Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது?

ஷானன் ஆஷ்லி

செக்ஸ் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்னரே, மனஎழுச்சியூட்டும் செக்ஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளில் சிறந்த செக்ஸ் அனுபவப் பகிர்வுகளே தலைப்புச் செய்திகளாக இருக்கும். ஏற்கனவே புதிராக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, அதைப் பற்றிய சித்திரம் மேலும் மங்கலாகும். அது போலத்தான் இந்தப் பத்திரிகைகள் எல்லாமே படுக்கையில் இணையை வீழ்த்துவது எப்படி என்று டிப்ஸ்களை வாரியிறைத்து வருகின்றன. அப்படி யாரோ ஒருவர் இவை அனைத்தையும் முயற்சி செய்தாகவே வைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக செக்ஸ் டிப்ஸ்களைத் தருவது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பு.

எது எப்படியிருந்தாலும், நிறைய சம்பாதிப்பது எப்படி என்பதைப் போலவே சிறப்பாக எவ்வாறு செக்ஸ் கொள்வது என்ற கட்டுரைகளும் அதிகம் கவனிப்பைப் பெறுகின்றன. ஏற்கனவே செக்ஸ் அனுபவம் பெற்றவர்களும் அதை வாசிக்கின்றனர். செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக இருக்கவே இருக்கின்றன நெட்ஃப்ளிக்ஸும் ஆபாச இணையதளங்களும். ஆனால், நான் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, நமது கலாச்சாரம் ஒருபோதும் செக்ஸ் குறித்து நேர்மையாக விவாதிப்பதில்லை. ஆவலை வெளிப்படுத்தும் கூச்சலாகவோ, மறைமுகமான அவமதிப்பாகவோ மட்டுமே செக்ஸ் குறித்துப் பேசுகிறோம்; சிரித்து வெட்கப்படுகிறோம். செக்ஸ் குறித்து நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவும் சிரமப்படுகிறோம். சிக்கல் என்னவென்றால், செக்ஸில் நல்லது எது, கெட்டது எது என்பதை வரையறுப்பது மிக மோசமான வேலையாகும்.

நமது நண்பர்கள் குழுவில் எது நல்ல செக்ஸ், எது கெட்ட செக்ஸ் என்று விவாதித்திருக்கலாம். அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியவர்கள் பின்னாளில் படுக்கையில் மோசமான அனுபவங்களைப் பெற்றிருக்கலாம். இப்போதும் நிறைய பேர் அந்த மாதிரியான திரைப்படங்களில் பார்த்தவற்றையே நல்ல செக்ஸ் என்று கருதிக்கொண்டிருக்கின்றனர் அல்லது போர்னோ வீடியோக்களில் இடம்பெறுவதே சிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!

கூகுளில் தேடுவதோ, காஸ்மோபாலிடன் வகை பத்திரிகைகளில் செக்ஸ் டிப்ஸ்களைப் படித்து நுட்பங்களைத் தெரிந்துகொள்வதோ, ஓர் ஆண் அல்லது பெண் தனது அனுபவங்களைப் பகிர்வதை அறிவதோ தவறல்ல. ஆனால், உங்களை நீங்களே குழந்தையாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். சிறந்த நுட்பம்கூட நொடியில் மாயமாகும் அபாயம் செக்ஸில் உண்டு. ஏனென்றால், எது நல்ல செக்ஸ் என்ற அபிப்ராயம் ஒவ்வொரு மனிதரையும் பொறுத்து மாறும்.

நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கருதினாலும், எல்லாமே சரியாக இருந்ததாக நினைத்தாலும், மோசமான செக்ஸ் குறித்து எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது. நீங்கள் காதல் மன்னனாக இருந்தாலும், இருவரும் சேர்ந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒருவர் திருப்தியடையாவிட்டாலும், இன்னொருவரின் திருப்தி கேள்விக்குறியாகும்.

ஒருவர் திருப்தியின் உச்சத்தைப் பெற, இன்னொருவர் அதிருப்தியுடன் தொடர்வதும் அருவருப்பானது. சில ஆண்கள் தங்கள் தேவைகளை முடித்துக்கொண்டு, தூங்குவதற்கு முன்பாக ‘உனக்கும் பிடிச்சிருந்ததுதானே’ என்று கேட்பார்கள்.

மோசமான செக்ஸ் குறித்து இருபாலரின் அபிப்ராயங்களும் வெவ்வேறாகவே உள்ளன. பொதுவாக, ஆண்களைப் பொறுத்தவரை மோசமான செக்ஸ் என்பது அருவருப்பாகவும் தடுமாற வைத்த அனுபவமாகவும் இருக்கும். வெறுமையான, விசித்திரமான அனுபவங்களும் அந்தக் கணக்கில் சேரக்கூடும்.

பெண்களைப் பொறுத்தவரை மோசமான செக்ஸ் என்பது கட்டாயப்படுத்தி உறவுகொள்வதே. இல்லாவிட்டால், வலியோடும் கண்ணீரோடும் முடிந்த உறவனுபவமாக இருக்கும்.

சிறப்பான, மோசமான செக்ஸ் குறித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக வரையறை செய்கின்றனர். நம்மில் சிலர் இது பற்றிய கட்டுரைகளைப் படித்துவிட்டு உடனடியாக அந்த ரகசியத் தீர்வுகளை எல்லாம் வீரியத்துடன் தமது இணையிடம் வெளிப்படுத்துவர். அதனை இணை ரசிக்கிறாரா, விரும்புகிறாரா என்பதைப் பொறுத்தே எதிர்வினை அமையும்.

இப்போது நல்ல செக்ஸ், கெட்ட செக்ஸ் குறித்த வரையறைக்குச் செல்வோம்.

19a.jpg

எது நல்ல செக்ஸ்?

ஒப்புதல்

பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் நல்ல செக்ஸைத் தேடுவது பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். இணையை வதைக்கும், சுயவதைக்கு உட்படும் பிடிஎஸ்எம் (BDSM) செயல்பாடுகளிலும் கூட இணையின் ஒப்புதலும் ஒருவருக்கொருவர் எல்லை வகுத்துக்கொள்வதும் அவசியம். எந்த ஓர் உடலுறவுச் செயல்பாட்டிலும், இருவருக்குமான முழுச் சம்மதம்தான் அடிப்படையாக அமையும்.

உற்சாகம்

ஒருவருக்கொருவர் சம்மதம் இல்லாதபோது, கண்டிப்பாக அந்த இடத்தில் உற்சாகம் நிரம்பாது. நம்மை ஒருவர் விரும்பும்போதுதான் நல்ல செக்ஸ் என்பது அமையும். செக்ஸில் ஈடுபாடு கொண்ட இணை, அதைப் பற்றிப் பேசுவதில் உற்சாகம் காட்டாமல் இருந்தால், தொடர்புகொள்ளாமல் விலகினால், அந்த உறவில் கவனத்தைச் செலுத்தாமல் இருப்பது சரியாகாது. உற்சாகமான இணைதான் கவர்ச்சியைத் தூண்டும். இருவரும் உற்சாகமாக இருந்தால், இருவருக்கும் இடையேயான வேறுபாடுகள் கூட தீர்க்கப்படும்; முழுவதுமாகத் திருப்தி பெறுவதை உறுதிப்படுத்தும்.

ஒன்றிணைதல்

நல்ல செக்ஸ் அமைய, ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்திருப்பது முக்கியம் என்பதைப் பலரும் ஒப்புக்கொள்வர். உறவில் ஈடுபடும்போது இணையின் மனம் வேறு எங்காவது இருந்தால், மற்றவருக்கு செக்ஸின்போது உண்மையாகவே கோபம் உண்டாகும். ஆண், பெண் இருபாலரிலும் செக்ஸின்போது ஒன்றிணையும் தன்மை மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

இணக்கம்

இதனை எப்போதும் குறைவாக மதிப்பிடுவது துயரம் தருகிறது. புனிதக் கலாச்சாரத்தைக் கையிலெடுத்துள்ள நமது மதவாதப் பழக்க வழக்கங்கள், செக்ஸில் இணக்கம் என்பதே இல்லையென்று கூறுகின்றன. இது கேலிக்குரியது; ஏனென்றால், ஒவ்வொருவரையும் செக்ஸ் உணர்வுக்கு ஆளாகும் விஷயம், பொருட்கள், சூழல், இழுக்கும் அம்சம் வெவ்வேறாக இருக்கும். செக்ஸின்போது குறிப்பிட்டவிதமான மனநிலையும், உடற்தகுதியும் மற்றவர்களை விடச் சிறப்பாக இருக்க வேண்டும். நல்ல செக்ஸ் அமைய, இருவருக்குமான இணக்கம் சிறப்பாக இருக்க வேண்டும்.

தொடர்பு

ஒவ்வொருவரும் நல்ல செக்ஸை விரும்பினால், நாம் செக்ஸ் குறித்து மனம்விட்டுப் பேச வேண்டும். படுக்கையில் ஓர் ஆள் நிர்வாணமாக இருக்கும்போது என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசாதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? இந்த நபர்கள் அதிகமாகும்போது தடுமாற்றம் உண்டாகும். நாம் யாரும் மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்பவரில்லை. அதனால், படுக்கையறையில் நமக்கும் இணைக்கும் இடையேயான விருப்பங்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. அதேபோல, “உனக்கு என்ன வேண்டும்” என்று நமது இணையிடம் கேட்க வேண்டும்.

எது நல்ல செக்ஸ் அல்ல?

ஜிம்னாஸ்டிக்ஸ்

நம்மில் பலருக்குத் தாங்கள் சிறந்த செக்ஸ் இணை இல்லை என்ற நம்பிக்கை ஆழமாக இருக்கும். நம்மால் வளைய முடியாது; உடலைக் குறுக்க முடியாது என்ற எண்ணம் இருக்கும். நல்ல செக்ஸ் என்பதற்கு அக்ரோபேடிக், ஜிம்னாஸ்டிக் வித்தைகளைக் காட்ட வேண்டுமென்பது அர்த்தமல்ல. உங்கள் இருவருக்கும் வசதியான, திருப்தியான உறவுகொள்ளும் முறையைக் கண்டுபிடிப்பதே போதுமானது. இதற்குத் தவறுகளும் முயற்சிகளும் பொறுமையும் மட்டுமே தேவை. நல்ல செக்ஸைப் பொறுத்தவரை, பெர்ஃபார்மன்ஸ் எனப்படும் செயல்பாடுகூட உகந்த வார்த்தையல்ல. அதைவிட உணர்வுகளே மிக முக்கியம்.

சிறந்த உடலமைப்பு

நான் பள்ளியில் படித்த காலத்தில், ஹாலிவுட்டைச் சேர்ந்த பமீலா ஆண்டர்சன் பற்றிப் பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். இது போதுமான அழக்கல்ல என்று கண்டறிந்தபோது எவ்வளவு அதிர்ச்சியடைந்தேன் என்றெல்லாம், அவர் சொல்லியிருக்கிறார். எனது அனுபவத்தில், நல்ல செக்ஸ் என்பது ஒல்லியாகவோ, வளைவுகளுடனோ இருப்பதைப் பொறுத்ததல்ல. நீங்கள் மெழுகைப் பூசியிருக்கிறீர்களா, ஷேவ் செய்திருக்கிறீர்களா அல்லது இருப்பதைப் பாதுகாக்கிறீர்களா என்பதும் விஷயமல்ல. நம் எல்லோருக்கும் நமது உடல் மீதான வெறுப்புகள் இருக்கும்; நல்ல செக்ஸை விரும்பினால், இது போன்ற பயங்களை எல்லாம் மனதில் ஏற்றக் கூடாது. ஆண் குறியோ, பெண் குறியோ, அதன் அளவோ, நிறமோ, வடிவமோ நல்ல செக்ஸைத் தீர்மானிக்காது. நம் உடலிலுள்ள மற்ற பாகங்களின் முக்கியத்துவமும் இப்படிப்பட்டது தான்.

19b.jpg

உச்சத்தில் இணைதல்

இருவரும் ஒரே நேரத்தில் உச்சமடைய வேண்டுமென்பதே, பல ஜோடிகளுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. போலியான உச்ச நிலையை இதில் குறிப்பிடவில்லை. உச்சமடைதல் என்பது அற்புதமானது; ஆனால், அது இயல்பாக நடைபெற வேண்டும். உறவின்போது வேகத்தை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ, உச்சத்தைக் கொண்டுவருவதோ யாராலும் முடியாது. புதரில் இருந்து வெளிப்படும் முயலைப் போல இயற்கையான நிகழ்வு அது.

மனதறிதல்

எப்படிப்பட்ட காதல் அல்லது செக்ஸ் உறவாக இருந்தாலும், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்தாலும், இதுவரை அற்புதமாக செக்ஸ் கொள்ளாமல் இருந்தாலும், அது பற்றிய உணர்வுகள் உந்திக்கொண்டே இருக்குமென்பது விதி. ஆனால், இதை உங்களது எதிர்பார்ப்பாகவோ, குறிக்கோளாகவோ அமைத்துக்கொள்ள வேண்டாம். உங்களாலோ, உங்களது இணையாலோ மனதைப் படிக்க முடியாது. ஒருவர் தான் என்ன விரும்புகிறோம் என்பதைப் பேச முற்படாதபோது, இன்னொருவர் அது பற்றி அறிய முயற்சி செய்வது தேவையற்ற அழுத்தம்தான்.

அடக்குதல்

சிலர் நினைப்பதுபோல, இணையை அடக்குவதால் நல்ல செக்ஸ் வாய்த்துவிடாது. சில மனிதர்களைப் பொறுத்தவரை கன்னித்தன்மை என்பது காட்சிப்பொருளாக இருக்கிறது. சிலருக்கு செக்ஸ் குறித்த அப்பாவித்தனம் விருப்பமானதாக இருக்கிறது. நம்மை அடக்கும் நபரோடு உறவுகொள்ளும்போது, இதுவரை வெளிப்படாத நமது திறன் அனைத்தும் வெளிப்படும் என்று சிலர் நினைக்கின்றனர். செக்ஸின்போது அடக்குதலை எதிர்கொள்ளும்போது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பது உண்மை. எதிர்காலத்தில் பலவற்றைத் தவிர்க்க முடியும். முக்கியமாக, நல்ல செக்ஸ் எதுவென்று அறிய முடியும்.

மாறுபடும் பார்வை!

இதுதான் சிறந்தது, இது மோசமானது என்ற ஒற்றை அபிப்ராயத்தை ஒருபோதும் செக்ஸ் விஷயத்தில் வெளிப்படுத்தவே முடியாது. ஒவ்வொரு முறையும் இதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசுவது மிகச் சிறந்தது. இந்தக் கோட்பாடுகளால் சமூகப் பரப்பில் வெறுமனே கீறல்களை மட்டுமே உண்டாக்க முடியும். இது தொடங்கும் இடம் மட்டுமே.

சம்மதம் என்ற வார்த்தைக்கு நான் மரியாதை அளிக்கிறேன். ஒப்புதல், உற்சாகம், ஒன்றிணைதல், இணக்கம், தொடர்பு போன்றவை தீர்ப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், ஓய்வுத் திறன் ஆகியவற்றின் பக்க விளைவுகள்தான். இப்போதுவரை, இதைப்பற்றித் தான் நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையான செக்ஸ், செக்ஸில் இணக்கம், எது நல்லது, எது கெட்டது, ஒப்புதலை எவ்வாறு கைக்கொள்வது என்பதெல்லாம் இந்த விவாதத்தின் அங்கங்கள்தாம்.

நம்மால் சிறப்பான செக்ஸை உருவாக்க முடியாது. விசித்திரமானதாகவோ, விலக்கப்பட்டதாகவோ அல்லது அடக்குதலுக்காகவோ செக்ஸைப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், அது இயல்பானது!

நன்றி: மீடியம்.காம்

https://minnambalam.com/k/2018/12/23/19

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

தம்பி, இப்படியானவற்றை வாசிக்க வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

ராஜா.... இதெல்லாம்... வாசிச்சு  செய்யுற விஷயம் இல்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டையும் புதிசாய்க் காணேல்லை!🤧

  • கருத்துக்கள உறவுகள்

கண் பார்க்க, கை செய்யும் என பெரியவர்கள் சொல்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்றும் பெரிய காரியமில்லை.கூட்டு முயற்சிதானே,யாராவது ஒருத்தருக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தால் போதும்.அப்படியே கை பிடித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் போய்க்கொண்டே இருக்கலாம்......! 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ராஜா.... இதெல்லாம்... வாசிச்சு  செய்யுற விஷயம் இல்லை. :grin:

 வாசித்தால் புதரில் இருந்து வெளிப்படும் முயலைப் போல இயற்கையான நிகழ்வு எது என்று அறியமுடியும்🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

 வாசித்தால் புதரில் இருந்து வெளிப்படும் முயலைப் போல இயற்கையான நிகழ்வு எது என்று அறியமுடியும்🤪

அதற்காகத்தான்.... நம், முன்னோர்கள்....
"கச்சை... கட்டுவது  அழகு"  என்று சொன்னார்கள்.
அவிழ்த்துப்  போட்டு... நிற்பது,  எந்த விதத்தில்... அழகு  ஐயா?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

தம்பி, இப்படியானவற்றை வாசிக்க வேண்டாம். 

ஹாஹா அண்ண ஒரு பகிடிக்கு சும்மா கிடக்குது திரி அதான் கொஞ்சம் முசுப்பாத்திக்கு ஏதாவ ஊற்றி எரிக்க வேண்டாமா

20 hours ago, தமிழ் சிறி said:

ராஜா.... இதெல்லாம்... வாசிச்சு  செய்யுற விஷயம் இல்லை. :grin:

ம்கும் அண்ண சொன்னா சரி

10 hours ago, குமாரசாமி said:

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

எப்பவும் குதர்க்கமாவே பேசுறது இவரு :27_sunglasses:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்பவும் குதர்க்கமாவே பேசுறது இவரு :27_sunglasses:

தம்பி! நோ ரெஞ்சன் ஓகே :127_older_man:

இப்ப நான் உங்களுட்டை கேக்கறது என்னவெண்டால்.....

இந்த படத்திலை இருக்கிறவர் செக்ஸ்சியாய் தெரியிறாரா இல்லாட்டி பக்தியாய் தெரியிறாரா? :cool:

palani.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பிள்ளை பெற்று விட்டால் செக்ஸ் உச்சமாக அனுபவித்திருக்கிறார்கள் என்ற றேஞ்சில் இருக்கிறது எங்கள் செக்ஸ் அறிவு! இவர்களுக்குப் போய் செக்ஸ் பாடம் எடுப்பவரை எதனால் அடிக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

தம்பி! நோ ரெஞ்சன் ஓகே :127_older_man:

இப்ப நான் உங்களுட்டை கேக்கறது என்னவெண்டால்.....

இந்த படத்திலை இருக்கிறவர் செக்ஸ்சியாய் தெரியிறாரா இல்லாட்டி பக்தியாய் தெரியிறாரா? :cool:

palani.jpg

என்ற கோவணத்தானை ஏன் இதுக்குள்ள கொண்டு அடிபட விடுவான்

தெரிந்தவனுக்கு பக்தி தெரியாதவனுக்கு ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவற்கு இயற்கை அளந்து விட்டது தான் வாழ்க்கை. அதே போலத்தான் பாலியல் வாழ்க்கையும். 

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 4:13 AM, குமாரசாமி said:

அவரவற்கு இயற்கை அளந்து விட்டது தான் வாழ்க்கை. அதே போலத்தான் பாலியல் வாழ்க்கையும். 

'மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படுவார்'

என்று குறள் குறிப்பதும் இதைத்தான். காமத்தின் சிறப்பு உணர்ந்து துய்க்க வல்லார் சிலரே ஆவர் என்பதே அனைத்தும் உணர்ந்த/ உணர்த்தும் வள்ளுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2018 at 6:04 PM, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!! 😌

  • கருத்துக்கள உறவுகள்

உறவுக்கு முன் சொர்க்கம்
உறவு முடிய நரகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 3:40 PM, Justin said:

பத்துப் பிள்ளை பெற்று விட்டால் செக்ஸ் உச்சமாக அனுபவித்திருக்கிறார்கள் என்ற றேஞ்சில் இருக்கிறது எங்கள் செக்ஸ் அறிவு! இவர்களுக்குப் போய் செக்ஸ் பாடம் எடுப்பவரை எதனால் அடிக்கலாம்?

இதில் பல விடயங்களை யோசிக்க வேண்டி இருக்கு. பிள்ளை பெறுவதே பாலுறவின் உச்சம் இல்லை என்பது உண்மைதான். பத்து பிள்ளை பெற்றவர்கள் மொத்தமாக 10 x 10=100 நிமிடம் மட்டுமே இதில் செலவழித்தும் இருக்க கூடும்.

ஆனால் குமாரச்சாமி அண்ணை சொல்வதிலும் ஒரு விசயம் இருக்கு.

பாலியல் திருப்தி என்பது மனம் சம்ப்ந்தமான விடயம்.

அந்த நாளில் அப்புக்கும் ஆச்சிக்கும் இது சம்பந்தமாக வேறு எந்த அறிவும் இல்லை என்பதால், அப்பு கொடுத்ததே உலகமகா இன்பம் என ஆச்சியும், ஆச்சியிடம் அடைந்ததே உலக மகா இன்பம் என அப்புவும் திருப்தி அடைந்து, ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்திருப்பார்கள். 

ஆனால் இப்போது அப்படியில்லையே. இது சம்பந்தமான தகவல்கள் தேடாமலே கிடைக்கும். வேறு பட்ட மனிதர்களின் உடற்கூற்றியல் எப்படி இருக்கும் என்பதை படிக்க, காணொளி வழியே பார்க்க முடிகிறது.

உடற்கூற்றியலுக்கும் பாலின்பத்துக்கும் பெரிய தொடர்பொன்றும் இல்லை என பலர் வாதிட்டாலும். பெரும் பாலானோர் இரெண்டையும் இணைத்தே பார்கிறனர்.

இது மட்டும் அல்லாமல் காணொளிகளில் காட்டப்படும் புது புது உத்திகளையும் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றை பிந்தொடரும் ஆவலும் எழுகிறது 😂

எனவே திருப்தியை மேலும் தேட விழையும் போது மனமுறிவு ஏற்பட்டு மான-முறிவு, ஈற்றில் மணமுறிவில் முடிகிறது.

இது இருபாலருக்கும் பொருந்தும். 

Ignorance is bliss என்பார்கள். அதாவது அறியாமை ஒரு கொடுப்பினை.

2 தலைமுறைக்கு முந்தியவர்கள் அறியாமையில் ஆனால் bliss இல் இருந்தார்கள்.

இப்போது அறிவுடன் ஆனால் அங்கலாய்ப்புடன் இருக்கிறார்கள்.

உலகம் பூராவும்.

On 12/24/2018 at 6:29 PM, குமாரசாமி said:

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

1 hour ago, ஈழப்பிரியன் said:

உறவுக்கு முன் சொர்க்கம்
உறவு முடிய நரகம்.

செக்ஸ் சை இப்படி எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை...:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

'மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படுவார்'

என்று குறள் குறிப்பதும் இதைத்தான். காமத்தின் சிறப்பு உணர்ந்து துய்க்க வல்லார் சிலரே ஆவர் என்பதே அனைத்தும் உணர்ந்த/ உணர்த்தும் வள்ளுவம்.

6 hours ago, Paanch said:

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!! 😌

5 hours ago, goshan_che said:

இதில் பல விடயங்களை யோசிக்க வேண்டி இருக்கு. பிள்ளை பெறுவதே பாலுறவின் உச்சம் இல்லை என்பது உண்மைதான். பத்து பிள்ளை பெற்றவர்கள் மொத்தமாக 10 x 10=100 நிமிடம் மட்டுமே இதில் செலவழித்தும் இருக்க கூடும்.

ஆனால் குமாரச்சாமி அண்ணை சொல்வதிலும் ஒரு விசயம் இருக்கு.

பாலியல் திருப்தி என்பது மனம் சம்ப்ந்தமான விடயம்.

அந்த நாளில் அப்புக்கும் ஆச்சிக்கும் இது சம்பந்தமாக வேறு எந்த அறிவும் இல்லை என்பதால், அப்பு கொடுத்ததே உலகமகா இன்பம் என ஆச்சியும், ஆச்சியிடம் அடைந்ததே உலக மகா இன்பம் என அப்புவும் திருப்தி அடைந்து, ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்திருப்பார்கள். 

ஆனால் இப்போது அப்படியில்லையே. இது சம்பந்தமான தகவல்கள் தேடாமலே கிடைக்கும். வேறு பட்ட மனிதர்களின் உடற்கூற்றியல் எப்படி இருக்கும் என்பதை படிக்க, காணொளி வழியே பார்க்க முடிகிறது.

உடற்கூற்றியலுக்கும் பாலின்பத்துக்கும் பெரிய தொடர்பொன்றும் இல்லை என பலர் வாதிட்டாலும். பெரும் பாலானோர் இரெண்டையும் இணைத்தே பார்கிறனர்.

இது மட்டும் அல்லாமல் காணொளிகளில் காட்டப்படும் புது புது உத்திகளையும் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றை பிந்தொடரும் ஆவலும் எழுகிறது 😂

எனவே திருப்தியை மேலும் தேட விழையும் போது மனமுறிவு ஏற்பட்டு மான-முறிவு, ஈற்றில் மணமுறிவில் முடிகிறது.

இது இருபாலருக்கும் பொருந்தும். 

Ignorance is bliss என்பார்கள். அதாவது அறியாமை ஒரு கொடுப்பினை.

2 தலைமுறைக்கு முந்தியவர்கள் அறியாமையில் ஆனால் bliss இல் இருந்தார்கள்.

இப்போது அறிவுடன் ஆனால் அங்கலாய்ப்புடன் இருக்கிறார்கள்.

உலகம் பூராவும்.

5 hours ago, நிழலி said:

செக்ஸ் சை இப்படி எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை...:(

சோமர்! என்னத்துக்கு இந்த ரொபிக்கை தூசு தட்டி  வெளியிலை எடுத்தவர்? நம்ம புள்ளைங்க எல்லாம் பயங்கரம் எண்டு தெரியாதோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோமர்! என்னத்துக்கு இந்த ரொபிக்கை தூசு தட்டி  வெளியிலை எடுத்தவர்? நம்ம புள்ளைங்க எல்லாம் பயங்கரம் எண்டு தெரியாதோ? 🤣

அண்ணன் போட்ட வழியில் அடிபிசகாமல் நடக்கும் தம்பிகள் நாம் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 12:29 PM, குமாரசாமி said:

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

இது தவறான உண்மை இல்லாத பார்வை 
கலவியை... காமத்தை..... அக்கு வேறு ஆணிவேறாக அதில் மோட்ஷமே 
கண்டவர்கள் எம் முன்னோர்கள்.
நாகரீக வளர்ச்சி என்று நாம் மூட மூட தொடங்கியதால் வந்துதான் 
இன்றைய பாலியல் குறைபாடுகளும் ...... பாலியல் வன்முறைகளும் 
இச்சைகளும் அதனால் தொடரும் இடர்களும்.

ஒரு தமிழ் சித்தர் ஒருவர் 16 மணித்தியாலம் தொடர்ந்து உடலுறவு 
செய்து காட்டிய ஆதாரங்கள் இருக்கின்றது ...... இந்த 16 மணி என்பது அவரோடு 
சார்ந்தது மட்டுமில்லை அவரோடு உறவாடிய பெண்ணோடும் சார்ந்தது. அவ்வாறு ஆன் பெண் 
இரு பாலரும் ஆற்றல் கொண்டு அறிவு கொண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் 

இதற்கு என்றே கால காலமாக ஒரு மூச்சு கலையை பயின்று வந்து இருக்கிறார்கள்
பாரத நாட்டியம் என்பது பூராகவும் பாலியல் சம்மந்தமானது இன்று தணித்து  .. திணித்து 
ஏன் ஆடுகிறோம் என்பது ஆடுபவருக்கே தெரியாமல் ஆக்கிவிடார்கள்  

காமசூத்திரம்  
கஜுராகோ கோவில் 
தந்த்ரா கலைகள் 

இவற்றுக்கு ஈடாக இன்றைய உலகில் எதுவுமே இல்லை.
இப்போது வெறும் அங்கலாய்ப்பும் .... மாற்றாரியாலிஸிட் (materialize)  போக்கும் கலந்து 
வீணாக ஒருவரை ஒருவர் வலி செய்வது  செக்ஸ் என்று புரிந்து கொண்டு 
ஒரு மனநோய் பிடித்த பிசாசுகள்போல திரிகிறார்கள். 

Image result for khajuraho temples

Related image

On 12/25/2018 at 11:25 PM, குமாரசாமி said:

தம்பி! நோ ரெஞ்சன் ஓகே :127_older_man:

இப்ப நான் உங்களுட்டை கேக்கறது என்னவெண்டால்.....

இந்த படத்திலை இருக்கிறவர் செக்ஸ்சியாய் தெரியிறாரா இல்லாட்டி பக்தியாய் தெரியிறாரா? :cool:

palani.jpg

இந்த கோலத்தில போய் தானோ கட்டின பொண்டாட்டி தெய்வானை  இருக்க வள்ளியை ஈவ்டீசிங்ங் செய்து  மயக்கினாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 7:23 PM, ஈழப்பிரியன் said:

உறவுக்கு முன் சொர்க்கம்
உறவு முடிய நரகம்.

ஐயய்யோ ! முன்னும் பின்னும் சொர்க்கம்தான் என்று உணர்வதையே 'செவ்வி தலைப்படுவார்' என்று நம் வாழ்வியல் ஆசான் வள்ளுவன் குறிக்கிறான். நாம் பட்டினத்தார், கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்துமதம்) போல் விரக்தி நிலைக்குச் செல்ல வேண்டியதில்லை. வள்ளுவம் இருக்க வேறெது வேண்டும் ? உறவுக்குப் பின்னரும் மானே, தேனே என்று தொடருங்கள். இது செயற்கையாய்த் தோன்றினால்,   I love you சொல்லிப் பாருங்கள். இனியெல்லாம் சொர்க்கம்தான் தோழர். (அறிவுரையாக எடுக்க வேண்டாம். வயதில் மூத்தவனின் அனுபவப் பகிர்வு எனக் கொள்ளலாம். வாழ்க்கையில் மிக முக்கியமானதாய் நான் கருதுவதால், சற்று மெனக்கிட்டு எழுதிவிட்டேன்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.