Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை முடித்து கார் பாக் செய்திருந்த இடத்துக்கு வருகிறேன். பிரதான சாலையில் கரையிலேயே தான் என் கார் நின்றது. என்னைக் கடந்துகொண்டு ஒருவர் பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அவர் கடந்து சென்றதன் பின்னர் தான் எனக்கு அவரைப் பார்த்ததுபோல் இருக்க, நான் கார் கதவைத் திறந்தபடி தலை திருப்பி அவரைப் பார்க்கிறேன்.

யோசித்துக்கொண்டிருக்க எனக்கு நினைவு வந்துவிட்டது. முன்பு ஒரு தடவை சந்தித்த யாழ் உறவுதான் அவர் என்று. அவர் ஒரு கடைக்குள் நுழைய நின்று கதைத்துவிட்டுச் செல்வோமா என்று எண்ணிவிட்டு அவர் எதோ அலுவலாக இருக்கிறார். எனக்கும் காலை தேநீர் கூடக் குடிக்காத தவிப்பு. சரி இன்னொருநாள் பார்ப்போம் என்றுவிட்டுச் சென்றுவிட்டேன்.

மீண்டும் ஒரு இரண்டோ மூன்றோ வாரங்களுக்கு முன்னர் நான் நடந்து கடைக்குச் செல்ல எதிரே மீண்டும் அந்த (உறவு). இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான்  ஒன்று கூறாமல் கடந்து போகிறேன். ஏன் இவர் தெரியாததுபோல் போகிறார் என்று என் மனதில் கேள்வி எழுந்தாலும் நீயும் எதுவும் கூறாமல் தானே கடந்து போகிறாய் என்று என் மனச்சாட்சி கேட்க எதுவும் மேற்கொண்டு எண்ணாமல் கடைக்குச் செல்கிறேன்.

கடந்த வாரம் தமிழ்ப் பள்ளிக்காக சிலஉணவுப் பொருட்களை வாங்க உணவகம் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல இன்னும் இருவருடன் கதைத்துக்கொண்டு அதே ஆள். இம்முறை பேசாமல் போக்க கூடாது என்று எண்ணிக்கொண்டு வணக்கம் என்கிறேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டுப் பார்க்க என்ன தெரியாதாமாதிரி நிக்கிறியள் என்கிறேன். எனக்கு உங்களைத் தெரியவில்லை என்கிறார் அவர். நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர்  பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

நான் யார் என்று சொல்ல மாட்டன் ரதி ☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகம் தெரிந்த பின்பும், நான் முகமூடி என்று நடிப்பது ....அழ‌கல்ல அத்துடன்  சக மனிதனை அவமானப்படுத்தும் செய‌லும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே அன்ரி ஒன்றில் நிறையக் கனவு காண்கின்றார் அல்லது இலண்டன் புகைக்குள் அவருக்கு தோற்ற மயக்கம் (hallucinations) அடிக்கடி வருகின்றது!😀

தெரியாத ஆட்கள் வணக்கம் சொன்னால் ஒன்றில் மதம் பரப்புபவர்களாக இருப்பார்கள் அல்லது எதையும் விக்க முற்படுபவர்களாக இருப்பார்கள் என்பதால் இலண்டனில் தமிழர்கள் பலர் அவதானமாக இருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, putthan said:

முகம் தெரிந்த பின்பும், நான் முகமூடி என்று நடிப்பது ....அழ‌கல்ல அத்துடன்  சக மனிதனை அவமானப்படுத்தும் செய‌லும்

அது அவருக்குப் புரியவில்லையே.

8 minutes ago, கிருபன் said:

சுமே அன்ரி ஒன்றில் நிறையக் கனவு காண்கின்றார் அல்லது இலண்டன் புகைக்குள் அவருக்கு தோற்ற மயக்கம் (hallucinations) அடிக்கடி வருகின்றது!😀

தெரியாத ஆட்கள் வணக்கம் சொன்னால் ஒன்றில் மதம் பரப்புபவர்களாக இருப்பார்கள் அல்லது எதையும் விக்க முற்படுபவர்களாக இருப்பார்கள் என்பதால் இலண்டனில் தமிழர்கள் பலர் அவதானமாக இருப்பார்கள்!

எனக்கு வேற வேலையில்லையாக்கும்.😃

தெரியாத ஆட்களைப் பற்றியா நான் இப்ப கதைக்கிறேன் ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரதி said:

யார் இது உங்களை கண்டிட்டு பயத்தில் ஓடி ஒளிஞ்சது? பெருமாளோ 🤩

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் யாழ் கள உறவு ........ தானே என்று கேட்க, எனக்கு அதில எழுதுற அளவு அறிவில்லை என்கிறார் அவர். நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன். அவர்  பதிலால் அவரே நான் நினைத்த உறவு என்று ஒத்துக்கொண்டதை நினைத்து இப்பவும் சிரிப்பாக இருக்கு.

படத்தை ஒருக்கா போடுங்கோ பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் அவரின் பெயரையோ படத்தையோ சொல்ல வேண்டாம்...... கடைசியாய் அவர் இட்ட  பதிவை கோட் பண்ணி விடுங்கள்.....நாங்கள் பார்க்க மாட்டம்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவருக்கு உங்கள பார்த்து பயமோ தெரியல!
தன்னை வைச்சும் கதை எழுதிப்போடுவியளோ என்று?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9 hours ago, ஈழப்பிரியன் said:

படத்தை ஒருக்கா போடுங்கோ பார்ப்பம்.

நல்ல கெட்டிக்காரன் தான் நீங்கள்😁

5 hours ago, nunavilan said:

பனங்காயா இருக்குமோ??  🤣

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் நுணா.

9 hours ago, suvy said:

நீங்கள் அவரின் பெயரையோ படத்தையோ சொல்ல வேண்டாம்...... கடைசியாய் அவர் இட்ட  பதிவை கோட் பண்ணி விடுங்கள்.....நாங்கள் பார்க்க மாட்டம்.....!   😁

ஐயோ ஐயோ😁😁

9 hours ago, குமாரசாமி said:

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

பாவம் ந்ந்தன்

1 hour ago, ஏராளன் said:

அவருக்கு உங்கள பார்த்து பயமோ தெரியல!
தன்னை வைச்சும் கதை எழுதிப்போடுவியளோ என்று?!

இருக்கும். நான் அந்தப்பக்கமா யோசிக்கேல்லையே😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் யார் என்று சொல்ல மாட்டன் ரதி ☺️

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

21 hours ago, குமாரசாமி said:

நந்தனாய் இருக்கும் தங்கச்சி....😎

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமேக்கு மட்டும் இப்படியான அநுபவங்கள் எப்படி ஏற்படுதோ?

இங்கு உண்மையிலேயே நான்  ஏதெச்சையாக மறதிக்கு உள்ளாகியிருந்தால்க்கூட முகம் பார்த்து சிரிக்கிறார்கள் சத்தியமாத் தெரியாத சனத்திற்கும் புன்னகையால் பதிலளித்துவிட்டே கடக்கவேண்டியுள்ளது. இல்லையென்றால்  மறதியால் அசடு வழிய வேண்டியுள்ளது. வரவர மறதி அதிகரித்து செல்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/30/2019 at 9:45 AM, ஜெகதா துரை said:

அவருக்கு என்ன பிரச்சனையோ?

அப்படி எண்ணித் தான் முதல் இரு தடவைகளும் நானும் எண்ணியது. ஒரு தெரிந்த மனிதரைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்வது ஒரு பெரிய வேலையா என்ன ???

11 hours ago, வல்வை சகாறா said:

சுமேக்கு மட்டும் இப்படியான அநுபவங்கள் எப்படி ஏற்படுதோ?

இங்கு உண்மையிலேயே நான்  ஏதெச்சையாக மறதிக்கு உள்ளாகியிருந்தால்க்கூட முகம் பார்த்து சிரிக்கிறார்கள் சத்தியமாத் தெரியாத சனத்திற்கும் புன்னகையால் பதிலளித்துவிட்டே கடக்கவேண்டியுள்ளது. இல்லையென்றால்  மறதியால் அசடு வழிய வேண்டியுள்ளது. வரவர மறதி அதிகரித்து செல்கிறது

லண்டனில் பெரும்பாலான எங்கடை சனங்கள் விசித்திரமான சனங்களாய்த்தான் இருக்கிறார்கள் சகாரா. பலரும் குனிந்த தலை நிமிர்த்தாமல் தொலைத்த எதையோ தேடுவதுபோல் அல்லது திருடனுக்குத் தேள் கொட்டியவர்கள் போலத்தான் பார்ப்பது.

23 hours ago, ரதி said:

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 
ஏன் ரதி மற்றவர்கள் கடைகளுக்கே போவதில்லையா ???
அதுசரி பெருமாளுக்குத் தமிழ்க் கடைகளோடு நல்ல பரிச்சயம் என்று நன்கு தெரிந்தவர்போல் சொல்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 ஒரு    வேலை கிருபனாய் இருக்கும்.. உதவி  கேட்க போறா என்று ..  பேசாம 

விட்டு இருப்பார் .  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/30/2019 at 9:16 PM, ரதி said:

நிட்சயமாய்  இது பெருமாள் தான்😉 ...அவருக்குத் தான் தமிழ்க் கடைகளோடு நல்ல பரீட்ச்சயம் 

நந்தன் ஏன் அண்ணா சுமோவை கண்டு கதைக்காமல் போகப் போறார்...இரண்டு பேரும் இந்த ஊர்,உலக கொசிப் கதைச்சு தான் போயிருப்பினம்😃 {நந்தனாயிருந்தால்)
 
அப்ப ஆர் உந்த மொள்ளமாரி????? :rolleyes:

மீரா நல்ல பொடியன்!  நந்தனும் இல்லை..பெருமாள் பெரிய டவுட்...நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

தங்கச்சி புலநாயை முடுக்கி விடுங்கோ....😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிலாமதி said:

 ஒரு    வேலை கிருபனாய் இருக்கும்.. உதவி  கேட்க போறா என்று ..  பேசாம 

விட்டு இருப்பார் .  

அப்பிடியான ஆள் கிருபன் என்று நான் நினைக்கவில்லை.

10 hours ago, குமாரசாமி said:

அப்ப ஆர் உந்த மொள்ளமாரி????? :rolleyes:

மீரா நல்ல பொடியன்!  நந்தனும் இல்லை..பெருமாள் பெரிய டவுட்...நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

தங்கச்சி புலநாயை முடுக்கி விடுங்கோ....😄

குடும்பஸ்தராய் வந்தபிறகு நெடுக்கர் மாறிவிட்டார் என்று சொல்லீனம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

On 3/28/2019 at 11:46 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருவரும் நேரே ஒருவரை ஒருவர் பார்த்தாலும் எந்த உணர்வுமற்ற அவர் முகத்தைப் பார்த்ததும் வணக்கம் என்று கூற வெளிக்கிட்ட நான்  ஒன்று கூறாமல் கடந்து போகிறேன்

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

நெடுக்கரை வலைபோட்டாலும் பிடிக்கேலாது.....

அந்தாள் வலையில் வீழ்ந்து கனகாலம் கண்டியளோ😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Paanch said:

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

சீ சீ அப்படியெல்லாம் அவர் கேட்கமாட்டார். எதற்கும் ஆக்கத்தை இன்னொருமுறை ஆறுதலாக வாசித்துப் பாருங்கள் சாமியாரே.!

On 3/28/2019 at 11:46 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கிளம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பிடியான ஆள் கிருபன் என்று நான் நினைக்கவில்லை.

குடும்பஸ்தராய் வந்தபிறகு நெடுக்கர் மாறிவிட்டார் என்று சொல்லீனம்

அப்பிடியா! நெடுக்கரையும்,மனிசியையும் வீட்டை கூப்பிட்டு சாப்பாடு கொடுக்கத் தான் இருக்கு 😎
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Paanch said:

சுமேரியர் அவர்களின் கதை ஒரு கனவோ, நனவோ தெரியவில்லை. ஒரு வயது கடந்தால் கனவும் நனவுபோல் தெரிவதும் உண்டு.

முன்பு அறிமுகமானவர்போல் தெரிந்தாலும், பொது இடத்தில் ஒரு அழகான பெண்ணை ஆண் பார்த்துப் புன்முறுவல் செய்தாலே எதிர்த்தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறமுடியாது. அவரைப் பார்த்து ஒரு முறுவல் இவர் செய்திருந்தாலே, அவர் 'என்னம்மா' என்று கேட்டிருப்பார் என்று எண்ணுகிறேன். 

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.😀

6 hours ago, குமாரசாமி said:

சில வேளை அந்த ஆண் சுமேரியைப்பாத்து புன்முறுவல் செய்ய......
சுமேரி  அந்த ஆணைப்பாத்து டேய் என்னடா பாக்கிறாய் எண்டு திருப்பி கேட்டுட்டால்??????? 🤪

எங்கட முகம் எப்போதும் புன்சிரிப்புடன்தான் காட்சியளிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை .....அவர் என்னுடைய கணிப்புகளைக் கவனித்து இப்படி கேவலமாய் கணிக்கக் கூடாது என்னும் உறுதியுடன் அவற்றுக்கு எதிராய் கணித்திருக்கின்றார் . .......!  😎 ஆயினும் பாராட்டுக்கள் பிரபா & தோழர் புரட்சி .........!  👍
    • தேர்தல் கணக்கு 2020 ம் ஆண்டு, டக்லஸ் 45927 அங்கஜன் 49373 விஜயகலா 6522 மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344.   இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள். இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே. இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000.   யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள்.   இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.
    • மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ! By Shana on Friday, November 15, 2024 “ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.   https://www.battinews.com/2024/11/blog-post_170.html
    • நிச்சயமாக இவனை உள்ளே தள்ளவேண்டும். முதலில் இவன் ப்ரேமியின் (Premini) உடலை எங்கே வெட்டி போட்டான் என்பதை சொல்லவேண்டும். அவளை கூட்டாக கற்பளித்துவிட்டு இன்றும் சுதந்திரமாக உலாவும் கேவலமாணவர்களின் பெயர்களை தரவேண்டும். அனுரா கட்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுங்கள். நான் என்னாலான எல்லா முயறசிகளும் எடுப்பேன்.  Tragic Fate of Seven TRO Employees at the Hands of the TMVP Seven Years Ago https://dbsjeyaraj.com/dbsj/?p=15596
    • என்னைப் பொறுத்தவரை பிள்ளையான் கட்டாயம் உள்ளை போவார் (அரசியல் கொலைகளுக்கும் மற்றும் போர்க்குற்றங்களுக்கும்)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.