Jump to content

கிரேக்கச் சுற்றுலா - பயணக் கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான  கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது.

ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து  பதிவுசெய்தாகிவிட்டது.

இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள்.

லண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது.

தொடருந்து நிலையம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு அங்கேயே ஒரு எதென்சின் வரைபடத்தையும்  வாங்கிக்கொண்டு வெளியே வந்து காத்திருக்கிறோம். கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் வரைபடத்தில்  பெயர்கள் எழுதப்பட்டிருந்தது நின்மதியாக இருந்தாலும் சரியான தொடருந்தைப் பிடித்துச் சரியானஇடத்துக்குப் போய்ச் சேர வேண்டுமே என்று மனதில் ஒரு படபடப்பு ஒட்டிக்கொண்டே இருந்தது. தொடருந்து வர இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. காவிருக்கைகள் இருக்கும் இடங்கள் எல்லாம் ஆட்கள் இருக்கின்றனர். வேறுவழியில்லாமல் ரெயின் வரும் வரை நிக்கத்தான் வேணும் என்கிறேன். நாலுமணித்தியாலம் இருந்து தானே வந்தனாங்கள் அரை மணித்தியாலம் நில்லன் என்று கூறிவிட்டு மனிசன் பிராக்குப் பார்க்க வேறுவழி யில்லாது  நானும் தண்டவாளத்தின் பலகைகளையாவது எண்ணிக்கொண்டிருப்போம் என்றால் அந்தத் தொடருந்துத் தடத்துக்கு பலகைகளைக் காணவில்லை. என்னப்பா இது இங்க பாருங்கோ பலகையளைக் காணேல்லை என்று நான் சொல்ல, எனக்கு உதைப்பற்றித் தெரியாது. என்னைக் கேட்காதை. வேறை ஏதும் டெக்னோலஜி பாவிச்சிருப்பான்கள் என்கிறார் மனிசன்.

தொடருந்து வருவதாக அறிவிக்க, இது சரியான தொடருந்துதானா என்ற சந்தேகம் எழ, பக்கத்தில நிக்கிறவனிட்டைக் கேளுங்கப்பா என்கிறேன் மனிசனிடம். மனிசன் கேட்க அவனுக்கோ ஆங்கிலம் விளங்கவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு பெண்ணும் நிற்கிறார். அவளிடம் கேளுங்கோ என்கிறேன். இந்த நாட்டில தெரியாத ஆட்களிடம் பெண்கள் கதைப்பார்களோ தெரியாது. எதற்கும் நீ போய்க் கேள் என்கிறார் மனிசன். நான் போய் கேட்டதும் அவளுக்கும் விளங்கவில்லை. தூரத்தே தொடருந்து வருவது தெரிகிறது. நான் வரைபடத்தில் இறங்கவேண்டிய இடத்தைக் காட்டி தொடருந்தையும் கை காட்டுகிறேன். அவளுக்கு விளங்கியதோ இல்லையோ. ஓம் என்று தலையை இங்குமங்கும் ஆட்டுகிறாள்.

சரி தொடருந்தை விட ஏலாது. முதல்ல ஏறுவம். பிறகு உள்ள ஆரிட்டையாலும் கேட்பம் என்கிறேன். இதுவாய்த் தான் இருக்கும். சும்மா பயந்து என்னை டென்ஷன் ஆக்காதே என்றபின் நான் எதுவும் கதைக்கவில்லை. தொடருந்து வந்து நின்றதும் பார்த்தால் நிறையச் சனம். இருக்கவும் இடம் கிடைக்காது போல என்று விசனத்துடன் நிக்க, நிறையப்பேர் எதென்சில் இறங்க மனிசன் விரைவாக ஏறி எனக்கும் தனக்குமாக இடம் பிடிச்சிட்டார்.

சரியாக ஒரு மணி நேர பயணத்தில் எதென்ஸ் போய் இறங்கியாச்சு. வரை படத்தைப் பார்த்துப் போனால் இடம் பிடிபடவில்லை. வீதிகளை பார்க்க பாழடைந்துபோய் பலகாலம் பயன்படுத்தாத மூடிய கடைகளும் புழுதியான வீதிகளும்.... என்னடா இது உதவாத இடத்தில் தங்குமிடத்தை எடுத்துவிட்டோமோ என்று புழுக்கத்துடன் போனால் வீதியின் மறுபுறம் நல்ல சுத்தமாக இருக்க, மனதில் ஒரு நின்மதி ஏற்பட்டது. வரவேற்பிடத்தில் போய் எம் பதிவைச் செய்துவிட்டு லிப்ரில் ஏழாம் மாடியை அடைந்து எமது அறையைத் திறந்து குளியலறையையும் திறந்துபார்த்தபின் தான் நின்மதியானது மனது. காலநிலையும் 20 பாகை செல்சியஸ் என்பது வருமுதலே அறிந்ததுதான் எனினும் இதமான காலநிலை மனத்துக்குஒரு மகிழ்வைத் தர பால்கனியில் போய் நின்று பார்க்க மேலே உயரத்தில் ACROPOLIS OF ATHENS என்னும் இடிபாடுகளுடைய கோவில் தெரிகிறது. அதை நாளை பார்க்கப் போகிறோம் என்றதுமே மனதில் ஒருவித பரவசம் வந்து சேர்க்கிறது.

விமானத்தில் தந்த உணவுக்குப் பின்னர் எதுவும் உண்ணாததால் பசிக்கிறது. நேரம் மாலை நான்குமணி. கீழே சென்று உணவுவிடுதியைப் பற்றிக் கேட்க, ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஒருவருக்குப் 10 யூரோஸ் என்கிறாள் வரவேற்புப் பெண். இனி வெளியே சென்று உணவகம் தேடி உண்பதிலும் இங்கேயே உண்பது என முடிவெடுத்து, அங்கு பார்க்கும் இடங்கள்பற்றி விசாரிக்க இன்னொரு தெளிவான வரைபடத்தைத் தருகிறாள் அவள். ஐந்து நிமிடம் நடந்து போனால் பஸ் தரிப்பிடம் வரும் அங்கே மஞ்சள் உடையுடன் ஒருவர் நிற்பார். அவர் உதவுவார் என்கிறாள்.

மேலே அறைக்குச் சென்று ஒருமணிநேரம் படுத்திருந்துவிட்டு எட்டாம் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்றால் நாம் மட்டும் தான் அங்கே. விதவிதமான சலாட்டுகள், ஒலிவ் பழங்கள், பழங்கள் என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய இரவு முதன்மை உணவு மாட்டிறைச்சியும் உருளைக்கிழங்கும் அல்லது கோழியும் உருளைக்கிழங்கும் அத்தோடு Spaghetti உம் என்று கூற நாம் மாட்டைத் தெரிவுசெய்துவிட்டு சலாட், ஒலிவ் போன்றவற்றை எடுத்துவந்து உண்ணவாரம்பிக்கிறோம்.

 

Goldan City Hotel

57486003_10211879732982315_3629747196234

57460085_10211880326997165_5752192069661

mq2.jpg?sqp=CPDr8-UF&rs=AOn4CLBjoz6qrB1Y

 

 

தொடரும்

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

57551866_10211885273000812_1900185315201

 

57576976_10211885269360721_7932220480159

பிரதான உணவு பெரிதாகச் சூடாக இல்லாமல் இருக்க திருப்பி சூடாக்கி எடுத்துவரச் சொல்வோமா என்று எண்ணினாலும் சரியான பசி காரணமாக நான் உண்ணத்தொடங்க, கணவர் பொறுப்பானவரைக் கூப்பிட்டு உணவு சூடில்லை என்கிறார். அவன் மன்னிக்கவும் என்றுவிட்டு கணவனின் தட்டை எடுத்துப் போக நான் பரவாயில்லை என்று விட்டு உண்கிறேன்.
10 யூரோசுக்கு உணவு பரவாயில்லை. ஆட்களே இல்லை. அப்பிடியிருந்தும் இப்பிடி ஆறிய உணவைக் கொண்டு வருகிறான் எனப் புறுபுறுத்தபடி மனிசன் இருக்க சூடாக்கிய உணவை கொண்டுவந்து வைக்கிறான் அவன். இனிமேல் இங்க சாப்பிடுறேல்லை என்று மனிசன் சொல்ல காலை உணவுக்கும் இங்குதான் என்கிறேன் நான். பார்ப்பம். நாளைக்கு விடியச் சாப்பிட்டுவிட்டு சரியில்லை என்றால் கான்சல் பண்ணுறதுதானே என்கிறார் மனிசன். காலை உணவு பற்றி விசாரிக்க 7 மணிக்கு உணவகம் திறப்பார்கள் என்றான் அவன்.

மணி  ஏழேகால் ஆகிவிட்டுது. இருட்டும் பட்டிட்டுது. இனி வெளியில போகவேண்டாம்.நாளைக்கு வெள்ளண எழும்பிச் சாப்பிட்டிட்டு உடனே இடங்களைப் பார்க்கக் கிளம்பவேனும் என்கிறார். என்னப்பா விடுமுறையிலாவது கொஞ்ச நேரம் படுக்க விடுங்கோவன் என்கிறேன். நித்திரை கொள்ளவே காசைச் சிலவழிச்சு வந்தனி? நிக்கிறது பத்தே பத்து நாள். அதுக்குள்ளே பாக்கக் கூடியதை பாத்திட்டு வீட்டை போய் நித்திரையைக் கொள்ளு என்று கூறிவிட்டுப் போக எரிச்சலோடு நான் பின்னால் போகிறேன்.

கன நாட்களுக்குப் பிறகு பிள்ளை குட்டியள் இல்லாமல் தனியா வந்திருக்கிறம் என்ன என்று எதோ வீட்டில தனிமையே கிடைக்காத கணக்கா மனிசன் சொல்ல தனியா வந்து மாட்டுப்பட்டாச்சே மனிசனிட்டை என்று துணுக்குறுகிறது மனம். இரவு உடைக்கு மாறி அடுத்தநாள் எங்கெங்கெல்லாம் போகவேண்டும் என்று மனிசன் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு நித்திரை கண்ணைச் சுற்றுகிறது. என்னண்டடியப்பா படுத்த உடன உனக்குமட்டும் நித்திரை வருது? நீ கூப்பிட்டாலும் வரமாட்டாய். நான் வாறன் என்றபடி மனிசன் என்னருகில் வந்தால் கட்டில்களுக்கிடையில ஒரு பத்து அங்குலத்துக்கு இடைவெளி.

நான் ஒரே கட்டில் தானே புக் பண்ணின்னான். இதென்ன இந்தளவு இடைவெளி என்று மனிசன் டென்ஷனாக நான் சிரிக்கிறேன். மனுசனுக்கு கோவம் வந்து உடனே ரிசெப்சனுக்கு போன் செய்யிறார். நான் உடனே போனைக் கட் செய்துபோட்டு இப்ப இருட்டுக்குள்ள அவங்கள் ஒண்டும் செய்ய மாட்டாங்கள். பேசாமல் படுங்கோ என்றுவிட்டு AC ஐ போட்டுவிட்டு குயிலெட்டால் போர்த்துக்கொண்டு படுக்கிறேன்.  

நல்ல தூக்கத்தில் யாரோ உலுப்ப ... கண் திறந்து பார்த்து விட்டு எத்தினை மணி என்கிறேன். 6.30 எழும்பு. போய் குளி என்று மனிசன் விரட்ட, ஏழுமணிக்கு எழும்பினால் காணும் தானே என்று தலையைப் போர்வையால் மூட மனிசன் கால் பக்கம் நின்று போர்வையை வில்லன் போல் இழுக்கிறார். பின்னேரம் வந்து வடிவாய் படு என்கிறார் வில்லன். சரி இனி எப்பிடியும் என்னை படுக்கவே விடாது என்று தெரிய  எழுந்து சென்று குளித்துவிட்டு வர மனிசன் வெளிக்கிட்டுத் தயாராய் நிக்கிறார்.

நாங்கள் இருந்ததுக்கு மேல் மாடியில் தான் உணவகம் என்பதனால் கொஞ்ச நேரம் பொறுத்துப் போவம் என்கிறேன். எனக்கு உடன கோப்பி குடிக்க வேணும். எழும்பி எவ்வளவு நேரம் ஆச்சு என்றபடி மனிசன் எழுந்திருக்க நானும் கதவைப் பூட்டிவிட்டுப் போகிறேன் பின்னால்.

அங்கு சென்றால் மூன்றுபேர் எமக்குமுன்னரே வந்து காத்திருக்க நாம் போன பின்னரே கதவைத் திறக்கின்றனர்.
உணவு வகைகள் தாராளமாக விதவிதமாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. பார்க்கவே பசி எடுக்கிறது. தட்டுக்களில் வேண்டிய உணவுகளை எடுத்து  வைத்துக்கொண்டு கோப்பியையும் ஊற்றிக்கொண்டு மேசையில்சென்று அமர்கிறோம். அதிகமாக எமக்குத்தெரிந்த பாண் வகை, சீஸ் வகை, சலாமி வகைகள், அவித்த முட்டை, ஆம்லெட், ஒலிவ்ஸ் என்று விதம் விதமாக இருந்தாலும் வித்தியாசமான உணவு வகைகளைக் காணாமல் இவைதானா என மனம் எண்ணுகின்றது. நிறைய பழ வற்றல்கள், கேக் வகைகள் சில மட்டும் புதியனவாக இருக்கின்றன.  

உணவு உண்டபடியே கண்ணாடிக்கு கதவுகள் யன்னல்களூடே வெளியே பார்க்க வெள்ளைக் கற்களை அடுக்கியது போல் கட்டடங்கள் மட்டுமே தெரிகின்றன. ஒன்றிரண்டு சிறிய மரங்களைத் தவிர பெரிய மரங்களையே காணவில்லை.

 உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்து கைப்பை தொப்பி கண்ணாடி என்பவற்றை எடுத்துக்கொண்டு கீழே வருகிறோம். அழகிய இளம்பெண் கீழே ரிசெப்ஷனில் நிக்கிறாள். இடங்களைச் சுற்றிக்காட்டும் பஸ் தரிப்பிடத்துக்கு எப்படிப் போகவேண்டும் என்று கேட்கிறேன். இரண்டு பக்கத்தாலும் போகலாம் என்று அவள் சிரித்தபடி கூறுகிறாள். உடனே என் கணவர் எமக்கு நீ வேறு அறை தா என்கிறார். ஏன் என்ன பிரச்சனையென்று அவள் கேட்க நாங்கள் இருவரும் கணவன் மனைவி.ஒரே கட்டில் இருக்கும் அறைதான் நான் புக் செய்தது. எமது அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கின்றன என்கிறார். அறைகள் எதுவுமே காலியாக இல்லை. என்கிறாள் அவள். அப்பிடி என்றால் நாங்கள் வேறு ஹோட்டல் பார்க்கிறோம் என்கிறார். எனக்கோ கூச்சமாக இருக்கிறது. ஏனப்பா இப்பிடிக் கதைக்கிறியள். விசரே உங்களுக்கு. உந்தக் கட்டிலுக்காக இனி சூட்கேஸை இழுத்துக்கொண்டு அலையப் போறியளோஎன்று திட்டுகிறேன். நீ பேசாமல் இரு. அவள் ஏதும் செய்வாள் என்று மனிசன் சொல்லி வாய் மூட முதல் " நீங்கள் வெளியே போய்விட்டு வரும்போது உங்கள் கட்டிலை சரியாக்கி வைக்கிறோம்" என்கிறாள் அப்பெண்.
 
பாத்தியா நாங்கள் பேசாமல் இருந்தால் அவையும் நல்லா ஏமாற்றுவினம். நான் கனிமூன் மூட்டோட வந்திருக்கிறன். சும்மா விடுவனே என்று அசட்டுச் சிரிப்புச் சிரிக்க எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது. பொல்லுப் பிடிக்கிற வயதிலும் உந்த ஆம்பிளையளுக்குக் கனிமூன் கேட்கும். வாயை மூடிக்கொண்டு வாங்கோ போவம் என்று நான் முன்னால் நடக்கிறேன்.
மீண்டும் முதல்நாள் வந்த வீதி புழுதி படிந்து சிறுநீர் கழித்த நாற்றத்தோடு பார்க்க அருவருப்பாக இருக்க அடுத்த வீதியைத் தெரிவு செய்து அவ்வீதியால் செல்கிறோம்.ஒரு பத்துநிமிடம் நடக்க ஒரு நாற்சந்தியுடன் கூடிய சனநடமாட்டத்துடன்  வாகனங்கள் செல்லும் வீதி தெரிகிறது. அங்கே சென்று தேடினால் ஒரு பஸ்  தரிப்பிடத்தில் மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் அந்தந்த நிற பஸ்களுடன் விளம்பரம் தெரிய அதைநோக்கிப் போக அதற்கு கீழே மஞ்சள் நிற உடையுடன் ஒருபெண் நாங்கள் வைத்திருப்பது போல் வரைபடங்கள் வைத்தபடி நிற்கிறாள்.

அவளிடம் போகவே  அவள் எமக்கு இந்த பஸ் நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களுக்கு எல்லாம் போகும். இரண்டு நாட்கள் முழுவதும் நீங்கள் இதில் பயணம் செய்யலாம். விரும்பிய இடத்தில் இறங்கிவிரும்பிய இடத்தில் ஏறலாம். காலை எட்டரை தொடங்கி மாலை ஐந்தரை வரை பஸ் ஓடும். ஒருவருக்கு இருப்பது யூரோக்கள் என்கிறாள். நாற்பது யூரோக்களைக் கொடுத்துவிட்டு பஸ்ஸுக்காகக் காத்திருக்க அரை மணி நேரத்தில் பஸ் வருகிறது. மேலே திறந்தபடியான சுற்றுலா பஸ்.

நானும் கணவரும் முன்னதாக ஏற முற்பட ஒரு பன்னிரண்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவன் எம்மை இடித்துக்கொண்டு முதலில் ஏறுகிறான். அவனுக்குப் பின்னால் நாம் வேகமாக ஏறி முன் இருக்கை ஒன்றுக்குப் போக அவன் காலை நீட்டி எம்மைப் போக விடாமல் மறித்தபடி ஏதோ மொழியில் சொல்கிறான். அவன் இடம் பிடிக்கத்தான் ஓடி வந்திருக்கிறான் என்றபடி இரண்டாவது வரிசையில் என் கணவர் இருக்கப் போக அங்கும் இருக்க வேண்டாம் எனக் கைகளால் காட்டுகிறான்.

அவனின் முகத்துக்கு நேரே கையை நீட்டிப் போடா என்றுவிட்டு மனிசன் சீற்றில் இருக்க நானும் இருக்கிறேன். லண்டனில எண்டால் நான் முன் சீற்றிலயே இருந்திருப்பன். இதுதெரியாத ஊர் எண்டபடியா அடக்க ஒடுக்கமா வாயே திறக்காமல் இருந்தன். நாம் இருந்த கையோடு ஒரு எட்டுப் பேர் கொண்ட கும்பல் மேலே வந்து பொடியன் பிடித்த இடங்களிலும் எமக்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள இருக்கைகளில் இருக்க பெடியன் எம்மைக் காட்டி எதோ சொல்ல அவர்களும் ஏதோ சொல்லிவிட்டு அமர்கின்றனர். ஐந்து நிமிடங்களில் பஸ் வெளிக்கிடுகின்றது. வீதியின் இரு மருங்கிலும் தோடை மரங்கள் அழகுக்காக நடப்பட்டுக் காய்த்துக் குலுங்குவது  பார்க்க அழகாக இருக்கிறது.

 

58373255_10211885264320595_1071699524101

58377780_10211885265080614_2965910960700

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள் தொடருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கென்னமோ எதென்சுக்கு போய் கட்டில் கேட்டு சண்டை பிடிச்சதை பார்க்க சுற்றிப்பார்க்க போன்மாதிரி தெரியல :innocent:

நாட்டு அனுபவங்கள் நல்ல படிப்பினையாக இருக்கும் தொடரட்டும் 

3 hours ago, நிலாமதி said:

நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள் தொடருங்கள் 

இஞ்ச பார்ரா சுவாரஸ்யமாக இருக்கிறதாம் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நிலாமதி said:

நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள் தொடருங்கள் 

மிக்க நன்றி அக்கா. வருகைக்கும் கருத்துக்கும் பச்சைக்கும்.

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கென்னமோ எதென்சுக்கு போய் கட்டில் கேட்டு சண்டை பிடிச்சதை பார்க்க சுற்றிப்பார்க்க போன்மாதிரி தெரியல :innocent:

நாட்டு அனுபவங்கள் நல்ல படிப்பினையாக இருக்கும் தொடரட்டும் 

இஞ்ச பார்ரா சுவாரஸ்யமாக இருக்கிறதாம் :)

எனக்கும் போனபிறகுதானே தெரியும் சுத்திப்பாக்கிறது மட்டும் இல்லை மனிசன்ர நோக்கம் எண்டு

🤓

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சைகளை வழங்கி என்னை உற்சாகப்படுத்தியிருக்கும் உறவுகள் நிலாஅக்கா,நுணாவிலான், மருதங்கேணி, தனிக்காட்டு ராஜா, மீரா, சுவி அண்ணா, தமிழினி, பெருமாள் ஆகியோருக்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கும் போனபிறகுதானே தெரியும் சுத்திப்பாக்கிறது மட்டும் இல்லை மனிசன்ர நோக்கம் எண்டு

ஹாஹா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா 

தனிமை தேவைப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/23/2019 at 12:31 AM, நிலாமதி said:

நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்கள் தொடருங்கள் 

இதிலை என்ன சுவாரசியம் கிடக்கெண்டு தெரியாமல் கேக்கிறன்???
ஓரு கட்டில் கிடைக்காமால் கொத்தார் பட்ட கஷ்டத்தை நினைக்க எனக்கு கண்ணீர் ஆறாய் ஓடுது...tw_weary:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்காவ எழுத விடுங்கோப்பா, முதலே நக்கலடிச்சால் பிறகு நிறைய எழுதமாட்டா!

அது சரி மூக்கில என்ன காயமக்கோய்?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பசிவந்தால் ருசி தெரியாது,

நித்திரை வந்தால் பஞ்சனை தேவையில்லை,

ஹனிமூனுக்கு கட்டில் எதுக்கு, கட்டாந்தரையே போதும்....!  👍

41 minutes ago, ஏராளன் said:

அக்காவ எழுத விடுங்கோப்பா, முதலே நக்கலடிச்சால் பிறகு நிறைய எழுதமாட்டா!

அது சரி மூக்கில என்ன காயமக்கோய்?!

வண்ணக்கிளி செய்த மாயம்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
 
 
7 minutes ago, suvy said:

வண்ணக்கிளி செய்த மாயம்.....!  😁

கொத்தார் செய்த மாயம்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, suvy said:

பசிவந்தால் ருசி தெரியாது,

நித்திரை வந்தால் பஞ்சனை தேவையில்லை,

ஹனிமூனுக்கு கட்டில் எதுக்கு, கட்டாந்தரையே போதும்....!  👍

 

அத்தார் என்னத்திற்கு கட்டிலுக்கு சண்டை பிடித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம், வீட்டுக்காரரைப் பார்த்தால், ரொம்ப அப்பாவியா தெரியுறார்..! :)

ஏம்மா இப்படி..? 🤔

சிதம்பரம் - மதுரையாக சூழலுக்கேற்றபடி மாறி இருந்தால்தானே சலிப்பு தட்டாமல் செல்லும்..? 😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

இதிலை என்ன சுவாரசியம் கிடக்கெண்டு தெரியாமல் கேக்கிறன்???
ஓரு கட்டில் கிடைக்காமால் கொத்தார் பட்ட கஷ்டத்தை நினைக்க எனக்கு கண்ணீர் ஆறாய் ஓடுது...tw_weary:

அத்தார் கஷ்டப்பட்டால் உங்களுக்கென கண்ணீர் வரவேணும் ?????🙄

6 hours ago, ஏராளன் said:

அக்காவ எழுத விடுங்கோப்பா, முதலே நக்கலடிச்சால் பிறகு நிறைய எழுதமாட்டா!

அது சரி மூக்கில என்ன காயமக்கோய்?!

என்ர மூக்கு நல்ல கூர் என்று பாக்கிறவை எல்லாம் நாவூறுபடுத்தி...... பக்டீரியாவுக்குப் பொறுக்கேல்லை.மூக்கைப் பதம்பாத்து இப்ப ஓகே.

5 hours ago, suvy said:

பசிவந்தால் ருசி தெரியாது,

நித்திரை வந்தால் பஞ்சனை தேவையில்லை,

ஹனிமூனுக்கு கட்டில் எதுக்கு, கட்டாந்தரையே போதும்....!  👍

வண்ணக்கிளி செய்த மாயம்.....!  😁

குளிருக்கு கட்டாந்தரை குலைப்பன் எல்லா அடிக்கும் ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Nathamuni said:

தனிமை தேவைப்பட்டிருக்கிறது.

வளர்ந்த பிள்ளையளை வச்சுக்கொண்டு கிழடுகள் துள்ளி விளையாடலாமே ??/😀

4 hours ago, MEERA said:

அத்தார் என்னத்திற்கு கட்டிலுக்கு சண்டை பிடித்தார்.

அத்தாரைக்கேட்டுச் சொல்லுறன் 😃

3 hours ago, ராசவன்னியன் said:

பாவம், வீட்டுக்காரரைப் பார்த்தால், ரொம்ப அப்பாவியா தெரியுறார்..! :)

ஏம்மா இப்படி..? 🤔

சிதம்பரம் - மதுரையாக சூழலுக்கேற்றபடி மாறி இருந்தால்தானே சலிப்பு தட்டாமல் செல்லும்..? 😍

பாத்தா எப்பவும் அப்பாவியாத்தான் தெரிவார். :innocent:

முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஒண்டாத்தான் குப்பை கொட்டுறம் அண்ணா 😎

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேருந்து இரண்டு மூன்று இடங்களில் நின்றும் நாம் இறங்கவில்லை.முதலில் அக்றோபொலிஸ் என்னும் மலையில் எதெனா என்னும் பெண் தெய்வத்துக்காக கடத்தப்பட்ட கோவிலைத்தான் முதலில் பார்க்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். எம்மைக் கொண்டுபோய் அந்த மலையின் அடிவாரத்தில் ஓரிடத்தில் இறக்கினார்கள். அனைத்து வாகனங்களும் அதற்கும் அங்கால் போகாது. நாம் சென்ற நேரம் விடுமுறையைக் கழிக்க எக்கச்சக்கமான  சனங்கள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தார்கள். மேலே சென்று கோயிலைப் பார்ப்பதற்கு ஒருவருக்கு 10 யூரோக்கள். கடும் ஏற்றமாக இல்லாமல் ஒரு பாதையும், ஒற்றையடிப் பாதை போன்று ஒரு பாதாயும் இருக்க நாம் ஆடிப்பாடி சீரான பாதையால் நடந்து சென்றோம்.

ஒரு ஐந்து பாகை குறைவாக இருந்தாலே குளிர்வதுபோல் இருந்திருக்கும. அன்றைய வெப்பநிலை 19 O செல்ஸியஸ் என்பதனால் எந்தவித சலிப்பும் இன்றி மகிழ்வாக இருந்தது. இடையேயும் சிறு கட்டட இடிபாட்டுடன் கூடிய பிரமாண்டமான மதில்கள் பார்ப்பதற்கு ஆச்சரியத்தைத் தந்தன.

 

58382579_10211896401999030_4537288182609

 

58543926_10211896402479042_8176542795759

57840031_10211896405639121_7842244368462

58375662_10211896409199210_1640954910419

 

பெருமரங்கள் என்று சொல்வதற்கு எதுவுமே காணப்படவில்லை. இடையிடையே புதிதாக நடப்பட்ட சில மரங்களும் ஒலிவ் மரங்களும் காணப்பட்டன. உச்சியில் ஏறினால் பிரமாண்டமான கோயில் ஒன்று இடிபாடுகளோடு காணப்பட்டாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதனால் வாய் பிளந்து பலரும் அதை பார்ப்பதுபோல் நாமும் சுற்றிவந்து பார்த்துப் பரவசமடைந்தோம்.

பல பாரந்தூக்கிகளை வைத்து இடிபாடுகளை புனரமைத்துக்கொண்டிருந்தார்கள் பலர். ஒரே வெள்ளை நிறக்  கற்களில் பலவற்றை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி செதுக்கிய உயரமான தூண்கள் பல சிதறித் துண்டு துண்டாகி பரவலாய் விழுந்து கிடந்தன. புதைந்து போய்க் கிடந்தவற்றையும் எடுத்துக் பொருத்திக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே எனக்கு களைப்பாக இருந்தது. ஏனெனில் அத்தனையையும் பொருத்தி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும்.

எமது கட்டடக்கலைக்கும் சிற்பங்களும் எவையும் ஈடாகமுடியாதுதான் எனினும் அவர்களின் கட்டடக்கலையையும் சாதாரணமான ஒன்றல்ல என்று புரிந்தது.  அவற்றின் பிரமாண்டம் மலைக்கவைத்தது. இதனை பெருங்கற்களை  இந்த மலையில் எடுத்து வந்து இத்தனை பெரிய கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்.? எத்தனை பேரை வேலை வாங்கியிருப்பார்கள்.  

 

58384113_10211896410239236_3228919880140

58383635_10211896410439241_3763993013320

 

இடையில் நின்று பார்த்தபோது கீழே இந்த அரங்கு தெரிந்தது.

 

58372467_10211896410679247_4510013941983

58373465_10211896411159259_8104411384118

58375366_10211896413039306_8996218453589

58384389_10211896484961104_3174015556554

 

கீழே அக்றோபொலிஸ் பற்றி எழுதியிருப்பவர் திரு வாசுதேவன். நான் கிரேக்கத்தின் படங்களைப் போட்ட போது அவர் என் முகநூலில் எழுதியதை இதில் இணைக்கிறேன்.

ஐரோப்பாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட பிரமாண்டமான நகரம் எதென்ஸ் ஆகத்தான் இருக்க முடியும். எதென்ஸில் தான் முதலில் ஜனநாயகம் பிறந்தது. பெரிக்கிளீஸ் தான் எதென்ஸ் நகரின் காரணகர்த்தா. எதென்ஸ் நகரும் அதன் மக்களும் பெரிக்கிளீஸின் நிர்வாகத்தில் செழிப்பை அனுபவித்தார்கள். பெரிக்கிளீஸால் எல்லோருக்கும் பல உரிமைகள் வழங்கப்பட்டன. சிற்றரசுகளாகப் பரிமாணம் கொண்டிருந்த கிரேக்கத்தில் பெரிகிளீஸின் இராணு நிர்வாகமே பாதுகாப்பு வழங்கியது. இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக மற்றைய சிற்றரசுகளிமிருந்து பெறப்பட்ட வரியை முதலாக்கி பெரிக்கிளீஸ் பாரிய கடற்படையையும் உருவாக்கினான். பாரிய கட்டுமானங்களைச் செய்தான். ஏதென்ஸ் நகரத்தைச் சுற்றி பாரிய பாதுகாப்பு மதிலைக்க கட்டினான்.
அக்றோபொலிஸ் மலைப்பீடத்தில் எதெனா தேவதைக்கு உலமே வியக்கும் வண்ணம் ஆலயம் கட்டினான். பின்னால், இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும், டாவின்சியும்அக்கட்டடக்கலையை விதந்துரைத்தான்.
*
வருடத்திற்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவனாக இருபத்தொன்பது தடவை தெரிவு செய்யப்பட்டான். அத்தனை செல்வாக்குள்ள தலைவனாக விளங்கினான் பெரிக்கிளீஸ். புத்திஜிவிகளுக்கு பாரிய உதவிகளை வழங்கினான். அவர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டான். எதென்ஸ் நகரை விஸ்தரிந்து புதிய நகரங்களை உருவாக்கினான்.
*
ஆனால், எதெனிய அரசியல்வாதிகள் அவனில் பாரிய பொறாமை கொண்டிருந்தார்கள். பெரிக்கிளீஸின் நெருங்கிய நண்பர்கள் சிலரைச் சதியால் கொன்றார்கள். ஸ்பாட்டா சிற்றரசு தொடர்ச்சியாக எதென்ஸ் படைகளுக்கு அஞ்சிய வண்ணமிருந்தது. இருப்பினும் ஸ்பாட்டா அரசு தரைப்படையில் மிகுந்த பலத்தைக் கொண்டிருந்தது. கடல்படையில் மிகவும் பலவீனமாக இருந்தது. ஸ்பாட்டா எதென்ஸ் க்கு எதிராகப் போர் தொடுத்தபோது பெரிக்கிளீஸீன் படைகள் அவற்றைத் தோற்கடித்தன. ஒரே வருடத்தில் பத்துத் தடவைகள் போர்தொடுத்தன. எதென்ஸ் நகரைத் தோற்கடிக்க முடியவில்லை
*
இருப்பினும் -430 ல் பெருநோயொன்று எதென்ஸ் நகரைத்தாக்கியது. எதென்ஸ் நகர அரசியல்வாதிகள் பெரிக்கிளீஸின் நடத்தை காரணமாகவே அவ்வாறு நோய் உருவாகியது என்று குற்றம் சுமத்தினார்கள். எது எப்படியிருப்பினும் பெரிகிளீஸ் அந்நோயாலேயா மாண்டான். எதென்ஸ் நகரம் எதிரிகளின் கைகளில் வீழ்ந்து இழிவடைந்தது.
*
எவ்வாறோவெல்லாம் மாறியது. தேவதை அத்தெனாவின் ஆலயம் பின்னொருகால் கிறிஸ்தவ தேவாலயமாகியது. பின்னர் ஒஸ்மானியர்கள் அதை கைப்பற்றியபோது அது பள்ளிவாசலாக இருந்தது. வெனிசியர்கள் அதைத் தாக்கியழித்தார்கள். சரிந்தது.
*
இன்னமும் அக்ரோபொலிஸ் குன்றின் முகட்டில் நிமிர்ந்து நிற்கும் எதெனா தேவதையின் ஆலயத்தின் உயர்ந்த தூண்கள் பெரிக்கிளீஸின் வெற்றியின் சின்னம்.
*
பெரிக்கிளீசுகள் கிரேக்கத்தில் மாத்திரம் முளைப்பதில்லை. அவர்கள் கிரேக்கத்தில் மாத்திரம் வீழ்வதில்லை. பெரிக்கிளீசுகளை நான் நேசிக்கிறேன். எதென்ஸ் நகரம் என்னை அழைக்கிறது - 22

Posted

ஒரு பயணம் ஒரு புத்தகத்தை வாசிப்பது போன்றது. வாழ்த்துக்கள். தொடருங்கள்  உங்கள் பயண அனுபவத்தை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரேக்கர்களின் சாப்பாடு அத்தனையும் தங்கப்பவுண்.

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயணக்கட்டுரையும் விவரணங்களும் ரசிக்கக் கூடிய மாதிரி தருகிறீர்கள் நன்றியும் வாழ்த்துக்களும்.

பிள்ளைகள் வளர்ந்த பின் தம்பதியினாராக தனியே சுற்றச் செல்வது ஒரு தனிச் சுவை.  அறிமுகமான நேரத்தில் இருந்திருக்கக் கூடிய தடைகள் எதுவும் இல்லாமல் அடிக்கரும்பையும் வேர்ப்பலாவையும் ஒரு சேர அனுபவிக்கக் கூடுமான நேரங்கள் அவை.

 அது சரி மனுஷன் மாருக்கு ஐம்பது வயது வர,  ஏனப்பா எல்லாப் பொம்பிளையளும் பொல்லுப் பிடிக்கிற வயது எண்டு சொல்லி கடுப்பேத்துகினம் !

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, tulpen said:

ஒரு பயணம் ஒரு புத்தகத்தை வாசிப்பது போன்றது. வாழ்த்துக்கள். தொடருங்கள்  உங்கள் பயண அனுபவத்தை. 

நன்றி துல்பன் வரவுக்கும் கருத்துக்கும்

 

22 hours ago, ஈழப்பிரியன் said:

கிரேக்கர்களின் சாப்பாடு அத்தனையும் தங்கப்பவுண்.

தொடருங்கள்.

விளக்கமாச்  சொல்லுங்கோ விளங்கவில்லை

15 hours ago, நீர்வேலியான் said:

தொடர்கிறேன் சுமே

நன்றி நீர்வேலி   யான்

14 hours ago, ஜெகதா துரை said:

ஏதென்ஸ் பற்றிய தகவல்களை அறியத் தந்துள்ளீர்கள்.படங்கள் நன்றாக இருக்கின்றன .

நன்றி ஜெகதா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, சாமானியன் said:

பயணக்கட்டுரையும் விவரணங்களும் ரசிக்கக் கூடிய மாதிரி தருகிறீர்கள் நன்றியும் வாழ்த்துக்களும்.

பிள்ளைகள் வளர்ந்த பின் தம்பதியினாராக தனியே சுற்றச் செல்வது ஒரு தனிச் சுவை.  அறிமுகமான நேரத்தில் இருந்திருக்கக் கூடிய தடைகள் எதுவும் இல்லாமல் அடிக்கரும்பையும் வேர்ப்பலாவையும் ஒரு சேர அனுபவிக்கக் கூடுமான நேரங்கள் அவை.

 அது சரி மனுஷன் மாருக்கு ஐம்பது வயது வர,  ஏனப்பா எல்லாப் பொம்பிளையளும் பொல்லுப் பிடிக்கிற வயது எண்டு சொல்லி கடுப்பேத்துகினம் !

 

 

பாத்தியா நாங்கள் பேசாமல் இருந்தால் அவையும் நல்லா ஏமாற்றுவினம். நான் கனிமூன் மூட்டோட வந்திருக்கிறன். சும்மா விடுவனே என்று அசட்டுச் சிரிப்புச் சிரிக்க எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது. பொல்லுப் பிடிக்கிற வயதிலும் உந்த ஆம்பிளையளுக்குக் கனிமூன் கேட்கும். வாயை மூடிக்கொண்டு வாங்கோ போவம் என்று நான் முன்னால் நடக்கிறேன்.

நான் எழுதினத்தை நீங்கள் வடிவா வாசிக்கேல்லை சாமானியன் 😀

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ம்.... இவ்வளவுகாலமும், நாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூவி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போகேக்க  மானங் காத்த தமிழர். இப்போ மக்கள் ஏமாற்றமடைந்து தமது வெறுப்பை காட்டியதால், தமிழ் இந வெறியர். தமிழ் கட்சிகள் எல்லார் மீதுமே மக்கள் தமது வெறுப்பை காட்டியிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, ஏன் சுமந்திரனை மட்டும் வெறுத்து ஒதுக்கினார்கள் என்று வெதும்புகிறார்கள்? அப்படியெனில் சுமந்திரனின் அடாவடிக்கு விழுந்த அடியென ஏற்றுக்கொள்கிறார்களா? தலையிருக்க வால் ஆடியதால் ஏற்பட்ட விளைவே இந்த படுதோல்வி. இந்த ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவ்வளவு கோபம் வந்தால், மக்களுக்கு எவ்வளவு கோபம் வரும். வினை விதைத்தவன் வினைதான் அறுக்க முடியும். போன தடவை மாவையர் தோற்றுவிட்டார், மக்கள் தலைவர் மேல் நம்பிக்கையிழந்து விட்டனர், ஆகவே மாவையர் பதவி விலகவேண்டுமென கோசம் போட்டவர் இன்று அதே தோணியில். என்ன ஒரு அதிரடி, எகத்தாளம், யாரையும் மதிப்பதில்லை, எதற்கும் கட்டுப்படுவதில்லை, யாரோடும் ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக ஆடி அடங்கிவிட்டார்.  இவரை அரவணைப்பதற்கு இப்போ யாரும் இல்லை பதவியில். ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு போட சொல்லி மக்களை கோரினார், மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் சஜித்துக்கே இவரைவிட கூடுதலான வாக்களித்துள்ளனர். ஒன்று ஜனாதிபதி தேர்தலில் இவர் சொல்லி விட்டார் என்பதற்காக மக்கள் சஜித்துக்கு வாக்களிக்கவில்லை, அவர்களே விரும்பி வாக்களித்துள்ளனர். அல்லது அவருக்கு வாக்களிக்க கூறியதால் சுமந்திரனை மக்கள் நிராகரித்துள்ளனர். எது சரியாக இருக்கும்? மக்கள் தாங்களே முடிவெடுத்து சஜித்தை ஆதரித்திருந்தனர் ஜனாதிபதி தேர்தலில். பாராளுமன்றத்தேர்தலில் அனுராவை தேர்தெடுத்துள்ளனர். இதுதான் ஜதார்த்தம்!
    • தமிழரசுக்காரரின் முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகம் மட்டக்களப்பில் இருந்து போவார்கள் என்ற பிரச்சாரம் தமிழீழத்தின் தேவையை மட்டக்களப்பில் உணர்த்தியிருந்தால் நன்மையே😃
    • துரோகிகள் இல்லை ஆனால் சுயநலமிகள். இதே போன்ற அரசியல்வாதிகள்தான் கிழக்கிலும் அவர்கள் மூக்கை பொத்தி கொண்டு வாக்கு போடவில்லையா? 98.5% தமிழர் உள்ள மாவட்டம் 3/6 சீட்டை அப்படியே தூக்கி தீர்வே தரமாட்டம் என சொல்லும் கட்சிக்கு கொடுத்தால் - அது எப்படி சர்வதேச அளவு வரை தெற்கால் பாவிக்கப்படும் என்பதை அறிந்தும் அவர்களுக்கு வாக்கு போட்டதை சுயநலம் என்று மட்டுமே சொல்ல முடியும். தமிழ் தேசிய கோமாளிகளை பிடிக்கவில்லை எனில் அருச்சுனாவுக்கு இன்னும் 1 சீட்டையும் போனசையும் கொடுத்திருக்கலாம்.
    • மட்டக்களப்பானுக்கு மட்டும் தான் தமிழீழம் தேவை போல ....
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.