Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…

February 4, 2019

Writing-the-Documentary-Film.png?zoom=3&

சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ .பி.ஆர்.எல்.எப்) யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த ஆவண படத்தினை முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டு வைத்தார்.

குறித்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகள் பற்றி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெலோவினை விடுதலைப்புலிகள் தடை செய்து அதன் உறுப்பினர்கள் 151 பேரையும் , 51 பொதுமக்களையும் சுட்டு கொன்றனர் எனவும் , கந்தன் கருணை படுகொலையின் போது 60 பேரை சுட்டு கொன்றதாகவும் , பத்மநாபா உள்ளிட்ட 13 பேரை 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி படுகொலை செய்ததாகவும் குறித்த ஆவணப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

ரெலோவினை விடுதலைப்புலிகள் தடை செய்து அதன் உறுப்பினர்கள் 151 பேரையும் , 51 பொதுமக்களையும் சுட்டு கொன்றனர் எனவும் , கந்தன் கருணை படுகொலையின் போது 60 பேரை சுட்டு கொன்றதாகவும் , பத்மநாபா உள்ளிட்ட 13 பேரை 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி படுகொலை செய்ததாகவும் குறித்த ஆவணப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இதைக் காட்டி ஓட்டுக் கேக்கிற பிளானோ?

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதையும் நன்மையைக் கருதி சொல்லாது இருப்பது வாய்மை. 

தமிழ்க் கூட்டமைப்பின் நன்மை கருதி, விக்கியார் ஒவ்வொன்றையும் போட்டு உடைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர்,சுமத்திரன்,விக்கி எல்லோரும் ஒரே ஆட்கள் தான்...மூன்று பேரில் சுமத்திரன் பரவாயில்லை தான் இப்படித் தான் என்று வெளிப்படையாய் இருக்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்

EPRLF மண்டையன் குழுவால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்பதோடு பல குடும்பம் குடும்பமாக படுகொலை செய்யப்பட்டதையும் தமிழினத்துக்கெதிராக இந்திய இராணுவப் படையுடன் கூலிப்படையாக இயங்கி தமிழ் மக்களை வேட்டையாடியதை மறந்திருப்பதும் சிங்கள துணை இராணுவக் குழுவாக ஆயுதம் தரித்திருந்ததையும் மறந்திருப்பதும் மக்களை ஏமாற்ற முனைவதும் துயரம்.

மிக மோசமான சுயநலவாதியும் நீண்டகால கூலிப்படையின் தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரன் என்ற மோசமான பேர்வழியை நம்பி அவர்களின் கூட்டத்துக்கு சென்றது விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் அறிவீனம்.  

விக்னேஸ்வரன் அவர்கள் அவ்வப்போது செய்துவரும் தான்தோன்றித்தனமான செயல்களில் இதுவும் ஒன்று!  

ஒரு கட்சியை ஆரம்பித்த பின்னர் அதை வளர்ப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கடிவாளம் இல்லாத குதிரை போல ஓடினால் விக்னேஸ்வரன் அவர்கள் படுகுழியில் வீழ்வது உறுதி!

ஐ.நா. அமைப்புகளுடன் சர்வதேச நியதிகள் தெரியாது சுயநல சொகுசு வாழ்விற்கு மல்லுக்கட்டிய நிமலன் கார்த்திகேயன் போன்ற ஒருசில அரைவேக்காடுகளால் விக்னேஸ்வரன் இயக்கப்படுபவராக இருந்தால் விரைவில் படுகுழியில் அவர் வீழ்வது உறுதி!

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für விà®à¯à®©à¯à®¸à¯à®µà®°à®©à¯

இதோடை,  விக்கியருக்கு....  வருகின்ற தேர்தலில், கட்டுக்காசும் கிடைக்காது. 🤪 😝

  • கருத்துக்கள உறவுகள்

இதில்   என்ன ஆச்சரியம்??

அவர்கள்  தமது  இயக்க வரலாற்றையும்  பதிந்திருந்தால் முழுமையாகியிருக்கும்

விக்கியர் அதை செய்ய  வைக்கணும்

21 hours ago, கிருபன் said:

சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார்.

முகவர்களாக செயற்பட்டு தாங்கள் செய்த படுகொலைகளை கூறாமல் எப்பிடி வரலாறு உண்மையாகும்? அப்ப இதுவொரு போலி ஆவணப்படமாக தான் இருக்க வேணும்.

தங்கள் வரலாற்றில் டெலோ பற்றி சிலவற்றை மட்டும் எப்பிடி குறிப்பிட முடியும்? அதனால் இதுவொரு திட்டமிட்ட சதிமுயற்சி தானே!  

இதன்மூலம் கூட இருந்து கழுத்தறுப்பதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்தும் மன்னாதி மன்னனாக இருப்பது தானே புலப்படுகிறது. கஜேந்திரகுமார் குழுவினரது பிரதான குற்றச் சாட்டும் இதுதானே!

இதில் விக்னேஸ்வரனின் கழுத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் நயவஞ்சகமாக அறுத்துள்ளார். விக்னேஸ்வரனும் ஏமாளியாகியுள்ளார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஆவணப்படமா அல்லது மற்றவர் மீது பழிபோட்டு தம்மை உத்தமர்களாக காட்டும் படலமா?

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி அவர்கள் இவர்களுடன் சேராமலிருப்பதே நல்லது.

அவருக்கு இருக்கும் மரியாதையையும் இவர்கள் அழித்துவிடுவார்கள்.

தம்மைப்பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்குப் புலிகளை விமர்சிக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால், தம்மைப்பற்றியே மட்டும் எழுதினால், எழுதுவதற்கு ஒன்றுமே இருக்காது. ஆகவே, புலிகளால் தடுக்கப்பட்டோம் என்று புத்தகம் வெளியிடுவதமூலம், தம்மை வியாபாரப் படுத்தவும், நியாயப்படுத்தவும் எத்தனிக்கிறார்கள்.

நிச்சயமாக இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் சேர்ந்து இவர்களாடிய கொலைவெறித் தாணடவங்கள் இப்புத்தகத்தில் வரப்போவதில்லை. வெறுமனே, புலிகள் தாக்கினார்கள், கலைத்தார்கள் என்பதுடன் அது முற்றுப்பெறப்போகிறது.

ஆனால், இந்தியப் படை காலத்தில் அவர்களுடன் கனரக வாகங்களில் ரோந்துசென்று, அவர்களது முகாமருகிலேயே முகாம் அமைத்து, பொதுமக்களைச் சித்திரவதைசெய்து இன்பம் அனுபவித்த அந்த மிருகங்களின் முகங்கள் இன்னும் என் மனக்கண் முன் நிற்கின்றன. ஏளனமும், எகத்தாளமும், கொடூரமும் நிறைந்த அந்த முகங்களும், கூடவே தோள்களில் தொங்கிய துப்பாக்கிகளும் மறக்கமுடியாதவை. 

விக்க்யர் விலகி நிற்பதே சரியானது.

10 hours ago, ragunathan said:

விக்கி அவர்கள் இவர்களுடன் சேராமலிருப்பதே நல்லது.

அது தான் நல்லது!

அத்துடன் அவருடன் இணைந்துள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரு இன்ஜினீர் (விரைவில் இளைப்பாற இருப்பவர்) மிக மிக மிக மிக மோசமான ஊழல்வாதியாம். இது போன்ற ஊழல்வாதிகளையும் விலக்கி வைப்பதே நல்லது. அவர் அடித்த கொள்ளைகளுக்கு அளவு கணக்கே இல்லையாம்!

இல்லைனா சுரேஷ் பிரேமச்சந்திரன் போல கூட இருந்து கழுத்தறுப்பவர் லிஸ்டில் அவர் சேர மீண்டும் மீண்டும் ஏமாறும் ஏமாளிகள் லிஸ்டில் விக்னேஸ்வரன் சேர்ந்துடுவார்.

விக்னேஸ்வரனும் த தே ம முன்னணி இணைவது தான் நல்லது  ஈ பி ஆர் எல் எப் உடன் இணைவது மக்களின் தன மீதான நன் மதிப்பை கெடுப்பது போலாகும் . 

  • கருத்துக்கள உறவுகள்

சகோதர படுகொலை என்றால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரப்படுகொலை என்றால் என்ன? சரியான கேள்விதான். விளக்கம் கொடுப்பதுதான் கடினம்.

சகோதரர்களைப் படுகொலை செய்வது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால் எனது சகோதரர்கள் யார்? 

என்னுடன் தோளோடு தோள் நின்றி எதியுடன் போரிடுபவர்கள்
எனக்கெதிராகத் துரோகத்தனங்களைச் செய்யாதவர்கள்.
என்னையும் எனது இனத்தையும் காட்டிக் கொடுக்காதவர்கள்.
தமது சொந்த லாபங்களுக்காக எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து எனதும் என் மக்களினதும் இருப்பைப் பலவீனமாக்காதவர்கள்.
எதிரியின் கூலிகளாகச் செயற்பட்டு என்னையும், என் மக்களையும் வேண்டுமென்றே இலக்குவைத்துக் கொல்லாதவர்கள்.
எனதினத்தினதும், விடுதலைப் போராட்டத்தினதும் முற்றான தோல்விக்குப் பிரதேசவாதத்தைக் காரணம் காட்டி எதிரியுடன் சேர்ந்து என்னையும், என் இனத்தையும் கருவறுக்காதவர்கள்.
இறுதிவரை எனதினத்திற்காகப் போரிட்டு, ஈற்றில் மடிந்தும் போனவர்கள்.

இவர்கள் எல்லோருமே எனது சகோதரர்கள்தான். இவர்களைக் கொல்வது சகோதரப்படுகொலைதான்.

அப்படியானால், இந்தப் பட்டியலில் வராதவர்கள் யார்? அவர்களைக் கொல்வது சரியா பிழையா?

சரியோ பிழையோ, அவர்களைக் கொல்ல நாம் யார்? எமக்கு அந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ.பி. ஆர்.எல் எவ் மாநாட்டில் எந்த ஆவணத்தையும் நான் வெளியிடவில்லை

 
 
 
 

BB24699F-AF32-4118-B8C8-0D73E9DDF027-300

விக்னேஸ்வரன் விளக்கம் யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர
புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான்
ஈடுபடவில்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும்
வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் விக்னேஸ்வரன் கலந்துகொண்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுவைத்ததாகவும் அந்த ஆவணத்தில் விடுதலைப்புலிகளால்
மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில
ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி

www.thaarakam.com/

நன்மை கருதி எங்கள் தேசியத்தலைவர் புளொட் தவிர்ந்த மற்ற இயக்க கட்சிகளை கூட்டமைப்பில் இணைத்தவர் இதில் ஈ பி ஆர் எல் எப் உம் அடக்கம் .   அதனால் இவர்கள் இனி மக்களுக்கு என்ன செய்வார்கள் என்பது தான் முக்கியம் . விக்கி ஐயா அவர்களும் இந்த நோக்கத்தில் தான் இவர்களை இணைக்க பார்க்கின்றார் ....ஆனால் சுரேஷ் ...தேவை இல்லாத பழைய விடயங்களை தோன்டு வதால் அவரின் பழைய முகம் தான் மக்கள் முன் மீண்டும் வரும் , இதனால் அவர்தான் பாதிக்கப்படப்போகின்றார் .

13 hours ago, Maruthankerny said:

சகோதர படுகொலை என்றால் என்ன? 

படுகொலை என்றால் கூலிக்காக கொலை செய்வது!

சகோதர என்றால் சகோதர இனம்.

சகோதர படுகொலை என்றால் சகோதர இனத்தின் ஏவலால் சொந்த இன மக்களை படுகொலை செய்வது எனப் பொருள்படும் கண்டியளோ!

🙂😂😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.