Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இப்படியான சமூக பிறழ்வுக்கு சிங்கள அரசும் இராணுவமும் காரணம் இல்லை என  சொல்ல  வருகின்றீகளா?? அல்லது சில பச்சைக்காக ஏங்குகிறீர்களா??
சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் எப்படி செயற்படுகிறார்கள் என தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்  அதற்கான  அத்தாட்சிகளை  சமர்ப்பிக்க எப்போதும் தயங்குவதில்லை. 

பச்சைகளை பிச்சை எடுப்பவர்கள் வரிசையில் நான் இல்லை. அதற்கு ஏங்கிக் கருத்து வைப்பது என்று சொல்லுவது வெறும் கருத்து வறுமையைத்தான் காட்டுகின்றது. அதுவும் ஒரு மட்டுவாக இருந்துகொண்டு!

சிங்கள அரசும் அதன் புலனாய்வாளர்களும் எப்படி இயங்குகின்றார்கள் என்று தெரியாமல் நான் ஒன்றும் எழுதவில்லை. தேசியக்குஞ்சுகளுக்கு இக்கொலையை படையினர் செய்யவில்லையே என்ற பெருங்கவலை  உள்ளது உண்மைதான். அதற்காக படையினர் ஒழுக்கசீலர்கள் என்று அர்த்தமல்ல. 

யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்தபோதும் பொதுமக்களையும் சரணடைந்த போராளிகளையும் படையினரும் அவர்களின் அடிவருடிகளும் எப்படி நடாத்தினர் என்பது ரெக்கோர்ட்களில் நிறையவே உள்ளது. யுத்தத்தின் பின்னரும் படையினரால் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களும் உள்ளனதான். 

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கொலை செய்வது சின்னவிடயம் என்ற மனப்பான்மை போரினால் உருவாகிவிட்டது. அது மாற ஒரு தலைமுறைக்கு மேல் எடுக்கும்.

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுடன் கொலையாளி பேசிய தொலைபேசி ஆதாரமாக இருக்கிறது அதனடிப்படையில் கைதும் நடந்திருக்கிறது, அந்த ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டே ஆகவேண்டும்,

அவை ஒருபக்கமிருக்க  அந்த கொலையாளியை அவர் இதனை செய்திருக்க வாய்ப்பில்லையென்று அங்கிருக்கும் மக்களே எதுவும் சொன்னதாக எந்த செய்திகளும் இதுவரை வரவில்லை.

ஒரு படுபாதக செயலை செய்தவன் தானே குற்றைத்தை ஒப்புக்கொண்டபின்னும், அந்த குற்றத்தை பிறர்பக்கம் திருப்பிவிட நாம் முனைவது ,அல்லது அவர் செய்திருக்க வாய்ப்பில்லை என்று  நிறுவ முற்படுவது, அந்த படுகொலையை செய்தவனைவிட மோசமான மனநிலையாகும்.

அது ஒரு கொலையாளியை/குற்றவாளியை  சமூகமே சேர்ந்து காப்பாற்றுவதற்கு எடுக்கும் எத்தனத்திற்கு ஒப்பானதாகும்.

இந்த சம்பவத்தில் இவன் கெட்டவன் என்பதே செய்தி, அதை மற்றவர்கள் மட்டும் என்ன நல்லவர்களா என்று கேட்கும் நிலையில் நாமிருந்தால் குற்றவாளியை காப்பாற்றுகிறோம் என்றுதான் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/31/2018 at 12:47 PM, நிழலி said:

வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம். 

3 hours ago, colomban said:

கொடியில் போட்ட பாவாடை காணவில்லை என்றால் கூட‌
சிங்கள ராணுவம் என கூறும் மக்களிடம் என்னவென்று கதைப்பது. அதற்காக சிங்கள ராணுவம் ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவரவில்லை.

27 minutes ago, கிருபன் said:

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கவலைக்கு உரிய நிலையாக நெடுக்கரும் போலும் மட்டுமல்ல இப்படி சிந்திப்பவர்கள்: சர்வதேச மட்டத்தில் மற்ற நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து எங்களுக்கு ஆதரவு தேடிய பல பிரதிநிதிகளும் இப்படி நெடுக்கரும் போலும் போலவே தங்கள் வாதங்களை முன்வைத்தார்கள். இதனால் அந்த கொள்கை வகுப்பாளர்கள் எமது பிரதிநிதிகளின் கருத்துகளில் உண்மை பொய் எது என்று தெரியாமல் அனைத்தையும் நம்ப முடியாதவை என்று கருதி இலங்கை அரசாங்கத்தின் கருத்துகளுக்கும் இந்திய அரசின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். பல குண்டுவீச்சுகளில் பலியான மக்களின் படங்களை காட்சிக்காக நடிகர்களை வைத்து எடுத்த படங்கள் என்று சிறி லங்கா அரசு சொல்ல அதை நம்பினார்கள். எங்கள் பிரதிநிதகள்  அரச ஆதரவில்லாத நிலையில் மிக மிக நம்பிக்கைக்கு உரிய விதத்தில் தங்கள் வாதங்களை முன் வைத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் நெடுக்கரும் போலும் போல கருத்துகளை தெரிவித்ததால் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் போய் அவரை பினையில் எடுக்கலமே?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யூட் மற்றும் சிலர்.. தங்களின் சிங்கள பயங்கரவாத அரச கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை.. இந்தக் கொடும் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் சரியாக இனங்காணப்படுவதும் தண்டிக்கப்படுவதும் நிகழ்கிறதா என்பதை கவனிக்கத் தவறுவதோடு.. சிங்கள அராஜக பொலிஸ்படையின் திசை திருப்பல் நடவடிக்கைகள்.. நீதிக்குப் புறம்பான வகையில் நிகழ்கிறதா என்ற சந்தேகம் இருக்கத்தக்க வகையில்.. சம்பவங்கள் நடந்தேறுவதை இனங்காண்பதற்கு அப்பால்.. சமூகத்திற்கு வகுப்பெடுக்க முனைகிறார்கள்.

அதேன் விடுதலைப்புலிகள் நிர்வாக காலத்தில்.. இப்படியான சமூகப் பிறழ்வுகள் வெகுவாகக் குறைந்தும்.. சிங்கள பயங்கரவாத அரச ஆக்கிரமிப்பின் பின் இவை வெகுவாகர அதிகரித்தும் இருக்கக் காரணம் என்ற பிரதான கேள்விக்கு பதில் சொல்ல முற்படாமல்.. அல்லது தேட முற்படாமல்.. நெடுக்கர் மீதும் போல் மீதும் எழுத்தப்படாத கருத்துக்களை உருவகித்து தனிநபர் தாக்குதல் நடத்துவது இவர்களின் சிங்கள விசுவாச விருப்பு வெளியிடல் கொண்டிருக்கும் கால முக்கியத்துவம் தான் இங்கு தெரிகிறது. வேறு நீதி தேடல்.. சொந்த சமூக மக்களின் பாதுகாப்பு நல்வாழ்கை.. என்ற நோக்கம் அறவே இல்லை. ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

இது உண்மையாயின், இந்தக் கொலையை நிச்சயமாக பயங்கரவாத சிங்கள அரசு முகவர்கள் ஆக்க குறைந்ததது சம்பந்தப்பட்டிருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

ஓர் முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் இப்படி சூழ்நிலைத் தடயங்களை, அதுவும் அப்பட்டமாக விட்டுச் சென்றிருப்பாரா?

ஓரிரு நாட்களுக்கு முதல் ஓர் செய்தி வந்தது, மன்னார் நீதிபதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று.

மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்களை தொல்பொருட்கள் என்று பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ் குத்தி முறிந்தற்கு அந்நீதிபதி காட்டமாக பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ் இ கண்டித்து, அந்த எச்சங்களை கொழும்பு கொண்டு செல்லப்படுவதை தடுத்து விட்டார்.

அத்துடன்  அந்த எச்சங்களின்  பகுப்பாய்வை பயங்கரவாத சிங்கள அரசின் போலீஸ்  தென்னிலங்கையில் செய்வதத்திற்கும் காட்டமாக தடுத்துவிட்டார்.

யங்கரவாத சிங்கள அரசோ அல்லது அதன் முகவர்களோ (போலீஸ்/ சொல்வதை நம்பமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  சந்திர மண்டலத்தில் வசிக்கவில்லை ... இவர்களை தெரிந்தவர்கள்,கூட வேலை செய்ப்பவர்கள் இன்னும் கிளிநொச்சியில்  இருக்கிறார்கள் ....சாதாரண சின்ன  விடயத்திற்கேயே  இப்படி  தெரிந்த மாதிரி  வக்காலத்து வாங்கிய நீங்கள் போராடட  காலத்தில் எப்படி எல்லாம் கற்பனை புனைந்து  எழுதி  இருப்பிர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

ஓர் முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் இப்படி சூழ்நிலைத் தடயங்களை, அதுவும் அப்பட்டமாக விட்டுச் சென்றிருப்பாரா?

செய்திகள் இப்படிக் கூறுகின்றன.

“கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என அறிய முடிகிறது”

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவர் புலிகளின் காவல்துறையில் பணி புரிந்தவராம் என்று முகநூல் வாசிகள் சிலர் சொல்லுகின்றனர்!

4 hours ago, MEERA said:

இங்கு சம்பந்தப்பட்டவர் முன்னாள் காவல்துறை உத்தியோகத்தராம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

கைதுசெய்யப்பட்டவர் அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என அறிய முடிகிறது”

இது தான் பயங்கரவாத சிங்கள அரசு போலீஸ் சொல்வதை உதைக்க வைக்கிறது.

குடும்ப பொறுப்பை உடைய நபர் எவ்வளவு தூரம் மறைக்க முயலாமல், தானாகவே வாக்கு மூலம் கொடுத்தது.

வேடிக்கை என்னெவென்றால், போலீஸ் அதை உடனடியாக நம்பியதும். 

59 minutes ago, ரதி said:

இவர்கள்  சந்திர மண்டலத்தில் வசிக்கவில்லை ... இவர்களை தெரிந்தவர்கள்,கூட வேலை செய்ப்பவர்கள் இன்னும் கிளிநொச்சியில்  இருக்கிறார்கள்

இருக்கட்டும். அதில் எதாவது ஒன்று கூட இவர் தானே கொலை செய்தார் என்ற கூற்றை மறுக்கவோ அல்லது நிரூபிக்கவோ பயன்படுமா?

மேலும் சூழ்நிலை தடயங்கள் இவரை நோக்கி சந்தேகத்தை திருப்பலாம். ஆனால்கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு வேறு அழுத்தங்கள் இருந்திருக்கலாம்.  முக்கியமாக தானாகவே வாக்கு மூலம் கொடுத்தவருடன் அந்த பெண்னுடன் இருந்த முறையற்ற தொடர்பை தெரிந்து.  

இப்படியான முறையற்ற தொடர்பை பயங்கரவாத சிங்கள அரசின் புலனாய்வு முகவர்கள் அறிந்து வைத்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள்ளக் காதல் கொலையில் முடிந்துள்ளது. இதற்குள் அரச சிங்கள பயங்கரவாதம் அது இது என்று கூறுவது தவறு.

ஆனால் ஒரு முன்னாள் காவல்துறை உறுப்பினர் இப்படி செய்தது, காலம் செய்த கோலம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஆக்கள் எல்லாம் இங்கு புலம்பெயர் நாடுகளில் செய்யாத திருக்கூத்துகளா...??!

ஏன் கருணா.. என்ற ஊத்தையும் முன்னாள் தானே.

பிரச்சனை அது அல்ல. இந்த முன்னாள்கள் சிலரையும்.. முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழுக்களையும் இப்போது இயக்கிக் கொண்டிருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகளும் அவர்களின் புலனாய்வாளர்களும்.. வால்பிடிகளும்.

அந்த வகையில் தான் சமூக வன்கொடுமைகள்.. மிகச் சாதாரணமாக தமிழர் நிலத்தில் இப்போ எல்லாம் அரங்கேறி வருகின்றன. 

செம்மணிப்படுகொலை காலத்தில் இருந்து இந்தப் படுகொலை வரை.. எல்லாமே சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாதிகளின்.. ஏவல்படைகளின் ஆக்கிரமிப்போடும் அவர்களின் இருப்போடும் தான் சம்பந்தப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இதற்கு யாரிடமாவது மறு விளக்கம் உண்டா..??! இல்லை அல்லவா..?!

எமது சமூகக் கட்டுக்கோப்பை குலைத்து எம் இனத்தை சமூகச் சீரழிவுக்கு உள்ளாக்குவதும் தான் சிங்கள அரச பயங்கரவாதிகள் முன்னெடுக்கும் இன அழிப்பின் நோக்கமாகும். அதற்கு எலும்பு பொறுக்கி.. மற்றும் பலிக்கடா முன்னாள்.. இன்னாள் எல்லாமே பாவிக்கப்படுவது கண்கூடு தானே.  

இருந்தும்... ஏன் வெளிப்படை உண்மைகளை சிலர் திட்டமிட்டு மறைக்க முற்படுகின்றனர்.. குறிப்பாக சிங்கள அரச பயங்கரவாதத்தின் மறைமுக.. நேரடிக் கரங்களின் பங்களிப்பு தமிழர் நிலத்தில் சமூக விரோதச் செயல்கள் பெருகக் காரணமாக இருப்பதை.?

Edited by nedukkalapoovan

இரண்டு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகாத உறவு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது...இதற்கு எதற்கு சிங்களவர்களையோ அல்லது அவர்களின்..அமைப்புகளை காரணம் சொல்லுவான்... 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

பச்சைகளை பிச்சை எடுப்பவர்கள் வரிசையில் நான் இல்லை. அதற்கு ஏங்கிக் கருத்து வைப்பது என்று சொல்லுவது வெறும் கருத்து வறுமையைத்தான் காட்டுகின்றது. அதுவும் ஒரு மட்டுவாக இருந்துகொண்டு!

சிங்கள அரசும் அதன் புலனாய்வாளர்களும் எப்படி இயங்குகின்றார்கள் என்று தெரியாமல் நான் ஒன்றும் எழுதவில்லை. தேசியக்குஞ்சுகளுக்கு இக்கொலையை படையினர் செய்யவில்லையே என்ற பெருங்கவலை  உள்ளது உண்மைதான். அதற்காக படையினர் ஒழுக்கசீலர்கள் என்று அர்த்தமல்ல. 

யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்தபோதும் பொதுமக்களையும் சரணடைந்த போராளிகளையும் படையினரும் அவர்களின் அடிவருடிகளும் எப்படி நடாத்தினர் என்பது ரெக்கோர்ட்களில் நிறையவே உள்ளது. யுத்தத்தின் பின்னரும் படையினரால் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களும் உள்ளனதான். 

ஆனால் போர் முடிந்த பின்னர் தாயகத்தில் நடக்கும் கொலைகள், பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் படையினர் காரணம் என்று நினைக்கும் மனநிலை தமிழர்களிடம் உள்ளது என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

கொலை செய்வது சின்னவிடயம் என்ற மனப்பான்மை போரினால் உருவாகிவிட்டது. அது மாற ஒரு தலைமுறைக்கு மேல் எடுக்கும்.

நான் மட்டுவாக முதலே கருத்தாளராக உள்ளேன். இப்போதும் எனது கருத்தை தெரிவிக்க ஜனநாயக ரீதியாக உரிமை உண்டு என நினைக்கிறேன். சில சம்பவங்கள் உணர்வுகள்(sensitive) மிக்கதாக உள்ளன. அவை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாதிக்கும். இரத்தம் தோய்ந்த கைகளுடன் வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தை குறை கூற சிலர் விடுவதில்லை. இதனை முதல் கருத்தில் நீங்கள் சொல்லாததால்  நீங்களும் அவ்வகையோ என நினைத்து காரசாரமாக பதிலை வைத்தேன்.உங்கள் மனைதை பாதித்து இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். பதில் கருத்தில் உங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி.
அதற்காக வேறு திரிகளில் எல்லாவற்றையும் காவி திரிய தேவை இல்லை என நினைக்கிறேன்.நன்றி.

12 hours ago, nedukkalapoovan said:

முன்னாள் ஆக்கள் எல்லாம் இங்கு புலம்பெயர் நாடுகளில் செய்யாத திருக்கூத்துகளா...??!

ஏன் கருணா.. என்ற ஊத்தையும் முன்னாள் தானே.

பிரச்சனை அது அல்ல. இந்த முன்னாள்கள் சிலரையும்.. முன்னாள்.. இன்னாள் ஒட்டுக்குழுக்களையும் இப்போது இயக்கிக் கொண்டிருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகளும் அவர்களின் புலனாய்வாளர்களும்.. வால்பிடிகளும்.

அடிடா சக்கை அடிடா சக்கை

பௌத்த பேரினவாத சிங்கள அரசு மீது பழியைப் போட்டுட்டு

நாம தப்பிட்டமாம்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

ஒரு கள்ளக் காதல் கொலையில் முடிந்துள்ளது. இதற்குள் அரச சிங்கள பயங்கரவாதம் அது இது என்று கூறுவது தவறு.

13 hours ago, அபராஜிதன் said:

இரண்டு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகாத உறவு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது...இதற்கு எதற்கு சிங்களவர்களையோ அல்லது அவர்களின்..அமைப்புகளை காரணம் சொல்லுவான்... 

இந்த செய்திக்கு உரிய நியாயமான விமர்சனமே இவைதான், அதைவிடுத்து வேறு திசை நோக்கி நாம் கருத்துக்கள் சொல்லி மல்லுக்கட்டுவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கமுடியும்,

ஒன்று உண்மை குற்றவாளியை செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க உதவுவது, மற்றையது ஏற்கனவே சொன்ன எமது கருத்தை விட்டுகொடுக்ககூடாது என்ற  கெளரவ பிரச்சனை.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 12:39 AM, nunavilan said:

இப்படியான சமூக பிறழ்வுக்கு சிங்கள அரசும் இராணுவமும் காரணம் இல்லை என  சொல்ல  வருகின்றீகளா?? அல்லது சில பச்சைக்காக ஏங்குகிறீர்களா??
சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் எப்படி செயற்படுகிறார்கள் என தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்  அதற்கான  அத்தாட்சிகளை  சமர்ப்பிக்க எப்போதும் தயங்குவதில்லை. 

இது கிருபனுக்கு விடப்பட்ட கேள்வியாக இருந்தாலும் ,நானும் ஒன்று நுணாவிலானிடம் கேட்க தோன்றுகிறது..

தப்பு பண்ணியது ஒரு தமிழன், தப்புக்கு இசைந்தது ஒரு தமிழிச்சி..

இரு எம்மின ஆணும் பெண்ணும் சேர்ந்து பண்ணிய உடல் சுக தவறுக்கு  எப்படி இலங்கை ராணுவம் காரணமாகுது?

உடனடியாக உணர்ச்சிவசபடாமல்  நிதானமாக  கருத்து வெளியிடும் நுணாவிலானிடமிருந்து இது எதிர்பார்க்ககூடிய ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஒரு திருட்டோ, கொலையோ நடந்தால் அந்த ஊரிலுள்ள, அதாவது குற்றங்கள் செய்து அதற்கான தண்டனையும் முடிந்து வந்து வாழும் மனிதர்களைக் காவல்துறை முதலில் சந்தேகிப்பது இயல்பு. அது போன்றதே தமிழ் பகுதிகளில் ஏதாவது குற்றம் நடைபெற்றாலும், தமிழர்களுடைய வாழ்வைச் சிதைக்க முற்படும் சிங்கள அரசின் பாதுகாப்புப் படைகளை மக்கள் முதலில் சந்தேகிப்பதும் இயல்பானதே.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

அப்போ இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால்...முதலில்  நமது சமூகத்தில் உள்ளவர்கள் ஒரு பாலியல் படுகொலை பாதகத்தில் சம்பந்தபடமாட்டார்கள் என்ற முடிவுக்கு வரவேண்டும் என்கிறீர்களா பாஞ்ச் ஐயா?

On 9/1/2018 at 1:17 AM, நிழலி said:

வழக்கம் போல

On 9/1/2018 at 1:17 AM, நிழலி said:

நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம்.

இதே பாணியில் போலிலும் (நெடுக்கரிலும் தான்) குறை கண்டுபிடிக்க பலர் விழுந்தடித்து முயலுவது தெரிகிறது. அவர்களிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிழலியின் பலவீனம், அரைகுறை மனப்பாண்மை இதில் மிகமிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது!

மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்கள் மெல்ல ஏதோ கிடைத்துள்ளது என்பதை மறுக்கவும் இல்லை, எனது பதிவு தவறாக தெரிவதையும் மறுக்கவில்லை.

அப்பகுதியிலுள்ள 10 க்கு மேற்பட்டவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், இறுதியாக நேற்று அப்பகுதியில் அறிமுகமான முச்சக்கர வண்டியின் சாரதிகளிடமிருந்தும் பெற்ற தகவலின் அடிப்படையில், இந்தக் கொலையில் முழுமையான உண்மைகள் வெளிவரவில்லை! இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை. இதன் பின்னணியில் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் தான் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சம்பந்தப்பட்ட இருவரும் போராளிகளாக இருந்து, 2011 இன் பின்னர் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளின் வலையில் வீழ்ந்தவர்கள் / வீழ்த்தப்பட்டவர்கள். அதன் பலனாக இருவரும் பயங்கரவாதி கோத்தபாயவினால் பினாமிகள் உதவியுடன் நடத்தப்படும் அவன்கார்ட் செக்யூரிட்டி நிறுவனத்தில் இணைக்கப்பட்டு சிங்கள-பௌத்த புலனாய்வுப் பயங்கரவாதிகளின் கையாட்களாக இயங்கியவர்கள். அந்தப் பெண் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்ட்டவர். அவர்களின் நட்பை துண்டிக்க / வேலையை விட மறுத்தமையால் கணவர் பிரிந்துவிட்டார். அந்தப் பின்னணியில் தான் கொலைசெய்த நபரும் கூடுதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னரும் அந்தப் பெண்  சிங்கள-பௌத்த புலனாய்வுப் பயங்கரவாதிகளின் நெருங்கிய நட்பை பேணி வந்துள்ளார். இந்தப் பின்னணியில் உருவான கருவுக்கு யார் பொறுப்பு என்ற பிரச்சினை சில மாதங்களாக நிலவிவந்துள்ளது. இந்த சூழலில் தான் அவரது கொலை இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கையான இடத்தில் நவீன முறையில் சிசுவின் மரபணுக்களை சோதனை செய்தால் உண்மைகள் வெளிவரும். ஆனால் இலங்கையில் இயங்கும் மரபணு சோதனை நிறுவனமான ஜீன் டெக் ஒரு சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதியின் நெருங்கின உறவினர்களால் நடாத்தப்படுவதால் அதை நம்பமுடியாது. அந்த நிறுவனம் வித்தியாவின் கொலையிலும் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளின் நண்பர்களைக் காப்பாற்ற குழப்பமான அறிக்கைகளை வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.

தமிழர் மண்ணில் இடம்பெறும் 99% ஆன சமூகவிரோத செயல்களின் பின்னணியில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் அனைத்து இயந்திரங்களும் உள்ளன என்ற உண்மையை அவர்களின் அடிவருடிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரும் பல்டி அடிக்க பார்க்கிரார் முடியல் இருந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் சிலர் இன்னமும் உத்தமர்கள் இல்லையப்பா யுத்த காலங்களில் ராணுவத்தை விடவும் கொலைசெய்து அதை ராணுவத்தின் மீது போட்ட சம்பவங்களும்     இருக்கு     இதானால் ராணுவத்துக்கு வக்காளத்து வாங்க வில்லை தாங்கள் தப்பிக்க தமிழர்களில் சிலர் எதையும் செய்ய முன்வருவார்கள் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, போல் said:

அப்பகுதியிலுள்ள 10 க்கு மேற்பட்டவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையிலும், இறுதியாக நேற்று அப்பகுதியில் அறிமுகமான முச்சக்கர வண்டியின் சாரதிகளிடமிருந்தும் பெற்ற தகவலின் அடிப்படையில், இந்தக் கொலையில் முழுமையான உண்மைகள் வெளிவரவில்லை! இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை. இதன் பின்னணியில் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் தான் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்போ இந்த கொலையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று உங்கள் கருத்தை வைத்து முடிவுக்கு வரலாமா போல்?

1 minute ago, valavan said:

அப்போ இந்த கொலையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று உங்கள் கருத்தை வைத்து முடிவுக்கு வரலாமா போல்?

இல்லை!

நடுநிலையானவர்களால் நேர்மையான விசாரணையின் பின்னரே முடிவுக்கு வரலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

இல்லை!

அப்போ நீங்கள் சொன்ன ’’’இக்கொலையில் கைதுசெய்யப்பட்டவர்  மட்டும் சம்பந்தப்படவில்லை.  என்பதன் அர்த்தம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.