Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு

April 12, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_2976.jpg?resize=800%2C534கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் , பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சபை தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்

IMG_2964.jpg?resize=800%2C534IMG_2970.jpg?resize=800%2C534IMG_2971.jpg?resize=800%2C534  IMG_2978.jpg?resize=800%2C534IMG_2988.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2019/118197/

  • கருத்துக்கள உறவுகள்

கருணை உள்ளம் கொண்டவர்கள்.......பாராட்டுக்கள்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கருணை உள்ளம் கொண்டவர்கள்.......பாராட்டுக்கள்......!   👍

ஒரு சர்சையை கிளப்பா விட்டால் என்னவென்று கேழுங்கள் நாய் காப்பகம் அல்ல இந்த சிவசேனை என்ற அமைப்பை😋 வெயில் காலம் என்பதால் விசர்  அதிகரிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். அதேவேளை யாழ் நகர் உட்பட வடக்குக் கிழக்கில்.. யாசகம் செய்யும் ஊதிபத்தி விற்கும் பாடசாலைச் சிறுவர்களின் மறுவாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு அமைப்பை உருவாக்கி உதவலாமே. நாம் வழங்கும் சிறுதொகை பணம் என்பது எவ்வளவுக்கு அவர்களுக்கு உதவும் என்பதற்கும் அப்பால்.. அவர்கள் உண்மையில் உண்மையைச் சொல்லியா செயற்படுகிறார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது. 

யாழ் நகரில் ஊதுபத்தி விற்ற ஓர் சிறுவனை விசாரித்த இடத்தில் அவன் தன் தங்கையின் பள்ளிக்கூட பாக் வாங்குவதற்காவும் செலவுக்காகவும் ஊதுபத்தி விற்பதாகச் சொன்னான். பள்ளிக்கூடம் முடிந்த கையோடு அந்தப் பையன் ஊதுபத்தி விற்கக் கண்டோம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

ஊதிபத்தி விற்கும் பாடசாலைச் சிறுவர்களின் மறுவாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு அமைப்பை உருவாக்கி உதவலாமே. நாம் வழங்கும் சிறுதொகை பணம் என்பது எவ்வளவுக்கு அவர்களுக்கு உதவும் என்பதற்கும் அப்பால்.. 

யாழ் நகரில் ஊதுபத்தி விற்ற ஓர் சிறுவனை விசாரித்த இடத்தில் அவன் தன் தங்கையின் பள்ளிக்கூட பாக் வாங்குவதற்காவும் செலவுக்காகவும் ஊதுபத்தி விற்பதாகச் சொன்னான். பள்ளிக்கூடம் முடிந்த கையோடு அந்தப் பையன் ஊதுபத்தி விற்கக் கண்டோம். 

நெடுக்கர்,

எனது அபிப்பிராயம், இது போன்ற சிறுவர்களிடம், முடிந்த அளவு பொருட்களை வாங்கி ஊக்கிவிக்க வேண்டும். அவர்களை அதிலிருந்து வெளியேற வைக்கக்கூடாது. சிறுவன் பாடசாலை போவதும் சிறப்பானது.

உலக வரலாறில் பெரும் தொழிலதிபர்களின் ஆரம்பகாலம் இவ்வாறு தானே இருந்திருக்கிறது.

தமிழகத்தில் கூட, ஏழைகளிடம் பேரம் பேசாது வாங்க சொல்கிறார்கள்.

Edited by Nathamuni

Copyright Global Tamil News

Read more at: http://globaltamilnews.net/2019/118197/

அன்பே சிவம் என்பர்.

கடவுளின் பெயரால் கோவில்களுக்கு கொட்டி,அள்ளி, கிள்ளிக் கொடுக்கின்றவர்களை விட, இறையின் பெயரால், மதத்தின் பெயரால் இவ்வாறான செயல்களை செய்கின்றவர்களை வணங்கி வாழ்த்தி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஊருக்கு போகும் ஒவ்வொரு தடவையும் தெருக்களில் விட்டேத்தியாக திரியும் நாய்களை கூட்டம் கூட்டமாக காணலாம். சும்மா இருக்காமல் தெருவில் போகும் வாகனங்களையும் தம் எல்லை வரை விரட்டிக் கொண்டு வந்து தாமும் அடிபட்டு, வாகனங்களையும் விபத்துக்குள்ளாக்கி இவை செய்யும் சேட்டைகள் கனக்க.

மாடாகவோ ஆடாகவோ பேட்டுக் கோழியாகவோ போன்ற பெறுமதிமிக்க உயிரினமாக இல்லாமல் மனுசருக்கு வெறுமனே நன்றியை தவிர வேறோன்றையும் தராத இந்த அப்பாவி உயிரினங்களுக்காக காப்பகம் ஒன்றை திறந்த சிவபூமி அமைப்பினருக்கு அன்பும் பாராட்டுகளும் நன்றியும்.

Copyright Global Tamil News

Read more at: http://globaltamilnews.net/2019/118197/
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

உங்களிற்க்கு உங்கள் பிரச்சனை.எது எப்படியோ அந்த அமைப்பிக்கு பாராட்டுக்கள்.அதோட பெட்டடை நாய் தாய்மார்களுக்கு கருத்தடை செய்வது இன்னும் பிரச்சனைகளை குறைக்க்கும்;

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வீதி விபத்துகளில் முக்கியபங்கு நாய்களிற்கு இருக்கிறது, குறிப்பாக மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது திடீரென்று வந்து விபத்தினை ஏற்படுத்திவிடும்.
அநாதரவாய் இருக்கும் நாய்களை காப்பகத்தில் பராமரிப்பதன் மூலம் விசர் நாய்கடி போன்றவற்றை குறைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நாய்களுக்கெல்லாம் சைவ உணவா கொடுப்பினம் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

உந்த நாய்களுக்கெல்லாம் சைவ உணவா கொடுப்பினம் 🤔

ஒம்  ஒம்....சாம்பாறும் சோறும் என்று சொன்னவர் ....ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை பளை வரட்டும் ஒரு கூடை தேங்காய் வாங்கி எறியுரன் ( ஐ மீன் உடைக்கிறன்)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

அடுத்த முறை பளை வரட்டும் ஒரு கூடை தேங்காய் வாங்கி எறியுரன் ( ஐ மீன் உடைக்கிறன்)

தெருவில் நின்றால் கல்லெறிவோம்..
காப்பகத்தில் நின்றால் தேய்காய் ஏறிவோம் ...😀😁

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, putthan said:

தெருவில் நின்றால் கல்லெறிவோம்..
காப்பகத்தில் நின்றால் தேய்காய் ஏறிவோம் ...😀😁

வைரவர் சாமிக்கு தேங்காய் ..

"பளை வரட்டும் ஒரு கூடை தேங்காய் வாங்கி எறியுரன்" - இதற்கு இன்னும் ஒரு பின்னணி இருக்கிறது ... நாதமுனி, கு.சா அண்ணா மேலதிக தகவல் தருவார்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தர்ப்பம் அந்த நாய்களுக்கு உணவளிக்க வந்தால் இந்த சிவசேனை அமைப்பின் வேலையை அந்த ஒரு நேர சாப்பாட்டுடன் முடித்து வைப்பன் .

மனிசன் சொந்த இடத்துக்கு போக முடியவில்லை இன்னும் தெரு தெருவா பிச்சை எடுக்காத குறையில் சிறுவர்கள் சிறுமிகள் நேற்று பிள்ளயார் கோவிலாக இருந்தது விடிந்ததும் புத்தர் கோவிலாகுது அதை தடுக்க வக்கில்லை நாய் வளர்த்து விளையாடினம் .

எல்லாரையும் திருப்தி படுத்தணும்னா அது விபச்சாரியால தான் முடியும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, அபராஜிதன் said:

எல்லாரையும் திருப்தி படுத்தணும்னா அது விபச்சாரியால தான் முடியும் 

அதென்னண்டு உங்களுக்கு தெரியும்? 😎

நல்ல முயற்சி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.