Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு

Featured Replies

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்  ஆகியன இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மலையக பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ். நகர விடுதியொன்றில் இன்று (22) காலை இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வை பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, தாம் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அக்கட்சிகளின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனந்தியுடன் பேசியதாகவும், அனந்தியும் தாமும் மலையக மக்களின் பிரச்சனை தொடர்பில் இணைந்து செயற்படவுள்ளதாக மலையக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும், மலையக மக்களின் பிரச்சினைகளை அனந்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பின்னர், கருத்த வெளியிட்ட அனந்தி, ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கொள்கையளவில் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தில் தலைவராக அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஸ்ரீலங்கா-சுதந்திரக்-கட்சியுடன்-இணைந்து-செயற்படவுள்ளதாக-அனந்தி-அறிவிப்பு/175-237170

மலையக மக்களுக்காக ஐ.நாவில் குரல் கொடுக்கவுள்ள அனந்தி சசிதரன்!!

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%21%21

ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சேர்ந்து இயங்குவதற்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்திற்கும் இடையில் இன்று காலை மூடிய அறைக்குள் நீண்ட சந்திப்பு இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222736/மலையக-மக்களுக்காக-ஐ-நாவில்-குரல்-கொடுக்கவுள்ள-அனந்தி-சசிதரன்

அங்கஜனுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அளவுக்கு அனந்தி சசிதரனின் நிலை வந்துவிட்டது. ஆனால் அவர் பற்றிய புரிதல் இருந்ததால் இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 அனந்தி, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்களின் பின்னே அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ  ராஜபக்சவின் ஆட்க்கள் இருக்கிறார்கள் என நெடுநாட்களாக சொல்லி வருகிறேன். வெளிப்படையாக செயல்படுவது நேர்மையானது. அதனால் அனந்தியின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.   

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, poet said:

விக்னேஸ்வரன்

7 minutes ago, poet said:

பின்னே அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ  ராஜபக்சவின் ஆட்க்கள் இருக்கிறார்கள் என நெடுநாட்களாக சொல்லி வருகிறேன்.

இதை நம்ப முடியாது.

விக்கினேஸ்வரன் பின் அவருக்கு தெரியாமல் இருந்தால், எப்படி அதை அவர் அறிந்து கொள்ள முடியும்.

 நீங்கள் சொல்வது, விக்கினேஸ்வரன் சுயமாக சிந்திக்க தெரியாமல், வெறி நபர்களின் வழிநடத்தலில் கொள்கைகளை வகுப்பவராயின்.

  • தொடங்கியவர்

இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் பல அரசியல் மற்றும் பலமான அரசியல் சாரா அமைப்புக்கள் உள்ளன. அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லா விட்டாலும் இந்த நாட்டில் ஊழல் இருந்தாலும் இன்றுவரை இந்தநாடு சிங்கப்பூராக இல்லை ஆனால், சோமாலியாக வரவும் இல்லை. 

சில கொள்கைகள் சிங்கள நாட்டு அரசியல்வாதிகளிடம் உள்ளது அதை நாம் பார்த்து பொறாமைப்படலாம்: 

- நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுக்காத தேசப்பற்று 
- தங்களுக்குள் அடிப்பட்டாலும் தங்கள் குற்றவாளிகளை காட்டிகொடுத்து துரோகம் செய்யாத ஒற்றுமை 
- புத்த மதக்குருக்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சமூகத்தின் வழிகாட்டிகள் கூட தம் அரசியல்வாதிகளை வெளிப்படையாக குற்றம் கூறாத அறிவியல் சார்ந்த கபடம்   

9 hours ago, ampanai said:

பின்னர், கருத்த வெளியிட்ட அனந்தி, ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கொள்கையளவில் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ampanai said:

ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சேர்ந்து இயங்குவதற்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா தெரியல எனக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா தெரியல எனக்கு 

வாழ்த்து சொல்லி விடுங்கள்... ராஜா.
அனந்தியை...  இந்த முடிவுக்கு வர வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்ததே... 
கூட்டமைப்பின் செயல்கள் தான் காரணம்.

22 hours ago, ampanai said:

பின்னர், கருத்த வெளியிட்ட அனந்தி, ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கொள்கையளவில் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து அவர்களை முன்னேற்றவும் இச்சந்தர்ப்பத்தை அனந்தி பயன்படுத்த வேண்டும்.

8 hours ago, தமிழ் சிறி said:

வாழ்த்து சொல்லி விடுங்கள்... ராஜா.
அனந்தியை...  இந்த முடிவுக்கு வர வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்ததே... 
கூட்டமைப்பின் செயல்கள் தான் காரணம்.

அதே.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

அங்கஜனுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அளவுக்கு அனந்தி சசிதரனின் நிலை வந்துவிட்டது. ஆனால் அவர் பற்றிய புரிதல் இருந்ததால் இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

6 minutes ago, Lara said:

அதே.

கூட்டமைப்பு.. அரசுடன் இணக்க அரசியல்?  செய்து... ஒட்டி உறவாடியும்.. சாதிக்க முடியாமால், 
"திக்கித் திணறிக்... கொண்டிருக்கும்,  நிலையில்.."
அனந்தி சசிதரனின்.. முடிவை, நாம் வர வேற்கவேண்டும். :)

1 hour ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு.. அரசுடன் இணக்க அரசியல்?  செய்து... ஒட்டி உறவாடியும்.. சாதிக்க முடியாமால், 
"திக்கித் திணறிக்... கொண்டிருக்கும்,  நிலையில்.."
அனந்தி சசிதரனின்.. முடிவை, நாம் வர வேற்கவேண்டும். :)

கூத்தமைப்பு ஒட்டி உறவாடியும் எந்த பயனும் கிடைக்காதை கண்ட பின்பும், இவர் சிங்கள கட்சியுடன் இணைந்து எதனை சாதிக்கப் போகின்றார்?
மகிந்த கடந்த முறை ஆட்சியில் ஏறிய போது இந்த சுதந்திரக் கட்சியில் தான் இருந்தார். அதுதான் அவரது தாய்கட்சி. எழிலன் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் காணாமல் போகும் போது  ஆட்சியிலிருந்த கட்சியுடன் இணைந்து என்ன சாதிக்கப் போகின்றார்?

அத்துடன் என்னென்ன 'கொள்கைகளுடன்' உடன்பாடு கண்டவராம்? சுதந்திரக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் ஒற்றையாட்சி, பெளத்ததுக்கு முன்னுரிமை, வடக்கு கிழக்கு பிரிப்பு, தமிழர்களின் சுய நிர்ணய உரிமைகளை மறுத்தல் ஆகியவை. இந்த அடிப்படைக் கொள்கைகளுடனா இணைந்து செயலாற்றப் போகின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழ்  மக்களுடன்  ஒட்டி  உறவாடி பலத்தை  பெறுங்களேன்

முளைக்க  முதல்.....???😥

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

கூத்தமைப்பு ஒட்டி உறவாடியும் எந்த பயனும் கிடைக்காதை கண்ட பின்பும், இவர் சிங்கள கட்சியுடன் இணைந்து எதனை சாதிக்கப் போகின்றார்?
மகிந்த கடந்த முறை ஆட்சியில் ஏறிய போது இந்த சுதந்திரக் கட்சியில் தான் இருந்தார். அதுதான் அவரது தாய்கட்சி. எழிலன் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் காணாமல் போகும் போது  ஆட்சியிலிருந்த கட்சியுடன் இணைந்து என்ன சாதிக்கப் போகின்றார்?

அத்துடன் என்னென்ன 'கொள்கைகளுடன்' உடன்பாடு கண்டவராம்? சுதந்திரக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் ஒற்றையாட்சி, பெளத்ததுக்கு முன்னுரிமை, வடக்கு கிழக்கு பிரிப்பு, தமிழர்களின் சுய நிர்ணய உரிமைகளை மறுத்தல் ஆகியவை. இந்த அடிப்படைக் கொள்கைகளுடனா இணைந்து செயலாற்றப் போகின்றார்?

நிழலி.. கூத்தமைப்பு  என்றால், கொம்பு  முளைத்திருக்கும் என்று  நினைத்து விட்டீர்களா? :grin:
அங்கு உள்ளவர்களின் நிலைப்பாடு எல்லாம்,
"புதிய மொந்தையில், பழைய கள்ளு"  வியாபாரம் தான்... 🐽

கூத்தமைப்பு... அரசாங்கத்துடன் ஒட்டி உறவாடி,  🥰
பத்து வருசத்தை... வீணாக்கலாம்  என்றால்,  😲

அனந்தி சசிதரனுக்கு....   எமக்கு, வந்த கோவம் மாதிரி, அவருக்கும் வரும் தானே... 
அது தான்... அவரே.... அரசாங்கத்துக்கு, ஆதரவு  கொடுப்பதில் தப்பு இல்லை.

இடையில்...  சம்பந்தன்,  சுமந்திரன், மாவை... போன்ற...
"புரோக்கர்மார்"  என்ன இழவுக்கு, இங்கு தேவை ?
அது தான்... நேரடியாகவே, களத்தில்  இறங்கி விட்டார்.   :)

இது, கூத்தமைக்குக்கு... வைத்த, "செக் மூவ்".   இனி... பண்ணி பாக்கட்டும். 😎

இனி... பலரும், அரசாங்கத்துடன் இணைந்து போவார்கள் என்றே, நினைக்கின்றேன்.
அந்த அளவுக்கு... எமது அரசியல் அபிலாசைகளை... 

"இத்துப் போக... செய்த குற்றம்"  கூத்தமைப்பையே சேரும்.

Edited by தமிழ் சிறி

48 minutes ago, தமிழ் சிறி said:

அதாவது நீங்கள் சொல்ல வருவது, கூத்தமைப்பு சிங்கள அரசுடன் ஒத்து உறவாடி தம் நலன்களை பாதுகாத்து வியாபாரம் செய்ததை பார்த்து விட்டு தானும் அப்படியே செய்ய அனந்தி கிளம்பிவிட்டார் என?

அப்ப மக்கள், மக்களின் நலன், அரசியல் அபிலாசைகள், காணாமலாக்கபட்டோரின் நிலை,போர்க்குற்றம், நீதி விசாரணை என்பதெல்லாம் ச்ச்சும்மா... தானா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அனந்தி சசிதரன், தமிழீழ விடுதலைக்கு  போராடிய.. கணவர் சசிதரனை தேடிக்  கொண்டிருக்கும் பெண்.

சசிதரன்.. ஸ்ரீலங்கா இராணுவத்தின், முன்னாள் புலிகளுக்கு, புனர் வாழ்வு கொடுக்கும், நிலையத்தில் கூட....
மஞ்சள்  "ரீ  சேட்டுடன்"  முன் வரிசையில்,  இருந்த படத்தையும்... யாழ். களத்தில்  தான் பார்த்தேன்.

இப்போது.... அவர் எங்கே? என்பதற்கு... இன்று வரை, விடை கிடைக்கவில்லை.

கூத்தமைப்பு, ரணில் அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்கும் அக்கறைக்கு...
எமது, இன  மக்களை...  கவனிக்கவில்லை. என்பதே.. கவனிக்கப் பட வேண்டியது.  

அனந்தி  &  சசிதரனின்  பெயர்.... அரசியலில் பிரபல்யமாகி விட்டதால்  மட்டுமே...
இவைகள்.. வெளிச்சத்திற்கு வருகின்றது.

எமக்கு தெரியாமல்,  எத்தனையோ.... குடும்பங்கள்,  ஊமைக் காயங்களுடன்...
அழுது  கொண்டு  இன்றும்..  இருக்கின்றார்கள்.  சிலர்,  அழுதே... இறந்து விட்டார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் யாருடனும் சேரட்டும் அல்லது விலகட்டும்.தமிழ் மக்கள் இனியும் தமிழ் கட்டச்சிகளை நம்பாமல் ஏதாவது ஒரு தேசியக்கட்டசிக்கு வாக்களித்து தமது அபிவிருத்திகள் உட்க்கட்டுமானங்களையாவது பெற முயற்ச்க்க வேணும்.தமிழ் கட்ச்சிகளின் உசுப்பேத்தி வாக்கு வாங்கி கிளிச்சது காணும்.ஆனாலும் இதைச் செய்ய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2019 at 9:16 AM, தமிழ் சிறி said:

வாழ்த்து சொல்லி விடுங்கள்... ராஜா.
அனந்தியை...  இந்த முடிவுக்கு வர வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்ததே... 
கூட்டமைப்பின் செயல்கள் தான் காரணம்.

அதே 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

யாரும் யாருடனும் சேரட்டும் அல்லது விலகட்டும்.தமிழ் மக்கள் இனியும் தமிழ் கட்டச்சிகளை நம்பாமல் ஏதாவது ஒரு தேசியக்கட்டசிக்கு வாக்களித்து தமது அபிவிருத்திகள் உட்க்கட்டுமானங்களையாவது பெற முயற்ச்க்க வேணும்.தமிழ் கட்ச்சிகளின் உசுப்பேத்தி வாக்கு வாங்கி கிளிச்சது காணும்.ஆனாலும் இதைச் செய்ய மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேணும்.

அதாவது பொய்யாக தேசியவாதிகள் என்று நடிக்காமல் பிழைப்புவாதிகளாக மாறினால்தான் சலுகைகள் கிடைக்கும் என்று சொல்கின்றீர்கள்.

சரியான அரசியல் தீர்வு இல்லாமல் சிங்களத் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவது மிச்சம் இருக்கும் வளங்களையெல்லாம் அவர்கள் சூறையாட உதவுவதில்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மண்  குதிரையைவிட

நச்சுப்பாம்புடன் சேரலாம்  என்கிறார்  போலும்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

சரியான அரசியல் தீர்வு இல்லாமல் சிங்களத் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவது மிச்சம் இருக்கும் வளங்களையெல்லாம் அவர்கள் சூறையாட உதவுவதில்தான் முடியும்.

1. சிங்களத் தேசியக் கட்சிகளுடன் தமிழ் கட்சிகள் சேராவிட்டால் வளங்கள் சூறையாடப்படுவது குறையுமா? அது எப்படி நடக்கும் என்று விளக்குவீர்களா?

2. இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அபரிதமாக உள்ள வளம் மனித வளம். அதை வைத்து தான் சிங்கப்பூர் செல்வந்த நாடானது.  சிங்களத் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவதால் இந்த வளம் எப்படி சூறையாடப்படும்?

On 8/22/2019 at 6:05 PM, ampanai said:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அனந்தி அறிவிப்பு

இது ஒரு பொய்யான அறிவிப்பாகவே தெரியுது.
இதுவரை அனந்தி அப்பிடி ஒரு அறிவிப்பை விட்டதாக தெரியேல்லை.
சந்தித்தால் ஆதரவு என்று நினைச்சு செய்திகளை அவிழ்த்துவிடும் ஊடகவியலாளர்களை நம்பிவிடும் நிலைமைக்கு பலரது நிலைமை தாழ்ந்துள்ளது.

21 minutes ago, Rajesh said:

இது ஒரு பொய்யான அறிவிப்பாகவே தெரியுது.
இதுவரை அனந்தி அப்பிடி ஒரு அறிவிப்பை விட்டதாக தெரியேல்லை.
சந்தித்தால் ஆதரவு என்று நினைச்சு செய்திகளை அவிழ்த்துவிடும் ஊடகவியலாளர்களை நம்பிவிடும் நிலைமைக்கு பலரது நிலைமை தாழ்ந்துள்ளது.

சந்திப்பின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாம் இணைந்து செயற்படவுள்ளதாக கூறியுள்ளார்கள் என்றே செய்தி உள்ளது. எனவே செய்தி உண்மை.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2019 at 8:18 AM, கிருபன் said:

அதாவது பொய்யாக தேசியவாதிகள் என்று நடிக்காமல் பிழைப்புவாதிகளாக மாறினால்தான் சலுகைகள் கிடைக்கும் என்று சொல்கின்றீர்கள்.

சரியான அரசியல் தீர்வு இல்லாமல் சிங்களத் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவது மிச்சம் இருக்கும் வளங்களையெல்லாம் அவர்கள் சூறையாட உதவுவதில்தான் முடியும்.

அப்படித்தான் முசுலீம்கள் பிழைப்புவாதிகளாக மாறி சலுகைகள் பெற்று மற்ற இனங்களையும் ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்று, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர், ஆளுனர் என்று வாழ்ந்தார்கள். அவர்கள் இலங்கையர்களாக அதன் சட்டதிட்டங்களுக்கு அமைய வாழ்ந்திருந்தால் இன்று ஏனைய மதத்தவர்கள் அவர்களுக்குச் சேவகம்செய்து வாழவேண்டிநிலை ஏற்பட்டிருக்கும். ஆசை யாரைவிட்டது. நாங்கள் முசுலீம்கள், முசுலீம்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையத்தான் வாழுவோம் என்று வீராப்புக்காட்டி இருப்பதையும் இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். 

தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

1. சிங்களத் தேசியக் கட்சிகளுடன் தமிழ் கட்சிகள் சேராவிட்டால் வளங்கள் சூறையாடப்படுவது குறையுமா? அது எப்படி நடக்கும் என்று விளக்குவீர்களா?

2. இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அபரிதமாக உள்ள வளம் மனித வளம். அதை வைத்து தான் சிங்கப்பூர் செல்வந்த நாடானது.  சிங்களத் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவதால் இந்த வளம் எப்படி சூறையாடப்படும்?

வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் தொடர்ச்சியாக அரசினால் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இயற்கை வளங்கள் சிங்களவர்களால் சூறையாடப்படுகின்றனஇதில் விவசாய நிலங்கள்கடல் வளம்ஏன் கனிம வளம் கூட அபகரிக்கப்படுகின்றனசிங்கள மீனவர்கள் வடகிழக்குக் கடல்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதும் அவற்றினைத் தடுக்கமுடியாத நிலையில் உள்ளூர் கட்டமைப்புக்கள் இருப்பதும் நாளாந்த செய்திகளாக வருகின்றன.

அத்தோடு உயர் பாதுகாப்பு வலயம் என உரியவர்களை உள்ளே விடாது தடுக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்குப் பகுதியில் இருந்து சுண்ணாம்புக்கற்களை அகழ்ந்து தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் உள்ளனஇதில் தமிழர்களுக்கு எதுவித பங்கும் இல்லை.  மணல்வளம் கூட ஆற்றுப்படுகைகளிலும்கடற்கரைகளிலும் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு தென்னிலங்கைக்குக் கடத்தப்படுகின்றன.

வன்னிக் காடுகளில் கள்ளமரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதும் அவற்றில் சிங்கள முஸ்லிம் வியாபரிகள் ஈடுபடுவதும் தெரிந்ததே.

வன்னியில் படையினரால் நடாத்தப்படும் பண்ணைகளில்  விளைவனவும்வளர்க்கப்படும் கால்நடைகளும் தென்னிலங்கைக்கே அதிகம் போகின்றன

மனித வளத்தை வைத்து அபிவிருத்தி செய்யலாம்தான்ஆனால் அதற்கான அதிகாரம் யார் கையில் இருக்கின்றதுவடமாகாண ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் கூட முதலமைச்சருக்கு இல்லைமுதலமைச்சரால் தனது மாகாண மந்திரியைக்கூட நீக்க சட்டரீதியாக அனுமதி இல்லை என்று அண்மையில் நடந்த வழக்குச் சொல்கின்றது.

எனவேஅதிகாரம் இல்லாத அலகுகளை வைத்து தமிழர்களால் வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கமுடியாதுதமிழர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை கொடுக்கமுடியாது.

இலங்கை ஈட்டும் அந்நிய செலவாணியில் 60 வீதம் புலம்பெயர்தமிழர்களிடமிருந்து வருகின்றது என்று அண்மையில் சுரேன் ராகவன் சொல்லியிருந்தார்இதனால் தமிழர்களா நன்மையடைகின்றார்கள்?

அரசுடன் இணைந்து வேலை செய்து சில சலுகைகளை தனிப்பட்டவர்கள் பெற்றாலும் அது  முழுமையான மக்களையும்பிரதேசத்தையும் முன்னேற்ற உதவாது

1 hour ago, Paanch said:

தமிழர்களுக்கும் அப்படி ஒரு காலம் கிடைத்திருந்தது, ஆனால் அவர்கள் நாட்டுச் சட்டங்களை மதிக்காமலோ, மதத்தாலோ அழியவில்லை. மேட்டுக்குடி மனப்பாண்மையால் அழிந்தார்கள், அழிந்துகொண்டிருக்கிறார்கள்.😲

முஸ்லிம்களைப் போல பிழைப்புவாதிகளாக மாறினால் சில வருடங்கள் கெடுபிடிகள் இல்லாமல் எல்லாம் நன்றாகவே நடப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் கிடைக்கும். ஆனால் முழுத்தீவையும் சிங்களமயமாக்கும் திட்டத்தை கட்சிபேதமின்றி முன்னெடுத்துவரும் சிங்களவர்கள் நீண்டகாலத்தில்  தமது நோக்கத்தில் வெற்றியடைவார்கள். அதைத் தடுக்க ஒரு அரசியல் தீர்வு கட்டாயம் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும் என்று நினைக்கவில்லை.நான் சொல்வது தீர்வு முயற்ச்சியும் அடிப்படை அபிவிருத்தியும் சாமாந்தராமாக நடக்க வேணும்.இல்லாவிட்டால் தமிழர் பகுதி வெறுமையாவதை தடுக்க முடியாது.அது சிங்களத்துக்கு தனது திட்டங்களை நிறைவேற்ற வசதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.