Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய

Karu-jayasoorya-720x450.png

உலகில் அழிந்துவரும்  இனங்களில்,  சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரநாயக்க பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பலமுறை ஊடகங்களில் தெரியப்படுத்தினேன். ஆனாலும் ஊடகங்கள் இவைகளில் கவனம் செலுத்தவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் சிங்கள இனம் அழிவடைவதனை பாதுகாக்கும் பொருட்டு, மகாநாயக்க தேரர்களே அதிக கவனம் செலுத்த வேண்டுமென கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/அழிந்துவரும்-இனங்களில்-ம/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் அழிவடைவதற்கான ஆதாரஙகள் எவை??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சிங்களம் அழிவடைவதற்கான ஆதாரஙகள் எவை??

வேறு  ஒரு நாட்டிலும் இல்லாததால், ஒரு பேரழிவில் சிங்களவர் அழிந்தால் கதை முடிந்தது.

நாங்கள் ... ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பது வருடங்களுக்கு முன்னதாக ஆராய்ந்த விடயத்தை

இப்போது தூசு தட்டி தேரர்களை உசுப்பேத்தல் செய்வது ஏனோ

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சிங்களம் அழிவடைவதற்கான ஆதாரங்கள் எவை??

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இலங்கையில் தமிழினத்தைச் சிங்களம் அழிக்க முனைவது உலகறிந்த விடயம். தமிழரை நாங்கள் அழித்தால் எங்களுக்கும் அந்த அழிவு வரும் என்ற இயற்கையின் நியதியை இப்போதுதான் சபாநாயகர் கரு யெயசூரியா உற்றுப் படித்து அறிந்துள்ளார்போல் தெரிகிறது.

இலங்கையில் தமிழ் அழிந்தாலும், உலகின் பல நாடுகளில் வாழக்கூடிய தகுதியை அது கொண்டுள்ளது. சிங்களம்! இலங்கை என்ற ஒரு நாட்டில்மட்டும் அழிந்தாலே, அது முற்றிலுமாக உலகிலிருந்தே அழிந்ததுதான்.!! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வேறு  ஒரு நாட்டிலும் இல்லாததால், ஒரு பேரழிவில் சிங்களவர் அழிந்தால் கதை முடிந்தது.

நாங்கள் ... ?

ஈழத்தமிழர் வேறு எந்த நாட்டில் பூர்விகமாக ஆக இருக்கிறோம்?

41 minutes ago, Paanch said:

இலங்கையில் தமிழ் அழிந்தாலும், உலகின் பல நாடுகளில் வாழக்கூடிய தகுதியை அது கொண்டுள்ளது

தமிழ் வாழும். அனால் ஈழத்தமிழ் வாழாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் விடுதலைப்புலிகளை பாராட்ட வேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழினத்தை இன அழிப்புச் செய்து.. அதனை தூய சிங்களத் தீவாக்க சிங்களவர்கள் தீட்டிய திட்டத்தில் இருந்து.... தமிழ் மக்கள்.. வெளிநாடுகளுக்கு புலம்பெயரவும்.. பாதுக்காப்புப் பெறவும்.. புலம்பெயர் நாடுகளில்.. தமிழ் அகதிகளை ஒருங்கிணைத்து.. தமிழர் அடையாளங்களை பேணவும்.. விடுதலைப்புலிகள் ஆற்றிய இனக்கடமை என்பது மிகப் பெரிய இனப்பாதுகாப்பு விடயம் என்பதை பலர் மறந்து விட்டார்கள். 

புலிகள் தமிழர் தாயகத்துக்கு வெளியிலும் தமிழ் மக்களின் இன அடையாளத்தை தக்க வைக்க உதவி உள்ளனர் என்பது மிக முக்கிய விடயமாகும்.

இது கூட விடுதலைப்புலிகளை அழிக்க பல அந்நிய சக்திகளுக்கு தேவையாக இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய

......

ஆகையால் சிங்கள இனம் அழிவடைவதனை பாதுகாக்கும் பொருட்டு, மகாநாயக்க தேரர்களே அதிக கவனம் செலுத்த வேண்டுமென கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/அழிந்துவரும்-இனங்களில்-ம/

அப்போ 'பாய்கள்' தொழில் நுட்பம்தானா? :( உலகில் பெருகி வருபவர்கள் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

அப்போ 'பாய்கள்' தொழில் நுட்பம்தானா? :( உலகில் பெருகி வருபவர்கள் அவர்களே.

அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். எந்த சிங்கனும் கிட்டவும் நெருங்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

5 கிலோ பச்சரிசி , ஆப்பிள் ஜூஸ் , ஆரோஞ்சு ஜூஸ்  கொடுக்கும் நல்ல திட்டமா கொண்டு வாங்கோ.. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கிருபன் said:

அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய

Karu-jayasoorya-720x450.png

தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அரசியல் வாதிகளுக்கு தன் இனத்தின் மீது அக்கறையுள்ளது நம்ம ஆட்களுக்கு இல்லையே (  தமிழ் அரசியல் வாதியும் சரி மக்களும் சரி) 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வாத்தியார் said:

நாற்பது வருடங்களுக்கு முன்னதாக ஆராய்ந்த விடயத்தை

இப்போது தூசு தட்டி தேரர்களை உசுப்பேத்தல் செய்வது ஏனோ

ஆறு பிள்ளை பெத்து அதுகளுக்கு விடியல்காலமை சாப்பாட்டுக்கு பாண் வேண்டவே சொத்தை எழுதி குடுக்கணும் அப்படி சொறிலங்கா விலைவாசி ஒரு பிள்ளை இரண்டு பிள்ளை யோடு நிப்பாட்டுகிரார்கள் இப்போதைய சிங்களவர்கள் அதை பார்த்து பயபுள்ளை அழுவுது. தமிழனை அழிப்பது ஒன்றே உயிர்மூச்சு என்பவர்களுக்கு கிடைத்த பரிசு தமிழர்க்கு எதிரான இனவாதம் தன் பிடரிக்கு சேதம் என்பதை இன்னும் சிங்களம் உணரவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் பாணுக்கு கொடுக்காட்டிலும், அல்லா கொடுக்கிறார் தானே, எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

புத்தர் பாணுக்கு கொடுக்காட்டிலும், அல்லா கொடுக்கிறார் தானே, எப்படி?

அதுகளுக்கு கள்ள மாட்டை வத்தல் போட்டு குடும்பமாய் ஒரு மாதத்துக்கும் தாக்கு பிடிக்கும்கள் .புத்தன் நாயை கூட கொல்ல விடமாட்டார் பாஸ் ஆனால் இனி சிங்களவருக்கு இந்த அரபிகளால் பிரச்சனை வரும் அப்போது பொன்னம்பலம் இராமநாதனின்  ஆவி கூட அவர்கள் சார்பாக செல்லாது .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் அழியவில்லை.  நன்றாக வளர்கிறது.  புத்தளம், நிகம்பு போன்றவற்றில் வாழ்ந்த தமிழர்கள் இப்பொர்ழுது சிங்களவர்களாக வாழ்கிறார்கள். ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளையின் பாட்டான்மார்கள் தமிழர்கள்.  தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களப்பாடசாலைகள் அமைத்து தமிழர்கள் சிங்களவர்களாக மாறி தமிழர்களுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கைக்கு முதலில் வந்த சிங்களவன் விஜயன் எங்கிறது மகாவம்சம். விஜனையும் அவனது தோழர்களையும் திருமணம் செய்யவந்தவர்கள் பாண்டிய தேசத்து இளவரசியும் 700 தோழிகளும்.  இவர்கள் தமிழர்கள். ஆனால் அவர்களுக்குப் பிறந்தவர்கள் சிங்களவர்கள். அனுரதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இப்பொழுது அம்பாறை, திருமலை என்ற இடங்களில் சிறுபான்மையாக இருக்கிறான் தமிழன். வெளினாடுகளுக்கு சென்றவர்களின் 3ம் ,4ம் தலைமுறையுடன் தமிழர்களின் அடையாளங்கள் அழியப்போகின்றது. எண்சோதிட மாயையிலும் தமிழர்கள் வேற்றுமொழிப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். கிறிஸ்தவ தமிழர்கள் ஆங்கிலப் பெயர்களுடன் இருக்கிறார்கள். சிங்களவன் தனது அடையாளத்தினை மாற்றாமல் தமிழனைக் கொல்லுவேன் என்று சிங்களவனாக இருக்கிறான். அழியப்போகிறது எமது இனம். வலிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

https://en.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka#Overview

இதன் படி, 1789 இல்,     1,200,000, 1789 -  1827, 25% ஆல் குறைந்த சனத்தொகை, 889,584    ஆகி, எப்படி அடுத்த 50 ஆண்டுகளில் (1827 - 1871) 125% ஆல் அதிகரித்து, 2,400,380 இ அடைந்தது.

சரி இது மலையகத் தமிழர் வருகை என்று வைத்தால், அவர்களின் சனத்தொகையும் ஏறத்தாழ 800, 000, 1950 - 1960. மலையாகத் தமிழர்  1950 - 1960 சனத்தொகை, ஏறத்தாழ கடைசி 10,000 வரைக்கும் சரியாகவே இருக்க சாத்தியக் கூறுகள் அதிகம். ஏனெனில், மலையகத் தமிழர்களில், 500,000, கிந்தியா கழுத்தறுத்தது, 300,000 சொறி சிங்களம் கழுத்தறுத்து.

அதனால், 1827 - 1871 இல், ஏறத்தாழ 1, 500,000 (1.5 மில்லியன் ஆல்) அதிகரித்த சனத்தொகையில் பெரும் பகுதி, தமிழ், தெலுங்கு, மலையாள பூர்விகமாயினும், சிங்கள சனத்தொகைக்குள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். 
  
இப்படி நடந்தது, முதல் தடவை அல்ல.

பூர்விக சினேகா சந்தொகையும், ஈழத்தமிழர் சனத்தொகையும், ஓர் 10 - 15% வேறுபாடே.

இந்த சிங்கள சனத்தொகை வளர்ச்சி, 7-8 ம் நூற்றாண்டுகளில் இருந்து  இடம்பெற்றாதாயினும் ( சிங்கள மொழியின் தோற்றம் 6-7 ம் நூற்றாண்டு) , பாரிய சிங்கள  சனத்தொகை வளர்ச்சி போத்துக்கேயர் வருகையுடன் ஆரம்பமம். வாசனை, மற்றும் பணப் பயிர் செய்கைக்கு வேண்டிய தொழிலார்கள் பெருமளவில் தட்றபோதையா தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்டதே சிங்களவர்களின் சனத்தொகையை பெரியளவில் அதிகரித்தது. 

காலனித்துவ சக்திகளால் கொண்டுவரப்பட்ட அந்த மக்கள், அன்றைய தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருந்துளார்கள். 

இதற்கு, ஈழத்து தமிழரின் இறுக்கமான அன்றைய சாதி சமுதாய அமைப்பும் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில், ஈழத்தமிழ் சமூகத்துக்குள் சங்கமாக்குவதிலும், சிங்கள சமூகத்தில் சங்கமாகுவது அந்த மக்களுக்கு ஒப்பீட்டளவில்  இலகுவானதாக இருந்தது.

சிங்கள சாதி கட்டமைப்பில், டேமேல கட்டற என்றொரு உப பிரிவு சாதி உண்டு. இது, காலதிகாலமாக இலங்கைக்கு கூலிப்படைகளாக வந்த போர் வீரர்களின் பரம்பரை ஆகும்.

இங்கே சாதியை வரலாற்றின் சுவடுகளை அறிவதற்கே.

ஓர் 150 - 200 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சனத்தொகை மாற்றமும் ஈழத்தமிழரை தாற்றபோது கூட பாதிப்பதாக உள்ளது.

அதனால், சனத்தொகை மற்றும் இனவிருத்தி அல்லது அழிவு என்பது நூற்றாண்டுகள் காலா அடிப்படையில் நோக்கப்படவேண்டும்.

சிங்கள சனத்தொகை இன்னும் வளர்வதத்திற்கே இடமுண்டு. ஏனெனில், மலையாகத் தமிழர்களில் கணிசமான பங்கு சிங்கள மயப்படுகிறது, அதற்கான வாய்ப்புகளும் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கந்தப்பு said:

சிங்களம் அழியவில்லை.  நன்றாக வளர்கிறது.  புத்தளம், நிகம்பு போன்றவற்றில் வாழ்ந்த தமிழர்கள் இப்பொர்ழுது சிங்களவர்களாக வாழ்கிறார்கள். ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளையின் பாட்டான்மார்கள் தமிழர்கள்.  தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களப்பாடசாலைகள் அமைத்து தமிழர்கள் சிங்களவர்களாக மாறி தமிழர்களுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கைக்கு முதலில் வந்த சிங்களவன் விஜயன் எங்கிறது மகாவம்சம். விஜனையும் அவனது தோழர்களையும் திருமணம் செய்யவந்தவர்கள் பாண்டிய தேசத்து இளவரசியும் 700 தோழிகளும்.  இவர்கள் தமிழர்கள். ஆனால் அவர்களுக்குப் பிறந்தவர்கள் சிங்களவர்கள். அனுரதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இப்பொழுது அம்பாறை, திருமலை என்ற இடங்களில் சிறுபான்மையாக இருக்கிறான் தமிழன். வெளினாடுகளுக்கு சென்றவர்களின் 3ம் ,4ம் தலைமுறையுடன் தமிழர்களின் அடையாளங்கள் அழியப்போகின்றது. எண்சோதிட மாயையிலும் தமிழர்கள் வேற்றுமொழிப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். கிறிஸ்தவ தமிழர்கள் ஆங்கிலப் பெயர்களுடன் இருக்கிறார்கள். சிங்களவன் தனது அடையாளத்தினை மாற்றாமல் தமிழனைக் கொல்லுவேன் என்று சிங்களவனாக இருக்கிறான். அழியப்போகிறது எமது இனம். வலிக்கிறது.

இலங்கையில்    சிங்கள இனம்  எவ்வாறு. உருவானது.  என்று.  தெளிவாக.   எழுதி.   இருக்கிறீர்கள்.   இவ்வாறே.  தமிழரும்.   பூர்வீக.  காலத்தில்.  கரப்பா மஜொகென்ஞதாரோ. மக்களில் இருந்து உருவானார்கள். மற்ற இனங்களை உள்வாங்கி சிங்கள இனம். இலங்கையில் வ்ளர்ந்து வருவது போல.  தமிழ் இனம். தமிழ்.   நாட்டில்.   வளர்ந்து.   வருகிறது.

உங்கள் பெயர். கந்தப்பு என்பதில்.  உள்ள க்ந்தன். என்ற பெயர்.  ஸ்கந்தா.  என்ற.   பெயரில்.  இருந்து.  வந்தது.  ஸ்கந்தா.  வடமொழி.   பெயர்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

வெளியானது அறிக்கை... நாட்டில் சனத்தொகை வளர்ச்சி வருடாந்தம் 3 இலட்சத்தினால் வீழ்ச்சி.

Madawala News
Untitled.png

சிங்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முஸ்லிம்களால் வில்லைகள் பயன்படுத்தப்பட்டு

வருவதான சர்ச்சை கடந்தகாலங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. அது காலி, அம்பாறையில் பாரிய அழிவுகளுக்கு வழிவகுத் தது.

பின்னர் அதுகுறித்த ஆய்வுக ளுடன் அப்போலிக் கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், அண்மையில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் பொதுவாக மக்கள் பெருக்கம் வீழ்ச்சிகண்டு வருவதாக தகவல் வெளியாகி யிருக்கிறது.  -மடவளை நியூஸ் -

விஞ்ஞான ரீதியாக ஆய்வினை மேற்கொண்டே மேற்படி பொறுப்புவாய்ந்த தரவுகளை மத்தியவங்கி வெளியிட்டுள் ளது.

சிங்கள இனம் மட்டுமல்ல, பொதுவாக நாட்டிலுள்ள சகல இனமக்களின் வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்து வருவதையே அவ்வறிக்கை பகிரங்கப்படுத் தியுள்ளது.

இலங்கையின் சனப்பெருக் கத்தில் ஆண்டுதோறும் மூன்று இலட்சம் அளவிலான மக்கள் தொகையினர் அருகி வருவதாக திடுக்கிடும் தகவலை மத்திய வங்கி தந்திருக்கிறது.

பிறப்பு வீதம் இப்படிக் கீழிறங்கிவரும் நிலையில் இறப்பு வீதமும் வருடம் தோறும் அதிகரித்து வரும் மற்றொரு அபாய அறிவிப்பையும் ஆய்வு வெளியிட்டிருக்கிறது.

மத்தியவங்கியின் 2017 ஆம் ஆண்டறிக்கையிலேயே மேற்படி தகவல்கள் தரப்பட்டுள் என, 2016 ஆம் ஆண்டில் நாட்டின் பிறப்பு வீதம் 1000 பேருக்கு . 15.6 என்ற விகிதத்தில் இருந்துள் ளது. அது 2017 ஆம் ஆண்டில் 1000 பேருக்கு 15.2 என்ற விகி தத்தில் குறைந்துள்ளது. பிறப்பு வீதம் இவ்வாறிருக்கையில் இறப்பு வீதமும் இதற்கு சமாந்தர் மாக அதிகரித்துச் செல்வதையே தரவுகள் காட்டுகின்றன, 2016 இல் 1000 பேருக்கு 6.2 என்ற விகிதத்திலிருந்த இறப்பு வீதம் 2017 இல் 6.5 என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது.

பிறப்பு வீதம் குறைந்தும் இறப்பு வீதம் உயர்ந்தும் போவ தற்கான காரணத்தைக் கண்ட றிவதற்கு குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உதவியை நாடி யபோது, இலங்கையின் பிறப்பு வீதத்தில் சில தசாப்தங்களாகவே வீழ்ச்சிகண்டு வருவதாக அங் குள்ள உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்,

1976 ஆம் ஆண்டி லிருந்தே இவ்வீழ்ச்சி நிகழ்ந்து  வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு யுத்தம் நடைபெற் றுக்கொண்டிருந்த 30 வருட காலத்தில், பிறப்பு, இறப்புக் கணக்கெடுப்பு ஒழுங்காக இடம்பெறவில்லை.

ஆனால் யுத்தத்தின் பின்னரான அண்மைக் காலத்தில் முறையான கணக்கெ டுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளி யிட்டார்,  1964 ஆம் ஆண்டில் 8.8 வீதமாக இருந்த இலங்கையின் மரணவீதம் சில வருடங்களுக்கு முன்புவரை அதே அளவில் இருந்து 5.3 என்ற வீதத்தில் குறைவு கண்டிருந்தது. ஆனால், அது இப்போது 6.5 வீதமாக உயர்வடைந்து வருவதைக் காண முடிகிறது.

பொதுவாக உலகளவிலேயே பிறப்பு வீதம் குறைந்து வருவதாக குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிவியல் துறையில் வளர்ச்சி யடைந்த குடும்பங்கள் குடும் பக்கட்டுப்பாட்டினை பின் பற்றியமையே பிறப்பு வீதம் வீழ்ச்சியடையக் காரணமாகும். 1960 களிலிருந்தே எமது நாடும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இதே காலப்பகுதியில் குடும்பக் கட்டுப்பாட்டு முறை யினை மேற்கொண்ட நாடுக . ளுடன் ஒப்பிடுகையில், எமது நாடு இலக்கினைத் துரிதமாக வெற்றிகொண்டு முன்னணி வகித்தது.

இது விடயமாக முன் னெடுக்கப்பட்ட பிரசாரப்பணிகள் வெற்றிகரமாக அமைந்ததுடன், மக்களிடையே கல்வித்துறை வளர்ச்சியும் ஆசிய நாடுகளி டையே எமது நாடு உயர்ந்து காணப்பட்டதாலும் இத்திட்டம் வெற்றியடைந்தது. அத்துடன் ஆசிய வலய நாடுகள் மத்தியில் பொருளாதாரத்திலும் எமது நாடு ஓரளவு முன்னுக்கு இருப் பதாலும் குடும்பக்கட்டுப்பாடு இங்கு வெற்றியளித்துள்ளது. இதனாலேயே இங்கு பிறப்பு வீதம் குறைந்துள்ளது.

மத்தியவங்கி இவற்றுக்குப் புறம்பாக இன்னும் தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு இலங். கையின் படிப்பறிவு வீதம் 93.2% ஆக இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் அது 93, 1% வீதமாக குறைந்துள்ளது. உடல் வலு பங்களிப்பில் 2016 இல் ஆண்களின் ஈடுபாடு 75, 1% வீதமும் 2017 இல் அது 74.5% வீதமாகவும் இழிவடைந்துள்ளது. அதேவேளை 2016 இல் இருந்த தைவிட 2017 இல் பெண்களின் மெய்வலு பங்களிப்பு 1.3% வீதத்தால் உயர்ந்துள்ளது. இது பெண்கள் வீடுகளில் தங்காது வேலைக்கு சென்றுள்ளமையின் அதிகரிப்பையே காட்டுகிறது. இதுவும் பிறப்புவீதம் குறையக் காரணமாக அமைந்துள்ளது.

இது விடயமாக கொழும்பு, பல்கலைக்கழக மக்கள் வைத் திய விஞ்ஞானத்துறை பிரிவின் பேராசிரியர் இந்ரலால் த சில்வா கருத்துத் தெரிவிக்கையில் கூறிய தாவது,

"வயதாவோர் வீதம் அதிக ரிக்கும்போது மரண வீதமும் அதிகரிக்கவே செய்கிறது.

இந்த அதிகரிப்பு வருடா வருடம் மரண வீதத்திலும் அதிகரிப்பை உண்டு பண்ணிவிடுகிறது. மரண வீதம் உயர்வடைய வயதே றுவோர் தொகை அதிகரிப்பே காரணமன்றி சுகாதாரத்துறையின் பலவீனம் என்பது காரணமல்ல. முதுமையடைவது அதிகரிக் கவும் பிறப்பு வீதம் குறையவும் பல காரணங்கள் உள்ளன. ஆண்களைவிடப் பெண்களின் தொகை அதிகரிப்பு, பெண்கள் மணம் முடிக்கும் வயது கூடுவது. போன்ற காரணங்களை பேராசி ரியர் இந்ரலால் த சில்வா முன் வைக்கிறார்.

இந்நிலையில், இலங்கையில் இனப்பெருக்க வீதம் தாழ்ந்து போவதற்கு குடும்பக்கட்டுப் பாட்டு முறைமை மீது மட்டும் பழியைச் சுமத்துவது தவறு. என்று இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் வைத்தியப் பணிப் பாளர் ஹரிச்சந்திர யகந்தலாவ கூறினார். அவர் மேலும் தெரி விக்கையில், "1960 ஆம் ஆண்டு காலப்ப குதியில் இலங்கையில் இருந்த சூழ்நிலையில் அப்போது குடும்பத்திட்டமிடல் அவசியப் பட்டிருந்தது. எமது நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் எல்லாவற்றிலும் போல அத் தேவை அவசியப்பட்டது.

இது விடயமாக ஒருசில நாடுகள் கடும் சட்டதிட்டங்களை கூட பிர. யோகித்திருந்தன. மக்கள் அறிவு வளர்ச்சியடைந்தபோது குடும்பத் திட்டமிடலை அவர்களே வலிந்து மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குழந்தைப் பிறப்புக்களின் இடைவெளியை அதிகரித்துக் கொள்ளவும் தலைப் பட்டனர்.

தற்போது இலங்கையில் 65% வீதமானோர் எந்த வகையி லேனும் குடும்பத்திட்டத்தைக் கையாண்டு வரும் நிலையிலுள் ளார்கள். இதற்குப் புறம்பாக 15% வீதமானோர் குழந்தைப் பேறின்றியும் வாடும் நிலையும் உள்ளது. இவற்றுக்கிடையே நாம் மறுக்கவும் மறக்கவும் முடியாத மிகவும் குறிப்பிடத்தக்க காரணியொன்றுள்ளது.

அதாவது, பிள்ளைகள் பெறக்கூடிய இளம் வயதுப் பெண்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொகையினர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிறப்பு வீதம் குறைய இதுவும் பிரதான காரணமெனலாம்.

மேலும் குடும்பத்திட்ட முறைமையை இலங்கையிலுள்ள அனைத்து இனத்தவர்களும் பின்பற்றவே செய்கின்றனர். இதில் சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் என்று. விதிவிலக்கின்றி கடைப்பிடித்து வருவதும் மறுப்பதற்கில்லை " என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: ஞாயிறு லக்பிம

https://www.madawalaenews.com/2018/05/mh.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/20/2018 at 12:13 PM, தனிக்காட்டு ராஜா said:

அந்த அரசியல் வாதிகளுக்கு தன் இனத்தின் மீது அக்கறையுள்ளது நம்ம ஆட்களுக்கு இல்லையே (  தமிழ் அரசியல் வாதியும் சரி மக்களும் சரி) 

ஒரு சில இனங்களை கட்டுப்படுத்த அல்லது வரிசைக்கிரமமாக்க தடியும் சட்டாம்பிகளுமே தேவையானது.
மேடைப்பேச்சுக்கள் மூலம் அல்லது விழிப்புணர்வு மூலம் மந்தைகளை கட்டியாளுவது இனிவரும் காலங்களில் கடினம்.
இல்லையேல் வலுவான சட்டங்களை அமைக்கக்கூடிய ஒரு தமிழ் அரசியல்வாதி நமக்கு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஒரு சில இனங்களை கட்டுப்படுத்த அல்லது வரிசைக்கிரமமாக்க தடியும் சட்டாம்பிகளுமே தேவையானது.
மேடைப்பேச்சுக்கள் மூலம் அல்லது விழிப்புணர்வு மூலம் மந்தைகளை கட்டியாளுவது இனிவரும் காலங்களில் கடினம்.
இல்லையேல் வலுவான சட்டங்களை அமைக்கக்கூடிய ஒரு தமிழ் அரசியல்வாதி நமக்கு தேவை.

அப்படி கிடைச்சால் சொல்லி அனுப்புங்க சார்:grin: அரசியல் வாதி :104_point_left:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.