பட்ட மோதலாக சித்தரிப்பதும் தவறு.

நீ என்ட பகுதிக்கு வந்து என்னையே  உளவு பார் எண்டிட்டு வாயை மூடிட்டு இருக்கோனுமாக்கும்.....கருணாவில் நம்பிக்கை இல்லாட்டில் எதற்கு மடடக்கிளப்புக்கு அனுப்பனும்?... வன்னியிலே ஒரு பதவியைக் கொடுத்து தங்கட பக்கத்தில் வைத்திருக்கலாமே!...

 

 

Share this post


Link to post
Share on other sites

புலிகளின் உளவுப்பிரிவு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்க மாவட்டத் தளபதியின் அனுமதி தேவை என்று சொன்னால் எதை விவாதிக்கமுடியும்?

உளவுப் பிரிவு எல்லாம் தெரிந்திருந்தும் தலைவர் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியிருந்தும் அவருக்கு கருணா மேல் அதீத நம்பிக்கை இருந்ததும் பலவீனமே. அது தெரிந்தும் தலைவரின் அனுமதி இன்றி தன்னிச்சையாக எதுவும் செய்யாமல் இருந்தது பொட்டரின் விசுவாசம்.

Share this post


Link to post
Share on other sites

மாவட்டத்தை உளவு பார்க்க என்று  வந்து, தளபதியை உளவு பார்த்ததால் தான் பிரச்சனை ஆரம்பம் ...நீயும்,நானும் சரி சமனாக இருக்கும் போது என்னில் நம்பிக்கை இல்லாமல் என்னை உளவு பார்க்கிறாயோ என்ட கோபம்,ஈகோ …
 

Share this post


Link to post
Share on other sites

புலிகளின் உளவுப் பிரிவு, புலிகளின் இராணுவ கட்டமைப்பை விட கூடிய காலத்துக்கு முன்பு ஓர் சிறப்பு தேர்ச்சி அடிப்படையிலான (specialised professional)   முறையில் இயங்காத தொடங்கி விட்டது.

டெலோ இல் ஒப்பீட்டளவில் மூத்த உறுப்பினராகவும் அதே நேரத்தில் டெலோ இன்டெலிஜென்ஸ் இல் தொடங்குவதற்கு முயறசித்தவர்களில் ஒருவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.

அவரின் கூறுப் படி, மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு என்பது ஓர் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலே தேவையாக நோக்கப்பட்டது. மற்றும் மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு அறிதல் பயிற்சி என்பது ராணுவ பயிற்சியின் ஓர் அங்கமாகவே வழங்கப்பட்டது, அதுவும் இந்தியா அல்லது லெபனான் மற்றும் பலஸ்தீனின் தொடர்புகளூடாகவே வழங்கப்பட்டது.

புலிகளும் அப்படி படர்ச்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால், இறுதியில் மற்ற இயங்கங்கள் அறிந்தது, புலிகள் அதை விட வேறு ஓர் மிகவும் திறமை வாய்ந்த உளவு பிரிவிடம் பயிட்சி பெற்றார்கள் என்று தாம் வெகு காலம் பின்பு அறிந்ததாகவும், அதை புலிகள் கனகச்சிதமாக வெகுகாலம்  மறைத்துவிட்டதாகவும்.  

அந்த டெலோ மூத்த உறுப்பினர் அதை இஸ்ரேல் என்றும், அது mossad என்றும்  கூறினார். அனாலும் புலிகளின் உலவுப் பிரிவின் செயற்பாடுகள், அது மொசாட் மட்டுமல்ல, ஷின் பெட் (இஸ்ரேல் இன் உள்ளக புலனாய்வு துறை) இடமும் புலிகள் பயிட்சி பெற்றானோரோ என்று தாம்  சந்தேகிப்பதாக சொன்னார்.           

அவர் மேலும், புலிகள் சிக்னல் இன்டெலிஜென்ஸ் இல் பயிட்சி பெற்றவர்கள் (அந்த நேரத்தில்  மிகவும் அருமையும், மிகவும் செலவு கூடியதும்) தனிப்பட்ட காரணங்களிற்காக விலகியதாகவும், அவர்களை புலிகள் அரசியல் பிரிவில் உறக்க நிலையில் நீண்ட கால வைத்திருந்து, உளவு அமைப்பு  மாற்றிய பின்பே விடுவிக்கப்பட்டதாகவும்.  

அவரின் கருத்துப்படி, ஏனைய இயக்கங்களின் ஒவொரு அடுத்த அசைவுகளையும் புலிகள் அறிந்து வைத்திருந்ததாக சொன்னார்.         

இதை நான் இங்கு சொல்வத்திடற்கு காரணம், புலிகளின் புலனாய்வு அமைப்பு professional  ஆகவே செயற்றப்பட்டது.

அதாவது துல்லியமான தகவல்களை நேரத்திற்குள் தலைமையிடம்  கொண்டு செல்லுதல். தலைமை எடுக்கும் முடிவை செயற்ப்படுத்துவது. 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

உளவுப் பிரிவு எல்லாம் தெரிந்திருந்தும் தலைவர் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியிருந்தும் அவருக்கு கருணா மேல் அதீத நம்பிக்கை இருந்ததும் பலவீனமே. அது தெரிந்தும் தலைவரின் அனுமதி இன்றி தன்னிச்சையாக எதுவும் செய்யாமல் இருந்தது பொட்டரின் விசுவாசம்.

புலிகளின் உளவுப் பிரிவு, புலிகளின் இராணுவ கட்டமைப்பை விட கூடிய காலத்துக்கு முன்பு ஓர் சிறப்பு தேர்ச்சி அடிப்படையிலான (specialised professional)   முறையில் இயங்காத தொடங்கி விட்டது.

டெலோ இல் ஒப்பீட்டளவில் மூத்த உறுப்பினராகவும் அதே நேரத்தில் டெலோ இன்டெலிஜென்ஸ் இல் தொடங்குவதற்கு முயறசித்தவர்களில் ஒருவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.

அவரின் கூறுப் படி, மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு என்பது ஓர் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலே தேவையாக நோக்கப்பட்டது. மற்றும் மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு அறிதல் பயிற்சி என்பது ராணுவ பயிற்சியின் ஓர் அங்கமாகவே வழங்கப்பட்டது, அதுவும் இந்தியா அல்லது லெபனான் மற்றும் பலஸ்தீனின் தொடர்புகளூடாகவே வழங்கப்பட்டது. அதுவும் இந்தியாவின் உளவு பயிற்சி கிந்தியாவின் தேவைகளுக்காக வழங்கப்பட்டது என்பதை ஓர் கணிசமான காலத்தின் பின்பே மற்ற இயக்கங்கள் உணர்த்தின என்றும் சொன்னார். 

புலிகளும் அப்படி படர்ச்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால், இறுதியில் மற்ற இயங்கங்கள் அறிந்தது, புலிகள் அதை விட வேறு ஓர் மிகவும் திறமை வாய்ந்த உளவு பிரிவிடம் பயிட்சி பெற்றார்கள் என்று தாம் வெகு காலம் பின்பு அறிந்ததாகவும், அதை புலிகள் கனகச்சிதமாக மறைத்துவிட்டதாகவும்.  

அந்த டெலோ மூத்த உறுப்பினர் அதை இஸ்ரேல் என்றும், அது mossad என்றும்  கூறினார். அனாலும் புலிகளின் உலவுப் பிரிவின் செயற்பாடுகள், அது மொசாட் மட்டுமல்ல, ஷின் பெட் (இஸ்ரேல் இன் உள்ளக புலனாய்வு துறை) மற்றும் அமான் (இஸ்ரேல் இன்  ராணுவ புலனாய்வு) இடமும் புலிகள் பயிட்சி பெற்றானோரோ என்று தாம்  சந்தேகிப்பதாக சொன்னார்.        

அவர் மேலும், புலிகள் சிக்னல் இன்டெலிஜென்ஸ் இல் பயிட்சி பெற்றவர்கள் (அந்த நேரத்தில்  மிகவும் அருமையும், மிகவும் செலவு கூடியதும்) தனிப்பட்ட காரணங்களிற்காக விலகியதாகவும், அவர்களை புலிகள் அரசியல் பிரிவில் உறக்க நிலையில் நீண்ட கால வைத்திருந்து, உளவு அமைப்பு  மாற்றிய பின்பே விடுவிக்கப்பட்டதாகவும்.          

எனவே, இதை புலிகல் சரியானா தொழில் முறை (PROFESSIONaL )ஆலோசனை பெற்றே செய்திருக்கின்றனர் என்பது தெளிவு.

இதை நான் இங்கு சொல்வத்திடற்கு காரணம், புலிகளின் புலனாய்வு அமைப்பு professional  ஆகவே செயற்றப்பட்டது.

அதாவது துல்லியமான தகவல்களை நேரத்திற்குள் தலைமையிடம்  கொண்டு செல்லுதல். தலைமை எடுக்கும் முடிவை செயற்ப்படுத்துவது. 

 

 

Edited by Kadancha

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

 

ஐயோ அண்ணா மீண்டும் முதலில் இருந்தா ? ....வரலாற்றை திரும்பி பாருங்கோ 

 

வரலாறு???????
எந்தளவிற்கு உண்மை?

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ரதி said:

மாவட்டத்தை உளவு பார்க்க என்று  வந்து, தளபதியை உளவு பார்த்ததால் தான் பிரச்சனை ஆரம்பம் ...நீயும்,நானும் சரி சமனாக இருக்கும் போது என்னில் நம்பிக்கை இல்லாமல் என்னை உளவு பார்க்கிறாயோ என்ட கோபம்,ஈகோ

அக்கோய் ....கும்மான் தாக்குதல்/ கட்டளை தளபதி ...பொட்டர் புலனாய்வுப்பிரிவு தளபதி எல்லோரையும் உளவு பார்ப்பது அவரது Duty 
கும்மானின் நாற்றத்தை முதலிலேயே மோந்து பிடித்தாரா இல்லையா பொட்டர் ....?.அவர் அவரது கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறார்.
புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவின் நாற்றத்தையும் ஈகோ,பீகோ என்று பார்த்து  மோந்து பிடிக்காமல் விட்டிருந்தால் போராட்டம் எப்போதோ காலி  

 • Like 3
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பொட்டம்மானின் மனைவியின் சகோதரரின் மரணத்திற்கு காரணம் கருணா?- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 16

May 26, 2018
main-qimg-992c9f5d302b67783aa420e31cac01 மட்டக்களப்பு தளபதியாக செல்வதற்கு முன்னர் கருணா

பொட்டம்மான்- கருணாவிற்கிடையில் 17 வருட பகை இருந்ததாக குறிப்பிட்டிருந்தோம். விடுதலைப்புலிகள் அமைப்பையே உடைப்பது வரை வளர்ந்து சென்ற அந்த பகையின் பின்னணி என்ன?

விடுதலைப்புலிகள் அமைப்பின் உயர்மட்டத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்த தகவலொன்றை இப்பொழுது உங்களுடன் பகிரப்போகிறோம். கருணா பிரிவு சமயத்தில், கொஞ்சம் அதிகமாக கோபப்பட்ட சில விசமறிந்தவர்கள் இந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களுடன் பேசியிருக்கிறார்கள். அதனால், அரசல்புரசலாக கதை வெளியில் வந்திருந்ததையும் குறிப்பிட்டு விடுகிறோம்.

 

1987 ஒக்ரோபர் மாதம் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரண்டு விடுதலைப்புலிகள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டபோது புலேந்திரன் திருகோணமலை மாவட்ட தளபதி. குமரப்பா மட்டக்களப்பு மாவட்ட தளபதி.

இவர்கள் மரணமானதும், தளபதி வெற்றிடம் ஏற்பட்டது. இந்தியப்படைகளுடன் மோதல் ஏற்படும் தறுவாயிலிருந்த நாட்கள் அவை. உடனடியாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை மீள் ஒழுங்கமைக்க வேண்டுமென பிரபாகரன் நினைத்தார். இதற்காக மிக நம்பிக்கையான ஒருவரை அங்கு அனுப்ப விரும்பினார்.

13_003-300x224.jpg தளபதி வேலவன்

திருகோணமலையில் புலேந்திரனிற்கு அடுத்ததாக சஞ்சய் இருந்தார் (யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் உமைநேசன் என்ற பெயரில் முள்ளியவளை கோட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவர் அவர்தான்) அவரையே திருகோணமலை மாவட்ட தளபதியாக்கினார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்தவர் கருணா. பிரபாகரனும், புலிகளின் மையமும் வடக்கில் இருந்ததால் கிழக்கில் புலிகள்- வடக்கைவிட குறைந்தளவான இராணுவ வளர்ச்சியை பெற்றிருந்தனர்.

 

நினைத்த மாத்திரத்தில் கிழக்கில் உள்ளவர்கள் வடக்கிற்கு வந்துபோகவும் முடியாது. கொஞ்சம் தனித்து, சிறப்பாக இயங்க கூடியவர்கள் கிழக்கிற்கு தளபதியாக இருக்க வேண்டுமென நினைத்த பிரபாகரன், தனது மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த கருணாவை கிழக்கு தளபதியாக நியமிக்க முடிவெடுத்தார். கருணாவை மட்டக்களப்பு தளபதியாக்க வேண்டுமென்று பிரபாகரன் சிலகாலமாக திட்டமிட்டு, அதற்கேற்ப கருணாவை வளர்த்து வந்தார்.

இந்த இடத்தில் இடையீடாக இன்னொரு தகவலையும் குறிப்பிட்டு விட வேண்டும். புலிகள் அமைப்பிற்குள் மாவட்ட தளபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் இரண்டு வகையானவர்கள். முதலாவது, நீண்டகாலமாக களங்களில் தொடர்ந்து செயற்பட்டு, களத்தில் இருப்பவர்கள் மத்தியில் திறமையால் முன்னுக்கு வருபவர்கள். சாள்ஸ் அன்ரனி படையணி தளபதிகள் எல்லோரும் இந்தவகையானவர்கள்தான்.

இன்னொரு வகையலும் தளபதிகள் நியமிக்கப்பட்டனர். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருப்பவர்கள் நினைத்த மாதிரி யுத்தகளங்களிற்கு செல்ல முடியாது. இரகசிய சிவை தடுப்பதும், அடிக்கடி புதியவர்களை அந்த இடத்தில் நியமிக்க முடியாது என்பதும் காரணங்கள்.

தனது மெய்பாதுகாவலர் அணியிலுள்ள திறமையானவர்களை பிரபாகரன், தருணம் வரும்போது முக்கிய இடங்களில் அமர்த்துவார். கருணாவில்தான் இந்த வழக்கம் ஆரம்பித்தது. அதன்பின் சொர்ணம், கடாபி, ஜெயம் என நீண்டு, 1995 இல் தனது பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்த  குமரனை மிக இள வயதில் மணலாறு தளபதியாக்கினார்.

 

பின்னர் பாதுகாப்பு அணி தளபதியாக இருக்காவிட்டாலும் ராஜேஷை 1996 இல் மணலாறு தளபதியாக்கினார். 2000 இன் தொடக்கத்தில் வேலவனை இம்ரான் பாண்டியன் படையணிக்கே தளபதியாக்கினார். இதில் குறிப்பிட வேண்டிய விசயம், இந்த நியமனங்கள் எதுவுமே சோடை போகவில்லை!

மட்டக்களப்பிற்கு சென்ற கருணா, அப்போதைய தளபதி குமரப்பாவிற்கு கீழ் செயற்பட்டார்.

Karuna-1-300x194.jpg மட்டக்களப்பு தளபதியாக செல்வதற்கு முன்னர் கருணா

குமரப்பாவிற்கு அப்பொழுது திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டால் கருணாவால் மாவட்டத்தை தனியாக நடத்த முடியுமா என்ற கேள்வியும் பிரபாகரனிடம் இருந்தது. ஏனெனில் அவர் அப்பொழுதுதான் புலிகளில் இணைந்து நான்கு வருடமாகியிருந்தது. சிறியவர்.

இதேபோலத்தான் திருகோணமலை நிலவரமும் இருந்தது. புலேந்திரனுக்கு பதிலாக சென்ற சஞ்சயும் புதியவர்.

இருவரும் பெரிய நிர்வாகங்களை தனித்து நடத்திய அனுபவம் இல்லாதவர்கள். அவர்களின் கையில் மாவட்ட பொறுப்பை வழங்காமல், பிரபாகரன் வேறொரு ஐடியா போட்டார்.

அப்போது யாழ்ப்பாண தளபதியாக இருந்த பொட்டம்மானை கிழக்கிற்கு அனுப்பினார். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பு பொட்டம்மானுக்கு வழங்கப்பட்டது. அவரின் கீழ் சஞ்சயும், கருணாவும் சிறிதுநாள் செயற்பட்டு அனுபவத்தை பெற்றதும், தனித்து செயற்பட விடலாம் என பிரபாகரன் நினைத்தார்.

பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு கிளம்பினார்.

இதற்கு பின்னர்தான் மட்டக்களப்புடன் பொட்டம்மானிற்கு தொடர்பு ஏற்பட்டது. பொட்டம்மானின் மனைவி மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பது பலர் அறியாதது. அது காதல் திருமணம்.

1987 இல் மட்டக்களப்பிற்கு பொட்டம்மான் வந்தபோது, இந்த காதல்கதை ஆரம்பித்தது. விரைவிலேயே அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு பிரபாகரன் அவ்வளவாக சம்மதிக்கவில்லை.

 

முதலாவது, இந்தியப்படைகளுடன் கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. புலிகளும் கணிசமான இழப்பை சந்தித்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் பொட்டம்மான் திருமணம் முடிப்பது நல்லதல்லவென பிரபாகரன் நினைத்தார். பொட்டம்மானிற்கு திருமணம் முடிக்க அனுமதியளித்தால், ஏனையவர்களிற்கும் திருமணம் முடிக்க அனுமதிக்க வேண்டும். இந்தியப்படைக் காலத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையில், அமைப்பின் இறுக்கமான தன்மையிலிருந்து விலக பிரபாகரன் விரும்பவில்லை. ஓரிரண்டு வருடத்தில் இந்தியப்படையின் பிரச்சனையை முடித்து விட்டு, திருமணம் செய்பவர்கள் செய்யலாமென்பது அவரின் நிலைப்பாடு.

பொட்டம்மான் விடாக்கண்டன். அந்த பெண்ணையே திருமணம் செய்வேன், அதுவும் விரைவில் செய்வேன் என ஒற்றைக்காலில் நின்று திருமணத்தை செய்தார். இதனால்தானோ என்னவோ, புலிகளிற்குள் காதல் திருமணங்களிற்கு அதிக ஆதரவாக பொட்டம்மான் இருந்தார். புலனாய்வுத்துறைக்குள்ளும் காதல் பிரச்சனைகள் வரும். அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட போராளியை அழைத்து தனது காதல் கதையை சொல்வார். காதலுக்கு தானும் ஆதரவானவன், காதல் திருமணத்தின் முன் அதற்காக சகலவழிகளிலும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆலோசனை சொல்வார்.

ஆனால், மாலதி படையணி தளபதி விதுஷா நேர்மாறு. காதலென்றாலே அவருக்கு கண்ணில்காட்டக்கூடாது. மாலதி படையணி பெண்போராளிகளில் யாராவது ஆண் போராளிகளிற்கு காதலோ, விருப்பமோ இருந்து, அந்த தகவல் விதுஷாவின் காதிற்கு சென்றால், அடுத்த கணமே இந்த பெண்போராளியை களமுனைக்கு அனுப்பிவிடுவார். இப்படி களமுனையில் மரணமானவர்கள் பலர்.

பொட்டம்மான் மட்டக்களப்பில் தங்கியிருந்தபடி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மட்டக்களப்பில் செயற்பட்ட கண்ணன் என்ற போராளியுடன் பொட்டம்மானிற்கு நெருக்கம் ஏற்பட்டது. மட்டக்களப்பில் இருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகளில் கண்ணனும் ஒருவர்.

இந்த கண்ணனின் நெருங்கிய உறவு- சகோதரிமுறையானவர்தான் பின்னாளில் பொட்டம்மானின் மனைவியானவர்!

கண்ணன் நீண்டகாலமாக மட்டக்களப்பில் செயற்பட்டு கொண்டிருந்தவர். திறமையான சண்டைக்காரர். அதனால் விரைவிலேயே மாவட்டத்தின் முக்கிய ஸ்ரார்களில் ஒருவராகி விட்டார்.

Image result for பà¯à®à¯à®à¯ à®à®®à¯à®®à®¾à®©à¯

கண்ணனின் திறமைகளில் பொட்டம்மானிற்கு ஈர்ப்பிருந்தது. அவரை தளபதியாக்கலாமென பொட்டம்மான் விரும்பியிருக்கலாம். ஆனால், பிரபாகரனின் தேர்வுக்கு மாறாக எதையும் அவர் கதைத்திருக்கவில்லை. பிரபாகரனால் நியமிக்கப்பட்ட கருணாவும் மட்டக்களப்பிற்கு வந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

 

ஆனால் கண்ணன் மூலமாகவும் சில விசயங்களை பொட்டம்மான் செய்வார். இந்தி இராணுவம் மீதான சில பதுங்கித்தாக்குதல்களை கண்ணனே தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.

இது கருணாவிற்கு பிடிக்கவில்லை. ஒரே உறையில் இரண்டு வாளை வைக்கும் வேலையை பொட்டம்மான் செய்கிறார் என்றுதான் கருணா நினைத்தார்.

பொட்டம்மான் மட்டக்களப்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்த சிறிது நாளிலேயே இந்தியப்படைகளுடனான மோதலில் கண்ணன் மரணமடைந்தார் என்ற அறிவிப்பு மட்டக்களப்பில் இருந்து புலிகளின் தலைமைக்கு போனது.

ஆனால் கண்ணன் இந்தியப்படைகளுடனான மோதலில் மரணமாகவில்லை!

(தொடரும்)

 

http://www.pagetamil.com/6161/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now