Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

jaffna.jpg

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

jaffna63.jpg

இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுள்ளனர்.

உலகில் 36 நாடுகள் இச்சேவை குறித்து எச்சரித்துள்ளதுள்ளன. அத்துடன் உலகெங்கும் உள்ள 180 விஞ்ஞானிகளும் 5 G சேவைக்கான மின்காந்த அலைக்கற்றையால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரித்துள்ளனர்.

இதன் அலைவரிசை புற்றுநோய் தாக்கம், குழந்தைகள், கற்பவதிகள், சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் உலகளாவிய ரீதியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி அலைக்கற்றைகள் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக அமைவதாக 2011 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதனை விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட 5G தொழில்நுட்ப சேவைக்கு அனுமதி வழங்க தயங்கி வரும் நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/59036

  • கருத்துக்கள உறவுகள்

5g  சேவையை பற்றி இலங்கையின் மற்ற பகுதிகளை விட யாழ்பாணத்தில் மட்டும் ஏன் கவலை கொள்கிறார்கள் ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

5g  சேவையை பற்றி இலங்கையின் மற்ற பகுதிகளை விட யாழ்பாணத்தில் மட்டும் ஏன் கவலை கொள்கிறார்கள் ?

 

 

வருமானம்! கொழும்புக்கு அடுத்தபடி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் வியாபாரம் வடக்கில் தான் அதிகம்.

இந்த கம்பங்களில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்திருந்ததே?!

  • தொடங்கியவர்

Future of %G technology

தவறான தகவல் ....  பிரித்தானியாவில் சென்ற மாதம் தான் ee நிறுவனம் ஆரம்பித்து அதை விட சுவீடன், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலும் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வீரகேசரி ஏன் தமிழ் வின் போல் பொய்ச் செய்தி போடுகிறார்கள் என்று தான் புரியவில்லை......!!!!!!

இன்னும் கொஞ்ச நேரத்தில்  சிங்கள பௌத்த பேரினவாத சதி என்று கூவி கொண்டு ஒரு குறூப் வரும் இப்ப !!!!!!

  • தொடங்கியவர்

பெரிதாக பயப்படஒன்றும் இல்லை என கூறுபவர்களும் உள்ளார்கள்.
இருந்தாலும், எமது மண்ணில்  5G அவசியம் என்று இல்லை.
சில வருடங்கள் பொறுத்திருந்து இதை பார்த்து பின்னர் உபயோகிப்பதே நன்று

http://fortune.com/2019/05/22/health-concerns-5g-cellphones-cancer/

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வருமானம்! கொழும்புக்கு அடுத்தபடி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் வியாபாரம் வடக்கில் தான் அதிகம்.

குறி அதுதான் யாழில்  5g வந்தால் லைக்காவும் லிபரா வும் வெளிநாட்டில் என்கடையாட்களின் கைககளில் இருந்து காணாமல் போயிடும் போதாகுறைக்கு வைபரிலும் வட்சப்பிலும் விடியோ அரட்டை துல்லியமான தரத்துடன் லைவா பார்க்கலாம் ஊரில் நேர்த்திக்கு விட்ட கிடாய் ஆடு வளர்வதை இங்கிருந்தே நிதமும் பார்க்கலாம் .எங்கடை அரசியல்வாதிகளின் திடீர் புளுகுமூட்டை அறிவிப்பை கேட்டு நாலு கேள்வி நாக்கை புடுன்குரமாதிரி நேரிலேயே கேட்க்கலாம் அதை அந்த வேகத்திலே லைவ்வாய் யுடியுப்பில் போடலாம் வீரகேசரி இந்திய அடிவருடி பத்திரிகை இந்தியாவில் 5g அம்பானி கூட்டத்தால் 21 களிலே தான் வெளியீடு என்று அறிவித்தார்கள் .மொத்தத்தில் 5g நெட்வோர்க் பலராலும் வெறுக்க பட்டாலும் வேற வழி இல்லாமல் ஏற்க்க வேண்டிய சூழ்நிலை .

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னதுதான் நினைவுக்கு வருது, போன்ல 5ஜி, 7ஜி எல்லாம் இருக்கட்டும் ஆனா பசிச்சா கஞ்சிதான் வேணும் ராஜா.😂.

எனக்கு 4ஜி ஜே போதும் போதும் எண்டிருக்கு. யாழை இதை விட வேகமா தரவிறக்கினாலும் செய்யப் போவது வீண் அரட்டை தானே 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

எப்படி இருந்தாலும் கிராமங்களும் வளர்ச்சியடைகிறது இயற்கையையும் அழித்து  என்று சொல்லல்லாம் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

தவறான தகவல் ....  பிரித்தானியாவில் சென்ற மாதம் தான் ee நிறுவனம் ஆரம்பித்து அதை விட சுவீடன், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலும் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வீரகேசரி ஏன் தமிழ் வின் போல் பொய்ச் செய்தி போடுகிறார்கள் என்று தான் புரியவில்லை......!!!!!!

இன்னும் கொஞ்ச நேரத்தில்  சிங்கள பௌத்த பேரினவாத சதி என்று கூவி கொண்டு ஒரு குறூப் வரும் இப்ப !!!!!!

இன்னும், அந்த...   குறூப்பை காணவில்லை. :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்

கலை நிகழ்ச்சிகளிலிருந்து கண்ணியுகம்வரை யாழ்ப்பாணத்தில் நடந்தால் மட்டும்தான் நமக்கு சமூக அக்கறை பீறிட்டு வ்ருகிறது,ஆனால் நாம் வாழும் நாடுகளில் அவையெல்லாம் இல்லாம நமக்கு பொழுதே போகாது,ஒரு கை உடைஞசமாதிரியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

எனக்கு 4ஜி ஜே போதும் போதும் எண்டிருக்கு. யாழை இதை விட வேகமா தரவிறக்கினாலும் செய்யப் போவது வீண் அரட்டை தானே

மொத்தத்தில் இந்த மொபைல் நெட்வோர்க்கையே நிப்பாட்டி விடனும் கொஞ்சத்துக்கு தெளின்சிடும் கொஞ்சத்துக்கு கைகாலை இழுத்துக்கொண்டு நடக்கும்கள் பழைய நினைவிலை இன்னும் கொஞ்சம் தலைமயிரையும் சிலுப்பி விட்டுக்கொண்டு முத்தின பயித்தியாமாகி விடுங்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

இதை எல்லாம் நேரில் பார்ப்பது போல பார்த்து விமரிசனம் செய்ய தேவை 5G.

ஹுவாவய் நிறுவனத்துடன் உள்ள வணிக போட்டி காரணமாக அவர்களின் 5G உபகரணங்களும் சேவையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விற்பனை படவில்லை. சீன அரசின் புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய நிறுவனம் இது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

இதுக்கெல்லாம் அந்தநாளில் பெருசுகள் 1A போட்டாலே போதும் எல்லாம் அடங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

மொத்தத்தில் இந்த மொபைல் நெட்வோர்க்கையே நிப்பாட்டி விடனும் கொஞ்சத்துக்கு தெளின்சிடும் கொஞ்சத்துக்கு கைகாலை இழுத்துக்கொண்டு நடக்கும்கள் பழைய நினைவிலை இன்னும் கொஞ்சம் தலைமயிரையும் சிலுப்பி விட்டுக்கொண்டு முத்தின பயித்தியாமாகி விடுங்கள் . 

அப்புறம் இந்த டிக்டொக் கேசுகள் தற்கொலை செய்தாலும் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

இதை எல்லாம் நேரில் பார்ப்பது போல பார்த்து விமரிசனம் செய்ய தேவை 5G.

ஹுவாவய் நிறுவனத்துடன் உள்ள வணிக போட்டி காரணமாக அவர்களின் 5G உபகரணங்களும் சேவையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விற்பனை படவில்லை. சீன அரசின் புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய நிறுவனம் இது. 

huawei அதிகாரிகளே அப்படி சைனா புலனாய்வு உடன் தொடர்பு எண்டால் பகிரங்ககமாக  ஆதரம் கேட்கிறார்கள்  us இடம் . இங்கு ......................

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரி என்டாலும் நாங்கள் அனுபவக்கிறதை ஊரில் உள்ள சனம் அனுபவிக்க குடாது.அப்புறம் எமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 5g நெட்வோர்க்கு  அடிபாடு யாழில் கொழும்பில் தனி நெட்வோர்க் ஸ்டேசன் ரன் பண்ணியுள்ளார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன கோதாரி என்டாலும் நாங்கள் அனுபவக்கிறதை ஊரில் உள்ள சனம் அனுபவிக்க குடாது.அப்புறம் எமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

அப்பிடி நான் நினைக்கேல்லை.....புலம்பெயர்ந்த நாங்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழ்கின்றோம். அந்த நாட்டு மக்களுடன் நாம் வாழ்கின்றோம். அவர்கள் அனுபவிப்பதை தான் நாங்களும் அனுபவிக்கின்றோம். இவர்கள் அரசியலில் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.இவர்கள் அன்றாட சீவியத்திற்கு போராடவில்லை.சொந்த காணி பூமிக்காக தெருவில் இறங்கவில்லை. எமது பிரதேசங்களில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஆயிரம் மடங்கு.....அப்படியிருக்க் 5G யின் அவசியமென்ன என்பதுதான் எனது கேள்வி? 
12வயது பிள்ளையிடம் கைத்தொலைபேசி சர்வசாதாரணம்.அந்த தொலைபேசியில் HD தரத்தில் படங்கள் பார்கலாமாம்.இப்போது நீலப்படங்களும் தங்கு தடையின்றி அங்கு பார்க்கின்றார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கார் கண்டுபிடித்து முதன்முதல் ஓடும்போது இருந்த பிரச்சனைதான் இங்கும் .

சிங்கப்பூரில் இப்போதுவரையில் 4G+ தான் 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி ஏற்கனவே இன்னொரு திரியில் எழுதியிருக்கிறேன். IARC என்னும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்று நோய் ஆய்வு அமைப்பு செல்போன்களில் இருந்து வரும் கதிர் வீச்சை group 2B எனும் வகைக்குள் அடக்கியிருக்கிறது. மனிதர்களில் நேரடியாக ஆய்வுகள் செய்து நிரூபிக்கப் படாமல், ஆய்வு கூடங்களில் கலங்களிலும் இழையங்களிலும் ஆய்வு செய்து கண்டறியப் பட்ட தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து "புற்று நோய் ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருக்கலாம்!" (possibly carcinogenic in humans) என்ற வகைப் படுத்தல் இது. இது 5G இற்கு மட்டுமான எச்சரிக்கை எனக் காட்டி மக்களைப் பயமுறுத்துவது அடிப்படையில்லாத செயல் என்பது என் கருத்து. IARC இன் எச்சரிக்கை அனைத்து செல்லிடப் பேசிகளில் அல்லது உயர் அழுத்த மின்கம்பங்களில் இருந்து உருவாகும் கதிர்வீச்சைப் பற்றியது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படும் உலகம் அழியும் என்பதெல்லாம் அடிப்படையற்ற கட்டுக் கதைகள்! 

https://www.iarc.fr/wp-content/uploads/2018/07/pr208_E.pdf 

"செய்மதிகள் செல்போன்களால் வெளிவிடப் படும் நுண்ணலைகள் (microwaves) தான் பூமியக் சூடாக்குகின்றன, பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் அல்ல!" என்றொரு தியரி பல வருடங்களாக சில குழுக்களால் பரப்பப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான் மேலே நுணாவிலான் இணைத்திருக்கும் வீடியோ இணைப்பு! இந்தத் தியரிக்கு ஆதாரம் எதுவும் இல்லை! பௌதீகம் தெரிந்தவர்களைக் கேட்டால், நுண்ணலைகள் அதிக அதிர்வெண்ணையும் (frequency) குறைந்த அலைநீளத்தையும் (wavelength) கொண்ட அலைகள் என்பார்கள். இதனால் இவற்றின் சக்தி அதிகம், ஆனால் அதிக தூரம் பயணிக்கும் திறனற்றவை! அதனால் தான் வீட்டில் மைக்ரோவேவின் உள்ளே வைத்த முட்டை வேக, மூடிய மைக்ரோவேவின் அருகில் நிற்கும் ஆட்கள் என்புக் கூடாக உருகாமல் தப்புகிறார்கள்!

Edited by Justin
கீழ்ப்பகுதி சேர்ப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.